Monday, December 31, 2007

246. மீண்டும் ஒரு வேண்டுகோள்

தொடர்பான முந்திய பதிவு

மத்திய அரசு குறை தீர்க்க அமைத்துள்ள இணைய தளத்தின் hit counter மிகவும் ஆச்சரியமான முறையில் வெகு வெகு வேகமாக கூடிக்கொண்டே போவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.(இந்த நிமிடம் எண்ணிக்கை சரியாக 6000) என் முந்திய பதிவு இடப்படுவற்கு முன் வெறும் 1300-களில் இருந்த எண்ணிக்கை பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் 2100-களில் உயர்ந்தது பார்த்து - காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக (?) - மகிழ்ந்து போனேன். அந்த எண்ணூத்தி சொச்சம் பேரில் 5% மக்கள் மட்டுமேகூட பதிவிட்டிருந்தாலும் 40 பேருடைய விண்ணப்பங்கள் ஒரே கருத்துக்காக போய்ச் சேர்ந்திருக்கலாமேவென எண்ணினேன். (நெனப்புத்தான்!!!)
எல்லோருமே ஒரே குறையைப் பற்றி எழுதுவதை விடவும் பல குறைகளை எழுதி அவைகளில் சிலவாவது குறைதீர்க்கப் பட்டால் நல்லதுதானே என்ற எண்ணத்தில் இன்னொரு வேண்டுகோளை உங்களிடம் வைக்கின்றேன்.

அடுத்த குறையாக நமது தொடர்வண்டிகளில் இருக்கும் கழிப்பறைகளின் நிலை உங்களுக்குத் தெரியும்தானே; அதைப் பற்றிய ஒரு விண்ணப்பத்தை இந்த இணையதளத்திற்கு அனுப்பியுள்ளேன். ( Registration No. DARPG/E/2007/08851; நகல் கீழே). என் முந்திய பதிவில் இந்த இணைய தளத்திற்கு என் வேண்டுகோளுக்கிணங்கி முதலில் விண்ணப்பம் அனுப்பிய முதல் 5 பேரை மட்டும் இந்த விண்ணப்பம் சார்ந்த கருத்துக்கும் ஒரு விண்ணப்பம் அனுப்ப வேண்டுகிறேன். அவர்கள்:

1. தென்றல்
2. வவ்வால்
3. மாசிலா
4. தெக்ஸ்
5. நாகை சிவா


இப்படி விண்ணப்பம் அனுப்புவதில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ள மற்றோருக்கு என் வேண்டுகோள்:

நமக்கென்ன பிரச்சனைகளா இல்லை. அவைகளில் உங்கள் மனதில் தோன்றும் பிரச்சனைகளை நீங்கள் ஏன் பதியக் கூடாது? பலரும் பதிவீர்கள்; பதிவிடவேண்டுமென வேண்டுகிறேன்.

அப்படி நீங்கள் அனுப்பும் உங்கள் விண்ணப்பத்தின் நகல்களை இப்பதிவின் பின்னூட்டத்தில் இட்டால் நம் எல்லோரின் பார்வைக்கு அவைகள் வருவது நலமாயிருக்கும். விண்ணப்பங்களுக்கு வரும் பதில்களையும் (எல்லாமே ஒரு நம்பிக்கைதானே!) இங்கு மீண்டும் பின்னூட்டமாக இட்டால் நலமாயிருக்கும்.

என்னென்னமோ பண்ணியிருக்கோம்; இது பண்ண மாட்டோமா ...?


நான் இன்று அனுப்பிய விண்ணப்பத்தின் நகல்:

Recent media reports say that Indian Railways is one of the very few rail lines in the whole world not to have safe lavatories. What my teacher jokingly said half a century back – a man traveling from Tirunelveli to Delhi with an infected bowel would spread his ‘bug’ to the whole length of the country – still stands sadly true. And it is also a real shame to our growing nation.

IMMEDIATE AND TIME-BOUND STEPS SHOULD BE TAKEN AT THE EARLIEST TO INTRODUCE SAFE SANITARY SYSTEM IN OUR TRAINS. Mode of handling the waste should also be mechanical and safe.



உங்கள் அனைவருக்கும் என் கனிவான

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

27 comments:

Thekkikattan|தெகா said...

தருமி அய்யா,

என்னய பிடிச்சி இப்படி கோதாவில இறக்கி விட்டீங்களே :-)).

முதலில் இந்தாங்க என்னோட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

இப்ப இந்தாங்க விசயம், இப்படித்தான் அந்த கடிதத்தை எழுதியிருக்கேன்...

Dear Sir or Madam:

When I was in India this year in Jan'07, happened to travel extensively around Northern part of India. All of my traveling experience with Indian railway system was satisfactory, but with one great woe worth bring it to your knowledge.

The sanitory condition of our train is unsightly and disgusting. Having seen a pile of stools heaped up at every embankment of every station throughout the country, I was almost nervous to get out of the train to fetch even a bottle of drinking water.

It was even worse to see the situation, when it rains amidst the swarming house flies around. Therefore, I strongly recommend some sort of mechanised collection of human waste should be done in the railway road and the lavatory itself. In addition, a periodical cleaning and its supervision of doing so should regularly be done may prevent some cantagious diseases spreading along the rail road.

Your timely action on this matter would really be conducive to people and the country's tourism image at large.

Thanking you in advance for an immediate action!!

Sincerely,

...

Thekkikattan|தெகா said...

அப்படி அனுப்பினதுக்கு சாட்சியா இதனை கொடுத்தாங்க...

Registration No. DARPG/E/2008/00001

வவ்வால் said...

தருமி,

நீங்கள் சொன்னப்படி போட்டாச்சு, கூடுதலாக "physically challanged persons" களுக்கு தேவையான வசதிகளையும் செய்ய சொல்லி இருக்கேன்.

ஆராய்ச்சி மணியை ஆளுக்கொரு ஒருதடவை அடித்தால் என்றாவது அரசன் காதில் விழாமலா போக போது!

Aravindhan said...

DARPG/E/2008/00003

Growing Pollution and Global Warming

Respected Sir/Madam,


Despite UN's call to all countries to reduce pollution,I dont find any change in the attitude of the people especially the upper middle-class people who have ignored the public transport system completely.It pains to see lot of cars congesting the roads with just a single person sitting.Bangalore roads have already crossed the limit of vehicles it can sustain.I request the pollution control board to enforce stringent measure to curb this pollution menace and also save the roads.

Addressed to Ministry of Environment and Forests

தருமி said...

தெக்ஸ்,
வவ்ஸ்,

இருவருக்கும் நன்றி.

தருமி said...

aravindhan,
i have c & p-ed your content directing to Ministry of Urban Development.

Registration No. DARPG/E/2008/00005

cheena (சீனா) said...

நண்பரே !! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். C & P செய்கிறேன்.

தருமி said...

நன்றி சீனா.

அதோடு வேறு பிரச்சனைகள் பற்றி எழுதி அதை இங்கே சொல்லுவீர்களென எதிர்பார்க்கிறேன்.

வவ்வால் said...

தருமி,

நன்றி!

புத்தாண்டு வாழ்த்துகள், இதற்கு முந்தைய புகாரின் போது ,அந்த புகார் எண்ணை குறிக்க மறந்து விட்டேன். இந்த ,முறை நோட் பேடில் போட்டு வைத்திருந்தேன், நேற்று நள்ளிரவுத்தான் உங்கள் பதிவைப்படித்தேன் அப்படியே உங்கள் கடிதத்தை காபி பேஸ்ட் போட்டேன் கூடுதலாக எனது இன்னொரு கோரிக்கையும் சேர்த்துப்போட்டேன்.

எனக்கு தான் இந்தாண்டின் இரண்டாவது புகார் எண் எனக்காட்டியது, பார்த்தால் எனக்கு முன்னர் தெகா போட்டு இருக்கார் போல, எனது எண்ணையும் இப்போது போட்டு விடுகிறேன்.

Registration No. DARPG/E/2008/00002

அடுத்தடுத்த எண்கள் எல்லாம் பதிவர்களின் புகார் எண்ணாக வருகிறது, அப்படிப்பார்த்தால் இங்கே இருந்து தான் அதிகம் புகார் போகிறது போல! :-)

தருமி said...

DARPG/E/2008/00001 - இந்த வருஷத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கார் தெக்ஸ்.

00002 - நீங்க

00003 - அரவிந்தன்

00004 - ஒருவேளை சீனாவோ ?

00005 - நான்

ஒரு மாதிரி மொத்த "குத்தகையை" தமிழ் பதிவுலகம் எடுத்திருச்சோ !!

SurveySan said...

If everyone adds the same problem over and over, will it get enough weight and attention? OR will officials get irritated and delete all?
what will be the pshycological impact for the reviewer of all these petitions?

lets think about that before bombaring that site :)

another suggestion is to create a separate group blog, just for these. add a request and file it there. and track status ,concerns.

when we file it, we could send that URL to them to show how many people have concerns about that particular issue.

sorry about the english.

http://www.fixmyindia.org

:)

தருமி said...

sarvEsan,

//If everyone adds the same problem over and over, will it get enough weight and attention?//

நானும் இவ்வாறு எண்ணியதாலேயே இவ்வாறு எழுதியுள்ளேன்:
//எல்லோருமே ஒரே குறையைப் பற்றி எழுதுவதை விடவும் பல குறைகளை எழுதி அவைகளில் சிலவாவது குறைதீர்க்கப் பட்டால் நல்லதுதானே என்ற எண்ணத்தில் ..//

another suggestion is to create a separate group blog, just for these. add a request and file it there. and track status ,concerns.

நானொரு க.கை.நா. முழுவதுமாக புரியவில்லையாயினும், 'மண்டபத்தில் ஆராய்ச்சி மணி தொங்குது, மனசுள்ளவர்கள் ஒரேயிடத்திற்கு வந்து மணியடிக்க வைக்கலாம்/ என்ரு சொல்கிறீர்கள் என்ற வரை புரிகிறது. மிக்க நல்லது.

அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டுகிறேன். வழிமுறைகளை (யார் வேண்டுமானாலும் பதிவேற்ற முடியுமா? இல்லை, யாரேனும் ஒருவர் பொறுப்பில் பதிவேற்றலாமா ...?) முறைப்படுத்துங்கள். முயல்வோம்.

//ஊர் கூட தேர் இழுப்போம் // (நாகை சிவா)

தருமி said...

என் முதல் விண்ணப்பத்திற்கு வந்த பதிலை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே .. மற்றபடி எந்த வித மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஆகவே மீண்டும் வேதாளம் ... என்பதாக அடுத்த மயில்:

To.
DEPT OF ADMINISTRATIVE REFORMS & PUBLIC GRIEVANCES,
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES & PENSIONS
GOVT OF INDIA.


Sir / Madam,

Thanks for the mail dated 12.19.07 in response to my mail dated 09.17.07 regarding traffic regulation in the area near Madurai, TamilNadu.

Let me record my very sincere appreciation for providing a chance to air our grievances thru a website. It suits India’s global image.

I equally feel proud that our grievances reach the right people for redressal. However, in this instance though I have been informed that the S.P. has been instructed to take remedial actions, I have not seen any improvement and any new patrolling in this said area.

May I suggest that when a grievance is lodged with you and when instructions go to the concerned, if the copy of that is sent to the complainant also, we may be able to pursue it further for speedy and proper implementation. It will also avoid the bureaucrats giving the instructions simple shirk.

Since this website appears to be a new attempt I request that this suggestion is considered as a modification of the present modus operandi.

Thanks.

Registration No. DARPG/E/2008/00024
2.1.08

தருமி said...

அடுத்தும் ஒன்று:


To
DEPT OF ADMINISTRATIVE REFORMS & PUBLIC GRIEVANCES,
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES & PENSIONS
GOVT OF INDIA.


Sir / Madam
I come to know that a student sent a mail to this website about the child labour in his college. A letter asking for clarification was sent to the college authorities. So far so good!

But along with that letter, the detail of the student was also sent and he was harassed a little by the college authorities.

I wish that a provision should be given to the complainant whether he wants his identity given out or not to avoid unnecessary and unsavoury repercussions as in this particular case.

Thanks.

Registration No. DARPG/E/2008/00025

2.1.08

Aravindhan said...

pending grievances போய் பாருங்கபா.நம்ம பிரச்சனைய சொன்ன departmentஓட யோகிதை என்னனு தெரியும்
நான் complain பண்ணது ministry of environment and forests

as on 31/08/2007
மொத்த கேஸ் - 9
2 வருடம் மேல் ஆகியும் முடியாமல் இருக்கும் கேஸ் - 3

மொத்தத்துல இது பூட்ட கேஸ் மாமு

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

அரவிந்தன்,

உங்கள் கடிதத்தில் சொன்னதுபோல் --- கொடுத்த குற்றச்சாட்டுக்கு, அந்த நிறுவனத்திற்கு விசாரணைக் கடிதம் வந்ததல்லவா .. அதுவே ஒரு ஆக்கபூர்வமான விஷயமில்லையா..?

Aravindhan said...

ஆமாம் நீங்கள் சொன்னது போல், சரியாக குறிப்பிட்ட நிறுவனத்துக்கு போய் சேர்ந்து அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.என்ன நடந்தது என்று மொத்த விஷயங்களையும் சேகரித்து நான் உங்களுக்கு கூடிய விரைவில் தருகிறேன்

பாச மலர் / Paasa Malar said...

புத்தாண்டில் புதிய நல்ல முயற்சி..வாழ்த்துகள்

cheena (சீனா) said...

நண்பரே !! தங்களை TAG செய்து அழைத்திருக்கிறேன். பார்க்கவும்

நமது மதுரைப் பதிவில் தான்

http://pathivu.madurainagar.com

கிருத்திகா said...

நண்பரே !! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
குறைகளை எங்கு சொல்வது என்று தெரியாமல் இருந்தோம். வழிகட்டியதற்கு நன்றி.

Coimbatore, is fast developing, and is next to chennai in all aspects. However the mobility within the city needs to be developed.

One bottleneck we face and needs immediate attention is the congestion due to flyovers.

Coimbatore has only two flyovers and both of them are poorly constructed.

During rainy season, these two flyovers within the city, increases the difficulty of traffic movement.

The underways are getting blocked due to poor planning of the drainage and becomes unusable. Hence all the trafic are routed through the overbridge.

At times it takes 45 minutes to cross from oneside of the flyover to the otherside.

Registration No. DARPG/E/2008/00108

Unknown said...

தருமி அய்யா,

தெக்ஸோடத அப்பிடியே காப்பி பண்ணி அனுப்பிட்டேன் :)

Your Complaint is Successfully Registered. Note your

Registration No. DARPG/E/2008/00117

for later references.

நன்றி!!

தென்றல் said...

தருமி அய்யா, புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அட.. இப்பதான் கவனிக்கிறேன்.. அனுப்பிட்டா போச்சி..

தென்றல் said...

1) தொடர்வண்டிகளில் இருக்கும் கழிப்பறைகளின் நிலை: Registration No. DARPG/E/2008/00135

2) Growing Pollution: Registration No. DARPG/E/2008/00136

அந்தந்த துறையில வேலை பார்க்கிறவுங்ககிட்ட (atleast GM, Director levelல) கேக்கணும்.. இப்படி ஒரு இணையதளம் இருக்கே.. உங்களுக்கு அதைப்பத்தி ஏதாவது 'சர்குலர்' வந்ததானு?

SurveySan said...

நீங்க இன்னுமொரு அஞ்சு பேர அனுப்ப சொல்லி பேர் போட்டிருந்தீங்களே,அதனாலதான் அப்படி கேட்டிருந்தேன்.

சரி, ஏதோ மேட்டர் சொல்றேன்னீங்களே?
fixmyindia.blogspot.com வாங்கி வச்சிருக்கேன். இந்த மாதிரி ப்ரச்சனைகளை அங்க ஒரு காப்பி போட்டு வக்கரேன்.

btw, ஒரு புது வெளையாட்டுல உங்கள சேத்து விட்டுட்டேன்.
Click here for details

Aravindhan said...

his is very important information about a web site called as www.saferindia.com.

This is a site of an NGO started by Ms Kiran Bedi you can go to this site an log your complaint regarding any crime if the police at your place is not accepting your complaint. Then this NGO will mail your complaint to the DGP of your area. You can also use this mail as the legal document in case of filing a case in the court of judgment.

This is to be noted that this site is directly administered by Ms Kiran Bedi so all your mails directly goes to her.

Friends Plz spread this information in your network so that any one in such need can go to this site and launch his/her complaint.

வவ்வால் said...

தருமி,
உங்கள் விடா முயற்சிப்பாராட்டுக்குரியது!

அடிக்கடி அங்கே மனுப்போடுறிங்க, அதுவே பெரிய விஷயம்!

அரசு எந்திரம் என்பது எறுமை மாடுமாதிரி மெதுவாத்தான் நகரும், எனவே "persistant" ஆக இருந்தால் தான் காரியம் ஆகும் என்பதை நானும் அறிவேன்!

காசாப்பணமா ஆளுக்கு நாளு மயில் அனுப்பியாவது அவங்களை இம்சை பண்ணுவோமே! :-))

வாங்குற சம்பளத்துக்கு அந்த மயிலை டெலிட் பண்ற வேலையாச்சும் செய்யட்டும்!

-------------------------------
//If everyone adds the same problem over and over, will it get enough weight and attention? OR will officials get irritated and delete all?
what will be the pshycological impact for the reviewer of all these petitions?//

சர்வே ,

மேல சொன்னவாறு தான் அப்படி ஒரு இணையத்தள வழி வைத்து இருக்கும் போது அதை வைத்து என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம், மேற்கொண்டு ஆவது ...அதன் "விதிப்படி" என விட்டுத்தள்ளுவோம்!

மேலும் புகார் அனுப்பும் போது ஒரே மாதிரி இல்லாமல் ஆளுக்கு கொஞ்சம் சேர்த்து மாற்றி அனுப்பலாம், நான் கூட ஒரு பிளாட் பார்ம்ல இருந்து மாற ஊனமுற்றோர்க்கு சரியான வசதி இல்லை என சேர்த்து சொன்னேன், அப்படியே மக்களும் செய்தால் கூட எதுவும் ஒரே மாதிரியாக தெரியாதே!

ஒரு வேளை உங்கள் "fixmyindia" வழியாக இதை செய்தாக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தால் எனக்கெந்த மறுப்பும் இல்லை, ஆனால் அப்படி மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லையே!

எந்த வலைப்பதிவரும் எப்போது வேண்டுமானாலும் இப்படி சொல்லி செய்ய சொல்லலாம் , அதன் பின் விளைவுகளை எல்லாம் பதிவில் அப்படியே தொடர்ந்து பார்க்க வேண்டும் எனில் பொறுமையாக அப்பதிவுக்கு வந்து பார்த்து தான் ஆக வேண்டும்.

என் தெருவில் சாக்கடை உடைத்துக்கொண்டு ஓடுகிறது என்றால் "சாக்கடை உடைப்பு"@பிலாக்ஸ்பாட்.காம் என்று தனி பிலாக் எல்லாம் போட்டு கருத்தை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. என்னால் முடிந்தது ஒரு பதிவு, கூட சேர்ந்து குரல் கொடுங்கள் என வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க முடியும்!

எல்லாவற்றுக்கும் தனி பதிவு வைத்து அங்கே வாங்கனு சொன்னா அது பிடிக்காமலே பலர் எதுவும் சொல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது!

Post a Comment