மனசுதான் முக்கியம் அப்டின்னு நாம பொதுவா சொல்றதுண்டு. அதுமாதிரிதாங்க .. எங்க ஊர்ல நிர்வாகம் ஒரு நல்ல காரியம் ஒண்ணு பண்ணணும்னு நினச்சாங்க. அதாவது மதுரையில் ஒரு பெரிய ஆறு - வைகைன்னு பேரு - இருக்கா. அதில எப்பவாவது வெள்ளம் - அதாங்க, ரொம்ப தண்ணி வருமே அதுதான் - வந்திச்சின்னா மக்கள் கஷ்டப் படுவாங்களே அப்டின்னு ஒரு எண்ணம்; அதோடு, விட்டா மதுரக்காரங்க ஆற்றோரம் எல்லாம் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பு பண்ணி, பேருக்கு கூட வைகை இல்லாம் பண்ணிடுவாங்க அப்டிங்கிற உண்மையான பயத்தில வைகைக் கரையின் இரு பக்கமும் ரோடு போட்டுட்டா, நதியைக் காப்பாத்திடலாம் அப்டிங்கிற நல்லெண்ணத்தில இரு பக்கமும் உயரமா கரையை உயர்த்தி அழகா ரோடு போட்டாங்க.
ஆனா பாருங்க, ஆற்றின் தென்கரையில் நெடுக போட்ட சாலை ஒரு இடத்தில மட்டும் நடுவில நின்னு போச்சு. இப்ப, இங்க ஒரு சேஞ்சுக்கு கோவில் இல்லை, அதுக்குப் பதிலாக ஒரு பெரிய பள்ளிக் கூடம் கரையோரம் உயர்ந்து நின்னுது. ஆக்கிரமிப்புகளை நீக்கும் நேரத்தில் எந்த நேரமும் ஆற்றுக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பள்ளி இடிக்கப் படும் என்ற நிலை. ஆனா விஷயம் அறிஞ்ச சிலர் சொன்னாங்க.. அதெல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்துக்காரருக்கு முன்னால் அதெல்லாம் நடக்க முடியாது அப்டின்னாங்க; அவரு அவ்வளவு பேமஸான ஆளு அப்டின்னாங்க; நமக்கு என்ன தெரியும்? அது மாதிரியே இன்னும் அந்தப் பள்ளிக்கூடம் ஆற்றின் கரையோரம் நிலச்சு நிக்குது, ஆற்றோர சாலை அப்படியே துண்டு துண்டா ரெண்டுபக்கமும் நிக்குது. ஒரு தனி மனிதனின் செல்வாக்கு மொத்த ஊர் மக்களின் நன்மைக்கு எதிரா இருந்து வெற்றி கொடி நட்டுரிச்சி. இது தென்கரையோர சாலையின் கதை. இது என்ன பெரிய விஷயமா அப்டின்றவங்களுக்கு அடுத்த சாலையின் கதை நிச்சயமா இன்னும் கொஞ்சம் interesting -ஆ இருக்கும் அப்டின்னு சொல்லிக்கிறேன்.
தெரியுதுங்களா .. இதுதான் வைகையின் தென்கரை நெடுக போடப் பட்டுள்ள ரோடு. இடது பக்கம் பச்சையா தெரியறதுதான் எங்க வைகை. தண்ணீர் இருந்தா வெள்ளையா தெரியும்; இல்லைன்னா இப்படி கருவேல புதர்கள்தானே தெரியும். என்ன இவ்வளவு பெரிய ரோடு போட்டிருக்காங்க ... ஆனா போக்குவரத்து, வண்டிகள் அது இதுன்னு எதுவுமே இல்லையேன்னு பாக்றீங்களா? அது எப்படி வண்டிகள் போக்கு வரத்து இருக்க முடியும்? அடுத்த படம் பாருங்க ...
வரப்போற மேம்பாலத்திற்காக கட்டப்பட்டுள்ள பெருந்தூணைத்தான் பாக்றீங்க... என்ன இது ரோடுமேல இருக்கேன்னு பாக்கிறீங்களா? எனக்கும் அதுதாங்க புரியலை. ரோடு போட்டும் ரொம்ப வருஷமாயிடலை. இப்போதான் போட்டாங்க. அதனால போடும்போதே இங்கே ஒரு பாலம் வரும்; அதுக்கு தூண்கள் வரும் என்று எல்லாம் தெரிஞ்சிருக்கும்; தெரிஞ்சிருக்கணும். ஆனா அரசு இயந்திரங்கள் ஒன்றோடு ஒன்றுக்கும் அப்படி ஒரு இணைவு. ஏன் இப்படி என்று கேட்டால் வைகை ரோடு நகராட்சி போட்டது; பாலம் போடுறது நெடுஞ்சாலைத் துறைன்னு பதில் வருகிறது. எப்படி ஒரு coordination! இப்போ போட்ட ரோடு நம்ம காசை மட்டும் விழுங்கிட்டு எனக்கென்னன்னு நிக்குது .. இல்ல ... படுத்திருக்குது!
எனக்கு ஒரு கார்ட்டூன் நினைவுக்கு வருது. தலைப்பு: TEAM WORK !
இங்கிலாந்துக்கும், பிரான்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஒரு சாலை அமைத்துள்ளார்கள். இதில் ஒரு பாதியை ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டு கடலுக்கடியிலும், அதே போல் பிரான்ஸ்காரர்கள் அவர்கள் பாதியை அவர்கள் நாட்டு கடலுக்கடியிலும் தோண்டினார்களாம். இறுதியில் இரண்டு பகுதியும் இணையும்போது மிக மிகச் சரியாக இரு சாலைகளும் கடலுக்கடியில் ஒன்றோடொன்று சேர்ந்தனவாம். ம்..ம்ம்.. நம் நாட்டுல இப்படி ஒண்ணு நடந்தா என்ன ஆகியிருக்கும்னு தெரியலையே ..?
9 comments:
நாலு பாகம் போட்டுட்டு மெகா சீரியல் அப்படின்னு பேரு வேணும்னு ஆசையா? நல்ல கதையா இருக்கே!! :))
எல்லாம் நம்ம பணம், இப்படி வீணாப் போகுது! :(
நல்ல இடுகை ஐயா!! இதுபோல ஒன்றா, இரண்டா ? பல தமிழகம் முழுவதும் உள்ளது. நீங்கள் கூறியது மதுரை உதாரணம்.
//227. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 4 //
தருமி ஐயா,
யாரையும் நொந்து கொள்ள வேண்டாம். மரணம் தொட்ட கனங்கள் ஏற்கனவே பயமுறுத்துகிறது. மகிழ்வான செய்திகளில் கவனம் செலுத்துங்கள்.
குறைகளை சுட்டிக் காட்டுவது தவறல்ல. அதில் மனதை ஒன்ற செய்து நொந்து போவதெல்லாம் தள்ளி வையுங்க. நிர்வாகங்கள் உளுத்துப் போகும் போது புரட்சி வெடிப்பது என்பது இயற்கை. அதுவரை எல்லோரும் கண்டும் காணாதது போல் தான் இருந்திருக்கிறார்கள். எல்லைகளை எல்லோரும் மீறும் போதும் எல்லைகளே அழிக்கப்படும் என்பதுதான் நியதி.
ஜனநாயகம் பேசுவதால் இந்தியா போன்ற நாடுகளில் சட்டத்தை கடுமையாக்க முடியாது. என்ன செய்வது புன்கள் புறையோடிப்போகும் போது காலையும் சேர்த்துதானே வெட்டுகிறார்கள். என்றாவது ஒருநாள் எல்லாமும் சரியாகும். இப்போது பரவாயில்லை என்று நிகழ்காலங்கள் ஆச்சிரியப்பட வைக்கும் அளவுக்கு சமுக அமைப்பில் பெரிய மாறுதல் எப்போதும் ஏற்படுவதில்லை அதைவிடுத்து புதிய சூழ்நிலையில் வாழ பழகிக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம். ஊருக்குள் இடமே கிடைக்கவில்லை என்றால் பக்கத்தில் பிணம் எரிந்தால் முற்றிலும் கவலைப்படாமல் அதற்கு பக்கத்திலேயே குடியிருக்கவும் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவது தவறல்ல என்றும் சொல்லிக் கொள்கிறேன்.
எனக்கு தெரிஞ்சு போச்சு எப்படி நடந்திருக்கும் என்று.
நகராட்சிக்கும் & நெடுஞ்சாலை துறைக்கும் ஒரே வரைப்படம் தான்.
இந்த ஆட்டோ கேட் என்ற வரைப்பட மென்பொருளில் லேயர் என்ற பக்ஷன் இருக்கு,ஒருத்தர் மற்றொருவரிடம் கொடுக்கும் போது இந்த சாலை போடப்பட்ட லயனை மறைத்து கொடுத்துவிட்டார்கள்,அடுத்தவருக்கும் தெரியவில்லை.போட்டு முடிச்சிட்டாங்க..(அடிக்க வராதீங்க)
என்னங்க இதுக்கே இப்படி Feeling ஆனா எப்படி?
அந்த சாலை தூணுக்கு மேல் வந்து நிற்காத வரை சந்தோஷப்படுங்க.
மக்கள் பணம் எப்படியெல்லாம் வீணாகிறது என்பதை பார்த்தால் மனம் கொதிக்கிறது.அரசியல் சார்பற்ற, உள்ளூர் மக்கள் கொண்ட கண்காணிப்பு குழு மூலமாக இதை போன்ற பிரச்சனைகளை கையாள முடியாதா?
கல்லூரியில் என் அறையில் ஒட்டி வைத்திருந்த போஸ்டர். மிகவும் பிடித்தது. எல்லாமே ego clashதான். வாத்தியார்கள் மத்தியில் அதற்குப் பஞ்சமே இருக்காதே ..!
I remember some one marking your name and Mr.Sylus' name in the Cartoon in d college
Correct?
ஆமாம் கடப்பாரை .. he is leaning on the spade !!
ஹெ ஹெ இதெல்லாம் ஜகஜம். மரத்துப் போச்சு....இது மாதிரி எத்தனை நடக்குது நம்மூர்ல.
அதென்னங்க எங்க வைகைன்னு சொல்லீட்டீங்க. அவளும் ஒரு காலத்துல பொய்யாக் குலக்கொடிதான். இப்பத்தான் இப்பிடி "ஆயி"ருச்சு :(
Post a Comment