*
மற்றைய இடுகைகள்;
முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை
*
நரகம என்று ஒன்றிருந்தால் அது இதுவாகத்தானிருக்கும். கடவுள் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. ஜெபங்கள் இல்லை; தேவ நம்பிக்கைகள் இல்லை; அன்பு என்றும் ஏதுமில்லை.
இவ்வளவுக்கும் பிறகு நான் கடவுளுக்கு உண்மையானவளாக இருக்க ஆசைப்படுகிறேன் ... என்னையே அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் ... எனக்கு அவர் தந்தவைகளுக்காக அல்ல,என்னிடமிருந்து அவர் பெறுபவைகளுக்காக அவரை நான் அன்பு செய்கிறேன். அவரது ஆளுமைக்குள் இருக்க ஆசைப்படுகிறேன். (250)
"எனக்காக இதைச் செய்வாயா?" - 1946-ம் ஆண்டு செப்டம்பர்10-ம் தேதி டார்ஜீலிங்கிற்கு ரயிலில் செல்லும்போது ஏசு அன்னையிடம் இதைப் பேசினார். இந்த அழைப்பின் விளைவே அன்னையின் புதிய சபை - Missionaries of Charity.
இந்த அமைப்பிற்காகவே அன்னை தன் வாழ்நாள் முழுமையையும் ஒப்புக் கொடுத்தார். அன்னை தேவ நம்பிக்கையை இழந்த போதும், ஏசு இவ்வமைப்பிற்காகத் தன்னை அழைத்ததில் அவருக்குச் சிறிதும் ஐயமில்லை. (259)
அன்னை தன் வாழ்வில் எப்போதும் தனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையைப் பற்றி மேலும் மேலும் ஆழ்ந்து யோசித்தது இல்லை. அதனை அவர் ஏற்றுக் கொண்டு, கடவுள் தன்னிடம் எதிர்பார்த்ததை இனிய புன்னகையோடு சிரமேற்கொண்டார். (272)
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அவரை மிகவும் உலுக்கிய ஐயங்கள் ஆயிரத்தி தொன்னூறுகளின் கடைசியில் அவரை விட்டு விலகி, அவர் அமைதியான ஒரு நிலைக்குள் வந்தார். (274)
மக்களிடமும் சபையின் கன்னியர்களிடமும் இறைவனைப் பற்றிப் பேசும்போது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும், தீவிரத்தையும் கொடுத்ததாக அறிந்தேன். ஆனால் எனக்கு அப்படிப்பட்ட உணர்வுகள் ஏதுமில்லை. மனதுக்குள்ளே இருட்டும் நான் கர்த்தரிடமிருந்து அறுபட்டு போனதாகவே தோன்றியது. John of Cross-ன் நிலையையே இது எனக்கு நினைவூட்டியது. (306)
4 comments:
//அழைப்பின் விளைவே அன்னையின் புதிய சபை - Missionaries of Charity.//
வாழ்க பக்தி :)
Konjam thelivaga kooralam
//இவ்வளவுக்கும் பிறகு நான் கடவுளுக்கு உண்மையானவளாக இருக்க ஆசைப்படுகிறேன் ... என்னையே அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் ... எனக்கு அவர் தந்தவைகளுக்காக அல்ல,என்னிடமிருந்து அவர் பெறுபவைகளுக்காக அவரை நான் அன்பு செய்கிறேன். அவரது ஆளுமைக்குள் இருக்க ஆசைப்படுகிறேன். (250)//
menmakkal menmakkale... pakirvukku nanri.
தலைவரே ;)
இதை போன்ற தொடர்கள் எழுதும் போது முந்தைய பகுதிகளுக்கான சுட்டியையும் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்...
சீனு.
Post a Comment