THE WHEELS ARE REALLY TURNING
நான் வழக்கமாகச் செல்லும் ஒரு நெடுஞ்சாலை 'விபத்துப் பகுதி' என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் அங்கு தாறுமாறாக விரையும் பேருந்துகளைக் கவனிக்கவோ மட்டுப் படுத்தவோ எவ்வித முயற்சியும் இல்லாமை பற்றியும் அதனால் அடிக்கடி நடக்கும் விபத்துகள் பற்றியும் எழுதியிருந்தேன். இதற்கு வந்த பதில் நம் அரசும், அரசு இயந்திரங்களும் 'உருண்டு கொண்டுதான்' இருக்கின்றன என்ற நல்ல செய்தி மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இன்று எனக்கு வந்த அந்த பதில்:
Reply for your e-mail dated 17.09.2007 about Samayanallur-Paravai-Madurai - Road - Reg.
Kindly refer your e-mail dated 17.09.2007 addressed to Govt. of India.
the Superintendent of Police, Madurai has been requested to instruct
the Highway Patrol Police officials to take immediate action against
drivers who are indulging rash driving in Samayanallur-Paravai-Madurai road.
இதில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், இன்றுவரை - 19.12.'07 - இத்தளத்திற்குச் சென்று (எட்டிப்) பார்த்தவர்களே வெறும் 1372 பேர் மட்டுமே என்பது கொஞ்சம் ஆச்சரியமாக (வேதனையாகவும் தான்) இருந்தது. இணைய பயனர்கள் மிகுந்து இருக்கும் நம் நாட்டில் இத்தகைய ஒரு நல்ல வசதியை - இணையத்தின் மூலமே நம் குறைகளைக் கூறும் எளிதான இந்த வசதியை - நம்மில் யாரும் பயன்படுத்தாதது ஏமாற்றமே.
என் இரண்டாவதாக முயற்சியாக, மனிதக் கழிவுகள் அகற்றும் வேளை அந்த வேலை செய்து கொண்டிருந்த மூன்று சுத்தித் தொழிலாளர்கள் சென்னையில் இறந்த ஒரு செய்தி பற்றிக் கூறி, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிநிலை மாற அது இயந்திரமாக்கப்பட வேண்டும்; அதற்குரிய முயற்சிகளை ஒவ்வொரு மாநில அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று முதல் கடிதத்தைத் தொடர்ந்து மற்றொரு கடிதமும் ஏற்கெனவே அனுப்பியுள்ளேன். அதற்குப் பதிலும், பதிலைத் தொடர்ந்த காரியமாற்றலும் நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன்.
நான் பதிவனாக சேர்ந்த புதிதில் இந்த விஷயம் பற்றிய ஒரு நெடும் விவாதம் பதிவுலகில் நடந்தது. பலரும் இதைப் பற்றி எழுதினார்கள். அப்போதே இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது எப்படியென்றெல்லாம் பேசினோம். இதோ இப்போது நம் கண்முன் உள்ள பாதையில் எல்லோருமாக ஒரு படி முன்னெடுத்தால் என்ன?
உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்:
சீரியஸ் பதிவு, சீரியல் பதிவு, கும்மிப் பதிவு, மொக்கப் பதிவு என்று வகைவகையாக பதிவுகளைப் போட்டுக்கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் என் ஒரு வேண்டுகோள். இயந்திரமாக்கப் படுதல் அவசியம் என் நீங்களும் நினைப்பின் ஏன் ஒரு மயில் இந்த முகவரிக்கு அனுப்பக் கூடாது?(http://darpg-grievance.nic.in)ஒருவேளை எழுத சோம்பேறித்தனப் பட்டால் உதவுவதற்காக நான் ஏற்கெனவே எழுதிய மயிலின் நகலை இங்கே தந்துள்ளேன் - வெட்டி ஒட்ட!
-----------------
It appears we have at last come out of the bracket of 'developing countries' and at the threshold of being among the developed countries. It is a pround moment for every one of us.
BUT how long we are going to make the dalits to clean and carry the human wastes?
A little money and some great will from our politicians and bureaucrats can make this condition completely changed if we introduce machanised system for doing such jobs.
Is it asking too much to request the governemnt to shell out some money for this and liberate the 'harijans' from this job thrusted on them for generations.
32 comments:
தருமி,
நல்ல முயற்சி!
அனுப்பியாச்சி! (நன்றி!!)
தென்றல்,
ஷ்..ஆ ..ஆ.. சூடு பறக்க .. பறக்க ..
மிக்க நன்றி.
தருமி,
உங்கள் முயற்சி நல்ல முயற்சி,உங்களுக்கு பதில் வந்துள்ளது, ஆனால் பலன் ஏற்பட்டுள்ளதா, பதிலுக்கே பரவசம் அடைந்துவிட்டீர்களா?
இந்த வசதியை வெகு காலம் முன்னரே ஒரு முறை பயன்படுத்தி இருந்தேன்,அஞ்சலகத்தில் ஏற்பட்ட சேவைக்குறைப்பாட்டிற்காக. மின்னஞ்சல், மட்டுமல்ல கடிதம் கூட வந்தது, ஆனால் அதனால் ஏதும் பலன் விளையவில்லை.
நானும் அனுப்பி வைக்கிறேன் உங்கள் கடிதத்தை, என்ன ஆகிறது என்று பார்ப்போம்.கூட்டமா சேர்ந்து மிரட்டினா தான் சில சமயம் வேலை நடக்கும் :-))
வவ்வால்,
//பதிலுக்கே பரவசம் அடைந்துவிட்டீர்களா?//
ஆமாம். உண்மைதான். நான் முதலில் எழுதிய விஷயமே ஆழமில்லாத ஒரு very local issue. அதற்கே பதில். பரவசம்தான்; ஏனெனில்: இந்த அளவுக்காவது நடக்கிறதே என்றுதான்.
//ஆனால் அதனால் ஏதும் பலன் விளையவில்லை.//
அடிமேல் அடி வைத்துப் பார்ப்போமே என்ற நம்பிக்கைதான்; ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற ஆதங்கம்தான்.
நல்ல முயற்சி.
புகார் அனுப்பியாச்சு.
நன்றி தருமி.
அடிமேல் அடி வைத்துப் பார்ப்போமே என்ற நம்பிக்கைதான்; ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற ஆதங்கம்தான்.//
இந்த நம்பிக்கைங்கிற ஒரு விசயத்திற்கு மதிப்பளித்து எல்லோரும் செய்யணும். ஆனா பாருங்க தருமி, டெல்லியில இருக்கிற Ministry of External Affairs-அலுவலகத்துக்குள்ள நுழைய இன்னமும் நுழைவாயிலிள் நிற்கும் காவலாளிக்கு ரூ 200 அழுதாத்தான் உள்ளே விடுவேன்னு அடம் பிடிக்கிறது இன்னமும் நடக்குதே... இது ஒரு ஆறு மாசத்திற்கு முன்பு நடந்தது.
இப்படி இருக்கும் பொழுது வெளிப்பகட்டிற்கென்று திட்டங்களை இயற்றிவிட்டு ஒன்றும் நடைபெறாமல் இருப்பதில் என்ன இருக்கிறது.
தெகா,
நீங்க எதுக்கு டெல்லி வரைக்கும் போறிங்க, இங்கே லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்பிளெய்ண்ட் கொடுத்து முதல் தகவல் அறிக்கை வாங்க முடியாது காந்தி நோட்டு இல்லாம? அவன் குற்றவாளியைப்பிடித்து நமக்கு நிவாரணம் தருவது அடுத்த விஷயம்.
நம்பிக்கை தான் வாழ்க்கை! நல்லது நடக்கும்னு நம்பி சினிமாக்கொட்டாய்ல ஊழல் எதிர்ப்பு வசனம் பேசுறவங்க சொல்றதுக்கும் நம்புறோம்ல :-))
நல்ல தகவல்.
பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
//அலுவலகத்துக்குள்ள நுழைய இன்னமும் நுழைவாயிலிள் நிற்கும் காவலாளிக்கு ரூ 200 அழுதாத்தான் உள்ளே விடுவேன்னு அடம் பிடிக்கிறது இன்னமும் நடக்குதே//
எல்லாரும் எடுத்து எடுத்து கொடுத்துத்தான பழக்கப் படுத்தியிருக்கோம்? ஒரு ரெண்டு பேர் கொடுக்காம, உள்ள போய் புகார் கொடுத்துப் பாத்தா ப்ரச்சனை சரியாகியிருக்கும் ;)
தெக்ஸ்,
டெல்பின்,
சர்வே சன்,
என்னோடு ஓய்வு பெற்ற நண்பர்கள் ஓய்வூதிய அலுவலகத்தில் grease money கொடுத்துவிட்டு என்னையும் ஆட்டைக்குச் சேரச் சொன்னபோது 37 வருஷம் சொல்லிக் கொடுத்ததை வேலை முடிந்த உடனேயே மறக்கணுமான்னு கேட்டு, கொடுக்க மறுத்து தனியாகச் சென்றேன். அதுவும் ஓய்வூதிய அலுவலகத்தில், (அதுவும் ஆசிரியர்கள்) லஞ்சம் கொடுப்பதும், அங்குள்ளவர்கள் வாங்குவதும் பெரிய கேவலமாகத் தோன்றுகிறது.
கொடுக்க மாட்டேன் என்பது போல் பேசினேனோ, காண்பித்தேனோ, வித்தியாசமாக நடந்து கொண்டேனோ தெரியவில்லை - காசு செலவில்லாமல் காரியம் நடந்தது.
காலதாமதமானாலும் பரவாயில்லை என்ற நிலை. அதனால் அப்படி முடிந்தது.
தெக்ஸ் சொல்வது போல் எப்போதும் எங்கும் அப்படி நிமிர்ந்து நிற்க ஆசையாயிருந்தும் அது முடியுமான்னு தெரியாதுதான்.
ஆச்சு...ஆச்சு...
ஊர் கூட தேர் இழுப்போம் என்ற கிளம்பி இருக்கீங்க....
கண்டிப்பா இழுப்போம்
மிக நல்லதொரு பணி செய்திருக்கிறீர்கள் தருமி.
அதை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி
ஆனால் காரியம் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
எங்க தாத்தாவுக்கு வாரிசு நாங்கதான்னு சொன்ன கதையும், அரசு நூலக விஷயமும் ஞாபகம் வந்து தொலைக்குது.
அதனாலென்ன நம்பிக்கையுடன் காத்திருப்போம்:-)
தருமி சார்..
இப்பதிவை இப்போதுதான் பார்த்தேன். உடனடியாக செய்துவிட்டேன்.Ministry of Social Justice and Empowerment என்ற துறைக்கு அனுப்பினேன். சரிதானே?
மிக கட்டாயமாக அமுல் படுத்த வேண்டிய விஷயம்,
ஆனால் உளவியல் படி தனக்கு கீழ் ஒரு அடிமை இருக்க வேண்டும் என்று நினைகிறான்,
தனகென ஒரு பதவி வேண்டும் என்று நினைகிறான்,
எல்லோரும் சமம் என்ற வார்த்தையை மறந்து, தான் அவர்களை ஆள பிறந்தவன் என்று நினைகிறான், இயந்திரம் கீழ்படிவதில் அவன் திருப்பதி அடைவதில்லை,
ஆதி முதல் இந்த பழக்கம் அவனுக்கு ஒட்டி கொண்டது,
அண்டை கிராமங்களை அடிமை படுத்தி பழகியவன், இன்று அருகில் இருபவனையும் அடிமையாக நினைகிறான்,
நாமாவது அவர்களை பற்றி கவலை படுகிறோம், அவன் நாம் அனைவரையுமே அவனது அடிமையாக நினைகிறான், அவன் வைத்தது தான் சட்டம் என்கிறான், மீறினால் தண்டனை கொடுகிறான்,
அவனே விஷத்தை கடையில் விற்கிறான், அதை குடித்து விட்டு வந்தால் அவன் போட்ட சட்டம் நமக்கு தண்டனை தருகிறது,
படிக்கும் போதே நம் ஜாதியை கேட்டு நமக்குள்ளே நம்மை பிரிகிறான்,
நாம் ஒன்று சேரும் போது திகைகிறான்,
பாரத ரயில்வே துறையில் இதற்கென இயந்திரம் கொண்டு வந்தும் அதை பயன்படுத்தாமல் கிடப்பில் போடுகிறான்,
அந்த அவன் வேறு யாருமில்லை
இன்றைய அரசியல் வாதி
(பின்குறிப்பு:மெயில் அனுபியாயிற்று)
வால்பையன்
//தெக்ஸ் சொல்வது போல் எப்போதும் எங்கும் அப்படி நிமிர்ந்து நிற்க ஆசையாயிருந்தும் அது முடியுமான்னு தெரியாதுதான்.//
நிமிந்து நின்னா grease money இல்லாமல், கட்டாயம் வேலை நடக்குது. என் சமீபத்திய ரெஜிஸ்ட்ரார் அலுவலக பாடம் இது.
கொஞ்சம் அதிக நாள் பிடிக்கும். பரவால்ல.
எல்லாமே ஈ.ஸியா ஆகணும்னு நெனச்சு நெனச்சுதான் இந்த எடத்துக்கு வந்து விட்டிருக்கு.
RDO ஆபீஸ்ல போய் வரிசைல நின்னு லைஸன்ஸ் வாங்க சோம்பேரித்தனப்பட்டு, 300ரூ தரகர்கிட்ட கொடுத்தனுப்பி, ஈஸியா லைஸன்ஸ் வாங்கர கூட்டம் அதிகம் நம்மூர்ல.
கொஞ்சம் friction கொடுப்போம்.
சரியாகும். :)
நீங்க சொன்ன போதே படிச்சி அந்த உரலை சேமிச்சாச்சி.அப்பால இன்னா செய்ய்னும்னு தெர்லியே நைனா...எதெச்சாம் ஒதவின்னு கூப்ட்டா வர்மாட்டமா?இனிமே கண்டி சவுண்டு உடு டபால்னு ஆஜர் ஆய்டுரோம் ஹக்காங்....
கண்மணி,
//இனிமே கண்டி சவுண்டு உடு டபால்னு ஆஜர் ஆய்டுரோம் ஹக்காங்....//
அதான் சவுண்டு உட்டுட்டோம்ல ..
தருமி அய்யா,
புகார் அனுப்பிவிட்டேன்.சர்வேசன் ஐடியாவையும் ,நம்முடைய பக்கத்தில் இணைப்பு கொடுப்பது , செய்துவிடுகிறேன்.
அற்புத முயற்சி...
உடனே மயிலும் அனுப்பியாகிவிட்டது.
ஆனால் இங்கே நாங்களும் பல்வேறு விஷயங்களுக்காக ஒரு அமைப்பாகவே மனுக்கள், கடிதங்கள் கொடுத்தாலும்
ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை.
ஒருமுறை சாலை மிகவும் பாடாவதியாக இருந்ததால், பல முறை முயன்றபிறகு...சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினோம்.
உடனே ஒரு வாரத்தில் சாலை போடப்பட்டுவிட்டது.
காரணம், எங்கள் போரட்டம்...அல்ல
ஒரு முக்கிய அமைச்சர் ஊருக்கு வருவதாக இருந்ததால்..!
ஆனாலும் நாம் ஊதும் சங்கை ஊதித்தான் பார்ப்போமே.!
கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி மலரும்..!
//நீங்க எதுக்கு டெல்லி வரைக்கும் போறிங்க, //
வவ்ஸ், நான் டெல்லியில இருந்து தொடங்கினத்துக்கு ஒரு காரணம் உண்டு. தலை அங்கேதானே இருக்கு. ஒரு திட்டம் உருவமெடுத்து, அதனை சர்வ தேச தரத்திற்கு இயக்கணுமின்னு நினைச்சு தொடங்கிற திட்டங்கள் அங்கேதானே தொடங்கி பிறகு மெல்ல, மெல்ல நிறமிழந்து, ஓடித்தேய்ந்து நமது வட்டத்திற்கும், ஒன்றியத்திற்கும் வந்தடைகிறது.
இது இப்படியாக இருக்க, புல்லூருவிகள் அங்கேயே தலை விரித்தாட, இன்னும் கீழே வர, வர அடிப்படை அரசியல் நாகரீகமே தெரியாதவர்கள் எப்படி அதனை கையாளுவார்கள்?
//தெகா மாதிரி ஆளுங்க காசு கொடுப்பதால்தானே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது?//
டாக், நான் அங்கே லஞ்சம் கொடுத்தேன் என்று கூறவேயில்லையே. அப்படி நடந்ததை கண்ணால் பார்த்ததின் விளைவே இது.
இந்த மினிஸ்ட்ரி விஷயமே, ஒன்றும் பெரிதாக அவர்களிடமிருந்து எதிர் பார்த்து சென்றதல்லவே, டாக், என்னூடைய இந்தியக் கடவுச்சீட்டை அவர்களிடம் ஒப்படைக்கத்தான் அங்கே சென்றேன்:-)).
கையூட்டுக்கு எதிர்ப்பாக புதுக்கோட்டை திருமண சர்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தன்று பட்டு வேஷ்டியும், கழுத்து மாலையுமாக நின்று தகராறு செய்து, மாவட்ட ஆட்சியரை சந்திக்க நான் தயார் என்று நின்ற காலம் என் கண் முன்னால் இன்று வந்து போகிறது...
சரி விடுங்க என்னோட அனுபவத்தை தனிப் பதிவ போட்டுடுறேன் ;)...
NHRCக்கும் NCSCக்கும் அனுப்பிருக்கேன். சரியா?
இந்தத் தளத்தை அறிமுகம் செஞ்சு வச்சதுக்கு மிக்க நன்றி பெரீயப்பா..
//இதில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், இன்றுவரை - 19.12.'07 - இத்தளத்திற்குச் சென்று (எட்டிப்) பார்த்தவர்களே வெறும் 1372 பேர் மட்டுமே என்பது கொஞ்சம் ஆச்சரியமாக (வேதனையாகவும் தான்) இருந்தது. //
இதுல உங்க பதிவை படிச்சுட்டு அந்த தளத்திற்க்கு போனவங்க் பாதி பேர்.
இந்த தளத்தை பற்றி மற்றவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும். 2 மாதம் முன்பே உங்க பதிவை படித்து எனது நண்பர்களுக்கு தெரியபடுத்தினேன் ஆனால் அவ்ர்கள் உபயோகபடுத்தினார்களா என்பது தெரியாது.
Registration No. DARPG/E/2007/08706
அனுப்பிட்டேன்.
ஐயா நல்ல விஷயம். இதுபற்றி பல இடங்களில் பேசியும் எழுதியும் ஓய்ந்துவிட்டது.
//ஒருவேளை எழுத சோம்பேறித்தனப் பட்டால் உதவுவதற்காக நான் ஏற்கெனவே எழுதிய மயிலின் நகலை இங்கே தந்துள்ளேன் - வெட்டி ஒட்ட//
சோம்பேறித்தனமல்ல. எனக்கு ஆங்கிலம் அறைகுறை என்பதால் இதையே வெட்டி ஒட்டி அனுப்பிவிட்டேன். நன்றி.
நண்பரே ! நல்லதொரு முயற்சி - நடக்க வேண்டும் - ம்ம்ம்ம் - நம்பிக்கை வர மாட்டேன் என்கிறது. அடி மேல் அடி வைத்தால் தான் வெற்றி பெற முடியும். இந்தியன் படத்தில் பெரிய கமல் பட்ட துன்பம் நினைவிருக்கிறதா.......
Thanks For your effort .
Could you do something on the same level to ban slavery of House maid servants in INIDA ? I am seeing all new flats /homes are built with MAID room /bath room separate than others .I feel it is slavery and become a big issue later ..
தருமி,
இங்கே பலரும் அவர்கள் அனுபவத்தை சொல்லி இருக்கிறார்கள் , நானும் ஒன்றை சொல்லிக்கொண்டு அல்ப சந்தோஷம் பெறுகிறேன்.
நான் சென்னை வந்த போது ஊரில் இருந்த bsnl தொலைப்பேசி இணைப்பை அப்படியே இங்கே கொண்டு வரலாம் என்று சொன்னார்கள், அதன் படி டிரான்ஸ்பர் செய்ய எழுதிக்கொடுத்து அதற்கான கடிதமும் பெற்றேன், ஆனால் இங்கே வந்தால் தொலைப்பேசி இணைப்பு கொடுக்க இழுத்தடித்தடித்தார்கள்(6 மாதம் டெலி போன் எக்ஸ்சேஞ்ச் அலுவலகத்திற்கு அலைந்தது தான் மிச்சம், கடைசி வரை கால் காசு லஞ்சம் தரவில்லை)
கடைசியில் என்ன நேர்ந்தது என்றால் நான் புதிதாக ஒரு இணைப்பே வாங்கினேன். மிச்சம் கதையை சொன்னால் அது ஒரு இராமாயணம் போல போகும். எனக்கு இதில் 1000 தண்டம் என்பது உபரித்தகவல்.
மிகவும் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். கடிதம் அனுப்பிட்டேன். கடைசி 2 வரிகள் புரியவில்லை என்பதால் அதை தவிர்த்து மற்றவற்றை வெட்டி ஒட்டி விட்டேன்.
திரு. தருமி அவர்கள் சுட்டிய இணையம் மூலம் நிறையப் பேர் பயனடைந்து இருப்பதாக ஒரு குழுமத்தின் மூலம் (மக்கள் சக்தி இயக்கம்) அறிந்தேன்!
தகவல் அறியும் சட்டமும் (http://righttoinformation.gov.in) இப்போது நிறைய பேருக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், இது பற்றி எத்தனை பேருக்கு விழிப்புணர்வு இருக்கிறது என்பதில் வருத்தம்தான். இப்போது, தகவல் அறியும் சட்டத்தை, வெளினாட்டில் இருந்தும் பயன்படுத்தலாம்! நான் சந்திக்கும் அனைத்து நண்பர்களிடமும், இதைப் பற்றி ஒரு பிரசாரமே செய்து வருகிறேன். சினிமா பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள் அறிந்திருக்கும் நமது சகோதரர்கள், இந்த சட்டத்தைப் பற்றிக் கேட்டால் முழிப்பது வேதனையாக இருக்கிறது :(
Petition filed along with cut& paste of your wordings.
To.
DEPT OF ADMINISTRATIVE REFORMS & PUBLIC GRIEVANCES,
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES & PENSIONS
GOVT OF INDIA.
Sir / Madam,
Thanks for the mail dated 12.19.07 in response to my mail dated 09.17.07 regarding traffic regulation in the area near Madurai, TamilNadu.
Let me record my very sincere appreciation for providing a chance to air our grievances thru a website. It suits India’s global image.
I equally feel proud that our grievances reach the right people for redressal. However, in this instance though I have been informed that the S.P. has been instructed to take remedial actions, I have not seen any improvement and any new patrolling in this said area.
May I suggest that when a grievance is lodged with you and when instructions go to the concerned, if the copy of that is sent to the complainant also, we may be able to pursue it further for speedy and proper implementation. It will also avoid the bureaucrats giving the instructions simple shirk.
Since this website appears to be a new attempt I request that this suggestion is considered as a modification of the present modus operandi.
Thanks.
Registration No. DARPG/E/2008/00024
Post a Comment