மதுரையில் MADURAI READERS' CLUB (MRC) என்றொரு அமைப்பிருக்கிறது. மாதமிருமுறை கூடுகிறோம். உறுப்பினரல்லாத ஒருவரை ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவரவர் துறையில் ஒரு மணி நேர அளவிற்குப் பேச அழைக்கிறோம். அதன்பின் உறுப்பினர்களில் ஒருவரோ இருவரோ அவர்களில் சமீபத்தில் வாசித்த நூல்களைப் பற்றி ஒரு அறிமுகம் அளிக்கவேண்டும்.
இன்று 26-10-'08 நடந்த கூட்டத்தில் யெஸ்.பாலபாரதி எழுதியுள்ள "அவன் - அது = அவள்" என்ற நூலையும், லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய "நான்
நூலின் ஆசிரியர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் ...
பேசி முடிக்கும்போது பதிவுலகத்தைப் பற்றியும் கூறினேன். அதைப் பற்றித் தெரியாதவர்களும் இருந்தார்கள். அப்போது ஒருவர் பதிவுலகத்தைத் தங்களுக்குப் போட்டியாக நினைப்பதால் அச்சு ஊடகங்கள் பதிவுலகை வேண்டுமென்றே இருட்டடிப்பு - underplay - செய்ய முயற்சிப்பதாகக் கூறினார். தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் இப்போதைக்கு நான்கைந்து பதிவர்கள் மட்டுமே இருக்கிறோம்; அதிலும் இவர்களில் நண்பர் சீனா மட்டுமே நன்கு இயங்கி வருகிறார்; மதுரையின் மானம் காக்க (!!) இன்னும் நிறைய பதிவர்கள் வரவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டேன்! :)
*
*
26 comments:
உள்ளேன் ஐயா :-)
ஆனா நீங்க ஒரு பதிவு போட்டாலும் 100 பதிவுக்கு சமமாச்சே... :)))
ஃஃஃஃ
பதிவுலகம் அலுவலகத்தில் கணிணி முன் அமர்ந்து வேலை செய்வபவர்களிடையே வெகு வேகமாக பரவ சாத்தியம்..மதுரை அந்த விதயத்தில் இன்னும் வளரனும்...அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..
ஃஃஃஃஃ
மதுரை மக்களின் வாசிப்புணர்விற்கு ஊட்டம் போடும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்...
MRC பற்றிய அறிமுகப் பதிவினிற்கு நன்றி. TBCD கூறியது போல் கணினியின் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் மதுரையில் குறைவோ ? 24 மணி நேரமும் கணினியுடன் இருப்பவர்கள் பதிவர்களாகச் சந்தர்ப்பம் அதிகம்
ம்ம்ம்ம் பார்ப்போம்
அய்யா,
மதுரைகாரங்க கணக்கில் நானும் வருவேனா?
முத்து தமிழினி,
நீங்கல்லாம் மதுரை(மரு)மகனாக இருந்தாலும், நான் இங்க சொல்றது மதுரையில் வாழ்ந்துவரும் பதிவர்கள் பற்றியது. நாங்க ஒரிஜினல் மதுரக்காரவுகளையே உட்டுட்டு இப்போ இங்கன இருக்கிற ஆளுக கணக்க மட்டுமில்ல எடுத்திருக்கோம். இதில நீங்க எப்படி சேர்ரது . ?
யாத்ரீகன்,
இப்படி இனிமயாவது ரெகுலரா வந்து அட்டென்டன்ஸ் கொடுத்துட்டு ஒழுங்கான பையனா இருங்க .. சரியா?
tbcd,
//ஒரு பதிவு போட்டாலும் 100 பதிவுக்கு சமமாச்சே... //
ஏங்க இப்படி சொல்லிட்டு :))) இப்படி போட்டா மனசு எம்புட்டு கஷ்டப்படும்னு தெரியாதா உங்களுக்கு ..
:-(
//கணிணி முன் அமர்ந்து வேலை செய்வபவர்களிடையே வெகு வேகமாக பரவ சாத்தியம்..//
அப்படியா சொல்றீங்க... அப்டின்னா கோவை, ஈரோடு பதிவர் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால்கூட நீங்க சொல்றது சரி மாதிரி தெரியலையே .. ?
சீனா,
//ம்ம்ம்ம் பார்ப்போம்//
ரிப்பீட்டேய் ... !
மிகவும் நல்ல செயல், பாராட்ட மனமில்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
போற்றுகிறேன் ! :)
கோவி,
// பாராட்ட மனமில்லை.//
நெஜமா பயங்காட்டீட்டீங்களே ... !
nan sethupathy school, yadava college
//உறுப்பினர்களில் ஒருவரோ இருவரோ அவர்களில் சமீபத்தில் வாசித்த நூல்களைப் பற்றி ஒரு அறிமுகம் அளிக்கவேண்டும்.//
நல்ல முயற்சி
கபீஷ்
//nan sethupathy school, yadava college//
நம்ப முடியாது.
பொய்யன் அப்டின்னு பேரு வச்சிக்கிட்டு இருக்கிற ஆளு சொல்றதை எப்படிங்க நம்புறது?
:)
யாதவா காலேஜ்தானா இன்னும்; இல்லை தாண்டியாச்சா?
நன்றி கபீஷ்.
பொதுவாக பதிவுலகம், சாட் உலகம் எல்லாம் வெளிநாடு வாழ தமிழர்க்கு தான் அதிகம் ஈடுபாடு இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கு தமிழ் பேச படிக்க இணையம் தான் ஒரே வடிகால்.
மதுரை, நெல்லை, திருச்சியில் டீக்கடை, பஜார் எங்கு போனாலும் நம் கருத்து ஒத்த நண்பர்கள் கிடைப்பார்.
அது போக பதிவுலகமும் இன்று நூறு சதவீதம் சிறப்பானதாக இல்லை, குழு மனப்பான்மை, தற்பெருமை பேசுதல், வீண் விளம்பரம் தேடல் போன்றவைதானே மேலோங்கி இருக்கின்றது.
குப்பன்_யாஹூ
குப்பன்_யாஹூ
//வெளிநாடு வாழ தமிழர்க்கு தான் அதிகம் ஈடுபாடு இருக்கும். //
//அப்படியா சொல்றீங்க... அப்டின்னா கோவை, ஈரோடு பதிவர் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால்கூட நீங்க சொல்றது சரி மாதிரி தெரியலையே .. ?//
இதுக்கென்ன சொல்றீங்க... இங்க உள்நாட்டிலேயே மதுரையிலிருந்து எழுதுறவங்க ரொம்ப கம்மி அப்டின்றது என் நினைப்பு. நானும் சிலரை கொஞ்சம் கிண்டிப் பார்த்தேன். இதுவரை பலிக்கவில்லை.
தருமி சார்(அய்யா)
குப்பன்_யாஹூ said... சொல்வதும் சரி என்றேப்படுது..
நான் திருச்சி, திருச்சி பதிவுலகம் எப்படி சார்?
ஆ.ஞானசேகரன்,
குப்பன்_யாஹூ சொல்வது மிகச் சரிதான். ஆனாலும் உள்நாட்டுக்குள் நெல்லைப் பகுதிகளில் உள்ளதுபோல், கோவைப் பகுதிகளில் உள்ளது போல் மதுரையில் (உங்கள் ஊரையும் சேர்த்துக் கொள்ளலாம்போலும்) பதிவர் எண்ணிக்கை இல்லாதிருப்பது ஏனென்றுதான் புரியவில்லை.
'வெறும்' தருமிகூட போதுமே .. ஏனிந்தக் குழப்பம். :-)
ஜாலிஜம்பர் ஏன் முன்பை போல எழுதுவதில்லை!
நீங்கள் நினைத்தால் நிறைய பதிவர்களை உருவாக்கலாம் என்று நம்புகிறேன்
ஐயா, மதுரையில் இருந்து இன்னொருவன் !!!!
வாழ்த்துங்கள், வளர்கிறேன் !!!!
நட்புடன்,
பாலா ....
darumi iya,
i am also from madurai, read my article.
kaveriganesh.blogspot.com
பாலா,காவேரி கணேஷ் (வைகை கணேஷ் இல்லையோ!!)
ரெண்டு பேரும் மதுரைக்காரவுக... ஆனா இப்ப எங்க இருக்கீகன்னு தெரியலையே!
இப்பவும் மதுரை தாங்க ஐயா !
சோலைஅழகுபுரம் நம்ம ஏரியா .... :)
iya,
nan maduraiyil than panthadi area vil irukiren.
anbudan
kaveri ganesh
Post a Comment