ரஜினி ராம்கியின் இரண்டாம் ஆண்டு நிறைவுப் பதிவுக்குப் போய் - “நீங்கள்லாம் பழந்தின்னு கொட்டை போட்ட ஆளுங்க“ன்னு சொல்லி -ஒரு பின்னூட்டம் விட்டேனா.. அதில ஒரு கேள்வி இப்போ.
அது எப்படி பழம்தின்னு கொட்டை போட்ட ஆளுன்னா ரொம்ப முத்தின கேசு..much experienced ஆளுன்னு அர்த்தம் வரும்? இப்போ பழம் இருக்கு; அத ஒருத்தர் தின்னுடறார்; கொட்டையைக் கீழே கடாசுறார். எல்லாமே ரொம்ப சின்ன, சாதாரணமான காரியம்தானே; இதிலெங்கே திறமை / experience / வேற சிறப்பு இருக்கு? புரியலைங்களே!
அதுக்குப் பதிலாக, “கொட்டை போட்டு பழம் தின்னவர்” என்றால் நிறைய பொருள் இருக்கே. அது என்னனனா, ஒருத்தர் கொட்டையைப் போடுறார்; அதாவது, கொட்டையை ஊன்றி, செடியாக்கி, மரமாக்கி, பூக்க வைத்து, காய்க்க வைத்து, பழுக்க வைத்து……….அதுக்கப்புறம் அவர் தானே வளர்த்து உருவாக்கிய அந்தத் தருவின் பழத்தை தின்றால் - அது ஒரு பெரிய விஷயம் இல்லையா?
அப்டின்னா, “பழந்தின்னு கொட்டை போட்ட ஆளு”ன்னு சொல்றதில ஒரு பொருளும் இல்லையே; அதுக்குப் பதிலா, “கொட்டை போட்டுப் பழம் தின்னவர்” என்பதுதானே சரியாக இருக்கும்.
மக்களே, இதனால் உங்கள் அனைவருக்கும் தருமி தெரிவிப்பது என்னவெனில்…மன்னருக்கு மட்டும்தான் சந்தேகம் வரணுமா என்ன? இப்போ தருமிக்கே சந்தேகம். தனியொருவராக வந்து யாரேனும் இந்தச் சந்தேகத்தைத் தீர்த்துவைத்தால் அவர்களுக்கு ஆயிரம் *_____ கொடுக்கப்படும்….
* தருமி இதை என்னவென்று பின்னால் முடிவு செய்வார்.
Dec 04 2005 03:12 pm | அவியல்... | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 5 பரிந்துரைகள்)
ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
23 Responses
சத்யா Says:
December 4th, 2005 at 4:26 pm e
நா இன்னும் கொட்டைய கீழ போடல…போட்டுட்டு சொல்றன்.
நன்றி!
சத்யா
சத்யா Says:
December 4th, 2005 at 5:02 pm e
இங்க வந்தா தெரியும்!
நன்றி!
சத்யா
Dondu Says:
December 4th, 2005 at 5:07 pm e
“நீங்கள்லாம் பழந்தின்னு கொட்டை போட்ட ஆளுங்க”
வேப்பம் பழத்தைத் தின்று கொட்டையை எச்சமாக இடும் காகம். அவ்வாறு அக்காகத்தின் ஜீரண உறுப்புகள் வழியாக மறுபடியும் தரைக்கு வரும் அக்கொட்டை அமோகமாக விளையும்.
அதே போல ஒருவர் தான் உட்கொண்டதை ஜீரணித்து வெளியே தரும் கருத்துக்கள் புடம் போட்டது போல பிரகாசிக்கும். அவ்வாறு செய்பவர்கள் மிகவும் அனுபவசாலிகள் என்பதே இதன் பொருள்.
முடிந்தால் பரிசு தாருங்கள், குற்றம் குறை ஏதேனும் இருந்தால் அதற்காகக் கழித்துக் கொண்டு பரிசு தாருங்கள். (இந்தக் கழித்தல் வேறு பொருளுடையது.)
அன்புடன்,
டோண்டு ராகவன்
சத்யா Says:
December 4th, 2005 at 5:21 pm e
tharumi,
i used to come here regularly, but unable to reply in all your logs ‘cos of my “inability” to analyse deeply …
avlothaan…otherwise appappo starle oru kutthu kutthittu poiduven
தருமி Says:
December 4th, 2005 at 5:29 pm e
sathya,
i have stopped ‘gazing’ at stars, of late.
anyway, thanks a lot for the patronage.
துளசி கோபால் Says:
December 5th, 2005 at 1:43 am e
தருமி,
நம்ம டோண்டு சொன்னதைப் பார்த்ததும் ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.
‘சிவெட்’ன்னு ஒரு மிருகம் இருக்குல்லே ( புனுகுப் பூனைன்னு நினைக்கிறேன்)
காஃபிப் பழங்களை அதுக்குக் கொடுத்துட்டா, அதோட கழிவுலே அந்தக் காஃபிக் கொட்டைகள்
வெளியே வருமில்லே. அதைக் கழுவி பிறகு வறுத்து காஃபிக்கொட்டையைப் பொடிச்சுப் போடற
காஃபிக்கு பயங்கர விலையாம்.மிகவும் விலை உயர்ந்த காஃபி.( உவ்வே!)
தயவுசெய்து நாமயாரும் தினம் காஃபி குடிக்கறப்போ இதை நினைக்கவேணாம்:-)
சரி இப்பப் பழம் தின்னு கொட்டை…..
‘அறிவு என்ற பழத்தைத் தின்னு அந்தக் கொட்டையை விதைச்சு வருங்கால சந்ததிக்கு
அறிவை வழங்கப்போறவர்’ என்ற அர்த்தம் சரியா வருதா?
பரிசுத் தொகையை நேரில் வந்து பெற்றுக் கொள்கின்றேன். தேங்க்ஸ்.
ஷ்ரேயா Says:
December 5th, 2005 at 11:26 am e
தாணு Says:
December 5th, 2005 at 1:25 pm e
நாம் என்னைக்கு பழம் தின்னு கொட்டையை உருப்படியா ஊணியிருக்கோம்? அதனால அப்பிடி அபூர்வமா செஞ்சவங்களைச் சிறப்பிக்கும் விதமா அந்த வரிகள் வந்திருக்கலாமோ?
டி.பி.ஆர். ஜோசஃப் Says:
December 5th, 2005 at 2:42 pm e
சார் எனக்கு ஒரு பயங்கரமான டவுட்டு,
பொற்காசுல்லாம் தரமுடியுமான்னு தெரியலை. மறுபடியும் Branch Managerஆனா வட்டியில்லா கடனா வேணும்னா தரேன்.
என்னா சந்தேகம்னு கேக்கறீங்களா? பழம் தின்னு கொட்டைப் போட்ட ஆளுங்களோட தலைய பாத்தாலே தெரியும்சார். கொட்டை மாதிரி பளபளப்பா.. பார்த்ததில்லே..
மத்தபடி டோண்டு சார மாதிரி விளக்கமெல்லாம் குடுக்க தெரியலை..
பாருங்களேன் துளசி ஏதோ சொல்ல வந்து நாளைலருந்து காப்பிய கூட நிம்மதியா குடிக்க முடியாது போலருக்கு. இது தேவையாங்க துளசிங்க..
ஜோ Says:
December 5th, 2005 at 4:31 pm e
பெரியவங்கள்லாம் சேர்ந்து சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா!
கோ.இராகவன் Says:
December 5th, 2005 at 5:23 pm e
பழம் தின்னு கொட்டை போடுறது………..இதுக்கென்ன விளக்கம். இந்த வெளக்கத்துக்கே எல்லாரும் தெனறிக்கிட்டு இருக்கும் போது இன்னோன்னு சொல்றேன். தோலிருக்கப் பழந்தின்னி. இந்தத் தோலிருக்கப் பழந்தின்னிதான் பழம் தின்னு கொட்ட போட்டவரொட அண்ணன். யாருக்காவது புரியுதா?
Mohandoss Ilangovan Says:
December 5th, 2005 at 5:46 pm e
I sent one mail to you Dharumi. Please check.
ஷ்ரேயா Says:
December 6th, 2005 at 5:08 am e
//* தருமி இதை என்னவென்று பின்னால் முடிவு செய்வார்.//
“பின்”னால் முடிவு செய்வீங்களா?? புது method ஆ இருக்கே..
ராம்கி Says:
December 6th, 2005 at 6:48 am e
கொட்டை போட்டுப் பழம் தின்னவர் மற்றும் பழம் தின்னு கொட்டை போட்டவர் எல்லாம் தாங்களே.. உங்களுக்கே சந்தேகமா? உங்க ஊர்ல மண்டபத்துல யாராவது வந்து கவிதை எழுதித் தருவாங்களே..
Kumaran Says:
December 7th, 2005 at 9:57 pm e
இதோ வந்துட்டேன் ராம்கி மண்டபத்துல பாட்டெழுதிக் கொடுத்து சந்தேகம் தீர்க்க. பாண்டியனார் சந்தேகம் என்றால் என் தந்தையார் இறையனார் வருவார்; இது பாமரனார் (தருமி ஐயா மன்னிக்கவும், நான் புலவர் தருமியைக் குறிக்கிறேன்) கேட்ட சந்தேகம் தானே - குமரா நீ சென்று வான்னு அனுப்பிச்சிட்டார். பாட்டுக்குப் பொருள் புரியலைன்னா தோலிருக்க சுளைமுழுங்கி நம்ம ராகவன் வந்து விளக்குவார்
மூத்தவரை முழுதும் அறிந்தவரை பக்தியுடன்
கூத்தவனைக் கொண்டாடி ஞானப் பழம் தின்றார்
உருத்திராக்கக் கொட்டை அணிந்தாரைக் கூறுவதே
பழம் தின்று கொட்டை போடுவார்.
தருமி Says:
December 8th, 2005 at 9:06 pm e
பாட்டுக்குப் பொருள் புரியலைன்னா தோலிருக்க சுளைமுழுங்கி நம்ம ராகவன் வந்து விளக்குவார் “// -
ராகவா…வாங்கய்யா..வந்து என்ன ஏதுன்னு சொல்லுங்கய்யா..!
கோ.இராகவன் Says:
December 9th, 2005 at 2:18 pm e
ஆகா! பாட்டைத் தந்த குமரா! ஏட்டை என்னிடம் தள்ளி விட்டாயா! உனது எண்ணமே திருவுளம். அப்படியே செய்திடலாம்.
தருமி, இந்த பாடலுக்கு விளக்கம் எழுதுனா…பெருசா வருது. ஒரு பதிவே போட்டுர்ரேன். சரியா?
குமரன் Says:
December 9th, 2005 at 3:50 pm e
இராகவன்,
தருமி ஐயா கேள்வியைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றிய பாடலை நான் எழுதி இங்க பின்னூட்டத்துல போட்டேன். அதுக்கு கலக்கலா ஒரு விளக்கம் உங்க வலைப்பதிவுல கொடுத்து கலக்கிட்டீங்களே…. நன்றிகள் வாழ்த்துகளுடன்.
நீங்கள் குறிப்பிட்டதைப் போல் இது ‘நான் தேடிப் போட்ட தமிழ்ப்பாடல்’ கிடையாது. ராம்கியின் பின்னோட்டம் பார்த்தவுடன் அப்போது எனக்குத் தோன்றிய விளக்கத்தை பாடலாய் போட்டால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியதால் நான் எழுதிய பாடல். தளை தட்டியிருக்கும்; அப்படி இருந்தால் என் தலை தட்டுங்கள்.
அது சரி தோளிருக்க சுளைமுழுங்கிக்கு விளக்கம் சொல்லலை?
குமரன்.
J. Rajni Ramki Says:
December 9th, 2005 at 4:03 pm e
//தோளிருக்க சுளைமுழுங்கிக்கு
கோ.இராகவன் Says:
December 9th, 2005 at 5:48 pm e
தேடிய பாடலா இருந்தா என்ன? பேப்பரில் பேனா ஓடிய பாடலா இருந்தா என்ன? எல்லோரும் நாடிய பாடலாக இருந்தால் சரிதானே குமரன்.
தருமி Says:
December 9th, 2005 at 8:38 pm e
தோலிருக்க சுளை முழுங்கி - இதற்குப் பொருள் எல்லோருக்கும் புரியும்தானே; இது ஒன்றும் புரியாத புதிரல்லவே!
குமரன் Says:
December 9th, 2005 at 9:29 pm e
தோலிருக்க சுளைமுழுங்கிக்கு என்ன பொருள்ன்னு சொல்லுங்க தருமி ஐயா.
//தோளிருக்க சுளை…// எழுத்துப் பிழையைத் திருத்தியதற்கு நன்றி. ரஜினி ராம்கிக்கும் நன்றி. முதலில் ரஜினி ராம்கி பின்னூட்டத்தைப் பார்த்த போது எதற்கு அந்த ஸ்மைலி போட்டிருக்கார்னு புரியலை. உங்க பின்னூட்டம் பார்த்தபிறகு தான் நான் செய்த எழுத்துப்பிழை புரிந்தது.
தருமி Says:
December 9th, 2005 at 9:48 pm e
இந்த அர்த்தம் சொல்ற வேலயெல்லாம் தருமிக்குக் கிடையாது. அதெல்லாம் குமரன் & ராகவன் பாத்துக்கணும்; தருமிக்கு கேள்வி கேட்கிறதுதான் பிடிக்கும்னு (& தெரியும்னு! ) தெரியாதா?
Comment
Name
Mail (will not