உமாசங்கரைப் பற்றிய முன் பதிவைப் படியுங்கள்.
உமாசங்கர் நியாயமான அதிகாரி, அவர் மீது அரசு ஏவி இருக்கும் கொடூரத்தை நாம் கண்டும் காணாமலும் இருக்க வேண்டுமா? -- இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது எனக்குத் தோன்றிய பதில் - ஏன் பதிவர்களாகிய நாம் அனைவரும் இம்முறை நம் ஒட்டு மொத்த ஆதரவை அந்த அதிகாரிக்குத் தெரிவிக்கக் கூடாது. அப்படி நாம் ஏதும் செய்தாலும் அது எந்த அளவுக்கு அவருக்கு உதவும் என்பதை விடவும், ஓரளவாவது நாம் நம் கடமையைச் செய்தோம் என்ற நல்ல உணர்வு நமக்கு ஏற்படலாம். அதற்காகவாவது எனக்குத் தோன்றிய ஒன்றை உங்களிடம் கூறுகிறேன். சரியென்றால் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு சின்ன காரியம் செய்வோம்.
இந்த அதிகாரி தவறான காரணங்களுக்காக அரசால் தண்டிக்கப்படுகிறார் என்ற எண்ணமுள்ள பதிவர்கள் அனைவரும் ஒன்றாக, ஒரே நாளில் --வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கிழமை -- நாலைந்து வரிகள் கொண்ட ஒரே ஒரு இடுகையை அவரவர்கள் பதிவில் இடுவோம். அந்த ஒரு நாளில் ஒரே மாதிரியான இடுகைகள் இட்டு நம் ஒற்றுமையான உணர்வை அரசுக்குத் தெரிவிப்போம்.
இதனால் என்ன பயன் என்று கேட்பீரின், என்ன பயன் கிடைக்குமென்று தெரியாது. ஆனால் முழு இணையப் பதிவுலகமே ஒரு மனிதனின் பின்னால் நின்றால் அது அந்த மனிதனுக்கு நிச்சயம் தேவையான மன வலுவைத் தரும். அரசும் சிந்திக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
ஒருவேளை நான் ஒரு எதிர்க்கட்சிக்காரன், அதற்காக இந்த முயற்சி என்று யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு ஒரு வார்த்தை: அந்தக் கட்சி, அதன் தலைவர்கள் எதுவுமே என் மரியாதைக்குரியதல்ல. கனவில் கூட நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதி எனக்கு எப்போதும் உண்டு.
இது நிச்சயமாக நியாயம் செத்து வரும் வேளையில் ஒரு தனி மனிதன் பல எதிரப்புகளையும் தாங்கி நியாயத்தின் பக்கம் நிற்கிறானே, அவனுக்கு நம்மாலான எளிய இந்த உதவியைச் செய்வோமே என்ற ஒரே எண்ணம்தான்.
வாருங்கள் ... ஒன்றுபட்டு நின்று நாம் நினைப்பதைச் செயலில் காட்டுவோம். இத்தனை பதிவர்கள் ஒன்றிணைந்தால் நல்லது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைவோம். வாருங்கள் ....
பி.கு.
1.
அவ்வாறு இடுகையிட சம்மதிப்பின், யாராவது நல்ல நான்கு வரிகள் தயார் செய்து அளித்தால் அதை அனைவருமே ஒட்டு மொத்தமாக ஒன்று போல் இடுகையிடலாம்.
மேலும் வாசிக்க ---
குசும்புவின் உமாசங்கர் பற்றிய பதிவு
மதுரை புல்லட் பாண்டியனின் இடுகை --
ON (UN) TOUCHABILITY
56 comments:
http://sathia.blogspot.com/2010/07/unfit-umashankar.html
Sure we will do that
வழிமொழிகிறேன்..
புதன்கிழமை.. எல்லாருமே செய்யலாம் ஐயா..
செந்தழல் ரவி தனது வலைப்பூவில் திரு உமா ஷங்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் Badge வைத்துள்ளார். பதிவில் அதனையும் இணைக்கலாம்.
நல்ல ஐடியா. நான் தயார்.
வழிமொழிகிறேன்..
கும்மி
நீங்கள் சொல்லும் ரவியின் badge எப்படிப் பதிப்பது என்று சொல்லுங்களேன்.செய்து விடுவோம்.
அல்லது செந்தழல் ரவி சொல்லுங்கள்.
இதனை க்ளிக் செய்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
அன்பின் தருமி அன்ணே
நல்ல சிந்தனையில் விளைந்த நற்செயல் - செயல் படுத்தலாமே !
நல்வாழ்த்துகள் அண்ணே
நட்புடன் சீனா
வழிமொழிகிறேன்.
i'm favoring this idea (irrespective of outcome) to give moral support to the honest human.
//கும்மி said...
செந்தழல் ரவி தனது வலைப்பூவில் திரு உமா ஷங்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் Badge வைத்துள்ளார். பதிவில் அதனையும் இணைக்கலாம்.///
நான் என் பிளாக்கில் இனைத்திவிட்டேன்...., நண்பர்களுக்கு தெரிவீகிரேன்... எல்லோரும் அதெயே செய்யவும்..., நன்றி தருமி அண்ணனுக்கு...
நானும் இதை வழிமொழிகிறேன் . அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் .
ஓ! தாராளமா செய்யலாமே...
நல்ல ஐடியா..! வரவேற்கிறேன்...
உடன் ஒரு அடிப்படை சந்தேகம்... யாரும் தீர்த்து வைக்கலாம்...
தமிழக வரலாற்றில் தமிழக அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு அல்லது முதல் ஐ.எ.எஸ். அதிகாரியா இவர்?
ஆமாம் எனில்...
எதிர்காலத்தில்,
ஒரு பார்ப்பன
அல்லது
ஒரு இஸ்லாமிய
அதிகாரி இதே போல நேர்மையாக நடந்ததுக்கு அரசால் பாதிக்கப்பட்டாலும் பதிவர்கள் அனைவரும்... (குறிப்பாய் நீங்கள்...) ஒட்டுமொத்தமாக குரல் கொடுப்பீர்களா/ குரல் கொடுக்க அழைப்பு விடுப்பீர்களா?
குரல் கொடுப்புக்கு என் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு பார்ப்பன
அல்லது
ஒரு இஸ்லாமிய
அதிகாரி இதே போல நேர்மையாக நடந்ததுக்கு அரசால் பாதிக்கப்பட்டாலும் பதிவர்கள் அனைவரும்... (குறிப்பாய் நீங்கள்...) ஒட்டுமொத்தமாக குரல் கொடுப்பீர்களா/ குரல் கொடுக்க அழைப்பு விடுப்பீர்களா?//
ஐயா, இது என்னங்க கேள்வி. அவ்வளவு பெரிய பொறுப்பில இருக்கவர் வளைஞ்சி கொடுக்காம இருந்து அதுவே அவரது வேலைக்கும், உயிருக்கும் ஆபத்து என்று தெரிஞ்சும் நிற்கும் பொழுது அதற்கு பொது ஜனங்களும் தோள் கொடுப்பதில் எங்கிருந்து வருகிறது, ஜாதி/மதம்/ஆண்/பெண் - வெங்காயங்கள்...
இது ஒரு சந்தேகமின்னு அதுக்கு தருமி வேற விளக்கணுமாக்கும்...
நண்பனே நான் உங்கள் பின்னால் உங்களது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக உங்கள் கரத்தைப்பற்றி நானும் நிற்கிறேன்...
//ஒருவேளை நான் ஒரு எதிர்க்கட்சிக்காரன், அதற்காக இந்த முயற்சி என்று யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு ஒரு வார்த்தை: அந்தக் கட்சி, அதன் தலைவர்கள் எதுவுமே என் மரியாதைக்குரியதல்ல. கனவில் கூட நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதி எனக்கு எப்போதும் உண்டு.//
எனக்கு ஜெயலலிதாவை பிடிக்கும் என்பதை விட கருணாநிதியை பிடிக்காது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அப்ப எனக்கு உமாசங்கர் ஒரு பொருட்டல்ல.கனவில் கூட நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதி எனக்கு எப்போதும் உண்டு
எல்லாருமே செய்யலாம் ...
நல்லது, இத்துடன் யாரவது ஊழலுக்கு எதிரான உமாசங்கரின் போராட்டத்தை எளிய நடையில் வரிசை படுத்தி அந்த BADGE-ல் லிங்க் கொடுத்தால் எல்லாருக்கும் எளிதாக புரியுமே
ம், நீங்க ஒத்துக் கொள்ளவில்லையென்றாலும் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக பதில் சொல்லும்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பிரச்சனை என்பதை விட ’உங்கவா’ ஒருவருக்கு பிரச்சனை என்பதினால் தான் நீங்கள் கிளம்பி வந்திருக்கிறீர்கள் என்ற உண்மையைச் சொன்னால் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. நடத்துங்கள்.
மனசாட்சிக்கு எவனாக இருந்தாலும் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். எனவே அதற்கு பதில் சொல்லிக் கொள்ளுங்கள். மனசாட்சி என்பது மனைவி மாதிரி. அதற்கும் துரோகம் செய்து கொள்வேன் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
உமாசங்கர் உத்தமர் இல்லை என்பது மட்டும் உண்மை!
தெக்கிகாட்டான் அண்ணே, ஏண்ணே இப்படி காமெடி பண்றீங்க?
வளைஞ்சி நிக்காம நின்னாராம்.
நம்ம நாட்டுல நல்ல அதிகாரின்னு காமிக்கணும்னா சூப்பர் வழி இருக்குது. தனக்கு கீழே இருக்கும் அதிகாரிகளை டிஸ்மிஸ் பண்ணுறது, சஸ்பெண்ட் பண்ணுறதுன்னு ப்லிம் காண்பிச்சா போதும். ‘ஆஹா என்ன ஒரு நேர்மையான அதிகாரிப்பா’ அப்படீன்னு மக்கள் பேச ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்கு அப்புறம் என்ன தகிடுதத்தம் பண்ணினாலும் கண்டுக்க மாட்டாங்க.
உமாசங்கர் பதவியில் இருந்த போது அதிகார துஷ்பிரயோகம் செய்ததே இல்லையா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லச் சொல்லுங்கள்.
உமாசங்கரின் பணி சப்-கலெக்டராக மயிலாடுதுறையில் ஆரம்பமானது. அங்கே சென்று நியாயமானவர்களைக் கேளுங்கள்.
கடும் மழைக் காலத்தில் கூட மக்களுக்கான நிவாரணப் பணிகளை தான் வந்த பிறகு தான் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்று கட்டளையிட்ட விளம்பரப் பிரியர்.
தனது சாதிக்காரர்களுக்கு தனிச் சலுகை பல கொடுத்தவர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் நேர்மையாக பதில் சொல்ல வேண்டியது தானே!
நல்ல முயற்சி துணை நிற்போம் ஒரு நல்ல அதிகாரிக்கு, அதன் மூலமாவது ஊழல் நடவடிக்கைகளையும் எதிர்ப்போம்!
சில கேள்விகள். ஆவணங்களில் (அதான் தமிழில் டாகுமென்ட்ஸ்!) இருந்தது சில கேள்விகள்...
உமா சங்கரைப் பற்றி எனக்குத் தெரியாது. அவரை நான் அறிந்தவன் இல்லை. ஆனால் ஆவணங்களில் (அதான் தமிழில் டாகுமென்ட்ஸ்!) இருந்து சில கேள்விகள்
///:424. Complaint filed by C.Umashankar IAS., against the State of Tamil ...Author: தருமி
I indicted several senior IAS officers including the ex Chief Secretary Mr.N.Narayanan IAS., Thiru.C.Ramachandran IAS., Dr.S.Narayan IAS., Thiru.Debandranath Sarangi IAS., former Chief Minister, Ministers and others.
To my dismay I found that no worth while action was taken against highly influential officials who were deeply involved in the corruption. I therefore requested the Government to relieve me from the post of Joint Vigilance Commissioner.///
உமா சங்கர் என்ற நல்லவர் கொடுத்த compaint (தமிழிலே எழுதி விடுகிறேன்) மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? இங்கு கும்மி அடிப்பவர்களிடம் தான் இந்தக் கேள்வி. அவருக்கு வைக்கப் பட்ட முதல் ஆப்பு இங்க தான்... சங்கர் செய்த இந்த முதல் வேலை தான்..
இதையும் கேளுங்களேன் சார்!
அது எப்படி உயர்ந்த ஜாதி IAS பிராடைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்பீர்கள்?
contd..below..
Part 2 contd..from above
////எதிர்காலத்தில், ஒரு பார்ப்பன அதிகாரி இதே போல நேர்மையாக நடந்ததுக்கு அரசால் பாதிக்கப்பட்டாலும் பதிவர்கள் அனைவரும்... (குறிப்பாய் நீங்கள்...) ஒட்டுமொத்தமாக குரல் கொடுப்பீர்களா/ குரல் கொடுக்க அழைப்பு விடுப்பீர்களா?///
இந்த கேள்வியே தவறு. அர்த்தமற்றது. தவறு. எப்படி? அது மாதிர் ஒரு நிலை ஏற்படாது. நேர்மையாக நடக்காவிட்டாலும் அவருக்கு ஒன்னும் ஆகாது.. அப்படின்னு நான் சொல்லவில்லை...நீங்கள் கூறிய உமா சங்கர் என்ற நல்லவர் சொன்னது அது. அவர் அந்த நல்லவர் கொடுத்த compalint உண்மை என்று நான் நம்புகிறேன்.
இங்கு குரல் கொடுக்கும் நல்லவர்கள் பக்கம் நானும் உள்ளேன். Please count me...
இருந்தாலும் ஒரு கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை. உமா சங்கர் மாதிரி ஆபீசர் மீது அம்மையார் action எடுத்து இருந்தால் நீங்கள் குரல் கொடுப்பீர்களா. இல்லை மாட்டர்கள். கொடுத்தால் உங்க பெண்டு கழண்டுடும. இந்த பார்ப்பான் பத்திரிக்கைகள் தான் குரல் கொடுக்குமா? இல்லை கொடுத்துள்ளதா முன்பு...
இன்றைக்கு சங்கருக்கு ஏற்ப்பட்ட இந்த நிலைக்கு திரை மறைவு வேலையும் முக்கய காரணம். அவர் தனது வேலைக்கு ஆப்பு வைதுக்க் கொண்டதே அதாவது தனது அஸ்திவாரத்தை அசைததே அவர் பார்ப்பான் IAS ஆபீசர் மீது கொடுத்த முதல் complaint. Complaint கொடுத்தால் போதுமா? அதை விசாரிப்பது யார்? கோர்ட்டு யார்? ஒண்ணுமே தெரியாத சின்னப் பிள்ளையாக இருந்தது இருக்கிறாரே?
படித்தால் மட்டும் போதுமா? பார்ப்பான் ஆபீசர் மீது compaint கொடுக்கக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை. என்னத IAS படிச்சு என்னத்த கிழிச்சு! ஹூம்.....
செய்யலாம்.
நல்ல முன்னெடுப்பு !
நானும் வந்துட்டேன்
நானும் வந்துட்டேன் -pasumpon
will vote for this... i know Uma Sankar is pro-DMK for long time, if i am not wrong. for this reason, he was not given any folios during Jeyalalitha period. the 'good' thing about DMK is they never consider their loyalists. they will always think 'common' interest is greater than loyalists. what is common interest? DMK. what is DMK? nothing but Karunanidhi! Karunanidhi family! karunanidhi lineages-etc! poor loyalists! finally, Jeyalalitha herself opened her verbal support to Uma Sankar publicly.
one more curiosity: whether this will (voting, campaigning and complaining) will be extended to other socio-political issues?
செய்யலாம்.
//will vote for this...//
இங்கு ஓட்டு ஏதுமில்லை. ஒரு பதிவு எல்லோருமாக .. அவ்வளவே.
Good idea Sir.
ஒரு நேர்மையான அதிகாரிக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.
Me 2
செய்வோம் ...
மாதிரி பதிவை யார்ன்னா போடுங்களேன்
//மாதிரி பதிவை யார்ன்னா போடுங்களேன்//
கா/பா/ போட்டிருக்காரே .. பாருங்களேன்.
i am agree with ur idea.
sure
sure
நண்பர்களே,
நாம் எடுக்கும் இந்த முடிவு பிடித்ததென்றால், நம் கையெழுத்தையும் இங்கே போடலாமே. வாருங்கள்.
done பேராசான்
உமாசங்கர் ( இந்திய ஆட்சிப் பணித்துறை)
http://kalvetu.blogspot.com/2010/08/blog-post.html
.
நல்ல விசயம் பெரியவரே. நம் மாதிரி சாமாண்யர்களின் அரசியல் செயல்பாடு இப்படித்தான் இருக்கமுடியும். இதைத்தான் 'நுண் அரசியல்' என்கிறார்கள். இது ஒரு சரியான ஆரம்பமாக இருக்கக் கூடும்.
ப்ரபா
//இது ஒரு சரியான ஆரம்பமாக இருக்கக் கூடும்.//
எல்லா பதிவர்களும் முனைந்து செயல்பட்டால் நீங்கள் சொல்வது போல் இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கக்கூடுமென நினைக்கிறேன்; ஆசைப்படுகிறேன்.
நாளை நானிடுவதாக உள்ள இடுகையின் அடக்கம்:
உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இது பற்றி பதிவெழுதிவிட்டேன் அய்யா,
http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_18.html
எனக்கு தெரிந்த விசயங்கள் பற்றி நானும் எழுதி இருக்கிறேன்
உமாசங்கர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. அந்தக் கேள்விகள் வெளியாகக் கூடாது என்பதற்காகத்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்திருகிறது. அவர் தலித்தா, பார்ப்பனரா, இஸ்லாமியரா என்ற அடிப்படையில் ஆதரிப்பது எதிர்ப்பதை விட, நேர்மையான நடவடிக்கைகள் எடுக்க முற்பட்ட ஒரு அதிகாரியை ஒடுக்குவதை எல்லா சாதியினரும் சாதிக்கு அப்பாற்பட்டு எதிர்க்க வேண்டும். வரும் சனி ( 21.8.2010 அன்று வெளிவரும் கல்கி இதழில் ஓ பக்கங்களில் உமாசங்கர் எழுப்பும் கேள்விகள் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். ஞாநி
அவர் கேள்விகள் நேர்மையானவை.. ஞாயமானவை.. அரசிடம் தவறில்லை என்றால் நேரடியாக பதிலளித்திருக்கும்.. இதிலிருந்தே தெரிகிறது, அரசிடம் எவ்வளவு தவறு உள்ளதென்று.. கோடிக்கணக்கில் ஊழல நடந்துள்ளது.. சாமானியமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.. மக்கள் சக்தியைத் திரட்டியே தீர வேண்டும்..
அன்பர்களே,நான் மயிலாடுதுறையில் அரசுப்பணியில் இருந்த போது திரு.உமாசங்கர் அவர்கள் துணை ஆட்சியராக இருந்தபோது வேறு துறையில் பணியாற்றியுள்ளேன்.சுறுசுருப்பான அதிகாரி. நனகு உழைப்பார்.மணல் அள்ளும் அடியால்கூட்டத்திற்கு சவாலாக இருப்பார்.அதே போல மற்ற கீழ்நிலை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பாக இருப்பார்.நல்ல அலுவளர்கள் அனுபவித்து உள்ளோம். அரசு கேபில் பற்றி கடந்த ஆண்டு இவர் அறிகை விட்டதுமே எதிபார்த்தோம்.அதன் படியே இவர் அடுத்தநாளே மாற்ற்ப்பட்டார்.அவரது சாதிக்காரர்களை விட மற்றவர்கள்தான் உண்மையில் முன்வரவேண்டும்.
உமாசங்கர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. அந்தக் கேள்விகள் வெளியாகக் கூடாது என்பதற்காகத்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்திருகிறது. அவர் தலித்தா, பார்ப்பனரா, இஸ்லாமியரா என்ற அடிப்படையில் ஆதரிப்பது எதிர்ப்பதை விட, நேர்மையான நடவடிக்கைகள் எடுக்க முற்பட்ட ஒரு அதிகாரியை ஒடுக்குவதை எல்லா சாதியினரும் சாதிக்கு அப்பாற்பட்டு எதிர்க்க வேண்டும்.
இது தான் சரியான பார்வை.
ஞாநி அவர்களே நீங்க பாட்டுக்கு டக் டக்ன்னு தாண்டி அடுத்த பத்திரிக்கைக்கு தாண்டிப் போய் விடுறீங்க. உங்க கட்டுரை ஒன்றுக்காகவே பத்திரிக்கைகளில் வரும் மற்றவைகளையும் பொறுத்துக் கொண்டு படிக்க வேண்டி உள்ளது.
///gnani said...உமாசங்கர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.///
///:424. Complaint filed by C.Umashankar IAS., against the State of Tamil ...Author: தருமி
I indicted several senior IAS officers including the ex Chief Secretary Mr.N.Narayanan IAS., Thiru.C.Ramachandran IAS., Dr.S.Narayan IAS., Thiru.Debandranath Sarangi IAS., former Chief Minister, Ministers and others.
To my dismay I found that no worth while action was taken against highly influential officials who were deeply involved in the corruption. I therefore requested the Government to relieve me from the post of Joint Vigilance Commissioner.///
அப்ப ஆண்ட அரசின் பதில் என்ன?
இதையும் எழுதலாமே?
gnani ஐயா அவர்களே எழுதுவீர்களா?
Part 1:
என் நண்பர்களே! என் ரத்தத்தின் ரத்தங்களே!!என் உடன் பிறப்புகளே!!!
I may not be writing in blogs for another, at least, 3 months, as I will be away for an important assignment...out of my country. Please do not try to tag me with my IP number and MAC address; one can easily fool these things. You know that. BTW, I don't care about these stupid IP address and MAC address, router address, etc. Because I live in a country where we have extra ordinary freedom of speech and expression. This is NOT India!
At this juncture, I wish to add that I have great respect for Mr. Uma Sankar, IAS for his work in the past. However, it does not absolve him of his indiscretions (It is not uncommon to have indiscretions in life; all of us have). I strongly believe that Uma Sankar, IAS, is one among the best IAS officers in Tamil Nadu. No two opinions on this. I have to take a stand against him because he has also fallen a prey to வர்னாஸ்ரமம். He joined hands with them. He totally forgot that he is what he was because of his...And he deserves every thing now, and what he would be getting in future...Sorry, Uma...Sincere apologies...You made several mistakes in your life though you are a good IAS Officer.
Uma Sankar IAS, சாதாரண குழியில் இருந்தது புதை குழியில் சிக்கி இருக்கிறார். இவ்வளவு படித்து என்ன பயன். எவனோ மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை "Affidavit" ஐ File செய்து இருக்கிறார். இவர் Affidavit - ஐ படிக்கும் பொழுது நன்றாகத் தெரிந்தது. ஒரு விசிலடிச்சான் குஞ்சு (அதான் நமது சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பெயர்) தான் அவரை represent பண்ணி இருக்கிறார் என்று.
Contd..below..as part 2...
Contd..from Part 1 above...
Uma Sankar IAS, தனக்கு தானே குழி நோன்டிக்கொண்டர். அதற்க்கு ஒரு ஒரு விசிலடிச்சான் குஞ்சு Affidavit support ஒரு மிகப் பெரிய காரணம். என்ன எழவை வேண்டுமானாலும் Affidavit- வில் எழுத்கக் கூடாது. மறுபடியும், Uma Sankar IAS, தனக்கு தானே குழி நோன்டிக்கொண்டர்.
Uma Sankar IAS, because of his affidavit (as defined under oath) cannot disown what he presented to the Court. More importantly, he is an IAS Officer. He may not be excused for any errors as he is in the top one percentile of the population; education and knowledge wise. Every thing else pales into insignificance because he is a Rule-Maker. Period. Courts would not excuse him.
நீங்கள் யார்? மேல் ஜாதியா? எப்படி பல்டி அடிச்சாலும் கோர்ட் ஒத்துக் கொள்வதிர்க்கு? உங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்காது இந்தியாவில்...
Uma Sankar IAS, சாதாரண குழியில் இருந்தது புதை குழியில் சிக்கி இருக்கிறார்....because of his Affidavit.
If it is required, I would provide some inputs to this case...
Bur for now!
என்றும் உங்களுடைய அன்புள்ள
ஆட்டையாம்பட்டி அம்பி!?
கருணாநீதி என்பவர் நவீன கலியுக காலத்தில் வாழும் ஒரு அரசியல் குள்ளநரி ... இவர் 87 வயதிலும் லஞ்ச & குடும்ப அரசியல் செயல்கள் அனைத்தையும் அறிவியல் பூர்வமாக யோசித்து செய்கிறார் ... நமது குடும்பத்தில் 70 வயதை தாண்டினாலே நாபக மறதியை கொடுக்கும் கடவுள் இவருக்கு அபார சக்தியை கொடுத்து கலியுகம் நடத்துகிறார் .... கடவுளே ! ஒரு சமூகத்தையே அவருக்கு பலி ஆக்காதே ! ...
Post a Comment