Wednesday, March 17, 2010

384. WHY I AM NOT A MUSLIM .. .5 ( god is not great )

*


ஏனைய பதிவுகள்:


*




*
சென்ற பதிவினில் குரானின் வரலாறு, அதிலுள்ள ஐயங்கள், கேள்விகள் பற்றி WHY I AM NOT A MUSLIM என்ற நூலில் இருந்த பகுதியினைக் கொடுத்திருந்தேன்,. அப்புத்தகத்தின் மற்றைய பகுதிகளைப் பார்ப்பதற்கு முன் தொடர்பு கருதி, குரானின் வரலாறு பற்றிய வேறு இரு நூல்களின் தொகுப்பை இங்கே பதிவேற்றப் போகிறேன்.








CHRISTOPHER HITCHENS என்பவர் எழுதிய god is not great (HOW RELIGION POISONS EVERYTHING) என்ற நூலின் 9-வது பகுதியை - குரானின் வரலாற்றைத் தரும் அப்பகுதியை - இங்கு   பதிவிடுகிறேன்.




god is not great
(HOW RELIGION POISONS EVERYTHING)

CHRISTOPHER HITCHENS

THE KORAN IS BORROWED
FROM BOTH JEWISH AND
CHRISTIAN MYTHS


மோஸஸ், ஆபிரஹாம், ஏசு – இவர்களெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக, நன்னெறிக்கு எதிராக, அடிப்படையற்று சொன்ன பல கூற்றுக்கள் போலவே குரானிலும் முகமதுவினால் தொடர்கிறதா என்றே பார்க்க வேண்டும். இங்கேயும் காபிரியேல் / ஜிப்ரேல் வருகிறார்;  படிக்காத ஒருவருக்கு சுராக்களை அளிக்கிறார். இங்கேயும் நோவாவின் பிரளயம், விக்கிரக ஆராதனைகளுக்கு எதிரான தண்டனைகள் வருகின்றன. யூதர்களுக்காகச் சொல்லப்பட்டவைகளும், அவைகளை அவர்களே கண்டுகொள்ளாமல் செல்வதும் நடக்கிறது. இங்கேயும், ஹாதிஸ் என்றழைக்கப்படும் நபியினால் சொல்லப்பட்டவைகளும் செய்தவைகளும் நிறைய நிச்சயமில்லாத விஷயங்களாகவும் நிகழ்வுகளாகவும் உள்ளன. (123)

குரானில் சொல்லப்படும் நிகழ்வுகள் எல்லாமே ஒரு சமூகத்தின் மிகச்சிறிய பகுதிக்கானதாகவும், அங்கே நடந்த சிறு தகராறுகளாகவும் உள்ளன. அதுவுமின்றி, மற்ற ஹீப்ரு லத்தீன், க்ரீக் மொழி நூல்களிலிருந்து எவ்வித வரலாற்று ஒற்றுமையையும் காட்ட முடியாத நிகழ்வுகளாகவே அவை உள்ளன. அவைகள் யாவுமே வாய்வழியாக, அதுவும் அரபியில் மட்டுமே வாய்வழியாக வந்தவைகள்.

விற்பன்னர்கள் பலரும் குரான் அது எழுதப்பட்ட அராபிய மொழியில் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ளப்படும் என்கின்றனர்.  ஏனெனில் அம்மொழி கணக்கற்ற சொல்லடைகளும், பகுதிவாரியான பேச்சு மொழிகளும் நிறையப் பெற்றது. (அப்படிப்பட்ட மொழியை ஏன் அல்லா தேர்ந்தெடுத்தார்?) Introducing Muhammad என்ற நூலின் ஆசிரியர்கள் இருவரும் அராபிய மொழியில் மட்டுமே குரான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். (..they insist that ”as the literal Word of God, the Koran is the Koran only in the original revealed text. A translation can never be the Koran, that inimitable symphony, ‘the very sound of which moves men and women to tears’.)

எம்மொழிபெயர்ப்பாயினும் அது ஓரளவு மட்டுமே குரானின் உண்மைப் பொருளைத் தரமுடியும். (அப்படிப்பட்ட மொழியை ஏன் அல்லா தேர்ந்தெடுத்தார்?) கடவுள் ஒரு அராபியராக இருந்தால் ( ஒரு பாதுகாப்பற்ற கற்பனைதான் இது! ) அவர் ஏன் ஒரு படிப்பறிவில்லாதவரை, தான் சொன்னதை அப்படியே மாற்றாமல் கொடுக்க முடியாத ஒருவரை எதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?  இது சொல்வதற்கு மிக எளிதான ஒரு விஷயமில்லை.  ஏனெனில் கிறித்துவர்களுக்கு கன்னிமரியாள் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு இதுவும் இஸ்லாமியருக்கு முக்கியமானது. (124)

இன்றுவரையிலும் எம்மொழியில் குரான் மொழிபெயர்க்கப்பட்டாலும் குரானின் அராபிய மொழியாக்கமும் சேர்த்தே பதிப்பிடப்படுகிறது.(125)

இஸ்லாம் புதியதாகத் தோன்றிய ஒரு மதம்; ஆகவேதான் அது இன்னும் தன் உயர்ந்த தன்னம்பிக்கையளிக்கும் நிலையில் நின்றுகொண்டிருக்கிறது.

முகமதுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும், சொன்னவைகளும்  அவரது காலத்திற்குப் பின் பல்லாண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டவை. அவைகள்  சுய விருப்புகளாலும், வதந்திகளாலும், படிப்பறிவற்றதாலும் பல மாற்றங்களுக்கு உட்பட்ட ஒரு தொகுப்பாகும். (127)

முகமது தன்னை 'கடவுளின் அடிமை' என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்த வரலாறு (Pickthall -வின் கூற்றுப்படி):

மெக்காவிலுள்ள காபா ஆபிரஹாமால் கட்டப்பட்டது; பின் வஹாபிகளால் அழிக்கப்பட்டது; அதிலுள்ள விக்ரகங்களும் அழிக்கப்பட்டன. முகமதுவும் அதனாலேயே அமைதியை நாடி ஹீரா மலைக்குச் செல்கிறார். அங்கே அவர் தூக்கத்திலோ மயக்கத்திலோ இருக்கும்போது ஒரு குரல் அவரை  வாசிக்கச் சொல்கிறது. முகமது  இருமுறை தன்க்கு வாசிக்கத் தெரியாது என்று கூறியும் மும்முறை அந்தக் குரலால் வாசிக்க அழைக்கப்படுகிறார். தன்னையும் அல்லாவிடமிருந்து வந்ததாக அந்தக் குரல் சொல்கிறது. இதன்பின் முகமது தன் மனைவி கத்தீஜாவிடம் சொல்ல, அவர் முகமதுவை கதீஜாவின் உறவினர் நெளபால்  (Waraqa ibn Naufal) என்பவரிடம் அழைத்துச் செல்ல, யூத, கிறித்துவ நூல்களைப் பற்றி அறிந்த  அவர் மோஸேவிடம் பேசியவரே உன்னிடமும் பேசியவர் என்று சொன்ன பிறகே, முகமது தன்னை அல்லாவின் அடிமை என்று கருதத் தொடங்குகிறார். (128)

முகமது 632-ம் ஆண்டு இறக்கிறார். அதன் பின் 120 ஆண்டுகளுக்குப் பிறகு இப்னு இஷாக் (Ibn Ishaq) என்பவரால் முகமதுவின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்படுகிறது. ஆனால் அது காணாமல் போக, இப்னு ஹிஷாம் (Ibn Hisham) என்பவரால் மீண்டும் மற்றுமொரு வரலாறு எழுதப்படுகிறது. (129)

முகமதுவின் செயலர்கள், நண்பர்கள், உடனிருந்தோர் இவர்களிடமிருந்தெல்லாம் எப்படி முகமது சொன்னவைகள், நடந்த நிகழ்வுகள் எல்லாம் எப்படிப் பெறப்பட்டன என்பதற்கான எந்த ஒரு பொதுமுறையும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஈசாவைப் போலல்லாமல் முகமது ஒரு குடும்பத்தைத் தனக்குப் பின் விட்டுப் போயிருந்தாலும், தனக்குப் பிறகு யார் தன் பொறுப்பை ஏற்று நடத்துவது என்று சொல்லிச் செல்லவில்லை. அதனால் அவர் இறந்ததுமே தலைமைக்குப் போட்டியும் சண்டைகளும் ஆரம்பித்து விட்டன. தான் ஒரு மதமாக இஸ்லாம் உருவாவதற்குள் சன்னி, ஷியா என்று இரு குழுக்கள் பிறந்துவிட்டன.(130)

முகமதுவிற்குப் பின் கலிபா ஆன அபு பக்கர் முகமதுவின் வார்த்தைகளை ஒருங்கிணைக்க முயல்கிறார். மனனம் செய்த பலர் போர்களில் இறந்துபட  ஒரு சிலரே மனனம் செய்தவர்கள் இருந்தார்கள். ஆகவே, எல்லாவித விஷயங்களையும் - தாட்களில், கற்களில், ஓலைகளில், தோளெலும்புகளில், மற்ற எலும்புகளில், தோல்களில் - எழுதப்பட்ட வைகளை (ஜிப்ரெல் மூலமாகத் தன் வார்த்தைகளைத் தந்த கடவுள் அப்படியே அவைகளை ஒழுங்காக 'ரிக்கார்ட்' செய்யவும் ஏதாவது ஒரு நல்ல வழி காண்பித்திருக்கலாம்.) முகமதின் செயலராக இருந்த ஸைட் இப்னு தாபிட் (Zaid Ibn Thabit)மூலமாகத் தொகுக்கப்படுகிறது.

மேலே சொன்னது உண்மையாயின் முகமதுவின் வாழ்க்கை முடிந்த உடனேயே அவரது வரலாறு எழுதப்பட்டு விட்டது என்ற கூற்று சரியாக இருக்கும். ஆனால் மேலே சொன்னது உண்மையா என்ற கேள்வி பெரிதும் உள்ளது. ஏனெனில் இவைகளைத் தொகுத்தது முதல் கலிபா இல்லை; நாலாவது கலிபாவான அலி; அவரே ஷியா குழுமத்தை ஆரம்பித்தவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சன்னி குழுமத்தினர் இவைகள் தொகுக்கப்பட்டது 644 முதல் 656 வரை ஆண்ட உத்மன் என்ற கலிபாவினால் என்கிறார்கள். உத்மன் இறுதி வடிவத்திற்குக் காரணாமாயிருந்தார் என்கிறார்கள். இறுதி வடிவத்திற்குக் கொண்டு வந்ததும், ஏற்கெனவே இருந்தவைகளை - earlier and rival editions- எல்லாவற்றையும் உத்மன் எரித்து அழித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் வேறு நகல்கள் இருக்கக்கூடாதென்ற உத்மனின் திட்டம் சரியாகச் செயல்பட முடியாது. ஏனெனில் அராபிய மொழியின் எழுத்துக்கள் 9-வது நூற்றாண்டில்தான் இறுதி நிலைக்கு வந்தன. அதற்கு முன்பு புள்ளிகள், அரைப்புள்ளிகள், குறில்களுக்கான குறியீடுகள் ஏதும் இல்லாதிருந்தன. இதனால் வசனங்களில் மாறுபட்ட கருத்துகள் அன்றும், இன்றும் இருந்து வருகின்றன. (131)

வசனங்களை விடவும் ஹாடிஸ்கள் - வாய்மொழிச் சொல்லாக வந்தவைகள் - மேலும் குழப்பமூட்டுபவைகளாகவும், பொறுக்க முடியாதவைகளாகவும் உண்டு. ஒவ்வொரு ஹாடிசும் உண்மையானதென்று ஒரு isnad or chain என்ற ஒரு சாட்சி மூலம் வரவேண்டும். ஆனால் சில சமயங்களில் A- B யிடம் சொன்னதாகவும், அது C -யிடம் சொல்லப்பட்டு, பின் அது D- மூலமாக ..... இப்படியாக அந்த சாட்சிகள் சொல்லப்படுவதுண்டு. 


சான்றாக, புகாரி முகமதுவின் மரணத்திற்குப் பிறகு 238 ஆண்டுகள் கழித்து காலமானார். இவரது சாட்சிகள் மிகவும் கெளரவிக்கப்படுபவை. அவைகளில் எந்த வித குற்றம் குறை காண்பதரிது என்றும் சொல்லப்படும்.  ஆனால் அவர் மொத்தம் 3,00,000 ஹாடிசுகள் சொன்னதாகவும், பின் அதில் 2,00,000 ஹாடிசுகளை மதிப்பற்றவைகள் என்றோ உறுதி செய்யப்பட முடியாதவை என்றோ அவர் கழித்து விட்டார்.  மறுபடியும் தான் சொன்னவைகளில் சலித்தெடுத்து வெறும் 10,000 ஹாடிசுகளை மட்டுமே கொடுத்துள்ளார்.


எவ்வித சான்றுமின்றி  மூன்று லட்சத்திலிருந்து  (குத்து மதிப்பாக!) வெறும் 10,000 ஹாடிசுகளைத் தன் நினைவிலிருந்து புகாரி கொடுத்தார் - அதுவும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ---- அப்படி அவர் தந்த ஹாடிசுகள் புனிதமான, எவ்வித மாறுதலுமற்றவைகள் என்று நீங்கள் நம்ப வேண்டுமானால் ...  நம்பிக்கொள்ளுங்கள்.(132)

சலித்துப் பார்த்தால் சில ஹாடிசுகள் எங்கிருந்து கிடைத்தன என்பதுவும் தெரியும். ஹங்கேரி நாட்டு Ignaz Godlziher என்ற அறிஞர், Reza Aslan என்பவர் செய்த ஆராய்ச்சியின்படி, நிறைய ஹாடிசுகள் யூதர்களின் டோரா, கிறித்துவர்களின் விவிலியம், யூத குருமார்களின் வார்த்தைகள், பழைய பெர்சியன் கருத்துக்கள், க்ரேக்க தத்துவங்கள், இந்தியப் பழமொழிகள் … இதையெல்லாம் விட கிறித்துவர்களின் Lord’s Prayer வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்தாளப்பெற்றுள்ளன. விவிலியக் கதைகள் சிலவும், ‘’உன் வலதுகை செய்வது இடது கைக்குத் தெரியக்கூடாது’ என்ற வார்த்தைகளும் அப்படியே ஹாடிசுகளில் இடம் பெற்றுள்ளன. 

அஸ்லான் தனது ஆராய்ச்சியில் ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய சட்ட திட்டங்களை ijitihad மூலம் வடிவமைக்கும்போது, அவர்கள் பல ஹாடிசுகளை இரு கூறாகப் பிரித்துள்ளார்கள்:  பொருளிய லாபத்துக்காகச் சொன்ன பொய்கள்; கருத்துச் சிறப்புக்காகச் சொன்ன பொய்கள்.


இப்படி பல வழிகளிலிருந்து தங்கள் வேத நூல்களைப் படைத்திருந்தாலும் அவர்கள் தங்கள் வேதப்புத்தகமே முழுமையான, கடைசியான வேதநூல் என்று வலியுறுத்தி வருகிறார்கள். (133)


தன்னைத் தவிர வேறு கடவுள்களை வணங்குபவர்களை மன்னிக்க மாட்டேன் என்ற அல்லாவின் கட்டளை  கிறித்துவ பத்துக்கட்டளைகளிலிருந்து வாங்கிய கடனே.


முகமதுவின்  மனைவியர்களில் சிலர் முகமதுவின் சில சின்னத் தேவைகளுக்குக் கூட அவருக்கு வசனம் இறக்கப்படும் என்றும்,  இதை வைத்து முகமதுவை அவர்கள் கேலி செய்ததும் உண்டு. 


பொதுவிடத்தில் முகமதுவிற்கு வசனம் இறக்கப்படும் போதெல்லாம் அவர் வலியால் துடிப்பவராகவும், காதினுள் பலத்த மணியொலியும் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. மிகுந்த குளிர் காலத்தில் கூட அவருக்கு வியர்வைப் பெருக்கு ஏற்பட்டதாகவும்  சொல்லப்படுகிறது. (134)

சில இதயமற்ற கிறித்துவர்கள்  இவையெல்லாம்  அவரது வலிப்பு நோயால் வந்தது என்று சொல்வதுண்டு. (ஆனால் அவர்கள் பவுலுக்கு டமாஸ்கஸ் செல்லும் வழியில் நடந்த நிகழ்வை அவ்வாறு சொல்வதில்லை.)


David Hume -ன் கேள்வியை இங்கே கேட்டாலே போதும்: ஏற்கெனவே எழுதப்பட்டு இருந்த ஒன்றை கடவுள் ஒரு மனித ட்ரான்ஸ்மீட்டர் மூலம் நமக்குக் கொடுத்தாரா? இல்லை ... முகமதுவே தானாகவே இருந்த சிலவற்றைச் சொல்லி  அதெல்லாமே கடவுள் எனக்குச் சொன்னது என்று சொன்னாரா?  


ஆனாலும் வசனம் இறங்கும்போது முகமது பெற்ற வலி, தலைக்குள் ஒசை, வியர்வைப் பெருக்கு - இவை எல்லாமே கடவுளிடமிருந்து முகமது பெற்றதெனின் அந்த நிகழ்வு அமைதியான, அழகான, தெளிவான ஒரு நிகழ்வாக இருந்திருக்கவில்லை.


கிறித்துவத்தைப் போலன்றி இங்கே முகமதுவிற்கு ஒரு சந்ததியினர் இருந்துள்ளனர்.  இருந்தும் இஸ்லாம் பிறந்ததிலிருந்தே அவர்களுக்குள்ளே பல பிளவுகளும், குருதி சிந்தியதுவும் தொடர்ந்து வந்துள்ளன. (135)

இஸ்லாமிய   நம்பிக்கையில்லாதவர்களுக்கு மெக்காவிற்குள் அனுமதி கிடையாது என்பதுவே இஸ்லாம் ஒரு உலகளாவிய (Universal) மதம் என்பதை  மறுப்பதாக அல்லவா உள்ளது.


மற்றைய ஒரு-கடவுள்-மதங்களைப் போலல்லாமல் இஸ்லாம் இதுவரை எவ்வித மாற்றத்திற்கும் உட்பட்டதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. இது மிகச் சரியென்றும், மிகத்தவறு என்றும் கருதலாம்.  இஸ்லாமிலும் பல வேறுபட்ட படிமங்கள் உண்டு. ஏனெனில், சுபிக்கள் இஸ்லாமிய தத்துவங்களுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள்.  அவர்களது படிமங்களில் மற்ற நம்பிக்கைகளுக்கும் இடமுண்டு. 

இஸ்லாமியத்திற்கென்று ஒரே தலைமை இல்லாததால், பல்வேறு பத்வாக்கள் வருவதுண்டு. இதுவரை நம்பி வந்தவைகளை இனி நம்பத் தேவையில்லை என்று யாரும் இம்மதத்தில் கூற முடியாது. இது ஒரு வகையில் நல்லதற்கேயாயினும், எங்கள் இஸ்லாம் மாற்றுவதற்கு இடமில்லாத, கடைசி வேதமே என்ற இஸ்லாமியரின் அடிப்படை நம்பிக்கை மாற்ற முடியாத, ஆனால் அதே சமயத்தில் ஒரு தவறுதலான நம்பிக்கையாகவே இருக்க முடியும். 


இஸ்லாமியத்திலுள்ள முன்னுக்குப் பின்னான முரண்கள், பல பிரதிகளுள் உள்ள வேற்றுமைகள் இவைகளை பொறுமையுடன் பட்டியலிடவும் கூட மிகப்பெரும் எதிர்ப்புகள் வரும்.


அவர்களது முழு நம்பிக்கையானது ஒரு பரந்த உள்நோக்கைக் கூட முடியாத ஒன்றாக்கி விடுகிறது. (137)





44 comments:

Robin said...

//எவ்வித சான்றுமின்றி மூன்று லட்சத்திலிருந்து (குத்து மதிப்பாக!) வெறும் 10,000 ஹாடிசுகளைத் தன் நினைவிலிருந்து புகாரி கொடுத்தார் - அதுவும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ---- அப்படி அவர் தந்த ஹாடிசுகள் புனிதமான, எவ்வித மாறுதலுமற்றவைகள் என்று நீங்கள் நம்ப வேண்டுமானால் ... நம்பிக்கொள்ளுங்கள்.// :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

உங்களுடைய சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.பாராட்டுகள்.

வால்பையன் said...

தீர்க்கமான வாதம்!

ஆனால் சிந்திக்கவே மாட்டேன் என்பவர்களிடம் என்ன சொல்லி என்ன பயன்!

உமர் | Umar said...

//புகாரி முகமதுவின் மரணத்திற்குப் பிறகு 238 ஆண்டுகள் கழித்து காலமானார். இவரது சாட்சிகள் மிகவும் கெளரவிக்கப்படுபவை. அவைகளில் எந்த வித குற்றம் குறை காண்பதரிது என்றும் சொல்லப்படும். ஆனால் அவர் மொத்தம் 3,00,000 ஹாடிசுகள் சொன்னதாகவும், பின் அதில் 2,00,000 ஹாடிசுகளை மதிப்பற்றவைகள் என்றோ உறுதி செய்யப்பட முடியாதவை என்றோ அவர் கழித்து விட்டார். மறுபடியும் தான் சொன்னவைகளில் சலித்தெடுத்து வெறும் 10,000 ஹாடிசுகளை மட்டுமே கொடுத்துள்ளார்.//

புகாரி சாட்சிகளைத் தேர்ந்தெடுத்த முறையே சர்ச்சைக்குரியது. புகாரி தன் கண்ணெதிரில் ஒருவர் கன்றுக்குட்டியை ஏமாற்றுவதைப் பார்த்த பின்பு, அவருடைய சாட்சியத்தை தன்னுடைய தொகுப்பில் இணைக்கவில்லை. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மற்ற சாட்சிகள், ஹதீசினை அவரிடம் கூறிய நேரம் தவிர மற்ற நேரங்களிலும் நேர்மையானவர்களாகதான் இருந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

கன்றுக்குட்டியை ஏமாற்றியவர், உறங்கிக்கொண்டிருக்கும்போது புகாரி சென்று அவரை சந்தித்திருந்தால், அவர் கூறியதை ஏற்றுக் கொண்டிருப்பார். ஏனெனில், புகாரியிடம் தகவல் கூறியவர்கள் அனைவருமே, அந்த நபரே மிக முக்கியமான சாட்சி என்று கூறியிருந்தனர். மிக முக்கியமான சாட்சியே, நேர்மையற்றவராய் இருக்கும்போது, மற்ற சாட்சிகளின் ஹதீஸ்களை எப்படி உண்மையானது என்றுக் கொள்ளமுடியும்?

ரவி said...

டபுள் செஞ்சுரி !!!

உமர் | Umar said...

//இஸ்லாமிய நம்பிக்கையில்லாதவர்களுக்கு மெக்காவிற்குள் அனுமதி கிடையாது என்பதுவே இஸ்லாம் ஒரு உலகளாவிய (Universal) மதம் என்பதை மறுப்பதாக அல்லவா உள்ளது.//

இஸ்லாம் உலகளாவிய மதம் இல்லை என்பதற்கு 5 கடமைகளுள் ஒன்றான, ஹஜ்ஜை உதாரணம் காட்ட முடியும். ஆரம்பத்தில், ஹஜ் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையானது என்று சொல்லி வந்தார்கள்; அப்படிதான் குரானிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு ஏழை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாதே என்று கேட்கத் தொடங்கியதும், அது வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கடமையானது என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.

ஒருவேளை, இறைவனும் உண்மையாய் இருந்து, குர் ஆனும் இறைவனால் அருளப்பட்டிருந்தால், அரேபியா தாண்டியும் இஸ்லாம் பரவும் என்பது 'முக்காலமும் அறிந்த' அல்லாவிற்குத் தெரியாதா? மற்ற நாடுகளில் இருந்து மெக்கா செல்வதற்கு மிகுந்த பொருட்செலவு ஆகும் என்பதும், இஸ்லாமியர்களில் ஏழைகளும் இருப்பார்கள் என்பதும் 'அனைத்தும் அறிந்த' அல்லாவிற்குத் தெரியாதா?

தருமி said...

கும்மி,
நீங்கள் கேட்ட கேள்வியை நானும் முன்பே கீழ்க்கண்டவாறு கேட்டிருந்தேன்:

//ஏழை இஸ்லாமியருக்கு அது ஒரு கனவாகவே முடியும். பின் எப்படி இந்தக் கடமை கொடுக்கப்பட்டிருக்க முடியும். 90 விழுக்காடு முஸ்லீம்களுக்கு இந்தக் கடமையை ஒரு காலத்தில் நிறைவேற்ற முடியாது போகும் என்பது அல்லாஹுக்கு அன்றே தெரிந்திருக்காதா?

....ஆனால், இன்று எல்லா கண்டங்களிலும் பரவியிருக்கும் இஸ்லாம் மதத்தினர் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை.//

உமர் | Umar said...

//தருமி said...
கும்மி,
நீங்கள் கேட்ட கேள்வியை நானும் முன்பே கீழ்க்கண்டவாறு கேட்டிருந்தேன்://

ஐயா! நான் வலையுலகிற்கு வருகை தருவது கடந்த சில மாதங்களாகத்தான். நீங்கள் குறிப்பிட்ட பதிவினை நான் படிக்கவில்லை. ஹஜ் தொடர்பான இந்த பதில் ஏற்கனவே நீங்கள் இட்டிருந்தால், இங்கே நீக்கிவிடுங்கள்.

குர் ஆனில் அல்-ஹஜ் சூராவில் ஹஜ் மனிதகுலத்திற்குக் கடமையாக்கப்பட்டது என்று வருகின்றது (22:27); அல்-பகராவில் ஹஜ் எப்பொழுது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று வருகின்றது. (2:196, 2:197). அல்-பகராவில் ஹஜ் அல்லது உம்ரா செய்யும்போது, செய்யவேண்டியவற்றை செய்யாவிட்டால், பரிகாரமாய் என்னவெல்லாம் செய்யலாம் என்று கூறும்போது இயன்ற அளவிற்கு தானம் செய்யலாம் என்று வருகின்றது. இங்கேயும் வசதியற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது என்றில்லை.

அல்-இம்ரான் சூரா இஸ்லாமியர்களுக்கான அறிவிப்பில் கஅபா குறித்தும், பிற மதத்தவருக்கான அறிவிப்பில் ஏன் அல்லாவை மறுக்கிறீர்கள் என்றும் வருகிறது. (3:95, 3:96, 3:97. 3:98, 3:99) இந்த வசனங்களில் கஅபா முதல் வணக்கத்தலம் என்றும், ஹஜ் கடமை என்றுமே குறிக்கப்பட்டுள்ளது. இந்த வசனத்திலும் பொருளாதார வசதியற்றவர்கள் விலக்கு அளிக்கப்பட்டவர்கள் என்று இல்லை.

இந்த மூன்று சூராக்கள் தவிர வேறு சூராக்களில் ஹஜ் குறித்து ஏதும் குறிப்புகள் இல்லை. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, குர்ஆனைப் 'படைத்தவனுக்கு' அரேபியாத் தாண்டியும் இஸ்லாம் பரவும் என்று தோன்றவில்லை. இன்னும்கூட இது இறைவனின் வேதம் என்று கூறுபவர்களே, உங்கள் இறைவனுக்கு இந்த அளவிற்குக் கூட தன்னுடைய மதம் பரவும் என்று தெரியாதபோதும், முக்காலமும் அறிந்தவன் என்றுதான் கூறுவீர்களா?

பயனுள்ள தகவல்கள் said...

இங்கே இஸ்லாத்தைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அறவே இஸ்லாத்தை பற்றி அறிவு இல்லை என்பது தெரிகிறது. காழ்ப்புடன் உண்மைக்கு புறம்பாகவே எழுதும் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் (மாற்று கருத்தை கொண்டவர்களுக்கா) அறிய ஒவ்வொறு சனிக்கிழமயும் இரவு 10.30 மணிமுதல் 11.30 வரை இமயம் தொலைக்காட்ச்சியை பார்க்கவும். மேலும் குர்ஆன் இறக்கப் பட்ட வரலாறு மற்றும் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிய pls visit
www.onlinepj.com.

Rajan said...

சூப்பர் !

வால்பையன் said...

//குர்ஆன் இறக்கப் பட்ட வரலாறு//


இனிமேல் தான் ”இறக்க” பட போகுது!
அதுக்கு தான் நாங்க வந்துருக்கோம்!

NO said...

அன்பான நண்பர் திரு தருமி,

அருமையான மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கங்கள்! வாழ்த்துகள். தொடரட்டும்!

சிறிய நெருடல்கள் சில (உங்களின் எழுத்துகளில் இல்லை) வந்த பின்னூட்டங்களில்!

இணையதளத்தில், இதை போன்ற மிக நுட்பமான விளக்கங்களை கொடுத்து, பாரம்பரியமான ஒன்றை விமர்சிக்கும்பொழுது, அதன் சாரத்தில் இருக்கும் தெளிவை
எதிகருத்தாளர்களின் ஏற்பு நிலைக்கு சென்றடையாமல் செய்வது, பின்னூட்டம் இடுபவர்களின் தரம் மற்றும் நோக்கு!

நன் முன்பே சொன்னதைப்போல, மத மறுத்தலின் சாரத்தை கோபமாக இல்லாமல், சார்பாக இல்லாமல், தூற்றலாக இல்லாமல் சொல்ல எத்தனிப்பவரின் கருத்தே ஒரு கட்டத்திற்கு மேல் சார்பாளர்களின் மனதின் உள்ளே புக முடியாது! அப்படி இருக்கையில் தூற்றலுடன் செய்யப்படும் emotional மதமறுப்பு எந்த அளவுக்கு உள்வாங்கப்படும் என்பது சொல்லித்த்தெரிவதில்லை!

அனால் உங்கள் எழுத்துக்களின் மேன்மை மற்றும் தரம் அந்த வகையை சாராததால், நீங்கள் பாதி கிணறு தாண்டிவிட்டீர்கள், எப்பவும் போல. ஆனாலும், இந்த கட்டுப்பாட்டினை இணைய தளத்தில் தகர்க்க உதவும் ஒன்று, சொல்லவந்த கருத்தை ஆமோதிப்பதாக இடப்படும் பின்னூடங்கள் மற்றும் அதை
எழுதுபவர்களின் நிலை!

நிச்சியமாக, திரு வினவு அவர்களின் தளத்தில் வரும் ஜல்லியைப்போன்று இங்கே யாரும் இல்லை! ஆனாலும் சின்ன உறுத்தல்கள் இருக்கத்தான் செய்கிறது! For example, திரு ராபின் என்ற நண்பர், புகழ்ந்து விட்டு போயிருக்கிறார்! அவர் யாரென்று பார்த்தல், தன்னுடைய மதத்தை தாறுமாறாக தூக்கிப்பிடிப்பவர்! Of cousre, அது தவறில்லை. அவரின் மதத்தை புகழவோ, பரப்பவோ அவருக்கு முழு உரிமை இந்த நாட்டில் உள்ளது! ஆனால், பிரச்சனை, அவரின் பின்னூட்ட சரித்திரத்தை பார்த்ததில், எங்கெங்கு மற்ற மதங்கள் (கிருத்துவம் அல்லாது) விமர்சிக்க படுவதோ அங்கெல்லாம் அவர் ஆஜராகி தன் ஆமொதித்தலை வரைகிறார்!
இணையதளத்தில் எப்போதாவது வரும் எனக்கே இது புரியும் பொழுது, இங்கேயே குடிகொள்ளும் பலருக்கு இது நன்றாக புரியும்!

அதேபோல, நண்பர் திரு செந்தழில் ரவி அவர்களும் (நண்பர் ரவி மிக்க கோபம் கொண்டு இல்லை என்பார், ஆனாலும் அவரின் சார்பு என்ன என்பது நிறைய பேருக்கு புரியும்)!!

நண்பர் திரு வால் பையன் அவர்களின் மத விமர்சன முறையை பற்றி நான் முன்பே எழுதியிருந்தேன் (கவனிக்க வேண்டியது, நிச்சயமாக அவர் மத விடயத்தில் ஒரு நடுநிலயாலர்தான், அதாவது எல்லா மதத்தையும் சார்பிலாமல் பாரபட்ச்ச்மிலாமல் தாக்குவதால், அவருக்கு ஒரு agenda இருக்கிறது என்று
சொல்லவே முடியாது. அவர் ஒரு (எந்த ஒரு) மத எதிர்ப்பாளி). Problem is, அவரின் வீரியம் மற்றும் தாக்குதல் நடை, பலரை கோபம் கொள்ளவைக்கும்! அதனால் சொல்ல வந்த சாரம் போய்ச்சேராது!

Of course, of course, தருமி சார், வரும் பின்னூட்டங்களை, மற்றும் எழுதுபவர்களை நீங்கள் ஒன்றும் தடுக்கமுடியாது!

So, நான் சொல்லுவதெல்லாம், பின்னூட்டம் இடும் நண்பர்கள், குறிப்பாக மத விடயத்தில் நடுநிலை இலாத நண்பர்கள், திரு தருமி போன்ற அறிவார்ந்த, தரம்கெடாத, மரியாதை குறைக்காத எழுதும் ஆற்றல் படைத்தவர்களை வந்து வாழ்த்தாமல் இருந்தாலே போதும்! அப்படி செய்தால், the intended audience, இந்த context இல் நம்பிக்கை உள்ள இஸ்லாமியர், திரு தருமியின் கருத்துகளை கூன்று படித்து யோசிக்கக்கூடும்!

அப்படி நடப்பதே (நடக்கும், ஏனென்றால், எல்லா மதங்களிலும் இருப்பது போல இஸ்லாமிய மதத்திலும் சந்தேகம் கொண்டு தன்னின் மத கருத்துகளை மறு பரிசீலனை செய்ய துடிக்கும் பலர் உள்ளார்கள். என்ன, மத்த மதங்களை போல அவர்கள் சில காரணங்களினால் அதை வெளிகாட்டிக்கொள்வதில்லை)
திரு தருமி போன்றவர்களின் சீரிய அறிவிற்கு பரிசே தவிர உங்களின் இந்த வாழ்த்து மடல்கள் அல்ல என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்!

அப்படியே வாழ்த்த ஆசை இருந்தால் ananymous option மூலம் வந்து வாழித்திவிட்டு போகவும்!

அறிவியல் அடித்தளமில்லாது, சார்புடைய, தூற்றல் நாத்திகம் மக்களை பயம்கொண்டு ஓடச்செய்யும்! அப்படி செய்து நாத்திகத்தை பலர் நாசமாக்கிவிட்டர்கள்
இங்கே! அப்படி செய்யாமல் ஒரு கருத்தாழமான மத மறுப்பு தர்கத்தை திரு தருமி செய்கிறார்! அதை வரவேற்ப்போம், வாழவிடுவோம்!!

நன்றி

DUBAI ZAHIRIANS CRICKET CLUB said...

hello,
these guyz whos comment here those are dident have a islamic knowladge.even Hindus and other religon pepoles are praying there god which was made by there hands and god have family too.they are hurt they are self in the name of god.

தருமி said...

கும்மி,
//ஹஜ் தொடர்பான இந்த பதில் ஏற்கனவே நீங்கள் இட்டிருந்தால், இங்கே நீக்கிவிடுங்கள். //

நான் எழுதியதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்ற பொருளில் சொல்லவில்லை. நீங்கள் நினைத்தது போலவே நானும் நினைத்தேன் என்பதற்கே அந்த மேற்கோள்.sailing in the same boat.
same blood.

கருத்து ஒற்றுமை காண்பிக்கவே அது.தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தருமி said...

வால்ஸ்,
//இனிமேல் தான் ”இறக்க” பட போகுது!
அதுக்கு தான் நாங்க வந்துருக்கோம்!//

இல்லை வால்ஸ். நம்பிக்கையாளர்கள் சொல்றது மாதிரியே 1400 வருஷமா எத்தனையோ பேர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவைக் காண்பித்தும், குரான் ஒரு நேரடி இறக்கமாக இருக்க முடியாது என்ற லாஜிக்கைச் சொன்ன பிறகும் அந்தச் செய்திகள் நம்பிக்கையாளர்களின் ஒரு காதில் நுழைந்து மற்றொரு காது வழியே எவ்வித மாற்றமுமில்லாமல் வெளியே வருவதுதான் நிதர்சனம். சிறு பிள்ளையிலேயே பதிக்கப்பட்ட ஆழமான விழுதுகள் ...

நீங்கள் சொன்னது போல் //சிந்திக்கவே மாட்டேன் என்பவர்களிடம் என்ன சொல்லி என்ன பயன்!//
ஒன்றுமில்லைதான். இருப்பினும் நமது கருத்துக்களை நிலை நாட்ட நாமெடுக்கும் முயற்சிகள். இவை நம் மனதை நிரப்பும். அறிவை விசாலமாக்கும். ஆனால் மத நம்பிக்கையாளர்களிடம் ஏதும் / அதிக பயனிருக்காது.இவையெல்லாம் நாம் சரியான பாதையில் இருக்கிறோம் என்ற நினைப்பை நமக்குத் தருவதுதான் முக்கியம்.

Robin said...

நோ,

உங்களை பற்றியும் இங்கே எல்லாருக்கும் தெரியும், தன்னை தானே பெரிய மேதாவி என்று நினைத்துகொண்டு ஒரு வித அகங்காரத்துடன் எல்லாரையும் விமர்சனம் செய்பவர் என்று. நான் கிறிஸ்தவன் என்ற அடையாளத்தை என்றைக்கும் மறைத்ததில்லை அதனால் உங்களை போல முகமூடி அணிந்து பாவனை செய்யவேண்டிய அவசியம் எனக்கில்லை. முகமூடி கோழைகளுக்கும் தவறு செய்பவர்களுக்கும்தான் தேவை. என் மனதில் எது சரியென்று படுகிறதோ அதை சொல்வேன். இங்கு சொல்லப்படும் கருத்துக்களுக்குதான் முக்கியத்துவம் தவிர ஒவ்வொருவரும் என்ன கொள்கையுடையவர் என்பதல்ல. என் கருத்தில் உங்களுக்கு விமர்சனம் இருந்தால் தெரிவியுங்கள். அதைவிடுத்து அவன் அப்படிப்பட்டவன், இவன் இப்படிபட்டவன் என்று நியாயம் தீர்க்கவேண்டிய அவசியம் இல்லை.

இங்கு யார் பின்னூட்டமிடவேண்டும் யார் பின்னூட்டமிடக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார்?
இங்கு யார் பின்னூட்டமிடவேண்டும் என்பதை தருமி முடிவு செய்யட்டும். உங்கள் அதிகாரத்தை உங்கள் வலைதளத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

Rajan said...

//அந்தச் செய்திகள் நம்பிக்கையாளர்களின் ஒரு காதில் நுழைந்து மற்றொரு காது வழியே எவ்வித மாற்றமுமில்லாமல் வெளியே வருவதுதான் நிதர்சனம்.//

ஓட்டை பெருசு போல ! விட்டுத் தள்ளுங்க சார் ! சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தை

தருமி said...

DUBAI ZAHIRIANS CRICKET CLUB,
நீங்கள் வீசிய பந்துகள் எல்லாமே எனக்கு no ball என்றுதான் தெரிகிறது!

ஒண்ணும் புரியவுமில்லை; அடித்து ஆடவும் முடியவில்லை!!

தருமி said...

ராபின், நோ,
விவாதங்களை வேறோரிடத்தில்கூட வைத்துக் கொள்ளலாம்.

இப்பதிவிற்குரிய பின்னூட்டங்களை முதலில் பார்ப்போமா?

Anonymous said...

sailing in the same boat.
same blood.
//

Great men think alike.

NO said...

Agreed Sir. Stopped.

வால்பையன் said...

//நமது கருத்துக்களை நிலை நாட்ட நாமெடுக்கும் முயற்சிகள். இவை நம் மனதை நிரப்பும். அறிவை விசாலமாக்கும். ஆனால் மத நம்பிக்கையாளர்களிடம் ஏதும் / அதிக பயனிருக்காது.இவையெல்லாம் நாம் சரியான பாதையில் இருக்கிறோம் என்ற நினைப்பை நமக்குத் தருவதுதான் முக்கியம். //


ஒரு குழப்பம் தீர்ந்தது!

Anonymous said...

The unique foundation on which all religions rest, is the perceived fact (perceived by them) that all things concerning God 'passeth human understanding'; man is helpless and vulnerable; he seeks the mercy and protection of the God he thinks 'exists' and is merciful and all benevolent. Men felt vulnerable, so he sought a Being to whom he could go to for 'perceived' protection. He will continue to feel vulnerable and continues to seek the protection.

So, it is beyond your powers to rationalise the religions or man's search for a Being for his own interests, although Hindus today try to find reasons in their rituals and ceremonies based on scientific thinking or 'rational'thinking.

It is, therefore, futile exercise to rave and rant against believers. They are not in the contest with you, they how come the fight at all?

Sofar as 'outsiders' are concerned, they should feel concerned or intervene, only when evil passions are aroused in humans to instigate them to do criminal or unsocial acts to disturb others in society - all in the name of God.

Amen!

தருமி said...

//சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.பாராட்டுகள்.//

ஸ்ரீ,
பாராட்டுக்களுக்கு உரியவர் நானல்ல; அது CHRISTOPHER HITCHENS-க்கு உரியது.

எல்லாப் பெருமையும் அவருக்கே.

உமர் | Umar said...

@ தருமி அய்யா
நன்றி!

@ SARFUDEEN
நண்பரே! உங்களைப் பற்றி ஏதும் தெரியாமல் நான் ஒன்றும் சொல்ல முடியாது. அதுபோல் இங்கு கருத்துக் கூறுபவர்களைப் பற்றியும் ஒன்றும் அறியாமல் வார்த்தைகளை இறைக்க வேண்டாம்! பொத்தாம்பொதுவாக இஸ்லாமிய அறிவு இல்லை என்றும், காழ்ப்புணர்ச்சியுடன் எழுதுகிறோம் என்றும் கூறாதீர்கள். நாம் முன்வைக்கும் கருத்துகள் எப்படி எற்றுக்கொள்ளமுடியாதவை என்று நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்; நீங்கள்தான் இஸ்லாமிய அறிவு நிறைந்தவர் போன்று கூறுகின்றீரே.

பிஜேயின் இணையதளத்திற்கு இணைப்பு கொடுப்பதை விடுத்து, அங்கு சென்று இது சம்பந்தமாக என்ன கூறியிருக்கிறார்கள் என்றுப் பார்த்து இங்கே பதிலளிக்கலாமே! ஹஜ் குறித்துக் கேள்வி கேட்டால், பிர் அவ்ன் குறித்து உரையாடும் மற்ற இஸ்லாமியர்களைப் போல் இல்லாமல், ஹஜ் குறித்து மட்டுமே பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நிச்சயமாக பிர் அவ்ன் குறித்தும், மலைகளை முளைகளாக்கியது குறித்தும் தனிப் பதிவில் பேசுவோம்; கவலைப்படாதீர்கள்.

இமயம் தொலைக்காட்சியைப் பாருங்கள், தமிழன் தொலைக்காட்சியைப் பாருங்கள் என்பதை விடுத்து, நீங்கள் பார்த்தவற்றை, நீங்கள் அறிந்தவற்றை இங்கே கூறலாமே.
(மேலும் உங்களுடைய தகவலுக்காக: IFT, தமுமுக, TNTJ, INTJ, சுன்னத் ஜமாஅத் அமைப்புகள் தொடங்கி, PJ, அல்தாபி உட்பட அனைவரின் பேச்சுகளையும் கேட்டவன்; கேட்பவன் நான். குற்றச்சாட்டுகளும் பதில்களும் நூல் தொடங்கி PJ - யின் அனைத்து நூல்களையும் வாசித்தவன். முக்கியமாக குர் ஆன் ஆங்கிலப் பதிப்பையும், PJ-யின் தமிழ் மொழிமாற்றப் பதிப்பையும் படித்தவன்)

தருமி said...

கும்மி,
SARFUDEEN போலவே பலரும் நிறைய ஹோம் ஒர்க் கொடுத்திர்ராங்க!

//நீங்கள் பார்த்தவற்றை, நீங்கள் அறிந்தவற்றை இங்கே //கூறி வாதிடலாமே என்று நானும் பலமுறை கூறினாலும் அவர்கள் பொதுவாக மேற்கோளிடுவதோடு நின்று விடுகிறார்கள்.

உங்கள் இஸ்லாமிய அறிவு பற்றி ஒரு வார்த்தை: எப்படித்தான் பல அராபிய சொற்களை நினைவில் கொள்கிறீர்களோ!
பாராட்டுக்கள் ..

பயனுள்ள தகவல்கள் said...

ஹஜ் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையானது என்று சொல்லி வந்தார்கள்; அப்படிதான் குரானிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு ஏழை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாதே என்று கேட்கத் தொடங்கியதும், அது வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கடமையானது என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.

நான் முன்பே குறிப்பிட்டது போல் ஹஜ்ஜை பற்றி சரியான இஸ்லாமிய அறிவு உங்களுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. குர்ஆன் சொல்வதாக தவறான தகவல்களை தந்துள்ளீர்கள். சக்தி உள்ளவர்களுக்கு கடமை என்றுதான் 3:97 ல் விளக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர் முஹமது நபி அவர்கள் அதற்கு விளக்கம் தந்துள்ளார்கள். பொருளாதாரம் மற்றும் சென்று வர உடல் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் ஹஜ் கடமை என்று சொல்லியுள்ளார்கள். இரண்டில் ஒன்று இல்லையென்றாலும் அவறுக்கு ஹஜ் கடமையில்லை. இதுதான் உண்மை. இஸ்லாம் என்பது இறைவனும் அவனுடைய அடிமையான தூதர் அவர்கள் வாழும் காலத்தில் சொன்ன, செய்த, அங்கீகரித்தவைகள் மட்டுமே இஸ்லாமாகும். மார்க்க விஷயத்தில் முஸ்லீம்கள் அவர்களாகவே புதியதாக செய்தால் அதற்கு இஸ்லாம் பொருப்பல்ல. மரணத்திற்கு பிறகு அவர்களுக்கு கடுமையான தண்டனை தயார்படுத்தி வைத்திருபதாக எல்லோரையும் படைத்த இறைவன் எச்சரித்துள்ளான்.

தருமி said...

SARFUDEEN,
இஸ்லாமியருக்கான 5 கடமைகள் என்னென்ன?

உமர் | Umar said...

@SHARFUDEEN

எந்த வித இடைசெருகலும், அடைப்புக்குறிகளும் இல்லாத அந்த குறிப்பிட்ட வசனங்களின் ஆங்கில மொழியாக்கம் இங்கே.

95. Say "Allah has spoken the truth; follow the religion of Ibrahim Hanifa and he was not of Al-Mushrikun."

96. Verily, the first House appointed for mankind was that at Bakkah, full of blessing, and a guidance for Al-'Alamin.

97. In it are manifest signs, the Maqam of Ibrahim; whosoever enters it, he attains security. And Hajj to the House is a duty that mankind owes to Allah and whoever disbelieves then Allah stands not in need of any of the 'Alamin

98. Say: "O people of the Scripture! Why do you reject the Ayat of Allah while Allah is Witness to what you do?"


99. Say: "O people of the Scripture! Why do you stop those who have believed, from the Path of Allah, seeking to make it seem crooked, while you are witnesses? And Allah is not unaware of what you do."

இந்த வசனங்களின் முழுமையான அர்த்தத்தைப் பார்த்துவிட்டும் நீங்கள் அதே வாதத்தை கூறுவீர்களா? இந்த வசனங்களின் எடுத்துக்கொள்ளப்பட்ட context- ஐ கவனியுங்கள். நான் மேற்கோள் காட்டியிருப்பது குர் ஆனில் இருந்துதானே அன்றி, எந்தவொரு முஸ்லிமின் வாழ்க்கையில் இருந்தும் அல்ல.

@ தருமி அய்யா
நான் பிறப்பால் இஸ்லாமியன். அதனால் இந்த வார்த்தைகள் உரையாடும்போது சரளமாக வரும்.

தருமி said...

கும்மி,
//And Hajj to the House is a duty that mankind owes to Allah//

இதுதான் அல்லாவின் கட்டளை என்கிறீர்களா?

தருமி said...

பதில் சொல்ல முடியுமாயின் ...

//நான் பிறப்பால் இஸ்லாமியன். //

இஸ்லாமிய நம்பிக்கையற்றவனாவது பல பிரச்சனைகளுக்குக் காரணமாகும் என்பார்களே ...

உங்களை நீங்கள் வெளிக்காண்பிப்பது பிரச்சனையா?

Rajan said...

//இஸ்லாமிய நம்பிக்கையற்றவனாவது பல பிரச்சனைகளுக்குக் காரணமாகும் என்பார்களே ...
உங்களை நீங்கள் வெளிக்காண்பிப்பது பிரச்சனையா? //

அவரை இஸ்லாமியனாகக் காட்டுவது அவருக்கு பிரச்சனைதான் !

உமர் | Umar said...

//இதுதான் அல்லாவின் கட்டளை என்கிறீர்களா? //

குர் ஆனில் இருக்கும் வசனம் என்றே மேற்கோள் காட்டியுள்ளேன். நான், அல்லாஹ் என்பதே இட்டுக்கட்டப்பட்ட ஒரு பாத்திரம் என்று கூறுகின்றேன்.

//இஸ்லாமிய நம்பிக்கையற்றவனாவது பல பிரச்சனைகளுக்குக் காரணமாகும் என்பார்களே ...//

உண்மைதான்! ஜமாத்தை விட்டு விலக்கி வைப்பது உட்பட பல விஷயங்கள் நடந்தேறும். ஜமாத்திய நம்பிக்கைகளுக்குப் புறம்பாக, யாரேனும் ஈடுபட்டால் அபராதம், ஊர் விலக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். 80 களின் பிற்பகுதியிலும், 90 களிலும் தவ்ஹீது எண்ணம் கொண்டோர் மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டன. இப்பொழுதும் கூட, தவ்ஹீது அமைப்பினரால், முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு சில பகுதிகளில் கூட்டம் நடத்த முடியாது. தவ்ஹீது அமைப்பினருக்கே இப்படியென்றால், இஸ்லாமிய நம்பிக்கைகள் அறவே அற்றவன் என்றால்?...


//உங்களை நீங்கள் வெளிக்காண்பிப்பது பிரச்சனையா? //

எங்கள் (சொந்த) ஊரின், என் வயதையொத்த பலருக்கும் என்னைப் பற்றி தெரியும்; அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனை ஏற்படவில்லை. அவர்களில் பலரும் கூட என் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றனர்; ஆனால், வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கவில்லை. எங்கள் ஊரின் ஜமாத்தோடும் ஏதும் பிரச்சனை ஏற்படும் என்று தோன்றவில்லை. நான் எங்கள் ஊர் ஜமாத்தாரோடு தொடர்பு கொண்டது, எனது திருமணத்திற்கான NOC வாங்க மட்டுமே. அதனால், என்னை ஊரை விட்டு விலக்கினாலும், எனக்கு ஏதும் இழப்பு இருக்காது. எனது மரணத்திற்கு பின்பு உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்று சிலர் கூறினார். எனது உடலை தானம் தர நான் முடிவெடுத்துவிட்டதால், எனக்கு அப்படியும் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இல்லை. :)

ஆனாலும், வேறு சில சமூகக் காரணிகளால், சில காலத்திற்கேனும், நான் வெளிக்காண்பிக்க விரும்பவில்லை. (இருப்பினும், நான் சில பதிவர்களோடு தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.)

வால்பையன் said...

//எனது உடலை தானம் தர நான் முடிவெடுத்துவிட்டதால், //


salute my friend!

தருமி said...

//அல்லாஹ் என்பதே இட்டுக்கட்டப்பட்ட ஒரு பாத்திரம் என்று கூறுகின்றேன்.//

இதைப் போல, கிறிஸ்து நம்பிக்கை பற்றி எனக்கும் கிறித்துவ நண்பருக்கும் நடந்த உரையாடலில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் பற்றி கூட ஒரு பதிவு போடலாம்; போடணும்!

//இதுதான் அல்லாவின் கட்டளை என்கிறீர்களா?//

அதாவது சில சமயங்களில் இது அல்லாவின் கட்டளை அல்லது ஹதீஸ் என்று சொல்வார்களே .. அதில் இது 'அல்லாவின் கட்டளை' என்ற நோக்கில் கேட்டேன்.

//தவ்ஹீது எண்ணம் கொண்டோர் //

அப்படி என்றால் என்ன?

நான் கிறித்துவத்திலிருந்து வெளியே வந்ததைப் பற்றி எழுதியுள்ளேன். அதுபோல் நீங்களும் எழுதுவீர்களா?

//எனது உடலை தானம் தர நான் முடிவெடுத்துவிட்டதால்...//

மதங்களைத் தாண்டிய நிறைய பேருக்குத்தான் இதுபோன்ற எண்ணங்களும் எளிதாக வருமோ?

//நான் சில பதிவர்களோடு தொலைபேசியில் உரையாடியுள்ளேன்//

எனது எண் கூட 369வது பதிவில் உள்ளது.
:)

உமர் | Umar said...

@ வால்பையன்
நன்றி நண்பரே! இன்னும் அதற்கான பதிவுகளை மேற்கொள்ளவில்லை. விரைவில் செய்து விட வேண்டும்

உமர் | Umar said...

//அல்லாவின் கட்டளை அல்லது ஹதீஸ் என்று சொல்வார்களே//
குர் ஆனில் இருக்கும் அனைத்து வசனங்களையுமே அல்லாவிடமிருந்து வந்தது என்றே கூறுவார்கள். நான் குறிப்பிட்ட அந்த வசனம் தவிர இன்னும் இரண்டு அதிகாரங்களிலும் (சூரா) ஹஜ் குறித்துக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மேற்கோளிடும் இந்த வசனத்தில், இவர்களுடைய அடைப்புக்குறி விளக்கம் இருக்கும். ஆனால், இதனுடைய context , ஹஜ் பற்றியது அல்ல.ஹஜ் பற்றிய முதன்மையான சூரா அல்-ஹஜ் என்னும் சூராவாகும். அதில் அடைப்புக்குறிகளைத் திணிக்க முடியாத காரணத்தால், அல்-இம்ரானில் (நான் மேற்கோள் காட்டிய வரிகள்) இணைத்துள்ளனர்.

////தவ்ஹீது எண்ணம் கொண்டோர் //

அப்படி என்றால் என்ன?//

இஸ்லாத்தில் குரானையும் நபி வழியையும் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் மரபு தவ்ஹீது என்று அழைக்கப்படும். குறிப்பாக மூட நம்பிக்கைகளுக்கு எதிரானது. தர்கா, வரதட்சணை, பாத்திஹா போன்றவற்றை எதிர்ப்பார்கள். தொப்பி அணிவதிற்கு கொள்கை அளவில் எதிர்ப்பாளர்கள். ஏக இறைவன் என்னும் கொள்கை உடையவர்கள். தமிழகத்தில் குறிப்பிடக்கூடிய இயக்கங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்; குறிப்பிடத்தக்க நபர்கள் ஜவாஹிருல்லாஹ், P. ஜெயினுல் ஆபிதீன். (இந்த இயக்கத்தவர்கள்தான் இணையத்தில் சண்டை போட முதலில் நிற்பவர்கள் :) )


//நான் கிறித்துவத்திலிருந்து வெளியே வந்ததைப் பற்றி எழுதியுள்ளேன். அதுபோல் நீங்களும் எழுதுவீர்களா?//
நான் இன்னும் வலைப்பூ தொடங்கவில்லை. தொடங்கியதும் முதன்மையானதாக, குர்ஆனில் இருக்கும் ஓட்டைகள் குறித்து எழுத எண்ணியுள்ளேன். அநேகமாக இஸ்லாத்திலிருந்து வெளியே வந்தது குறித்தும் எழுதக்கூடும்.

//மதங்களைத் தாண்டிய நிறைய பேருக்குத்தான் இதுபோன்ற எண்ணங்களும் எளிதாக வருமோ?//
டவுசரை வெளியேப் போடும் ஒரு சிலர் தவிர, பெரும்பாலான மக்கள் மனிதத்தோடுதான் வாழ்வதாக நான் நினைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் உடல்தான செய்திகள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன.

//எனது எண் கூட 369வது பதிவில் உள்ளது//
கடந்த இரண்டு நாட்களாக, உடல்நிலை சரியில்லாததால், நான் வீட்டில்தான் இருக்கின்றேன். அடுத்த வாரம் நான் கண்டிப்பாக உங்களைத் தொடர்பு கொள்கின்றேன்.

Ashok D said...

சலாம் அலேகும் Guys :)

தருமி said...

கும்மி,
get well soon

உமர் | Umar said...

// D.R.Ashok said...
சலாம் அலேகும் Guys :)//

இதுக்குதான் தமிழ் திரைப்படங்கள் அதிகமாப் பாக்கக்கூடாதுன்னு சொல்லுறது. அது "சலாம் அலேகும்" இல்லை; அஸ்ஸலாமு அலைக்கும்.

@ தருமி அய்யா!
Thank You.

Unknown said...

பெரியார் தாசன் இஸ்லாத்துக்கு மாறியதை இங்கு விவாதத்திற்கு விட நினைக்கிறேன். இவர்கள் கொள்கைக்காக தங்களை புதுக்கிக்கொள்பவர்கள் என்றே தெரிகிறது. Not following based on their self judgment. பெரியாரை புகழ்ந்து பாட்டெழுத பெரியார்தாசன் என மாறிய சேசாச்சலம் போல...

Change doesnt comes from within.. every change was an avatar to suit the times and needs maybe..

smart said...

சரி கடைசிய என்ன சொல்றேங்க? தானும் நல்லது சொல்ல மாட்டேன் அடுத்தவன் சொன்னதிலும் நொட்டை கண்டுபிடிக்கனுமுனு அப்படிதானே.

Samsunihar said...

without any Islamic knowledge.....
you are writing... Mr. thaurumi,
its all fake...... I pray for u....Allah may show u right path Insha Allah!

தருமி said...

//without any Islamic knowledge.....
you are writing... Mr. thaurumi,//

yes, sir.
anyway i am not saying these things. they are just excerpts.

Post a Comment