முந்திய பதிவு ... 1
*
எழுபது எண்பதுகளில் காமிராக் 'கிறுக்கு" பிடித்து அலைந்த ஞாபகம். கருப்பு வெள்ளை படங்கள்தான் அப்போதைய சூழல்.
படச்சுருள்களை தனித்தனியாக வாங்கும் வழக்கம் போய், 100 அடி சுருள்களை மொத்தமாக வாங்கி தனித்தனி ஐந்தடி சுருள்களாக்கி,பழைய டப்பாவுக்குள் சுற்றி வைத்திருப்பேன். அப்போதெல்லாம் எப்போதுமே என் காமிரா fully pregnantதான். அப்போது இரு dark rooms கல்லூரியில் இருந்தது. அதில் ஒன்று என் ஆரம்பபாடத்திற்கு உதவியது. அதைக் கொடுத்த Prof.V.S. நன்றிக்குரியவர். அதைப் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் மாணவர்கள் சிலர் என்னோடு ஒன்று சேர ஒரு photographic club கல்லூரியில் உருவானது. இதனால் இரண்டாக இருந்த dark rooms சில ஆண்டுகளில் ஆறாக மாறியது. அதில் ஒன்று எனக்கே மட்டும் உரித்தானதானது. நன்றி Prof. M.R.J.
என்னவோ படங்கள் எடுத்தேன். சிலர் என்பது பலராக மாறி கன்னா பின்னா என்று "பெயர் பரவ" கல்லூரியில் ஒரு photographer ஆக மாறினேன். வண்ணப்படங்கள் இல்லாத காலத்தில் பல toning ... அது .. இதுன்னு புத்தகத்தில் வாசித்தவைகளை வைத்து பல முயற்சிகள். macro, micro அப்டின்னு வேறு. ரெண்டு தடவை கல்லூரிக்குள் படைப்புகள் தோரணம் கட்டி நின்றன. பத்துக்கு பன்னிரண்டு படம் போடுவது முதலில் கிக்காக இருந்தது. அதன்பின் 3 அடி அகலம் 4/5 அடி நீளம் என்று படம் போடுவது, அதற்காக நல்ல படம் எடுக்க முயற்சிப்பது என்று பல முயற்சிகள். சில நண்பர்களையும் இந்த முயற்சிகள் கொடுத்தன. இந்த படம் பிரிண்ட் போடுவதெல்லாம் இரவில்தான். dark room சாவியே நம்மிடம்தான். அதனால் இரவு தனியாகவோ மாணவ நண்பர்களோடோ இரவெல்லாம் உட்கார்ந்து பிரிண்ட் போடுவது வழக்கமாகப் போச்சு. நாலு நல்ல படம் காண்பித்து தங்க்ஸிடம் பெர்மிஷன் வாங்குவது வழக்கம். காசு செலவழிக்கக் கூட அவையே உதவும் - காசுக்குக் கஷ்டமான காலத்தில் கூட!
ஆனால் இன்று வரை ஒரு பெரிய சோகம் . அந்தக் காலத்தில் அப்படி சில படங்கள் எடுத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் அந்தப் படங்களை வைத்து நாலு காசு பார்க்க எப்போதும் தோன்றியதில்லை. அடுத்து, தொடர்ந்து நல்ல படங்கள் எடுத்து நல்ல பெயரும் இதுவரை வாங்கவில்லை. துவக்கத்தில் வாங்கிய பெயரோடு சரி - ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூ மாதிரி! இப்போது படங்கள் எடுத்தாலும் நம்ம பதிவர்கள் பலர் மாதிரி ஒண்ணு ரெண்டுகூட எடுக்க முடியாத சோகம் மனசுக்குள் இறங்கித் தங்கியிருச்சி .. :( இது இன்றுவரை ஒரு பெரிய சோகம்! இது வரை தேறவே முடியவில்லை. சில பதிவுகளில் சில படங்கள் என்று போட்டுப் பார்த்தேன். நம் மற்ற பதிவர்கள் படங்கள் பார்த்ததுவும் அந்த மூடும் போயிரிச்சி ... மிஞ்சிப் போனால் அப்பப்போ நடக்கிற பதிவர்கள் சந்திப்பில் சில படங்கள் எடுத்து போடுறேன். அம்புடுதான் இப்போதைய நமது photography ! :(
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ பேய்க்கதைக்கு வருவோம்.
முதலில் கிடைத்த டார்க் ரூம் மிகச்சிறியது. ஒரு படிக்கட்டின் அடித்தளத்தில் உள்ள சின்ன அறை. படங்கள் பிரிண்ட் போட ஆரம்பித்திருந்த காலம். ஒரு நாள் இரவு. தனியாக ப்ரிண்ட் போட்டுக்கொண்டிருந்தேன். developer --> citric acid --> fixer --> washer என்றெல்லாம் போய் பிறகு நன்கு கழுவி, அதன்பின் hot plate-ல் வைத்து படங்களைக் காய வைக்கணும். இப்போதெல்லாம் இந்த வேலைகளெல்லாம் கிடையாதே. ஒவ்வொரு ஸ்டேஜிலும் பல தகராறுகள் வரும் .. நடுவில் சில சமயங்களில் கொஞ்சம் ப்ரேக் எடுக்க வேண்டியது வரும் - கழுவும் போது ... fixer-ல் இருக்கும்போது ... கழுவும் போது என்று. அப்படி கிடைத்த ஒரு இடைப்போதில் வெளியே வந்து 'தம்' அடிப்பதுண்டு. வெளியே வந்தேன். உள்ளே போகும்போது இளம் மாலை. இப்போதே வெளியே ஒரே கும்மிருட்டு. நான்கு பக்கமும் கட்டிடங்கள். ஒரு ஓரத்தில் டார்க் ரூம்.
.................................DARK ROOM..............
வெளியே வந்து டார்க் ரூமிற்கு சிறிது தள்ளி வந்திருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கப் போனேன். பல ஆண்டுகளாகப் புகைப்பவர்களுக்கு எந்தக் காற்றிலும் பற்ற வைப்பது பிரச்சனையில்லை. முதல் குச்சி அணைந்து போனது. என்னடா இது அப்டின்னு மனசுக்குள் ஒரு யோசனை. இரண்டாவது குச்சி .. சிகரெட்டுக்குப் பக்கத்தில் குச்சி போனபோது பின்னாலிருந்து யாரோ அதை ஊதி அணைத்தால் எப்படி அணையுமோ அதே போல் அணைந்தது. நல்ல இருட்டு. ஆளரவமே இல்லாத இடம். தனிமை. இருமுறை தீக்குச்சி அணைகிறது. பேய் நினைப்பு வந்தது. ஏனெனில் அந்த சமயத்தில்தான் முதல் பயங்கர பேய் படம் exorcist பார்த்திருந்தேன். அந்தப் படத்தின் பயங்கரம் மெல்ல மனசுக்குள் வந்தது. ஆனாலும் நாமதான் ரொம்ப தைரியசாலிதானே ..! மெல்ல நடந்து வழியில் இருக்கும் ஒரே ஒரு குண்டு பல்பு பக்கத்தில் நின்று அந்த சிகரெட்டை முடித்தேன்.
மெல்ல டார்க் ரூமிற்குள் வந்தேன். காய வைத்த படங்களெல்லாம் காய்ந்து விட்டனவா என்று சிகப்பு விளக்கு வெளிச்சத்திலேயே பார்க்க ஆரம்பித்த போது ... தலைக்கு மேல் டக் .. டக் .. என்று ஒரு சத்தம் மாறி மாறி கேட்டது. டார்க் ரூமிற்குள் இதுவரை இருந்த போது இல்லாத சத்தம் இப்போது எப்படி கேட்கிறது. அதுவும் அந்த டைமிங் ..exorcist படத்தில் அந்தப் பெண் படுத்திருக்கும் கட்டில் அப்படியே தூக்கி அதன் கால்கள் டக் .. டக்குன்னு அடிக்குமே அதே மாதிரியான timing-ல் சத்தம் கேட்டது. மனசு பூரா exorcist படம் ஓட ஆரம்பித்தது. லைட் போடலாம்னு எல்லா போட்டோ பேப்பர்களையும் உள்ளே எடுத்து வச்சிட்டு, லைட் போட்டேன். மேலேயும் சுற்றிச் சுற்றியும் பார்த்தேன். ஒண்ணுமே இல்லை. அப்புறம்தான் நினைவுக்கு வந்தது. ப்ரிண்ட் போடும்போது மின்விசிறியை மெல்ல வைத்து வேலை பார்ப்பதுவும், பின் ப்ரிண்டுகளைக் காய வைக்கும்போதோ மற்ற நேரத்திலேயோ அதிக வேகத்தில் வைப்பதுண்டு. நான் தம் அடிக்க வெளியே போகும்போது மின் விசிறியை அதிக வேகத்தில் வைத்து வெளியே போயிருந்திருக்கிறேன். வேகத்தில் சுற்றும்போது அந்த சத்தம்.வேறு பேயும் இல்லை .. exorcist-ம் இல்லை ... இந்த 'உண்மை'யை உணர்ந்ததும்தான் மூச்சு ஒழுங்கா வந்தது. என் "புத்திசாலித்தனத்தை' நினைத்து எனக்கு நானே தட்டிக் கொடுத்துக் கொண்டு ... அடுத்த படம் ப்ரிண்ட் போட ஆரம்பித்தேன்..............
பேய் பார்த்த கதை இப்படியாக இருக்க, angels / தேவதைகள் பார்த்த அனுபவமும் உண்டு. தமிழில் பின்னால் எழுத நினைத்திருக்கிறேன். நிஜமாகவே உயரமான, வெள்ளை நிறத்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருக்குமே (கிறித்துவ தேவாலயங்களில் இருக்குமே அதே மாதிரி ... ) தேவதைகளைப் பார்த்தேன். படிக்கணும்னா இங்கே வாருங்கள் - AN APPARITION - SIGHTING OF ANGELS.

RED ARROW SHOWS THE DARK ROOM.

4 comments:
கண்டுபிடிப்பு அருமை...
பேன் காத்துதான் இதுமாதிரி செஞ்சுச்சு என்று கண்டு பிடிக்கும் வரை தாக்கு பிடிச்சதே அதிசயம் தாங்க..
அய்யோ பெயனாலே நமக்கு ரொம்ப பயம் ! இந்த ஆட்டைக்கி நான் வரல
பேயெ எப்பவாவது படம் புடிச்சிருக்கீங்களா?
Post a Comment