முதலில் போட்ட போது யார் கண்ணிலும் படாமலே போய்விட்ட காரணத்தை நினைத்து ஏற்பட்ட ஆச்சரியத்தாலும், இப்போது தலைமை நீதிமன்றத்துத் தடை பற்றிய சேதிக்கு ஒட்டி, மறுபடியும் "திறமை"களைப் பற்றிய பேச்சு வழக்கம்போல் எழுந்துள்ளதாலும் இந்த மீள் பதிவு
13th March இந்து தினசரியில் கண்ணில் பட்ட இரண்டு செய்திகள்:
1. AIIM-A –வில் இந்த ஆண்டில் படிப்பை முடிக்கும் 224 மாணவர்களுக்கு நடந்த campus interviews பற்றியது:
• சிலர் (11/224)சம்பளத்திற்கு வேலை பார்க்க விருப்பமில்லாமல், சுய தொழில் செய்ய முடிவு செய்தது;
• 72% பேர் வெளிநாட்டு வேலை வேண்டாமென்று உள்நாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தது;
• வெளிநாட்டு வேலைக்குக் கொடுக்கப்பட்ட வருட சம்பளம் 1 கோடி – 1.35 கோடி வரை இருந்தது;
• உள்நாட்டில் வருடத்திற்கு சம்பளம் 60 லட்சத்திலிருந்து ஒரு கோடிவரை இருந்தது;
மேலும் இக்கல்லூரியின் டைரக்டர் பாகுல் தோலாக்கியா சொன்ன மற்றொரு செய்தி:
• “சாதி அடிப்படையில் நடந்த இடப்பங்கீட்டினால் எவ்வித “திறமைக் குறைவும்” நடக்கவில்லை.
• இந்த ஆண்டில் படிப்பை முடித்தவர்களில் S.C., S.T. மாணவர்களான 42 பேரும் மற்ற மாணவர்களைப் போலவே நன்றாகப் படித்து முடித்ததோடல்லாமல், மற்ற மாணவர்களுக்குச் சமமாக வேலையும் பெற்று விட்டார்கள்”.
மேலே சொன்ன எல்லாமே மகிழ்ச்சி தரும் செய்திகள்தான்.
2. வித்யா சுப்ரமணியம் என்ற செய்தியாளர் தந்துள்ள வேதனை தரும் செய்தி:
ஹரியானாவில் உள்ள பிபிபுர் என்ற கிராமத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் அடக்கு முறை பற்றியது. வழக்கமாக நம் ஊர்களில் பிற்படுத்தப் பட்டோர்களே தலித்துகளை அடக்கு முறையில் வாட்டுவது மாதிரி இல்லாமல், இங்கு உயர்த்திக் கொண்ட சாதியினரே தலித்துகளின் அடிப்படை உரிமைகளில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நீதி கிடைக்க வாதிடச் சென்ற இந்தப் பத்திரிகையாளருக்குக் கிடைத்த பதில்கள் வேடிக்கையானதும் வேதனையானதுமாயுள்ளன.
வேடிக்கை: பஞ்சாயத்தில் முடிவு செய்து தலித்துகள் கட்டிய கோவிலை இடித்ததை எதிர்த்து முறையிடச் சென்ற இப்பத்திரிகையாளரிடம் மாலிக் என்ற அதிகாரி ‘தலித்துகள் அவர்கள் இஷ்டப்படி எப்படி கோவில் கட்டலாம்? ‘என்றதோடல்லாமல் ‘தலித்துகளால் அந்த ஊரில் உள்ள ப்ராமணர்களுக்குத்தான் ஆபத்து’ என்றும் கூறியுள்ளார்.
வேதனை: இப்படிச் சொன்ன மாலிக் யார் தெரியுமா? தாழ்த்தப்பட்டோர் நலன் காக்க வேண்டிய தேசிய குழுமத்தின் – NATIONAL COMMISSION FOR SCHEDULED CASTES –ன் உதவி கமிஷனர் !
பாலுக்குக் காவல் நல்ல ஒரு பூனை …
AND MILES TO GO ….
9 comments:
//வேதனை: இப்படிச் சொன்ன மாலிக் யார் தெரியுமா? தாழ்த்தப்பட்டோர் நலன் காக்க வேண்டிய தேசிய குழுமத்தின் – NATIONAL COMMISSION FOR SCHEDULED CASTES –ன் உதவி கமிஷனர் !//
ஜோ :ஐயோ..ஐயோ! எங்க போய் முட்டிக்கிறதுண்ணு தெரியல்ல
அறிவு ஜீவி பதிவர் : இதற்காக மத்திய அரசில் நக்கிப்பிழைக்கும் கருணாநிதி பதவி விலகுவாரா? இந்தியா முழுதும் இதை பரப்பியதே கருணாநிதி கும்பல் தான்
//• “சாதி அடிப்படையில் நடந்த இடப்பங்கீட்டினால் எவ்வித “திறமைக் குறைவும்” நடக்கவில்லை.
//
இது மட்டும் புரியலை தருமி சார்.
//பாலுக்குக் காவல் நல்ல ஒரு பூனை//
அதுசரி.. நல்ல தொகுப்பு தருமி,
இது போன்ற பதிவுகள் அடிக்கடி எழுதுங்கள். கவனம் கொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து தருவது அவசியம்.
//அறிவு ஜீவி பதிவர் : இதற்காக மத்திய அரசில் நக்கிப்பிழைக்கும் கருணாநிதி பதவி விலகுவாரா? இந்தியா முழுதும் இதை பரப்பியதே கருணாநிதி கும்பல் தான்//
:-)))))))))))
ஜோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. அப்புறம் இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட்டமைக்கு நன்றி.
இல்லை எனில் தருமி மீண்டும் ஒரு முறை மீள் பதிவு பண்ணி இருப்பார். :-)
(சும்மா ஜோக்குக்காக சொன்னது)
தருமி ஸார்.. நல்ல பதிவு. சரியான நேரத்தில் இட்டிருக்கிறீர்கள்.. ஆதிசேஷன் ஸாருக்கு புரியாதது ஒன்றுமில்லை. அவர் நடிக்கிறார். அவ்வளவுதான்.. விட்டுவிடுங்கள்..
"இது மட்டும் புரியலை தருமி சார். "
ஆமா சார், உங்களுக்கு அது புரியாதுதான் சார்.
//ஒரு உதவி செய்யணுமே; எனக்காகத் தனிப் பதிவுகூட நீங்களே போட்டுக்கங்க; வேணாங்கலை. ஆனால் என் பதிவுக்கு வரவேணாமே, சரியா? கொஞ்சம் frequency ஒத்து வர மாட்டேங்குது. அவ்வளவுதான். முடிஞ்சா இத ஆதிசேஷன் அய்யாட்டையும் சொல்லிடுங்க - முடிஞ்சாதான். //
இப்படி ஒரு பின்னூட்டம் என் பதிவில் போட்டிருந்தேன்... பார்க்கலைங்களா ... பாத்துக்கங்களேன்...ப்ளீஸ் ...
ஜோ,
//அறிவு ஜீவி பதிவர் //
இது என்னென்னே புரியலை.. ஜோ...
//இது என்னென்னே புரியலை.. ஜோ...//
எங்கு என்ன நடந்தாலும் சரி .அதுக்கு கருணாநிதியும் ,அவர் குடும்பமும் தான் காரணம்.பாலும் தேனும் ஓடிக்கிட்டிருந்த தமிழகம் இன்னிக்கு இந்தியாவிலேயே பிச்சைக்கார மாநிலமா இருக்குண்ணா அதுக்கு 4 முறை முதல்வரான கருணாநிதி தான் காரணம் .இல்லைன்னா பீகார் மாதிரி ,உ.பி மாதிரி தமிழ்நாடு எங்கியோ போயிருக்கும் - இப்படியெல்லாம் சொன்னா நீங்க கூட அறிவுஜீவி பதிவராகலாம் .தெரியாதா?
Post a Comment