*
ஜெர்மனி – இங்கிலாந்து ப்ரி க்வார்ட்டர் பைனலில் எதிர்பார்த்தது போலவே ஜெர்மனி வென்றது. இங்கிலாந்து போட்ட ஒரு கோல் நடுவரால் தவறாக தீர்ப்பளிக்கப்பட்டது.
மேல் குறுக்குக் கம்பியில் தட்டி க் கீழே கோல் கோட்டிற்கு உள்ளே பந்து இறங்கி வெளியே துள்ளி வந்ததை கோல் கீப்பர் பிடித்தார். உள்ளதே இரு கோல் வாங்கி துவண்டிருந்த இங்கிலாந்திற்கு இது அடுத்த பேரிடி. மீண்டும் இரண்டு கோல்வாங்கி, ஒரு கோல் போட்டு தோல்வி பெற்றனர். கோல் கீப்பர் சுத்த சொதப்பல். நைஜீரியா 4 கோல்கள் வாங்கியபோதுகூட அதன் கோல்கீப்பர் அவ்வளவு அழகாக விளையாடியது பிடித்தது. ஆனால் இங்கிலாந்து அணியினரின் தோல்விக்கு அவர்களது வீரர்களும், முக்கியமாக கோல்கீப்பரும் முழுக்காரணமே.
அர்ஜென்டினா – மெக்ஸிகோ – ப்ரி க்வார்ட்டர் பைனல் – அர்ஜென்டினா 3:1 என்ற கணக்கில் வென்றாலும் விளையாட்டு நன்கு ஆரம்பித்தது. மெக்ஸிகோ அணியினரின் சில ஷாட்டுகள் கோல் கம்பிகளைப் பதம் பார்த்தன. ஆனால் கம்பிகளில் அடிபட்டு மைதானத்திற்குள் இறங்கின. அவர்கள் தான் முதல் கோல் அடிப்பார்கள் என்ற நான் நினைத்தேன். ஆனால் முத்ல் கோல் அர்ஜென்டினா போட்டது. அதன்பின், அர்ஜென்டினாவின் ஆஃப் சைட்கோல் ஒன்றை நடுவர் கோல் எனத் தீர்ப்பளித்தார். குழப்பம். மறுபடி இரு நடுவர்களும் பேசிக்கொண்டனர். ரீப்ளே காண்பித்ததில் ஆஃப் சைட் என்பதும் தெரிய வந்தது. ஆனாலும் கடைசியில் அது கோல் என்று தீர்ப்பளிக்கப்பட, அதன்பின் மெக்ஸிகோ கொஞ்சம் ‘ஸ்லாவத்தாக’ ஆட, தடுப்பாளரின் கவனக் குறைவால் இரண்டாவது கோலும் விழுந்தது. அர்ஜென்டினா மிகத் தீவிரமாக விளையாடி மூன்றாவது கோலையும் அடித்தார்கள்; வென்றார்கள்.
அதென்னங்க ..
விம்பிள்டன்னில் முதலிரு செட்களை Falla என்பவரிடம் விட்டுவிட்ட பெடரர் அதன் பின் தொடர்ந்த் அடுத்த மூன்று செட்டுகளையும் - அதிலும் ஐந்தாவது செட்டை 6:0 என்ற கணக்கில் வென்றுவிட்டுப் போய்விட்டார்.
இறுதியில் அவரும், நாடலும்தான் மோதுவார்களா?
நான் நாடல் கட்சி
5 comments:
கை விளையாடுகிறது. கால் பந்து பார்த்த எபக்ட். வாழ்த்துக்கள்.நானும் நடால் கட்சி தான்.
சாடர்லிங்கை தாண்டுவாரா நடால்?? தாண்டினாலும் ஜோக்கோவிச் இருக்கிறார்.. நான் எப்பவும் போல் பெடரர் கட்சிதான்!!! :)
1/4 பைனலில் அர்ஜெண்டினாவா ஜெர்மனியா யார் கட்சி நீங்க.. நான் ஜெர்மனி..
Bharath,
//நான் எப்பவும் போல் பெடரர் கட்சிதான்//
வட போச்சே!
//நான் ஜெர்மனி..//
நான் அர்ஜென்டினா
//வட போச்சே! //
ஆஹா!! சரி விடுங்க முர்ரே, ஜோக்கோவிச்ச சப்போர்ட் பண்ண வேண்டியதுதான்..
World cup'ல ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ப்ரான்ஸ் செய்த சொதப்பலால் நிறய நல்ல டீம் முந்தய ரவுண்டுகளில் மோதி அவுட் ஆவது வருத்தம்..
//முர்ரே, ஜோக்கோவிச்ச சப்போர்ட் பண்ண வேண்டியதுதான்.. //
ஜோக்கோவிச் -- அது சரி.
ஆனால், முர்ரே .!?
Post a Comment