*
'The proof of pudding is in the eating' அப்டின்னு சொல்லுவாங்க. சரியா சமைச்சா சட்டிதான் மிஞ்சும் என்று தமிழ்ப்படுத்துவோமா? இந்த லாஜிக்கை அப்படியே நம்ம பதிவுகளுக்குக் கொண்டுவந்து நல்ல பதிவுன்னா நிறைய பின்னூட்டம் அப்டின்னு சொல்லலாமா கூடாதா? கூடாதுன்னுதான்னு நினைக்கிறேன். ஏன்னா ரொம்ப நல்ல சீரியசான பதிவுகள் பக்கம் நிறைய பதிவர்கள் எதுக்குடா வம்புன்னு போறதேயில்லை; அப்படியே போய் எட்டிப் பார்த்தாலும் பின்னூட்டம் போடாம ஜகா வாங்கிக்கிறதுதான் நடப்பு. மொக்கைப் பதிவுன்னா கேக்காம கொள்ளாம கும்மிதான். மீ த பர்ஸ்ட் ... ஸ்டார்ட் த ம்யூஜிக் ... ஐ'ம் த எஸ்கேப் .. ரிப்பீட்டேய் .. இப்படி பல டெம்ப்ளேட் இருக்கவே இருக்கு. காசா பணமான்னு அதில ஒண்ணை எடுத்துப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்போம்.
இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சாலுமே புதுசா ஒரு பதிவு போட்டுட்டு, உடனே சில பல பதிவுலக நண்பர்களுக்கு - நான் உனக்கு; நீ எனக்கு அப்டின்ற ஒரு உடன்படிக்கையோடு - பதிவு ஒண்ணு புதுசா போட்டிருக்கேன் அப்டின்னு சேதி சொல்லி, உருமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு மாதிரி யாருடா பின்னூட்டம் போட வருவாங்கன்னு காத்திருந்து, ஆளு வரலைன்னாலும் test அப்டின்னு நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றி பின்னூட்ட கயமை செய்திட்டு, வந்த பின்னூட்டத்துக்கும் நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னாலும் அதையும் ஆளாளுக்குத் தனித் தனியா போட்டு பின்னூட்ட எண்ணிக்கையைக் கூட்டிக்கிட்டு .... இதெல்லாம் பதிவுலகில் சகஜமப்பா .. இல்லீங்களா?
இன்று வரை நிலைமை இப்படித்தான் என்றாலும் பதிய ஆரம்பித்த காலத்தில் யாருக்குமே இது ஒரு expecting mother-ன் காத்திருப்புதான். அப்படி காத்திருந்து என் முதல் பதிவுக்கு வாராது வந்த மாமணியாக வந்த முதல் பின்னூட்டக்காரர் பெனாத்தல். அவரு என்ன இம்புட்டு நல்லவரா.. ஒரே பின்னூட்டத்தை இரண்டுதடவை போட்டு என்னை மகிழ்வித்தார். இன்று வரை அந்தப் பதிவில் நான் அவருக்கு 'நன்னி'கூட சொல்லவில்லை. அடுத்து வந்த பதிவுகளுக்கெல்லாமே ஒற்றைப்படை எண்ணளவில்தான் பின்னூட்டங்கள். ஒன்பதைத் தாண்டுவேனா என்றது. 13 பதிவு போட்டதும் ஏறத்தாழ ஒரு மாசம் ப்ரேக்.நியுமராலஜி எஃபெக்ட் போலும்! அடுத்து 14-வது பதிவு போட்டேன் பாருங்க ... 21 பின்னூட்டம் (என்னுடைய நன்றியறிவிப்புகளையும் சேர்த்துதான்!) அசந்திட்டேன். அப்படி என்னதான் எழுதிட்டோம்னு இப்ப எடுத்துப் பார்த்தேன். நிச்சயமா இன்னைக்கி நான் எழுதுற அழகைவிட அன்றைக்கு நல்லாத்தான் 14. சொந்தக்கதை...சோகக்கதை என்ற தலைப்பில் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. அந்த நாள் மகிழ்ச்சியைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்து மகிழும்போது ஒரு எண்ணம்: ஏன் நம் பதிவுகளூக்கு இதுவரை வந்த பின்னூட்டங்களை வைத்து ஒரு - statistical analysis - புள்ளிவிவரக் கணக்கை வைத்து ஆராய்ச்சி ஒண்ணு செய்யக்கூடாதுன்னு தோன்றியது. அதன் பலன் கீழே!
இதுவரை அதிகப் பின்னூட்டங்கள் பெற்ற என் பதிவு: 09.11.06-----187. CATCH 22* / மதவாதம் - யெஸ்.பா.வுக்கு பதில் -- 152 பின்னூட்டங்கள்.
அடுத்து 115 பின்னூட்டங்கள் பெற்ற பதிவு: 20.09.08-----269. சல்மான்கான் பிடித்த பிள்ளையார்
இந்த இரு பதிவுகளுமே மதங்களைப் பற்றியவை.
மூன்றாவதாக, 26.12.06-----194. LET'S HIT THE NAIL....*** 110 பின்னூட்டங்கள்.
இது சாதிகளைப் பற்றிய பதிவு. சென்ற வாரம் நடந்தேறிய Dr. அம்பேத்கார் சட்டக் கல்லூரி தகராறுக்கும் இப்பதிவின் அடக்கப் பொருள் சரியாகவே பொருந்துகிறது. (இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன .. இந்தப் பதிவின் அடக்கப் பொருள் நம் சமூகத்திற்கு எப்போதும் பொருந்தும் என்பதே ஒரு வேதனையான காரியம்தான்.)
எந்த அறிவியல் சோதனையின் முடிபும் அந்த கண்டுபிடிப்போடு சார்ந்த வேறு சில விசயங்களோடும் ஒத்திருக்க வேண்டும்; correlation இருக்கவேண்டுமென்பது நியதி. அப்படி மேலே சொன்ன புள்ளிவிவரம் மற்ற என் பதிவுகளூக்கும் பொருந்தி வருகிறதா என்று பார்க்க நினைத்தேன்.
அதன்படி, என் பதிவுகளின் (category) வகைகளிலிருந்து நான் அதிகமாக எழுதிய 6 வகைகளை எடுத்தேன்.
1) இடப் பங்கீடு ---மொத்தம் 21 பதிவுகள்; 301 பின்னூட்டங்கள். கணக்கிட்டால்
301/21 = 14.3/Post
சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 14.3 பின்னூட்டங்கள்.
2) ஜோதிடம் --- மொத்தம் 12 பதிவுகள்; 195 பின்னூட்டங்கள். 195/12 = 16.3/post சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 16.3 பின்னூட்டங்கள்.
3) சொந்தக் கதை : மொத்தம் 47 பதிவுகள்; 833 பின்னூட்டங்கள்; 833/ 47 = 17.7/post
சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 17.7 பின்னூட்டங்கள்.
4) சமூகம் --- மொத்தம் 53 பதிவுகள்; 1475 பின்னூட்டங்கள்; 1475 / 53 = 27.8/post
சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 27.8 பின்னூட்டங்கள்.
5) திரைப்படங்கள் --- மொத்தம் 24 பதிவுகள்;726 பின்னூட்டங்கள்; 726 / 24 = 30.3post சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 30.3 பின்னூட்டங்கள்.
6) மதங்கள் --- மொத்தம் 25 பதிவுகள்; 824 பின்னூட்டங்கள்; 824 /25 = 33/post
சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 33 பின்னூட்டங்கள்.
இந்த முடிவுகளை histogram-ல் காண்பித்துள்ளேன்.
கிடைத்திருக்கும் முடிவுகளை சிறிது ஆராய்ந்தால் ....
இதில் சில ஆச்சரியங்கள்.
இடப்பங்கீடு பற்றி எண்ணிக்கையில் குறைவான பதிவுகள் இட்டிருந்தாலும், 'திசைகள்' இணைய இதழுக்காக அழைப்பின் பேரில் எழுதி என் வலைப்பூவில் அதனை மீள் + நீள் பதிவாக போட்ட போதும், அதன் பின் நான் அதே வகையில் எழுதிய பதிவுகளிலும் சூடான சில சர்ச்சைகள் வந்து கொண்டிருந்தமையால் அதற்கு வந்த பின்னூட்டங்கள் அதிகமாக இருக்குமென அனுமானித்திருந்தேன். ஆனால் அப்படி வராமலிருந்திருப்பதைப் பார்க்கும்போது சிறிது ஏமாற்றம்தான்.
மதங்கள் பற்றிய பதிவுகளை ஆரம்பித்தபோது முதல் பதிவிற்கே நிறைய கேள்விகள் வர ஆரம்பித்தன. அவைகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தால் நான் நினைத்திருப்பவைகளைக் கோர்வையாகச் சொல்ல முடியாமல் போய்விடும் என்பதால் பின்னூட்டப் பெட்டியைப் பூட்டி வைத்து விட்டு, நான் நினைத்த பகுதிகளை எழுதிவிட்டு பின்னூட்டப் பெட்டியைத் திறந்த போது பின்னூட்டங்கள் எதிர்பார்த்தது போல் கொட்டவில்லை; ஆனால் அதன்பின் பின்னூட்டங்கள் ஓரளவு வந்தன. ஆனாலும் இருக்கும் வகைகளில் மதங்களுக்குத்தான் அதிக பின்னூட்ட சராசரி வந்திருக்குமென்று நினைக்கவில்லைதான்.
மற்ற வகைகளின் முடிவுகளில் சொல்லுமளவிற்கு ஏதுமில்லை.
இதுபோன்ற "ஆராய்ச்சிகளில்" வரும் முடிவுகளை வைத்து சில உறுதிப்பாடுகளை எடுக்க முடியும். அதுபோல் இந்த முடிவுகளை வைத்து நான் சில உறுதிப் பாடுகளை எடுத்துள்ளேன்; சரியா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ஆனாலும் முடிவுகளுக்கு முன்னால் சொல்லவேண்டியது: பதிவுகளின் தாக்கமும் வீச்சும் அந்தப் பதிவு பெரும் பின்னூட்ட எண்ணிக்கையோடு பிணைந்த விஷயம் என்ற ஒரு கருத்தாக்கத்தோடுதான் இந்த முடிவுகள்.
இந்த முன் முடிவோடு பார்க்கும்போது --
என் பதிவுகளில் மதங்கள் பற்றியவைகளின் வீச்சு அதிகமாக இருந்திருக்கிறது; படிக்கப் பட்டிருக்கிறது; அதிக தாக்கம் கொண்டிருந்திருக்கிறது. ஆகவே அவைகளை இன்னும் ஆழமாக அதிகமாக எழுதுவது பதிவர்களுக்கு ஏற்புடைத்ததாக இருக்கும்.
அப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... ?
32 comments:
புள்ளியைப் புடிச்சீங்க பாருங்க.......
பதிவுலக விஜயகாந்த்( மருதைதான்)
வாழ்க வாழ்க வாழ்க என்று மும்முறை வாழ்த்துகிறேன்.
//இன்னும் ஆழமாக அதிகமாக எழுதுவது பதிவர்களுக்கு ஏற்புடைத்ததாக இருக்கும்//
அது ஏன் 'மதங்களைப்' பற்றி மட்டும் ஆழமாக எழுத வேண்டும். எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக எழுதுங்களேன். படிக்க நாங்க இருக்கிறோம். :-)
//புதுசா ஒரு பதிவு போட்டுட்டு, உடனே சில பல பதிவுலக நண்பர்களுக்கு - நான் உனக்கு; நீ எனக்கு அப்டின்ற ஒரு உடன்படிக்கையோடு - பதிவு ஒண்ணு புதுசா போட்டிருக்கேன் அப்டின்னு சேதி சொல்லி, உருமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு மாதிரி யாருடா பின்னூட்டம் போட வருவாங்கன்னு காத்திருந்து, ஆளு வரலைன்னாலும் test அப்டின்னு நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றி பின்னூட்ட கயமை செய்திட்டு, வந்த பின்னூட்டத்துக்கும் நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னாலும் அதையும் ஆளாளுக்குத் தனித் தனியா போட்டு பின்னூட்ட எண்ணிக்கையைக் கூட்டிக்கிட்டு //
இவ்ளோ பெருசா சொல்றதுக்கு பதிலா சுருக்கமா 'இலவசம்'னு சொல்லியிருக்கலாமோ? ஹிஹி :-). அவரு வர்றதுக்குள்ள மீ த எஸ்கேப்பு!
வாழ்த்துக்கு
நன்றி ... நன்றி ... நன்றி
கொத்ஸ்,
* Sridhar Narayanan அப்டின்றவர் யாருன்னு எனக்குத் தெரியாது.
*அவரது பின்னூட்டத்தில் 4 வது பத்தியில் என்ன சொல்றார்னே எனக்குத் தெரியவில்லை.
* அவர் கொடுத்துள்ள மேற்கோளிட்ட பகுதிக்கு போட மறந்த என் டிஸ்கி:
இது யாரையும் குறிப்பிட்டோ, மனதில் வைத்துக் கொண்டோ எழுதப் பட்டதில்லை!
தருமி,
ஆமாம். *****குதிருக்குள் இல்லை:-))))
புள்ளி விவரம் பிரமாதம். இவ்வளவு ஆராய்ச்சி எல்லாரும் செய்தால் உண்மையில் நல்ல பதிவுகளை எட்ட முடியும்.
நானும் சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற ரீதியில் தான் எழுதி வருகிறேன்.
40 தாண்டி பின்னூட்டங்கள் வந்த மாதிரி எனக்கு நினைவே இல்லை.:)
நூறைத் தாண்டியதற்கு வாழ்த்துகள்.!!
எல்லாவற்றையும் தொட்டு எழுதுங்கள் தருமி.
உண்மையான எழுத்தைப் படிக்கக் காத்திருக்கிறோம்.
//இது யாரையும் குறிப்பிட்டோ, மனதில் வைத்துக் கொண்டோ எழுதப் பட்டதில்லை!//
அது சரி ஒண்ணா ரெண்டா குறிப்பிட்டு சொல்ல :-)
- இப்படிக்கு
யாருன்னே தெரியாதவன் :))
அய்யா,
இன்னிக்கு எனக்கு ஆபிஸ்ல ”தருமி டே” தான் போங்க.. உங்களோட 5***** பதிவுகள படிச்சு நிறய கத்துக்கிட்டேன்.. நடுநிலமையில் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை.. பட் உங்கள் பதிவுகள் "ideal"க்கு வெகு சமீபத்தில் உள்ளீர்கள் என்று உணர்துகிரீர்கள்.. தன் சார்ப்பு கருத்தை தடவியும், தேவயானயிடத்தில் குட்டியும் சொல்லியிருக்கும் விதம் மிக அழகு..
Hats off to you Sir!! please keep up the good work going..
நல்ல அலசல். நானும் 'கூடலை' இப்படி அலசிப் பார்க்கணுமோ? :-)
நீங்க கடைசி கேட்ட கேள்விக்குப் பதில் - நீங்க எது எழுதினாலும் படிப்பேன். ஆனா பின்னூட்டம் மட்டும் எல்லாத்துக்கும் போடுவேன்னு உறுதி கிடையாது. 'எதுக்கு வம்பு?'ன்னு எனக்குத் தோணாத இடுகைகளுக்கு எல்லாம் பின்னூட்டம் போட்டிருக்கேன். :-)
எல்லாத்தையும் கலந்து கட்டி எழுதுங்க.
பின்னூட்டத்த வச்சு முடிவெடுக்க முடியாது.
//ரொம்ப நல்ல சீரியசான பதிவுகள் பக்கம் நிறைய பதிவர்கள் எதுக்குடா வம்புன்னு போறதேயில்லை; அப்படியே போய் எட்டிப் பார்த்தாலும் பின்னூட்டம் போடாம ஜகா வாங்கிக்கிறதுதான் நடப்பு.//
ஆமாங்க, நான் அப்படித்தான், படிப்பேன், ஆனா எதுவும் கமெண்ட் பண்ண மாட்டேன்.மீறி கமெண்ட் பண்றவங்களுக்கும் default template பேரு வச்சிருவாங்க டாபிக்-கைப் பொறுத்து.
நல்ல ஆராய்ச்சி!
தமிழ்மணம் நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்
ரியல்லி கிரேட்.யாரும் எதிர்பார்க்காத சிந்தனை.ஆரம்பத்தில் மலரும் நினைவை வச்சே வாரத்தை ஓட்டிடுவீங்களோ னு நினைக்க வச்சி
சும்மா டாப் கீர்ல போயி கிராப் லாம் போட்டு கேப்டனையே புள்ளி விவரத்துல மிஞ்சிட்டீங்க.
அட என்னங்க பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் ஆகாதுண்ணேன்.
நான் ஆரம்பத்துல அஞ்ஜு கூட வாங்கலண்ணேன்.
ஆனாலும் குப்பை கொட்டலையா
உங்க புள்ளி விபரம் அசத்தல்
//அப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... ?//
ஒண்ணியும் சொல்றதுக்கில்லை. நம்மளை சாப்ஜாடா போட்டு தாக்கிட்டீங்க. நீங்க இலைமறை காயா சொன்னதை அருமை ‘நண்பர்’ ஸ்ரீதர் துவைத்துக் காயப் போட்டுட்டாரு.
இந்த மாதிரி கேப்டன் ஸ்டைல் புள்ளிவிபரமெல்லாம் நான் செய்யமாட்டேன்!!
மீ தி எஸ்கேப்பு!!
//நான் ஆரம்பத்துல அஞ்ஜு கூட வாங்கலண்ணேன்.//
et tu கண்மணி?!
உங்க பதிவுகளுக்குக் கூடவா?
வாழ்த்துக்கள் தருமி சார். நிறைய நேரம் இருக்கும் போல.
அமர பாரதி,
//நிறைய நேரம் இருக்கும் போல.//
ஆமாங்க ஆமா!
ஆனால் உங்களுக்கு நேரமே கிடைப்பதில்லை என்று 'அங்கு' வந்தபோது தெரிந்து கொண்டேன்.
//துளசி கோபால் said...
தருமி,
ஆமாம். *****குதிருக்குள் இல்லை:-))))//
ஹி ... ஹி ... இதெல்லாம் பதிவுலகில் சகஜமம்மா ..
//ஆனால் உங்களுக்கு நேரமே கிடைப்பதில்லை என்று 'அங்கு' வந்தபோது தெரிந்து கொண்டேன்// ஹாஹ்ஹா. இதுதான் நெத்தியடிங்கிறது. சோம்பேறித்தனம் தான். அப்புறம் பின்னூட்டறதுலயே திருப்தி அடைஞ்சிர்ரது.
//அப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... ?//
நீங்க கேப்டன் கட்சியில் சேர்ந்திட்டதா சொல்றோம் :)
தருமி = மூன்றெழுத்து
ரமணா = மூன்றெழுத்து
கோட்டை = மூன்றெழுத்து
ஆட்சி = மூன்றெழுத்து
ஹா ஹா ஹா
//மதங்கள் --- மொத்தம் 25 பதிவுகள்; 824 பின்னூட்டங்கள்; 824 /25 = 33/post
சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 33 பின்னூட்டங்கள்//
ஹா ஹா ஹா
இதுல இருந்தே தெரியலையா தருமி ஐயா?
மதத்தை ஆன்மீகமா ஆக்கி, 50-50 தட்சிணையை இந்தப் பக்கம் கொஞ்சம் தள்ளூங்க ப்ளீஸ்! :))
யாருக்கும் புரியாத ஒன்றான மதத்தைப் பற்றிப் பேசியே புள்ளி விவரங்களின்படி முதலிடம் பிடித்த பெருமகனார், இனமானப் பேராசிரியர் திரு.தருமியார் அவர்களே, இன்றைய வலையுலகின் "முதல் மதவாதி" என்பதனை இனிமேலும் யாராலும் மறுக்க முடியாது..
தருமி சார்,
உங்கள் வாழ்க்கையில் சந்தித்த சுவாரஸியமான மாணவர்களைப் பற்றி எழுதுங்களேன்.
தருமி ஐயா,
இப்போதைக்கு அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன் ....
இத லிஸ்டுல விட்டுடீங்களே ... ))
அமரபாரதி,
//சுவாரஸியமான மாணவர்களைப் பற்றி ..//
இங்கே 5-வது பகுதியில் கொஞ்சூண்டு சொல்லியிருக்கேன்.
ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. என்ன பிரச்சனைன்னா இன்னும் நிறைய பழைய மாணவர்கள் தொடர்போடு இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எழுதுவது நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை.
சதங்கா,
//இத லிஸ்டுல விட்டுடீங்களே ... ))
//
ஆமால்ல ... சரி, லூஸ்ல உடுங்க
உ.த.,
//வலையுலகின் "முதல் மதவாதி" என்பதனை இனிமேலும் யாராலும் மறுக்க முடியாது..//
அடப்பாவி மனுஷா! இப்படி ஒரு வசையா?
பாருங்க முருகனிடம் சொல்லி உங்கள என்ன பண்றேன்னு பாருங்க ...
KRS,
அதுக்குப் பிறகு,
மக்கு,
மதுரை,
கிழடு, ....இப்படியே அடுக்குவீங்க போல .. !
ஆனா எங்க ஊர்க்காரர் மாமா, மச்சான் அப்டி ஆளுகளுக்குத்தான் கொடுப்பாரு!
KRS,
மதங்களை கொஞ்சம் glorify பண்ணிட்டா ஆன்மீகம் அப்டின்னு நான் நினைக்கிறேன். சாமி, கடவுள் அப்டின்னு பேசுறதுக்குப் பதில் கொஞ்சம் தத்துவார்த்தமா பேசிட்டா ..ஆன்மீகமாயிரப் போவுது.
பின்னூட்ட ஆராய்சியாளர் தருமி வாழ்க.
நன்றி குடுகுடுப்பை.
//உருமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு மாதிரி யாருடா பின்னூட்டம் போட வருவாங்கன்னு காத்திருந்து, ஆளு வரலைன்னாலும் test அப்டின்னு நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றி//
உங்களைப் போல் சர்வே பண்ணுறவங்க சிலர் test போட்டுக்குறது test பாக்குறதுக்குத்தான்ன்னு இத்தனை நாட்களா நினைத்திருந்தேன்:)
Post a Comment