Thursday, November 23, 2006

189. சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள்..

.
.

THE HINDU தேதி: 23.11.'06



நடந்து முடிந்த +2 தேர்வுகளின் மாவட்ட வாரியாக தேறியவர்களின் விழுக்காடுகள்.

சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள் .. சில கேள்விகள்...

* சென்னைக்கு ஐந்தாவது இடம்தான் - 84.6% மற்ற மாவட்டக்காரர்கள் மத்தியில் பொதுவாக
மாநிலத்தின் தலைநகர் என்பதால் சென்னையின் மாணவர்கள் முதல் இடம் வருமளவிற்கு
இருப்பார்கள் என்ற நினைப்பு பரவலாக உண்டு. ஆனால் முடிவுகள் அப்படி இல்லையே. ஏன்?
(சொல்லுங்க - யார் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது?)

* கன்யாகுமரி மாவட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாவட்டம் என்ற
பெயருடையது. பின் ஏன் இவ்வளவு குறைந்த விழுக்காடு? - 65.23% (சொல்லுங்க ஜோ!)

* நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகள் நல்ல மதிப்பெண்கள் பெருவதற்காகவே
மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அந்தப் பள்ளிகள் மட்டுமே அது
போல இருக்கும்போலும். 79.1%; 78.9% (அப்படித்தானே நாமக்கல் சிபி?)

* விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது - 87.8%;
அடுத்து, திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த
மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான். இல்லையா, சிவா?
மூன்றாவது இடம் தூத்துக்குடிக்கு -86.6%. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதுதான், இல்லையா
ஜி.ரா.?

இந்த 3 மாவட்டங்களுமே பொருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கிய மாவட்டங்கள்தான்.
அதிலும் முதலாக வந்துள்ள விருதுநகர் மாவட்டம் வரண்ட பகுதியாகவும், குழந்தை
உழைப்பாளிகள் நிறைந்த ஒரு பகுதியாகவே இதுவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால்
கல்வியில் உச்சத்தில்.. வாழ்த்துக்கள். (யாருங்க அந்த ஊர்க்காரங்க..வந்து அட்டெண்டன்ஸ்
கொடுத்துட்டு போங்க)

* இன்னும் சிலவும் உண்டு. இப்போதைக்கு இது போதும்...



*

*

59 comments:

G.Ragavan said...

// மூன்றாவது இடம் தூத்துக்குடிக்கு -86.6%. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதுதான், இல்லையா
ஜி.ரா.? //

இல்லையா பின்னே.... :-) உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் மற்றொரு விஷயம் இருக்கிறது தருமி. exposure. படிப்பதில் இவர்கள் சுட்டிகளாக இருந்தாலும்...அடுத்திருக்கும் பல வாய்ப்புகள் முறையாகத் தெரியாமையால்...சென்னை மதுரை திருச்சி கோவை மாணவர்கள் அடுத்த நிலையில் மிகவும் முன்னேறுகிறார்கள். அதுவும் உண்மைதான்.

இலவசக்கொத்தனார் said...

நெல்லைக்கு ஒரு ஓ!

G.Ragavan said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

சென்னையில் 40,000 க்கு மேல் மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளன்ர். அடுத்து வரும் கோவை ரொம்ப பின்னால் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மற்ற ஊர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த நிலையில் சதவீதக் கணக்கில் ஒப்பிடுதல் சரியான நிலையைத் தராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Doctor Bruno said...

//வரண்ட பகுதியாகவும், குழந்தை
உழைப்பாளிகள் நிறைந்த ஒரு பகுதியாகவே இதுவரை நான் பார்த்திருக்கிறேன். //

அப்படிபட்ட பகுதிகளில் 12ஆவது வகுப்பு எழுதும் குழந்தைகள் படிப்பில் மிகுந்த ஆர்வம் (வைராக்கியம் என்று கூட சொல்லலாம்) உள்ளவர்கள். படிப்பு வரவில்லை என்றால் உடனடியாக வேலைக்கு அனுப்ப படுவார்கள்.

நீங்கள் பார்ப்பது, எழுதியவர்களில் தேர்ச்சி பெற்ற விகிதம்தான். அதனால் தான் கன்னியகுமரி மாவட்டத்தில் தேர்ச்சி சதவிகிதம் குறைவாக உள்ளது.

For example, if there are 100 children in the age of 16

In KK District, 90 of them write 12th standard. Of which 60 get a pass

In Virudunagar, only 60 write 12th of which 55 get pass.

The above values are just examples. I have used the correct population figures later on

If you analyse the absolute number of students who have passed 12th standard and compare it with the total population of the district, you can understand.

What Virudunagar has achieved is the same thing as few "posh" schools who take only the "good students" (14000 out of the population of 1,751,301)

KK District is like Govt School taking in all students (21,000 out of population of 1,676,034)

Now come back to the figures

% of 12th Pass of the total population

KK District - 0.85 %
Virudunagar District - 0.69 %

- உடுக்கை முனியாண்டி said...

விருதுநகர் மாவட்டம் - உள்ளேன் அய்யா

எங்க மாவட்டத்த பத்தி ஒரு நல்ல விசயம் சொன்னதுக்கு நன்றிங்க.

இதுக்கு மாவட்டத்தில இருக்கற தனியார்(management) பள்ளிகளும் காரணமா இருக்கலாம்.

விருதுநகர் மாவட்டம் வறண்ட பகுதியான்னு கேட்டா எனக்கு பதில் தெரியலை. ஏன்னா விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், இராஜபாளையம் எல்லாம் விவசாயத்தில கொடி கட்டிப் பறக்கற ஊருங்க. என்னோட அறிவில அருப்புக்கோட்டைக்கு கிழக்க கொஞ்ச தூரம்(நரிக்குடி, திருச்சுழி) இராமநாதபுரத்தோட சொந்தக்காரங்க மட்டும் தான் வறட்சிய அனுபவிக்கறவங்க.

அதே மாதிரி குழந்தை தொழிலாளிகள் இப்ப எந்த அளவுக்கு இருக்காங்கன்றதும் ஒரு கேள்வி தான். மொத்தமா ஒழிஞ்சிருச்சின்னு சொல்ல மாட்டேன். ஆனா ரொம்பவே குறைஞ்சிருக்கு.

Anonymous said...

Yeh Dr. Bruno,

You stastics might be correct regarding KK dist.

Compare to other southern districts chances for education is more in KK dist. too many govt. schools as well as Govt. aided schools. (papulation desnsity is next to chennai).so poor can also do up to Hsc level.

Like Mr.G. Raghavan told exposoure is less compare to chennai, kovai, madurai , trichy. so, after studies many are prefering to go cities or gulf/singapore.

நெல்லை சிவா said...

ஆமாங்க. 'தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு' நெல்லைச் சீமை.

செய்தியை அறியச் செய்த உங்களுக்கு ஒரு ஜே!

ரவி said...

ஏன் உங்க பதிவு எனக்கு பெரிய பெரிய பாண்டுகளாக ஜெயண்ட் சைஸ்ல தெரியுதுன்னு தெரியல்லை...

வேற யாருக்காவது அப்படி இருக்காப்பா ?

தருமி said...

ஜிரா,
அந்த exposure சென்னை மாணவர்களுக்குக் கிடைப்பது மாதிரி மற்றவர்களுக்கும் கிடைத்தால் மற்ற மாவட்டங்கள், அதிலும் தென்மாவட்டங்கள் இன்னும் ஜொலிக்கும்.

தருமி said...

செந்தழல் ரவி,

சிலர் ஆனையையே அனுப்பி வைக்கிறாங்க; நம்மளால அதெல்லாம் முடியாதுன்றதுனால இப்படி ஒரு ஏற்பாடு. அதோடு இப்படி அனுப்பிச்சாலாவது மக்கள் கண்ல பட்டு நம்ம பதிவை வாசிச்சிற மாட்டங்களான்னு ஒரு நம்பிக்கைதான் :)

jokes apart (ஓ! அப்டின்னா இதெல்லாம் ஒரு ஜோக்கான்னு கேக்கப் படாது, ப்ளீஸ்!) இதுவரை இந்த புகார் வந்ததில்லையே, ரவி.

தருமி said...

கொத்ஸ்,
எப்படி உங்கள வரவச்சாச்சு பாத்தீங்களா?!

வந்த உங்களுக்கும் ஒரு 'ஓ'!

தருமி said...

டோண்டு, Dr. ப்ரூனோ,

முதலில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம். எனக்கு statistics எதுவும் தெரியாது.

டோண்டு,
முடிவுகள் விகிதாச்சாரத்தில்தானே இருக்கிறது. அப்படியானால் தேர்வெழுதிய மொத்த நபர்களின் எண்ணிக்கையை பொருத்திப் பார்க்கக் கூடாதல்லவா?

?

நாடோடி said...

சார் எனக்கு விருதுநகருக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட ஊர்தான். நான் 12 வருசத்துக்கு முன்னாடியே அங்க இருந்த போது +2வுல ஒரு வருசத்துக்கு 4,5 டியுசன் படிக்கிற வழக்கம் இருந்துச்சு.
நான் கிட்டதட்ட +1,+2 சேர்த்து 10 டியுசன்(+2 பாடத்த +1லேயே).

அங்க உள்ள மக்களிடம் அவ்வளவாக படிப்பறிவு இல்லைவே தவிர +2 என்பது ஒரு முக்கியமான கட்டம்முனு எல்லோருக்கும் தெரியும். அதுவும் இல்லாம பொழுது போக்கு அம்சங்கள் அவ்வளவாக கிடையாது. இப்போது எப்படி என்று தெரியவில்லை. நான் சென்னையில் இருந்த போது முக்குக்கு முக்கு play sation வச்ச பிரவுசிங் சென்டர்கள் உண்டு. அங்கு அரசு பள்ளிகளிலிருந்து விளையாடுபவர்களை அதிகம் பார்த்திருக்கிறேன்(பக்கத்தில் அரசு பள்ளி இருந்ததால்).குழந்தைகள் கெட்டு போவதற்கு அதிகமான வசதிகள் நகரங்களில் இருக்கிறது.

குழந்தை தொழிலாளர்கள்.
தீப்பட்டி தெரியுமா?..
நீங்க பத்தவக்கிற ஒவ்வொரு குச்சிக்கும் பின்னாடி இருக்கு.
இப்போதும் இருக்குது maybe குறைஞ்சிருக்கலாம்.

ஜோ/Joe said...

// கன்யாகுமரி மாவட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாவட்டம் என்ற
பெயருடையது. பின் ஏன் இவ்வளவு குறைந்த விழுக்காடு? - 65.23% (சொல்லுங்க ஜோ!)//

viruthunager 13,843
thirunelveli 23,314
kanyakumari 21,849

மேலேயுள்ளது தேர்வு எழுதியவர்கள் விபரம் .விருதுநகர் ,திருநெல்வேலி மாவட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை விட கிட்டத்தட்ட 3 மடங்கு பெரிய மாவட்டங்கள் .ஆனால் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை பார்த்தால் விருதுநகரைப் போல கிட்டத்தட்ட இரு மடங்காகவும் ,திருநெல்வேலிக்கு இணையாகவும் உள்ளது .இதிலிருந்து அந்த வயதில் தேர்வு எழுதியிருக்க வேண்டியவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் அதிகமான சதவீதம் பேர் எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் .அதாவது மற்ற மாவட்டங்களில் பத்தாவது வகுப்பில் தேறியவர்களில் நிறைய பேர் 12-வது வரைக்கும் படிக்கவில்லை .ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாவது தேறியவர்களில் 95% சதவீதத்துக்கு மேல் 12-வது வகுப்புக்கு வதிருக்கிறார்கள் .எனவே தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது இயல்பே .ஆனால் இந்த அளவுக்கு குறைவாக இருப்பது எனக்கு அதிர்ச்சியே.

Premalatha said...

1) 400 பேரு எழுதி 320 பேரு பாஸ் பண்ணினா 80%.

2) 40000 பேரு எழுதி 32000 பேரு பாஸ் பண்ணினா அதுவும் 80%.

1)-ல 320 பேருதான் பாஸ் பண்ணினாய்ங்க, 2-ல பாரு 32000பேரு, இது 100மடண்ட்கு பெரிய ரிஸல்ட்-னு சிலர் வாதாடலாம். 1-ல 80பேருதான் பெயிலானாய்ங்க, ஆனா பாரு 2-ல 8000 பேரு பெயிலானாய்ங்கன்னு சிலர் வாதாடாலாம்.
இத ஒரு முடிவுக்குக் கொண்டுவரத்தேன் statistics-னு ஒண்ணு கண்டுபிடிச்சாய்ங்க. அதுல சதவிகிதமுறை ரெம்பவே basic.
அதுகூட புரியலன்னா ரெம்பவே கஷ்டம்.


அடுத்து, எத்தன பேரு எந்த ஊர்ல எழுதுறாய்ங்கங்கிறத compare பண்றதுக்கு முன்னாடி அந்தந்த ஊரோட பரப்பளவு, ஜனத்தொகை அப்படின்னு ரெம்ப complicated(?!!!) ஆல்லாம் யோசிக்கணும்.

இன்னும் மேல போனா, preparationலாம் எந்த ஊர்ல எப்படி நடக்குது அதோட பெர்செண்டேஜ் என்னா... கொஞ்சம் அதிகமா பேசறேனோ?

ஜோ/Joe said...

தருமி,
பெரும்பாலான மாவட்டங்களில் கிராமப்புறங்களில் பிள்ளைகளின் அல்லது பெற்றோரின் அக்கறையைப் பொறுத்து ,ஓரளவாவது படிப்பு வரவில்லையெனில் நிறுத்திவிடுவார்கள் .ஆனால் குமரி மாவட்டத்தில் பள்ளிப்படிப்பதையாவது முடிப்பது என்பது default என்ற நிலையிருக்கிறது .நன்றாக படிக்கிறானோ இல்லியோ பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது மிக அதிகம் .அது போல பள்ளி வசதியில்லாத கிராமத்தை காண்பது மிக அரிது.

தருமி said...

செந்தழல் ரவி,
அதுபோன்று மொக்கை மொக்கையாக வரும்போது refresh-யை ஒரு முறை அமுக்கிப் பாருங்களேன்.

தருமி said...

ப்ரூனோ,

//If you analyse the absolute number of students who have passed 12th standard and compare it with the total population of the district, you can understand.//
இதில் நீங்கள் சொல்வது போல் total population of the district-யை எப்படி எடுக்கலாம். அதில் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதியவர்களை மட்டும்தானே பார்க்க வேண்டும். If there is a discrepancy in the no.students in relation to popn. it could be due to so many socio-economic factors. ஆனால் நாம் பார்ப்பது / பார்க்க வேண்டியது - எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள்; அதில் எத்தனை விழுக்காடு தேர்வானார்கள் என்பதே; இல்லையா?

விருதுநகரில் 14000 out of the population of 1,751,301 என்றால் ஆயிரத்தில் 8 பேரும், கன்யாகுமரியில் 21,000 out of population of 1,676,034என்றால் ஆயிரத்தில் 12 பேரும் +2 எழுதினார்கள் என்றும் தெரிகிறது. நான் சொன்ன படி literary dt. என்ற பெயர் க.குமரிக்குப் பொருந்தி வருகிறது. அப்படி எழுதியவர்களில் கிடைத்த விழுக்காடு வி.க்கு 87.8 , க.குமரிக்கு 65.2 .

ஆக அதிகம்பேர் படிக்கிறார்கள் என்ற பெருமை க.குமரிக்குப் போனாலும், எழுதியவர்களில் அதிகமாக தேர்ச்சி பெற்றவர்கள் என்ற பெருமை வி.நகருக்குத்தான் என்பதே சரி. அதோடு நான் சொன்ன சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளே வி. நகரின் குறைந்த மாணவ எண்ணிக்கைக்குக் காரணமாக இருக்க வேண்டும். நாடோடி அதைத்தான் கூறியுள்ளார் என்றும் நினைக்கிறேன்.

Premalatha said...

Dr. Bruno,


do you not have to consider per capita income?

தருமி said...

நாடோடி,
//குழந்தை தொழிலாளர்கள்.
தீப்பட்டி தெரியுமா?..
நீங்க பத்தவக்கிற ஒவ்வொரு குச்சிக்கும் பின்னாடி இருக்கு.//

எல்லோருக்கும் தெரிந்த சோகம்தான் அது. அதனால்தான் என் ஆச்சரியம் அதிகமானது.

தருமி said...

நெல்லை சிவா,

என்ன பாளையன்கோட்டைக்கு மட்டுமில்லா அந்தப் பேரு. மாத்தி சொல்லுதியளே..!

Premalatha said...

எப்பவுமே ப்ளாக்குகளில் கமெண்ட் போடாத, போடாத-ன்னு எம்பெடனில போடற என் கணவனின் கமெண்ட் (and he asked me to post it on behalf of him):


சதவிகிதம்கூட புரியலயா.. இப்பத்தெரியுது ஏன் தலைநகரத்தோட ரிசல்ட் பூவர்னு.

Gurusamy Thangavel said...

//திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த
மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான்.//

முற்றிலும் சரி.. ஹி..ஹி நமக்கு அந்த மாவட்டம்தான்.

//விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது - 87.8%;//
ஹி.. ஹி..எங்க பூர்வீக மாவட்டமாச்சே.

//மூன்றாவது இடம் தூத்துக்குடிக்கு//
ஹி.. ஹி.. முன்னர் திருநெல்வேலியோடு இருந்த பகுதியாச்சே.

ஆக மொத்தம் எல்லாமே முன்னர் திருநெல்வேலி மாவட்டமாக இருந்த பகுதிகள் தான் - இராமநாதபுர மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு. இப்போது அடைப்புக்குறிக்குள் உள்ள முதல் பகுதியை மீண்டும் படிக்கவும்.

தருமி said...

ஜோ,

//விருதுநகர் ,திருநெல்வேலி மாவட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை விட கிட்டத்தட்ட 3 மடங்கு பெரிய மாவட்டங்கள் //

இல்லை ஜோ

ஊர் மக்கள் மாணவர் %
தொகை

விரு 1751301 13843 87.8
திரு 2723988 23314 86.7
ககு 1676034 21849 65.2

ஆனாலும் நீங்கள் சொல்லும் - //குமரி மாவட்டத்தில் பள்ளிப்படிப்பதையாவது முடிப்பது என்பது default என்ற நிலையிருக்கிறது ..// - ஒரு நல்ல பாய்ண்ட்.

நாடோடி said...

சார் எங்க அம்மா வேலை பாக்கிற பள்ளிக்கூடம் ஒரு கிராமத்தில இருக்கு.

அங்க எப்படினா 6ல் தொடங்கி 10 வரதுக்குள்ள 1/3 படிப்ப நிறுத்திருப்பாங்க.
எப்படினு தெரியுமா?.
தீப்பட்டி தொழிற்சாலையில் அடிக்கடி ஏற்படுற சின்ன சின்ன விபத்திலாலதான் .ஆனா இது அவ்வளவா பொது ஜனங்க ஊடகத்து வாராது. ஏன்ன பாதிப்பு கைகால் ஊனமாத்தான் இருக்கும்.
அங்க படிக்குறவங்களுக்கு படிப்புன்றது பகுதி நேரம் தான்.தீப்பட்டிதான் முதல். காலையுலையும் சாயந்திரமும் பள்ளிகூட நேரம் தவிர இதைதான் பாத்தாகனும்.குழந்தை தொழிலாலர் முறையை பலவாறாக ஏமாற்றுவர். ஒரு உதாராணம்
8 வயது பெண்குழந்தைக்கு தாவணி போட்டு 13,14 வயது என்பார்கள்.

6 படிக்கிற பையன் 3வது படிக்கிற பொண்ணை திருமணம் பண்ணி பஸ்ஸுல எங்க அம்மாவை பாத்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குன நிகழ்ச்சிலாம் ஒரு 8,10 வருசத்துக்கு முன்னாடி நடந்தது.
இதையெல்லாம் தாண்டி அந்த பள்ளிக்கூடம்(அரசு பள்ளி) ஒரு வருடம் 10வதில் 100% result வாங்கினாங்க.

உண்மையில் பல பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை படிப்பதற்கு. கிடைத்தவர்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை.எல்லாம் கிடைத்தாலும் awareness இருப்பதில்லை. அதனால்தான் நன்றாக படித்தாலும் future planning என்பது நகரத்தைவிட பின்தங்கியே இருக்கிறது.

தருமி said...

ப்ரேமலதா,
என்ன, பொடனில போடுற உங்க ஆளுக்கு ஊரு விருது நகரா? :)

தருமி said...
This comment has been removed by a blog administrator.
Gurusamy Thangavel said...

//ஆக அதிகம்பேர் படிக்கிறார்கள் என்ற பெருமை க.குமரிக்குப் போனாலும், எழுதியவர்களில் அதிகமாக தேர்ச்சி பெற்றவர்கள் என்ற பெருமை வி.நகருக்குத்தான் என்பதே சரி. அதோடு நான் சொன்ன சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளே வி. நகரின் குறைந்த மாணவ எண்ணிக்கைக்குக் காரணமாக இருக்க வேண்டும்...//

முற்றிலும் சரி, டோண்டுவிற்கும், Dr. Bruno விற்கும் கணக்குப் பாடம் தெரியவில்லை. கோவிச்சுக்காதீங்க, சும்மா கிண்டலுக்குத்தான்.

Anonymous said...

இன்னும் பார்த்தீர்களேன்றால், கம்யுனிசம் மற்றும் நக்சலிசம் உள்ள மாவட்டங்களில் % கம்மியாக இருக்கிறது....

தென் மாவட்டங்களில் உழைப்பு அதிகம், அது சிரார் இடுபடும் தொழிலாகட்டும், படிப்பாகட்டும். அங்கு அரசியல் ஈடுபாடு சிறுவயதில் கம்மி.

தருமி said...

தங்கவேல்,
இதுவரைக்கும் இந்தப் பக்கமே வராதவிய நம்ம ஊரப்பத்தி பேசினதும் ஓடியாந்திட்டியளே..

என்ன ஊருப்பாசம்'யா நம்ம ஆளுவளுக்கு..

சரி..சரி,, தங்கவேலு,
அதெல்லாம் உடுங்க; நம்ம ஊர்க்காரவளூக்கெல்லாம் இந்தமாதிரி தற்பெரும பேசுறதுதான் பிடிக்காதே!

விடுங்க அத ஒருபக்கம்..

Gurusamy Thangavel said...

//தங்கவேல்,
இதுவரைக்கும் இந்தப் பக்கமே வராதவிய நம்ம ஊரப்பத்தி பேசினதும் ஓடியாந்திட்டியளே..//

என்ன தருமி சார், பின்னூட்டமிட்டம் இட்டால்தான் உங்க பதிவைப் படிக்கிறேன்னு அர்த்தமா? தொடர்ந்து உங்க பதிவைப் படிக்கிறோம்ல. என்ன இப்பதான் நான் பின்னூட்டமிடக்கூடிய லெவலுக்கு உங்க பதிவு உருப்படியாக இருக்கு.. ஹி!..ஹி! சும்மா தமாஷுக்கு.

//நம்ம ஊர்க்காரவளூக்கெல்லாம் இந்தமாதிரி தற்பெரும பேசுறதுதான் பிடிக்காதே!//

இது தற்பெருமை இல்லை சார். மண்ணின் மைந்தனின் சந்தோசம்.

Doctor Bruno said...

//இதில் நீங்கள் சொல்வது போல் total population of the district-யை எப்படி எடுக்கலாம். அதில் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதியவர்களை மட்டும்தானே பார்க்க வேண்டும். If there is a discrepancy in the no.students in relation to popn. it could be due to so many socio-economic factors. ஆனால் நாம் பார்ப்பது / பார்க்க வேண்டியது - எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள்; அதில் எத்தனை விழுக்காடு தேர்வானார்கள் என்பதே; இல்லையா?//

ஜோவின் பதில்

இதிலிருந்து அந்த வயதில் தேர்வு எழுதியிருக்க வேண்டியவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் அதிகமான சதவீதம் பேர் எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நாடோடி said...

சார் யாருக்காவது சென்னைல கோடம்பாக்கம்த்தில் இருக்கிற "அரசு உயர்நிலைபள்ளி" தெரியுமா?.

அதுக்கு பக்கத்திலதான் நான் தங்கி இருந்தேன். அந்த பிரவுஸின்ங் சென்டர்ல 1/2மணிநேரம் விளையாட 15ரூபாய் 2003ல். அங்கு நான் அதிகமாக பாத்தது அந்த அரசு பள்ளி மாணவர்களைதான்.அதுவும் அவர்கள் விளையாடுவது WWF.

அதுக்கப்பறம் காலையில 8.30 - 9.30 பஸ்ஸுல பயணம் செய்திருந்தீங்கனா அவங்க பண்ணுர வீர சாகச செயல்கள் தெரியும்.

பெற்றோர்கள் பொறுப்பின்மைதான் சார் காரணம் அல்லது இவர்கள் பெற்றோர்களின் கட்டுபாட்டை மீறிவிட்டனர். எத்தன பேர் பள்ளிகூடத்துக்கு வாராங்க என்பதில் இல்லை சார் கல்வி அறிவு. எத்தனை சிரத்தபட்டு,உண்மையாக அறிந்து படிக்கிறாங்க என்பதில்தான் இருக்கு.

Premalatha said...

தருமி,

குழந்தை தொழிலாளர் இருக்கிறாங்க - அப்படிங்கிற விபரம் எந்த அர்த்தத்தில உபயோகப் படுத்தப்படுகிறது இங்கே?

குழந்தை தொழிளாளர் அதிகம் இருப்பதால் அந்த இடங்களின் ரிசல்ட் ---?
சென்னையில் play station-l விளையாடுவதால் ----?

Doctor Bruno said...

Imagine that 100 students write 11th Exam and 80 of them pass

Now this 80 writes 12th and 64 passes in 12th giving 80 % result in 12th standard also

Now

Compare two schools, School A and School B

In both schools, 100 students appear for 11th Standard

School A admits students who score above 80 % in 11th
School B admits students all who have passed in 11th

That means

School A will have LESS number of students in 12th than School B

Say School A has 70 students
School B has 80 students

When the results come
School A would have scored 64/70
School B would have scored 64/80

Now you can see that even the result of school A is high because it did not take students who are likely to fail

The result of School B is low because it did took students who are likely to fail

Of course there are a lot of factors involved, but WE HAVE TO UNDERSTAND That this also is an important factor

That this factor has played a decisive role can be judged from the fact that the number of students who have appeared for exams

Between KK and Virudunagar, the percentage of boys and girls in the age group of 16 will be almost same

Yet more number (among the eligible ) appear in KK District

This invariably pulls down the pass percentage

Premalatha said...

//இதிலிருந்து அந்த வயதில் தேர்வு எழுதியிருக்க வேண்டியவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் அதிகமான சதவீதம் பேர் எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். //

நாஞ்சொல்லல?, சிலபேரு "எத்தன பேரு பாஸு"ன்னு மட்டுமே பேஸ்றாய்ங்க. சில்பேரு "எத்தனபேரு பெயிலு"ன்னு மட்டுமே பேஸ்றாய்ங்க.


என்ஸாய் தருமி அய்யா. உங்க பொடனில போடறதில்லயா உங்கூட்டம்மா? மருதைக்கு வந்தா உங்கூட்டம்மா கிட்ட தனியா பேசலாம்னு இருக்கேன். :D

ஜோ/Joe said...

//இல்லை ஜோ

ஊர் மக்கள் மாணவர் %
தொகை

விரு 1751301 13843 87.8
திரு 2723988 23314 86.7
ககு 1676034 21849 65.2//

பரப்பளவில் நான் சொன்னது சரியே .மக்கள் நெருக்கத்தில் குமரி முன்னுக்கு இருப்பதால் மக்கள் தொகையில் விருதுநகரை தொடுகிறது என்பதை அறியத்தந்தமைக்கு நன்றி.

ஆனால் ,விருது நகரில் 1751301 -ல் வெறும் தேர்வு எழுத குமரியில் 1676034 -ல் 21849 பேர் எழுதியிருக்கிறார்கள் .இது தான் நான் சொல்வது..குமரியில் தேர்வு எழுதுபவர் சதவீதம் அதிகம்..விருது நகரில் தோற்க வாய்ப்பிருக்கும் பலர் ஏற்கனவே பள்ளிக்கு போவதை நிறுத்திவிட்டார்கள் .குமரியில் அப்படி அல்ல.

ஜோ/Joe said...

//இதில் நீங்கள் சொல்வது போல் டொடல் பொபுலடிஒன் ஒf தெ டிச்ட்ரிcட்-யை எப்படி எடுக்கலாம். அதில் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதியவர்களை மட்டும்தானே பார்க்க வேண்டும்.//
கிராமங்களில் இருகிற சில சாதாரண பள்ளிகளில் அந்த ஊரிலுள்ள எல்லோரையும் சேர்த்துக்கொள்ளுவார்கள் .நீ மக்கு உனக்கு இடம் கிடையாதுண்ணுல்லாம் சொல்ல முடியாது .எல்லா திறனுள்ள பிள்ளைகளையும் சேர்த்து ,படிப்பே வராத பிள்ளைகளையும் முயற்சி செய்து தேர்ச்சி பெற வைப்பார்கள் .அதில் 80% தேர்ச்சி என்று வைத்துக்கொள்வோம் ..பக்கத்து நகரத்தில் பத்தாம் வகுப்பில் 400 மார்க்கு மேலே எடுத்தால் தான் பிளஸ் 2 -ல் இடம் என்பார்கள் .400 மார்க் எடுத்தவன் தன் சொந்த படிப்பிலேயே பாஸ் பண்ணி விட்யுவான் . நாங்க 100% ந்னு பீத்திக்க வேண்டியது .ஊரிலுள்ள மக்கு பசங்களை படிக்க வச்சு பாஸ் பண்ண வச்சா அது சாதனை..இங்க 80% பெருசா ? 100% பெருசா? நாங்க 100 பேருல 50 பேர் முயற்சி செய்து 40 பேர் வெற்றி பெற்றோம் .நீங்க 100 பேருல 80 பேர் எழுதி 60 பேர் தான் வெற்றி பெற்றிருக்கீங்க..அதனால நாங்க தான் % -ல அதிகம் ந்னு சொன்னா என்ன சொல்லுறது ? செந்தில் சொன்னது தான் ஞாபகம் வருது ..அண்ணே! நீங்க பத்தாம் கிளாஸ் பெயிலுண்ணே..நான் எட்டாம் கிளாஸ் பாஸுண்ணே! பாஸ் பெருசா ! பெயில் பெருசா!

- உடுக்கை முனியாண்டி said...

நாடோடி,

குழந்தைத் தொழிலாளி பத்தி நல்லாவே தெரியும். நானுமே தீப்பெட்டி ஆபிஸ்ல வேலை பாத்திருக்கேன். ஒரு குறிப்பிட்ட சமயத்தில நீங்க சொல்ற மாதிரி ஒவ்வொரு தீக்குச்சியும் எதோவொரு எடத்தில ஒரு குழந்தைத் தொழிலாளிய தொட்டு தான் வந்துச்சி.

ஆனா சில வருசங்களுக்கு(10 வருசம்?) முன்னாடி அரசாங்கத்தில இருந்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தை(மோசமான பணியிடங்கள் மட்டும்) தீவிரமா அமல் படுத்த ஆரம்பிச்சாங்க. இதுல அபராதத் தொகையெல்லாம் அதிகமாவும் நிலமையோட தன்மைக்கு ஏத்த மாதிரியும் இருந்ததால ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள கணிசமான அளவுக்கு குறைக்கப் பட்டிருச்சி. குறைஞ்ச பட்சம் பெரிய நடுத்தர ஆபிஸ்கள்லருந்து அவங்க விலக்கப்பட்டுட்டாங்க. இந்த சட்டத்தினால எங்களை மாதிரி ஆட்களெல்லாம் சந்தோசப் பட்டுக்கிட்டாலும் இதுக்கு மறுபக்கமும் இருக்கு. இதை மேலாண்மை பொன்னுச்சாமியோட உயிர்க்காற்றுன்ற தொகுதியில படிக்கலாம்.


ஊரை விட்டு தள்ளி வந்திட்டதால இப்ப என்ன நிலைமைன்னு சொல்ல முடியாது. ஆனா அடிக்கடி சொல்லப்படுற மாதிரி மோசமா இருக்குறதுக்கான வாய்ப்புகள் கம்மின்னு நிச்சயமா சொல்ல முடியும்

நாடோடி said...

//ஆனா சில வருசங்களுக்கு(10 வருசம்?) முன்னாடி அரசாங்கத்தில இருந்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தை(மோசமான பணியிடங்கள் மட்டும்) தீவிரமா அமல் படுத்த ஆரம்பிச்சாங்க. இதுல அபராதத் தொகையெல்லாம் அதிகமாவும் நிலமையோட தன்மைக்கு ஏத்த மாதிரியும் இருந்ததால ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள கணிசமான அளவுக்கு குறைக்கப் பட்டிருச்சி.//
இத எல்லாம் தொழிற்சாலைக்கு வருபவர்களுக்கு.
ஆனா தொழிற்சாலைக்கு வாராம வீட்டுலே இருந்து வேலை பாக்கலாம்.
குழந்தை தொழிலாளர் முறையை எதிர்க்க சட்டம் இருந்தாலும் ஏமாத்த பல வழி இருக்கு. சின்ன பிள்ளையிலிருந்து பார்த்து வருகிறேன்.

rajavanaj said...

தருமி சார்,

//திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த
மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான். இல்லையா, சிவா?//

இதை இதை.. முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.. :))))

- உடுக்கை முனியாண்டி said...

//குழந்தை தொழிலாளர் முறையை எதிர்க்க சட்டம் இருந்தாலும் ஏமாத்த பல வழி இருக்கு. சின்ன பிள்ளையிலிருந்து பார்த்து வருகிறேன்.//
கொஞ்ச நாளைக்கு முன்னாடி முழுமையான குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் அமல் படுத்தினப்ப (நம்பினா நம்புங்க இப்ப தான் இது அமலுக்கு வந்திருக்கு)இதைப் பத்தி ஊர்ல இருக்கற மக்கள்ட்ட கேட்டேன். இந்த ஏமாற்றுதல்கள் நடந்துகிட்டு இருக்குன்றதை அவங்களும் சொன்னாங்க.

விடுங்க. கொஞ்ச நாள்ல ஊருக்கு போகவேண்டியதிருக்கும். சுத்தி இருக்கற எடங்களுக்கு ஒரு ரவுண்டு அடிச்சிட்டு என்ன நிலமைன்னு எழுதிடறேன். சரியா.

இப்ப தருமி அய்யா பதிவை நாம ஹைஜாக் பண்றோம்னு திட்டப் போறாரு.

தருமி said...

என்ன ராஜ்வனஜ்,
நீங்க கோவைக்கிளின்னுல நினச்சுக்கிட்டு இருக்கேன். திடீர்னு நெல்லை பக்கம் சைடு வாங்குறீங்க..
ஒருவேளை உங்க கிளி ஏதும் அங்க இருக்கா?

தருமி said...

நாடோடி, முனியாண்டி,
நீங்கள் தரும் நேரடியான சோகச் செய்திகளும், சொந்த அனுபவங்களும் என் பதிவை விடவும் பின்னூட்ட்ங்களை பொருளுள்ளவைகளாக மாற்றியுள்ளன. நன்றி. அதனால் நீங்கள் என் பதிவை ஹைஜேக் செய்வது எனக்குப் பெருமையும் சந்தோஷமும்தான்.

நாடோடி, வாத்தியார் பிள்ளை மக்கு அப்டின்றதப் பத்தி என்ன நினக்கிறீங்க :) எனக்கென்னவோ சரின்னுதான் தோணுது. (எங்க அப்பாவும் ஆசிரியர்!)

தருமி said...

//கம்யுனிசம் மற்றும் நக்சலிசம் உள்ள மாவட்டங்களில் % கம்மியாக இருக்கிறது.... //

அனானியின் இந்தக் கூற்றில் உள்ள உண்மையைப் பற்றி அந்த மாவட்ட நண்பர்கள் ஏதேனும் கருத்து கூறினால் நல்லாயிருக்குமே..

Hariharan # 03985177737685368452 said...

தேனி மாவட்டத்தில் போடியில் பிறந்து படித்து சென்னையில் செட்டில் ஆனவன் என்பதால் ரெண்டுக்கும் பதில் சொல்லணுமா?

தேனி மாவட்டம் மலைகள் நிறைந்த, பழங்குடியினர் மற்றும் அதிகம் படிக்காத பெற்றோர்கள் இன்னும் இருக்கிற பகுதி 78% இந்தவாட்டி அடுத்தவாட்டி சமாளிச்சு இன்னும் மேலே வந்துடுவாங்க!

சென்னை மாவட்டம் பத்தி சொல்லணும்னா மக்களின் பீலா+ தெனாவெட்டு ஆமை முயல் ஓட்டத்தில் முயல் மாதிரி ஆரம்பத்தில் வேகமாக ஓடி பரீட்சையின்போது தூங்கியிருக்கலாம் எக்ஸாம் டென்சனாயிருக்கலாம்!

- உடுக்கை முனியாண்டி said...

நீங்க பதிவை ஹைஜாக் பண்றது தப்பில்லைன்னு சொன்னதால மறுபடியும் குழந்தைத் தொழிலாளர் பத்தின ஒரு விபரம்.

In the 2005 survey, 4,513 children were identified as workers in the district. Of them, 635 were involved in domestic work, 53 in fireworks manufacture and 103 in matchstick making.

சுட்ட இடம்: http://www.frontlineonnet.com/fl2322/stories/20061117004902300.htm


இன்னும் 4500ச் சொச்சம் பேரு இன்னும் குழந்தைத் தொழிலாளியா இருந்தாலும் தீப்பெட்டி ஆபிஸ்லயும் பட்டாஸ் பேக்டரியிலயும் வேலை செய்யறவங்களோட எண்ணிக்கை எவ்வளவோ கம்மின்னு நினைக்கிறேன்

- உடுக்கை முனியாண்டி said...

இங்க சொல்றதுக்காக தேடிக்கிட்டுருக்கையில நான் ரொம்பவும் தேடுன விபரம் பத்து வருசத்துக்கு முன்னாடி அமல் படுத்தப்பட்ட அந்த குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தைப் பத்தினது.

அந்த விபரமும் அதே வார ப்ரண்ட்லைன்ல வந்திருக்கு(குழந்தைத் தொழிலாளர் சிறப்பிதழ்ன்னு நினைக்கிறேன்)

இந்த குறிப்பிட்ட செய்தியோட சுட்டி
http://www.frontlineonnet.com/fl2322/stories/20061117005300400.htm

அந்த சிறப்பிதழோட சுட்டி
http://www.frontlineonnet.com/fl2322/fl232200.htm

rajavanaj said...

தருமி சார்,

//நீங்க கோவைக்கிளின்னுல நினச்சுக்கிட்டு இருக்கேன். திடீர்னு நெல்லை பக்கம் சைடு வாங்குறீங்க..
ஒருவேளை உங்க கிளி ஏதும் அங்க இருக்கா//

ஹாஹ்ஹாஹா.. கிளியெல்லாம் ஒன்னுமில்லீங்க..

நம்ம வளர்ந்ததும் படித்ததும் தான் கோவை.. பிறந்தது திருநெல்வேலிதான் - திசையன்விளை!!!

தருமி said...

ராஜ்வனஜ்,
அதான பாத்தேன்... என்னடா இந்த ஆளு ரொம்ப இன்டெலிஜன்டா, போல்டா இருக்காரேன்னு பாத்தேன் :)

//கிளியெல்லாம் ஒன்னுமில்லீங்க.. //
அதாவது கிளி நெல்லைப் பக்கம் இப்போ இல்லைங்கிறீங்க..அப்படித்தானே..

Gurusamy Thangavel said...

//நாடோடி, தங்கவேல்,
நீங்கள் தரும் நேரடியான சோகச் செய்திகளும், சொந்த அனுபவங்களும் என் பதிவை விடவும் பின்னூட்ட்ங்களை பொருளுள்ளவைகளாக மாற்றியுள்ளன. நன்றி. அதனால் நீங்கள் என் பதிவை ஹைஜேக் செய்வது எனக்குப் பெருமையும் சந்தோஷமும்தான்.//


தருமி சார்,

நான் சிரீயசான பின்னூட்டம் எதையும் உங்கள் பதிவில் போடவில்லையே. நீங்கள் தவறுதலாக என் பெயரைப் போட்டுவிட்டிடீர்கள். (பரவாயில்லை யானைக்கும் அடிசருக்கும்). தீவிரமான தகவல்களை பின்னூட்டமிடுபவர்கள் வருத்தப்பட்டுவிடக்கூடாது என்பதால் இவ்விளக்கப் பின்னூட்டம். நன்றி

Gurusamy Thangavel said...

மேலும் ஒருவிசயம். தருமி சார், உங்கள் இடுகைகள் எனக்குக் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன. சுரதாவில் அவற்றை பேஸ்ட் செய்து படிக்கிறேன். ஆனால், பின்னூட்டங்கள் தமிழில் தெரிகின்றன. நான் விண்டோஸ் 2000 மற்றும் IE 6 பயன்படுத்துகிறேன். அதுபோல் டோண்டு ராகவனின் இடுகைகள் தெளிவாகத் தெரிகின்றன; ஆனால், பின்னூட்டங்கள் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன. அசுரனின் பதிவுகளும் உங்களுடையதேப் போன்றே தெரிகின்றன. ஆனால், பிறரின் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் பிரச்சனை இல்லாமல் படிக்கமுடிகிறது. உங்களுக்கு ஏதாவது தொழில்நுட்பக் காரணங்கள் தெரியுமா?

தருமி said...

தங்கவேல்,
முனியாண்டி,

தங்கவேல் குறிப்பிட்ட தவறுக்காக - மன்னிக்கவும். திருத்தி விட்டேன்.

தங்கவேல்,
இவ்வளவு கஷ்டப்பட்டா என் பதிவைப் படித்து பின்னூட்டம் இடுகிறீர்கள்? பாவம்தான் நீங்கள் :(
எனக்கு காரண காரியங்கள் ஏதும் தெரியவில்லை. விக்கி ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பதிவில் கேட்கிறேன்.

நாடோடி said...

//
நாடோடி, வாத்தியார் பிள்ளை மக்கு அப்டின்றதப் பத்தி என்ன நினக்கிறீங்க :) எனக்கென்னவோ சரின்னுதான் தோணுது. (எங்க அப்பாவும் ஆசிரியர்!)//


எனக்கும் தான். :)))))))))))))))))))))))))))))))

வெளிகண்ட நாதர் said...

நம்ம திருச்சி மதுரையை விட முன்னாலதான் இருக்கு!

நாமக்கல் சிபி said...

//நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகள் நல்ல மதிப்பெண்கள் பெருவதற்காகவே
மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அந்தப் பள்ளிகள் மட்டுமே அது
போல இருக்கும்போலும். 79.1%; 78.9% (அப்படித்தானே நாமக்கல் சிபி?)
//

தருமி ஐயா,
இந்த மாதிரி ஸ்பெஷல் பள்ளி கூடங்கள்ல படிக்கற பசங்க ரொம்ப குறைவு. அதே மாதிரி டொனேஷனும் அதிகம். இந்த பள்ளி கூடங்களை நடத்துர கமிட்டி மெம்மர்ஸ் அரசினர் பள்ளி ஆசிரியர்கள்தான். அப்படினா அவுங்க அந்த அரசு பள்ளி கூடத்துக்கு எவ்வளவு கவனிப்ப குடுப்பாங்கனு யோசிங்க.

அந்த தனியார் பள்ளி கூடத்துல படிக்கிற பசங்க பெரும்பாலும் நல்ல மார்க் எடுக்கறாங்க இல்லைனா அங்கேயே இம்ப்ரூவ்மெண்ட் பண்ணி எப்படியும் டாக்டராகிடறாங்க... இப்ப இம்ப்ரூவ்மெண்ட் இல்லைனு நினைக்கிறேன்...

இதனால அரசினர் பள்ளில படிக்கறவங்க மேல பெரும்பாலும் இந்த ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லைனு நினைக்கிறேன்...

எங்க மாவட்டமும் (கடலூர், விழுப்புரம்) எப்பவும் கல்வில பின்தங்கி இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு.

பெரும்பாலும் நல்லா படிக்கறவங்க வேற மாவட்டத்துலதான் போயி படிக்கிறோம(ராசிபுரம், ஈரோடு, சென்னை).

பள்ளி கூடத்துக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லைன்றது கொஞ்சம் ஒத்துக்க முடியாத விஷயம்தான்...

rajavanaj said...

தருமி சார்,

//அதாவது கிளி நெல்லைப் பக்கம் இப்போ இல்லைங்கிறீங்க..அப்படித்தானே..//

ஆஹா..... விட மாட்டிங்க போலயே... நானும் கிளி பிடிக்கப் போய் கடைசியில் வீட்டுக்கு தெரிந்து தர்ம அடி வாங்கிய பின் இந்த கிளி மேட்டரில் மட்டும் எப்போது ஒரு பாதுகாப்பான தூரத்தில் நின்று கொள்வதோடு சரி..

மங்கை said...

தருமி ஐயா...

நல்ல பதிவு...

பொதுவா தென் மாவட்ட மாணவர்களின் கல்வி தகுதி அதிக ஆயிட்டு தான் இருக்கு...

Percentage wise முன்ன கம்மியா இருந்தப்ப கூட Knowledge wise பார்த்தீங்கன்னா கண்டிப்பா அவங்க better...subject ல சொல்றேன்... மத்த நகர்புர மாணவர்களுக்கு இருக்கும் exposure அவங்களுக்கு இருந்தா, இன்னும் அவங்க ஜொலிப்பாங்க..

இது என் எண்ணம்..ஏனா அவங்க கவனம் அதிகமா divert ஆகறதில்லை

இதே போலத்தான் CBSEல கூட.. வட மாநிலங்களை விட சென்னைல தான் அதிக மாணவர்கள் தேர்ச்சி ஆறாங்க..

நல்ல பதிவு தருமி ஐயா...

Post a Comment