சரி..சரி இந்த விடயத்தை இதோடு நான் விட்டுவிடுகிறேன்; அப்ப நீங்க....
Thursday, July 07, 2005
27. விடயம் பற்றிய விஷயம்
ஒரு விஷயம் நம் பதிவுலகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. நிறையபேர் 'விஷயம்' என்று எழுதுவதில்லை; 'விடயம்' என்றே எழுதுகிறார்கள். இந்த விடயத்தின் தாத்பரியம் அதாவது பொருள் எனக்குப் புலப்படவில்லை. இது தமிழ் ஆர்வத்தினால் வந்த விடயமா, அல்லது விடயத்திற்குச் சரியான தமிழ் சொல் கிடைக்காத விடயமா? விடயம் எதுவாக இருந்தாலும் ஒன்று அந்த வடமொழி எழுத்தோடேயே அந்த விடயத்தை எழுதிவிடலாமே; இல்லை 'சேதி' என்றோ வேறு சொல் கொண்டோ அந்த விடயத்தை எழுதலாமே. Somehow 'விடயம்' sounds so odd to me -தமிழும் இல்லாமல், வடமொழியாகவும் இல்லாமல்.
சரி..சரி இந்த விடயத்தை இதோடு நான் விட்டுவிடுகிறேன்; அப்ப நீங்க....
சரி..சரி இந்த விடயத்தை இதோடு நான் விட்டுவிடுகிறேன்; அப்ப நீங்க....
வகை:
பதிவர் வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நல்ல விஷயம்யோசிக்க வேண்டிய விஷயம்.நீங்கள் சொன்னால் விஷயம் இல்லாமல் இருக்காது.
விஷயம்...விடயம் பற்றி நான் முன்னமே சொன்னது இங்கே..
- ஞானபீடம். <<== இங்கே CLICK செய்ய வேண்டாமே.. please ;-)
நல்ல விடயம் தருமி!ஓ மன்னிக்கவும்,நல்ல விஷயம்.
நம்ம முத்து இந்த விஷயத்தை 'விதயம்'னு சொல்றார்!
சரி. அப்புறம் வேற என்ன விஷயம் தருமி?
என்றும் அன்புடன்,
துளசி.
காஞ்சி, ஞானபீடம், ஸ்ரீரங்கன்,துளசி - நன்றி.
ஞானபீடம் - நீங்கள் போகச்சொன்ன இடத்திற்கு போய் வந்தேன். என்ன பொருத்தம்...சந்தோஷம்!
தருமி, நீங்க அப்பவும் இதே குசும்புதானா? நானும் வந்த புதிசில அப்படித்தான் எழுதினேன், ஏன்னா நான் நிறைய மற்றவர்களின் பதிவுகள் படிக்கும் பொழுது அப்படித்தான் எழுதப்பட்டு இருந்தது. உடனே, எனக்கும் தமிழ் உணர்வு ரொம்ப பீரிட்டு கிளம்பி அப்படி எழுத ஆரம்பித்தேன். பிறகு, விசயமின்னு தாவிகிட்டேன்.
இங்க நீங்க போட்டுத் தாக்கியிருக்கீங்க :-)
Post a Comment