Showing posts with label 1-ம் நட்சத்திரப் பதிவுகள். Show all posts
Showing posts with label 1-ம் நட்சத்திரப் பதிவுகள். Show all posts

Wednesday, October 12, 2005

91. PASSING SHOT…

நேரம்; மதியம்: 3.48;ஞாயிற்றுக் கிழமை,09.10.’05.இன்றிரவோடு star of the week’ முடிகிறது.
உண்மையாகச் சொல்கிறேன். ஒரு மறக்க முடியாத வாரமாக இந்த நாட்கள் கழிந்தன. ஆனால், முடியும் தருவாயில் வந்த ஒரு பின்னூட்டம், பின்னூட்டமா அது என்னைக் கொஞ்சம் - கொஞ்சமென்ன கொஞ்சம் - நன்றாகவே தடுமாற வைத்துவிட்டது. எழுத நினைத்து வைத்தவைகளை எப்படி சொல்ல முடியுமோ, தெரியவில்லை. அந்தப் பின்னூட்டம் வந்து சில நிமிடங்களே ஆயின. இப்போது தொடர மனமில்லை. சிறிது நேரம் கழித்து வந்து தொடர்கிறேன்.
திங்கட்கிழமைகாலை: 8.5810.10.;05
இந்தப் பதிவு நட்சத்திரப் பதிவோடு சேராது என்றே எண்ணுகிறேன். நேற்று இரவு எழுத முயற்சித்தும் முடியாது போயிற்று.
நன்றாகச் சென்ற ஒரு வாரம், என்னை cloud9–ல் ஏற்றிவைத்த பின்னூட்டங்கள், நமக்கும் ஏதோ கொஞ்சம் எழுத வரும்போலும் என்ற நினைப்பு - இவையெல்லாமே கடைசி நேரத்தில் ‘மனிதன்’ என்ற பெருமனிதனால் சிதைந்தது வருத்தத்தையே தருகிறது. ஆனாலும் அந்த ‘மனிதனின்’ உயர் சிறப்புகளைப் பாடாமல் இருக்க முடியவில்லை. பாருங்களேன், தமிழ்மண நிர்வாகிகளுக்கும், காசிக்கும், மதிக்கும் வலைப்பதிவன் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் நன்றி சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய நேரத்தில் தன் புகழைப் பாட வைத்த அந்த ‘ம்னிதனின்’ திறமையையும், பெருமையையும் என்னென்று சொல்வது! வேறு எந்தப் பதிவில் போட்டிருந்தாலும் நான் அநேகமாக அதைக் கண்டு கொண்டிருக்கமாட்டேன். ஆனால்..
***அந்தப் பதிவைத் தேர்ந்தெடுத்த அவரின் மனிதாபிமானத்திற்கு என் வாழ்த்துக்கள்.இதுபோன்ற ‘வேலை’களைச் செய்ய எவ்வளவு அழகான, பொருத்தமான ஒரு பெயரைத் தன் புனைப்பெயராக வைத்துள்ளார்.***அந்த அறிவுக்கூர்மைக்கு தலை வணங்குகிறேன்.என்ன அழகான வார்த்தைகளால் என்னை ‘அர்ச்சித்திருக்கிறார்’.***அந்த அழகு மொழிக்கு அவரை வாழ்த்துகிறேன்.4 என்பது எங்கெங்கே பதிவில் வந்திருக்கிறது என்று தேடித் தேடி எடுத்து, தன் உயர்ந்த கருத்துக்களுக்கு அவைகளைச் சான்றாக நிறுவி உள்ளார்.***இந்தப் பொறுமைக்கும், அவரது ஆராய்ச்சித் திறனுக்கும் வாழ்த்துக்கள்.***அதற்கு மொந்தை எழுத்துக்களில் பதிலும் கேட்டிருக்கும் அவரது புலமைக்கு வாழ்த்துக்கள்.***எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் நான் இப்படி எழுதியிருக்கிறேன் என்று ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்திருக்கிறாறே அந்த நேர்மைக்குத் தலை வணங்கித்தானே ஆக வேண்டும்.***என்னே ஒரு தெளிவு, என்னே ஒரு நேர்மை. என்னே ஒரு கொள்கைப் பிடிப்பு. இவரல்லவோ ஒரு தனி ‘மனிதப்பிறவி, கொள்கைக் கோமான்” வாழ்க அவர்தம் கொள்கையும்,தொண்டும்.************* ************
தமிழ்மணம் பற்றி…இல்லை இல்லை.. தமிழ்மணத்தில் உள்ள தமிழ் பற்றியும், வலைஞர் பற்றியும் எழுத ஆசை. மாற்றுக் கருத்துகள் இருந்தால், சினமற்று இது இவன் கருத்து என்று எடுத்துக் கொள்ளும்படி முதலிலேயே கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்மணம் தமிழுக்குச் சேவை செய்கின்றதா? இது என் முதல் கேள்வி. இல்லை என்பது அநேகமாக பலரது பதிலாக …………….. இதுபோன்று பல் விதயங்களை எழுத எடுத்து வைத்திருந்தேன். இப்போது முடியவில்லை. வேறொரு சமயம் இதைத் தொடர்கிறேன்.நான் எழுத நினைத்தவைகளை எழுதுவேன். தயவசெய்து இப்போது பொருத்தருள்க. நட்சத்திரப் பதிவுகளை மட்டுமேயா வாசிப்பவர்கள் நீங்கள்.
********************* ***********************************************************
நட்சத்திரமாக்கி, என்னை ஒரு வாரம் தனி உயரத்தில் ஒளிர வைத்து, நித்தம் நித்தம் புத்தம் புது நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தி, அதையெல்லாம் விட எனக்கு இதுவரை இல்லாத தன்னம்பிக்கையைக் கொடுத்த தமிழ் மண நிர்வாகிகளுக்கும், நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுப்போருக்கும் என் நன்றி.
சிறப்பாக இருவர் பெயர் சொல்ல வேண்டும். முதல்வர்; காசி: எல்லோரும் அவர் தமிழ்மணத்திற்குச் செய்த, செய்துகொண்டிருக்கும் technical விதயங்கள் பற்றிச் சொல்வார்கள். அது என்ன மாதிரி க. கை. நா. -க்கு (கம்ப்யூட்டர் கை நாட்டு) அவ்வளவு புரியாது. ஆனால் என்னைக் கவர்ந்தது அவரது ‘என் கோடு; உன்கோடு; யூனிகோடு’ என்ற தலைப்பில் எழுதிய அந்தக் கட்டுரைதான். அது என்னை தமிழ்மணத்தின் மேல் காதல் கொள்ளச் செய்தது. கம்ப்யூட்டர் விதயங்களை இவ்வளவு எளிதாக, அதைவிடவும் சுவையாகவும் சொல்ல முடியுமா என்ற வியப்பு. வெறும் பாராட்டல்ல, காசி; 37 வருடங்களாக கல்லூரியில் ஆசிரியனாக இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அந்தக் கட்டுரை it is a piece of art . இது போன்ற art of writing எல்லோருக்கும் வருவதில்லை. நீங்கள் அதே மாதிரி பல கட்டுரைகள் எழுதி - என் போன்றோருக்காக மட்டுமல்ல - உங்கள் திறனையும் தமிழ் உலகமே அறியச் செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த சேவையைத் தொடர வாழ்த்துக்கள். நிச்சயமாக இதை ஒரு வெறும் புகழ் மொழியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மதி, முதலில் என் ‘புதுவீடு’ நன்றாக இருக்கிறது’ என்று சொன்ன பலரின் பாராட்டுக்களை உங்களுக்குத் திசை திருப்பி விடுகிறேன். அந்த process-ல் நான் எப்படிப்பட்ட க.கை.நா. என்பதை உங்களிடம் நன்கு நிரூபித்து விட்டேன் என்று நினைக்கிறேன். செய்த உதவிகளுக்கு - உங்கள் உடல் நலக் குறைகளோடும் - மிக்க நன்றி. இன்னும் உதவி கேட்டு வருவேன்! இனிய சேதியைக் கொண்டு வந்ததை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். ஆனாலும் உங்களுக்கு என்னைப்பொருத்தவரையில் அசாத்திய பொறுமை. அதே சமயம் உங்கள் கோபம் (என்னிடமில்லை; நான் பார்த்த வேறிடங்களில்) மிகவும் நன்றாக இருக்கிறது!
அனைத்து நண்பர்களே, ஒன்று பார்த்தீர்களா? நீங்கள் யாரோ, நான் யாரோ என்றிருக்கும்போது ஒரே ஒரு பின்னூட்டம் நம்மை எவ்வளவு நெருங்கி வரச்செய்து விடுகிறது. ஒரு மடலில் நண்பர்களாகிவிடும் மாயம் நம் தமிழ்மணத்தில் எவ்வளவு சாதாரணமாகி விடுகிறது. ஒரே மடலில் ஒருவரை ஒருவர் சர்வ சாதாரணமாகப் பெயர் சொல்லி அழைத்து, காலை வாரி, கேலி செய்து, லொள்ளு பண்ணி,…ஓ, என்ன ஒரு இனிய உலகம் இது. நான் இப்போதெல்லாம் காலங்கார்த்தால கணினி முன் உட்காரப் போகும் முன் வீட்டில் சொல்வது: ‘ என் நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்; போய்ப் பார்த்துட்டு வர்ரேன்’. அது உண்மைதான். சிலரின் ஓரிரு வார்த்தைகள்கூட மனசுக்குள்ள ஆழமா போய் உக்காந்துக்குது. ‘ஆத்மார்த்தமான’ அப்டின்னு சொல்வாங்களே, அது மாதிரி நிறைய பேரை நான் மனசுக்குள்ள வச்சிருக்கேன்; எப்போவும் வச்சிருப்பேன். இந்த உறவுகள் நிலைத்திருக்க, நீண்டிருக்க ஆசை. அடிக்கடி ‘பேசிக்குவோம்’ - அதான் இருக்கே நம்ம தமிழ்மணம். நன்றியெல்லாம் நண்பர்களுக்குள் தேவையா என்ன?
என்றும் அன்புடன்………….தருமி
Oct 10 2005 10:04 am நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 2 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
22 Responses
Josaph Irudayaraj Says: after publication. e -->October 10th, 2005 at 1:06 pm e
கடந்த வாரம் வந்து எங்களோடுஉறவாடியதற்கு நன்றி!
உங்கள் அநுபவமும்,அறிவும், வெகு லாகவமாகஉங்களுக்கு உங்கள் எழுத்துகள் வழியாகவெளியில் வருது. கற்றவர் கற்றவர்தான்,கைநாட்டு (என்னை போன்று) கை நாட்டு தான்.
வாழ்த்துகள்!
ஓரு பாட்டு பாடிக்கிட்டே போயிடவா? !!!!!
உறவுகள் தொடர்கதைஉணர்வுகள் சிறு கதைஒரு கதை இன்று முடியலாம்ஒரு கதை இன்று தொடங்கலாம்இனியெல்லாம் சுகமே!…..
dharumi Says: after publication. e -->October 10th, 2005 at 2:32 pm e
ரொம்பவே இன்சல்ட் பண்ணீட்டீங்க ஜோசஃப்…ஒரு கதை இன்று முடியலாம்இனியெல்லாம் சுகமே!…..”………….இதுக்கென்னங்க அர்த்தம்!! ம்ம்!!!
அன்புடன்…….தருமி
அது என்ன, ஜோச்ஃப் -க்கு இந்த spelling? அதப்பத்தி அட்டாக் பண்ணி எழுதணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்..
வசந்தன் Says: after publication. e -->October 10th, 2005 at 6:02 pm e
தருமி. மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.
ஒன்று சொல்வேன். மனிதன் என்ற பெயரில் எழுதும் நபரைப்பற்றி அலட்டிக்கொள்ள வேண்டாம்.உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, முன்பு ஆபாசப்பின்னூட்டங்கள் வலைப்பதிவுகளில் உலவியது?இந்த ‘மனிதனும்’ அந்த வகைப்பின்னூட்டங்கள் எழுதியவர்தான். ஓரிரு இடங்களில் மிக அருந்தலாக சாதாரணப்பின்னூட்டங்களும் இட்டுள்ளார். எனவே அந்தப் பெயரில் வருவதைக் கருத்திலெத்து உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்காதீர்கள்.
padma Says: after publication. e -->October 10th, 2005 at 6:23 pm e
நல்ல வாரம் தருமி. நிறைய பின்னூட்டம் இடவில்லை என்றாலும் படித்தேன்.
Awwai Says: after publication. e -->October 10th, 2005 at 7:34 pm e
Dear Dharumi! you disappointed me! I do agree that Mr.Manithan touched a very senstitive topic. But I don’t understand why it should bother you so much!Suriyanai paarththu Naai kuraiththaal enna,Star-ai paarththu manithan muraiththaal enna?“மாற்றுக் கருத்துகள் இருந்தால், சினமற்று இது இவன் கருத்து என்று” neengal vittirukalame!
Why did you forget your 10th commandment (10.Nothing matters. zen, பதறுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை).—When you were considered ’star of the week’, it is not that you were MADE into a star for a week; rather, it is recognition of the star (writing) qualities in you. The recognition implies that you were, are and will continue to be a star, irrespective of the readership!So, don’t get bored of writing; continue writing, please. You have made many of us an addict (I used to visit your blog when I had free time. Now-a-days it is part of my morning ritual!).If you hit “writer’s block”, you are permitted a short break to refresh yourself. But be back.anbudan awwai.
PS: In a personal mail, kindly tell me how to use Tamizh font in gmail.
dharumi Says: after publication. e -->October 10th, 2005 at 8:06 pm e
என்ன சொல்லுங்கள்…’என் பையனே’வந்து மண்டையில் தட்டி, என் ‘கட்டளை’யை எனக்கே திருப்பிச் சொல்லும்போதுதான் கூடக் கொஞ்சம் உறைக்கிறது.
அவ்வை, ஆமப்பா../ஆமா..கொஞ்சம் தேவையில்லாமல்தான் தடுமாறிட்டேன். மன்னிச்சுக்கோ. i will go steady; ok?
முகமூடி Says: after publication. e -->October 10th, 2005 at 11:09 pm e
தருமி… உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தேன். சிறப்பான பதிவுகள். மோசமான பின்னூட்டங்கள் எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள். வலைப்பூ அரசியலில் சகஜமப்பா என்று ஜாலியாக இருங்கள். இந்தி எதிர்ப்பு மாதிரியான கட்டுரைகள் அதை பற்றி கேள்வி மட்டுமே பட்ட்ருந்த என் போன்றோருக்கு ஒரு புதிய பரிணாமத்தை காட்டியது. உங்கள் அனுபவங்கள் பதிவுகளாக எங்களுக்கு தேவை.
தெருத்தொண்டன் Says: after publication. e -->October 10th, 2005 at 11:12 pm e
நல்ல வாரம் நன்றி சார்.
துளசி கோபால் Says: after publication. e -->October 11th, 2005 at 12:20 am e
உங்க நட்சத்திரவாரம் நல்லாவே போச்சு தருமி.
இன்னும் எழுதியிருக்கலாம்.வாழ்த்துக்கள்.
anony Says: after publication. e -->October 11th, 2005 at 8:36 am e
Avvai,
Type your tamil text here….,
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
And then C&P into gmail form.
anony Says: after publication. e -->October 11th, 2005 at 8:38 am e
Avvai,
Type your tamil text at http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
and C&P into gmail.
anony Says: after publication. e -->October 11th, 2005 at 8:44 am e
தருமி,
நானும் இதுபோல் நிறைய வலைத்தளங்களில் நட்பு பாராட்டிவிட்டு பின்பு சுத்தமா அந்தப் பக்கமே போகாம இருந்திருக்கேன். வலை உலகம் ஒரு மாய உலகம். முகத்துக்கு முகம் பார்க்காமல் பாராட்டும் நட்பு மறையும்போது எந்த வருத்ததையும் தராது. இன்று நான் முகமின்றி தமிழ்மணத்தில் உலாவுவதற்க்கும் அதுவே காரணம்.
இந்த போக்கை புரிந்துகொள்ள முடியாமல் அவஸ்தைப்படுபவர்களில் முதன்மையானவர் ‘சாரு நிவேதிதா’.
அன்புடன்,உங்கள் ரசிகன்
Josaph Irudayaraj Says: after publication. e -->October 11th, 2005 at 11:50 am e
ஐயோ! என்னாங்க பெரிய வார்தையெல்லாம்…” இன்சல்ட்டு” கின்சல்ட்டுனுகிட்டு, அப்டியெல்லாம் ஓன்னுமில்லை
உங்கள் வரிகளை வாசித்துக்கொண்டே வரும் போது தீடீரென்று இந்த பாட்டு மனசுக்குள் வந்துச்சு, சும்மா அப்படியே கிறுக்கிவிட்டுட்டேன் அவ்வளவு தான்.
//சிலரின் ஓரிரு வார்த்தைகள்கூட மனசுக்குள்ள ஆழமா போய் உக்காந்துக்குது. ‘ஆத்மார்த்தமான’ அப்டின்னு சொல்வாங்களே, அது மாதிரி நிறைய பேரை நான் மனசுக்குள்ள வச்சிருக்கேன்; எப்போவும் வச்சிருப்பேன்.//
இதுக்கு தான் ” இனியெல்லாம் சுகமே!… அப்படீன்னது.
//இந்த உறவுகள் நிலைத்திருக்க, நீண்டிருக்க ஆசை.//
இதுக்குத்தான் “ஒரு கதை இன்று தொடங்கலாம்!…” அப்படீன்னது,(புதுக்கதை யொன்று தொடங்கலாம் ன்னு இருந்திருந்தா நல்லா இருந்து இருக்கும் போல)
//இன்றிரவோடு star of the week’ முடிகிறது.//இதுக்கு தான் ” ஒரு கதை இன்று முடியலாம்..” அப்படீன்னது.
மற்றும் படி வேறு ஒன்னும் கிடையாதுங்க! நமக்கு பொடி வச்சு எல்லாம் பேச தெரியாதுங்க. மனசுக்கு பட்டத படக்குன்னு சொல்லிபுடுவேன், அம்புட்டு தாங்க!
மனசு பொசுக்குன்னு ஆகியிருந்தா மன்னிச்சுகோங்க.
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 12:02 pm e
ஐயோடா…தம்பி ஜோச்ஃப்,நான்கூட ஒரு ‘பொடி வச்சி’ ஜோக் அடிச்சேன்’யா! (இப்படி ஜோக் அடிச்சிட்டு, நான் அடிச்சது ஜோக்கு’ப்பான்னு சொல்ற தல எழுத்து வாத்தியார்களுக்கே வாச்சது!!)நல்லா பாருங்க நீங்க எழுதின பாட்டின் கடைசி 3 வரிகளில் நடு வரியை உருவிட்டுப் போட்டதும் பாட்டின் அர்த்தம் மாறிச்சே, கவனிக்கலையா.நான் எதையும் ரொம்ப சீரியஸா எடுக்கிற ஆளுன்னு தப்பா ஒரு நினப்பு வர்ர மாதிரி நடந்துகிட்டேன். இல்ல..? அப்படியெல்லாம் இல்லன்னு மக்களுக்குப் புரியவைக்க இன்னும் நாளாகும்போல.அது சரி, அந்த spelling விஷயம் என்ன ஆச்சு? பதிலேஇல்ல?
Suresh - Penathal Says: after publication. e -->October 11th, 2005 at 12:31 pm e
(இப்படி ஜோக் அடிச்சிட்டு, நான் அடிச்சது ஜோக்கு’ப்பான்னு சொல்ற தல எழுத்து வாத்தியார்களுக்கே வாச்சது!!)அப்படிப் போடுங்க!!
same side goal-aa?
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 12:48 pm e
“same side goal-aa? ”
இல்ல சுரேஷ்,
CONFESSION!!
ஒண்ணு ஞாபகத்திற்கு வருது; எங்க P.U.C. தமிழ் ஆசிரியர் மறுபடியும் இளங்கலை முதலாண்டுக்கும் வகுப்பெடுக்க வந்தார்.(வாத்தியார்கள் எல்லோரும் ஒரு stock of jokes வச்சிக்கிட்டு அப்பப்போ ஒண்ணு ஒண்ணா எடுத்து விடறதுதான வழக்கம். அடுத்த confession!) நம்ம வாத்தியாரும் அதே மாதிரி சில ஜோக்குகளை repeat பண்ணுவார். இன்னொரு mannerism அவருக்கு. ஒவ்வொரு ஜோக்குக்கும் முந்தி மூக்கைச் சொறிந்து கொள்வார். ஆனா அவரை எங்க எல்லாத்துக்கும் பிடிக்கும். அதனால அவரோட பழைய மாணவர்கள் எல்லோரும் அவர் மூக்கைத்தொட்டதும் தயாராயிடுவோம்; மற்ற புது மாணவர்களோடு சேர்ந்து சிரித்துக் கொள்வோம். ஏதோ நம்மாலான உதவி, வாத்தியாருக்கு.
நம்ம கிளாஸ்பத்தி நம்ம பசங்ககிட்டதான கேக்கணும்.
தாணு Says: after publication. e -->October 11th, 2005 at 2:28 pm e
உங்க எழுத்துக்களெல்லாம் வாசித்தாலும் இடையிடையே பின்னூட்டமிட நேரமிருப்பதில்லை. சில நாள் சேர்த்துவைச்சுக் கூட வாசிப்பேன். ஆனாலும் இவ்ளோ வயசாகியிருக்கும்னு நெனைக்கலை, உங்கள் எழுத்துக்களிலிருந்த இளமையைப் பார்த்து!
இன்னும் இளமையான சண்டை சச்சரவுகளுடன் சந்தியுங்கள்.
வசந்தன் Says: after publication. e -->October 11th, 2005 at 4:46 pm e
//இன்னும் இளமையான சண்டை சச்சரவுகளுடன் சந்தியுங்கள். //
தாணு சொல்லுறதும் சரிதான். சண்டை சச்சரவெண்டு வந்தால்தான் இளமையாயிருக்கிறமாதிரிக் காட்டலாம்.அதால இனி சண்டை பிடிக்கிற தருமியப் பாக்க ஆசையாக் கிடக்கு.
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 6:29 pm e
தாணுகூட சண்டை போடலாம்; வசந்தன் கூட சண்டை போடலாம்; நம்ம லொள்ளு பார்ட்டிக கூட சண்டை போடலாம்..ஆனா, மனிதர்கள் எல்லாரும் அதே மாதிரியா, என்ன?
Awwai Says: after publication. e -->October 11th, 2005 at 6:45 pm e
“நம்ம கிளாஸ்பத்தி நம்ம பசங்ககிட்டதான கேக்கணும்.”Suppppera irukkum.You feel relaxed and well rested after his class!
Awwai Says: after publication. e -->October 11th, 2005 at 7:01 pm e
பெயர் இல்ல பெருமகனுக்கு மிக்க நன்றி! இப்படி தமிழ்ல எழுதுவது இனிமையக இருகிறது!
ஸாம்-அய்யாவின் வகுப்புகள் மிக நிறைவாக/ நித்திரையாக இருக்கும். (இன்த ஆளூ எழுதுவதே ( இவ்வளவு சுவைனா வகுப்பு எப்படி சூப்பரா இருன்துருக்கும் யொசிச்சு பாருங்க!
பிழைகளுக்கு மன்னிக்கவும். விரைவில் சரியாக டைப் அடிக்க கற்று கொள்வேன்.
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 7:52 pm e
அடப் பாவி அவ்வை,கெடுத்தியே காரியத்தை…ஏதோ இது நாள்வரை ஆங்கிலத்தில் மட்டும் எழுதி வந்தாய்; இப்போ தமிழ்ல எழுத ஆரம்பிச்சிட்டியா…இனி எம்பாடு அவ்வளவு தான்!
இதுக்காகவாவது பெனாத்தல் சுரேஷின் மாணவன் யாரையாவது பிடிக்கணும்..

Sunday, October 09, 2005

89. ஜெயிலுக்கு போகலாம்…வாரீகளா…?…2

*

நேரடிச் சம்பளம், சில வட இந்திய மாநிலங்களில் வழங்கப்பட்ட U.G.C. பரிந்துரை செய்த சம்பள உயர்வு என்ற இரு கோரிக்கைகளும் முந்திய போராட்டத்தால் கிடைத்தது. சந்தோஷத்தில் மிதந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு அடுத்து ஒரு பேரிடி காத்திருந்தது. என் கல்லூரி நாட்களுக்கு முன்பு, பள்ளிப் படிப்பு 11 வருடமும் (5+6), கல்லூரியில் முதல் இரண்டு வருடம் intermediate course என்றும், பின் இரண்டு வருடப்படிப்பாக degree-யும் இருந்து வந்தன. அதன் பின் 60-களின் ஆரம்பத்தில், கல்லூரியில் மட்டும் ஒரு மாற்றம் - பள்ளியில் அதே 11 ஆண்டுகள்+1(Pre-University class)+3 (degree course) என்றானது. இந்த கணக்கு 78-79-ல் X (10)+ XII(2) என்று பள்ளிப்படிப்பும், கல்லூரிகளில் degree courses(3 years) என்றும் மாறியது. அப்போதெல்லாம் கல்லூரிகளின் பலமே இந்த pre-university (P.U.C.) என்ற வகுப்புகளை வைத்துதான். உதாரணமாக அமெரிக்கன் கல்லூரியிலேயே 40% மாணவ எண்ணிக்கை இந்த வகுப்புகளை வைத்தே இருக்கும். 8 sections with each seciton having 90-100 students; திடீரென இந்த எண்ணிக்கை குறைந்தால் மற்ற பல விழைவுகளோடு, முக்கியமாக ஆசிரியர் எண்ணிக்கை என்ன ஆகும்? கல்லூரி ஆசிரியர்களில் பாதிக்குமேலேயே வெளியே அனுப்பப் படும் நிலை வந்தது.

‘எடுத்தோம்; கவிழ்த்தோம்’ என்ற வகையில் முடிவெடுப்பதுதான் நமது அரசியல்வாதிகளின் நிலைப்பாடாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போதுகூட பாருங்கள் - இந்த ஆண்டு entrnace exam எல்லாம் எழுதி முடித்த பிறகு குட்டையைக் குழப்பினார்கள். XII வகுப்புகள் ஆரம்பித்த பிறகு பாடத்திட்ட மாறுதல்கள் பற்றிய அறிவிப்புகள் வருகின்றன. பொறியியல் கல்லூரி சேர்க்கை முடிந்த பிறகு இன்னும் ஆயிரம் அதிக இடங்கள் கல்லூரிகளுக்கு அளிக்கப்படுகின்றன. சொல்லிக்கொண்டே போகலாம். அன்றும் இதே நிலைதான். எண்ணித் துணிக என்பது மாறி, துணிந்த பின் ‘எண்ண’ ஆரம்பிக்கிறார்கள்.

அன்று பல கல்லூரிகள் P.U.C. வகுப்புகளை மட்டுமே நம்பி கல்லூரிகளை ஆரம்பித்து நடத்தியும் வந்தார்கள். இந்நிலையில் அந்த வகுப்புகள் அப்படியே நீக்கப் படுமானால், கல்லூரிகளுக்கு பெரிய இழப்புகள், ஆசிரியர்களுக்கு வேலை காலி என்ற நிலைகளுக்கு மறுதீர்வு என்ன என்பதே சிந்திக்கப் படவேயில்லை. தங்கள் கழுத்துக்குக் கத்தி என்ற நிலையில் ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிப்பது தவிர வேறு வழியின்றி 78-ன் கடைசியிலோ, 79-ன் ஆரம்பத்திலோ மறுபடியும் மறியல், வேலை நிறுத்தம், சிறை நிரப்புதல் என்ற பழைய, பழகிய போராட்ட வழிகளில் செல்ல முடிவெடுத்தோம்.

இம்முறையும் போராட்டம் ஆரம்பித்து சிலர் சிறை செல்ல, நடுவில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிட்டது. இதனால், முதலில் சிறை சென்ற ஆசிரியர்கள் ஏறத்தாழ 15 நாட்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் எந்த வித தனிச்சலுகைகளும் இல்லாமல் மற்ற கைதிகள் போலவே நடத்தப் பட்டனர். பகலில் மட்டும் வெளிய இருக்க அனுமதி தரப்பட்டு, இரவில் கைதிகள் போலவே ‘செல்’ உள்ளே வைத்துப் பூட்டி விடுவார்களாம். அங்கே உள்ளேயே திறந்த மூத்திரப் பிரை. அந்த நினைவே அவர்களை அருவருப்புப்பட வைத்ததாம். இந்த நிலையில் அந்த நாட்களில் ஒரு நாளில் உள்ளே இருந்த கைதிகள் அவர்களுடைய குறைதீர்க்க போராட்டம் ஒன்று நடத்தி, அதில் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் நடந்த போராட்டத்தில் உள்ளே இருந்த ஆசிரிய நண்பர்கள் தங்களைத்தானே செல்லுக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டார்களாம்.

15 நாள் தனியே இருந்த பிறகே மற்றவர்களும் போராட்டத்தில் இறங்கி, சிறைக்குள் சென்றோம். முதலிலேயே சிறை சென்றவர்கள் இம்முறை அமெரிக்கன் கல்லூரியிலிருந்து நால்வர் - நால்வருமே இளைஞர்கள்; அதில் ஒருவருக்குத் திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்தது - முதலிலேயே உள்ளே சென்று விட்டார்கள். நாங்கள் உள்ளே வந்த பிறகே அவர்களுக்கு உயிர் வந்ததாம். அவர்கள் ஏற்கெனவே பல நாட்கள் உள்ளேயே இருந்ததாலும், கைதிகள் போலவே நடத்தப்பட்டதாலும் அவர்களுக்கு ‘ஆயுள் கைதிகள்’ என்று நாமகரணம் செய்தோம். பல வருடங்களுக்கு அந்த பெயர் நிலைத்து நின்றது.

சிறை நாட்கள் முதலில் நன்றாகவே இருந்தது. எண்ணிக்கை நிறைய இருந்தமையால் மரத்தடிகளில் பெரிய பந்தல் எங்களுக்காகப் போடப்பட்டது. ‘செல்’களுக்கு முன்னால் இருந்த இந்த பந்தல்கள் வெயிலுக்கு ஓரளவு பாந்தமாக அமைந்தன. ‘செல்’லுக்குள் எங்கள் படுக்கைகள், பைகள் ஒரு மூலையில். இன்னொரு மூலயில் shift போட்டு எங்களைப் பார்க்க வரும் மற்ற ஆசிரிய நண்பர்கள் கொண்டுவரும் பழங்கள், பிஸ்கோத்துகள். சமைத்த உணவுகள் உள்ளே வர தடை. ஆனால், அது பெரிய இழப்பல்ல; ஏனெனில் உள்ளே கொடுக்கப்பட்ட மதிய உணவு நன்றாகவே இருந்தது. உள்ளே வந்த ஓரிரு நாட்களில் சிறைச் சட்டங்களில் எங்கள் தலைவர்கள் சிலர் கைதேர்ந்தவர்களாக ஆனார்கள். தலைக்கு இவ்வளவு அரிசி,காய்கறி, பருப்பு என்ற அளவுகளைத் தெரிந்து கொண்டு, அந்த ‘ரேஷன்களை’ ஜெயிலர்களிடமிருந்து வாங்கி, சமையல் தெரிந்த அல்லது அதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சிலரின் மேற்பார்வையில், உள்ளேயிருந்த கைதிகளில் சிலரைச் சேர்த்துக்கொண்டு நாங்களே சமையல் செய்தோம். 600 பேருக்கு மேல் அப்போது உள்ளே இருந்தோம்.

காலையில் ஒரு நல்ல காப்பி, (டிபனைப் பற்றி அதிகமாக யாரும் கண்டுகொள்வதில்லை.) மதியச் சாப்பாடு ஒரு கப் சோறு, ஒரு கூட்டு, சாம்பார், ரசம், நல்ல தயிர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை. குழம்பில் ஆரம்பித்து ரசம் தயிர் என்று வருவதற்குள் பல சமயங்கள் தயிர் காலியாகிவிட்டது. தயிர் பிரியர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாகி விட்டது. எப்படி சமாளிக்கலாமென யோசித்து, ஒரு திட்டம் தீட்டினோம். இருவர் இருவராகச் சேர்ந்து கொண்டு ஒரு தட்டில் கப் சோற்றுடன் சாம்பார், ரசம் இரண்டையும் ஒரே சமயத்தில் ஒருவர் வாங்கிக் கொள்வது, அவரின் பார்ட்னர் இன்னொரு பிளேட்டில் இருவரது ரேஷன் தயிரை வாங்கிக் கொள்வது… பிறகென்ன ஒரே தட்டிலிருந்து சாப்பிட்டுக் கொள்வோம். இப்படி சாப்பாட்டுக்காக ஜோடி சேர்ந்து கொண்டவர்களுக்கு -எல்லோரும் இப்படி செய்யவில்லை; சிலரே அப்படி - S.P. என்று பெயர் வைத்துக்கொண்டோம்; அப்டின்னா, ‘சோத்துப் பார்ட்னர்’ என்று பொருள்! பிந்திய ஆண்டுகளில், மூட்டாவை வைத்தே கருத்து வேறுபாடு கொண்டு மாறுபட்ட நிலையில், எதிர் எதிரணியில் நின்று கொண்டிருந்த போதும் ‘அந்தப் பழைய’ நினைவுகளின் தாக்கத்தால்’ மற்றவர்களிடம் இருந்ததை விடவும் என் S.P.-உடன் நான் தோழமையோடிருந்தேன். எல்லாம் ஒன்றாக ஒரே தட்டில் உண்ட பாசம்தான்! மாலையில் அது என்ன combination என்று தெரியாது; ஒரு கடலை உருண்டையும், தேநீரும்… சிலர் கடலை உருண்டைகளுக்கு விசிறிகள்; சிலருக்கு அது பிடிக்கவில்லை. அதனால், தேநீர் குடுத்தவுடன் பயங்கரமாக ‘பண்டமாற்று’ நடக்கும். சிலர் உருண்டைகளைப் பத்திரமாக வைத்திருந்து வெளியில் உள்ள நண்பர்களுக்கு, பார்வையாளர் நேரத்தில் ‘கள்ளக் கடத்தல்’ செய்வதுண்டு.

காலை, இரவு உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எப்படி கொடுப்போம்; அதுதான் மூலையில் பழமும், பிஸ்கட்டும், ரொட்டி வகைகளும் நிறைந்திருக்குமே. ஆனால், உள்ளே வந்த எங்கள் ஆசிரியர்கள் இருவர் - ஒருவர் தமிழ்த்துறை பேரா. தினகரன், இன்னொருவர் ஆங்கிலத்துறை - பேரா. பத்மனாபன் நாயர் - உள்ளே இருந்த அத்தனை நாட்களிலும் ஒரு தடவைகூட உள்ளே வழங்கப்பட்ட உணவு வகையறாக்களைத் தொடவும் இல்லை. ஏறத்தாழ 20 நட்களுக்கும் மேலாக ‘சோறில்லா வாழ்வாகப்’ போய்விட்டது. முதலாமவரின் உணவுப் பழக்கம்: பன் ஒன்றை எடுப்பார்; கையாலேயே இரண்டாகப் பிரித்து, பச்சை வாழைப்பழத்தை நடுவில் வைத்து அவர் செய்யும் ‘banana sandwich’ சிறையிலேயே பிரசித்தமானது. இரண்டாமவரோ ஏதோ சாப்பிடுவார் பழம், பிஸ்கட்டுன்னு; அதைவிட முக்கியம் சிகரெட்தான். இப்போதெல்லாம் அவர் என்னை மாதிரி, இல்லை..இல்லை.. எனக்கு முன்பே அவர் சிகரெட்டை விட்டுவிட்டார்.

சும்மாவா சொன்னர்கள்; இரண்டு கேள்வியை மூன்று ஆசிரியர்களிடம் கொடு; அவர்கள் நான்கு வித பதில் கொடுப்பார்கள் என்று. பகல் நேரங்களில் காலையில் அங்கங்கே அரட்டைக் கும்பல்; எல்லா விதயங்களையும் அலசி ஆராய்ந்து ‘காயப்போடுவதுதான்’! மதியத்தில் ‘உண்ட கழைப்பு’; மாலையில் ஆறு மணிக்கு முதலில் பத்திரிகைச் செய்திகள்,வெளியிலிருந்து வரும் கல்லூரிச் சேதிகள், தலைவர்களிடமிருந்து வரும் செய்திகள், அதைப் பற்றிய விவாதங்கள் என்று இருக்கும். சில நாட்களில் இந்த விவாதங்களே நீண்டு விட அதை முடித்து விட்டு சாப்பாட்டுக்குத் தயாராக வேண்டியதுதான். மற்ற நாட்களில் ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சி இருக்கும். டி.எம். செளந்திரராஜன் குரலில் பாட ஒரு ஆசிரியர் - அவரது ‘புல்லாங்குழல் தந்த மூங்கில்களே’ என்னும் கிருஷ்ணன் மேல் பாடும் தனிப்பாடலுக்கு நான் உட்பட பலர் விசிறிகள்; சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளை அரங்கேற்றினார்கள்; பட்டிமன்றம் நடந்தேறும். பேரா.சாலமன் பாப்பையாவும் , மற்றொரு பேராசிரியரும் பட்டி மன்றம் நடத்தினார்கள். பாப்பையா வழக்கம்போல் பேசுவார் என நினைத்து மற்ற ஆசிரியர்கள் ஜோக் வெடிகளாக வெடிக்க, பாப்பையா தன் ஸ்டைலை முழுவதுமாக மாற்றி மிக மிக ஆழமான, அர்த்தமுள்ள சமூகப்பிரச்சனைகளைத் தொட்ட பேச்சு நன்றாக இருந்தது. அதன்பின் நான் பலதடவை அவரிடம் அந்த ‘ஜெயில் பேச்சு’ போல எதுவும் அமையவில்லை என்று கூறியதுண்டு.

Biological clock பற்றித் தெரியும்தானே. Personal habits என்று வைத்துக் கொள்வோமே; இதை இதை இந்த நேரத்தில் செய்வது என்று ஒரு தனி ஒழுக்கம் வைத்திருப்போமே, அதை முழுவதுமாக மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. இருந்ததோ மிகக்குறைந்த கழிப்பறைகள்; எங்களுக்காகச் சிரமம் எடுத்து ஓரளவு சுத்தமாக வைத்திருந்தார்கள். என்ன, காலை வேளைகளில் எப்போதும் ‘ஹவுஸ் ஃபுல்’தான். கலயாண வீட்டில் பந்தியில் இடம் பிடிக்க பாவம், அப்பதான் சாப்பிட உட்கார்ந்தவர்கள் முன்னால் நின்று கொண்டு, அவர்களையும் அவர்கள் இலையையும் பாத்துக்கிட்டே இருந்து அவர்களைச் சாப்பிடவிடாமல் ‘நொம்பலப் படுத்துவார்களே’ அது மாதிரி இங்கேயும் இருக்கும். ஆனால் இங்கு கழிப்பறைக் கதவுகள் எல்லாமே அரைக் கதவுகள்தான். அதனால் அந்த ‘பந்தி ஸ்டைல்’ இங்கே நடக்காது. புறமுதுகு காட்டிதான் நிக்கணும். உள்ளே இருப்பவர்களுக்கு அது ஒன்றுதான் வசதி. பல விஞ்ஞான ரீதியான experimentations and executions மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. ‘காலைக் கடன்களுக்கெல்லாம் காப்பியே பிரதானம்’ என்ற நிலையை மாற்றிக்கொள்வது; காலைக் கடனென்றால் அது காலையில்தான் இருக்கவேண்டுமா என்ன, கூட்டம் குறைவான மதியமாகவும் இருக்கலாமே என்ற மேற்சொன்ன மாதிரி biological clock-யை வேறுவிதமாக set செய்து கொள்வது; அல்லது அதிகாலை (?) இரண்டு, மூணு மணிக்கு மாற்றிக்கொள்வது; - இப்படியாக அவரவர் ‘சக்தி’க்கு ஏற்றவாறு internal & external adjustments செய்து கொண்டோம்; வேற வழி?

உள்ளே இருந்த மற்ற கைதிகளுக்கு முதலில் எங்களைப் பார்க்கக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்திருக்கும் போல. கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். நாளாவட்டத்தில் கொஞ்சம் நெருங்கினோம். எனக்கு இரு நண்பர்கள் கிடைத்தார்கள். எல்லாம் சின்ன வயசுப் பசங்கள். பங்காளிச் சண்டைகள் அது இதுன்னு சொன்னார்கள். அதில் ஒருவனுக்கு ‘தீட்சை’ கொடுத்தேன். வெளியே போனதும், வெளியே இருக்கும் பகையாளியை ‘மேலே’ அனுப்புவதுதான் அவன் குறிக்கோளாக இருந்தது. அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிச் சொல்லி அவன் அப்படி செய்ய மாட்டேன் என்று என்னிடம் உறுதிமொழி கொடுத்தான். ஒரு வித்தியாசமான நடையில் பாவனையில் இருந்த இன்னும் இரு இளைஞர்களைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் இருவருமே ‘கோழிகள்’ என்றார்கள். அப்டின்னா என்னன்னா, வேறு யாரோ செய்த குற்றத்தைத் தான் செய்ததாகச் சொல்லி வலிய தண்டனையை ஏற்றுக்கொள்ளும் ஆட்களாம்; அவர்கள் குடும்பம் அவர்களது தண்டனைக் காலத்தில் நல்ல படியாக கவனித்துக் கொள்ளப் படுமாம்; அதேபோல் இவர்கள் வெளியே போனவுடன் ‘நல்ல′ வேலையோ, பொறுப்போ கிடைக்குமாம். என்ன குற்றம்னா ‘கள்ளக் கடத்தல்’ கேசுகள். நம்ம ஊர்ல இதுக்குத்தான் ‘பினாமி’ என்று கணக்கு ஏதும் கிடையாது போலும்! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பினாமியே போற்றி!!

அந்தக் கைதிகளின் கூட்டத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டும் தனித்துத் தெரிந்தனர். நம்ம ‘தோஸ்துகள்’ மூலம் அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரித்தேன். ஒருவர் வயதானவர்; 60-க்கு மேலிருக்கும். வட இந்தியர்; சேட் என்று எல்லாரும் கூப்பிடுவார்கள்; எப்போதும் வெள்ளை வெளேரென்று குர்தா, பைஜாமாவில் இருப்பார். ஒரு மரத்தடியில் ஒரு folding chair இருக்கும் அவருக்காகவே; அதுதான் அவரது அரியணை; பக்கத்தில் இன்னும் இரண்டு கைதிகள் இருப்பார்கள். இவருக்குத் தனியாகச் சமைப்பதும், மற்ற குற்றேவல்கள் செய்வதுமே அவர்களுக்கு உள்ளே அளிக்கப் பட்டிருந்த வேலைகள். எல்லாம் ஒரு extra-cosnstituional power centres தான்! பண மோசடி வழக்கில் உள்ளே வந்த ஆளாம். அடுத்த கேசு: ஒரு ‘தாதா’; ஒரு அரசியல்வாதியின் பெயர் சொன்னார்கள்; அவருடைய அடியாளாம். இவனோடு எப்போதும் இன்னும் இருவர் கூடவே அலைவார்கள்; அல்லக்கைகளாம். இந்த மூவரையும் யாரும் கண்டு கொள்வதில்லை.
இந்த நால்வரைத் தவிர மற்ற கைதிகள் எல்லோருமே வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள்தான். அப்படியென்றால் நம்ம ஊர்ல, நாட்ல, பணக்காரர்கள் எல்லோரும் தவறே செய்யாத நல்லவர்களாகவும், ஏழைகளில் பலருமே கெட்டவர்களாகவும் இருக்கிறார்களோ? அந்தத் தோற்றம்தான் உள்ளே இருந்தது. ஜாதி இரண்டொழிய வேறில்லை….. அது சரிதான்; ஆனால், ஆண், பெண் என்ற வேறுபாடு அவ்வைக் கிழவி காலத்தில் சரி; இப்போ காசு உள்ளவன்; இல்லாதவன் - haves and have-nots தான் அந்த இரு சாதிகளும்தான். நமது நீதியும், நீதியரசர்களும், வழக்குரைஞர்களும் யாருடைய சட்டைப்பைகளில் இருக்கிறார்கள் என்று யாருக்குத்தான் தெரியாது. நம் ஊர் சட்டங்களும், நீதித்துறையும் எவ்வளவு கேவலமானவைகள் என்றுதான் எனக்குத் தோன்றியது. அடுத்த முறை கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கும் அந்த நீதி தேவதையின் கைகளில் இருக்கும் தராசை நன்றாகப் பார்க்க வேண்டும்; நிச்சயமாக ஏதோ ஒரு ‘கோல்மால்’ அதில் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் எப்படி ஏழைகள் மட்டுமே, அதிலும் ‘பாவப்பட்ட’ஏழைகள் மட்டுமே ‘உள்ளே’ இருக்கின்றனர்? உள்ளே இருக்கும் ஒரே ஒரு பணக்காரனும் ஏக தடபுடலுடன் வசதியாகவே இருந்தான்; அடிதடி தாதா பற்றி சொல்லவே வேண்டாம்! அடிப்படைக் கோளாறுகளுடன் நாம் இயங்கி வருகிறோம் என்பது மட்டும் தெளிவாச்சி. நீதிக்கு முன் எல்லோரும் சமம்; சட்டம் தன் வேலையைச் செய்யும்; - இப்படிதான் எத்தனை, எத்தனை வார்த்தை ஜாலங்கள். நம்மை நாமே முட்டாளாக்கிக்கொண்டு …’இன்னும் எத்தனை காலம்தான் ஏமா(ற்)றுவாய் இந்த நாட்டிலே…’

நாட்கள் கழிந்தன; பேச்சுகள் சுற்றுக்குபின் சுற்றாக சுற்றிக்கொண்டிருக்க, நாங்கள் ஒருவருக்கொருவர் தைரியமூட்டிக்கொள்ளும் நிலை. வீட்டிலிருந்து யாரையும் பார்க்க வர வேண்டாமென சொல்லியிருந்தேன் - என்ன சில நாட்கள்தானே என்றநினைப்பில். இப்போதோ ஏறத்தாழ இருபது நாட்கள் ஓடிவிட்டன. நண்பர்களிடம் சொல்லியனுப்பினேன். மனைவி இரண்டு மகள்களோடு வந்தார்கள். சில நிமிஷங்கள். சின்னவளுக்கு ஒரு வயதும், சில மாதங்களும். தூக்கி வைத்துக்கொள்ள ஆசை. எப்படி முடியும். குழந்தைகள் அழுகையோடு விடைபெற்றார்கள். அகநானூரில் ஒரு பாடல் வருமே: கிணற்றுக்குள் தண்ணீர் மேலே மிதக்கும் பாசி, மேலிருந்து தண்ணீர் மொள்ள வரும் குடம் பட்டவுடன் விலகி, வாளி மேலே போனவுடன் மீண்டும் வந்து மூடிக்கொள்ளும் - தலைவன் தொட்டதும் பசலை விலகி, அவன் பிரிந்ததும் மீண்டும் வரும் பசலை போல். அந்தக் கதைதான். குடும்பத்தினரைப் பார்த்த பிறகு ஜெயில் ஜெயிலாகவே ஆனது. பற்றாக்குறைக்கு அடுத்த நாள் பார்க்க வந்த குடும்ப நண்பர்கள் ‘உங்களைப் பார்த்துவிட்டு வந்தவுடன் சின்னவளுக்கு இரவெல்லாம் காய்ச்சல்’ என்று சொன்னார்கள். அதிலிருந்து ஐந்தாறு நாட்கள் கழித்து விடுதலையான நாள் வரை மருந்தில்லாத மனக்காய்ச்சல் எனக்கு.

அதற்குப் பிறகும்  சிறை வாசம் வந்தன. ஒரு முறைதான் மிக நீண்ட  வாசமாயிற்று.

 =======================================



Oct 09 2005 11:38 am சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 1 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
2 Responses
குழலி Says: after publication. e -->October 9th, 2005 at 1:04 pm e
ம்… 1984-85ல் ஆசிரியர் போராட்டத்திற்கு சிறை சென்று வந்த என் தந்தை கூறிய கதையைப் போலவே உள்ளது. சற்று நீளமாக உள்ளது, இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
நன்றி
வசந்தன் Says: after publication. e -->October 25th, 2005 at 7:08 pm e
நீளம் ‘பிறழ்ச்சினை’ இல்லை. நன்றாக இருக்கிறது அனுபவப் பகிர்வு.

88. தல புராணம்…3














*
ஏனைய பதிவுகள்:

1...............

2.............. 

3............... 

4............. 

5............. 








*




genetical-ஆக (?) அந்த புகை மேல இருந்த ஆர்வம் காரணமாக சின்ன வயசில இருந்தே ஒரு ஈர்ப்பு. கொஞ்சம் வளர்ந்ததும் ஊருக்குப் போகும்போதெல்லாம் திருட்டு தம்… அப்படியே போனது, காலேஜ் வந்தப்போ தொடர்ந்தது. ஊர்ல புளியந்தோப்புதான்; ஆனா மதுரையில ‘திருமலை நாயக்கர் மகால்’தான். நம்ம காம்பஸ்ல இருந்து ரொம்பப் பக்கத்திலதான் - ஒரு 100 மீட்டர்தான். இந்த மகாலுக்கும், மரியன்னை கோயிலுக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்ததாகவும், கடைசி நாயக்க மன்னர் யாருக்கும் தெரியாமல் கிறித்துவரானாரென்றும் ‘கட்டுக் கதை’ ஒன்று உண்டு. ஆனா நாங்க (நானும், ஆல்பர்ட்டும்) அந்த சுரங்கப் பாதையில் போறதில்லை; ராஜ பாட்டையில்தான்! அந்த நாட்களில் மகால் ஒரு - least cared for toursit spot -ஆக இருந்தது. வெளவ்வாலும், புறாக்களும்தான் அப்போ அங்க ‘ராஜ பரிபாலனம்’ நடத்திக்கிட்டு இருந்தாங்க. அதுக்குப் பிறகு, மதுரை கோர்ட் வந்தது. எங்களோட ராஜாங்கத்தை கோ.மு., கோ.பி. அப்டின்னு பிரிக்கலாம்.; கோர்ட் வர்ரதுக்கு முந்தி, கோர்ட் வந்த பிறகுன்னு.
கோ.மு.வில பகல்ல மகாலைச் சுத்தி உள்ள வெற்றிடங்களில் பசங்க நிறைய ஃபுட்பால் விளையாடிக்கிட்டு இருப்பாங்க. ‘ரிப்பீட்டு’ சொல்றேன்; நிஜமா சொல்றேன்; வழக்கமா சத்தியம் பண்றதில்லை; இல்லன்னா சத்தியமாகூட சொல்லுவேன் - ஒரு நாள்கூட ஒரு ஆள்கூட யாரும் கிரிக்கெட் ஆடிப் பார்த்ததில்லை; கிட்டி விளையாடிக்கிட்டு இருப்பார்கள். குண்டு, கோலி, பம்பரம், பட்டம், சடுகுடு என்னும் கபடி மற்ற எல்லாமே உண்டு. பாவம், இந்தக் காலத்துப் பசங்க - அட, அது எல்லாமே நீங்கதானே - அந்த விளையாட்டுகளை விளையாடி என்ன, பார்த்துகூட இருக்க மாட்டீர்கள். நீங்கள்ளாம் யாருப்பா; ஸ்டெஃப்பிய பாத்து ஜொள்ளு விட்டாலும், விளையாடணும்னா கிரிக்கெட்தானே - இளவஞ்சி, நான் ஒண்ணும் உங்கள சொல்லலை! இன்னும் பொம்பளப் பசங்க கிரிக்கெட்டும் பிரபலமாச்சுன்னா கேக்கவே வேணாம். ஆனா, அடுத்த generation-க்கு அப்படித்தான் - உங்க பசங்க ‘கிர்க்கெட்டிணிகள்’ (அதாங்க, கிர்க்கெட் வீரிகள்!) படம் போட்ட ஸ்கூல் நோட்புக், சட்டை போட்டுக்குவாங்க; உங்க கூடவே உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு வந்துகிட்டு இருக்க பிள்ளங்க திடீரென உங்க கையை விட்டுட்டு பெளலிங் போடறது மாதிரியோ, பேட் பண்றது மாதிரியோ ஒரு நிமிஷம் பண்ணிட்டு, அடுத்த நிமிஷம் சாதாரணமா உங்க கையப் பிடிக்கும்போது ‘ஆஹா, நம்ம பிள்ளைக்கு என்னமோ ஆச்சு; நாளைக்கே மந்திரிக்கணும்’ அப்டின்னு நினப்பீங்களே - சுருக்கமா சொல்லணும்னா நீங்க இப்ப ‘அலையறது’ மாதிரி அலையும்போதுதான் உங்களுக்கெல்லாம் உறைக்கும். அதுவரைக்கும் உங்க காதுல ஒண்ணுமே விழாது - howzzzaaaat !!!-அப்டிங்கிறது தவிர. சரி..சரி நம்ம விதயதிற்கு வருவோம். இல்லன்னா, சுரேஷ்..’இப்படியே போனா எப்ப கப்பல் போய்ச்சேரும்’பார்!


இந்த கோ.மு. பீரீயட்ல எங்க safe place எதுன்னா, மகாலுக்கு மேல போய் - அப்பல்லாம் டிக்கெட் கிடையாது எங்கள மாதிரி ஆளுகளுக்கு; வெளியூர் பார்ட்டிகிட்ட கொஞ்சம் எதுனாச்சும் மாடிப்படி கிட்ட நிக்கிறவர் கறந்துடுவார் - நாங்கல்லாம் யாரு, ரெகுலர் பார்ட்டிகள்ல. அங்க திருடன் கன்னம் வச்சு உடும்பை வச்சு ராசா சயன அறையில இறங்கி, ராணி கழுத்து மாலையை லவட்னதுன்னு - எல்லாம் ராசா வச்ச போட்டினாலதான் - ஒரு இடம் சொல்லுவாங்களே அதுதான் நம்ம ஸ்பாட். உக்காந்து பத்த வச்சிட்ட பிறகு, நின்னுக்கிட்டே இழுத்து புகை விட, யாரேனும் தெரிஞ்ச மூஞ்சி வர்ரது மாதிரி இருந்தா காலுக்கடியில் சிகரெட்டப் போட்டுவிட்டு நல்ல பிள்ளையாய் வந்துருவம்ல. அதுக்கு வசதியான இடம் அதுதான். இப்படி எத்தனை நாள் போய்ட்டு வந்திருப்போம்; ஆன ஒரு நாள் கூட இந்தச் சுவத்தில நிறைய பேருக அவங்க பேரையெல்லாம் கிறுக்கியிருக்காங்களே நாமும்தான் கிறுக்குவுமேன்னு நினச்சதுகூட கிடையாதுங்க. (ராமனாதன் கவனிக்கிறீங்களா?)
கோ.பி.-ல நாங்களும் இப்ப கொஞ்சம் தெளிஞ்சுட்டோம். காம்பஸ் பயம் இன்னும் இருந்திச்சு - என்னதான் இருந்தாலும் அது நம்ம ஏரியா இல்லையா? ஆனா கோர்ட் இப்ப ரொம்ப பிசியான இடமா ஆயிடுச்சி. நிறைய கருப்புக் கோட்டுகள்; ஆட்கள். மகாலுக்கு உள்ளயே ஒரு சிகரெட், டீக்கடை வந்திருச்சி. உள்ளேன்னா, மகால் மெயின் வாசலுக்கு வடது பக்கம் ஒரு சின்ன வாசல்; அதை ஒட்டி அந்தக் கடை. எங்கள மாதிரி திருட்டு தம் கேசுகள்; சீனியர்கள் கண்ணில் படாமல் இருப்பதற்காக ஓரங்கட்டும் குட்டி வக்கீல்கள் - இவர்களுக்கென்று ஒதுக்குப்புறமாக ஒரு ஸ்மோக்கிங் கார்னர் உண்டு. அங்க உக்காந்து சிகரெட் பிடிக்க தைரியம் வந்தபோது கல்லூரி இளங்கலை மூன்றாமாண்டுக்கு வந்தாச்சு.
இப்பவும் மகாலைத் தாண்டிப் போகும்போது திரும்பிப் பார்க்காமல், போக முடிவதில்லை. சில நாட்கள் சாயங்காலம் அங்கே போய் ‘இழுத்திட்டு’ அதற்குப் பிறகு வெளியில் உள்ள பார்க்கில் படுத்துக்கொண்டு, ஒரு செளராஷ்ட்ர அம்மா கொண்டுவரும் ‘உன்னா உடித்’ (அவித்த பாசிப்பயறு + எதோ ஒரு பொடி தூவித் தருவார்கள்) பத்து பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டால்…ம்..ஹும்…அது அந்தக் காலம்.
அப்படி நம்ம காம்ப்ஸ் லைஃப்ல இந்தப் பழக்கம் வந்திரிச்சினா, இன்னொரு பழக்கமும் தொத்திக்கிரீச்சி. அது நல்ல பழக்கமா…இல்ல, கெட்ட பழக்கமா? - அத நீங்கதான் சொல்லணும்.
Oct 09 2005 09:56 am சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is:
(இதுவரை 0 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
4 Responses
வசந்தன் Says: after publication. e -->October 10th, 2005 at 5:15 pm e
// கிட்டி விளையாடிக்கிட்டு இருப்பார்கள். குண்டு, கோலி, பம்பரம், பட்டம், சடுகுடு என்னும் கபடி மற்ற எல்லாமே உண்டு. பாவம், இந்தக் காலத்துப் பசங்க - அட, அது எல்லாமே நீங்கதானே - அந்த விளையாட்டுகளை விளையாடி என்ன, பார்த்துகூட இருக்க மாட்டீர்கள். //
என்னையா இப்படிச் சொல்லீட்டீங்கள்?நானும் இந்தத் தலைமுறைதானென்பதால் வன்மையாகக் கண்டிக்கிறேன். எங்கள் ஊரில் கிரிக்கெட் தவிர மிச்ச எல்லா விளையாட்டும் இருக்கு. யாழ்ப்பாணத்தில கொஞ்சக் காலம்முன்புவரை, கிரிக்கெட் மேல்தட்டுவர்க்க விளையாட்டாகவும் வசதிபடைத்த கல்லூரிகளில் மட்டுமே விளையாடும் விளையாட்டாகத்தான் இருந்ததாக என் புரிதல். அப்போது மின்சாரமும் இல்லாதபடியால் கிரிக்கெட் போட்டிகள் கூட தொலைக்காட்சிகளில் பார்த்தில்லை. ஆனால் உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியை நேரடியாக இல்லாவிட்டாலும் வீடியோ நாடாவில் தருவித்துப் பார்த்துவிடுவோம். உதைபந்தாட்டத்துக்கு அடுத்ததாக மிகப்பிரபலமானவை கிட்டிபுள்ளும், கிளித்தட்டும்தான். கரையோரக் கிராமமென்பதால் பட்டம் விடுதலும் சேர்ந்து கொள்ளும். ஆனால் முழுக்காலமும் பறக்கவிட முடியாது.
தருமி » 102. மரணம் தொட்ட கணங்கள்…3 Says: after publication. e -->November 8th, 2005 at 1:36 am e
[…] A smoker is always a smoker - என்பதற்கு ஏற்றாற்போல இன்னுமும் சிகரெட் ஆசை என்னவோ விடவில்லை! பேனா மூடி, பென்சில் இப்படி ஏதாவது ஒன்றை வாயில் வைத்துக்கொண்டு ‘பழைய நினைப்பில்’ மூழ்கி, வீட்டில் திட்டு வாங்கும்போதெல்லாம், ‘என் இரண்டாம் மகளின் கல்யாணம் முடிந்த அன்றைக்குப் பாருங்கள்; தண்ணி, தம்முன்னு அடிச்சி ஒரு ‘அலப்ஸ்’ கொடுக்கிறேனா இல்லையான்னு’ சொல்லிக்கிட்டே இருப்பேன். அதே மாதிரி அவள் கல்யாணம் முடிந்த அன்று இரவு ‘ராஜ மாளிகை’யில் என்னோடு தம் அடிக்கப் பழகிய ஆல்பர்ட்டிடமும், இன்னொரு நண்பனிடமும் ஒரே ஒரு சிகரெட் ஓசி கேட்டேன்; பாவிப் பசங்க தரமாட்டேன்னுட்டாங்க! அதனால், இரண்டில் ஒன்றை மட்டும் செய்து என் வாக்குறுதியில் 50% மட்டும் நிறைவேற்றிக்கொண்டேன். இன்னும் ‘ஆசை இருக்கு தம் அடிக்க; அதிர்ஷ்டம் இல்லை பத்த வைக்க!’ […]
தருமி » 103. மரணம் தொட்ட கணங்கள்…4 Says: after publication. e -->November 8th, 2005 at 8:45 pm e
[…] அடுத்த நாள் - D-Day - காலையிலேயே தியேட்டருக்கு stretcher-ல் பயணம்; வழியில் ஆல்பர்ட் (’நம்ம திருட்டுத் தம் கூட்டாளி !)என்னிடம் குனிந்து தைரியம் சொன்னான்; சிகரெட் நாற்றம்; ‘இப்படி அடிச்சிதான் இப்படி போறேன்; நீ இன்னும் விடமாட்ட, இல்ல என்றேன். (சிரிச்சிக்கிட்டே ஜோக் மாதிரி நான் சொன்னதாக அவன் பின்னால் சொல்லி, எப்படி’டா, அந்த நேரத்தில் உன்னால ஜோக் அடிக்க முடுஞ்சுது என்றான்.) தியேட்டருக்கு நுழைவதற்கு முன் உள்ள முன்னறையில் படுக்க வைத்தார்கள்; சில பல ஊசிகள். மயக்கநிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அடுத்த ஒரு stretcher-க்கு மாற்றியதை உணர்ந்தேன்; அது மிக மிக ‘சில்’ல்லென்று இருக்க, உள்ளே எடுத்துப் போகப்பட்டேன். தலைக்குமேல் ஏதோ ஒன்று - லைட் ஏதாவது இருக்கலாம்; பள பளவென்று இருந்தது. அதில் என் உருவம் ஓரளவு தெரிந்தது; ஏதோ சிலுவையில் அறையப் போவதுபோல் கைகளை நீட்டி வைத்திருந்தது தெரிந்தது. அதையே பார்த்துக்கொண்டேஏஏஏஏ…இருந்தேன். அவ்வளவுதான் தெரியும். […]
தருமி » 108.தல புராணம்…5 Says: after publication. e -->November 22nd, 2005 at 10:13 pm e
[…] சின்ன வயசில ‘வேப்ப மர உச்சியில நின்னு பேயொண்ணு ஆடுது…’அப்டின்றது மாதிரி இது மாதிரி எத்தனை எத்தனை வதந்திகள். அதையே ஒரு பெரிய லிஸ்ட்டாகப் போடலாம். இந்த காலேஜ் ஹவுஸுக்குப் பக்கத்து சந்திலதான் ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமையோடு இருந்தது - தங்கம் தியேட்டர். ஒரு பெரிய கால்பந்து மைதானத்தையே உள்ளே வைத்து விடலாம்போல அவ்வளவு பெரிய தியேட்டர். சுற்றியும் பெரிய இடம். தியேட்டரின் வெளி வராந்தாவே அவ்ளோ அகலமா இருக்கும். இதுதான் நான் சிகரெட் குடிச்சி, போலிசிடம் பிடிபட்டு, ஆங்கிலத்தால தப்பிய ‘தலம்’! இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது! இந்த தியேட்டர் கட்டும்போது - அப்போது நான் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவனாயிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். பல கதைகள் காற்றில் வந்த நினைவு இருக்கிறது. நரபலி கொடுத்ததில் பானை நிறைய கிடைத்த தங்க காசுகள் வைத்துக் கட்டப்பட்ட தியேட்டர் என்றார்கள். இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோயிலைவிட உயரமாகப் போய்விடும் என்பதால் அந்த முகப்பைக் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது என்று பின்னாளில் கேள்விப் பட்டோம். ஆனால் அந்த சமயத்தில் நரபலிக் கதையின் தொடர்ச்சியாக வேறு சில கதைகள் மிதந்தன. […]

Saturday, October 08, 2005

87. என் பத்துக் கட்டளைகள்…



என் பத்துக் கட்டளைகள்:


கிறித்துவத்தில் பத்துக் கட்டளைகளை கடவுள் மோசஸுக்குக் கொடுத்ததாக ஒரு ஐதீகம். Ten Commandments-ல் கூட லேசர் கதிர்கள் கல்லில் எழுத மோசஸ் அதை தன் மக்களுக்கு எடுத்துச் செல்வாரே…எல்லாரும் கட்டாயம் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் எத்தனை பேர் எனக்குப் பிடித்த Mel Brooks-ன் History of the World I என்ற நகைச்சுவைச் சித்திரத்தைப் பார்த்திருப்பீர்களோ - அதில்: மோசஸ் மலைக்குச் செல்கிறார்; கடவுள் மூன்று stone plaques-ல் 15 கட்டளைகள் கொடுப்பார். அதை எடுத்து வரும் மோசஸ் ‘இதோ கடவுள் என்னிடம் 15 கட்டளைகள்…என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒன்று கையிலிருந்து கீழே விழுந்து உடைந்துவிடும். (இதற்கு கிறித்துவர்கள் யாரும் கொடி பிடிக்கவில்லை) உடனே, மோசஸ் அழிச்சிக் கிழிச்சி இதோ கடவுள் தந்த 10 கட்டளைகள் என்று அறிவிப்பார்.

நான் கடவுள் நம்பிக்கை என்ற நிலையில் இருந்து கடவுள் மறுப்பு என்ற ‘உயர் நிலை’ -enlightenment- அடைந்தவுடன் எனக்கென்று பத்துக் கட்டளைகள் உருவாக்கிக் கொண்டேன்.


1. Dont try to become god in vain. Be a human, first and last.

நான் பார்த்த வரையில் கடவுளோடு ‘ஐக்கியமான’ மக்கள் தங்களுக்கும், அந்தக் கடவுளுக்கும் ஒரு பாலம் போட்டு அதனோடு நெருங்கிப்போய் விடுகிறார்கள் . நல்ல காரியம் தான். ஆனால், அந்த ‘நெருக்கத்தில்’ பக்கத்தில் இருக்கும் மனுஷ ஜென்மங்களை மறந்து விடுவதையே பார்க்கிறேன். கடவுள் பக்தியில் கரைந்தவர்களிடம் மனித நேயம் சுத்தமாக மறைந்து விடுவதையே நாளும் பார்க்கிறேன். ஒரே ஒரு exception அன்னை தெரசா.





2. You open your eyes.

அவர் சொன்னார்..இவர் சொன்னாரென்பதை விடவும் நாமே கொஞ்சம் யோசித்தல் தவறில்லையே.

நாம் பொதுவாக அடுத்தவர் கண்பார்வை மூலமாகத்தான் பார்த்து வருகிறோம்.












3. Dare to be different

தனித்துத் தெரிய வேண்டுமென்பதற்காக அல்ல; நான் இப்படித்தான் என்று தன் நிலையை -individuality - காண்பிப்பதே சரி.


4. Make war, when you have to.

பலருக்கு இது சரியில்லாமல் தோன்றலாம். என் கருத்து இது.பாரதி சொன்னானே ..ரெளத்திரம் பழகு அப்டின்னு ..அது மாதிரி

5. Know, think and if possible act

இதை ஒட்டியே என் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பல ஆண்டுகள், மரத்தடியில், informal-ஆகக்கூடி எதைப்பற்றியும் மாணவர்கள் விவாதிக்கலாம் என்றொரு அமைப்பை நடத்தி வந்தேன். அக்குழுவிற்கு நாங்கள் வைத்துக்கொண்ட பெயர்: LUKAT - Let Us Know And Think. ‘அவ்வை’ என்ற பெயரில் எனக்குப் பின்னூட்டமிடுவது இந்த LUKAT-ல் முழு ஈடுபாடு காட்டிய என் மாணவ நண்பன். U.S.-ல் ஆராய்ச்சி மாணவன் இப்போது .

6. Life is a string of disaapointments and a bag of compromises

எனக்கு மிகவும் பிடித்த வாழ்வியலை ஒட்டிய, practical life-க்குரிய கருத்து.

7. Have ego but not an inflated one.

சுய கெளரவம் பற்றிய விஷயம். ஞானிகள் ‘சுயத்தை’ அறுக்க வேண்டும் என்பார்கள். அது எனக்கு உடன்பாடல்ல.


8. You may not know your limits; try it.

முயற்சி எடுக்காமலிருப்பது mistake of Ommission. முயன்று தோல்வியடைவது, முயலாமலேயே இருந்துவிட்டுப் பின் கவலை அடைவதைவிடவும் நன்று.


9. Call a spade a spade

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவாரடி என்றானே முண்டாசுக்காரன் -- அப்படியின்றி இருத்தல்.

10.Nothing matters

zen, பதறுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை - என் மாணவ நண்பன் ஒருவன் சொல்லிக் கொடுத்த கட்டளை இது.


.
.
.
.





Oct 08 2005 11:28 am அவியல்... and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is:
(இதுவரை 3 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
15 Responses
இளவஞ்சி Says: after publication. e -->October 8th, 2005 at 12:38 pm e
9….? Fill in the blanks??சார், சரியாச்சொன்னா internals ல எத்தனை மார்க்கு போடுவீங்க? The choice you make dictates the LIFE you lead - நம் முடிவுகளே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.
இது போக எனக்கு பிடிச்ச பழமொழி - No one is perfect. Thats why pencils have erasers
_Me_ Says: after publication. e -->October 8th, 2005 at 1:48 pm e
Which language is this ? just curious ?
நல்லடியார் Says: after publication. e -->October 8th, 2005 at 1:51 pm e
தருமி,
உங்கள் பத்துக்கட்டளைகள் (கட்டுப்பாடுகள்) ஏற்கனவே குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. உங்களின் கனிவான பார்வைக்கு:
1) (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். 3:134
2) நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? 37:155
3) ஒவ்வொருவருக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு. உம் இறைவன் அவர்கள் செய்வதைப் பற்றி பராமுகமாக இல்லை. 6:132
4) உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. 2:190
5) நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம். மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. 23:62
6) அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு. அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.10:64
7) நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான். அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான். 17:83
8) ‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். 31:18
9) இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும். 17:19
9) எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். 75:20
dharumi Says: after publication. e -->October 8th, 2005 at 3:20 pm e
இளவஞ்சி,நீங்கள் கொடுத்த இரண்டுமே நன்றாயிருக்கிறது. ஆயினும், நான் நினைத்ததை நினைவில் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறேன். வந்தால் தருகிறேன்.“Thats why pencils have erasers ” - அப்போ பேனவில எழுதரவுங்க…? சும்மா, லொளலொளலாங்கட்டி…இது புரியுதா…?
நல்லடியார்,மீண்டும் வந்தமைக்கு நன்றி.நீங்கள் கொடுத்தவைகளில் எனக்கு மிகவும் பிடித்தது; 2மற்றபடி:என் 1 - அது கடவுள் மறுப்பு; மனித நேய விதயம்.3 - 3 தொடர்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.5 - 5 - do -6 - 6 - do -பார்க்கும் பார்வைகளில் உள்ள வேற்றுமை காரணமாக இருக்கலாம்.
padma Says: after publication. e -->October 8th, 2005 at 5:30 pm e
உண்மையான பத்து கட்டளகள். நீங்கள் சொல்வது போல ஆண்டவனுக்கு அருகில செல்வதாக நினைப்பவர்கள் மனித நேயத்தை மறந்து விடுகிறார்கள். மனிதனுக்குள் உள்ள இறைவனை மறந்தே விடுகிறார்கள்.
dharumi Says: after publication. e -->October 8th, 2005 at 6:07 pm e
பத்மா,” மனிதனுக்குள் உள்ள இறைவனை” - என்ன் சொல்கிறீர்கள்? ஓ! நம் ‘மன்சாட்சி’யைச் சொல்கிறீர்களோ?
dharumi Says: after publication. e -->October 8th, 2005 at 6:10 pm e
_Me_ Says:October 8th, 2005 at 1:48 pm eWhich language is this ? just curious ?
hi,are you still up there listening?this is Tamil, a classical language of India.wanna keep continuing the communication. if so, welcome………..sam
RAAJA Says: after publication. e -->October 8th, 2005 at 6:28 pm e
//நீங்கள் சொல்வது போல ஆண்டவனுக்கு அருகில செல்வதாக நினைப்பவர்கள் மனித நேயத்தை மறந்து விடுகிறார்கள்.//
What Islam says is:இறைவனுக்கான வழிபாடு வணக்கங்களில் குறை வைப்பதை இறைவன் நாடினால் மன்னித்து விடலாம் சக மனிதனுக்கு குறை வைத்தால், அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவனும் மன்னிக்க மாட்டான்
padma Says: after publication. e -->October 8th, 2005 at 8:34 pm e
நான் சொன்னது அதுவும் மற்றவரிடம் காட்டவேண்டிய அன்பும்.உள்ளத்தில் உள்ளானடிஅதை நீ உணர வேண்டுமடிஉள்ளத்தில் காண்பாயென்றால்கோவில் உள்ளேயும் காண்பாயடி… (தேசிக விநாயகம் பிள்ளை)
தாணு Says: after publication. e -->October 8th, 2005 at 10:21 pm e
6 & 7 எனக்கு ரொம்ப நெருக்கமான கட்டளைகளாயிருக்கு. ஈகோ இல்லாத மனிதன் சாதிக்க முடிவதில்லை.
Awwai Says: after publication. e -->October 8th, 2005 at 10:46 pm e
I dedicate this article to my teacher Sam George. He is one of the few teachers who not only did a good job at teaching (not many do), but also went out of the way to train students in critical and rational thinking by helping us organize discussion forums. I have seen such commitment in very few people. Hats off to him.
His series ‘Why/How I underwent conversion’, is an excellent thesis that analyses the intricacies of different religions. In the first essay, he underscores the need for ‘objectivity’ and ‘rationality’ in analyzing religion and God. In the second, he brings up the apparent irony to the belief in existence of God: Is God really omniscient and omnipotent? Does the world run by God’s plan (pre-determinism) or by man’s free-will? The third part of his series was answers to questions posted by several readers, and the last three are a detailed analysis of the history and teachings of different religions. He is convincing in his argument that religions are man made and it is not wise for us to divide ourselves based on religion. The controversies and contradictions in the history and teachings of the different religions highlight the fact that, even this record of history and translations of the teachings over centuries, is highly inaccurate and so, bewildering to a present day reader. All through, he highlights the importance of rational thinking in following the teachings of any religion. Still better is being humane and not blindly ‘religious’ as per ones own interpretation.
Rational thinking! This is one of the key elements that has helped man kind be where we are today. Rational thinking enables one to think logically and not blindly accept or deny any idea or concept received through indoctrination or by personal bias. It is rational thinking that has made man the most intellectual organism on earth, and helped us advance in science and technology. Science and Technology, a by product of our rational thinking, has helped us do several things that were unimaginable in the past.For instance:We can put satellites to go around the earth, or even explore the neighboring planets. Though these space instruments don’t last for long, we can replace them.We can design distillation units that can separate salt from sea water and make it potable, though this process is very expensive to do at large scale.We can make robots execute functions we want precisely. There is still room for refining the control of movement in robots, nevertheless it is a great achievement.We have the intelligence to harness power from radioactive fission. Though we know in theory that nuclear-fusion is a far efficient and cleaner process, we are far from achieving it in practice.Atleast a handful of our species can understand complicated science such as ‘theory of relativity’; though we ourselves don’t understand or even know what it is all about, we can atleast accept and be happy that someone of my species knows what it is.
The list can go on endlessly! All these stand testimony to the great human intelligence – a product of our ‘rational thinking’.
Now let us take us away from our books and classrooms and any other source of passive indoctrination, and just look around us.
The stars (sun included) are perpetual source of energy where nuclear fusion keeps happening practically endlessly. The planets and satellites that float around in the space do so without need for repair or replacement. The giant scale distillation system that takes water vapour from sea and provides it in potable form as rain has been ‘cost effective’ and going on for ever. The huge diversity of organisms on earth, the various functions they do, their movement so precisely coordinated are way ahead of any man made robots we can imagine. Just look at the gaint redwood tree… it can suck water from soil and take it up hundreds of meters against gravity, for hundreds of years! I wonder how long human intelligence will take to design such a magnificent system.
This list can go on longer than the endless list of human achievements. Inspite of this humbling contrast, the human mind tends to think that such more efficient and elegant things can be put in place and kept functioning just by ‘random chance and evolution’. Now, if any so-called rational mind places a bet on ‘random chance’ to bring about such precision and elegance, I challenge them to this game: remember the toy we get in our ‘fancy stores’, one where you need to push 5-6 steel balls to the centre of concentric circles; just keep shaking this toy and show me you can get all the steel balls at the centre ‘just by chance’. Your time starts now…tick tick tick…
May be real rationalism will set in by now! If just five small balls can not assemble at one spot for a moment just by ‘chance’ without the interference of an intelligence to direct it, how could the first molecules (RNA?) orchestrate themselves into self-replicating systems, eventually leading to the highly complex living systems we see today?
There definitely is a higher intelligence than the human mind. It is this intelligence we call God. Our understanding of God varies from person to person. Some are ‘realised’ souls, and others are like us who can hope to understand God someday. As of now we may not be able to perceive the ‘proof’ for existence of God, but as my scientific mentor says, “absence of proof, is not proof of absence”. We may hope to understand God someday.
When a contemporary scientist says there are ‘10-raised-to-the-power-500’ universes and there are 9 dimensions, and our awareness is limited to only 3 dimensions, we are ready to accept, even if we don’t understand what it actually means. That is because we recognize the scientist’s expertise and acknowledge our own ignorance in that field. Leave alone such complex theories about nature of universe or theory of relativity; even something as simple as repairing a cycle tube puncture or a torn footwear, we take it to an ‘expert’. But when it comes to God, we think we all are experts and every Tom, Dick and Harry comes up with his own ‘expert opinion’! So much for ‘rationality’ and ‘objectivity’! Sometimes I wonder if ‘rationality’ is called ‘rationality’ because it is so much rationed amongst us!
Another question that comes to ones mind is, “If God is so intelligent, then why did he take so long to design/evolve human beings”. In asking this question, we assume ‘humans are the ultimate creation of God, and creation of humans was his sole purpose’, which is a fallacy! Secondly, if there are more than 3 dimensions, and time is one of the dimensions we can not perceive, then ‘different time points’ are just two spots on the canvas separated from each other! So, the question of ‘why this long’ does not arise!
Interestingly, in a 6-part series, Sam-ji actually has only 2-points against existence of God. All the rest is about religions! Sam-ji wonders if whatever happens is predetermined by God, or it is freewill of man. In considering these two possibilities, he fails to see that the reality could be a mix of these two. To draw an analogy, in any video game, the overall game plan is ‘predetermined’. The player takes himself from one situation to another, one stage to next. At each juncture he has to choose (freewill) from a few options, and his decision at that point determines his next step. The freewill choice predetermines the next step; the predetermination defines the choices freewill has at the next step. These two processes go hand-in-hand.‘Pre-determinism’ or ‘Fate’ is a dynamic process; it puts you in situations and leaves it to your free-will to decide what you want to make out of the situation you are put in. To give an example, ‘fate’ could leave a person rich, but it is left to the freewill of the person to use the money to generate jobs and help others, or to use it up in his sense gratifications! The way we use our freewill today determines what situations we will be put in future.
I guess these concepts serve to counteract Sam-ji’s questions about God.
Though I would love to elaborate on how some of the ‘wrong lessons’ passed down generations in the form of religion could actually be a result of errors in communication and misinterpretations accumulated over the centuries, I don’t want to make this write up longer than what it is now. I do agree with Sam-ji that the religions as they are presented to us today are not completely unquestionable.
All through his essay, Sam-ji takes credit for ’15 years of deep contemplation’ before he arrived at the ‘truth’! You may remember, initially he prayed so earnestly to get back his absolute faith in God; may be God’s way of re-instating faith in a troubled mind is to first remove all the ‘blind faith’ he held in rituals and religious practices. That has taken him 15 years of research and contemplation. Now that his mind is cleared of the ‘blindness’, may be, he is set to think rationally and accept the existence of the superior intelligence!Praise the Lord!!Looking forward to your post-realisation posts, dear Sam-ji!
ramachandran usha Says: after publication. e -->October 9th, 2005 at 12:09 am e
7 தவிர எனக்கு எல்லாம் சரி என்று தோன்றுகிறது. ஈகோ அதாவது அகங்காரம் தவறான பாதையைத்தான் காட்டும். கஜினி வசனம் நேத்து சன் டீவியில் வந்தது. என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை, என்னால் மட்டும் முடியும் என்பது அகங்காரம்.மொத்தத்தில் ஒரு வார நட்சத்திர பதவி உங்களை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்த்திவிட்டது தருமி சார், வாழ்த்துக்கள்!
dharumi Says: after publication. e -->October 9th, 2005 at 9:55 am e
அவ்வை,முதல் பாராவில் ‘போட்டுத் தள்ளிட்டியே’ப்பா. அட போப்பா!மற்றவைகளைப் பற்றி பிறக்ய் தொடர்வோமே…
பத்மா,நானும் அந்த வசனம் டேட்டேன். எழுதியது யாரென்று பார்க்க நினைத்துள்ளேன்.“என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை = EGOஎன்னை நானே மதித்தல், என்னால் மட்டும் முடியும் என்பது அகங்காரம் = EGOTISM; நான் சொல்வது முன்னதுதான்.
madhumitha Says: after publication. e -->October 9th, 2005 at 12:00 pm e
நன்றி தருமிஉயர்ந்த சிந்தனைதான் இது
awareness
வாழ்க்கை விரிந்திருக்கிறது.எந்த நொடியிலும் உனக்கான கதவு திறக்கலாம்விழிப்போடிரு
தருமி » 102. மரணம் தொட்ட கணங்கள்…3 Says: after publication. e -->November 8th, 2005 at 2:19 pm e
[…] மெடிக்கல் லீவ் முடிந்து கல்லூரி திரும்பியபோது பல தரப்பட்ட comments! எனக்கு வந்தது heart attack-ஆக இருக்காது என்ற நம்பிக்கை சிலருக்கு. பல காரணங்கள்: சிகரெட் விட்டாச்சு - நல்ல active-ஆக இருக்கிற ஆளுதானே - எதையும் சீரியஸா எடுக்காத ஆளல்லவா {நம்ம போடுற ஆட்டம், அடிக்கிற கூத்து, போட்டுக்கிற சட்டை துணிமணி-கல்லூரியில் ஆசிரியர்கள் மத்தியில் ‘முதல் ஆள்’ என்று பெயர் (!?) வாங்கிய விஷயங்கள் பல - உதாரணமா, முதல்ல ஜீன்ஸ் போட்டது, ஜிப்பா பைஜாமாவோட வர்ரது, வலது கையில் வாட்ச்(ஆனா, இப்போவெல்லாம் இடது கையில்தான்; அதுக்காக வலது கையில் கட்றவங்களை நான் ஒண்ணுமே சொல்லலையே!!), இதோடு, பூனக்குட்டிய இடுக்கிகிட்டு இருக்கிறது மாதிரி எப்போதும் தோளில் தொங்கும் காமெரா, குட்டியூண்டு வெள்ளெழுத்து கண்ணாடி போட்டுக்கிட்டு அதையும் கயித்தில கட்டி தொங்க விட்டுக்கிறதுன்னு ஒரு பெரிய லிஸ்ட் — இதல்லம் வச்சு பல மக்கள் freaky என்பார்கள், சிலர் trendy என்பார்கள்.எது எப்படியாயினும், நான் எனது மூன்றாம் கட்டளையைப் பின்பற்றி செய்த விஷயங்கள் இவை. […]

Friday, October 07, 2005

86. மரணம் தொட்ட கணங்கள்…2

*முதல் கணம் ...



முதல்லயே சொல்லீர்ரது நல்லதில்லையா? இது ஒண்ணும் பிரமாதமான விதயம் இல்ல; ஏன்னா அநேகமா எல்லார் வாழ்கையிலேயும் நடந்த ஒரு கணமாகத்தான் இருக்கும். ‘முதல் கணம்’ மாட்டுவண்டின்னா அப்படியே இருந்திரலாமா? இன்னும் கொஞ்சம் ஹை-டெக் ஆக முன்னேற வேண்டாமா? அதனால இப்ப சைக்கிள். அதுக்கு முந்தி, உங்களுக்கு அந்தக் கால சைக்கிள்கள் பற்றி சொல்லணுமே.

இப்போ சைக்கிள்கள் மட்டுமல்ல, வாழ்க்கையே கலர்புல்லா ஆகிப்போச்சு. எங்க காலத்தில இப்ப மாதிரி தினுசு தினுசா சைக்கிள்கள் கிடையாது. இப்போ நார்மலான உயரத்தில இருக்கிற சைக்கிள்களுக்கு அப்போ 22 இன்ச் சைக்கிள்கள் என்று பேரு. எல்லாமே அநேகமாக அந்த சைக்கிள்கள்தான்; அதோடு அப்பப்போ 18″- கொஞ்சம் குட்டையான சைக்கிள், 24″ - உயரமான வண்டி –இந்த இரண்டு டைப்பும் உண்டு. ஆனால், இந்த இரண்டு டைப்புமே ரோட்ல போற வர்ரதில 5%-தான் இருக்கும். அவ்வளவுதான் தினுசுகள். இதில் 24″ சைக்கிள்னா ஏதோ யாரோ ஒரு வயசானவரின் சைக்கிள்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்லிடலாம்; ஏன்னா அப்போதே இந்த சைஸ் சைக்கிள்கள் பரிணாமத்தில் தங்கள் இறுதிக் காலத்தில் - stage of extinciton - இருந்த endangered species! அந்த 18″ சைக்கிள் என்றால் அதை ஓட்டிப் போகும் பையன் ஒரு பணக்கார வீட்டுப் பையனாக இருக்கும். ஏன்னா அப்போ சைக்கிள் வாங்கும்போது அது ஒரு once in life time investment என்ற எண்ணத்தில்தான் வாங்குவார்கள். இப்போதைக்கு 18″, வளர்ந்தபிறகு 22″ என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை. இந்த use-and-throw culture ஏது அப்போது? சைக்கிள் ஒன்று வாங்கியாச்சா, அது உங்கள் பரம்பரைச் சொத்தாகத்தான் மதிக்கப்படுமே தவிர, இன்று வாங்கி நாளை கடாசிவிடக் கூடிய பொருளாகக் கருதப்படுவதில்லை. ‘இது என் அப்பா படிக்கும்போது வாங்கிய சைக்கிளாக்கும்’ என்று சொன்ன நண்பர்கள் ஏராளம். அந்தக் காலத்து அப்பாமார்களுக்கும் சைக்கிள்கள் மேல் அப்படி ஒரு அலாதிப் பிரியம். தன் பிள்ளைகளிடம் கொடுத்தால் கூட அதன் புனிதத்தன்மை போய்விடுவதாக நினைப்பார்கள். ‘எப்படி இருந்திச்சு தெரியுமா? நீ எடுக்க ஆரம்பிச்ச அண்ணையிலிருந்தே வண்டி கலகலத்துப் போச்சு’ என்று பெருமூச்செறிவார்கள் என் அப்பா மாதிரி.


இப்போவெல்லாம் சைக்கிளைப் பற்றிய - சில terms- சொற்பிரயோகம்கூட இல்லாமல் போச்சு; அது என்னன்னா, over-oiling and over-hauling ! முதலில் சொல்வது - தலைக்கு எண்ணெய் வச்சு நம்ம வீட்ல தினமும் குளிப்போமே அது மாதிரி; எண்ணெய்க் குமிழ் ஒன்று வைத்து டுபுக்..டுபுக் என்று சொட்டு சொட்டா அங்கங்கே விடுவார்கள். அப்டியே மாட்டுக் கொம்பை பிடித்து மடக்கும் லாகவத்தில் சைக்கிளுக்கு முன்னால் நின்று கொண்டு, இடது கையால் ஹாண்டில் பாரைப் பிடித்து முன் சக்கரத்தைச் சடாரெனத் தூக்கிப் பிடித்து அதை வலது கையால் வேகமாகச் சுற்றவிட்டு, சுற்றிக் கொண்டிருக்கும்போதே சக்கரத்தின் இரு பக்கத்திற்கும் எண்ணெய் போடும் லாகவம் இருக்கிறதே அது பார்க்கப் பார்க்க அழகு. அப்பா வைத்திருந்த சைக்கிளை டவுனுக்குள் இருந்த அப்பாவின் மாணவர் ஒருவரின் கடைக்குக் கொண்டு போய் அங்கே இந்த ‘வைபவத்தை’ நடத்துவதற்கு ஓரணாவோ, இரண்டணாவோ, ஆனால் எனக்கு ‘டிராவலிங் அலவன்ஸ்’ ஒரு அரையணாவாவது கிடைக்கும். அந்த அலவன்ஸை விட டவுனுக்குள் சென்று வரும் திரில்லுக்காகவே நான் ரெடியாக இருப்பேன். இப்போது அந்த பாய்கடை இருந்த இடத்தைத் தாண்டும் போதெல்லாம் அந்த முன் சக்கரத்திற்கு எண்ணெய் போடும் லாகவத்தை நினைத்துக் கொள்வேன். நான் மறந்தால் கூட என் மகள்களோடு போனால் அந்தக் கடை - இப்போது அங்கே பெரிய ஜவுளிக்கடை -வந்ததும் நினைவுபடுத்துவார்கள்.


இது ஒரு டைப் என்றால், அடுத்தது over-hauling இருக்கிறதே, அது குற்றாலக் குளிப்பு, அல்லது வீட்டில் அப்பா வாராவாரம் எடுக்கும் oil bath மாதிரி; சைக்கிளைப் பகுதி பகுதியாகப் பிரித்து மண்ணெண்ணையில் ஊற வைத்து, சக்கரங்களுக்குக் கோட்டம் பாத்து, பிறகு அதை ஒன்று சேர்த்து, பின் கடைசியில் பள பளன்னு தொடச்சி…அடேயப்பா..ஆளுகளுக்கு, அதுவும் நம்ம சினிமா படங்களில வில்லன்களுக்கு மசாஜ் செய்வார்களே அதெல்லாம் கெட்டது போங்கள். ஒரு ரூபாய் இதற்கு என்று நினைக்கிறேன்.

பள்ளிப் படிப்பு முடித்து P.U.C.-யும் முடித்த பிறகு கல்லூரி செல்வதற்கு என்று எனக்கு ஒரு சைக்கிள் வாங்குவதென்று முடிவானது. என்ன சைக்கிள் வாங்கலாம்? எனக்கு Raleigh சைக்கிள் வேண்டுமென அப்பாவை நச்சரித்தேன். அது Made in England. ராமநாதபுரமோ, ராமேஷ்வரமோ தெரியாது; அங்கேதான் இந்த சைக்கிள் கிடைக்கும். மலேயாவிலிருந்து வரும் என்று சொல்வார்கள். பெயரே மலேயா ராலே. நண்பர்களிடம் சொல்லிவைத்து அப்பா அந்த சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். நம்ம ஊர் சைக்கிள்கள் 250-300 என்று விலை; ஆனால் இந்த சைக்கிள் 400 ரூபாய்! திடீரென்று ஒரு நாள் மாலை அந்தக் கரும் பச்சை சைக்கிள் வீட்டுக்கு வந்தது. ஒரே ஜாலிதான்; சும்மாவா, எனக்கே எனக்கா என்று; அதுவும் ஒரு ராலே சைக்கிள். இந்த இறக்குமதியாகும் சைக்கிள்கள் எல்லாமே 22″தான்; ஆனால் நம்ம ஊரு சைக்கிள்களைவிட கொஞ்சம் உயரம் குறைவாக இருக்கும். சைக்கிள் செயின் ஃபுல் கவராக இருக்கும்; எக்ஸ்ட்ராவாக ஒரு கை-பம்ப் இருக்கும்; பள பளன்னு டைனமோ; அதுவும் அப்போ ரொம்ப ஃபேமஸான ‘மில்லர்’ டைனமோ; சைக்கிள் சீட்டு பேரு ‘புரூக்ஸ்’-நல்லா சொகுசா இருக்கும்….இப்படி பல பிளஸ் பாய்ண்ட்டுகள் சொல்லிக்கிட்டே போகலாம். எப்படி இருக்கும் தெரியுமா ஓட்டுவதற்கு? அது என்னவோ தெரியாது, என்ன மாயமோ தெரியாது..நல்லா வேகமாகப் போகும்; அதைவிட வேறு எந்த சைக்கிள்களிலும் வராத ஒரு சத்தம்..ங்கொய்..னு, அந்த சத்தம் நான் பார்த்த வரை இந்த மலேயா ராலேயிலிருந்து மட்டும்தான் வரும்; அதுவும் வேகமாகப் போகும்போது மட்டும். அந்தச் சத்தம் உங்களை ‘இன்னும் ஸ்பீடா போடா’ அப்டின்றது மாதிரி உந்தும். Some aerodynamics and accoustics too!


இப்டில்லாம் சொல்றதால பயங்கர வேகமா போறப்போ சறுக்கி லாரிக்கடியில் விழுந்து, அந்த பின் சக்கரம் அப்படியே என் மேல ஏறப்போற நேரம்…இப்படி ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க! அப்போ B.Sc. இரண்டாமாண்டு. தெற்கு வாசலில் இருந்து தியாகராஜர் கல்லூரி போய்க்கிட்டு இருக்கிறேன். வழக்கமா நாங்க கிளாஸ்மேட்ஸ் இரண்டு பேர் போவோம். அன்னைக்கி நண்பர் வரவில்லை. கல்லூரிக்கு முந்தின இரண்டாவது ஸ்டாப், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்டாப்புக்கு முந்தின ஸ்டாப் - அங்கே எனக்கு முன்னால ஒரு கறுப்பு ஹில்மேன் கார் நிக்கிது; டிரைவர் வலது பக்கம் திரும்புறதுக்காக வெளியே கையை நீட்டிக் காண்பிச்சுக்கிட்டே இருக்கார். நான் என் மலேயா சைக்கிள்ல அந்தக் காருக்குப் பின்னால் காலை கிழே ஊனிக்கிட்டு நிக்கிறேன். பின்னல் வந்து ஸ்டாப்பில நிக்கிது பஸ் - T.V.S. BUS - 15 A - சிலைமான் போறது. கண்டக்டர் டபுள் விசில் கொடுக்க, டிரைவர் சடாரென வண்டியை எடுக்கிறார், வளைத்து எடுத்து விடலாமென்ற நம்பிக்கையில். முடியவில்லை. நான் ரோட்டின் இடது புறம் நின்றதால் பஸ்ஸின் இடது பாகம் என்னை சைக்கிளோடு இடிக்க, அந்த வேகத்தில் சைக்கிள் வலது பக்கம் சாய்கிறது. நான் தூக்கி எறியப் படுகிறேன். பக்கத்திலிருந்து பார்த்தவர்களும், சைக்கிள் விழுந்து கிடந்த முறையைப் பார்த்த மற்றவர்களும் நானும் ‘நியாயப்படி’ வலது பக்கம்தான் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும் என்றார்கள். Rules of physics? ஆனால் எப்படியோ (தெய்வாதீனமாக ??) நான் இடது பக்கம் விழ, பஸ் இடித்த பிறகும் கட்டுங்கடங்காமல் என் சைக்கிள் மீது ஏறி, அதைச் சக்கையாக பின்னிருந்து முன்வரை ஏறி அமுக்கி, அதோடு நில்லாமல் முன்னால் நின்று கொண்டிருந்த காரின் வலது பக்கம் ஒரு இடி இடித்து நின்றது. தூக்கி எறியப்பட்ட என்னை மூட்டைதூக்கும் தொழிலாளர் ஒருவர் ‘அலேக்காக’த் தூக்கினார். பயமா, ஊமை அடியா எதுவோ, கால் நிற்கவில்லை; துவண்டது. தூக்கி பஸ்ஸில் உட்கார வைத்தார்.


அதற்குப் பிறகு போலீஸ், கேஸ், மருத்துவமனை என்று வழக்கமான காரியங்கள் நடந்தன. ஆளுக்கு சேதம் ஏதும் இல்லை. பிழைச்சிக்கிட்டேன். அந்தக் காலத்துக்கும், இப்போது நடந்திருந்தால் நடக்கக் கூடியதுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் மட்டும் சொல்றேன். பஸ் டிரைவர் முதலில், போலீஸ் வருவதற்கு முன்பே என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். பிறகு மாலை என்னை மருத்துவ மனையில் வந்து பார்த்தார். அப்போதெல்லாம் இந்த மாதிரி விபத்துக்கள் நடந்தால் கொடுக்கப்படும் நட்ட ஈடு ஓட்டுனரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படுமாம். அதைப் பற்றி என்னிடமும், அப்பாவிடமும் சொன்னார். பாவமாக இருந்தது. ஆகவே நட்ட ஈடு தரவேண்டாம் என்று நானும் அப்பாவும் சொல்லிவிட்டோம் என்று சொல்லி இந்தப் பதிவை முடிக்க ஆசை; ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லையே. கொடுத்த ஈட்டில் வேறு ஒரு ‘நம்மூரு’ சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள் அப்பா.


அதுக்குப் பிறகு சென்னைக்கு ஒரு முறை போகும்போது ஒரு ரயிலைப் பிடிக்க நினைத்து ஸ்டேஷன் போனால், அதுக்கு முந்திய ரயில் அப்போதுதான் வந்தது. அந்தக் காலத்தில் ரயில்கள் 100,150 நிமிடங்கள் தாமதாக வருவது சாதாரணம். அப்படி ஒரு நாள் அது போலும். பத்திரமாக சென்னை போய்ச் சேர்ந்தேன். நான் செல்ல நினைத்த ரயில் பெரும் விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்த குடும்பத்தினருக்கு நான் எந்த ரயிலில் போனேன்; என்ன ஆனேன் என்ற விவரம் தெரியாமல், தவித்து ஒன்றரை நாட்களுக்குப் பிறகே நான் பத்திரமாக இருப்பதைத் தெரிந்து கொண்டார்களாம். இதையெல்லாம் ம.தொ.க.-வில் சேர்த்துக்கொள்ளக்கூடாதல்லவா?


அதே போல73-ல் பம்பாயிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தேன் என்று பதிந்திருந்தேனல்லவா, அதில் 20 நிமிட ‘பறப்பு’க்குப் பின் விமானத்தில் ஏதோ கோளாறு என்று சொல்லி விமானம் பம்பாய்க்குத் திரும்பும்போது…பரவாயில்லையே, முதலில் மாட்டு வண்டி, பிறகு சைக்கிள்,அடுத்தது பஸ்,(ஒருதடவை லாரி, பிறகு கார்) ரயில்,என்று மரணம் தொட்ட கணங்களைப் பார்த்து விட்டு,இப்போது கடைசியாக விமானத்தில்தான் கண்டம் என்றாகிவிட்டதோ என்று சில மணித்துளிகள் மரணம் நெருங்கி பக்கத்தில் நின்றது போன்ற கற்பனையில் ‘சஞ்சரித்தது’ பற்றிய நினைவுகளையும் ம.தொ.க.-வில் சேர்த்துக்கொள்ளக் கூடாதல்லவா?

ஆனால்,1990-ல் வந்த முதல் myocardial infarction / மாரடைப்பு…அதைத் தொடர்ந்த பிரச்சனகள்…அறுவைச் சிகிச்சைகள்ம்..ம்..ம்..அதைச் சேர்த்துக் கொள்ளலாம்தானே?



Oct 07 2005 09:57 pm சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 3 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
9 Responses
awwai Says: after publication. e -->October 7th, 2005 at 10:46 pm e
Saar! unga blog-ukku ‘5-star rating’ default setting-a veikka mudiyaatha?Indha vaaram poora superstar range-la kalakitteenga… apparam enna rating mannagkatti ellam?Summma oru kutthu mathippa 10 podunga.“O”:)
இளவஞ்சி Says: after publication. e -->October 7th, 2005 at 11:32 pm e
சரளமான நடைல சுவாரசியமான விசயங்கள்னு கலக்கறீங்க தருமி சார்… ம்ம்ம்… நடத்துங்க உங்க ராஜ்ஜியத்தை
Maram Says: after publication. e -->October 8th, 2005 at 5:46 am e
உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். பதிவு அதிர்ச்சியான அனுபவத்தைக் கூட சுவையாக பேசுகிறது. நடந்து முடிந்தவைகளைத் திரும்பிப் பார்ப்பது பெரும்பாலும் ஆனந்தம் என்றாலும் இதுபோன்றவையும் உண்டுதானே?…
துளசி கோபால் Says: after publication. e -->October 8th, 2005 at 6:44 am e
நல்லவேளை தருமி.கடவுள் காப்பாத்திட்டார்.
மூர்த்தி Says: after publication. e -->October 8th, 2005 at 7:41 am e
சுவையாகச் செல்கிறது தங்கள் ஆக்கம்.
தாணு Says: after publication. e -->October 8th, 2005 at 10:50 am e
இந்த வார நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். பதிவு வாசித்துவிட்டு பின்னூட்டமிடுகிரேன்
தாணு Says: after publication. e -->October 8th, 2005 at 11:14 am e
துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு சொன்னதை அப்பிடியே கடைப் பிடிக்கிறீங்க. ஆசிரியரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்குது. மாட்டு வண்டியில் ஆரம்பிச்சு மாரடைப்பில் கொண்டுவந்து நிறுத்திட்டீங்க! நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
Josaph Irudayaraj Says: after publication. e -->October 8th, 2005 at 4:13 pm e
நல்லா இருக்கு,
இதில் இன்னென்னு என்னன்னா எனக்கும் இந்த//over-oiling and over-hauling !//இல் நல்ல நினைவு இருக்கு
ஏன்னா நான் ரொம்ப சின்ன பையனா இருந்தப்ப, எனது சின்ன மாமா, ஒருத்தருக்கு வீட்டில் ஒரு ரெலே சைக்கிள் வாங்கி கொடுத்தாங்க. அதில உங்களமாதிரி தான் என் மாமாவும் அவரது பள்ளி நாட்களில் படு பந்தாவா ஊரில உலா வருவாரு… அது வாணாம் இப்ப
ஆமா அப்போது “ஹம்பர்” “ரோட் மாஸ்டர்” “ரெட்ஜ்” ன்னு கொஞ்ச வகைகளும் இருந்திச்சே தெரியுமா?
மத்தது உங்க வீட்டில “கிராம்மபோன்” இருந்திருக்குமே!….அதில் பாட்டு கேட்பதற்கு முன்னர் ஒரு பெரிய பந்தா காட்டும் வேலையெல்லாம் நடத்துவாங்களே பெரியவுங்க! பாத்திருக்கீங்களா?சாவி கொடுத்து, லாகவமாக ஒலித்தட்டை எடுத்து,திருப்பி பார்த்துetc.. etc..
பாம்பு மாதிரி தலையை வைத்துக்கொண்டு (sound box என்று நினைக்கிறேன்) ஒலித்தட்டின் மீது அது அசைந்து அசைந்து ஒலித்தட்டின் வழியே அது போவதும்…, பாடல் வருவதும்,…
அதன் முனையில் ஊசியை செருகுதல், பிறகு அந்த ஊசியை எடுத்து மணல் கடதாசியில் (sand Paper)உராய்ந்து தீட்டி திரும்ப பொருத்தி பாடல் கேட்பது…
அது பத்தி கொஞ்சம் மீட்டி பார்த்து எழுதுங்களே! பார்க்க ஆசையா இருக்கு.
dharumi Says: after publication. e -->October 8th, 2005 at 5:31 pm e
ஜோசஃப்,“அது பத்தி கொஞ்சம் மீட்டி பார்த்து எழுதுங்களே!” - என்ன இப்படி சொல்லீட்டீங்க. அதப் பத்தியும் உங்கள மாதிரி ரொம்ப சொல்லாட்டாலும் கொஞ்சமாவது இங்கே எழுதிட்டமில்ல …!

Thursday, October 06, 2005

85. அது ஒரு நயா பைசா காலம்…





*

இப்போ எந்த ஊராயிருந்தாலும், நாட்டு வாழைப்பழம் என்ன விலையிருக்கும்..? ஒரு பழம் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றரைக்குள் இருக்கும். சின்னப் பையனா இருந்தபோது வீட்டில் ஒரு அணா கொடுத்து பழம் வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க; அப்பவே விலையும் சொல்லி விட்டுடுவாங்க: ‘அணாவுக்கு நாலும்’பான்; அஞ்சு கேளு’. அதே மாதிரி கடைக்காரர் நாலு சொல்லுவார்; அஞ்சு அப்டின்னு சொன்ன உடனே ‘பிச்சுக்கோ’ என்பார். அந்த ரேட்ல ஒரு ரூபாய்க்கு 80 பழம்; அதாவது ரூபாய்க்கு 16 அணா; ஒரு அணாவுக்கு நான்கு காலணா; நாலணான்னா கால்ரூபாய்…இப்படியே போகும். அந்த வாய்ப்பாடு இப்ப எதுக்கு? காலணாவில் இரண்டு டைப்: ஒன்று பெரிய வட்டக் காசு, இப்ப உள்ள ரூபாய் சைஸைவிட பெருசா இருக்கும்; இன்னொண்ணு ஓட்டைக் காலணா. சுண்டு விரல்ல மாட்டிக்கலாம். நல்லா வாய்ப்பாடு எல்லாம் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி அரை, கால்,அரைக்கால்,வீசம்…அப்புறம் எங்க காலத்துக்கு முந்தி என்னமோ தம்பிடி கணக்கெல்லாம் சொல்லுவாங்க.. இப்பல்லாம் tables அப்டின்னு சொல்றீங்களே அந்த வாய்ப்பாடெல்லாம் அப்ப நாங்க நல்லா மனப்பாடமா படிக்கணும். அது என்ன கணக்குன்னே தெரியாது. ஒவ்வொரு வாய்ப்பாடும் 16 வரை படிக்கணும்; ஏன் 15 வரை மட்டும் இல்ல அல்லது 20 வரை இருக்கக்கூடாதுன்னு தெரியலை. அதுக்கும் ரூபாய்க்கு 16 அணா என்கிறதுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ? அப்படித்தான் இருக்கணும்.


சரி..சரி.. நாங்க படிச்ச வாய்ப்பாட்டைப் பற்றி எங்களுக்கு என்னென்னனு கேக்றீங்களா? அது சரிதான். ஆனாலும் பாருங்க அப்படிப் படிச்ச அந்த வாய்ப்பாடுகள் நம்ம நாட்டையே எவ்வளவு உசத்திச்சு தெரியுமா? house mate மாதிரி ஒரு சைனாக்கார நண்பரோடு 100 நாள் அமெரிக்காவில இருந்தப்போ, இரண்டு பேரும் சேர்ந்து கடை, கண்ணிக்கு (இந்த வார்த்தைக்கு இன்னும் யாரும் அர்த்தமே சொல்லவில்லை..!)போவோம். அப்போவெல்லாம் இரண்டு பழக்கம் இரண்டு பேருக்குமே. எதை எடுத்தாலும் make எங்கேன்னு பார்ப்போம். நூற்றுக்கு 90 சைனாவாக இருக்கும்; ரொம்ப பெருமையா என்னைப் பார்ப்பார். பிறகு அவரவர் ஊர் காசுக்கு வேல்யூ போட்டுப் பார்ப்போம். நம்ம ஊரு காசுக்கு குத்து மதிப்பா 50-ஆல் பெருக்கிச் சொல்வேன்; அப்ப டாலருக்கு 47-48 ரூபாய்னு ஞாபகம். அவர் ஊர் காசுக்கு 8-ஆல் பெருக்கணும். மனக்கணக்குதான் நமக்கு அத்து படியாச்சே; டக்கு டக்குன்னு சொல்லிடுவேன். ஷாவோ - அதுதான் நம்ம சைனா நண்பர் பேரு - நம்ம சைனா நண்பருக்கு ஒரே ஆச்சரியமா போகும். ஒரு தடவை அவரு மண்டையைப்போட்டு கணக்குப் பாத்துக்கிட்டு இருந்தார்; நான் போனதும் சட்டுன்னு சொன்னேன். 56 X 8 -இதை மனக்கணக்கா சொன்னா மனுஷன் அசந்திருவார். எப்படி இப்படி டக்குன்னு சொன்னீங்கன்னு கேட்டார். முதல்ல 50 X 8 ஆல பெருக்கிட்டு, பிறகு 6 X 8 பெருக்கி அதைக் கூட்டிக்கவேண்டியதுதானேன்னு சொன்னேன். தலைவருக்கு ஒண்ணும் புரியலைன்னு தெரிஞ்சுது. அதுக்குத்தான இது வச்சிருக்கோம்ல அப்டின்னுட்டு கால்குலேட்டரை எடுத்து தட்ட ஆரம்பிச்சார். ஆனா, உடனே என்ன சொன்னார் தெரியுமா? ‘இதுனாலதான் நீங்க சாஃப்ட்வேர்ல எக்ஸ்பெர்ட்டா இருக்கீங்க’ அப்டின்னார். (software ஆளுகளே, உங்க மரியாதையை எவ்வளவு ஏத்தி உட்டுட்டு வந்திருக்கேன்; பாத்தீங்களா?)

இப்ப அணா கணக்கில இருக்கிற நல்ல விஷயம் தெரியுதா? (இந்த சைனா… தொடர்பான ஒரு விஷயம் இருக்கு; அதை இன்னொரு பதிவில சொல்லிடுவோம்…)

இப்படி இல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருந்தப்போ அப்பா ஒரு நாள் இன்னும் கொஞ்ச நாளிலிருந்து இந்த காலணா, அரையணா, எல்லாம் போய்ட்டு நயா பைசா வரப்போகுதுன்னாங்க. கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் எல்லாம் இருக்குமானு கேட்டேன். அதெல்லாம் இருக்கும்;ஆனா மற்ற காசு எல்லாம் மாறும்னாங்க. அஞ்சு வாழைப்பழம் வாங்கணும்னா என்ன பண்ணணும் அப்டின்னேன். ஆறு நயா பைசா கொடுக்கணும்னாங்க. அப்போ ஒரு அணாவிற்கு 6 பைசான்னா, ஒரு ரூபாய்க்கு 6 X 16 = 96 பைசாதான் அப்டின்னா, ரூபாய்க்கு 96 பைசாவா அப்டின்னு ‘டாண்’ணு கேட்டேன்.(எப்படி நம்ம வாய்ப்பாடு அறிவு?) இல்ல 100 பைசா அப்டின்னாங்க. அந்த நாலு பைசா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அப்பா சொன்னது ஒண்ணுமே புரியலை.
அரை ரூபாய்க்கு 50 பைசா; கால் ரூபாய்க்கு 25 பைசா வரை சரியா கணக்கு வந்தது. அதுக்குப் பிறகு கணக்கு ரொம்பவே உதைச்சுது. இரண்டணாவிற்கு எத்தனை பைசா என்று கேட்டேன். அப்போ இரண்டு இரண்டணா சேர்ந்தா ஒரு கால் ரூபாய். அப்பா வசமா மாட்டிக்கிட்டாங்க. 12 பைசாவா, 13 பைசாவா? சரி அது போகுது; நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 19 பைசா கேக்கணுமா, இல்லை 18 பைசாவா? அப்பா ரொம்ப பொறுமையா இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்; பிறகு எல்லாமே நயா பைசாவிலதான் இருக்கும்னாங்க. ஆனா, கால், அரை ரூபாய் எல்லாம் இருக்கும்னாங்க. அதுவரை சில கஷ்டம் இருக்கும்னாங்க. எனக்குப் பிடிபடலை. ரூபாய் இருக்கும்; அதிலும் கால், அரை ரூபாய் இருக்கும். ஆனால், மீதியெல்லாம் பைசாவில் இருக்கும். இது எப்படி? அப்ப எப்படி சாமான்கள் வாங்கிறதுன்னு கேட்டேன். கொஞ்ச நாளைக்கு அணாவிலும், நயா பைசாவிலும் இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடைசியில் எல்லாமே நயா பைசாவாக மாறிடும்னு சொன்னாங்க.

நாளும் நெருங்கி வந்திச்சு. google இந்த மாற்றம் 1957-ல் நடந்ததாகச்சொல்கிறது. அப்டின்னா அப்போ என் வயசு 12-13. அன்னைக்கி நயாபைசா புழக்கத்துக்கு வர்ரதாகச் சொன்னாங்க. எல்லாருமே, பெரியவங்க சின்னவங்கன்னு எந்த வித்தியாசமும் இல்லாம ஒரே பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்தோம். வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தள்ளிதான் போஸ்ட் ஆஃபீஸ் இருந்தது. காலையிலேயே பெரிய க்யூ ஆரம்பிச்சிருச்சி. நானும் மதியம் வரிசையில் போய் நின்றேன். கையில் இரண்டணா. இரண்டு போஸ்ட் கார்டு மட்டும் வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். வரிசையில் நின்று ஏதாவது ஒப்புக்கு ஒரு கார்டோ கவரோ வாங்கிட்டு மீதி சில்லறையோடு வரும் ஆட்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் - அந்தச் சில்லறைக் காசுகளைப் பார்க்க. அடேயப்பா, ஏதோ இந்தக் காலத்தில் ரஜனி படத்தில முதல் நாள் டிக்கெட் கிடைத்த ‘பக்தன்’ போல சில்லறை கிடைத்தவர்கள் இருந்தார்கள். நானும் என் டர்னுக்கு காத்திருந்து, கையில் சில்லறையுடன் வீடு வந்தேன். பள பளன்னு சதுர அஞ்சு பைசா, வளைவுகளோட இரண்டு பைசா,சின்னதா அழகா ஒரு பைசா என சில்லறை. பாக்க பாக்க ஆசையா இருந்திச்சு.

அப்புறம் கொஞ்ச நாள் ரொம்பவே குழப்பம்தான். அப்போதான் ஒவ்வொரு பைசாவுக்கும் மதிப்பு மரியாதை இருந்திச்சே. நாளாக நாளாக இந்த ஒரு பைசாவெல்லாம் இல்லாமலேயே போயிருச்சி; அடுத்து அஞ்சு, பத்து பைசாக்களுக்கு மரியாதை இல்லாம போயிருச்சி. பொதுவாகவே பிச்சைக்காரங்களுக்குப் பிச்சை போடறது எனக்குப் பிடிக்காது. ரொம்ப பாவமான ஆளுகளுக்கு கொஞ்சம் கூடவே போடலாம்; மற்றபடி எல்லோருக்கும் போடறது கிடையாது. உறவினர் ஒருவரோடு வெளியூர் சென்றிருந்த போது அவர் ஒரு பத்து பைசாவைப் பிச்சையாகப் போட, அந்தப் பிச்சைக்காரன் உறவினரைக் கன்னா பின்னாவென்று பேச, எல்லோரும் ஏதோ நாங்கள் அந்தப் பிச்சைக்கரானிடமிருந்து எதையோ திருடிவிட்டது போல பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி ஆச்சுது 10 பைசா நிலைமை. இப்போவெல்லாம், கால் ரூபாய், அரை ரூபாய் எல்லாமே காணாம போயிருச்சி.

இதுல என்னென்னா,நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 18 பைசாவா, 19 பைசாவா என்பது அன்றைய பிரச்சனை; இன்றோ, பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, ‘இன்னும் 40 பைசா கொடு’ என்று கேட்கலாமா, கேட்கக்கூடாதா என்பது இன்றைய பிரச்சனை!



*

Oct 06 2005 08:12 pm சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 5 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
12 Responses
கல்வெட்டு Says: after publication. e -->October 6th, 2005 at 9:34 pm e
தருமி,நல்ல பதிவு.நயா பைசா (எல்லா காசுகளும்) புழக்கத்தில் இருந்தே ஆக வேண்டும்.பொருளாதாரம் எனக்குத் தெரியாது.ஆனால், ஒரு ரூபாய்க்கு 100 பைசா என்று சொல்லிக்கொண்டு பைசாவை கண்ணில் காட்டாதாது அரசின் குற்றமே.பணவீக்கம்தான் இதற்குக் காரணம் என்றால்எல்லா வளரும் நாடுகளும் இப்படியா இருக்கின்றன?வளர்ந்த நாடாகிவிட்ட பின்னால் பைசா திரும்ப வந்து விடுமா?
Dondu Says: after publication. e -->October 6th, 2005 at 10:07 pm e
என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு கஷ்டமும் இல்லை. காலணா 2 நயேபைசே, அரையணா 3 நயேபைசே, முக்காலணா 5 நயேபைசே, ஒரணா 6 நயேபைசே. ஒன்றரையணா 10 நயேபைசே, மூன்றணா 19 நயேபைசே மற்றும் நாலணா 25 நயேபைசே. நாலணாவுக்குப் பிறகு பேட்டர்ன் அப்படியே ரிப்பீட் ஆகும்.நயா பைசா ஏப்ரல் 1, 1957-ல் அமலுக்கு வந்தது.
அன்புடன்,டோண்டு ராகவன்
துளசி கோபால் Says: after publication. e -->October 7th, 2005 at 3:45 am e
தருமி,
இப்பக் கொசுவர்த்தி வாங்கணும். ஓடிப்போய் எட்டணாவுக்கு வாங்கிட்டு வர்றீங்களா?
இந்த ஓட்டக் காலணா எனக்கு ரொம்பப்பிடிச்சது. கவுன்லே வரிசையா இருக்கற பட்டனிலேஅதைக் கோர்த்து பட்டன் போட்டுக்கிட்டு, பக்கத்துக் கடையிலெ ஜஸ்ட் ஒண்ணு மட்டும் கொடுத்து எதாவது( என்ன கடலை முட்டாய்தான்) வாங்கித் தின்றதுதான். எத்தனை பட்டன் இருக்கோ அத்தனை காலணா கிடைக்கும்.அதனாலே எப்பவுமே ஃபுல்லா பட்டன்த்ரூ சட்டைதான் போட்டுக்கறது.
ஒரு சமயம்(1994) ஹளபேடு, பேலூர் போனப்ப அங்கே பழையகாலத்துக் காசு ஓட்டைக்காலணா, நல்ல காலணா,அப்புறம் பிரிட்டிஷ் காலத்துக் காலணா, ஒரணா ரெண்டணான்னு ஒரு 40 காசுகளை 100ரூபாய் கொடுத்துவாங்கிவந்து வச்சிருக்கேன். இங்கே ஆரம்பப்பள்ளியிலே ஒரு நாள் அதைக் கொண்டுபோய் show & tellசெஞ்சாச்சு.
koothaadi Says: after publication. e -->October 7th, 2005 at 5:32 am e
இந்த அணா விஷயத்த தாத்தா கிட்ட இருந்து அடிக்கடி கேட்டு இருகேன் ,அரைக்காணி etc எல்லாம் சொல்லுவார் ,கணக்குல 100 மார்க் வாங்கினாலும் ஒரு மண்ணும் புரியாது.நீங்க கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லியிருக்கீங்க.
பிச்சைக்காரன் இப்பல்லாம் 1 ரூபா தான் வாங்குறதாக் கேள்வி .
//பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, ‘இன்னும் 40 பைசா கொடு’ //
இப்ப எல்லாம் சில்லறையக் கேட்டா நம்மளைல்லா பிச்சைக்காரன் மாதிரி பாக்குறானுக..
வசந்தன் Says: after publication. e -->October 7th, 2005 at 6:01 am e
//ஒரு சமயம்(1994) ஹளபேடு, பேலூர் போனப்ப அங்கே பழையகாலத்துக் காசு ஓட்டைக்காலணா, நல்ல காலணா,அப்புறம் பிரிட்டிஷ் காலத்துக் காலணா, ஒரணா ரெண்டணான்னு ஒரு 40 காசுகளை 100ரூபாய் கொடுத்துவாங்கிவந்து வச்சிருக்கேன்.//
பாத்தீங்களா தருமி, துளசி எவ்வளவு ஏமாளின்னு. எல்லாமாச் சேத்தா ஒரு பத்துரூபாகூடத் தேறாது. அதுக்கு 100 ரூபா கொடுத்து வாங்கி வந்திருக்கிறா;-)
மூர்த்தி Says: after publication. e -->October 7th, 2005 at 7:24 am e
பெரியவர் தருமி அவர்களே,
தாங்களால் இந்த வாரம் மிகவும் சிறப்பாகச் செல்கிறது.
அந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்குப் புளி கேட்டால் பின்னால் வண்டி நிற்கிறதா என கடைக்காரர் கேட்பார்! இப்போது போய்க் கேட்டால் நாக்கை நீட்டு தடவுகிறேன் என்பார்கள்!
எல்லா விலையும் ரொம்ப ஏறிப் போச்சுங்க… சம்பளம் மட்டும் எல்லாருக்கும் ஏறமாட்டுது.
ஷ்ரேயா Says: after publication. e -->October 7th, 2005 at 10:07 am e
துளசி.. கொசுவர்த்திச் சுருள் நீங்க வாங்கி வாங்கியே கையிருப்பு(கடையிருப்பு?) தீர்ந்திருச்சாம்!!
வசந்தன் - உமக்கு எரிச்சலோ? எங்கட 1, 2, 5, 10 சதக் கதைகளை எடுத்து விடுமன்..
(1, 2, 5,10 சதங்கள் கொஞ்சம், பழைய எண்கோண 2 ரூபா & 2 ரூபாத்தாள் 5 ரூபாத்தாள் - இதெல்லாம் ஒரு பெட்டீக்க போட்டு வைச்சிருந்தனான் இலங்கையில.. அம்மா எங்கையும் தூக்கிப் போட்டாவோ தெரியேல்ல :S.. கேட்கோணும்.)
ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி தருமி.
கோ.இராகவன் Says: after publication. e -->October 7th, 2005 at 12:12 pm e
இந்த அணாக்களையெல்லாம் நான் பயன்படுத்தியதில்லை. ஆனால் ஐந்து பைசா, ஒரு பைசா எல்லாம் பார்த்திருக்கிறேன். நெளி நெளி பார்டரோடு வரும் அந்த பத்து பைசாவோ அழகோ அழகு. விரலுக்குள் வைத்து அந்த நெளிவுகளைத் தடவி உணர்வது என்ன சுகம். அதெல்லாம் மிகச் சிறிய வயதில்.
இந்த மிச்ச நாப்பது காசு எல்லாம் பாக்கனுமுன்னா கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டியதுதான். இந்தியாவின் பெரு நகரங்களில் எல்லாத்தையும் கிரெடிட் கார்டுல வாங்க முடியுதே!
வசந்தன் Says: after publication. e -->October 7th, 2005 at 1:28 pm e
//நயா பைசா ஏப்ரல் 1, 1957-ல் அமலுக்கு வந்தது.//
அப்ப முட்டாள்கள் தினம் கொண்டாடுறனீங்களோ?
dharumi Says: after publication. e -->October 7th, 2005 at 10:18 pm e
கல்வெட்டு,“பைசா திரும்ப வந்து விடுமா?”-நல்லா வருமே! ஆச தோச அப்பள வடை….!
டோண்டு,“காலணா 2 நயேபைசே, அரையணா 3 நயேபைசே:- அப்போ நீங்க கணக்கில ரொம்ப வீக்கே? ஏன்னா அப்ப என் கேள்வியே காலணாவுக்கு ரெண்டுன்ன, அரையணாவுக்கு நாலில்லையா என்பது தான்.என்னன்னா, நீங்க பெரியவங்க சொன்னதை அப்படியே கேட்ட நல்ல பிள்ளை. நானோ…அதுதான், பின்னால மத விதயத்திலேயும் ஆகிப்போச்சு போல!
துள்சி,“இப்பக் கொசுவர்த்தி வாங்கணும்.”- இதுக்குத்தான் சொன்னேன். நம்ம சைடு வாங்கன்னு; ‘குதிரையில போறது’ நம்ம பாட்டுக்கு நினச்ச நேரத்தில, நினச்ச இடத்தில…
dharumi Says: after publication. e -->October 7th, 2005 at 10:28 pm e
கூத்தாடி,கணக்குல 100 மார்க் வாங்கினாலும் …அதெல்லாம் எப்டீங்க…நம்மல்லாம் அதுமாதிரி தப்பெல்லாம் பண்ணினதே இல்லீங்க!
வசந்தன்,“பாத்தீங்களா தருமி, துளசி எவ்வளவு ஏமாளின்னு. எல்லாமாச் சேத்தா ஒரு பத்துரூபாகூடத் தேறாது. அதுக்கு 100 ரூபா கொடுத்து வாங்கி வந்திருக்கிறா;-)”எல்லாம் ஒரு antiqueதான். நாளைக்கே 1000ரூபாய்க்கு வேல்யூ போகலாம். ஒட்டியாணம் வாங்கிறவங்களுக்கு இதல்லாம் ஒரு ஜுஜுபி’ங்க வசந்தன்! துள்சிட்ட சொல்லிடாதீங்க, சரியா?
மூர்த்தி,“எல்லா விலையும் ரொம்ப ஏறிப் போச்சுங்க… சம்பளம் மட்டும் எல்லாருக்கும் ஏறமாட்டுது. ” -software ஆளுகளே இப்படி சொன்னா எப்படி?
ராகவன்,“எல்லாத்தையும் கிரெடிட் கார்டுல வாங்க முடியுதே!”-அதுக்காக நாட்டுப் பழம் வாங்கவுமா plastic money?
Dondu Says: after publication. e -->October 7th, 2005 at 10:33 pm e
ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு சொல்ல முடியாது. நான் கூறிய மாற்றுகள் அதிகாரபூர்வமானவை. ஒரணாவிலிருந்து கூறுவேன்.
8 நயே பைசே ஒன்றேகாலணா, 10 நயே பைசே ஒன்றரையணா, 11 நயே பைசே ஒன்றேமுக்காலணா, 12 நயே பைசே இரண்டணா, 14 நயே பைசே இரண்டேகாலணா, 15 நயே பைசே இரண்டரையணா, 17 நயே பைசே இரண்டேமுக்காலணா, 19 நயே பைசே மூன்றணா, 21 நயே பைசே மூன்றேகாலணா, 22 நயே பைசே மூன்றரையணா, 24 நயே பைசே மூன்றேமுக்காலணா மற்றும் 25 நயே பைசே நான்கணா.
இதன் பிறகு பேட்டர்ன் ரிப்பீட்டுதான்.
அன்புடன்,டோண்டு ராகவன்