Saturday, May 02, 2009

308. மதுர தேர்தல் நிலவரம்

*

ஒவ்வொரு ஏரியாவுக்கும்னு பத்து நூறு ஆளுகள்; அவங்க எல்லாத்துக்கும் ஒரு பொறுப்பாளர்; அந்த மாதிரி அஞ்சு பொறுப்பாளர்களுக்கு ஒரு தல .. கீழ்மட்டத்து அந்த ஆளுகளுக்கு நாளொண்ணுக்கு நூறு ரூபாய். வீடு வீடாவோ, தனிப்பட்ட ஆளுகளைச் சந்திச்சோ... வேட்பாளர் பற்றி எடுத்துச் சொல்லணும். நாளைக்கு உங்க தொகுதிக்கோ உங்களுக்கோ என்ன வேணும்னாலும் இதே மாதிரி எங்கட்ட சொன்னா எல்லாம் செஞ்சு தருவார். -- இப்படியாக ரொம்ப கரெக்டா organize-டா தொகுதி வேலை நடக்குதாம் எங்க ஏரியாவுல. அதுவும் டவுணுக்குள்ளும், புற நகர்ப் பகுதிகளிலும் மாறி மாறி கூட்டங்கள் அது இதுன்னு தூள் பறக்குதாம்.

-- இதெல்லாம் எங்க ஏரியாவுக்கான cable boy - என்னிட்ட நல்லா பழகுற பையன் - சொன்னது. சொன்னா சரியாத்தானிருக்கும்.

இவ்வளவும் சொல்லிட்டு, தமிழ்நாட்டுல 39 தொகுதிகளும் தோத்தாக்கூட மதுரையில திமுகவை அடிச்சிக்க முடியாது. நல்ல ஓட்டு வித்தியாசத்தில அழகிரி ஜெயிப்பார் -- இது அவன் கடைசியா சொன்னது.

அவன் போனதும், ஏம்பா .. ஏன் அப்படி சொன்ன? மற்ற தொகுதி தேர்தல் முடிவு அம்புட்டு மோசமாவா இருக்கும்னு நினைக்கிற அப்டின்னு கேட்டிருக்கலாமேன்னு தோணிச்சி. அடுத்த தடவை வரும்போது மறுபடி கேட்டு என்ன சொன்னான்னு உங்ககிட்ட வந்து சொல்றேன்.


*

11 comments:

அத்திரி said...

//தமிழ்நாட்டுல 39 தொகுதிகளும் தோத்தாக்கூட மதுரையில திமுகவை அடிச்சிக்க முடியாது. நல்ல ஓட்டு வித்தியாசத்தில அழகிரி ஜெயிப்பார்//

பையன் கரெக்ட்டாத்தான் சொல்லியிருக்கான்

அபி அப்பா said...

தமிழ்நாட்டுல +பாண்டியிலும் நாங்க ஜெயிப்போம்! பார்த்திடுவோம் நாங்களா அவங்களான்னு!

தருமி said...

//பார்த்திடுவோம் நாங்களா அவங்களான்னு..//

அவங்கன்னா, அதிமுக காரங்களா இல்லை மத்த எல்லோருமேவா...?

தருமி said...
This comment has been removed by the author.
வோட்டாண்டி said...

unga kudumbathula evalo vote??
ungalukku evalo amnt kuduthaanga?

தருமி said...

அத்திரி,
அப்டின்றீங்க .. ?

தருமி said...

வோட்டாண்டி,
ரெண்டு ஓட்டுதான் வோட்டாண்டி.

இன்னும் ஒண்ணும் இல்லையே'ப்பா!

:(

வால்பையன் said...

அந்த கேபிள்காரரு ஒரு தீர்க்கதரிசி!

ஜோ/Joe said...

//இன்னும் ஒண்ணும் இல்லையே'ப்பா! //

இந்தாளு விவகாரம் புடிச்ச ஆளு ..பணம் குடுத்தாலும் குடுக்காட்டியும் தனக்கு தோணுறதுல தான் குத்துவாரு ..பணம் குடுத்து வேஸ்ட் -ன்னு சொல்லிக்குடுக்குற அளவுக்கு தொண்டர் படை கச்சிதமா வேலை செய்யுது போல.

மாண்புமிகு பொதுஜனம் said...

யாரு ஜெயிச்சா என்னங்க,தோக்கப் போறது நாம தானுங்களே!

கோவி.கண்ணன் said...

//தமிழ்நாட்டுல 39 தொகுதிகளும் தோத்தாக்கூட மதுரையில திமுகவை அடிச்சிக்க முடியாது. நல்ல ஓட்டு வித்தியாசத்தில அழகிரி ஜெயிப்பார்//

மொதலுப் போட்டா பலன் இருக்கும் என்று நம்புவது பாசிடிவ் திங்கிங்க் தானே. வாழ்த்துவோம் !
:)

Post a Comment