Friday, December 18, 2009

360. WHY I AM NOT A MUSLIM ... 2

*


ஏனைய பதிவுகள்:


*


Chapter I

THE RUSHDIE AFFAIR

*
14 பிப். 1989-க்கு முன்னால் ..

1280-ல் பாக்தாத்தில் ஒரு யூத மருத்துவரும் தத்துவஞானியுமான Ibn Kammuna என்பவர் எழுதிய Examinations of the Three Faiths என்ற நூலில் மூன்று யூத மதங்களைப் பற்றி எழுதியவர் முகமது நபியை எவ்வாறாக ஒரு தூதராகக் கொள்வது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக அவரை தீயில் எரிக்கப்பட வேண்டும் என்று எமிர் ஒரு தீர்ப்பளிக்க, ஆனால் அவர் எப்படியோ அந்த தண்டனையிலிருந்து தப்பி விட்டார். (4)

இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகளை நாம் நிறைய காண முடியும்.

1961-63-ல் இந்திய தூதுவராக இருந்த அமெரிக்கர் John Kenneth Galbraith தன் செல்ல பூனைக்கு 'அஹமது' என்று பெயரிட்டு வைத்திருந்தார். அதுவும் முகமதின் மற்றொரு பெயர். அந்த சமயத்தில் பெங்களூரிலிருந்து வந்த Deccan Herald 'முகமது என்ற முட்டாள்' என்று ஒரு சிறுகதை எழுத, அதனால் அந்த தினசரி அலுவலகம் எரிக்கப் பட்டது. 'சமீபத்தில்' ஷார்ஜாவில் 'The Ants That Eat Corpses' என்ற மலையாள நாடகம் முகமது பற்றிய வசனம் வந்ததால் அதை நடத்தியவர்களுக்குச் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது.

Daniel Pipes என்பவர் எழுதிய The Rushdie Affair என்ற நூலில் இதுபோன்ற பல நிகழ்வுகள் - இஸ்லாமிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலருக்கும் நேர்ந்தவைகள் - கொடுக்கப்பட்டுள்ளன.(4)

*

359. இப்படி ஒருவர் ...

எனக்கு வந்த மெயில் ஒன்று. என் ஆச்சரியத்தை, மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.

-----------------------------

Came across nice article.
அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது
------------------------------------------------------------------------------
?ui=2&view=att&th=1256765dae601cbc&attid=0.1&disp=attd&realattid=ii_1256765dae601cbc&zw
''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

Sunday, December 13, 2009

358. நீயா .. நானா ..?

*

வழக்கமாக ஒரு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 – 10 என்பதற்குப் பதிலாக 9 – 10.45 என்று நீண்டாலும் தொடர்ந்து பார்க்க என்னை இறுத்தியது. மிக நன்றாக இருந்த ஒரு நிகழ்ச்சி.

கல்விக் கடனுக்கு அலைந்த மாணவர்கள் ஒரு புறம்; கல்விக்கடன் தரும் வங்கி அதிகாரிகள் என்று ஒரு புறம். நான் முதல் இருபது நிமிடங்கள் பார்க்கவில்லை. அந்த நேரத்தில்தான் மாணவர்கள் தங்கள் சோகங்களைக் கொட்டித் தீர்த்திருப்பார்கள் போலும். மாணவர்கள் என்ன பேசினார்களோ தெரியவில்லை; ஆனால் நான் பார்க்கும்போது பேசிய வங்கி அதிகாரிகள் யாரும் உருப்படியாகப் பேசியதாகத் தெரியவில்லை.

மிக ஏழைக்குடும்பத்து மாணவி தன் பொறியியல் படிப்புக்குக் கடன் கிடைக்காத சோகத்தைச் சொல்லும்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன். தனக்கு கடன் கிடைக்காததைப் பற்றிப் பேசும்போது ஒரு வங்கி அதிகாரி சட்டென்று, நாளைக்கே இந்த பெண்ணுக்குக் கடன் தருகிறேன் என்று சொன்ன பிறகு, அந்தக் குழந்தை அழுது பேசியது மனதைத் தொட்டது. நிகழ்ச்சி முடிவில் கோபிநாத் அந்த வங்கி அதிகாரிக்கு ஒரு தொலைப்பெட்டி பரிசளித்த போது நிச்சயமாக அவர் அந்த தொலைப்பெட்டியைக்கூட அந்த பெண்ணுக்கே கொடுத்து விடுவார் என்று நினைத்தேன். மனுஷன் அதையும் தாண்டி விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியை தன் வங்கி மூலம் ஏதாவது ஒரு அநாதைக் குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பிற்கு கொடுக்கப் போவதாகக் கூறினார். நன்றாக இருந்தது. அந்த அதிகாரிக்கு என் வணக்கங்கள்.

அதேபோல் பாலுமகேந்திரா என்ற மாணவனுக்கும் 4 லட்ச ரூபாய் கடன் தொகையை அனுமதித்தார் இன்னொரு வங்கி அதிகார். ஒரு break முடிந்து வந்ததும் கோபிநாத் அந்த மாணவன் ஏதோ சொல்ல விரும்புவதாகக் கூறி அழைத்தார். அந்த மாணவன் தான் கடனுக்காக அலைந்து கிடைக்காமல் போனதால் இவ்வருட படிப்பு படிக்க முடியாது போயிற்று. அந்தக் கடனை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு ஏழை மாணவனுக்கு அவர் பரிந்துரைக்க வங்கி அதிகாரி அந்தப் புதிய மாணவனுக்குக் கடனைத் தர சம்மதித்தார். தனக்கு வந்த கடனை அடுத்த மாணவனுக்கு – அந்த மாணவனை இந்த நிகழ்ச்சியில்தான் முதலில் சந்தித்துள்ளான்; break சமயத்தில் வேறு எந்த ஏழை மாணவனுக்கு உதவி தேவை என்று கேட்டறிந்து, அதன்பின் தனக்குக் கிடைத்ததை அடுத்த மாணவனுக்குத் தந்த அந்த மாணவன் … simply great!
He humbled me.


முக்கிய விருந்தாளியாக வந்ததில் மாணவர்கள் தரப்பில் பேசிய ஒரு வழக்குரைஞர் பேசியது கொஞ்சமேயாயினும் மிகத் தெளிவாக ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அவர் கருத்துக்கு வங்கி அதிகாரிகளோ மற்ற விருந்தினரோ பதில் கொடுக்க முடியாதபடி தன் கருத்தைத் தந்த அந்தப் பெண்மணியும் பாராட்டப் பட வேண்டியவரே.

கோபிநாத் நடத்தும் இந்த நிகழ்ச்சிகளில் பல எனக்குப் பிடிக்கும். இன்று கோபிநாத் was on the top! Hats off to him. Emotional ஆன விஷயங்களை மிக ஆழமாக மனதில் பதியும்படி பேசி இந்த நிகழ்ச்சியை மிக அழகாகக் கையாண்டார். நிச்சயமாக இதை வங்கி அதிகாரிகள் பார்த்திருந்தால் சென்ற சில மாதங்களில் அவர்கள் மறுத்த சில கல்விக் கடன் பத்திரங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

வாழ்க .. வளர்க .. நீயா .. நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.

விஜய் டிவிக்கும் என் வாழ்த்துக்கள்.



*

*

Wednesday, December 09, 2009

357. WHY I AM NOT A MUSLIM ... 1

*

ஏனைய பதிவுகள்:

*







*

WHY I AM NOT A MUSLIM

நூலாசிரியர்: IBN WARRAQ
PROMETHEUS BOOKS
59. John Glenn Drive
Amherst,
New York

1995




*
R. JOSEPH HOFFMANN
WESTMINISTER COLLEGE, OXFORD
என்பவர் எழுதிய முன்னுரையிலிருந்து ....


*

இந்த நூல் ஒரு நீண்ட பயணம் பற்றியது; அந்தப் பயணம், இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து அதன் நம்பிக்கைகளில் ஊறி, அதன்பின் ஒரு சிலரால் 'வெள்ளைக்காரத்தனம்' என்று சொல்லப்படும் மேற்கத்திய 'திறந்த மதம்' என்ற அமைப்பில் வாழ்ந்து, அந்த வாழ்க்கையால் பிறந்த ஐயங்களின் ஊடே பயணித்து, இறுதியில் மத மறுப்பு என்னும் புள்ளியைப் பெற்ற பயணம்.

*
இது போன்ற பயணங்கள் எல்லாமே மிகவும் தனிமைப் படுத்தப்பட்ட பயணங்களே!

*
இந்த 'மதப் பயணங்களில்' செல்பவர்கள் தாங்கள் சொல்வதையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு குழு தன்னைச் செவி மடுப்பதாகவும், புரிந்து கொள்வதாகவும் நம்புகிறார்கள்.



*
DEDICATION

மதப் பாசிஸத்தையும் மீறி
நான் பெற்ற
என் தாய், மனைவி, சகோதரி, என் மகள்கள்
அவர்களுக்காக ...

*

ஆசிரியரின்
முன்னுரையிலிருந்து ...


*

இன்று தன்னை ஒரு இஸ்லாமிய நாடாகச் சொல்லிக்கொள்ளும் நாட்டில் நான் ஒரு இஸ்லாமியனாகப் பிறந்து வளர்ந்தேன்.


356. AMERICAN COLLEGE CELEBRATES CENTENARY

College celebrates centenary D. Karthikeyan


American College plans a light-and-sound show to mark celebration
— Photo: G. Moorthy

Standing tall: The main building of The American College.


MADURAI: Education is the key to unlock the golden door of freedom- George Washington Carver

Fin de siècle to the close of 19th century and start of 20th century saw the emergence of missionary education spreading across the wider parts of erstwhile Madras Presidency taking education to the unreached spaces.

One such defining moment was the establishment of The American College, in Madurai, started initially as ‘Pasumalai College’ in the year 1881 at Pasumalai.

Rev. Zumbro who had his formal education at University of Michigan, Columbia and Yale, made a proposal in the year 1903 to the Missionary bound in the United States to shift the college to Madurai.

New vision

The idea behind this shifting was to give a new vision to Christian higher education.

By this, Rev. Zumbro meant that education should be made available to the common man despite divisions based on caste, creed and religion, said Joseph Chinnaraj Jaikumar, Principal, The American College.

Rev. Zumbro envisaged that once Christian education goes public, people of Madurai would acquire a character which would be beneficial for the city in the long term.

In his words, “Madurai should grow with American College and American College should grow with Madurai.”

The century old American College main building symbolizes this slogan as it was this grandiose structure built by adopting the Indo Saracenic style rather than Gothic or Victorian that signified the arrival of modernity in Madurai.

Mr. Chinnaraj Jaikumar, said that this synthesis of Indo Aryan style also represents secularism as it possesses the minarets and arches of Islamic structure, corridors of Hindu temple and the grandness of gothic style.

Construction

The construction of the building was started in the year 1905 and was completed in 1909.

The main hall of the building was indeed a central element in the major intellectual shift that took place then in the form of public lectures to the citizens of the city.

Eminent literary scholars and international figures like Rabindranath Tagore, French Premiere Georges Clemenceau visited the college and delivered lectures in the hall.

In fact, Tagore gave public lectures in the year 1919 and collected Rs. 2,365 out of which he took Rs.2, 000 for Visva Bharati, Shantiniketan and gave Rs.365 for starting an endowment in American College.

The building was constructed by Henry Irving, who built the Mysore Palace and the then Principal G. T. Washburn was influential in getting funds from the U.S.

The building to the surprise of people of this generation was constructed at a cost of Rs.52, 000, said Mr. Chinnaraj Jaikumar.

The College will be holding a ‘light and sound’ show to mark the centenary celebration.

Mr. Chinnaraj who has done a good amount of research on Rev. Zumbro’s contribution to higher education is to come out with a book aiming to highlight his contributions to the dissemination of knowledge in this part of the world.

Citizens of Madurai owe a great deal of respect and gratitude for Rev. Zumbro who was instrumental in spreading inclusive education based on science.

Zumbropuram

Apart from his contributions in the field of education, Rev. Zumbro was a socially conscious individual who saw the resettlement of palm tree workers and the place was now remembered by his name Zumbropuram.

© Copyright 2000 - 2009 The Hindu

Thursday, December 03, 2009

355. 2 + 2 = ???????

Monday, November 30, 2009

354. மதங்கள் - இஸ்லாம் -2

*


எனது முந்திய பதிவில் கேட்ட சில கேள்விகளில் ஒன்று:

"எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?

இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக ஆஷிக் கீழ்க்கண்ட பதிலை அளித்திருக்கிறார். அதை அவர் எழுதிய ஆங்கிலத்திலும், என் தமிழாக்கத்தோடும் கீழே தருகிறேன்.

I do not know whether you read that verse or not. If you would have read, you would not have come to this conclusion. You are referring to Qur’anic verses 86:5-7, what you quoted is the verse 86:7. Would you mind to read the verses 86:5-6 which give answers directly as per your expectation?

Even in other verses Qur’an tells Man is created from Semen (semen may not be the right word; ( I don’t know what Aashiq says. Semen is and has to be the very right word) Qur’an does not refer that as Semen, it refers it as a surging fluid/ gushing water/ the liquid that pours out). What is stunning to see is not semen; because everybody knows due to semen we are created. Qur’an further moves on to say where exactly the semen comes from. That is a stunner. So my answer to your claim is, you have misunderstood and INFACT QUR’AN DIRECTLY TELLS THAT NEWS AND MORE THAN THAT IT JUSTIFIES THE CURRENT SCIENCE 100% FROM WHERE THE SEMEN COMES FROM.

நீங்கள் குரானின் வாசகத்தை வாசித்தீர்களா என்பது தெரியவில்லை. வாசித்திருந்தால் இது போல் சொல்லியிருக்க மாட்டீர்கள். நீங்கள் குரானின் 86:5-7 வசனங்களில் 86:7 வசனத்தை மட்டும் மேற்கோள் காட்டியுள்ளீர்கள். விடுபட்ட 86:5-6 பகுதியையும் வாசித்தால் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.

குரானின் மற்றப் பகுதிகளிலும் மனிதன் விந்திலிருந்து பிறக்கிறான் என்று சொல்லியுள்ளது.(விந்து என்பது சரியான வார்த்தை அல்ல; { ஆஷிக் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை; விந்து என்பதே மிகச்சரியான சொல்லாக இருக்க முடியும்.} குரான் அதனை விந்து என்பதற்குப் பதிலாக ஒரு பீச்சியடிக்கும் திரவம்/பீறிடும் திரவம்/வெளியேறும் திரவம் என்று சொல்கிறது.) எல்லோருக்கும் விந்து பற்றித் தெரியும்; அதனால் அது பெரிய விஷயமில்லை. அதையும் தாண்டி, குரான் விந்து எங்கிருந்து வருகிறது என்பதைச் சொல்கிறது. அதுவே மிகவும் பிரமிப்பானதாக இருக்கிறது. ஆகவே உங்கள் கேள்விக்கான என் பதில்: நீங்கள் தவறாக நினைத்துள்ளீர்கள். உண்மையில் குரான் நேரடியாக அந்த செய்தியைச் சொல்கிறது. அதோடு விந்து எங்கிருந்து வருகிறது என்பதை 100 விழுக்காடு சரியாக இன்றைய அறிவியல் உண்மையோடு சொல்கிறது.

இதற்கு மேலும் ஆஷிக் இவ்வாறு கூறியுள்ளார்:
PLEASE BRING ON A SINGLE VERSE FROM QUR’AN WHICH IS SCIENTIFICALLY INCORRECT. THAT’S IS A OPEN CHALLENGE.

இங்கே ஆஷிக் சொன்ன குரானின் வசனங்களைத் தருகிறேன்.

நூல்:
குர்ஆன் தர்ஜமா
திரீயெம் பிரிண்டர்ஸ்,
சென்னை.(பனிரெண்டாம் பதிப்பு)

அத்தியாயம்86

5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!

6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான் –

7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.


//(பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது ..//– ஒருவேளை அது முட்டையாக / Ovum-ஆக இருக்கலாம். ஆனால் அது நெஞ்செலும்பிலிருந்தா வருகிறது?

ஆணின் விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?

அதை நீங்களே பார்த்துக் கொள்ள கீழே ஆண் & பெண் பிறப்புறுக்களின் படங்களைத் தந்துள்ளேன்.












இதற்கும் மேலே, குரானில் சொல்லப்பட்டுள்ளது போல் பூமி ஒரு விரிப்பா, தேனீக்கள் பழங்களைச் சாப்பிடுகின்றனவா என்றெல்லாம் நிறைய கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகலாம். இப்போதைக்கு -- இந்த ஒரு பருக்கை மட்டும்.



*
இந்த இடுகையையும் பார்க்கலாம் ...
http://youtu.be/Foor6wga20A
*

Friday, November 20, 2009

353. மதங்கள் - இஸ்லாம்

*



*



வாசித்தது ...
வாசித்துக் கொண்டிருப்பது ...
வாசிக்க வேண்டியது ...




*

மதங்களைப் பற்றி பல நூல்கள் வாசிக்கும்போது அவ்வப்போது எழும் ஐயங்களைத் தொகுக்க ஓரிடம் வேண்டுமல்லவா? என் பதிவுகளில் அதற்கான ஒரிடம் இது. எனக்குள் எழும் ஐயங்களை இங்கே தொகுத்து வைக்கின்றேன். இதை நீங்கள் வாசிப்பீர்களா இல்லை தவிர்த்து விடுவீர்களா என்பதல்ல .. எனக்கு ஓரிடம் வேண்டும்; அங்கங்கே வாசிப்பதை நூல்களில் வெறும் கோடிட்டு வைத்து விட்டு மறந்து விடுவது போலல்லாமல் தொகுக்க என் இடம் இது.

*
விவிலியத்தில் கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தில் இது முழுமையாக மாறி உள்ளதுபோல் தெரிகிறது. அல்லா மனித சாயலில் படைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அல்லா மிகவும் பெரியவன்; அல்லா பெரிதும் கோபப்படுவான்; அல்லா மிகவும் ரோஷக்காரன்; அல்லா வெட்கப்படுவான் - போன்ற சொலவடைகள் மிகவும் பிரபலம். அதாவது இங்கு கடவுள் / அல்லா மனித உருவில் பார்க்கப்படுகிறது / பார்க்கப் படுகிறான். சாதாரண மனித குணங்களைக் கடவுள் மீது ஏற்றுவது "If triangles have gods, those gods would be bigger triangles" என்ற கூற்றினை ஒத்து வருகிறது.

*
பிள்ளைப் பிராயத்தில் சொல்லித் தரப்படுவதால் என்றே நினைக்கிறேன் - பல இஸ்லாமிய நண்பர்களிடம் ஒரே மாதிரியான சில கருத்துக்கள் பொதுவாகப் பேசப்படும்.

*எங்களைப் பெற்றவர்களைவிடவும் நாங்கள் நபியை மதிக்கிறோம்.

*குரான் எந்த மனிதக் கரங்களாலும் மாற்றப்படவில்லை. - (எல்லோரும் எத்துணை ஆராய்ச்சியில் இதைச் சொல்கிறீர்கள்? இவையெல்லாம் சின்னப் பிள்ளையில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம் - கத்தோலிக்க கிறித்துவக் குழந்தைகளிடம் "நன்மை"யில் ஏசு அப்படியே ரத்தமும் சதையுமாக இருக்கிறார் என்றும், ஏசு கன்னிமாதாவிடமிருந்து பிறந்தார் என்பதும், இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதைச் சொல்லிக் கொடுப்பதையும் அவர்கள் அப்படியே அதைக் காலம் காலமாய் நம்புவதைப் போல.)

பொத்தாம் பொதுவாக அப்படி சொல்லிக்கொடுக்கப்பட்ட விஷயங்களை வெறும் நம்பிக்கைகளால் மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதை ஆராய்ச்சி செய்தவர்களின் முடிவுகளைக் கேட்க மட்டுமாவது, கண்களையும் மனத்தையும் திறந்து நாம் தயாராக இருக்க வேண்டுமல்லவா? அதில் எது உண்மை என்று அதன்பின் யோசிக்க ஆரம்பிக்கலாமே .. அதைவிட்டு விட்டு 'என் நம்பிக்கை இது; இதை எப்படி யாரும் ஆராய்ச்சி செய்யலாம்' என நினைத்து அதனைப் புறந்தள்ளக் கூடாதல்லவா?


*குரான் அறிவியல் உண்மைகள் பல கொண்டுள்ளது.

(எல்லா மதக்காரர்களும் சமயம் கிடைக்கும்போது அறிவியல் உண்மைகள் எங்கள் மதத்தில் உள்ளது என்று கூறுவதில் ஏதும் வித்தியாசமில்லை. அப்படி "எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்? 'ஏழு வானம்' என்பது என்ன அறிவியல். இரவுக்குள் பகலையும், பகலுக்குள் இரவையும் .... பூமியை நீட்டி விரித்து ... மலையின் வேர்... இப்படியே பல ...)

*இஸ்லாம் ஒரு வாழ்க்கை மார்க்கம்.

எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் கற்பிப்பதும், ஆணையிடுவதும் வேறு. ஆனால், நீ வெள்ளை சட்டை போடணும்; உட்கார்ந்து சிறுநீர் கழிக்கணும்; எப்போதெப்போது நீ நிர்வாணமாக இருந்தால் கடவுளுக்கு வெட்கம் வராது; அல்லது எப்போதெப்போது நீ நிர்வாணமாக இருந்தால் கடவுளுக்கு வெட்கம் வரும்; ஆண்கள் தங்க நகை அணியக்கூடாது;
( தங்கத்துக்கும், Y குரோமோசோமுக்கும் அப்படி என்ன பகை?)
இப்படிப்பட்ட கட்டளைகளை கடவுள் மனிதனுக்குத் தருவாரா? தர வேண்டுமா? sounds kiddish! பிள்ளையைப் பலி கொடு என்று கேட்கிற கடவுள் ஒருவேளை இதுபோன்ற கட்டளைகளைக் கொடுக்கலாமோ?!

இங்கே கடவுளை மனிதானாக ஆக்கும் முயற்சியே இது என்று தெரிகிறது
.

*ஆண்கள் தாங்கள் ஆண்கள் என்பதைக் காண்பிக்க தாடியிடனும், பெண்கள் பர்க்காவுடனும் இருக்க வேண்டும்.
( ஆண்களும் பெண்களும்
இப்படியெல்லாம் வித்தியாசமாக இருக்க வேண்டுமெனில் அவை அவரது படைப்பில் உள்ள குற்றமா? இப்படி ஆண்கள் பெண்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பது அவரது ஆசை என்றால் சில விலங்கினங்களில் போல் ( மான், கோழி-சேவல்) என்பவற்றில் ஆண் பெண் வேற்றுமை மாதிரி - ஆண்களை ஆண்களாகக் காண்பிக்க வேறு மாதிரியே படைத்திருக்கலாமே; பெண்களையும்தான். நீ தாடி வை; நீ பர்க்கா போடு என் அவரது படைப்பையே அவரே கேள்வி கேட்கிறாரோ?)

*
எங்கள் மார்க்கத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதிலுண்டு.
(கேள்விகளே கேட்கப்படும் முன் இப்படி ஒரு நல்ல நம்பிக்கை இருப்பது சரியா? இதற்குப் பெயர்தான் super confidence!
fossils, stem cell therapy, நாளைய CERN results இவைகளைப் பற்றி நான் கேட்டால் பதிலிருக்குமா? இல்லை மதத்தில்தான் கேட்கவேண்டும் என்றால் அதிலும் பல கேள்விகள் கேட்டாச்சே ... இதுவும் சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுக்கப்படும் பாடம்; அவ்வளவே.)


*
பரிணாமம் ஒரு கொள்கையேயன்றி நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல. (டார்வின் சொன்ன சில hypotheses அவரைப் பொறுத்தவரை அன்றைய அறிவியல் சூழலில் நிரூபிக்க முடியாத கருத்துக்கள். அவர் 'ஏதோ ஒரு factor' என்று சொல்லிச் சென்றதை இன்று அறிவியல் முழுமையாகப் 'பிரித்து மேய்ந்து' விட்டது. அந்த factor - chromosome, gene, nucleic acids என்று அறிவியலில் முழுமையாக அறிந்தாராயப்பட்டு விட்டது. பரிணாமம் இன்னும் ஒரு தியரி என்ற நினைப்பில் இந்தக் கருத்து ஒரு முகமாக எல்லா இஸ்லாமியர்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது. சிறுபிள்ளையில் போதிக்கப்பட்ட பாடம். எத்தனை பேர் டார்வினின் பரிணாமக் கருத்து தவறென்று டார்வின் கொள்கைகளைப் படித்துப் பார்த்துவிட்டு அப்படிச் சொல்கிறீர்கள்?

கிறித்துவர்களிடமும் இதைப் பரவலாகக் காண முடியும்.
கடவுள் ஆணின் விலா எலும்பிலிருந்துதான் பெண்ணைப் படைத்தார்; ஆகவே, இன்னும் ஆண்களுக்கு ஒரு விலா எலும்பு பெண்களைவிட குறைவு என்ற தவறான கருத்து பல படித்த கிறித்துவர்களிடம் கூட உண்டு. என் மாணவன் ஒருவனுக்கு எலும்புக்கூட்டைக் காண்பித்து விளக்கினாலும் ஒத்துக்கொள்ள மறுத்தான். Fossils பரிணாமக் கொள்கையின் உண்மையை விளக்கும் பெரும் தூண்கள். ஆனால், அதெல்லாம் மனுஷனே பண்ணி வச்சிக்கிட்டது என்ற ஒரு பாடமும் போதிக்கப்படுகிறது பக்தர்களின் மனதில்!)


*
ஆதாமிலிருந்து பல நபிகள் தோன்றி அல்லாவின் சட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த சட்டங்கள் மனிதக் கரங்களால் கறை படுத்தப் பட்டதால் இறுதியாக முகமது மூலமாக கடைசிச் சட்டம் தரப்பட்டுள்ளது. இது மனிதனால் மாற்றப்படாதது.

(சில ஐயங்கள்:

ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?

பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது?


600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?

ஒரு பொது நிலைக்கேள்வி:

பல நபிகள்; பல சட்ட திட்டங்கள் கொடுக்கப்பட்டு எல்லாமே மாறி விட்டன. உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் என்று அறிவியல் சொல்ல, பரிணாமத்தை எதிர்ப்போர் ஆதாம் பிறந்தது வெறும் 6000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்பார்கள். இந்தக் கருத்தையே எடுத்துக் கொண்டாலும் முதல் 4500 ஆண்டளவாக கடவுளின் சட்டங்கள் மனிதக் கரங்களால் கைபட்டு மாறிப்போக, அதன் பின்னால் நபியின் மூலமாக 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதிய இறுதிச் சட்டம் கொடுக்கிறார் என்றால் --

*முதல் 4500 ஆண்டுகளாக ஆதாம், மோஸே, ஆப்ரஹாம் --- இப்படி மாறி மாறி வந்த சட்டங்களை வைத்து கடவுள் ஏன், எப்படி மனிதர்களைக் குழப்பினார்? முதலிலேயே இதுபோல் முழுமையாகக் 'காபந்து செய்யப்பட்ட ஒரு கட்டளைகளைக்' கடவுள் மனிதனுக்குத் தந்திருக்க முடியாதா? ஏன் அப்படி தராமல் இப்போது முகமதுவிடம் மட்டும் இப்படி ஒரு நூலைத் தரவேண்டும் - அதுவும் கடைசி என்ற அறிவிப்புடன். அப்படியானால் முதலில் நடந்த தவறைத் திருத்த, அல்லாவின் second thoughts மூலமாக இந்த நூல் வந்ததா? (இது கடவுளின் திருவுள்ளம் என்றோ, இது அவன் செயல் என்பதோ, அவனது "திருவிளையாடல்" என்பதோ, தீர்ப்பு நாளில் கேட்டுக் கொள்ளலாம் என்பதோ சரியான ஒரு பதிலாக இருக்கக்கூடாது; இருக்க முடியாது.)

*சரி, இப்படியெல்லாம் இதுவரை தப்பு நடந்து போனது; இனி இப்படி நடக்கக்கூடாதென்று on second thoughts முகமதிடம் கடைசிச் சட்டத்தைக் கொடுத்தார் என்று கொள்வோம். அப்படியானால் அதுவே கடவுள் ஏற்கெனவே ஒரு தவறு செய்துவிட்டார் என்று நிரூபிக்கிறது.


*அப்படி சில தவறுகள் நடந்த பின் தன் சட்டத்தை மனிதனுக்காகக் கொடுக்க எண்ணிய அல்லா, சொல்லப்பட்டதை உடனே குறிப்பெடுத்து எந்த மாற்றமும் இல்லாமல் எழுதக்கூடிய ஒரு படித்தவரை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். or atleast திருஞானசம்பந்தர், காளிதாசன் கதை மாதிரி ஏதாவது செய்திருக்கலாம்! ஜிப்ரெல் சொன்னதை அப்படியே ஒரு மனிதன் எதையும் மாற்றாமல் சொல்ல முடியுமா? சரி, அல்லாவின் அருளால் நபியை அப்படியே சொல்லும்படி அருளினார் என்று கொள்வதா? இவ்வளவு கஷ்டம் எதற்கு? இதற்குப் பதில், பேசாமல் ஒரு well written document ஒன்றை ஜிப்ரெல் நபியிடம் கொடுத்திருக்கலாமே. அல்லாவால் முடியாத ஒன்றா அது?

(ஒரு விளையாட்டு உண்டு. சிலரை வைத்துக் கொண்டு, அதில் முதல்வரிடம் ஏதாவது ஒரு statement ரகசியமாகக் கொடுங்கள். அவர் அதை அடுத்தவரிடம் சொல்லட்டும் ரகசியமாக. நாலைந்துபேர் தாண்டும் முன் அந்த statement முற்றிலுமாக மாறியிருக்கும்.)

*நபி முதலில் தனக்கு மலைக்குகையில் நடந்தது நம்ப முடியாமல் இருந்தது; அவரது மனைவி சொல்லி நம்பியது; ஜிப்ரெல் சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி, காலம் சிறிது ஆனபின் அவைகளை அவர்கள் எழுதியது; பின் வந்தவர்கள் அதைத் தொகுத்தது -- இத்தனை குழப்பமானவைகளை விடவும் கடவுள் ஒரு ஆணையை உருவாக்கி அதை அப்படியே நபியிடம் தந்திருந்திருக்கலாமே. எளிது; குழப்பமில்லை; குரானில் மாற்றமே இல்லையா என்று 1400 வருஷமாகக் கேட்கப்படும் கேள்விகளும் இருக்காதே.)

*இசை, கலை, பாடல்கள், ஓவியங்கள் - இவைகளை ஒதுக்கி வைக்கும்படி அல்லா நபியிடம் கூறியுள்ளார்.

(இது நான் பெரிதாக வியக்கும் ஒரு விஷயம். இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப்பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை வந்ததென்பார்கள். Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது. இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்.

ஒரு பதிவர் ஏ.ஆர். ரஹ்மான் இசையை விட்டு விட வேண்டுமென்று எழுதியிருந்ததை வாசிக்கும்போது, அதைவிட 'நீ உன் மூச்சை நிறுத்திக்கொள்' என்று சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.)


*

*

சமயங்களைப் பற்றி மட்டும் பேச நினைத்த எனக்கு இன்னொரு சின்ன சமூக வேண்டுகோள் உண்டு.

நம் பதிவர்களிடையே சில முறை ஓர் அனுபவம் கிடைத்தது. இஸ்லாமிய மன்னர்கள் நம் நாட்டிற்குள் நுழைந்த அன்னியர் என்ற நினைவு பலரிடம் இல்லை. ஒளரங்கசீப் ஜிஸ்யா வரி வசூலித்தாரே என்றால் நம் நாட்டில் அவரது ஆட்சி முறையாக இருந்த ஒரு அரசு போலவும், அவர் வரி வசூலிப்பது நம் நாட்டை நன்றாக ஆள்வதற்கு என்றும் ஒரு கூற்று வருகிறது. அப்போது ஆங்கிலேயர் விதித்த உப்பு வரியும் சரிதானா? அதை எதிர்த்த காந்தி தவறு செய்து விட்டாரா? இஸ்லாமிய அரசர்கள் அந்நியர்கள்; ஆக்கிரமிப்பாளர்கள். நம் நாட்டைப் படையெடுத்து, அடிமைப் படுத்தி, நம்மை ஆண்டவர்கள் - ஆங்கிலேயர்களைப் போல; பிரெஞ்சு நாட்டுக்காரர்கள் போல; போர்த்துக்கீசியவர்கள் போல. இந்த வெள்ளைத் தோல் கொண்ட இவர்கள் எல்லோரும் கிறித்தவர்கள் என்பதற்காக, எந்த நம் நாட்டு கிறித்துவனும் அவர்களைப் போற்றிப் பாடுவதில்லை.

இஸ்லாமிய அரசர்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள். அதோடு நிற்க வேண்டும். ஏன் மதங்களை அவர்கள் மேல் சாற்றி அவர்கள் துதி பாட வேண்டும்? ஜெனரல் டயர் ஒரு கிறித்துவன் என்பதற்காக நம்மூர் கிறித்துவன் ஜெனரல் டயர் தன் கடமையைத்தானே செய்தான் என்று சொல்லி அவனின் பெருமை பேசுவானா?

மதங்களைத் தனித்துப் பாருங்கள். அதை மனிதர்கள் மேல் ஏற்றி, 'என் மதக்காரன் என்றாலே அவன் எனக்கு உறவு' என்று சொந்தம் பாராட்டாதீர்கள். நிச்சயமாக அரசியலோடு மதங்களை இணைக்காதீர்கள். படும் துன்பம் போதும்.

இன்னொன்றும் சிலர் சொல்வதுண்டு. அந்நிய நாட்டுப் படையெடுப்பாளர்களில் பலரும் நம்மிடம் கொள்ளையடித்து தம் நாட்டுக்கு நம் செல்வங்களைக் கொண்டு சென்றார்கள். அதைவிட நம் நாட்டுக்குப் படையெடுத்து வந்து, இங்கேயே அரசாட்சி செய்து நம் நாட்டுக்கு "நல்லது" செய்தார்கள் இஸ்லாமிய மன்னர்கள். இதுவும் ஒரு வேடிக்கையான விளக்கம்தான். கொள்ளைக்காரன் ஒருவன் நம் வீடு நுழைந்து, நம் சோற்றுப் பானையைத் தூக்கிக் கொண்டு போய் அவன் வீட்டில் வைத்து சாப்பிட்டான்; இன்னொருவன் கொள்ளையடித்து வெளியே செல்லாமல் நம் சோற்றை நம் வீட்டிலேயே வைத்து நமக்கெதிரே வைத்தே சாப்பிட்டான் - இப்படித்தான் இருக்கிறது அந்த விளக்கம்.

இதையெல்லாம் சொல்வதை வைத்து பாபர் மசூதி விஷயத்தை இங்கு இழுக்க வேண்டாம். ஏனெனில் அதைப் பற்றிய என் கருத்துக்கள் இருப்பது வேறோரிடத்தில் ...




*

*

*

Thursday, November 19, 2009

352. சில சின்னச் சின்னக் கேள்விகள் ...

*
2007-ல் தீர்ப்பு வந்தது -- தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அ.தி.மு.க. கட்சியினருக்குத் தூக்குத் தண்டனை அப்டின்னு. நம்ம பதிவர்கள் எல்லோரும் ரொம்ப சந்தோஷமா கை தட்டினாங்க.

அவங்க தொங்கியாச்சா?

*
2006-ல் இன்னொரு தீர்ப்பு. அப்சலம் தூக்குத் தண்டனை. பதிவுலகத்தில் நிறைய வாதங்கள்.

அவனும் தொங்கியாச்சா?

*
கேசாப் வழக்கு இன்னும் நடக்குது. அவன் வயசாகி, தானா சாகுறதுக்குள்ள அந்த வழக்கு முடிஞ்சிருமா?

*
கோடா இப்ப நாலஞ்சு நாளா ஆளே தினசரியில காணுமே. எங்க போனான்? அம்புட்டுதானா?

*
இன்னொரு மத்திய அமைச்சர். வெளிநாடு போனப்போ இங்கே அந்த ஆளு வீட்ல படுக்கை அறை, பூசை அறையில் இருந்த சாக்கு மூடைகளில் பணம்.. பணம் .. அப்டின்னு மூட்டை மூட்டையா கண்டு பிடிச்சாங்க. பேரு என்னமோ ஒரு ராமர் அப்டின்னு நினைவில் இருக்குது. அதுவும் அம்புட்டுதான் ...

*
மஞ்சள் துண்டு ஆட்சி வந்ததும் பழைய பச்சை சேலை இருந்த சிறுதாவூர் அரண்மனை அடிச்சிப் பிடிச்ச இடத்தில கட்டுனதுன்னு புகார் வந்திச்சி. புதுசா வந்திருக்க ஆளுக உடனே அடிச்சிப் பிடிப்பாங்கன்னு பார்த்தேன். அவுகளுக்குள்ள என்ன அரேஞ்மென்டோ ... அந்த நில தாக்கீதை ஒரு வாரத்தில கண்டு பிடிங்கன்னு சொல்லுவாங்கன்னு நினச்சா அரசே 6 மாசம் டைம் கொடுத்திருச்சி. அதுக்கு ஏது இம்புட்டு டைம்?!. ஆனா, இப்ப இதுவரை ஒண்ணையுமே காணோம். மஞ்சளுக்கும் பச்சைக்கும் நடுவில சிகப்பு வந்திச்சி. அதுட்ட இருந்தும் சத்தம் ஒண்ணும் இல்லை.

*
அந்த பத்திர ஊழலில் ஒரு போலீஸ்காரர் முதல் நிறைய பேருங்க சொன்னாங்க. என்ன ஆச்சுன்னு தெரியலை. ஆனா இதில் எனக்குப் பிடிச்சது அந்த பிடிபட்ட போலீஸ்காரர் அப்படியே சும்மா ஜில்லுன்னு மீசையை வருடி விட்டுக்கிட்டு வர, அவரை சுத்தி நிக்கிற போலீஸெலாம் அவருக்கு சல்யூட் அடிப்பாங்க பாருங்க .. அது நல்லா இருந்திச்சி. மற்ற சில குற்றவாளிகள் மாதிரி மூஞ்சை மூடிக்கிட்டு ... அதெல்லாம் எதுக்கு இவருக்கு? நல்ல மனுசன் ..

*
ராஜா விவகாரமும் இப்ப தினசரியில ஒண்ணையும் காணோம். "எல்லாமும்" முடிஞ்சிருக்குமோ?

*
கொஞ்ச நாளா லட்ச கோடிப்பணம் ஸ்விஸ் வங்கிகளில் தூங்குது. நாங்க வந்த உடனே வெளியே கொண்டு வந்திருவோம்னு சொன்ன காவிக்கலர்காரங்க இப்ப அவங்க பிரச்சனையில இருந்து இன்னும் வெளியே வரவேயில்லை. அதுவும் அம்புட்டுதானா?

*
அப்போ, மாட்டுத்தீவனத்தை "மாடு" தின்னுட்டு போயிரிச்சி; இனிமே அது அம்புட்டுதானா?

*
பச்சை சேலைக்கர மம்மி மேல இன்னும் நிறைய கேஸ் இருக்கும் போலும். லண்டன் ஹோட்டல் ... அது இதுன்னு நிறைய இருக்கு. ஆனா எல்லாமே அம்புட்டுதானோ?

* ஆனாலும் போபர்ஸ் வழக்கு மாதிரி எதுவும் இருக்க முடியாதுல்ல .. க்வாட்ரச்சியோடு அதையும் இழுத்து மூடியாச்சோ?

*
ஆனாலும் நமக்கெல்லாம் மறக்கிற ஞாபக சக்தி இல்லாட்டி ரொம்ப கஷ்டம்ல ...?


*

*
U.I.D. பற்றி சிறிது எழுதணும்; அதற்கு உங்க ஆதரவும் வேணும். கொஞ்சம் யோசிச்சிட்டு பொறுத்து எழுதுகிறேன்.

*

Thursday, November 12, 2009

351. மதங்கள் - கிறித்துவம்

*




வாசித்தது ...
வாசித்துக் கொண்டிருப்பது ...
வாசிக்க வேண்டியது ...




*
மதங்களைப் பற்றி பல நூல்கள் வாசிக்கும்போது அவ்வப்போது எழும் ஐயங்களைத் தொகுக்க ஓரிடம் வேண்டுமல்லவா? என் பதிவுகளில் அதற்கான ஒரிடம் இது. எனக்குள் எழும் ஐயங்களை இங்கே தொகுத்து வைக்கின்றேன். இதை நீங்கள் வாசிப்பீர்களா இல்லை தவிர்த்து விடுவீர்களா என்பதல்ல .. எனக்கு ஓரிடம் வேண்டும்; அங்கங்கே வாசிப்பதை நூல்களில் வெறும் கோடிட்டு வைத்து விட்டு மறந்து விடுவது போலல்லாமல் தொகுக்க என் இடம் இது.

*

சிறு வயதிலிருந்தே பல சமயச் செய்திகள் மனத்தின் ஆழத்தில் புதைக்கப்படுகின்றன.

அந்த வயதில் நம் மனத்துக்குள் புதைக்கப்படும் அத்தகைய "சமய உண்மைகள்" வாழ்க்கையில் எப்போதும் நிரந்தர இடம் பிடிக்கவே பெரும்பாலும் வாய்ப்பாக ஆகிவிடுகிறது. அந்த "உண்மைகள்" மீது நாம் கேள்விகள் எழுப்பவே எப்போதும் பயப்படுகிறோம்; அது தவரென்று எப்போதும் நமக்குக் கற்பிக்கப்பட்டிருப்பதால் அந்த நினைப்புகளையே "பாவம்" என்று ஒதுக்கி விடுகிறோம். எப்போதாவது எழும் ஐயங்களை ஒதுக்கித் தள்ள நமக்கு ஏற்கெனவே "பாடங்கள்" சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக, கத்தோலிக்க கிறித்துவ, பிரிவினைக் கிறித்துவ பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வதில் முரண்பாடு உண்டு. அடிப்படைக்காரணம் என்ன என்பது தெரியாமலேயே இதில் முழு வேற்றுமையைக் காண்பிப்பார்கள். சில காதல் திருமணங்கள் கூட இந்த வேற்றுமையால் மணவிலக்கு வரை சென்றதுகூட எனக்குத் தெரியும். சொல்லிக்கொடுத்ததைத் தாண்டாத மக்கள் ....!!

அப்படி சொல்லிக்கொடுக்கப்பட்ட சில "பாடங்கள்".

THE HOLY TRINITY: தம திரித்துவம் என்பர். அதாவது கடவுள் மூன்று ஆட்களாக (தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று ... ) இருக்கிறார்; ஆனால் ஒரே கடவுளாக இருக்கிறார். இதை விளக்க யாரும் முயல்வதில்லை. அதற்குப் பதிலாக சின்னப் பிள்ளை கடல் நீரை சிரட்டையால் கடல் கரையின் சிறு பள்ளத்தில் நிரப்ப முயல்வது போன்ற செயல் அது என்று ஒரு கதை சொல்லி அதைப் பற்றி நினைப்பதே தவறு என்று பாடம் சொல்லி விடுவார்கள். அகுஸ்தினார் என்ற புனித / அறிஞருக்கே எட்டாத விஷயம் என்று சொல்லி 'அமுக்கிவிடுவார்கள்'.

ஏசு கடவுள் என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டதில்லையே. அவரை ஏன் கர்த்தராக்கினீர்கள் என்றெல்லாம் கேட்கக் கூடாது.

ஏசு ஒரு சின்ன மக்கள் கூட்டத்திற்கு - யூதர்களுக்கு - வந்ததாகவும், அவர்களே கடவுளால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்' எனவும் விவிலியத்தில் பல இடங்களில் இருக்கிறதே என்று கேட்டாலும் பதில் வராது.

மத்தேயு (10: 5,6) இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திலும் போங்கள். - இதன் பொருள் ஏசு ஒரு சின்ன மக்கள் குழுவிற்கு மட்டும் வந்ததாகத்தானே தெரிகிறது?!
(கத்தோலிக்க விவிலியம்: இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். மாறாக வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.)

மத்தேயு (10:23) மனுஷ குமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றி முடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ????????????
(கத்தோலிக்க விவிலியம்: ... மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.)


கத்தோலிக்கர்களின் 'நன்மை' - holy communion - ஒரு அடையாளச் செயல்தானே; அதில் சொல்லப்படுவது போல் ரொட்டித்துண்டு ஏசுவின் ரத்தமாக, சதையாக மாறுவதுண்டா என்று கேட்கப்படக்கூடாது.

ஏசுவிற்குப் பிறகு மரியாளுக்கு குழந்தைகள் பிறந்தன. ஜேம்ஸ் என்றெல்லாம் இருக்கிறதே என்றால் அது பிரிவினைக்காரர்களின் - protestants - கருத்து என்று ஒதுக்கப்படும்.

இதெல்லாம் போதாதென்றால், விவிலியத்தின் ஒவ்வொரு வார்த்தையும் கடவுளின் அருளால், அதுவும் சிறப்பாக பரிசுத்த ஆவியின் 'ஏவுதலால்' எழுதப்பட்டவை என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

ஆனால் டா வின்ஸி கோட் கதை வாசித்து சிறிது கிளறிய பின்பே -கிறிஸ்து இறந்து 325 ஆண்டுகளுக்குப் பிறகு Constantine , the great என்ற மன்னன் மூலமாகக் கூட்டப்பட்ட முதல் கிறித்துவர் "மாநாட்டில்"தான் (First Council of Nicaea in 325 A.D.) ஏசு கடவுள் என்பதுவும், இருந்த பல புத்தகங்களிலிருந்து சிலவற்றை மட்டும் விவிலியமாக தேர்ந்தெடுக்கப்பட்டன என்றும் gnostic gospels போன்ற சில நூல்கள் புறந்தள்ளப்பட்டன என்பதுவும் தெரிந்தது. இதைத் தேர்ந்தெடுத்ததும் முழுவதுமான சமயக் காவல்ர்களோ, தலைவர்களோ இல்லாமல் சில அரசியல் காரணங்களுக்காக மன்னவனே முன்னின்று நடத்தியது என்பது தெரிகிறது. ஏசுவின் சகோதரர் ஜேம்ஸ், மரிய மகதலேன், பீட்டர் (ராயப்பர்), Gospel of Thomas, Gospel of Philip, Apocryphon (Secret book) of John ( The Gnostic Gospels, Elaine Pagels (XV-XVI) - இந்த நூல்கள் மறைக்கப்பட்டு வேறு நால்வரின் நூல்கள் மட்டும் ஏன் கரையேறின என்பது தெரியவில்லை.

ஏசுவின் வாழ்க்கையில் 'மறைந்த ஜீவியம்' என்று பல ஆண்டுகளைச் சொல்வதுண்டு. அதன் தேவையோ, காரணமோ என்ன?

மார்க் எழுதிய விவிலியம் ஏசுவிற்குப் பின் 70-80-ன் ஆண்டிலும், லூக், ஜாண் இருவரின் விவிலியம் 90-110 ஆண்டிலும் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. இரண்டிலும் சிலுவையில் ஏசுவின் மரணம் வேறு வேறு விதமாகக் கூறப்படுவதின் காரணம் என்ன? (The Gnostic Gospels, Elaine Pagels, pp71)

மத்தேயு (10: 34, 35) பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தக்ப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகனுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். 


????????!!!!!!!!!!!!! இதெல்லாம் ஒண்ணும் புரியலையே ... 

(கத்தோலிக்க விவிலியம்: "நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.)

*
கிறித்தவ மதத்துக்காகவே தன் வாழ்நாளைக் கழித்த அன்னை தெரஸாவின் வாக்கு மூலத்தை கீழே தருகிறேன். அன்னை தெரஸாவின் நிலையே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.

“பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”

“என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”

“என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”

மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள ‘அன்னை தெரசா - என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டதில் ஒரு பகுதி.

அந்த நூலின் சில பகுதிகளை இங்கு காணலாம் ...




*










Thursday, November 05, 2009

350. என்னென்னமோ ...

*


*

கோலங்கள் அப்டின்னு ஒரு சீரியல். காலங்காலமாய் நடந்துக்கிட்டு இருக்கு. அதில் வர்ர கேமிரா கோணங்களைப் பார்த்தா ரொம்ப கோவமா வந்ததாலே ரொம்ப முந்தியே அதப் பார்க்கிறதை நிப்பாட்டியாச்சி. இருந்தாலும் தங்ஸ் அதில வர்ர ஒரு கேரக்டர் வந்ததும் என்னைக் கூப்பிடுவாங்க. ரொம்ப ஜாலியா இருக்கும் அதில வர்ர 'தில்லா'வைப் பார்க்கிறதுக்கு. மற்ற முக்கிய கேரக்டர்கள் அழுமூஞ்சி அம்மாவும், 'வரட் வரட்' ஆதியும். இந்த அம்மா, ஆச்சி பொடிக்கு சிரிச்சிக்கிட்டே வருவாங்களா, அதில கூட அவங்களை இப்ப பார்க்க முடியாம போச்சு. அதில கூட அவங்க அழுதுகிட்டே விளம்பரம் பண்ணினால் நல்லா இருக்கும்னு தோணுது. அந்த அளவுக்கு இந்த சீரியலில் கிளிசரின் பாட்டிலோடு வந்துக்கிட்டே இருக்காங்க. அந்த ஆதிக்கு நல்ல தொண்டை. இவங்களைப் பார்த்தாலே நிலமை ரொம்ப மோசமா போனதாலதான் அந்த சீரியல் நேரத்தில் ஹால் பக்கமே போறதில்லை. ஆனா, தில்லா ரொம்ப தமாஷான ஆளு. ஒரு ஆளு ஏன் இப்படி பண்றார்; அதை டைரடக்கர் எப்படி அனுமதிக்கிறார் என்றே புரியவில்லை.

நீங்களும் பார்த்துச் சொல்லுங்க ...

*

அந்த சீரியலில் ஒரு 'தோழர்' வந்தார்; செத்துட்டார். தமிழ் நல்லா பேசுவார். டைரடக்கர் அவர் மூலமாக இலங்கைப் பிரச்சனையில் தன் கருத்தை நன்றாக சொல்ல வைத்துவிட்டு சாகடித்து விட்டார்.

*

அரசி சீரியல் என்று நினைக்கிறேன். அதில் உசரமா நல்லதம்பின்னு பேருன்னு நினக்கிறேன். நல்ல உடல்மொழி. குரலும் நல்லா இருக்கும். இந்த மாதிரி ஆட்களெல்லாம் திடீர்னு வந்துட்டு அப்புறம் காணாம போய்றாங்க. இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் விட்டுட்டு தாங்க முடியாத தர்த்தியான மூஞ்சுகளை அடிக்கடி சீரியல்களில் பார்க்க முடிகிறது. ஏன் இப்படி நம்ம டைரடக்கர்களுக்கு ஒரு டேஸ்ட்!?

பாவம் .. இந்த மாதிரி நல்ல நடிகர்கள்.

*
குரு பூஜைக்காக எங்க ஊரு ஜே .. ஜே ன்னு இருந்திச்சி - வழக்கம் போல. இதுவரை எனக்குத் தெரிஞ்சு இந்த ஒரு குரு பூஜைதான் இருந்தது. ஆனா, இப்போது நாலு குரு்பூஜை இதே சமயத்தில் நடக்குது.

அந்த குருபூஜைகளில் பேருந்துகளில் எறியும் கல்களையும், தீர்த்து எரிக்கும் பெட்ரோல் காசை வைத்தும் வருஷத்து நாலு பள்ளிக்கூடம் கட்டலாம்.

*
*
பழைய ஜார்க்கண்ட் முதலமைச்சர் மது கோடா தண்டிக்கப்படுவார்னு யாராவது நிஜமா நினைக்கிறீங்களா? (CNN-IBN has learnt that during the four days of continuous interrogation, Koda allegedly admitted to stashing away Rs 375 crore in Swiss banks.) அம்மாடி!!

அப்புறம் நம்ம ராசா?

*

லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கிகளில் இருக்காமே, அதையெல்லாம் என்ன பண்ணப்போறார் ப.சி.?

*



*

Monday, November 02, 2009

349. பேராண்மை

*

பேராண்மை படம் பார்த்தேன்.

நிறைய வசனங்கள் தணிக்கைக் குழுவினால் வெட்டப்பட்டிருந்தன.

மிக்க நன்றி -- வெட்டப்பட்ட இடங்கள் "நிறைய பேசின".


*

Wednesday, October 28, 2009

348. மயிலில் வந்த கதை

*

மகள் அனுப்பிய மயிலில் வந்த கதை இது. படிக்க நல்லா இருந்தது. "எனக்கும்" கூட எல்லாம் புரிஞ்சிரிச்சி ... :)


*



A discussion between a father and a son, working for a software company.
Very interesting … Read thru ...


அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"
நியாயமான ஒரு கேள்வி


*

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி, பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. அவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

“இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருப்பாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யணும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.

அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துப்பானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?"

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடிப் பொடிங்க இருப்பாங்க.."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.
அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

“புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."

------End of discussion--------

Monday, October 19, 2009

347. கடவுள் என்றொரு மாயை ... 12

*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12



கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter 10.

A MUCH NEEDED GAP?

===========================================


நமது வாழ்க்கையில் கடவுள் என்றொன்றிற்கு மனத்தளவில் ஓரிடம் உண்டு - ஒரு நண்பனாக, தந்தையாக, மூத்த தமையனாக, நம் குற்றங்களைத் தாங்குபவராக, நம்பிக்கைக்குரியவராக. கடவுள் என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ அதற்கென்று நம் வாழ்க்கையில் ஓரிடம் உண்டு. (387)

*
அந்தக் கற்பனை நண்பன், கற்பிக்கப்படும் அந்தக் கடவுள் வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு எப்போதும் நிறைய காலம் எடுத்து, பொறுமையொடு காத்திருப்பார். மனோதத்துவர்களோ, நல்லுரை கூறுபவர்களோ அந்த அளவு பொறுமையோடும், காலணா காசில்லாமல் கிடைப்பார்களா என்ன? (391)

*
மதங்களை மறுத்துவிட்டால் அதற்குப் பதிலாக எதை வைத்திருக்கப் போகிறீர்கள்?

*
மதங்கள் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது என்பதாலேயே அது உண்மையாகி விடுவதில்லை.

*
கடவுள் உண்மையாக இருப்பின், அவரோடு இருப்பதே மகிழ்ச்சி என்பதானால், சாகும் நேரத்தில் எல்லா நம்பிக்கையாளர்களும் மகிழ்ச்சியோடுதானே இருக்க வேண்டும்? ஒருவேளை அவர்கள் நம்பியதாகக் கூறியவை எல்லாமே வெறும் வேடம்தானா?

ஏன் இரக்கக் கொலை (euthanasia) அல்லது தற்கொலை நம்பிக்கையாளர்களுக்குத் தப்பாகத் தெரிகிறது?

*
இந்த வாழ்க்கைக்குப் பின் இன்னொரு வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுள்ளவர்களுக்கு, இறப்பு என்பது இன்றைய இந்த உலக வாழ்க்கையிலிருந்து மறு வாழ்வுக்காக உங்களைக் கடத்தும் ஒரு கருவி என்பது தானே உண்மையாக இருக்க வேண்டும்?

*
இந்த வாழ்க்கை மரணத்தோடு முடிகிறது என்ற நம்பிக்கையுள்ளவர்கள் தான் இரக்கக் கொலைக்கோ, உதவப்படும் தற்கொ்லைக்கோ (assisted suicide) எதிர்ப்பு காண்பிக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அடுத்த ஜென்ம வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள்தானே இவைகளை ஆதரிக்கிறார்கள்.

*

................................ கடவுள் என்றொரு மாயை என்ற நூல் பற்றிய இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவு பெறுகிறது!!


http://www.mylivesignature.com/signatures/54487/287/FE27BF4CB271859C180DCF19676DCCD3.png



*


*

Sunday, October 18, 2009

346. கடவுள் என்றொரு மாயை ... 11

*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*




கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter 9.

CHILDHOOD, ABUSE AND ESCAPE FROM RELIGION

=========================================

ஒவ்வொரு ஊரிலும் விளக்கேற்றுபவர் ஒருவர் இருப்பார்;
- அவர் ஒரு ஆசிரியர்.

ஒவ்வொரு ஊரிலும் அந்த விளக்கை அணைக்க ஒருவர் இருப்பார்;
- அவர் ஒரு மதகுரு.
- VICTOR HUGO
(349)


*

David i. Kertzer என்பவர் எழுதிய The Kidnapping of Edgardo Mortara என்ற நூலில் கதையுடைத் தலைவனாக வரும் எட்கார்டோ என்ற அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் கத்தோலிக்க கிறித்துவர்களின் மத 'வெறியாட்டத்தில்' நடந்த உண்மைகளை வெளிக்கொணர்கிறார். Spanish Inquisition நடந்த 1850களில் கதை இது. தற்செயலாகக்கூட ஒருவன் தலையில் தண்ணீர் ஊற்றி ஜெபித்துவிட்டால்கூட அவன் "உண்மையான", திருமுழுக்கு (baptism) பெற்றவனாக மாறிவிடுகிறான் என்ற கத்தோலிக்கரின் நம்பிக்கையை முழுவதுமாக எழுதுகிறார்.

பதினான்கே வயதான வேலைக்காரப் பெண்ணால் தலையில் நீரூற்றப்பட்டு திருமுழுக்கு பெற்ற பையனை அரசு அவனது யூதப் பெற்றோர்களிடமிருந்து பிரித்தெடுத்து விடுகிறது. ஏனெனில் அந்த மதக்காரர்களது நம்பிக்கை அத்தனை ஆழமானது. திருமுழுக்கால் கிறித்துவனாவன் கிறித்துவர்களால்தான் வளர்க்கப்பட வேண்டும் என்பது அப்போதைய போப், மதகுருமார்கள், தினசரிகள் என எல்லோரின் நம்பிக்கை. (349 - 354)

*
சிறு குழந்தைகளின் பாலியல் வன்முறை, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மதக்கல்வியின் அழுத்தம் இவைகள் பற்றி டாக்கின்ஸ் பேசுகிறார். (354 - 366)

*
டாக்கின்ஸுடன் வேலைபார்த்த மனோதத்துவர் Nicholas Humphrey ஒரு சொற்பொழிவில் கூறியவைகளில் சில:
தனிமனித சுதந்திரத்தில் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே மற்றவர்களின் - அவர்கள் யாராக இருந்தாலும் - தவறான முடிவுகளைக் கொடுப்பது தவறு. அவர்களது வாழ்க்கையின் நீட்சிகளை அவர்களே முடிவு செய்ய விட வேண்டும். மூட நம்பிக்கைகள் மலிந்த கடவுள் கோட்பாடுகளை அவர்களிடம் விதைத்து, அவர்களுக்கென்று ஒரு குறுகிய ஒற்றைவழிப்பாதையைத் தரக்கூடாது.

குழந்தைகள் இப்படித்தான் நினைக்க வேண்டும் என்று பெற்றோர்களால் நிர்ப்பந்திக்கக் கூடாது. (367)

*
எந்த ஒரு மத எதிர்ப்பாளனும் இப்போதெல்லாம் அமெரிக்காவில் bright என்று அழைக்கப்படுகிறார்கள்.
எந்த ஒரு குழந்தையும் ஒரு bright-ஆக மாறுவதற்குரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். (380)

*
குழந்தைகளை கிறித்துவக் குழந்தைகள், இஸ்லாமியக் குழந்தைகள் என்றெல்லாம் அழைப்பது அருவருக்கத் தக்கது. எந்தக் குழந்தையும் கிறித்துவ குழந்தை, முஸ்லீம் குழந்தை என்றல்ல; கிறித்துவ பெற்றோருக்குப் பிறந்த குழ்ந்தை, முஸ்லீம் பெற்றோருக்குப் பிறந்த குழந்தை என்று வேண்டுமானால் அழைக்கப் படலாம். (381)


*



*

*

345. GEORGE CARLIN ON RELIGION & GOD

-*





*

Friday, October 16, 2009

344. கடவுள் என்றொரு மாயை ... 10

*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

-->



கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter 8:

WHAT'S WRONG WITH RELIGION?
WHY BE SO HOSTILE?


========================================

மக்கள் எல்லோரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கடவுள் - மேலே வானத்தில் இருந்துகொண்டு் - நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடத்திலும், நாளிலும் என்னென்ன செய்கிறோம் என்பதைக் கவனித்துக் கொண்டிருப்பதாக ஒரு நினைப்பை மதம் ஏற்படுத்தி விட்டது.

புலப்படாத அந்த மனிதனும் நாம் செய்யக் கூடாத பத்து கற்பனைகளை ஒரு நிரலாகத் தொகுத்து வைத்துள்ளார். அப்படி வி்லக்கப்பட்ட அந்தப் பத்துக் கட்டளைகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தால் அவர் ஒரு 'தனியிடம்' ஒன்றை வைத்துள்ளார்; அக்கினி மிகுந்து சூடும் புகையும் நிறைந்த, தவறுகள் செய்யும் நம்மையெல்லாம் சித்திரவதை செய்யும் அந்த இடத்திற்கு அனுப்பி, காலமெல்லாம் நாம் அங்கே கஷ்டப்படவும், எரிந்து வேதனைப் படவும், துக்கத்திலும் துயரத்திலும் நாம் முடிவில்லாத காலம் வரை அழுது துயருறவும் அனுப்பி விடுவார். .... ஆனால், அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார்!:) (பக்:317)

.................................ஜார்ஜ் கார்லின்

===============================================

Saturday, September 26, 2009

343. வாழ்க செளதி அரேபியா

Riyadh sets up first co-ed university
— PHOTO: AFP

Breaking social barriers: The main campus of King Abdullah University of Science and Technology near Jeddah.

Thuwal (Saudi Arabia): Breaking centuries- old social barriers, Saudi Arabia has inaugurated its first-ever co-educational university allowing girls to attend classes without veil, a multi-billion-dollar initiative aimed at producing future scientists, engineers and technologists.

The most advanced research and technology institute in West Asia, which has sprung up on the Red Sea coast at a cost of $10 billion, was launched by King Abdullah bin Abdul Aziz, with promises of ushering in scientific freedom in a region where conservative interpretation of Islam has been blamed for stifling innovation.

House of Wisdom

Described as the Bait Al-Hikmah or the “House of Wisdom”, the King Abdullah University of Science and Technology (KAUST) is the brainchild of the forward-looking Saudi monarch, who unveiled it amidst tight security on the Kingdom’s National Day recently. The KAUST, which came into being with coffers opened up by the largest Saudi oil company ARAMCO, will have the world’s fastest supercomputers, top scientists, state-of-art labs and initially 400 students including a sizeable number from India. — PTI

© Copyright 2000 - 2009 The Hindu

Friday, September 25, 2009

342. GO TO HELL !

*

இவ்வார ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் கேள்வி பதில் பகுதியில் வந்த ஒரு கேள்வியும் பதிலும் ...

"இந்தக் கேள்வி கேட்பதற்கு மன்னியுங்கள். எங்கள் மதத்தில் பாவங்கள் செய்தவன் நரகத்துக்குச் செல்வான் என்றும், கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவான் என்றும் எங்கள் மதத்தலைவர்கள் சொல்கிறார்கள். இங்கே சந்தோஷங்களை எல்லாம் தவிர்த்து விட்டு பிற்பாடு சொர்க்கத்துக்குப் போவதா, அல்லது இங்கே ஜாலியாக எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு, பிற்பாடு நரகத்துக்குப் போவதா என்று குழப்பமாக இருக்கிறது".

"நரகம் என்று ஒன்று இருக்கிறது. அங்கே நீ எண்ணெய்க் கொப்பரையில் வதக்கப்படுவாய் .. அணையாத நெருப்பில் எரிக்கப்படுவாய்" என்றெல்லாம் சொல்பவர்களுக்கு எவ்வளவு அரக்கத்தனமான மனது!

அடிப்படை மனிதத்தன்மைகூட இல்லாமல், இப்படிப்பட்ட கொடூரமான எண்ணங்கள் கொண்டதற்காக அவர்களை அல்லவா அப்படிப்பட்ட நெருப்பில் பொசுக்க வேண்டும்? வன்மையான மிருகங்கள்கூட ஒரே அடியில் தாக்கிக் கொல்லப் பார்க்குமே அன்றி, சதா எரியும் நெருபில் இட்டுச் சித்திரவதை செய்து வேடிக்கை பார்க்காது. இப்படிப்பட்ட வக்கிரமான மனம் கொண்டவர்கள், எப்படியோ மதத் தலைவர்களாக இயங்க ஆரம்பித்துவிட்டதுதான் துரதிருஷ்டம்.

இப்படிப்பட்டவர்களின் போதனைகளால், நிற்பது பாவமோ, உட்கார்வது பாவமோ என்று ஒவ்வொன்றைப்பற்றியும் அச்சம் கொண்டு, குற்ற உணர்வால் தவிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். உண்மையில் அச்சமூட்டி யாரையும் நல்லவர்களாக்கிவிட முடியாது.

ஒன்றைத் தவிர்க்கும் போது, அது பற்றிய கவனம் அதிகமாகி, அதில் இருந்து விடுபட முடியாமல் சிக்கிப் போகிறவர்களே அதிகம்.

கவனித்துப் பாருங்கள். பாவங்களைப் பற்றிப் பேசும் சமூகத்தில்தான் ஒழுங்கீனம் தலைவிரித்து ஆடுகிறது. செய்ய நினைப்பதைச் செய்துவிட்டு கதறி அழுது கொண்டிருப்பார்கள்.


*

Thursday, September 24, 2009

341. எங்கிருந்து வந்தோம் ... ?

*
இன்றைய (24.09.09) இந்து தினசரி



— Photo: Mohammed Yousuf


Genetic diversity of Indian population studied

R. PRASAD

Ancient South Indians’ descendants have no genetic link to groups outside India

(பழங்குடி தென்னிந்தியர்களின் மரபணுக்கள் (genes) இந்தியாவிற்கு வெளியே உள்ள எந்தக் குழுவின் மரபணுவோடும் ஒத்துப் போகவில்லை.)



Recessive gene disorder: Shared descent from a common ancestral population plays a bigger role than consanguinity for many recessive gene disorders

A paper published online today (September 24) in the journal Nature, shows that all diverse groups seen spread out in India today come from two major ancient populations that are genetically divergent.

The two ancient populations are the Ancestral North Indians (ANI) and the Ancestral South Indians (ASI). The study was based on genetic analysis.
(இந்திய ஆதிகால மக்களை வடக்கிந்திய தொல் மக்கள், தெற்கிந்திய தொல் மக்கள் என இரு கூறாகப் பிரிக்கப்பட்டு இந்த மரபணு சோதனை நடத்தப்பட்டது.)


While the Ancestral North Indians (ANI) group is genetically close to Middle Easterners, Central Asians, and Europeans, the Ancestral South Indians (ASI) are not related to any group outside India, notes the paper.

வடக்கிந்திய ஆதி மக்கள் மரபணு சோதனையில் அவர்கள் மத்திய கிழக்கினரையும், மத்திய ஆசிய மக்களையும், ஐரோப்பியர்களையும் ஒத்திருப்பதாகவும், தென்னிந்திய ஆதி மக்கள் எந்த ஒரு வெளி நாட்டு மக்களோடும் சார்ந்திருக்கவில்லை என்பதையும் இந்த ஆராய்ச்சி தெளிவு படுத்துகிறது.

The study was undertaken by the Hyderabad-based Centre for Cellular and Molecular Biology (CCMB) and three other institutions in the U.S.

Samples from 132 people representing 25 groups from 15 States and speaking six language families (including two language families from the Andaman Islands) were studied.

The study also looked for genetic variations based on caste — upper and lower caste — from two the States of Uttar Pradesh and Andhra Pradesh.


The study found the groups (seen today) that emerged from the two ancient populations have distinct genetic affinity. “The populations (groups) that emerged from ANI show 40-80 per cent genetic affinity to European population.
இந்த ஆராய்ச்சியின்படி இன்றைய அந்த மக்களின் மரபணு சோதனையில் அவ்விரு குழுக்களும் தனித்தனி மரபணுக்களோடு இருக்கிறார்கள். “வடக்கிந்திய தொல் மக்களின் மரபணு 40-80 விழுக்காடு வரை ஐரோப்பிய மக்களின் மரபணுக்களோடு தொடர்பு கொண்டுள்ளன”.

“But the populations that emerged from ASI don’t show any affinity to any population outside India,”
said Dr. Kumarasamy Thangaraj,
Senior Scientist at CCMB, and one of the authors of the paper. “The Hyshi and Ao Nage population from north-east India show genetic affinity to the Chinese.”
”ஆனால் தென்னிந்திய தொல்மக்களின் மரபணு இந்தியாவை விட்டு வெளியே இருக்கும் எந்த மக்களின் மரபணுத் தொடர்பின்றி (அந்தமான் மக்களைத் தவிர) இருக்கிறார்கள் என ஆராய்ச்சி செய்த முனைவர்; குமாரசாமி தங்கராஜ் …

The indigenous population seen in the Andamans have more affinity to the ASI. “Otherwise, they have no relationship with any other population anywhere in the world,” said Dr. Thangaraj.

Unlike the European and Chinese population, the Indian population are more scattered in a genetic sense.

Medical implications

While consanguinity is often implicated for many recessive gene disorders in a population, this study found that the “shared descent from a common ancestral population plays a bigger role. This is called as the ‘founder effect.’

Founder effect is nothing but the fact that many groups seen today have descended from a small group of founding individuals, and these founding individuals in turn have been isolated from other groups, genetically speaking.

It is based on this fact that the authors state that the founder effect plays a bigger role. “We propose that the founder effect is responsible for an even higher burden of recessive diseases in India than consanguinity,” the paper states.

Dr. Thangaraj explained the significance of this. A disease can occur due to the presence of a recessive gene due to mutation. In a small population with high endogamy [where people marry within the population], the mutation persists and spreads to more number of people.

After a point of time, a large number of people have the recessive gene and this increases the chance of a child receiving a recessive gene from both the parents and thus becoming diseased.


Existence of caste

Contrary to popular perception by historians that the caste system seen today is an invention of colonialism, the study found scientific evidence to show that “many current distinctions among groups are ancient.”


“The caste system is not recent,” said Dr. Thangaraj. “The social stratification existed right from early human divergence, some 50,000-60,000 years ago when initial settlement happened in India.”

முனைவர் தங்கராஜ், நம் ஜாதியக் கட்டுப்பாடுகள் புதிதாகத் தோன்றிய ஒரு விஷயமல்ல; அந்தப் படிக்கட்டு அமைப்புகள் மனித பரிணாமத்தின் ஆரம்பத்திலிருந்தே – 50,000 – 60,000 ஆண்டுகளுக்கு முன்பே – இந்தியாவில் மனித வர்க்கம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வந்துள்ளது.

The paper adds a word of caution: “Models in population genetics should be treated with caution. Although they provide an important framework for testing historical hypotheses, they are oversimplifications.”

© Copyright 2000 - 2009 The Hindu

---------------------


NATURE JOURNAL-ல் இக்கட்டுரை வந்துள்ளது.


*


*

Tuesday, September 22, 2009

Monday, September 21, 2009

339. கடவுள் என்றொரு மாயை ... 9

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*




கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter 7.

THE ‘GOOD’ BOOK AND THE CHANGING MORAL ZEITGEIST.

உலகத்தில் அரசியல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது; ஆனால் மதங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது. – Sean O’Casey

*

வேதப் புத்தகங்கள் இரு வழியில் நமக்கு நன்னெறி காட்ட முடியும். ஒன்று நேரடியான வழிகாட்டுதல்களால். இன்னொன்று கடவுளே நமக்கு ஒரு வழிகாட்டியாய் இருந்தும் வழிகாட்ட முடியும்.

*
9 நூற்றாண்டுகளாய் பலரால் எழுதப்பட்ட, திரிக்கப்பட்ட, தொடர்பற்ற நூலே பைபிள். (268)

*
bishop John Shelby Spong தான் எழுதிய The Sins of Scripture-ல் சொல்லியபடி தங்களுடைய வாழ்வின் நெறிகளை பைபிள் மூலமாக நடத்த நினைப்பவர்கள் ஒன்று முழுமையாக பைபிளைப் படித்திருக்க மாட்டார்கள்; அல்லது அதனை முழுவதுமாகப் புரிந்திருக்க மாட்டார்கள். (269)

*
கடவுள் மிகவும் மலிந்த ஒரு பார்வையை மனிதர்கள் மேல் வைத்திருந்தார் போலும். ஒரே ஒரு குடும்பத்தை – நோவாவின் குடும்பத்தை மட்டும் – காக்க நினைத்து, மற்ற பாவப்பட்ட மக்கள் எல்லோரையும், குழந்தைகளையும் அதோடு எந்தப் பாவமும் பண்ணாத மிருகங்களையும் சேர்த்து கூண்டோடு ஒழிக்கிறார். இதெல்லாமே 'சின்னப் பிள்ளைகள் கதை போல் இருக்கிறதல்லவா?)

*
தனி மனிதனின் ஒழுக்கங்கள் கூட கடவுளை மிகவும் பாதிக்கும் போலும். ஒரு தெய்வீகக் கடவுள், இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தைப் படைத்த அந்தக் கடவுள், ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்தின் மீது இவ்வளவு பெரிய அக்கறை கொள்ள வேண்டுமா? (270)

*
நோவாவைப் போலவே ஆபிரஹாமின் மருமகன் லோத் குடும்பத்தைக் காப்பாற்ற இரு ஆண் தேவதூதர்களை (angels; அதுசரி! ஆப்ரஹாமிய மதங்களில் தேவதைகளே கிடையாதோ? gender bias ... ?) அனுப்பி வைக்கிறார். ஆனால் லோத்தின் ஊர்க்காரர்களுக்கு அந்த தேவதூதர்களை 'know' செய்ய வேண்டுமென்று ஆவல். இதில் know என்பது அந்த 'ஆண்களைப் புணர்வதற்கு' என்ற கருத்தில்தான் வந்துள்ளது. Genesis19:5) ஆப்ரஹாமிய வேத நூல்களில் விஷயம் இப்படி இருக்க AIDS-க்கு எதிராக கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துங்கள் என்றாலோ, gay marriages போன்றவற்றிற்கோ இந்த மூன்று மதத்தினரும் 'கொடி பிடிப்பது' கொஞ்சம் வேடிக்கைதான்!

ஆனால் மிகவும் 'புத்திசாலித்தனமாக' அந்த தேவதூதர்களைக் காப்பாற்ற ஆண்களையே அறியாத தன் இரு மகள்களையும் அவர்களிடம் 'பண்டமாற்று' செய்துவிடுகிறார்.(Genesis 19:7-8)நல்ல வேளையாக அந்த தேவதூதர்கள் தங்களைப் பிடிக்க வந்த கிராமத்துக்காரர்களை குருடாக்கி விடுகின்றனர். அதோடு லோத்தை அந்த ஊரை விட்டு தன் கால்நடை, குடும்பத்தாரோடு தப்பி ஓடவைக்கின்றனர்; அதிலும் அந்தப் பாவப்பட்ட லோத்தின் மனைவி தப்பி ஓடும்போது பின்னால் நடந்த அழிவுக்காட்சியைக் காண திரும்பிப் பார்த்ததால் - மற்றவர்களின் குற்றங்களோடு ஒப்பிடும்போது, மிகச்சின்ன தவறு செய்திருந்தாலும் - சிலையாகி விடுகிறாள்.

கதை மேலும் தொடர்கிறது. மனைவியை இழந்த லோத் தன் மகள்களோடு ஒரு குகையில் தங்கியுள்ளான். ஆண்களைக் காணாத மகள்கள் இருவரும் தன் தந்தைக்கு மது வெறியேற்றி அவரோடு இருவரும் புணர்கிறார்கள்; கர்ப்பமடையவும் செய்கிறார்கள். (Genesis 19: 31-36)
//If this dysfunctional family was the best Sodom had to offer by way of moral, some might begin to feel a certain sympathy with God and his judicial brimstone.// இப்படித்தான் தங்கள் குடும்பங்களை சோடோம்காரர்கள் உருவாக்க வேண்டுமென கடவுள் நினைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நியாயத்தீர்ப்புகளால் அந்தக்கடவுளைப் பார்க்க நமக்கு பாவமாகத் தான் தோன்றுகிறது.

இதுபோல் இன்னொரு கதையும் உண்டு. (Judges 19:23-24; 19:25-26)லெவித்தியர் என்ற ஒரு குரு தன் மகளோடும் தன் வைப்பாட்டியோடும் அடுத்த ஊருக்குச் செல்லும்போதும், ஊர்க்காரர்கள் முன் கதை போலவே தேவதூதர்களைத் தேடி வருகிறார்கள். லெவித் முன் கதை போலவே தன் மகள், வைப்பாட்டி இருவரையும் - //.. humble ye them, and do with them what seemeth good unto you; but unto this man do not so vile a thing'// (Judges 19: 23-24) அடக் கடவுளே!

*
மேலே சொன்ன லோத்தின் மாமா தான் ஆபிரஹாம்/இப்ராஹீம்; யூதம், கிறித்துவம், இஸ்லாம் என்ற மூன்று 'ஒரே கடவுள்' மதங்களுக்கும் இவரே ஆரம்பம். அப்படிப்பட்டவர் எப்படி மனிதர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? பஞ்சம் பிழைக்க தன் மனைவி சாராவுடன் எகிப்த்துக்குச் செல்கிறார். அங்கே உள்ளவர்களின் கண்கள் தன் மனைவிமேல் பட்டுவிடுமே என்றெண்ணி அவளைத் தன் சகோதரி என்று சொல்லிக் கூட்டிப் போகிறார். அங்கே ராஜாவின் கண்ணில் பட, அவர் சாராவைத் தன் அந்தப்புரத்தில் சேர்த்துக் கொள்கிறார். ஆபிரஹாமும் எக்கச்சக்கமான பணக்காரராக ஆகிவிடுகிறார். இதைப் பார்த்த கடவுளுக்குக் கோபம் வந்துவிடுகிறது -ஆனால் மன்னன் மேல் மட்டும்தான்; ஆபிரஹாமின் மேல் அல்ல! அந்தக் கோபத்தில் மன்னனின் குடும்பத்தின் மீது ப்ளேக் நோயைப் பரப்பி விடுகிறார் கடவுள். மன்னனுக்கும் சாரா யார் என்பது தெரிந்து விடுகிறது. ஆபிரஹாமையும் சாராவையும் எகிப்தை விட்டே விரட்டி விடுகிறார். (Genesis 12: 18-19)

ஆப்ரஹாம் இதோடு விடுவாரா என்ன? அடுத்த நாட்டுக்கு செல்கிறார். அங்கும் - Abimelech, the King of Gerar - ஆபிரஹாம் தன் பழைய கதையை எடுத்து விடுகிறார். (Genesis 20; 2-5)அந்த மன்னனும் சாராவைத் திருமணம் செய்து, மீண்டும் அரசர் புரிந்து விரட்டி விட ... கதை இப்படியே போகிறது. (இந்தக் கதையை எல்லாம் படித்துவிட்டு எப்படித்தான் தங்கள் பிள்ளைகளுக்கு மக்கள் ஆபிரஹாம்/இப்றாஹீம், சாரா போன்ற பெயர்களை வைக்கிறார்களோ?!)

*

தொடரும் ஆபிரஹாமின் கதையில் வரும் இன்னுமொரு நிகழ்வு இதுவரை நடந்ததையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாயுள்ளது. கடவுளுக்கு திடீரென ஒரு ஆசை. ஆபிரஹாமிடம் உன் மகனை எனக்கு பலியிடு என்கிறார். ஆபிரஹாமும் ஐசக் (கிறித்துவக் கதை), / இஸ்மாயில் (இஸ்லாமியக் கதை) என்ற தன் மகனைப் பலியிடத் தயாராகிறார். ஆனால் கடைசி வினாடியில் கடவுள் மனமிறங்கி விடுகிறார்! God was only joking after all, 'tempting' Abraham and testing his faith !!!!!! இப்போதைய காலத்தில் உள்ளவர் எப்படி இது அந்தக் குழந்தையைப் பாதிக்கும் என்று யோசிப்பார். ந்யூரம்பர்க் (Nuremberg)வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 'நான் எனக்கிட்ட் ஆணையை மட்டும் நிறைவேற்றினேன்' என்று சொல்வதுபோல்தான் இது உள்ளது. மூன்று ஒரு-கடவுள்-மதங்களின் அடிப்படைக் கருத்து இப்படியுள்ளது!

*
நாம் நமது ஒழுக்கங்களை நமது வேத நூல்களிலிருந்து பெற முடியாதென்பதற்காகவே இந்தக் கதைகளை இங்கே கொடுத்துள்ளேன்.

*
இன்னொரு கதை. (Judges chapter 11) இது Jephthah என்ற மன்னன் Ammonites என்ற தன் விரோதிகளோடு போரிடப் போகும்போது கடவுளிடம் வேண்டுகிறான். தான் வெற்றி பெற்று விட்டால் தன் கோட்டைக்குப் போகும்போது யார் முதலில் வெளிவந்து தன்னை வரவேற்கிறார்களோ அவர்களைச் சமைத்து உணவாக்கித் தருகிறேன் என்று வாக்குத் தருகிறான். வெற்றி பெற்று வரும்போது அவனது ஒரே மகள் எதிர் வருகிறாள். அவனும் அவளை சமைத்துக் கடவுளுக்குப் படைக்கிறான். ஏனோ இந்த தடவை கடவுள் வந்து Jephthah மன்னனது மகளைக் காக்கவில்லை!

*
பிற கடவுள்களை வணங்கும்போது இந்த ஆபிரஹாமியக் கடவுளுக்கு வரும் கோபம் மனிதர்களுக்கு வரும் பாலியல் பொறாமை, கோபம் மாதிரியே உள்ளது.

*
மோசஸ்/ மூஸா கடவுளைச் சினாய் மலையில் 'பார்க்க'ச் சென்ற போது அவரது மக்களான இஸ்ரவேலர்கள் அடுத்த கடவுளைக் கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். பத்துக் கட்டளைகளை எடுத்துவரும் மோசஸுக்குக் கோபத்தில் அந்தக் கட்டளைகளைக் கோபத்தில் கீழே போட்டு விடுகிறார். (ஆனாலும் கடவுள் அதை replace செய்துவிடுகிறார்!) இதற்குப் பிறகு கடவுள் அந்த மக்களுக்குப் பெரும் தண்டனை தருகிறார். மூவாயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட, மீதி மக்களுக்கு ப்ளேக் நோய் வருகிறது. கடவுள் என்ன வைரஸ் அனுப்பினாரோ தெரியவில்லை - சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், கோழிக்காய்ச்சல் ...ம்ம் ..ம் .. ???

*

மோசஸ் Midianites என்பவர்கள் மேல் படையெடுக்கும்படி கடவுள் ஆணையிடுகிறார். போர் முடிந்த பிறகு மோசஸ் தன் படையாட்கள் எதிரிகளின் குழந்தைகளையும், பெண்களையும் அழிக்காமல் விட்டிருப்பதைப் பார்த்து மிகுந்த கோபமடைந்து, எல்லா ஆண் குழந்தைகளைக் கொல்லவும், திருமணமான பெண்களைக் கொல்லவும், கல்யாணமாகாத பெண்களை அவரது வீரர்கள் அனுபவிக்கவும் கட்டளையிடுகிறார். (Numbers 31:18) இந்த மோசஸ் நமக்கு வழிகாட்டும் தூதரா?

*
அடுத்த கடவுளை வணங்குவதால் ஆபிரஹாமியக் கடவுளுக்கு வரும் கோபம் பற்றி பழைய ஏற்பாட்டில் மீண்டும் மீண்டும் வருகிறது.

*

பால் (Baal) என்ற 'எதிர்க்கடவுளை' வணங்கும் மக்களை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட மோசஸுக்கு ஆபிரஹாமியக் கடவுள் ஆணையிடுகிறார். (Numbers 25)

*

தாலிபான் அல்லது அமெரிக்க கிறித்துவ அடிப்படைவாதிகள் தவிர வேறு யாரும் இப்படி இந்த தேவ நூல்களில் சொல்லப்படும் நீதிகளை மேற்கொள்வதில்லை.

*

உங்கள் பிள்ளைகளை இது போன்ற நீதிகளைப் பழகிக்கொள்ளுங்கள் என்று சொல்லி இப்புத்தகங்களை நாம் அவர்களிடம் தருவோமா?

*
பழைய ஏற்பாட்டில் பல குற்றங்களுக்கு மரணமே தண்டனையாகச் சொல்லப்பட்டுள்ளது. (Where is that AMNESTY INTERNATIONAL??!) ஆனால் அதையெல்லாம் விடவும் (sabbath) ஓய்வு நாளன்று வேலை செய்பவர்களுக்கும் அதே கொலைத்தண்டனைதான். (Numbers 15)

*
ஒருவேளை புதிய ஏற்பாடு பரவாயில்லையோ?

ஏசு ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பது போல் பேசியதும், ஓய்வு நாள் பற்றிக் கூறியதும் பழைய ஏற்பாட்டிலிருந்து மிகவும் மாறுபட்டதுதான். ஆனாலும் அவர் குடும்ப உறவுகளைப் பற்றிக் கூறியது மிகவும் கடுமையானது. எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறுத்து ஒதுக்கி விட்டு தன்னிடம் வரும்படி தன் சீடர்களுக்கு உத்தரவிட்டார்.

*

Christian focus is overwhelmingly on sin sin sin sin sin sin sin.

*
ஜோஷுவா தங்களுக்குக் கடவுளால் அளிக்கப்பட்ட Promised Land-யை வெற்றி பெற்ற கதையை வைத்து குழந்தைகளுக்கு ஒரு தேர்வு வைக்கப்பட்டது. அந்தக் கதையே அப்படியே சொல்லி குழந்தைகளை ஓட்டு போட வைத்தார்கள். அதன்பின் இன்னொரு குழந்தை குழுவிடம் கதைப் பெயர்களை, நாட்டினை மாற்றி வைத்து கதைசொல்லி ஓட்டிடச் சொன்னார்கள். நிஜக்கதைக்கு ஜோஷுவாவிற்கு ஓட்டு. ஆனால் மாற்றிச் சொன்ன கதைக்கு மாற்றிய ஓட்டு.
முதல் கதையில் ஜோஷுவாவின் காட்டுமிராண்டித்தனத்துக்கும், மாறிய கதையில் நியாயமானவைகளுக்கு ஓட்டும் என பிரிந்தன.

*
நமது நாட்டில் நடந்த மதப்பிரச்சனைகள் பற்றி சல்மான் ரஷ்தி தன் கட்டுரை ஒன்றில் எழுதியது:
What is there to respect in any of this, or in any of the crimes now being committed almost daily around the world in religion’s dreaded name? How well, with what fatal results, religion erects totems, and how willing we are to kill for them! And when we’ve done it often enough, the deadening of affect the results makes it easier to do it again.

So Indian’s problem turns out to be the world’s problem,. What happened in India has happened in God’s name.

The problem’s name is God.

*
மதங்கள் தவறு ஏதும் நேரடியாகச் செய்யாவிட்டாலும், அவைகள் தனிக் குழுமங்களை ஏற்படுத்தி அவைகள் ஒரு தீமைகளை உருவாக்கும் அமைப்பாகின்றன.

*
ஆபிரஹாம் ஐசக்கைப் பலியிட்டிருந்தால் இன்றைய நிலையில் அவர் மீது முதல்தர கொலைக்குற்றமல்லவா சாட்டப்பட்டிருக்க வேண்டும்.

*
கடவுள் மறுப்பு யாரையும் கெடுதல் செய்ய தூண்டுகிறது என்பதற்கு எவ்வித சிறு ஆதாரம்கூட கிடையாது.

*
கடவுள் பெயரைச் சொல்லி யுத்தங்கள் நடந்துள்ளன. ஆனால் கடவுள் மறுப்பை வைத்து எந்த யுத்தமும் வந்ததில்லை.

*

*

*