Thursday, July 07, 2005

26. வருத்தமும்...வரவேற்பும்

சிலர் திடீரென்று பதிவுகளிலிருந்து விலகுவது கஷ்டமாக இருக்கிறது. மொத்தமே நாம் 624 என்று தமிழ்மணம் கூறுகிறது. 624 பேர் இருக்கும் நம் உலகத்தில் 624 அல்லது அதுக்கும் மேலே கருத்துக்கள் இருக்கட்டுமே, என்ன கெட்டுப்போகப்போகிறது. அவரவர் கருத்து அவரவர்க்கு என்று இருந்துவிட்டுப் போகட்டுமே.

வேறு எதற்காக என்று இல்லாவிட்டாலும், இந்த 'தமிழ்மணத்'திற்காக தங்கள் திறமை, நேரம், பணம் (வெறும் பிட்சா வாங்கும் அளவான காசாகவே இருந்தாலும்) இவற்றை செலவழித்த நல்ல மனங்களுக்காகவாவது நாம் இந்த 'உலகத்தை'க் மேலும் மேலும் கட்டிக் காத்துவரவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். போனவர்கள்கூட -even to maintain a low profile, if they feel and want it so - திரும்பி 'தாய்க்கழக'த்திற்கு நம் கழகக்கண்மணிகளாய் வரவேண்டும். Please...

9 comments:

enRenRum-anbudan.BALA said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது, தருமி !
என்ன செய்யறது ? சூழல் அவ்வளவு மோசமாகிக் கொண்டிருக்கிறது, ஆபாசம் மற்றும் வெறி கொண்ட எழுத்துக்களால் !!!
//திரும்பி 'தாய்க்கழக'த்திற்கு நம் கழகக்கண்மணிகளாய் வரவேண்டும். Please
//
வந்தால் மிக்க மகிழ்ச்சி தான், அனைவருக்கும்.
என்றென்றும் அன்புடன்
பாலா

Anonymous said...

அட! இன்னசண்ட் தருமி பையா. வேலியில போற ஓணானை மடியில விட்டுறுக்கியே. தமிழ்மணத்தில் நடக்கும் அத்தனை ஆபாசத்துக்கும் மூர்த்தி தான். வலைப்பதிவில் போய் வேறு வெத்தலை பாக்கு வைத்து அழைத்திருக்கிறீர்கள். இப்ப பாருங்க எங்க அடிச்ச எங்க வெடிக்கும்னு பாருங்க. இவரின் பலியாடுகளாக சில பதிவில் டோண்டு, எல்.எல்.தாஸ், அல்வாசிட்டி விஜய், குழலி, மாயவரத்தான் ஆகிய பெயர்களில் ஆபாச பின்னூட்டமிடுவான். நல்ல பையன் போல பதிலளிப்பான். பார்த்துக் கொண்டே இருங்கள் கொஞ்ச நேரத்துக்கு./

Anonymous said...

Dear Moorthi sir,

//மொத்தம் 624 என்றாலும் அதில் உற்சாகமாக நல்ல கருத்துக்களால் மணம் வீசியவர்கள் எண்ணிக்கை குறைவே//

நல்ல கருத்துக்கள் வீசிய அந்த குறைய எண்ணிக்கையில் தாங்களின் பதிவும் ஒன்றல்லவா? சரிதானே.

//இப்போது ஏற்பட்டுள்ள போர்மேகச் சூழ்நிலைகளால் சிற்சில சுணக்கங்கள் என்பது உண்மையே. //

யார் யாருக்கு போர் என்று சொல்ல முடியுமா? எங்கப்பன் குதிருக்குள் இல்லை பதில் உங்களை தான் சந்தேகம் கொள்ள வைக்கின்றன. உங்களுக்கு தான் போரா? எதிரணியில் யார் யார் என பட்டியலிட முடியுமா?

பாரா? வெங்கடேஷ்? டோண்டு? இரா.முருகன்? மதி? தாஸ்? மாயவரத்தான்? விஜய்? குழலி? இவர்களில் யார் உங்கள் எதிரணி விளக்கமுடியுமா? ஓ! அவர்கள் எல்லாம் பார்ப்பணரோ? எத்தனை நாளைக்கு இந்த பூச்சாண்டி.

வீ. எம் said...

தருமி, நீங்கள் சொல்வது சரி..
வருகிறார்களா பார்க்கலாம் !
வீ எம்

தருமி said...

பாலா, மூர்த்தி, வீ.எம். -
- நன்றி

சிங்கா - உங்களுக்கும் நன்றி. அதோடு இன்னும் இரண்டு விஷயம்.

1. மூர்த்தி உங்களுக்கு இவ்வளவு 'close' என்று எனக்குத் தெரியாது. அதற்காக அவர் என் "வீட்டு" விருந்தாளியாக வந்திருக்கும்போது உங்கள் நெருக்கத்தை இங்கு காண்பிப்பது சரியா? உங்கள் 'வீட்டிற்கு'க் கூட்டிச்சென்றோ, அவர் 'வீட்டிற்கு' நீங்கள் சென்றோ நெருக்கமாக இருப்பது பற்றி எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை; சரியா?

2. அது என்ன, என்னை 'பையா' என்று அழைத்துவிட்டீர்கள். அநேகமாக நம் வலையுலகத்தின் 'மூத்த குடிமகன்' நானாகத்தான் இருப்பேன். அது பற்றி எழுத நினைத்திருந்தேன்; முடிக்கி விட்டிருக்கிறீர்கள். சீக்கிரம் அது பற்றி எழுதுகிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள், தம்பி.

Anonymous said...

அட அம்பி. நோக்கெல்லாம் வயசு போறாது அம்பி. சொம்மா கெட.

Anonymous said...

அட அம்பி. நோக்கெல்லாம் வயசு போறாது அம்பி. சொம்மா கெட.

Saran said...

நண்பர்களே...

என்னுடைய பெயர் பல இடங்களில் தவறான நோக்கத்துடன் பின்னூட்டம் இடப்பட்டுள்ளது. அநாகரிகமாக எழுதப்பட்டுள்ளது எதுவும் எனது அல்ல. ஹேய்... அனாமதேயமெ... நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துகொண்டு உள்ளேன்... தேவை இல்லாமல் சீண்டாதெ... வாழ்கை மிக நீண்டது... போகவேண்டிய தூரம் நீண்டு உள்ளது... வலி தெரியாமல் இன்று நீ செய்யும் செயல்களுக்கு நாளை வலி எடுக்கும்...

என்றும் அன்புடன்

சிங்காசரன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment