ஆரம்பத்திலேயே கொஞ்சம் தடுக்கிக்கொண்டேனோ? நான் புரிந்துகொண்ட வரை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30க்கு முதல் பதிவிடச் சொன்னதாக நினைத்து அப்படியே போட்டும் விட்டேன். அதிலும் கூட அப்பதிவை - upload - ஏற்றுவதில் ஒரு சின்னத் தகராறு. எழுதிய தேதியில் ஒரு புள்ளி விட்டுப் போக நான் ஏறுவேனா என்று பதிவு அடம் பிடிக்க கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து சீனா உதவ .. ஒரு வழியாக ஏற்றி முடித்தேன். ஏன் இன்னும் 'வினவு' இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்ட துளசி வந்து மண்டையில் ஒரு சின்னத் தட்டு தட்டிய பிறகுதான் ஏதும் தவறு செய்திருப்போமோவென தோன்றியது. வழக்கமாக திங்கட்கிழமைதான் புதிய நட்சத்திரங்கள் தமிழ்மண முகப்பு வானத்தில் தோன்றும் என்பது தெரிந்திருந்தாலும் ஒருவேளை இப்போது ஞாயிறன்றே (ஞாயிறும்)சூரியனும் நட்சத்திரமும் ஒரு சேர வரவைக்க ஆரம்பித்திருக்கலாமோ என்று எண்ணியதால் இந்த தவறு.
யாருக்கும் இதனால் ஏதும் பாதிப்பு இல்லைதான். இருந்தாலும் 'வினவு' இருக்கும்போதே நானும் தலையைக் காட்டியது கொஞ்சம் சின்ன நெருடலாக இருக்கிறது. புஷ் இருக்கும்போதே ஒ
சாபாமா தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டாலும் ஜனவரி மாதம் வரை பின்னவர் பொறுத்திருக்க வேண்டுமல்லவா .. இப்படி 'முந்திரிக்கொட்டை' மாதிரி முந்திக் கொண்டமைக்கு வருந்துகிறேன். வினவு குழுவினரிடம் மாப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அட! நான் தான் மொடாக்குத்தனமா தப்பு பண்ணியிருந்தேன் என்றால் அதோடு தமிழ்மண அறிவிப்பாக இப்படி ஒன்று வருகிறது ....
//தளத்தின் பராமரிப்பு வேலைகளுக்குப் பிறகு புது இடுகைகளை தமிழ்மணத்தில் இணைப்பதில் பிரச்சனைகள் உள்ளது //
பிரச்சனைகள் தீர்ந்த பிறகு அடுத்த பதிவிடலாமா அல்லது காத்திருக்கலாமா என்று தெரியவில்லை.
உன் கடன் பணி செய்வதே; பலனை எதிர்பாராதே அப்டின்னு நினச்சுக்கலாமா அப்டின்னா, சூப்பர் ஸ்டார் வேற ஒரு கீதாபதேசம் செஞ்சிருக்கார்.
பதிவைப் போடு; பின்னூட்டம் எதிர்பார்க்காதே - இதுதான் சரியா? இல்லை சூ.ஸ். சொன்னது மாதிரி பதிவைப் போடு; பின்னூட்டம் எதிர்பார் அப்டின்றது சரியா? பின்னதுதான் எல்லாப் பதிவர்களுக்கும் சரி என்று தோன்றும். அதனால், நான் காத்திருக்க வேண்டும்.
ம்ம்...ம்ம்.. மதுரைக்கு இப்படி ஒரு சோதனையா!!??
25 comments:
எப்படியோ இதுவே ஒரு பதிவானதில் எனக்குச் சந்தோஷம். பின்ன என்ன
தருமி சார்(சாரி(,
நான் மட்டுமே குழப்புவேன்னு நினைச்சுக் கிட்டு இருக்கிற விஷயத்தை நீங்களும் செய்ததா சொன்னா ஒரு அல்ப ஆனந்தம் இருக்கத்தான் இருக்கு:)
அவுட்லைன் கொடுத்து உங்களை எழுதச் சொன்ன மாதிரி ஆகிவிட்டதோ:)
இருந்தாலும் பரவாயில்லை. நான் 66ல் விட்டுவிட்ட வந்த மதுரை, 2003ல் பார்க்கையில் வேதனையாக இருந்தது.
இருந்தும் பிள்ளைகளிடம் மதுரைப் பெருமையைச் சொல்லி பெருமையடித்துக்கொள்ளத் தவற வில்லை.
அதுக்குத் தான் உங்களிடம் ஒரு அப்ப்ளிகேஷன் போட்டேன்.
:))
நீங்க எந்த திண்ணைய சொல்லுறீங்க... இதுல ஏதும் உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே ;)
பதிவை போடு பேஜ் விஸிட்டை எண்ணு என்பது தான் சரியா இருக்கும் உங்களுக்கு...
நட்சத்திர வாழ்த்துகள்!
//ஒசாமா //
ஒபாமா. மதுரைக்கு வந்த சோதனையால ரொம்ப பதட்டத்துல இருக்கீங்க போல :)
//ஒசாமா //
இங்க தேர்தல் சமயத்தில இப்படி குழப்பி எழுதியே "ஒபாமா" ஓட்டை சரிய வைக்க பார்த்தாங்க, நீங்களுமா ;-)...
சொல்லவே இல்லை நீங்க ரிபப்ளீகன்னு :-P
சரி, ஏன் இதுக்குப் போயி றென்சன் இப்படி ஆவுறீங்க, தருமி... லூசுல விடுங்க.
//புஷ் இருக்கும்போதே ஒசாமா தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டாலும் ஜனவரி மாதம் வரை பின்னவர் பொறுத்திருக்க வேண்டுமல்லவா .. //
:))
கப்பி,
தெக்ஸ்,
கொத்ஸ்
ஹி... ஹி... தப்பு பண்ணிட்டேன். சுட்டியமைக்கு நன்றி
வல்லி,
//நான் மட்டுமே குழப்புவேன்னு நினைச்சுக் கிட்டு இருக்கிற விஷயத்தை..//
அடடே நீங்களுமா குழப்புனீங்க...இந்தப் பக்கம் அல்ப சந்தோசம் பட்டுக்கலாமோ??!!
//அவுட்லைன் கொடுத்து உங்களை எழுதச் சொன்ன மாதிரி ஆகிவிட்டதோ:)//
அப்படி சொன்னாலும் தப்பில்லையல்லவா ..
மிஸ்டர் தருமி, மொக்கைப் பதிவாக இருந்தாலும் நல்லா சமாளிச்சிட்டிங்க, வெரிகுட், திங்கள் கிழமை பதிவு ஞாயிற்றுக்கிழமையே வந்துட்டா ? ஆஆஆ, நான் ஞாயிற்றுக் கிழமை போட்ட பதிவு திங்கள் கிழமை மாலைத்தான் தமிழ்மண முகப்பில் வந்தது.
எது நடக்க இருந்தது அது (முன்கூட்டியே) ஓடியது !
(உங்க முதல் பதிவு தான்)
எல்லாம் பகவான் செயல் !
:)
கோவி,
இன்ஷா அல்லா ... !
ஒரு 'சின்னத் தட்டு'க்கே இந்த எஃபெக்டா? :-)))))
நட்சத்திர வாழ்த்துகள்!
வாங்க தருமி ஸார்! நட்சத்திர வாழ்த்துகள்!
//தருமி said...
கோவி,
இன்ஷா அல்லா ... !
//
இதுக்கு ஒரு கதை இருக்கு, திருடன் தெரியாத்தனமாக பகவான் பெயரை உச்சரித்துவிட்டதால் அவனுக்கு மோட்சம் கிடைத்ததாம், :)
லோகத்துல பகவான் பெயரை உச்சரிக்கிறவாளுக்கே மோட்சம் என்றால் சதா அவனை சேவிக்கிறவாளுக்கு என்னவெல்லாம் கிடைக்கும், நன்னா யோஜனைப் பண்ணிப் பாருங்கோ !
:)
துளசி,
சின்னத் தட்டுன்னாலும் டீச்சர் தட்டல்லவா?!
//பகவான் பெயரை உச்சரித்துவிட்டதால் அவனுக்கு மோட்சம் கிடைத்ததாம், :)//
அட கோவிந்தா!
தமிழ் தாத்தாவிற்கு நட்சத்திர வணக்கங்கள்!
சிங். செயகுமார்.
அட என்னங்க ரொம்ப பெரிய பட்டமெல்லாம் குடுக்குறீங்க. தாங்காதுங்க.
ஆமா, நாம சந்திச்சிருக்கோமா?
நட்சத்திர வாழ்த்துக்கள் தருமி ஐயா!
இரண்டாம் இன்னிங்க்ஸில் இன்னும் அடிச்சி ஆட வாழ்த்துக்கள்! :)
//புஷ் இருக்கும்போதே ஒசாமா தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டாலும் ஜனவரி மாதம் வரை பின்னவர் பொறுத்திருக்க வேண்டுமல்லவா .. //
சும்மா கிடந்த ஓபாமாவை, ஓசாமாவைப் பிடிக்காம வுடமாட்டேன்-ன்னு கறுவ வைக்கத் தானே இப்படித் திட்டம் போட்டீங்க?
உங்க பதிவைப் படிச்சிட்டுத் தான் இப்பா ஓபாமா கறுவறாரு! :)
//பகவான் பெயரை உச்சரித்துவிட்டதால் அவனுக்கு மோட்சம் கிடைத்ததாம், :)//
//அட கோவிந்தா!//
கோவிந்தா கோவிந்தா
(ரெண்டு முறை சொல்லணும்-ல? அதான்! :))
kannabiran, RAVI SHANKAR (KRS),
//உங்க பதிவைப் படிச்சிட்டுத் தான் இப்பா ஓபாமா கறுவறாரு! :)//
அம்புட்டு எஃபெக்டா நம்ம பதிவுக்கு !!
kannabiran, RAVI SHANKAR (KRS),
//கோவிந்தா கோவிந்தா
(ரெண்டு முறை சொல்லணும்-ல? அதான்! :))//
ஓ! அதுவேற அப்படியா?
அட கர்த்தாவே!
(அப்பாடா .. அந்தா இந்தான்னு மூணு சாமியையும் கூப்பிட்டாச்சு!)
ஒரே ஒரு தபா..:-)
Post a Comment