எங்க ஊரு போலீஸ் கமிஷனர் போன வாரமே செய்தித்தாள்களில் முக்கிய சேதியாகச் சொல்லிவிட்டார். சுதந்திர தினத்துக்குப் பின் இரட்டைசக்கர வண்டிக்காரர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றெல்லாம் போட்டாகி விட்டது. இனி காவல்துறை "சீரியசாக" தலைக்கவசம் அணியாதவர்களைப் பிடிக்கப் போவதாகச் சொல்லியாகி விட்டது.
நானும் 15ம் தேதியே அங்கங்கே தலைக்கவசம் இல்லாம போற மக்களைப் பிடிச்சி க்யூ வரிசையில் அங்கங்க நிக்க வச்சிருப்பாங்கன்னு பார்த்தேன். அப்படியெல்லாம் ஒண்ணும் காணோம். அப்புறம் நினச்சேன் .. ஒருவேளை சுதந்திர நாளன்று இதெல்லாம் வேண்டாம்; 'அனுபவிச்சிட்டுப்' போகட்டுமென்று விட்டிருப்பார்கள் என்று நினைத்தேன். நாளையில இருந்து - அதாவது 16-ம் தேதியிலிருந்து மறுபடி 'சீரியசாகப்' பிடிப்பார்கள் என்று நினைத்தேன். அன்றும் ஒன்றுமேயில்லை. சரி .. சரி.. இன்று ஞாயிற்றுக் கிழமை; அதான் இன்னைக்கும் போகட்டுமென்று விட்டு விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
இன்று திங்கட்கிழமை. எல்லாரும் தலைக்கவசம் அணிந்திருப்பார்கள் என்று பார்த்தால் ஒருத்தருமே அப்படியெல்லாம் தலைக்கவசத்தோடு வரவில்லை. என்னமாதிரி மொடாக்குகள் எப்போதும் மாதிரி போட்டுப் போனதோடு சரி. அதிலும் வண்டி ஓட்டிச் சென்ற ஒரு பெண் போலீஸ் என் தலைக்கவசத்தை வேடிக்கை பார்த்ததுமாதிரி இருந்தது! போன வாரத்துக்கும் அறிவிப்பு வந்த இந்த வாரத்துக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அதான் தோன்றியது: நாங்கல்லாம் மதுரக்காரவிய அல்லவா. எங்கள அம்புட்டு ஈசியா நவட்டிக்க முடியுமா?
அப்போ இன்னொண்ணு நினைவுக்கு வந்தது. வாத்தியார் தொழிலில் ஒரு நாளும் நேரமும், கொடுத்து அன்று ஏதாவது submit பண்ண வேண்டும் என்று சொல்லி, யாராவது அந்த நேரத்தில் கொடுக்காவிட்டால் அந்த மாணவர்களைக் 'கடித்துத் துப்பியது' நினைவுக்கு வந்து தொலைத்தது.
நாம் ஒண்ணு சொல்றோம். கேக்க வேண்டியவங்க கேக்காம போனா அப்படி கோபம் வர்ரது உண்மை. ஆனால் எல்லா அதிகாரத்தையும் கையில் வச்சிக்கிட்டு ஒரு ஆர்டரும் போட்டுட்டு, அதுக்குப் பிறகும் எப்படி இந்த மாதிரி 'அக்கடா'ன்னு இருக்க முடியும்னு தெரியலையே. இந்த தலைக்கவசத்துக்கே எங்க ஊர்ல இந்த பாடுன்னா ....
1. ஒரு ஆளு உக்காந்து ஓட்டும் போதே நம்ம ஆட்டோக்காரர்கள் அப்படி போவார்கள். இதில இப்போ எங்க ஊர்ல எல்லாம் ஆட்டோ ட்ரைவருக்கு இரு பக்கமும் இன்னும் ரெண்டு பேரோடுதான் ஓட்டுகிறார்கள். ஆட்டோவுக்குள் எத்தனை எத்தனையோ!
இதில் சின்னப் பள்ளிப் பிள்ளைகளை வைத்து ஓட்டுவதைப் பார்க்கும் போது .. அட கடவுளே!
2. இந்த ஆட்டோதான் இப்படின்னா, ஷேர் ஆட்டோ கதைய நினைக்கவே பயமா இருக்கு.
3. இன்னும் வண்டி ஓட்டிக்கிட்டே கைப்பேசியில் பேசிக்கிட்டே போற .... களை என்னக்கி இந்த போலீஸ்காரங்க பிடிச்சி இப்படியெல்லாம் இல்லைன்னு ஆக்குவாங்க?
4. பள்ளிக்குப் போற பிள்ளைகள் அனேகமாக இரு சக்கர வண்டிக்கு உரிமம் எடுக்க முடியாது. ஆனால் யூனிபார்ம் போட்டுக்கிட்டு போற சின்ன பசங்க, பொண்ணுங்கள பிடிக்க காவல்துறைக்குத் தெரியாது; அதை நிறுத்த பள்ளிக்குத் தெரியாது; அப்படி பிள்ளைகளுக்கு வண்டி வாங்கிக் கொடுக்கிற பெத்தவங்களுக்கும் தெரியாது.
........இப்படியே நிறைய ஒரு 'வண்டி' இருக்கு. என்னத்த சொல்றது. நம்ம அமெரிக்க நண்பர்கள் அங்க உள்ள 'போலீஸ் மாமா'க்களைப் பத்திச் சொல்லும்போது கேட்க நல்லா இருக்கு. என்னமோ போங்க ...
=====================================
திடீர் பேருந்து பயணம். ஓசியில் ஒரு படம். நகுலன் படம் அப்டின்னதும் சரி ..தல முதல் முதலா படம் ஒண்ணு நடிச்சிருப்பாரேன்னு நினச்சா புதுசான மாசிலாமணி படம் போட்டாங்க. இம்புட்டு புதுப்படமெல்லாமா போடுவாங்க. போட்டாங்க .. பாத்துட்டேனே ... வேற வழி.
ஆமா .. ஒரே ஒரு சந்தேகம்தான். பெயரை வச்சி எடுத்த படம். இந்த மாதிரி ஒரு கதையை 'உண்டாக்குன' கதாசிரியர் யாரோ .. புண்ணியவான். எப்படி இவங்களுக்கு இந்த மாதிரி ஒரு கற்பனை. எம்புட்டு தைரியம் இருந்தா இந்த மாதிரி கதையை எடுத்துக்கிட்டு அந்த மனுசன் ஒரு டைரடக்கரைப் பிடிச்சிருக்கணும். (அனேகமாக ரெண்டும் ஒரே ஆளாதான் இருக்கணும்; மனுசன் பேரு என்னங்க. தெரிஞ்சவங்க சொல்லுங்க. அடுத்த படம் வந்தா ஓடணுமே, அதுக்காக.)
சரி ..டைரடக்கரைப் பிடிச்சாச்சி. இந்தக் கதையை சொல்ல ஒரு தயாரிப்பாளர் வேணுமே. அதுவும் எப்படிங்க கிடச்சுது. அதுவும் சன் தயாரிப்புதான். இந்த மாதிரி கதைக்கு ஓகே சொல்ற அளவுக்கு அவங்களுக்கு எப்படி தைரியம் வருது. (நம்மள மாதிரி ஆளுக இருக்கிறதினாலேயா?) சரி.. அடுத்தது, எப்படி அந்த நடிகர் ஒத்துக்கிட்டார்னு. அது வேணாம். பாவம் .. பையனுக்கு இரண்டாவது படம். அதோடு நடிகர்களுக்கும் கதைக்கும் என்ன தொடர்பு. சரி, டைரடக்கர், தயாரிப்பாளர் எப்படி இந்தப் பையனைப் பிடித்தார்கள். அப்படியே பிடிச்சாலும் குரலுக்கு வேற ஆளைப் போடக் கூடாதா? அந்தப் பையனின் தமிழ் அப்டி ஒரு அழகு.எக்கச்சக்க accented தமிழ்.
........ ஆண்டவா!
================================
51 comments:
[[[எங்க ஊரு போலீஸ் கமிஷனர் போன வாரமே செய்தித்தாள்களில் முக்கிய சேதியாகச் சொல்லிவிட்டார். சுதந்திர தினத்துக்குப் பின் இரட்டை சக்கர வண்டிக்காரர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றெல்லாம் போட்டாகி விட்டது. இனி காவல்துறை "சீரியசாக" தலைக்கவசம் அணியாதவர்களைப் பிடிக்கப் போவதாகச் சொல்லியாகி விட்டது.]]]
இப்படி எங்கூர்லேயும்தான் சொன்னாக.. அதுக்காக சொன்ன பேச்சையெல்லாம் கேட்டுட்டு திரிய முடியுமா..?
நாங்கள்லாம் யாரு..? குடலை உருவி கண்ணுல காட்டுனாலும் ஒண்ணும் நடக்காத மாதிரி எந்திரிச்சு தகரியமா நடப்போம்ல..
மதுரைன்னா சும்மாவா..?
[[[நானும் 15ம் தேதியே அங்கங்கே தலைக்கவசம் இல்லாம போற மக்களைப் பிடிச்சி க்யூ வரிசையில் அங்கங்க நிக்க வச்சிருப்பாங்கன்னு பார்த்தேன். அப்படியெல்லாம் ஒண்ணும் காணோம்.]]]
இருந்தாலும் உமக்கு இம்புட்டு நல்ல மனசு இருக்கக் கூடாது பெரிசு..!?
மதுரை எப்படிங்கய்யா தாங்குது உம்மை..?
[[[அப்புறம் நினச்சேன் .. ஒருவேளை சுதந்திர நாளன்று இதெல்லாம் வேண்டாம்; 'அனுபவிச்சிட்டுப்' போகட்டுமென்று விட்டிருப்பார்கள் என்று நினைத்தேன். நாளையில இருந்து - அதாவது 16-ம் தேதியிலிருந்து மறுபடி 'சீரியசாகப்' பிடிப்பார்கள் என்று நினைத்தேன். அன்றும் ஒன்றுமேயில்லை.]]]
பொழுது விடிஞ்சு பொழுது போனா எவனை புடிச்சு உள்ள போடுவாங்க.. எவனை எவன் சுளுக்கெடுக்கப் போறான்னு இப்படியே நினைச்சுக்கிட்டிருந்தா எப்படி..?
மனுஷன்னா நல்ல எண்ணம் வேணாம்..?!!!
[[[சரி.. இன்று ஞாயிற்றுக் கிழமை; அதான் இன்னைக்கும் போகட்டுமென்று விட்டுவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.]]]
உங்களையெல்லாம்..! மனசெல்லாம் வஞ்சகம் சாமி..!
[[[இன்று திங்கட்கிழமை. எல்லாரும் தலைக்கவசம் அணிந்திருப்பார்கள் என்று பார்த்தால் ஒருத்தருமே அப்படியெல்லாம் தலைக்கவசத்தோடு வரவில்லை. என்ன மாதிரி மொடாக்குகள் எப்போதும் மாதிரி போட்டுப் போனதோடு சரி.]]]
ஊருக்கு ஒரு நாலு பேரு உங்களை மாதிரியும் இருக்காங்க சாமியோவ்..!
[[[அதிலும் வண்டி ஓட்டிச் சென்ற ஒரு பெண் போலீஸ் என் தலைக்கவசத்தை வேடிக்கை பார்த்ததுமாதிரி இருந்தது!]]]
என்னிக்கு நம்ம தமிழ்நாட்டு போலீஸ் சட்டத்தை மதிச்சு நடந்திருக்கு..?
சட்டத்தை மதிக்காத ஒரே இனம் போலீஸ் இனம்தான்..!
இதுல நீங்க வேற..?!!!
[[[போன வாரத்துக்கும் அறிவிப்பு வந்த இந்த வாரத்துக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அதான் தோன்றியது: நாங்கல்லாம் மதுரக்காரவிய அல்லவா. எங்கள அம்புட்டு ஈசியா நவட்டிக்க முடியுமா?]]]
தெரியுதுல்ல.. அப்புறம் எதுக்கு இம்புட்டு பெரிய பதிவு..!!!
[[[அப்போ இன்னொண்ணு நினைவுக்கு வந்தது. வாத்தியார் தொழிலில் ஒரு நாளும் நேரமும், கொடுத்து அன்று ஏதாவது submit பண்ண வேண்டும் என்று சொல்லி, யாராவது அந்த நேரத்தில் கொடுக்காவிட்டால் அந்த மாணவர்களைக் 'கடித்துத் துப்பியது' நினைவுக்கு வந்து தொலைத்தது.]]]
வரும்.. வரும்.. அந்த போலீஸ் அம்மாகிட்ட உங்களோட வாத்தியார் திறமையைக் காட்டியிருக்கலாமே..!?? விட்டுப்புட்டீகளே சாமி..!
[[[நாம் ஒண்ணு சொல்றோம். கேக்க வேண்டியவங்க கேக்காம போனா அப்படி கோபம் வர்ரது உண்மை. ஆனால் எல்லா அதிகாரத்தையும் கையில் வச்சிக்கிட்டு ஒரு ஆர்டரும் போட்டுட்டு, அதுக்குப் பிறகும் எப்படி இந்த மாதிரி 'அக்கடா'ன்னு இருக்க முடியும்னு தெரியலையே.]]]
ஆளாளுக்கு அவங்க அவங்களுக்குத் தோதா ஏதாவது ஒரு சட்டத்தை போட்டுட்டு அதையே எல்லாரும் பாலோ பண்ணணும்னு நினைச்சா முடியுங்களா..?
அடுத்தவன் கஷ்டத்தையும் பார்க்க வேணாமா..?
[[[1. ஒரு ஆளு உக்காந்து ஓட்டும் போதே நம்ம ஆட்டோக்காரர்கள் அப்படி போவார்கள். இதில இப்போ எங்க ஊர்ல எல்லாம் ஆட்டோ ட்ரைவருக்கு இரு பக்கமும் இன்னும் ரெண்டு பேரோடுதான் ஓட்டுகிறார்கள். ஆட்டோவுக்குள் எத்தனை எத்தனையோ! இதில் சின்னப் பள்ளிப் பிள்ளைகளை வைத்து ஓட்டுவதைப் பார்க்கும் போது .. அட கடவுளே!]]]
எங்கூர்லேயும் அப்படித்தான்.. காசை சேர்க்குறாங்களாம்..
தலைக்கு அஞ்சு ரூபான்னா பத்து ரூபா தேறுதுல்ல.. அதான்..
அவனவனுக்கு அவனவன் பிரச்சினை.!
தப்புதான்.. அடி வாங்குறவரைக்கும் இது தெரியாது..
தருமி ஐயாவுக்கு வணக்கம், இப்ப சொல்லுங்க..நான் ஹெல்மெட் வாங்கவா?
வேணாமா?."ஜெரி ஈசானந்தா"-மதுரை.
[[[2. இந்த ஆட்டோதான் இப்படின்னா, ஷேர் ஆட்டோ கதைய நினைக்கவே பயமா இருக்கு.]]]
அது இன்னும் அபாரம்.. இருபது பேரோட ஒரு மின் வேன் கணக்கா ஓட்டிக்கின்னு போறாங்க..
ஒரு டிரிப்புக்கு நூறு ரூபா அடிச்சாத்தான் அவங்களுக்கு கட்டுப்பிடியாகுமாம்..!
[[[3. இன்னும் வண்டி ஓட்டிக்கிட்டே கைப்பேசியில் பேசிக்கிட்டே போற .... களை என்னக்கி இந்த போலீஸ்காரங்க பிடிச்சி இப்படியெல்லாம் இல்லைன்னு ஆக்குவாங்க?]]]
அதெல்லாம் உண்டு, இல்லைன்னு ஆக்கல்லாம் மாட்டாங்க..
ஐம்பது, நூறுன்னு கொடுத்தா அவங்களே மரியாதையா ஒதுங்கிருவாங்க..
அவனுக்கு என்ன அவசரமோ? ஒருவேளை போன்ல நமீதா வந்து கூப்பிட்டா அவன் என்ன பண்ணுவான்.. எடுக்காமயா இருப்பான்..?!!!
[[[4. பள்ளிக்குப் போற பிள்ளைகள் அனேகமாக இரு சக்கர வண்டிக்கு உரிமம் எடுக்க முடியாது. ஆனால் யூனிபார்ம் போட்டுக்கிட்டு போற சின்ன பசங்க, பொண்ணுங்கள பிடிக்க காவல்துறைக்குத் தெரியாது; அதை நிறுத்த பள்ளிக்குத் தெரியாது; அப்படி பிள்ளைகளுக்கு வண்டி வாங்கிக் கொடுக்கிற பெத்தவங்களுக்கும் தெரியாது.]]]
இப்படியெல்லாம் போட்டு டார்ச்சர் பண்ணா ஆட்டோமொபைல் தொழில் எப்படி வளரும்..?
புள்ளைக வண்டியோட்டி ஆக்ஸிடெண்ட்டாகி வண்டி கடைக்கு வந்தாத்தான ரிப்பேர் பண்ற கடைக்காரங்களுக்கு பொழப்பு ஓடும்.. அவங்க குடும்பத்தை அப்புறம் யார் காப்பாத்துறது..?
[[[........ இப்படியே நிறைய ஒரு 'வண்டி' இருக்கு. என்னத்த சொல்றது. நம்ம அமெரிக்க நண்பர்கள் அங்க உள்ள 'போலீஸ் மாமா'க்களைப் பத்திச் சொல்லும்போது கேட்க நல்லா இருக்கு. என்னமோ போங்க ...]]]
பேசாம கப்பல் ச்சே.. பிளைட் ஏறுங்க.. போன ஒரே வருஷத்துல லிங்கன் அவார்டு உங்களுக்குத்தான்..!
[[[திடீர் பேருந்து பயணம். ஓசியில் ஒரு படம். நகுலன் படம் அப்டின்னதும் சரி.. தல முதல் முதலா படம் ஒண்ணு நடிச்சிருப்பாரேன்னு நினச்சா புதுசான மாசிலாமணி படம் போட்டாங்க. இம்புட்டு புதுப்படமெல்லாமா போடுவாங்க. போட்டாங்க .. பாத்துட்டேனே ... வேற வழி.]]]
அது புதுப்படம்னு யார் சொன்னது..? போட்டவுடனேயே ஒரே வாரத்துல பாதி இடத்துல தூக்கிட்டாங்க..
ஓடுனதுன்னு சொல்றதெல்லாம் சன் டிவில ஒரு நாளைக்கு 100 தடவை போட்டாங்கள்ல.. அதைத்தான் சொல்றாங்க..!
[[[ஆமா .. ஒரே ஒரு சந்தேகம்தான். பெயரை வச்சி எடுத்த படம். இந்த மாதிரி ஒரு கதையை 'உண்டாக்குன' கதாசிரியர் யாரோ .. புண்ணியவான். எப்படி இவங்களுக்கு இந்த மாதிரி ஒரு கற்பனை. எம்புட்டு தைரியம் இருந்தா இந்த மாதிரி கதையை எடுத்துக்கிட்டு அந்த மனுசன் ஒரு டைரடக்கரைப் பிடிச்சிருக்கணும். (அனேகமாக ரெண்டும் ஒரே ஆளாதான் இருக்கணும்; மனுசன் பேரு என்னங்க. தெரிஞ்சவங்க சொல்லுங்க. அடுத்த படம் வந்தா ஓடணுமே, அதுக்காக.)]]]
அதான் டைட்டில்ல போட்டிருப்பாங்களே.. பார்க்கலை.. பராக்கு பார்த்துக்கிட்டே போனா இப்படித்தான்..
ஆர்.என்.ஆர்.மனோகர் அப்படீன்றவர்தான் கதாசிரியர், இயக்குநர்..
பாவம் அவரே பல வருஷம் கழிச்சு ஒரு வாய்ப்பு கிடைச்சு படம் பண்ணியிருக்காரு.. அப்படி, இப்படிங்கிறீங்க..!!!
[[[சரி .. டைரடக்கரைப் பிடிச்சாச்சி. இந்தக் கதையை சொல்ல ஒரு தயாரிப்பாளர் வேணுமே. அதுவும் எப்படிங்க கிடச்சுது. அதுவும் சன் தயாரிப்புதான்.]]]
துவக்கத்துல வேற தயாரிப்பாளர்தான்.. படம் தயாரிப்புல இருக்கும்போதுதான் சன் ஓவர்டேக் எடுத்துச்சு..! இதுதான் அவங்களோட பழக்கம்..!
[[இந்த மாதிரி கதைக்கு ஓகே சொல்ற அளவுக்கு அவங்களுக்கு எப்படி தைரியம் வருது. (நம்மள மாதிரி ஆளுக இருக்கிறதினாலேயா?)]]]
கதைய யார் கேட்டதுன்றீங்க..? கதை கேட்டு ஓகே பண்ற அளவுக்கு கதாநாயகனும், தயாரிப்பாளரும் டேலண்ட்டுன்னு நினைச்சீங்களா.? அவங்களுக்குத் தேவை விக்கும்போது படத்துல என்ன இருக்குன்ற கணக்கு மட்டும்தான்..
அது கரீக்ட்டா இருந்துச்சு.. அவ்ளோதான் மேட்டர்..!
[[[சரி.. அடுத்தது, எப்படி அந்த நடிகர் ஒத்துக்கிட்டார்னு. அது வேணாம். பாவம் .. பையனுக்கு இரண்டாவது படம். அதோடு நடிகர்களுக்கும் கதைக்கும் என்ன தொடர்பு.]]]
தெரியுதுல்ல.. அப்புறம் இன்னா நைனா கேள்வி வேற..!?
[[[சரி, டைரடக்கர், தயாரிப்பாளர் எப்படி இந்தப் பையனைப் பிடித்தார்கள். அப்படியே பிடிச்சாலும் குரலுக்கு வேற ஆளைப் போடக் கூடாதா? அந்தப் பையனின் தமிழ் அப்டி ஒரு அழகு. எக்கச்சக்க accented தமிழ்.]]]
இங்க பார்றா.. நம்ம பெரிசு பண்ற ரவுசை..
தமிழ் சினிமால தமிழ் உச்சரிப்பை பாக்குற மொதல் ரசிகர் நம்ம வாத்தியார்தான்..
பேராசிரியரே இப்படி பார்த்தா ஒரு இப்போதைக்கு சிவகுமாரைத் தவிர வேற யாரையும் சொல்ல முடியாதுங்கோ..!
இப்ப தமிழ் சினிமால ஹீரோவுக்கு தமிழ் தேவையில்லீங்கோ.. நல்லா தத்தக்கா, பித்தக்கான்னு ஆடணும்.. தாவி, தாவி சண்டை போடணும்.. கொஞ்சமா காசு கேக்கணும்.. நிறைய பேன்ஸ்ஸை வைச்சிருக்கணும்.. இது போதும்..! அம்புட்டுத்தான்..!
ஆமா.. அதென்ன கடைசீல ஆண்டவா..?
இப்ப மட்டும் நீஙக நம்பாதவங்களை கூப்பிடுவீங்களோ..?
அட ஆண்டவா.. இந்தத் தருமியை நன்கு கவனித்துக் கொள்..!
கை ரொம்ப நாளை நம, நமன்னு அரிச்சுக்கிட்டே இருந்துச்சு..
என்னய்யா தீபாவளி பட்டாசு மாதிரி மொத்தமா பின்னூட்டம் போட்டு ரொம்ப நாளாச்சேன்னு ஏங்கிக்கிட்டிருந்தேன்..
கும்மியடிக்க அம்சமா பதிவெழுதிய இனமானப் பேராசிரியருக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
இது போனஸ்..!
பின்னூட்டங்களைப் பெறுவதற்காக..!
ஹி.. ஹி.. ஹி..!
[[[jerry eshananda. said...
தருமி ஐயாவுக்கு வணக்கம், இப்ப சொல்லுங்க..நான் ஹெல்மெட் வாங்கவா? வேணாமா?. "ஜெரி ஈசானந்தா"-மதுரை.]]]
இங்க பாருங்க.. இப்படியும் ஒரு நல்லவர் மதுரைல இருக்காருங்க..!
தருமி ஐயா.. கேள்வியை நல்லா பார்த்துக்குங்க..
ஹெல்மட் வாங்கவா? வேணாமான்னுதான் கேட்டிருக்கார்..
ஹெல்மட்டை போடணுமா? போட வேண்டாமான்னு கேக்கலை..?
அதுனால நல்ல பதிலா சொல்லுங்க..!
நாங்கல்லாம் மதுரக்காரவிய அல்லவா. எங்கள அம்புட்டு ஈசியா நவட்டிக்க முடியுமா?
நாங்கல்லாம் மதுரக்காரவிய இப்ப சென்னையிலே இருக்கோம் நாங்களே போடுறதுள்ள தலை கவசம்.
யாருக்கு நட்டம் அப்பு...
மதுரைன்னா சும்மாவா..?
சோ.ஞானசேகர்.
நல்ல தலைப்பு வச்சேன்யா .. இப்படியா மதுரக்காரவுக இருப்பாக. ஒருத்தர் -ஜெர்ரி - இப்பதான் வாங்கலாமா வாங்க வேண்டாமான்னு ஒரு பட்டி மன்றம் ஆரம்பிக்கிறாரு. என்னக்கி தலைவர் வந்து பதில் சொல்லி இவரு தலைக்கவசம் போடப்போறாரோ ...
அடுத்து இன்னொரு மதுரக்காரவிய .ஞான சேகர் சோமசுந்தரம். நம்ம ஊர் பெயரை சென்னை வரைக்கும் கொண்டுபோய் இன்னும் கவசம் இல்லாமலே ஓட்டிக்கிட்டு இருக்காராம். நவட்ட முடியலை..
S.Gnanasekar Somasundaram
ஜெர்ரி,
தனி மயில் போடுங்களேன். சந்திக்க ஆவல். உள்ளூர்ல இருந்துகிட்டு சந்திக்காம இருந்தா கார்த்திகைப் பாண்டியனுக்குப் பிடிக்காம போய்டும்; தெரிஞ்சுக்கங்க..........
ஞா. சோமசுந்தரம்,
அது என்னங்க கூவலப்புரம்?
எங்க தமிழ் வாத்தியார் பாடல்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் தருவது பொழிப்புரை என்றார். இங்கே ஒரு பெரும் பொழிப்புரையாள்வார் வந்து தன் பதிவு மாதிரி சுதந்திரமா இங்கே பின்னூட்டம் இட்டிருக்கிறார். மிக்க்க்க்க்க நன்றியய்யா ...
//மதுரை எப்படிங்கய்யா தாங்குது உம்மை..?//
பதிவுலகமே தாங்குதாம்; மருத தாங்காதா..?
//அவரே பல வருஷம் கழிச்சு ஒரு வாய்ப்பு கிடைச்சு படம் பண்ணியிருக்காரு.. //
நீங்கதான் திரைத்துறையில் விவரமான ஆளாச்சே ... சொல்லுங்களேன். இந்தமாதிரி 'திருவாதிரை'களுக்குக் கூட எப்படி சான்ஸ் கிடைக்குது? கதை கேட்காமலே அவனவன் கோடிகோடியா கொட்டுவான்?
//..சிவகுமாரைத் தவிர வேற யாரையும் சொல்ல முடியாதுங்கோ..!//
அப்படியெல்லாம் சொல்லாதீங்க. இந்த பையனுக்கு accent தகராறு. பாவம் வேறு மொழிப்பையன். ஜெயம் ரவிக்கு கொஞ்சம் பெண் குரல்; செல்வராகவன் படத்தில (என்னமோ ஒரு காலனி..?) அந்தப் பட ஹீரோ குரலும் கண்றாவி. மத்தவங்க குரலும், பேச்சும் ஓகே தாங்க. நீங்க வேற ..
//அப்புறம் எதுக்கு இம்புட்டு பெரிய பதிவு..!!!//
நல்லா இருக்குப்பா இது?! யாரைப் பாத்து யாரு என்ன சொல்றதுன்னு இல்ல. நீங்க சொல்றீங்க இது பெரிய பதிவுன்னு .. முருகா, இந்தக் கொடுமையை கேட்டுக்கிட்டு தான இருக்க.... ? உங்க ஆளு பட விமர்சனம் படிச்சிருக்கியா நீ .. நீயே சொல்லு அவர்ட்ட ...
[[[தருமி said...
எங்க தமிழ் வாத்தியார் பாடல்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் தருவது பொழிப்புரை என்றார். இங்கே ஒரு பெரும் பொழிப்புரையாள்வார் வந்து தன் பதிவு மாதிரி சுதந்திரமா இங்கே பின்னூட்டம் இட்டிருக்கிறார். மிக்க்க்க்க்க நன்றியய்யா...]]]
பொழிப்புரையாள்வார்.. பெயர் நல்லாயிருக்கே.. பெரியாழ்வார், சக்கரத்தாழ்வார் மாதிரி நானும் ஒரு ஆழ்வாரா..?
ஓகே.. பட்டம் கொடுத்த பேராசிரியர் வாழ்க..
அப்புறம் இதுல என்னங்கய்யா என் பதிவு, உன் பதிவு பிரிச்சு பேசுறீங்க..? எம்புட்டு வருத்தமா இரு்க்கு தெரியுமா..? நான் வேற, நீங்க வேறய்யா..? இப்படியெல்லாம் என்கிட்ட பேசலாமா..ய பாருங்க என் கண்ணுல தண்ணி வருது..!
உங்களுக்கும் என் தளத்துல பூந்து விளையாட சுதந்திரம் உண்டுதான்.. நீங்கதான் வர மாட்டேங்குறீக.. அதுக்கு நான் என்ன செய்யறது..?
[[[//மதுரை எப்படிங்கய்யா தாங்குது உம்மை..?//
பதிவுலகமே தாங்குதாம்; மருத தாங்காதா..?]]]
பதிவுலகத்துக்கு வேற வழியில்லையே.. அதுனாலதான் தாங்குது.!
ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணுன்னு ஒரேயொரு பேராசிரியர்தானே..
அதுனாலதான்..!
[[[அவரே பல வருஷம் கழிச்சு ஒரு வாய்ப்பு கிடைச்சு படம் பண்ணியிருக்காரு.. //
நீங்கதான் திரைத்துறையில் விவரமான ஆளாச்சே ... சொல்லுங்களேன். இந்த மாதிரி 'திருவாதிரை'களுக்குக்கூட எப்படி சான்ஸ் கிடைக்குது? கதை கேட்காமலே அவனவன் கோடிகோடியா கொட்டுவான்?]]]
ஒரு படம் ஹிட்டானா அவனைத் தேடித்தான் ஸார் தயாரிப்பாளர்கள் ஓடுவாங்க..
அதே மாதிரிதான் அந்த ஹீரோவைத் தேடி ஓடினாங்க.. அந்தத் தயாரிப்பாளருக்கு ஹீரோ கால்ஷீட் கொடுத்திட்டாரு.. அடுத்து அந்த ஹீரோவுக்கு ஏத்த மாதிரி கதை வைச்சிருக்கிற இயக்குநரைத் தேடினாங்க.. வந்த டைரக்டரைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க..
யார் கதை கேட்டா..? அதே மாதிரி.. ஒரு குத்துப் பாட்டு, நாலு பைட்டு, அஞ்சு பாட்டுன்னு ஒரு கமர்ஷியல் பார்முலாவை வைச்சுக் கலக்கி எடுத்திட்டாங்க.. அவ்ளோதான்..
கதையெல்லாம் கேட்டு நல்லாயிருக்கு நல்லாயில்லை.. ஜெயிக்கும், ஜெயிக்காதுன்னு சொல்ற அளவுக்கா அந்தக் கூட்டணிக்கு டேலண்ட் இருக்கு..?
[[[அப்புறம் எதுக்கு இம்புட்டு பெரிய பதிவு..!!!//
நல்லா இருக்குப்பா இது?! யாரைப் பாத்து யாரு என்ன சொல்றதுன்னு இல்ல. நீங்க சொல்றீங்க இது பெரிய பதிவுன்னு.. முருகா, இந்தக் கொடுமையை கேட்டுக்கிட்டுதான இருக்க? உங்க ஆளு பட விமர்சனம் படிச்சிருக்கியா நீ. நீயே சொல்லு அவர்ட்ட]]]
பக்தனே..
எனதருமை முருக பக்தன் ஒரு கமா, புள்ளி ஸ்டாப்கூட விடாமல் எழுதித் தள்ளுவதற்கு காரணம் அவன் இன்னும் மாணவனாகவே இருப்பதால்தான்..
நீதான் பெரும் பேராசிரியராச்சே.. சுருக்கமாக எப்படி எழுத வேண்டும் என்பதைக் கொஞ்சம் சொல்லிக் குடேன்.. அதில் அவன் தேறிவி்ட்டால் அடுத்தப் பிறவியில் உன்னை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியராக இருக்கும்படி பிரம்மனிடம் சொல்லி உன் தலையெழுத்தை மாற்றி எழுத வைக்கிறேன்..
பொழிப்புரையாள்வாரே!
'ள்'தான் .. 'ழ்' இல்லை!
வயசுப் பையன் நீங்க. எப்படி இந்த நேரத்தில் உக்காந்துகிட்டு இருக்கீங்க. சரி.. சரி.. கண்ணுல எதுக்குத் தண்ணி... உடுங்க
எனக்குத் தெரிந்த பேராசிரியர்கள் ஞானம்ஜி, இராமகி, கார்த்திகைப் பாண்டியன் ...
//அந்த ஹீரோவுக்கு ஏத்த மாதிரி கதை வைச்சிருக்கிற இயக்குநரைத் தேடினாங்க.. //
கதைய கேக்கவே மாட்டாங்களா? அதுக்குப் பிறகு புது டைரடக்கர்கள் என்னன்னு சொல்லி கேப்பாங்க .. ஒண்ணுமே புரியலைங்க....
முருகா!
//சுருக்கமாக எப்படி எழுத வேண்டும் என்பதைக் கொஞ்சம் சொல்லிக் குடேன்.//
நான் மட்டுமில்லை முருகா .. ஊர்ல இருக்க அத்தனை பேரும் சொல்லிப் பாத்தாச்சுப்பா. உன் சிஷ்யன் ஏதும் கேட்பதாக இல்லையே ... யாரும் எதுவும் அவனைப் பண்ண முடியாது!
//பிரம்மனிடம் சொல்லி உன் தலையெழுத்தை மாற்றி எழுத வைக்கிறேன்..//
ஓ! அப்ப அங்கயும் ரெக்கமெண்டேஷன் தானா .. நீயா ஏதும் பண்ண முடியாதா, முருகா?
[[[தருமி said...
பொழிப்புரையாள்வாரே!
'ள்'தான் .. 'ழ்' இல்லை!]]]
இதுக்குத்தான் ஒரு பேராசிரியர் பக்கத்துல வேணும்கிறது..! மன்னிக்கணும்ங்க ஐயா.. இனிமே இந்த மாதிரி அவசரத்தனமா பின்னூட்டம் போட்டு உதை வாங்க மாட்டேன்..
[[[வயசுப் பையன் நீங்க. எப்படி இந்த நேரத்தில் உக்காந்துகிட்டு இருக்கீங்க. சரி.. சரி.. கண்ணுல எதுக்குத் தண்ணி... உடுங்க]]]
வயசுப் பையனா இருக்கிறதாலதான் ராத்திரி, பகல்ன்னு பார்க்காம உழைச்சிக்கிட்டிருக்கோம்..
அது சரி நீங்க எதுக்கு இப்படி நடுராத்திரி வரைக்கும் கண்ணு முழிச்சு உடம்பை கெடுத்துக்குறீங்க..?
[[[எனக்குத் தெரிந்த பேராசிரியர்கள் ஞானம்ஜி, இராமகி, கார்த்திகைப் பாண்டியன்.]]]
ஆமா.. இருக்காக. ஆனாலும் உங்களை மாதிரி மனசுக்குள்ள புகுந்து உக்காறலையே.. அதுக்கு நான் இன்னா செய்யறது ஸாரே..!
//அந்த ஹீரோவுக்கு ஏத்த மாதிரி கதை வைச்சிருக்கிற இயக்குநரைத் தேடினாங்க.. //
கதைய கேக்கவே மாட்டாங்களா?]]]
கதையைக் கேட்டாங்க. அவரும் இப்ப எடுத்திருக்கிற கதையைச் சொன்னாரு. ஆஹா.. ஓஹோன்னு சொல்லிட்டாங்க.. அவ்ளோதான் அவங்களுக்கு கதையறிவு.. ஆனா பணம் இருக்கே.. அதான் பிரச்சினை..
[[[அதுக்குப் பிறகு புது டைரக்டர்கள் என்னன்னு சொல்லி கேப்பாங்க. ஒண்ணுமே புரியலைங்க.]]]
புது டைரக்டர்கள் நல்ல சப்ஜெக்ட் ஒண்ணு வைச்சிருக்கேன்.. கேக்குறீங்களா ஸார்ன்னு ஆரம்பிப்பாங்க..
பட்ஜெட் எவ்ளோன்னு தயாரிப்பாளர் கேட்பார்.. இவர் சொல்லுவார். அவருக்கு ஏற்புடையதா இருந்தா கதையைச் சொல்லுங்கன்னுவாரு.. அவர் சொல்ற கதை தயாரிப்பாளருக்கு புடிச்சிருந்தா யாரை வைச்சு பண்ணலாம்னு யோசிப்பாங்க.. பெரிய ஹீரோக்கள் கிடைச்சா அந்த இயக்குநருக்கு புண்ணியம்தான்.. பட்ஜெட் படம்னு சொல்லி ஒன்றரை கோடிக்குள்ள எடுக்கணும்னா நிச்சயம் புதுமுகம்தான்..
இது மாதிரி படம் எடுக்குறவங்க ஏதோ பேருக்கு ஒரு படம் எடு்தது பேர் வாங்கணும்ன்றதுக்காக உள்ள வர்றாங்க.. அவ்ளோதான்..
இப்பல்லாம் புதுமுகங்கள் மட்டுமே நடிச்சிருக்குற படத்தை வாங்கவே ஆள் இல்லை.. தயாரிப்பாளரே சொந்தமா தியேட்டர்களை வாடகைக்கு பிடிச்சு படத்தை ரிலீஸ் செய்றாரு.. அவருக்கு நேரம் நல்லாயிருந்து படம் ஓடுனா தப்பிச்சாரு.. இல்லைன்னா ஒரு வாரத்துல எல்லா பெட்டியையும் வாங்கி ஆபீஸ்ல வைச்சு பூஜை பண்ணுவாரு..
இப்படித்தான் தொடர்ந்து நடக்குது..!
[[[தருமி said...
முருகா!
//சுருக்கமாக எப்படி எழுத வேண்டும் என்பதைக் கொஞ்சம் சொல்லிக் குடேன்.//
நான் மட்டுமில்லை முருகா .. ஊர்ல இருக்க அத்தனை பேரும் சொல்லிப் பாத்தாச்சுப்பா. உன் சிஷ்யன் ஏதும் கேட்பதாக இல்லையே ... யாரும் எதுவும் அவனைப் பண்ண முடியாது!]]]
ஹி.. ஹி.. ஹி.. என்னாலே என்னைய ஒண்ணும் பண்ண முடியலை.. இதுல அடுத்தவங்க என்ன செய்ய முடியும்..?
//பிரம்மனிடம் சொல்லி உன் தலையெழுத்தை மாற்றி எழுத வைக்கிறேன்..//
ஓ! அப்ப அங்கயும் ரெக்கமெண்டேஷன்தானா. நீயா ஏதும் பண்ண முடியாதா, முருகா?]]]
பண்ணலாம்.. ஆனா அடுத்தவங்க வேலைல தலையைக் கொடுத்து அவங்களுக்கு வேலையில்லாம பண்ணக் கூடாது பாருங்க.. அந்த நல்ல எண்ணத்துலதான் இப்படி சிபாரிசு..!
உங்க திரைப்பட உலகமே தனிதான்'யா. என்னென்னமோ நடக்குது. உங்களுக்கும் ஒரு சான்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள்.
முருகா!
வேணாம்'பா இந்த மாதிரி சிபாரிசு எல்லாம். ஏன்னா நாளைக்கே பிரம்மா ஒங்கிட்ட வந்து நிப்பாரு .. எதுக்குப் பிரச்சனை. படம் எடுத்தவனே ரிலீஸ் பண்றது மாதிரி நானே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். சரியா?
சட்டத்தை மதிக்காதவர்களை பிடிக்காத போலிஸ்காரர்களுக்கு நகுலன் படத்தை பத்து வாட்டி பார்க்கும் தண்டணை கொடுத்துரலாமா!?
////பிரம்மனிடம் சொல்லி உன் தலையெழுத்தை மாற்றி எழுத வைக்கிறேன்..//
ஓ! அப்ப அங்கயும் ரெக்கமெண்டேஷன் தானா .. நீயா ஏதும் பண்ண முடியாதா, முருகா?//
உடலில் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு முருகன் காவல் இருப்பார் தெரியுமா!?
பிரம்மன் தலையெழுத்தை எழுதிவிட்டாரென்ரால் யாராலும் மாத்தமுடியாதா!? முடியாதென்றால் எதற்கு கோவிலும்,பக்தியும்.
மாற்ற முடியுமென்றால் என்னாத்துக்கு பிரம்மன்!?
அந்த “ஆண்டவா” சினிமாவுக்கு மட்டும் தானே?
ஐயா.. என்ன இங்க உண்மைதமிழன் அண்ணே ஒரு ருத்திர தாண்டவமே ஆடி இருக்காரு? அப்புறம் அந்த ஹெல்மட் விஷயம்.. ஹி ஹி ஹி
madurai karaanga comments poda koodadhunu modhala padhivulagathula oru "law" konduvangaiyaa..
eppa parthalum oor perumaiyave pesitu irukka vendiyadhu..
helmet podama ottitu poravan adipatta adhu avan prechanai..
violation of law can be considered in 2 aspects
1.due to violation if the other person gets affected(eg:riding in wrong route)
2.due to violation if only the violator gets affected(eg: not wearing helmet or riding without driving license)
idhula 2nd category aalungala pathi neega en kavalai padureenga??
enna naane indha 2nd category dhaan..
adipatta pattutu podhu....adhukaaga koodave oru helmeta thookitu suthittu irukka mudiyadhu..
உண்மைத்தமிழன் உபயத்துல இங்க ஒரு பட்டிமன்றமே ஆடினதைப் பாத்து அப்படியே பூரிச்சுப் போனேன்!
மருதயின்னாச் சும்மாவா?
நடுவுல, நடுவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தைச் சரியாக் கண்டுக்காம உட்டாரேன்றது தான் உண்மைத்தமிழன் தொடர் பின்னூட்டங்கள்ள, நான் கண்ட ஒரே ஒரு கொறை!
/வாத்தியார் தொழிலில் ஒரு நாளும் நேரமும், கொடுத்து அன்று ஏதாவது submit பண்ண வேண்டும் என்று சொல்லி, யாராவது அந்த நேரத்தில் கொடுக்காவிட்டால் அந்த மாணவர்களைக் 'கடித்துத் துப்பியது' நினைவுக்கு வந்து தொலைத்தது./
என்ன இருந்தாலும் எங்க வால்ஸ் மட்டும் தான் ஒரிஜினல்!ஒரிஜினல் தலைப்பா கட்டி கடை மாதிரி சூபர் சரவெடி! சொல்லிப்புட்டேன்:-))
//கட்டி கடை மாதிரி சூபர் சரவெடி! //
அதென்னங்க .. புரியலயே!
கிருஷ்ணமூர்த்திக்கு ஸாருக்கு என்னுடைய நன்றி..
அதான? எப்படி இதை விட்டேன்.. ராத்திரி கொஞ்சம் மப்புல போட்டனா.. அதான் கொஞ்சம் மிஸ்ஸாயிருச்சு..!
[[[வாத்தியார் தொழிலில் ஒரு நாளும் நேரமும், கொடுத்து அன்று ஏதாவது submit பண்ண வேண்டும் என்று சொல்லி, யாராவது அந்த நேரத்தில் கொடுக்காவிட்டால் அந்த மாணவர்களைக் 'கடித்துத் துப்பியது' நினைவுக்கு வந்து தொலைத்தது.]]]
இது போன்ற மலரும் நினைவுகளால்தான் அந்தக் "கடி" வாங்கிய மாணவர்கள் உங்களை தங்கள் நெஞ்சில் என்றென்றும் நினைவில் வைத்திருக்க உதவுகிறது.
ஆனா நீங்க அதையெல்லாம் நினைக்காம, "பயபுள்ள எம்புட்டு பாசமா, இன்னும் மறக்காம இருக்குது"ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டா அதுக்கு அவங்கள்லாம் பொறுப்பாக முடியாது ஸாரே..
//அந்தக் "கடி" வாங்கிய மாணவர்கள் உங்களை தங்கள் நெஞ்சில் என்றென்றும் நினைவில் வைத்திருக்க உதவுகிறது.//
ஆஹா ... இப்படி ஒரு விஷய்ம் இருக்குல்ல. நானும் என்னமோன்னுல நினச்சுக்கிட்டு இருந்தேன்.
வோட்டாண்டி,
உங்க தத்துவம் சரியாதான் தோணுது.அப்படியெல்லாம் யோசிச்சி பார்த்ததில்லை. respect to the law of the land அப்டின்னுதான் யோசிச்சிருக்கேன்.
தலைப்பா எடுத்திட்டீங்களா, அதன் புரியலை!
திண்டுக்கல் தலைப்பா கட்டி பிரியாணி கடை ...அப்புறம் எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை..சரவெடி, அதாங்க பட்டாசு, சின்னப்பையன்,வால்பையன்கள் எல்லாம் வெடிக்கிறது!
இப்ப உண்மைத் தமிழனும் ஆரம்பிச்சிருக்கார்! சத்தம் கேக்கலை? :-))
Post a Comment