Monday, July 11, 2005

29. சுய பட்டமளிப்பு...

நெப்போலியன் தன் மகுடத்தைத் தன் கையாலேயே சூட்டிக்கொள்ள முடிவெடுத்து அதை நடத்தியும் காட்டியதாக வரலாறு. மீண்டும் ஒரு நெப்போலியன் நம் வலைத்தளத்தில்... இன்று, இங்கு, இப்போது.


இதுவரை யாருமே 1945-க்கு முன்பே பிறந்ததாக சொல்லாததாலும்,
யாம் பார்த்தவரையில் நம் கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் அப்படி இல்லாததாலும்,
எம் உள்ளுணர்வு கூறுவதாலும்,
என் அண்ணன் 45க்கு முந்தியவர் என்றும்,
அப்பா-அம்மா 45க்கு முந்தியவர்களென்றும்,
பல்வேறு முனைகளிலிருந்தும் எமக்குப் போட்டிக்கு ஆட்கள் கொண்டுவருவதற்குப் பலரும் முனனப்போடு இருப்பதாலும்,
காலம் மிகவும் கடந்து செல்வதாலும் -


யாம் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.


இதனால் இவ்வலைத்தளத்தில் உள்ள அனைவரும் அறிய வேண்டியது:
'தருமி'யாகிய யாம் இவ்வலைத்தளத்தின் "மூத்த குடிமகன்" என்ற பட்டத்தினை எமக்கு நாமே சூட்டிக்கொள்கிறோம். ஏனெனில், யாம் பிறந்தது : 23.12.1944



பி.கு. இதுவரை 45க்கு முந்தி பிறந்ததாகத் தம்மை இதுவரை அறிவித்துக்கொள்ளாதவர்கள் இனிமேலும் அப்படியே இருக்கக் கடவர்.


பிகுவிற்குப் பிகு: அடுத்ததாக முகத்திரையுடன் நுழைந்ததற்கான காரணத்தையும்கூறி, எமது முகத்திரையையும் களைவதாக - ஒரு நீண்ட கட்டுரை மூலமாக - திட்டம்.

12 comments:

துளசி கோபால் said...

நல்லா இருங்க மூத்த'குடி'மகனாரே!!!!

நீர் வாழ்க!
நின் கொற்றம், கொடி ( அப்படி ஒண்ணு இருந்தா) வாழ்க!!

என்றும் அன்புடன்,
துளசி.

தருமி said...

துளசி - மேற்கோள் குறியைத் தவராகத்தானே அப்படிப் போட்டிருக்கிறீர்கள்!!

துளசி கோபால் said...

அன்புள்ள தருமி,

தப்பா எடுத்துக்கிட்டீங்களா?

மன்னிச்சிடுங்க. ச்சும்மா ஒரு ஜோக்:-)

என்ன இருந்தாலும் நீங்க வயசுலே மூத்தவுங்க.
அப்படிச் செஞ்சிருக்கக்கூடாதுதானே!

என்றும் அன்புடன்,,
துளசி.

தருமி said...

:தப்பா எடுத்துக்கிட்டீங்களா?" - அய்யோ, நிச்சயமா இல்லீங்க; வயசாச்சுன்னா sense of humour போயிடுமா என்ன?

"மூத்தவுங்க.
அப்படிச் , செஞ்சிருக்கக்கூடாதுதானே!"
--அப்படின்னா, எப்படி ?,

துளசி கோபால் said...

நான் அப்படி 'குடி'ன்னு எழுதியிருக்கக்கூடாது ன்னு சொல்லவந்தேன்.

( ஒருவேளை உண்டோ? எதுன்னு கேட்டுறாதீங்க. அதுதான் அந்தக் 'குடி')

நாமக்கல் சிபி said...

//மூத்த'குடி'மகனாரே//

இதை நான் வழி மொழிகிறேன்!

நாமக்கல் சிபி said...

//( ஒருவேளை உண்டோ? எதுன்னு கேட்டுறாதீங்க. அதுதான் அந்தக் 'குடி')
//

அவங்க பாட்டுக்கு ஏதோ தவறுதலா மேற்கோள் குறி போட்டுட்டாங்க! விடாம அதைக் கேள்வி கேட்டு இப்ப இது தேவையா உங்களுக்கு!

நாமக்கல் சிபி said...

நாராயணா!

தருமி said...

துளசி
'அது' இல்லாமலா ..?

குமரன் (Kumaran) said...

அப்ப ஜீவி ஐயா தான் மூத்தகுடிமகனாரா?

தருமி said...

ஆமாம் குமரன்!
:(

இவரையும் 'பீட்' செய்ய இன்னும் மக்கள் வரணும்னு ஆசையா இருக்கு.

G.M Balasubramaniam said...


இப்படி புரியும்படியாக எழுதி இருந்ததைப் படிக்க வில்லை. என் கடிதத்தில் பதிவுலகில் மூத்தவரோ என்று பொருள் கொள்ளுங்கள்.வயதுப் படி பார்த்தால் என்னுடைய மூத்த பதிவர்களில் உங்களைச் சேர்க்காதது சரியே. நான் குறிப்பிட்டு இருந்த எல்லோரையும் விட நீர் இளையவர். புலவர் இராமானுசம் அவர்களும் ,சொ. ஞானசம்பந்தன் அவர்களும் எண்பதைத் தாண்டியவர்கள் போல் தோன்றுகிறது.டாக்டர்,கந்தசாமி கடுகு என்பவரைப் பற்றிக் கூறி இருந்தார். அவர் எல்லோருக்கும் மூத்தவராய் இருப்பார் போலிருக்கிறது. பலரும் அவர்கள் இருப்பிடத்தையோமுகவரியையோ பகிர்ந்து கொள்வது இல்லை. பெண்கள்தான் வயதைக் கூறமாட்டார்கள் என்று நினைத்தேன். பதிவுலகில் ஆண்களும் கூறுவதில்லை. ஒரு வேளை தேவை இல்லை என்று எண்ணி இருக்கலாம். கடிதத்துக்கு இவ்வளவு நீண்ட பதில் இருக்காது. சரியா..?பதிவுகளில் சந்திப்போம். நன்றி.

Post a Comment