Thursday, September 10, 2009

334. அமினா

*

அமினா*


ஒரு நைஜீரிய பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கை.

29 மொழிகளில் வெளிவந்து உலக கவனத்தை ஈர்த்த முக்கியமான நாவல்.


ஆசிரியர்: முகமது உமர்

தமிழில்: தருமி





பின்பக்க அட்டையில் உள்ள சிறு குறிப்பு:

சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். வியாபாரமோ தொழிலோ செய்ய முடியாது. தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது. வேலையில் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. நிலம், சொத்து வாங்க முடியாது. இப்படித் தொடர்கிற அடக்கு முறைக்கு ஒரே காரணம் அவர்கள் பெண்கள். அதுவும் இஸ்லாமியப் பெண்கள்.

எங்கோ நைஜீரியாவில் ஒரு பொந்தில் வசிக்கும் அமினா, பெண்களுக்கு எதிரான ஆதிக்கப் போக்கையும் கடுமையான சட்ட திட்டங்களையும் எதிர்கொள்ளத் துணிகிறாள். முடிவற்றுத் தொடர்கிறது அவளது உணர்ச்சி பூர்வமான போராட்டம். நைஜீரியாவையும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் அபூர்வமான படைப்பு இது.





*
"புத்துணர்ச்சி அளிக்கும் புத்திசாலித்தனமான படைப்பு."

Malak Zaalouk, Author and Sociologist.


*

"நம்பிக்கையூட்டும் பாஸிடிவ் கதை. உத்வேகம் அளிக்கும் ஒரு புதிய உலகத்துக்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறது இந்நாவல்."

Anne - Marie Smith, Canadian critic



*

"ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உலகில் ஒரு பெண்ணாக இருப்பதன் பொருள் என்ன என்பதை முகமது உமர் இந்நாவலில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமியப் பெண்களுக்கு இந்நாவல் நம்பிக்கையளிக்கும் தீபமாகத் திகழ்கிறது.

Kholood Alqahatani, Journalist, Arab News (Saudi Arabia)



*

*16ம் நூற்றாண்டில் இன்றைய நைஜீரியாவின் ஒரு பகுதியில் அரசாண்ட இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த அமினா தன் போர்குணத்திற்காகவும், வீரத்துடன் தன் நாட்டை விரிவு படுத்தியமைக்காவும் வரலாற்றில் தனியிடம் பெற்றவள். அப்போர்க் குணத்திற்காகவே இப்பெயரைத் தன் கதாநாயகிக்கு வைத்துள்ளார் ஆசிரியர்.


*

AMINA

Kizakku,
New Horizon Media Pvt. Ltd;
No. 33/15 Eldams Road,
Alwarpet, Chennai -18

e-mail: support@nhm.in

பக்கங்கள்: 368

விலை: Rs. 200


*


இந்த நூலைப்பற்றி ஒரு குறிப்பு தருகிறார் ஸ்ரீதர்.


*

*

20 comments:

சென்ஷி said...

வா(வ்)ழ்த்துக்கள் தருமி சார்!

வால்பையன் said...

நீங்க ஒரு நாவலை மொழி பெயர்த்திருந்தால் கண்டிப்பாக அது அதி முக்கிய நாவலாகத்தான் இருக்கும்!

கண்டிப்பாக வாங்கி விடுகிறேன்!

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் தருமி, வாங்கிப்படிக்கிறேன்.

மற்றவை பிறகு,

பாலகுமார் said...

வாழ்த்துக்கள் ஐயா !

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா..:-))))

சீனு said...

வாழ்த்துக்கள் தருமி சார்!

சீனு said...

//நீங்க ஒரு நாவலை மொழி பெயர்த்திருந்தால் கண்டிப்பாக அது அதி முக்கிய நாவலாகத்தான் இருக்கும்!

கண்டிப்பாக வாங்கி விடுகிறேன்!//

ஏங்க வால்...

தருமி பகுத்தறிவா எவ்வளவு சொல்றார். இப்படி அவர் மொழிபெயர்த்தால் முக்கியமாகத்தான் இருக்கும் என்று நம்புவது மூட நம்பிக்கை தானே!!! (எப்பூடி ;))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள் .ஆனாலும் நீங்க ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே இதைப்பற்றி.

வால்பையன் said...

//தருமி பகுத்தறிவா எவ்வளவு சொல்றார். இப்படி அவர் மொழிபெயர்த்தால் முக்கியமாகத்தான் இருக்கும் என்று நம்புவது மூட நம்பிக்கை தானே!!! (எப்பூடி ;))//

இது அதையும் தாண்டிய வியாபார டெக்னிக்!
நான் இப்படி சொன்னதால் பலர் வாங்கினா தருமிக்கு தானே லாபம்!

உங்களை மாதிரியே எல்லாரும் யோசிச்சாதான் நாடு என்னைகோ உருப்பட்டுருக்குமே!

தருமி said...

KID said ...

hmmmm good!!!

kid

கண்மணி/kanmani said...

ஓட்டு போட்டுட்டேன். படிக்காவிட்டாலும் [புத்தகம்]
பெண்கள் என்றாலே இன்னொரு அர்த்தம் கட்டுப்பாட்டுக்கு விதிக்கப்பட்டவர்கள்.இஸ்லாமிய பெண்களுக்கு இன்னும் அதிகம்

கண்மணி/kanmani said...

ஓட்டு போட்டுட்டேன். படிக்காவிட்டாலும் [புத்தகம்]
பெண்கள் என்றாலே இன்னொரு அர்த்தம் கட்டுப்பாட்டுக்கு விதிக்கப்பட்டவர்கள்.இஸ்லாமிய பெண்களுக்கு இன்னும் அதிகம்

thiru said...

வாழ்த்துக்கள்! :)

உண்மைத்தமிழன் said...

தாத்தாவுக்காகவே வாங்கிப் படிக்கிறேன்..

ஆனா விலைதான் கொஞ்சம் கூடுதலோன்னு தோணுது..!

தேவன் மாயம் said...

சார் சொல்லவே இல்லையே! ஓட்டுப் போட்டாச்சு!

வோட்டாண்டி said...

//வாழ்த்துகள் .ஆனாலும் நீங்க ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே இதைப்பற்றி.//

sollirundha vyabaaram dull ayerukaadha..kandasamy padam review netla padiche pala peru padam paakama vitadhunala "collection got affected"..andha maadhiri ayeda koodadhula..

//ஆனா விலைதான் கொஞ்சம் கூடுதலோன்னு தோணுது..!//
velaiya kuraikalaam mudiyadhu..vena andha bookoda pdfa dharumi avaroda abimaana vasagargalukku anuppi vaipaaru...(ennakum serthu)!!

Thekkikattan|தெகா said...

வாவ்! வாழ்த்துக்கள் தருமி... இப்படி சொல்லாமயே ஒரு முக்கியமான வேலையை சத்தமில்லாம முடிச்சிருக்கீங்களே, நல்லாருங்கய்யா :-)

கண்டிப்பாக வாங்கிருவோம்... இது மாதிரி இன்னும் நிறைய மொழி பெயர்ப்புகள் அமைய கூடுதல் வாழ்த்துக்கள், சார் :D

கோவி.கண்ணன் said...

என்னுடைய பின்னூட்டம் காணவில்லை ....

:(

*********

நல்வாழ்த்துகள் !

cheena (சீனா) said...

அண்ணே - சத்தமில்லமா இப்படி ஒரு வேலை - வாழ்க - வாங்கிப் படிச்சிட்டுச் சொல்றேன்

நல்வாழ்த்துகள் அண்ணே
நட்புடன் தம்பி

தருமி said...

கோவீஸ்,
400-ல போட்டுட்டு 334-ல் தேடினா எப்படி?

Post a Comment