எங்க ஊரு இ.த. கா.பா. இல்லாததாலோ என்னவோ, அதாவது, எங்கள் இளைய தளபதி கார்த்திகைப் பாண்டியன் ஊரில் இல்லாததாலோ என்னவோ
வழக்கமாக வரும் நண்பர் கூட்டம் ஏதுமின்றி கோவையிலிருந்து வந்த பதிவர் ஓம்காரைச் சந்திக்க மூன்றே மூன்று பேர் மட்டும் சேர்ந்தோம்.ஸ்ரீதர், தம்பி சீனா, நான் - நாங்கள் மூவர் மட்டுமே ஜோதிட வகுப்பு எடுக்க மதுரைக்கு 3 நாட்களுக்கு வந்த ஓம்காரை 18.12.10 சனி மாலை சந்தித்தோம்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். வழக்கமாக பதிவுகள், பதிவர்கள், மொக்கைகள், தமிழை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் பதிவுகள், குழுக்கள், குழுமங்கள் என்றெல்லாம் பேசுவோமே அது போல் ஏதும் சுத்தமாகப் பேசவில்லை.
இறுதியில் விடை பெறும்போது நான் ஓம்காரிடம் 'என்னக் குழப்பி விட்டு விட்டீர்கள். உங்களை எந்த slot-ல் வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை' என்றேன்.
ரிஷிமூலம் கேட்டேன். நிறைய சொன்னார். சின்ன வயதிலேயே இயற்கை மேலிருந்த நாட்டம், ஈர்ப்பு, அதை நாடி ஓடிய ஓட்டங்கள் பற்றியெல்லாம் சொன்னார். அதன் நீட்சியாக இந்த துறவு வாழ்க்கை பற்றிச் சொன்னார். எப்போதோ ஜோதிடத்திற்கு எதிர்த்து ஏதும் எழுதினீர்களோ என்று கேட்டேன். வழக்கமான எல்லோரும் சொல்லும் ஜோதிடம் மாதிரி அவருடையது இல்லை என்றார். டெக்னிக்கல் வார்த்தைகள் யாருக்குப் புரியுது! இவரது ஜோதிடத்தில் பரிகாரம் போன்ற வேலைகளுக்கு இடமில்லை என்றார்.
கடவுள் நம்பிக்கைகள் பற்றி பேச்சு வந்தது. இயற்கையும், ஒளி வழிபாடும் அவரது வழி என்றார். யாருக்கும் சீடனல்ல; யாரையும் சீடராக்கவும் இல்லை என்றார். கார்ப்ரேட் சாமியார்கள் பற்றி சிலதே பேசினோம். நாடி ஜோதிடம், ஜீவ ஜோதிடம் பற்றிப் பேசினோம். கீதை, பைபிள், குரான் இவைகள் எல்லாமே அவ்வப்போது நடுவில் சில கருத்துக்கள் புகுந்திருக்க வேண்டும் என்றார். அதற்குக் கீதையில் இருந்து ஓரிரு சான்றுகள் கொடுத்தார். அவ்வாறு வரும் இடைச் செருகல்கள் மொழி நடையையே மாற்றிவிடும் என்றார்.
தன்னிடம் இருக்கும் சில மத அடையாளங்கள் energised materials என்றார். அதைப் பற்றிப்பேசும் போது சொன்ன சில விஷயங்கள் எனக்கு அப்பாற்பட்டு நின்றன.
அதிலும் முக்கியமாக கங்கை நீரைப் பற்றி நிறைய பேசினோம். கங்கை நீர், அதுவும் காசியின் அருகில் உள்ள நீர் மிகவும் மாசு படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரியும். ஆனால் கங்கோத்ரி அருகில் உள்ளதை விடவும் காசி அருகில் உள்ள நீர் சுத்தமாக இருக்கும் என்றதோ, செம்பு கூஜாவில் இருக்கும் 'கங்காஜல்' அசுத்தமாக ஆவதில்லை என்றதோ எனக்குச் சரியான தகவலாகத் தெரியவில்லை. இதைப் பற்றிப் பேசிய போது தண்ணீரின் முன் அமர்ந்து நல்ல வார்த்தைகள், நல்ல இசை, நல்ல எண்ணங்கள் கொண்டிருந்தால் தண்ணீர் வித்தியாசமாக crystal படிகமாகும் என்று சொன்னார். இதை அறிவியல் முறையில் ஜப்பானிய அறிஞர் ஒருவர் செய்திருப்பதாகக் கூறினார். அவரும் கங்கை நீரின் புனிதத் தனமை பற்றி கூறியிருப்பதாகக் கூறினார்.
அந்த அறிஞர் பெயரைக் கேட்டு வந்தேன். இணையத்தில் பார்க்க சொன்னார். நானும் பார்த்தேன். வித்தியாசமான ஆராய்ச்சி. படித்துப் பார்த்து யாரும் என்ன ஏது என்று சொன்னால் இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்கிறேன்.
Frozen water from Fujiwara Dam before [left] and after [right] a prayer |
இந்த இரு படிகங்களும் ஒரே நீரின் இரு நிலைகள்; ஒன்று 'ஜெபத்திற்கு முன்'; இன்னொன்று அதன் பிறகு. இதே போல் நல்ல இசை, நல்ல சொற்கள், நல்ல எண்ணங்கள், மந்திரங்கள் எல்லாம் நீரை நல்ல படிகமாக மாற்றும் என்கிறார்
ஆனால், இணையத்தில் கங்கை நீர் வாரனாசியில் நல்ல நீராக இருக்கும் என்பதற்கான சான்றுகள் தேடிப்பார்த்தேன். அப்படி ஏதுமில்லை. அந்த நீர் மிகவும் அசுத்தப்படுத்தப்பட்ட 'புனித நீர்' என்று நான் முன்பு வாசித்தவைகள் தான் என் கண்களில் படுகின்றன. அவர் சொன்னது போல் காசியின் கங்கை நீர் சுத்தமானது என்பது எனக்கு உடன்பாடல்ல.
இப்படிப் பலவும் பேசி இறுதியில் விடை பெறும்போது நான் ஓம்காரிடம் 'என்னக் குழப்பி விட்டு விட்டீர்கள். உங்களை எந்த slot-ல் வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை' என்றேன்.
இது எமோட்டொவின் படமல்ல.ஆனாலும் இதை வாசித்துப் பாருங்க |
70 comments:
சாமியார் என்ற முறையில் நம்மையெல்லாம் பயப்படுத்தாமல் ஒரு நண்பரைப் போல் பழகுகிறார்.
போன வருசம் நானும் அவரை சென்னையில் சந்திச்சேன்.
சத்யஜித்ரேயின் ஒரு படம் நினைவுக்கு வருகிறது. கங்கை நீர் நிச்சயம் மாசுபட நிறைய காரணங்கள் உள்ளன!
துளசி
சாமியார் அப்டின்னா பயமா?!
அப்படி ஆகிப்போச்சு .. இல்ல?
தேவன்மாயம்
you have hit the bull's eye.
தருமி,
அவர் பேர் ஸ்வாமி ஓம்கார் தானே. அத போடாம இருக்க எதாவது காரணம், ஸ்வாமிய தவிர்க்க?:)
சந்திப்பு நல்லாருந்துருக்கும்னு தோணுது.
கங்கை நீர் பத்தினது எனக்கும் குழப்பம். இன்னும் வளரணுமா இருக்கும் :))
மசாரு எமாட்டோ தகவல் சுவாரசியம் சார் . நல்லா பகிர்ந்திருக்கீங்க
வணக்கம்,
//இறுதியில் விடை பெறும்போது நான் ஓம்காரிடம் 'என்னக் குழப்பி விட்டு விட்டீர்கள். உங்களை எந்த slot-ல் வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை'//
குழப்புவதுதான் அவ்ர்கள் வேலையே. அதே ஸ்லாட்தான்.
//இயற்கையும், ஒளி வழிபாடும் அவரது வழி என்றார்//
இது இயற்கைக்கும் ,ஒளிக்கும் தெரியுமா?
//கீதை, பைபிள், குரான் இவைகள் எல்லாமே அவ்வப்போது நடுவில் சில கருத்துக்கள் புகுந்திருக்க வேண்டும்//
இது ம்ட்டுமல்ல எல்லா வழிகளிலும் கூட முதலில்,இடையில் மற்றும் கடைசியிலும் கருத்துகள் நுழைகின்றன.
//கங்கோத்ரி அருகில் உள்ளதை விடவும் காசி அருகில் உள்ள நீர் சுத்தமாக இருக்கும் //
இன்னும் இமயமலை பக்கத்தில் போனால் மிகவும் சுத்தமாக இருக்கும்.
இரண்டு சீரியஸான பதிவு எழுதினால் ஒரு நகைசுவை பதிவு ஒன்று போட வேண்டுமா?.
நிறைய நகைசுவை பதிவுகள் எதிபார்க்கிறோம்.
அன்பின் தருமி அண்ணே
இரண்டு மணி நேர இடை விடாத உரையாடலின் மிக முக்கிய பகுதிகளைச் சுருக்கமாக இடுகையாக இட்டது நன்று. நட்புடன் சீனா
சுடச்சுட பதிவு. பேசிய பலவிஷயங்களை எளிமையாக தொகுத்துவிட்டீர்கள். மூத்த பதிவர் மூத்த பதிவர்தான். :)
நான் சென்ற வருடம் காசிக்கு சென்றேன் , கங்கை நதியை பார்த்து வருத்தம் ஏற்ப்பட்டது .குளிப்பதற்கு என்று படகில் ஒரு இடத்திற்கு அழைத்து செல்வார்கள் .கங்கையில் ebstein barr virus எனும் ஒரு முக்கியமான வைரஸ் இருப்பதாக படித்து உள்ளேன் ,அதன் சுட்டியை தேடி பார்த்தேன் (இங்கே அளிப்பதற்கு )இப்பொழுது கண்டு பிடிக்கவில்லை .
உங்களுக்குள் நல்ல விவாதம் ,கருத்து பரிமாற்றம் ஏற்ப்படிருக்கும்
சுமார் 8 வருடங்களுக்கு முன் காசி சென்றிருந்தேன் - போகும்போதே என் நண்பர்களிடம் என்னை கங்கையில் குளிக்கச்சொல்லக்கூடாது என்று வாதிட்டுக்கொண்டே சென்றேன் ஏனென்றால் நான் கேள்விப்பட்டிருந்த கங்கையின் அசுத்தம் பற்றிய பயமே.
ஆனால் அங்கு சென்று பார்த்தபிறகு என் அபிப்ராயம் மாறியது, குளித்தேன், எல்லோரையும் போலவே கங்கை நீரை ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் அடைத்துக் கொண்டுவந்தேன், இன்றுவரை அந்த நீர் கெட்டுப்போகவில்லை. இதற்கு என்ன சொல்வது?
இந்த பதிவை விவாத களமாக்க விரும்ப வில்லை. இருந்தாலும் கங்கை பற்றி கருத்துக்கள் உள்ளதால் இங்கே விளக்க முற்படுகிறேன்.
கங்கை நதி முழுவதும் புனிதம் என கண்மூடி தனமாக நான் நம்பவில்லை. மேலும் சிவன் தலையிலிருந்தும், நாராயணனின் பாதத்திலிருந்தும் வருகிறது என்ற புராண கருத்தால் அதை தெய்வீகமாக கருதவில்லை.
கங்கோத்தரியில் துவங்கி கல்கத்தாவரை கங்கை பாய்கிறது.
ஆனால் அலஹாபாத் என்ற பகுதி முதல் காசி நகரம் வரை மட்டுமே இந்த தூய தன்மை இருப்பதாக கருதுகிறார்கள். தூய தன்மை பிசிகள் டஸ்ட் மற்றும் பாக்டிரியம் என இரண்டாக பிரிக்கலாம். இருந்தாலும் இரண்டும் கங்கையில் இருக்கிறது.
எந்த விஷயத்திற்கும் இணையத்தில் சுட்டி தேடி ஆதாரம் கொடுப்பது சகஜமாகிவிட்டது. நானும் என் பங்குக்கு கொடுக்கிறேன்.
லிங்க் 1 : http://in.answers.yahoo.com/question/index?qid=20100128191430AAQ9HEB
லிங்க் 2 :
http://www.indiadivine.org/audarya/hinduism-forum/202458-british-physician-confirms-purity-ganges-river.html
இதை படித்துவிட்டு கங்கை சுத்தமானது என்ற முடிவுக்கு வருவீர்களா?
யாரோ ஒருவர் சொல்லுகிறார் என்பதற்காக ஒருவிஷயத்தை நம்ப வேண்டும் என்பது அவசியம் இல்லை. அது அறிவீனம். நாமே அதை சோதித்து அறிவதே அறிவு.
அதன் படி கங்கை நீரை ஒரு பிளாஸ்டிக் கேன்னில் எடுத்து வாருங்கள், அதை தினமும் உங்கள் பார்வை படும் இடத்தில் வையுங்கள். அந்த நீர் கெட்டு புளுக்கள் வ்ரும் காலத்தை கூறுங்கள்.
அதை விடுத்து மினரல் வாட்டர் பாட்டிலுடன் காசியை வலம்வந்த வெளிநாட்டுகாரனின் கட்டுரை நமக்கு பயன்படாது..!
இந்த பதிவை விவாத களமாக்க விரும்ப வில்லை. இருந்தாலும் கங்கை பற்றி கருத்துக்கள் உள்ளதால் இங்கே விளக்க முற்படுகிறேன்.
கங்கை நதி முழுவதும் புனிதம் என கண்மூடி தனமாக நான் நம்பவில்லை. மேலும் சிவன் தலையிலிருந்தும், நாராயணனின் பாதத்திலிருந்தும் வருகிறது என்ற புராண கருத்தால் அதை தெய்வீகமாக கருதவில்லை.
கங்கோத்தரியில் துவங்கி கல்கத்தாவரை கங்கை பாய்கிறது.
ஆனால் அலஹாபாத் என்ற பகுதி முதல் காசி நகரம் வரை மட்டுமே இந்த தூய தன்மை இருப்பதாக கருதுகிறார்கள். தூய தன்மை பிசிகள் டஸ்ட் மற்றும் பாக்டிரியம் என இரண்டாக பிரிக்கலாம். இருந்தாலும் இரண்டும் கங்கையில் இருக்கிறது.
எந்த விஷயத்திற்கும் இணையத்தில் சுட்டி தேடி ஆதாரம் கொடுப்பது சகஜமாகிவிட்டது. நானும் என் பங்குக்கு கொடுக்கிறேன்.
லிங்க் 1 : http://tinyurl.com/358avdy
லிங்க் 2 :
http://tinyurl.com/38oqefd
இதை படித்துவிட்டு கங்கை சுத்தமானது என்ற முடிவுக்கு வருவீர்களா?
யாரோ ஒருவர் சொல்லுகிறார் என்பதற்காக ஒருவிஷயத்தை நம்ப வேண்டும் என்பது அவசியம் இல்லை. அது அறிவீனம். நாமே அதை சோதித்து அறிவதே அறிவு.
அதன் படி கங்கை நீரை ஒரு பிளாஸ்டிக் கேன்னில் எடுத்து வாருங்கள், அதை தினமும் உங்கள் பார்வை படும் இடத்தில் வையுங்கள். அந்த நீர் கெட்டு புளுக்கள் வ்ரும் காலத்தை கூறுங்கள்.
அதை விடுத்து மினரல் வாட்டர் பாட்டிலுடன் காசியை வலம்வந்த வெளிநாட்டுகாரனின் கட்டுரை நமக்கு பயன்படாது..!
வர முடியாமப் போச்சே அய்யா.. பரவாயில்ல.. பயனுள்ள பொழுதா போயிருந்தா சரி..:-))
//இந்த பதிவை விவாத களமாக்க விரும்ப வில்லை.//
தப்பே இல்லை; நமக்குப் பிடிச்சதாச்சே!
ரெண்டு தொடுப்பு தர்ரேன். இப்படி இருந்தா நான் எதை நம்புறது?
http://sankatmochan.tripod.com/GangaPollution.htm
Upstream from Varanasi, .. the water is comparatively pure, having a low Bio-Oxygen Demand (B.O.D.) and Fecal Coliform Count. However, once the river enters the city these levels rise alarmingly. Measurements ... a few years ago show that the average B.O.D of the water rises by over 1300 percent. The average Fecal Coliform Count at the ghats is over 6000 times what it is before the river enters the city.
----------------
http://en.wikipedia.org/wiki/Ganges#Pollution_and_ecology
In December 2009 the World Bank agreed to loan India US$1 billion over the next five years to clean up the Ganges.[10]
Along the 4 miles (6.4 kilometres) stretch of terraced bathing ghats in the holy city of Varanasi, the water of the Ganges is a "brown soup of excrement and industrial effluents."[11] The water there contains 60,000 faecal coliform bacteria per 100 ml, 120 times the official limit of 500 faecal coliforms/100ml that is not considered safe for bathing
ஆமாம், அதே சுத்தமான தண்ணீரை கொதிநிலையில் வைத்து அதே நல்ல வார்த்தைகளையும், நல்ல சூழலையும், நல்ல சிந்தனைகளையும், முயன்று பார்த்தார்களா ஜப்பானியர்களோ அல்லது இந்தியர்களோ.. படிகமானதா?
கொதிநிலைன்னு இல்லை.. ஒரு 30-40 டிகிரி அளவுக்கு சூடா இருந்தா கூட போதும்.
நீர் இப்படி வகை வகையாக படிகமாகுமா?
//அவர் பேர் ஸ்வாமி ஓம்கார் தானே. அத போடாம இருக்க எதாவது காரணம், //
அவரை ஸ்வாமியாகப் பார்ப்பதை விட நண்பராக மிகவும் பிடித்தது; அப்படியே அழைக்கவும் நன்றாக இருந்தது. (அவருக்கும் அப்படித்தானிருந்திருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்.)
நீர் வகை வகையாக படிகமாகுதல் என்பது உண்மைதான்.
இது குறித்து அறிவியல் ரீதியாக விளக்கமாக தமிழில் எழுதப்பட்ட ஒரு இடுகை உண்டு( மூன்றாண்டுக்கு முன் இருக்கும்) அதைத்தான் தேடிகிட்டிருக்கேன் கிடைக்க மாட்டேங்குது..
ரெண்டு வாரத்துக்கு முன்னே ஹரித்வார் ரிஷிகேஷ் போய் வந்தேன்.
தண்ணீர் நல்ல தெளிவா சுத்தமா ஓடுது அங்கே!
ப்ளாஸ்டிக் கேன்கள் விற்பனை ஏராளம் அங்கே. நம்ம ட்ரைவர் ஒரு கேன் வாங்கி தண்ணீர் ரொப்பிக்கிட்டார்.
நாங்கள் கொண்டுவரலை.
ஆனால் 25 வருசம் முன்னே ஒரு தாமிரச்செம்பில் கங்கை கிடைச்சது. அது ஸீல் செஞ்சுருக்கு. நியூஸியில் வச்சுருக்கேன். எப்படி இருக்குமுன்னு தெரியலை.
நான் 'போகும்போது' கோபால் ஸீலை உடைச்சு ஊத்தணும். அப்பத்தான் தெரியும் உண்மை நிலை.
நம்பிக்கைதான் கடவுள்னு நினைக்கணும் இல்லையா?
http://link.aip.org/getpdf/servlet/GetPDFServlet?filetype=pdf&id=PHTOAD000060000012000070000001
இந்த "Snow and Ice Crystals" கட்டுரையை முன்வைத்துத்தான் தமிழில் அவ்விடுகை எழுதப்பட்டது. இதிலிருந்து சில படங்கள் கூட எடுத்திருந்தார்னு நினைக்கிறேன்.
தமிழில் எழுதிய சுட்டியையே தரலாம் என்றால் தற்போதைக்கு சிக்க மாட்டேங்குது.
தருமி,
புனித கங்கை மிகவும் புனிதமானது. அதில் எத்தனை பிணங்களைக் கொட்டினாலும் இன்னும் கெடவில்லை. சனாதன வர்ணாசிரம தியரிகளின்படை இங்கே பிணத்தை எரிப்பதும் நீரில் எரிவதும் புண்ணியம்.
நீங்கள் தயவு செய்து பாலபாரதியின் பதிவில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் பார்த்துவிடவும்.
எச்சரிக்கை:- ‘புனித கங்கை’படங்கள் -இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்
http://blog.balabharathi.net/?p=179
****
மரம் சிடி படிப்பதையும்
மந்திரம் சொல்லி தண்ணீர் படிகமாவதையும் ஏன் இன்னும் நோபலுக்கு அனுப்பவில்லை?
ஆலம் பவுடர் என்ற ஒன்று உண்டு(alum powder crystals ) என்று கூகிளினால் நிறைய கிடைக்கும் )அதை சும்மா தண்ணீரில் போட்டு நிறைய கிரிஸ்டல் செய்யலாம். எந்த புண்ணாக்க்கு மந்திரத்தையும் ஓத வேண்டியதில்லை.
அறிவியலை அவியலாகக் கேவலப்படுத்தாமல் இருந்தால் நல்லது. :-(((
எனது ஆதங்கம் அதுதான்.
.
.
கையேடு,
நீங்கள் சொல்வது ஸ்னோ கிரிஸ்டல். வானில் இருந்து கீழே வரும் தண்ணீரில் குளிர் ஏற்படுத்தும் மாற்றம் என்று நினைக்கிறேன்.
சும்மா டப்பாவில் தண்ணீரை வைத்துக் கொண்டு (சத்ய சாய் மேஜிக் வகையறா) முறைத்துப் பார்த்து அல்லது மந்திரம் ஓதி (நல்ல எண்ணங்கள்) கிரிஸ்டல் உண்டாக்க முடியுமா? ஆலம் பவுடர் போன்ற கெமிக்கல் இல்லாமல்?
.
இந்தப்பதிவில் ப்ரியன் என்பவர் சொல்லி இருப்பது....
http://blog.balabharathi.net/?p=179
-------------------
ப்ரியன் says:
March 31, 2009 at 5:52 pm
பாலா , 2003 ல் Indian Airforce இன்டர்வியூக்கு சென்ற நான் அங்கு 10 நாட்கள் தங்கி இருந்தேன்.ஏதோ ஒரு Ghat க்கு அருகில்தான் அறை , கங்கை 50-100 அடி தூரத்தில் ஆனாலும் கால் வைக்க தோன்றவில்லை.கங்கையின் முதல் அறிமுகமே தோல் உரித்த நிலையில் ஒரு மாடு மிதந்து சென்றதுதான்.
Indian Airforce இன்டர்வியூக்கு வந்திருந்த நண்பர்கள் சிலர் புட்டியில் கங்கை நீர் எடுத்திருந்தார்கள்.தமிழ்நாட்டுக்கு திரும்புகையில் அதில் புழுக்கள் , புண்ணிய நீராம் ;(
.
----------------------
.
Science-minded readers will appreciate the study done by Kristopher Setchfield
//While I respect Dr. Emoto’s desire to save the Earth’s water from contamination and pollution, unless he can produce a scientific paper and get it published in a scientific journal, I believe that he will continue to be ignored by the scientific community, and his claims will never be soundly proved or disproved. //
for more....
http://www.is-masaru-emoto-for-real.com/
.
ம்ம்ம்... மிகவும் தேவையான உரையாடல்தான் தருமி.
//கங்கையில் ebstein barr virus எனும் ஒரு முக்கியமான வைரஸ் இருப்பதாக படித்து உள்ளேன் //
மிக முக்கியமான விசயமாக படுகிறது. டாக்டர், தேடிக் கொடுங்க நேரம் கிடைக்கும் போது.
பனி மலைகளுக்கருகே சிறுகச் சிறுக பனிப்பாறைகள் உருகி தண்ணீரை ரிலீஸ் பண்ணிவிடும் இடத்திற்கு சென்றால் அது இருக்கும் நிறத்திற்கும், மணத்திற்கும் அப்படியே கீழிறங்கி ஊர்களை கடக்க, கடக்க அங்கிருக்கும் மக்கள் தொகை, நடாத்தும் கண் மூடித்தனமான மாசு ஏற்றங்கள் அதன் தண்ணீரின் நிறத்தையிம், குணத்தையிமே மாற்றிவிடும் என்பதில் என்ன சந்தேகம்.
நம்மூரில் எந்த தொழிற்சாலை கழிவுகள் முறையாக சுத்தகரிக்கப்பட்டு பிறகு ஆற்றுடனோ, கடலிலோ கலக்கப்படுகிறது என்கிறீர்கள்? இதெல்லாம் கையில மாக்னீஃபையிங் கண்ணாடி வைச்சிட்டு கிட்டே போனோம்... தண்ணீரை அள்ளி வாயிக்குள்ளர கொண்டு போக மாட்டோம்.
.
இணையத்தில் நாம் மட்டும் அல்ல பலர் இதை வைத்து சுவையான விவாதங்களை நட்த்தியுள்ளார்கள்... :-))))
உதாரணம்...
http://www.sciencepunk.com/2006/10/masaru-emoto/
அதில் எனக்குப் பிடித்தது...
//it’s not the job of scientists to go around debunking every stupid fakery that comes up. They have better things to do, like you know, finding a cure for cancer and building interplanetary rockets and stuff.
Science is about proving your own ideas, not coming up with an idea and insisting it is true until someone disproves it. ///
...
//People have redone the experiments and shown that they do not work, but crackpots believe whatever they want to believe and they will always find a way out of the arguments that people with brains that function properly put forward against such stupid claims. Personally, I worship the flying spaghetti monster I can *prove* he exists and everything.//
-------------
//சும்மா டப்பாவில் தண்ணீரை வைத்துக் கொண்டு (சத்ய சாய் மேஜிக் வகையறா) முறைத்துப் பார்த்து அல்லது மந்திரம் ஓதி (நல்ல எண்ணங்கள்) கிரிஸ்டல் உண்டாக்க முடியுமா?//
:) அதைத்தான் மேலே கேட்டிருக்கேன் அவர்கள் மந்திரம் ஓதிய வெப்பநிலை என்ன என்று?
அலும் துகள்கள் இல்லாமல் ஆய்வகங்களிலேயே உருவாக்கிப் பார்த்தும் இருக்கிறார்கள், ஆனால், வெவ்வேறு வாயுஅழுத்தங்களையும், வெப்பநிலைகளையும் மாற்றி. just to mimic the conditions of snow formation.
கையேடு..
//அதைத்தான் மேலே கேட்டிருக்கேன் அவர்கள் மந்திரம் ஓதிய வெப்பநிலை என்ன என்று?
அலும் துகள்கள் இல்லாமல் ஆய்வகங்களிலேயே உருவாக்கிப் பார்த்தும் இருக்கிறார்கள், ஆனால், வெவ்வேறு வாயுஅழுத்தங்களையும், வெப்பநிலைகளையும் மாற்றி. just to mimic the conditions of snow formation.//
:-)))))
அறிவியலின் சம்பாத்தியமான இன்டநெட் உதவியுடன் அதே அறிவியலை கேவலப்படுத்துவதுதான் தாங்கமுடியவில்லை.
என்னமோ போங்க அவர்களும் அவர்கள் தொழிலுக்கு அறிவிலைப்பயன்படுத்திக் கொள்ளட்டும்.
அறிவியல் என்ன வேதமா ஒருத்தருக்கு மட்டும் பயன்பட. இன்டர்நெட்டின் உதவியுடன் ஈபிராத்தானா செய்வோம்.
:-))
---------
கல்வெட்டு கொடுத்த தொடுப்பில் உள்ள கருத்துக்களைத் தமிழில் சிறிது தருகிறேன்:
இது எமோட்டொ செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை ஆராய்ந்த Kristopher Setchfield என்பவரின் கருத்துக்களில் சில ...
Kristopher Setchfield - எமோட்டொ போலவே மேலும் சில அறிவியல் நுட்பங்களோடு இந்த ஆராய்ச்சியை செய்து எமோட்டொவின் முடிவுகளைக் கண்டடையவில்லை.
* சரியான விஞ்ஞான முறையில் இந்த ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை.
* முக்கிய தவறுகள் நடந்துள்ளன. (சில தவறுகள் பட்டியலிடப்படுகின்றன.)
* James Randi Educational foundation இதுபோன்ற ஒரு ஆராய்ச்சியை செய்து காண்பித்தால் பரிசு உண்டு என்ற அதன் சவாலை எமோட்டொ ஏற்கவில்லை.
* தவறான ஓர் ஆராய்ச்சியை மக்களிடம் 'விற்பனை' செய்கிறார்.
* எமோட்டொ தான் தயாரித்த “geometrically perfect” “Indigo" தண்ணீரை 8 அவுன்சுக்கு $35 என்ற விலையில் இணைப்பு மூலம் விற்கிறார்.
..
In his blog..Emoto once answered a question about JREF and $ 1 Million Challenge. He admits that he refused the invitation to the Challenge.
Emoto says...
---
* It is still in the level of art or fantasy.
* He says it is impossible to perform a scientific experiment that will be approved by the scientists.
----
More to read ... @ randi.org
http://forums.randi.org/showthread.php?t=164976
--------------------
.
ஏமாறுவதற்கு ஆள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருந்து கொண்டுதான் இருப்பர். இதுபோல பல இருக்கு. இதையெல்லாம் யார் சரிபார்ப்பது? அதற்கு காலமும், உழைப்பும், பணமும் தேவை. சிலர் அதை செய்வது மகிழ்ச்சிதான். ஆனால், நாம் முதலில் ஏமாறாமல் இருக்க கற்று கொள்ள வேண்டும். எந்த ஒரு அசாதாரணமான விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர்பார்க்க பழகி கொள்ள வேண்டும் (அவர் எழுதிய முழுமையான ஆராய்ச்சி கட்டுரை எங்கே? அது எந்த தருக்க/காரண-காரிய அடிப்படையில் வேலை செய்கின்றது? குறைந்த பட்சம் எப்படிபட்ட தியரியை கொண்டு அதை விளக்க முடியலாம்? அது எந்த நிறுவப்பட்ட அறிவியல் பத்திரிக்ககை/ஏடு/இதலில் வெளியானது? அது எத்தனை முறை மற்றவர்களால் மறுபரிசோதனை செய்து சரிபார்க்கப் பட்டது?). தெளிவாக பார்க்கும் பலரின் பின்னூட்டங்கள் மகிழ்ச்சியை தருகின்றது.
மக்களே!
தயவு செய்து கல்வெட்டு கொடுத்த இந்த தொடுப்பை நீங்கள் கட்டாயம் வாசிக்கணும். PLEASE! Very informative and interesting ....... எல்லாம் நம்ம வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களின் தொகுப்புதானிவை.
*** ஸ்வாமி என்பது பேரா அல்லது பட்டம் போன்ற ஒன்றா? அது பட்டம் என்றால் ஒருவர் அதை எப்படி பெருகின்றார் (கண்டிப்பாக நான் பெருவதற்காக அல்ல :-) ஆனாலும், ஸ்வாமி கார்டெக்ஸ்ட் என்பது வித்தியாசமாகத் தான் இருக்கின்றது. ஸ்வாமி தருமி என்பது சுத்தமாக பொருந்தவில்லை என்பது என் அபிப்பிராயம் :-))
*** சில மாதங்களுக்கு முன் புத்தரை பற்றிய ஒரு ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது (http://ecortext.blogspot.com/2010/10/normal-buddha.html) (ஆங்கிலம்). வாழ்கை மிக வேகமாக ஓடுகின்றது. அதில் நம் குழந்தைகுட்டிகளை கரைச் சேர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகின்றது. அப்படியே குடும்ப, சமுக கட்டுபாட்டுக்குள் வாழ்ந்து...ஓடி... மடிந்து விடுகின்றோம். ஒரு சிலர் மட்டும் சற்றே நிதானித்து வாழ்கையை அலசிபார்க்கின்றனர். அப்படி பார்த்தால், வாழ்கையில் பெரிதாக அர்த்தம் எதுவும் இல்லாமலும், வாழ்கையில் பாதி வேதனையாகவும் (சிலருக்கு வாழ்கை முழுவதும் வேதனை தான்!) புலப்படுகின்றது. இப்பொழுது அதற்கான இரு பரவலான அணுகுமுறைகளை காணலாம். (1) இயற்கையே அப்படித்தான் என்றாலும், நம்மால் முடிந்த மட்டும் அனைவருக்கும் நல்ல வாழ்கை (உணவு, உடை, வீடு, சுகாதாரம்...) தரக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க முயற்சிக்கலாம் (நல்ல தலைவர்கள் அப்படித்தான் உருவாகின்றனர் என்று நினைக்கின்றேன்). (2) வாழ்கையிலிருந்து விலகி...ஓடி ஒளிந்து... வாழும் துறவு முறையை மேற்கொள்ளலாம் (இவர்கள் திருமணமின்றி நல்ல முறையில் நம்சமூகத்தில் வாழ இடமில்லாததால் வந்த வினையாகவும் அது இருக்கலாம். காமராஜர், அப்துல்கலாம் போன்ற ஒருசில விதிவிலக்குகள் உண்டு). இந்திய துணைகண்டத்தில், பெரும்பாலான அந்த-ஒரு-சிலர் இரண்டாவது முறையை தேடியதால்தான் இந்தியாவின் இன்றைய நிலையோ என்று நான் நினைப்பதுண்டு.
//தப்பே இல்லை; நமக்குப் பிடிச்சதாச்சே!//
தருமி ஐயா,
விவாதம் செய்ய நான் விரும்ப வில்லை என்றேன் :)) உங்களுக்கு பிடிக்கும் என தெரியாதா ;)
விவாதம் என்பது ஒத்த கருத்துக்களை முழுமையாக உணர்ந்து அக்கருத்துக்களை பற்றி ஆழ்ந்து விவாதிப்பது. அதை விடுத்து மேம்போக்காக அனைத்தையும் மறுதலித்து பேசுவது விவாதம் அல்ல.
இணையத்தில் விவாதிப்பவர்களை காட்டிலும் மறுதலித்து பேசி தன் மேதாவி என காட்டுபவர்களே அதிகம். விவாதம் சரியான திசையில் செல்லாமல் மற்றுத்து பேசுவதாக மட்டும் இருந்தால், “பெண்ணை கையப்பிடிச்சு இழுத்தியா” கதையாகிவிடும்.
19ஆம் தேதி நீங்கள் பதிவு இட்டுள்ளீர்கள், 20ஆம் தேதிக்குள் சகல பின்னூட்டத்தையும் போட்டாகிவிட்டது.
ஒரு நாளுக்குள் மாசரு எமோட்டோவை பற்றியும், அவரின் ஆய்வை பற்றியும் முழுமையாக படித்து அந்த ஆய்வு குப்பை என விமர்சிக்க வேண்டுமானால் இவர்கள் இரண்டு ஐன்ஸ்டின் அளவு அறிவு படைத்திருக்க வேண்டும்.
பதிவிட்ட நீங்களே எமொட்டோ படிக்க வேண்டும் என உங்களின் நிலையை விளக்கிய பொழுது பின்னூட்டமிட்ட இவர்கள் என்ன படித்தார்கள் புரியவில்லை.
ஒருவர் ஐஸ் கிருஸ்டலையும் எமொட்டோ எஃபக்டும் ஒன்று என்கிறார்.
ஒருவர் பவுடரை தூவி கிர்ஸ்டல் கொண்டுவா என்கிறார்.
நம் நோக்கம் என்ன கிர்ஸ்டல் உருவாக்குவதா?
இவர்களிடம் நான் என்ன விவாதம் செய்ய?
இக்கருத்தை ஒட்டி விவாதம் செய்ய வேண்டுமானால் இவ்விஷயத்தில் கீழ்கண்ட அனுபவம் இருக்க வேண்டும்.
1) எமோட்டோ எழுதிய லிவிங் வாட்டர் என்ற மின்புத்தகம் இலவசமாக கிடைக்கிறது. அதை ஒரு முறை படியுங்கள்.
2) கங்கை நீரை நீங்கள் எடுத்து வந்து வைத்திருந்து கெட்டு போகாமல் இருக்கிறதா என பார்த்திருக்க வேண்டும். அல்லது வைத்திருப்பவரிடம் சென்று பார்த்து வர வேண்டும்.
என்னிடம் 2007 முதல் 2010 வரை உள்ள கங்கை நீர் உண்டு விரும்பினால் வந்து பார்க்கலாம்.
ஸ்வாமியை விட்டவர் ஸ்வாமியை விட்டதில் தவறு இல்லை. பெயர் ஒரு அடையாளமே. என்னை எப்பெயரில் அழைத்தாலும் சந்தோஷம்.
திரு கல்வெட்டு,
காசியில் இருக்கும் கங்கையில் வெண்ணை கட்டிகளும், தேனும் மட்டுமே ஓடுகிறது பிணம் மிதப்பதில்லை என நான் எங்கும் கூறவில்லை.
இந்தியாவில் குடிநீர் வழங்கும் எந்த அணையிலும் பிணங்கள் இல்லை என நினைக்கிறீர்களா? சுத்திகரிக்கப்பட்ட நீரி என உங்கள் வீட்டிற்கு வரும் குடிநீர் 100% சுத்தமானதா?
நான் இங்கே கூற விரும்புவது பல அசுத்தங்கள் செய்ய முற்பட்டாலும் கங்கை நீரில் புளுக்கள் நெளிவதில்லை.இணையத்தில் எந்த ஒரு கருத்துக்கும் எதிர் எதிர் கருத்து கொண்ட சுட்டிகள் நிறைய கிடைக்கும்.
கங்கை நீரில் புளுக்கள் வராது என அனுபவ பூர்வமாக உணராமல் நீங்கள் இணைய சுட்டியை வழங்கி கருத்து சொல்லுவது வேடிக்கையானது. எவனோ ஒருவர் சொன்னான் அதனால் இது அப்படித்தான் என சொல்வது அறிவுப்பூர்வமானதா? இது தான் பகுத்து ஆய்வதா?
இது உங்கள் வழியானால் உங்களுக்கு சொன்னது போல எவனோ ஒருவனின் லிங்க் இதை எனக்கு உண்மை என சொல்வதாக கருதி இந்த கருத்தை இங்கே நிறைவு செய்கிறேன்.
எனக்கு நோபல் பரிசு வாங்கும் என்னம் இல்லை. வாங்கும் எண்ணம் வந்தால் சொல்லுகிறேன் அணாவிற்கு இரண்டு வாங்கி கொடுங்கள் :)
கடந்த 20 வருடத்திற்கு மேல் போராடிவரும் எமோட்டோவிற்கே எந்த மரியாதையும் கிடைக்க வில்லை. காரணம் அவர் கிழக்கு நாட்டில் பிறந்த விட்டார்.
இணையம் என்பது 70% ஆபாச இணைய தளம் நிறைந்தது என்கிறது புள்ளிவிபரம். இதை நம் வீட்டு குழந்தைகள் பயன்படுத்த தடை செய்வோமா?
நான் கங்கையின் தூய தன்மையை பார்க்கிறேன் நீங்கள் அதன் கழிவை பார்க்கிறீர்கள். நம் பார்வையில் தான் இருக்கிறது.
ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்பை மறுத்து பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதனால் ஐன்ஸ்டின் பொய்யரா?
ஒரு விஷயத்தை திறந்த மனதுடன் அனுகுங்கள், அதைவிடுத்து பதிவில் ஓம்கார் என்ற பெயரை பார்த்தவுடன் மரம் சீடி என ஏதோ கற்பனையில் பின்னூட்டமிட்டால் உங்களின் ஆழ்ந்த வாசிப்பு தெரிந்து விடும்.
சிறுவயதில் மடத்திற்கு போய் தண்டத்துடன் உலாவரும் மடாதிபதி அல்ல நான். ஆழ்ந்த அறிவியல் பின்புலம் கொண்டவன். பிறரை விட அறிவியல் தரவுகளை கொண்டு கேள்வி எழுப்பும் ஆற்றல் கொண்டவன்.
முதலில் ஆழ்ந்த வாசிப்புக்கு பின் வாருங்கள் நண்பரே..!
ஓம்கார்,
//ஒரு விஷயத்தை திறந்த மனதுடன் அனுகுங்கள், அதைவிடுத்து பதிவில் ஓம்கார் என்ற பெயரை பார்த்தவுடன் மரம் சீடி என ஏதோ கற்பனையில் பின்னூட்டமிட்டால் உங்களின் ஆழ்ந்த வாசிப்பு தெரிந்து விடும்.//
உங்கள் கருத்துப்படி எனக்கு ஆழ்ந்த வாசிப்பு இல்லை. (அது என்ன வாசிப்பு?அறிவியல் என்ன கதையா வாசிக்க? அறிவியல் என்பது அறிந்து கொள்வது. ).
நான் என்னை முன்னிறுத்தவில்லை. உங்கள் கருத்தை மறுக்கிறேன் அவ்வளவே.
இங்கே உரையாடுவதால் உங்களின் நம்பிக்கைகளை நான் மாற்ற முயற்சிக்கவில்லை. நம்பிக்கையாளர்களிடம் நான் பேசுவது இல்லை.
இந்த உரையாடல் உங்களின் சந்திப்பால் தோன்றியதாக இருக்கலாம். ஆனால் , கங்கையப் பற்றி, எமோட்டோ பற்றி உரையாடுவது என்பது ஓம்கார் என்பவரை நோக்கிய ஒன்று அல்ல.
தருமியின் பதிவில் (இன்னும் பல இடங்களில் கையேடு, தெகா, வால்பையன் , அனலிஸ்ட், கும்மி ,கார்டெக்ஸ்ட் பலரின் அறிவியல் பூர்வ உரையாடல்கள் உண்டு)
அறிவியலை நம்பிக்கை அவமதிக்கும் போது மிகவும் பயனளிக்கும் உரையாடல்கள் நடக்கும். அதனில் பங்கு கொள்ளவே நான் விரும்புகிறேன். மற்றபடி நம்பிக்கையாளர்களை நான் தவிர்க்கவே முயற்சி செய்வேன்.
யாராவது வாசிக்க நேரிட்டால் எமோட்டோ பற்றிய அறிவியல் கேள்விகள் இன்னும் அவரால் விளக்கப்படாமலேயே உள்ளது என்று அறியவே பல சுட்டிகள் கொடுத்துள்ளேன்.இணையத்தில் உரையாடும்போது இணையத்தில் இருந்துதான் சுட்டி கொடுக்க முடிகிறது. அது உங்களின் நம்பிக்கையை மாற்ற அல்ல. இதை வாசிக்கும் மற்றவர்களுக்கு தகவலாக மட்டுமே.
உங்களின் நம்பிக்கைளை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்க.
.
மன்னிக்கிற அளவுக்கு தப்பு பண்ணிட்டீங்களா, கல்வெட்டு!
ஓம்கார்,
நம்பிக்கையுள்ள நீங்கள் கங்கை நீர் கெடாது என்கிறீர்கள். இன்னொருவர் படம் போட்டுட்டு ரயிலிலேயே கங்கை நீர் கெட்டுப்போச்சு என்கிறார். இன்னொருவர் ஆய்வு செய்து B.O.D. & E.coli எண்கள் தருகிறார்.
இந்த மூன்றில் நம்புவதற்குரியது எதுவாக இருக்க முடியும் என்பதுதான் என் கேள்வி.
இத்தனை அழுகிய பொருட்கள் இருக்கும் நீர் எப்படி நல்ல நீராக இருக்க முடியும் என்பது என் கேள்வி.
//the Petri dishes were not sealed to prevent contamination or disturbance by the operator or environment;
these temperatures should produce mostly column crystals rather than plate crystals, yet not one of Emoto’s published photos show a column crystal. This makes Dr. Emoto’s data suspect
perform his tests in a double-blind fashion//
http://www.is-masaru-emoto-for-real.com/ -- என்ற இந்த ஒரு paper-ல் மட்டும் கொடுத்த சில எதிர்ப்புகளைக் கொடுத்துள்ளேன். அறிவியல் ஆராய்ச்சிகளில் இதுபோன்ற சில எதிர்ப்புகளைக் களைய வேண்டியது முதலில் ஆராய்தவரின் கடமைதான். இதை எமொட்டொ ஏற்கவில்லை.
இதை வைத்து நான் எதை நம்பலாம். சொல்லுங்கள்.
.
//தருமி
மன்னிக்கிற அளவுக்கு தப்பு பண்ணிட்டீங்களா, கல்வெட்டு!//
அறிவியல் ஆய்வுகளுக்கு உட்பட மறுக்கும் நம்பிக்கை சார்ந்த விசயங்களில் தெரியாமல் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்காகத்தான் மன்னிப்பு...எதாவது தெரியாமல் நடந்து இருந்தால்.
****
அனைவருக்கும் பொதுவான ஆற்றில், பிணத்தை போடும் வர்ணாசிரம நம்பிக்கைகளை கேள்வி கேட்காமல் அப்படி போட்டாலும் பாட்டில் நீரில் புழு வரவில்லை என்று சொல்பவரிடம் என்ன பேசுவது?
:-((((
டெட் சீ (http://en.wikipedia.org/wiki/Dead_Sea)யில் யாரும் மூழ்குவது இல்லை. அதற்காக அது புனித நிலம் என்றா சொல்லமுடியும்?
அது அளவுக்கு மீறிய உப்பால் வந்த அடர்த்தி அல்லது வேறு அறிவியல் காரணம் என்றுதான் ஆராய வேண்டும் அல்லவா? அதைவிடுத்து ஜோர்டான் சாமி சொக்கப்பன் துணை என்று நம்ப முடியாது அல்லவா?
***
இவரின் கூற்றை அப்படியே எடுத்துக் கொண்டாலும், தினமும் நூறு பிணங்களுக்குமேல் விழும் ஓடும் நதியில், அந்த இடம் மட்டும் அக்குவாமினரல் வாட்டராக இருக்க காரணமன பாக்டீரியா எது என்று கண்டறிய வேண்டுமல்லவா?
அதை "வர்ணாசிரம புனித பூமி, அதனால் அப்படி" என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. :-(((
***
சிறுவாணி நீரில் எறும்பு மொய்க்கும். அது அந்த நீரின் சுவை சார்ந்தது. அது போல அதை எலக்ட்ரிக் ஹீட்டரில் சூடாக்குவது கஸ்டம். அது அதன் கடத்து திறன் சார்ந்தது. அதை விடுத்து "சாடிவயல் சங்கரசாமியின் அருள்தான் சிறுவாணி தண்ணீரின் நிலமைக்கு காரணம்" என்றால் அது நம்பிக்கை. நாம் விலகி விடவேண்டும்.
***
ஓம்காரின் பதிவுகளில் பலமுறை பேசியுள்ளேன். நம்பிக்கை சார்ந்த பேச்சு அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படாதது என்று தெரிந்தவுடன் இப்போது அவரின் பதிவில் நான் உரையாடுவதை தவிர்த்துவிட்டேன்.
..
//அந்த ஆய்வு குப்பை என விமர்சிக்க வேண்டுமானால்//
அது குப்பையாக மட்டும் இருந்தால் பரவாயில்லை. தங்கள் பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வு கிட்டுமா என ஏங்கும், ஒன்றுமறியா அப்பாவி மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம்.
//ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்பை மறுத்து பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதனால் ஐன்ஸ்டின் பொய்யரா?//
அறிவியலில் தனிமனித வழிபாடென்று எதுவும் இல்லை. ஐன்ஸ்டின் தவறென்று அறிவியல் முறையில் எந்த குப்பனும் சுப்பனும் சொல்லாம்; சொல்லவும் முடியும். அதுதான் அறிவியலின் பலம். ஐன்ஸ்டின் ஒரு மேதைதான். ஆனால் அவர் சொன்னது அனைத்தும் சரியும் அல்ல. அவர் தன்னுடைய சார்பியல் சமன்பாட்டில் அண்டம் விரிவடையாமல் இருக்க (அப்படி இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார்) ஒரு மாறிலியை இணைத்தார். பிறகு, தான் செய்த மிக பெரிய தவறு அது என்று அவரே சொன்னார். ஐன்ஸ்டின் பொய்யரல்ல; ஐன்ஸ்டினின் சில கருத்துக்கள் தவறாக இருக்கலாம். தங்கள் சொந்த நலனுக்காக அறிவியல் பேரை தெரிந்தே தவறாகப் பயன்படுத்துவர்களும், அதற்கு உடன் போகுபவர்களும் பொய்யரே.
//கங்கை நீரில் புளுக்கள் வராது//
இது உண்மை என்றே வைத்து கொள்வோம். அப்படி என்றால் புளுக்கள் அந்த நீரில் வளர தேவையான உணவு அல்லது மற்ற உயிர்கள் அதில் இல்லாமல் இருக்கலாம்; அல்லது புளுக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் சில தனிமங்கள் போன்றவை அதில் இருக்கலாம். வேறு என்ன மாயஜாலத்தை எதிர்பார்கின்றீர்கள்? மற்ற எத்தனை ஆற்று நீரை எடுத்து வந்து இது போல் சோதனை செய்தீர்கள்.
//ஆழ்ந்த அறிவியல் பின்புலம் கொண்டவன். பிறரை விட அறிவியல் தரவுகளை கொண்டு கேள்வி எழுப்பும் ஆற்றல் கொண்டவன்.//
அறிவியல் முறை என்றால் என்ன? அந்த முறைகள் எப்படி இந்த ஆய்வுகளில் மேற்கொள்ளப் பட்டது என்று நீங்கள் அவற்றை நம்புகின்றீர்கள். நீங்கள் அறிவியல் பின்புலம் கொண்டவர் என கூறிக்கொள்வதால், தயவு செய்து அதை விளக்குங்கள்.
திரு தருமி ஐயா,
//அறிவியல் ஆராய்ச்சிகளில் இதுபோன்ற சில எதிர்ப்புகளைக் களைய வேண்டியது முதலில் ஆராய்தவரின் கடமைதான். இதை எமொட்டொ ஏற்கவில்லை.
இதை வைத்து நான் எதை நம்பலாம். சொல்லுங்கள்//
முதலில் இரண்டு கோணத்தில் இதை அனுகலாம்.
ஒன்று, எமோட்டோ ஆய்வு முழுமையான முடிவு என கூறவில்லை. அவர் மூலக்கூறில் மனித மனம் சார்ந்த உணர்வுகள் படிகிறது என்கிறார். ரூதர்போட்டு என்பவரே அனைத்து அனுக்கொள்கையையும் வெளியிடவில்லையே. அது போல படிப்படியாக எமோட்டோ ஆய்வு பின்னாளில் வரலாம். வாய்ப்பு உண்டு.
இரண்டு, ஒரு ஆய்வு பொய்க்கவேண்டும் என்பதற்காக பல ஏஜன்ஸிக்கள் செயல்படும். அவர்கள் வேண்டுமென்றே கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். அவற்றை எல்லாம் தீர்க்கவேண்டுமானால் அதுவே வாழ்க்கையாகிவிடும்.
முக்கியமாக நான் கூற விளைவது எமோட்டோவின் ஆய்வை அனைத்து விஞ்ஞானிகளும் முற்றிலும் நிராகரிக்கவில்லை. ஒரு சாரர் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இதுவே என் அனுகுமுறையாக இருக்கும் நான் உங்களிடத்தில் இருந்தால்..
திரு கல்வெட்டு,
உங்களை மன்னிப்பு கேட்க வைக்க அவ்வாறு நான் கூறவில்லை. மேலும் எதிர்வாதம் செய்ய பல யுக்திகள் உண்டு அதில் நீங்கள் தேர்ந்தடுத்தது எதிர்மறையானது என்பதையே சுட்டிக்காட்டினேன். அது எல்லா நேரத்திலும் நமக்கு அறிவையும் தகவலையும் வழங்காது.
ஒரே யுக்தியை அனைத்து விவாதத்திற்கும் பயன்படுத்துவது என்பது அரசு ஆஸ்பத்திரி கம்பெண்டர் பச்சை மாத்திரை வழங்குவதை போன்றது. என்னை போன்ற முற்றிய வியாதிகள் இதில் குணமாகாது. :)
மேலும் நம்பிக்கையும் விஞ்ஞானமும் வேறு அல்ல என்பது என் எண்ணம். நம்பிக்கை என்ற விதையிலேயே விஞ்ஞானம் என்ற விருட்சம் விளைகிறது.
இங்கே தகவல் கூறிய நண்பர்கள் கூட பின்வரும் வரியை சேர்த்திருக்கிறார் பாருங்கள்//ஐன்ஸ்டின் ஒரு மேதைதான். ஆனால் அவர் சொன்னது அனைத்தும் சரியும் அல்ல. அவர் தன்னுடைய சார்பியல் சமன்பாட்டில் அண்டம் விரிவடையாமல் இருக்க (அப்படி இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார்) ஒரு மாறிலியை இணைத்தார். பிறகு, தான் செய்த மிக பெரிய தவறு அது என்று அவரே சொன்னார்.//
ஆக ஐஸ்டினே நம்பிக்கையை வைத்து விஞ்ஞானத்தை கட்டி இருக்கிறார்.
ஓர் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் விஞ்ஞானம் நம்பிக்கை கோட்பாட்டில் செல்லும் பிறகு அந்த நம்பிக்கை மாறும் விஞ்ஞானமும் மாறும்
//ஆக ஐஸ்டினே நம்பிக்கையை வைத்து விஞ்ஞானத்தை கட்டி இருக்கிறார்.
இது மிக விஷமத்தனமான கருத்து. ஐன்ஸ்டீனின் நம்பிக்கை ஒன்றும் நம் மத நம்பிக்கை போன்றதன்று. அவரின் கணக்கு சரி வர அவர் ஒரு cosmological constant என்ற எண்ணை கொண்டு சமன் செய்ய வேண்டி இருந்தது. அப்படி ஒன்றை செய்ய முடியாமல் போய் இருந்தால் அண்டம் விரிவடையாது என்ற கருத்தை அவர் மாற்றி கொண்டு தான் இருக்க வேண்டும். அவர் வாழும் காலத்திலேயே இந்த cosmological constant என்பது தவறான ஒன்று என்று அறிவியலால் தெளிவாக்கப்பட்டு, ஐன்ஸ்டீனே என் வாழ்கையின் மிக பெரிய தவறு என்று சொல்லிய விஷயம் இது. நாம் நமது அபிலாசைகளுக்கு ஏற்ப எதாவது ஒரு புத்தகத்தை படித்துவிட்டு அது உண்மை என்று என்னும் நம்பிக்கை போன்றதில்லை அவரின் நம்பிக்கை. கணக்கு போட்டு அது சரி வர காட்டும் கடமை அங்கே இருக்கிறது. பிற்காலத்தில் வேறொரு அறிவியல் விளக்கம் நிருபவிக்கபட்டால் அதை ஏற்கும் நேர்மையும் இருக்கிறது.
இந்த பொறுப்பும், நேர்மையும் எமோட்டோக்கு, அவர் ஒரு உண்மையான விஞ்ஞானியாய் இருக்கும் பட்சத்தில், இருக்க வேண்டும். "Tests have to be done in double blind fashion" என்ற விமர்சனம் எழுமானால், அவ்விதம் செய்து அவரின் theory- ஐ நிருபவிக்கும் கடமை அவருடையதே. அதை விடுத்து "வேண்டும் என்றே கேள்வி எழுப்பும் அஜென்சிகள்", "பிற்காலத்தில் நிருபவிக்கபடும்" என்பதெல்லாம் வெறும் சப்பை கட்டு தான். Rutherford தியரியோ அவரின் Gold slit experiment -ஓ தவறு என்று எந்த விமர்சனமும் எழுந்ததில்லை. அவரை எமொடோ-வின் ஆய்வு பற்றிய விமர்சனத்துக்கு ஒப்பாய் காட்டுவது தவறு.
// ஆக ஐஸ்டினே நம்பிக்கையை வைத்து விஞ்ஞானத்தை கட்டி இருக்கிறார்.//
நான் கூறிய உதாரணம், அப்படியே தலைகீழ். விஞ்ஞானத்தை ஐஸ்டின் தன் நம்பிக்கையை வைத்து தவறு செய்து, பிறகு தன் தவற்றை ஒத்துக் கொண்டார். இதிலிருந்து கற்று கொள்ளும் விசயம் என்ன?
//நம்பிக்கை என்ற விதையிலேயே விஞ்ஞானம் என்ற விருட்சம் விளைகிறது.//
முதலில் விஞ்ஞானம் மரம் அல்ல விருட்சமடைய, அது ஒரு முறை (A systematic process). நம்பிக்கை என்ற விதையை விஞ்ஞான முறையில் வளர்த்தால் அது அறிதல்களை தரும்; அதையே குருட்டு முறையில் வளர்த்தால் அது மூடநம்பிக்கைகளை தரும்; அதையே ஏமாற்று/திருட்டு முறையில் வளர்த்தால் அது அயோக்கியதனங்களை தரும்.
(நம்பிக்கைகளின் மூலம்: http://icortext.blogspot.com/2009/11/blog-post.html)
//முக்கியமாக நான் கூற விளைவது எமோட்டோவின் ஆய்வை அனைத்து விஞ்ஞானிகளும் முற்றிலும் நிராகரிக்கவில்லை. ஒரு சாரர் ஏற்றுக்கொள்கிறார்கள். //
ஒரு விசயம் எந்த அளவிற்கு உண்மை என்பதை நீங்கள் உண்மையிலே அறிந்து கொள்ளும் தேடலை அது காட்டுகின்றது. அந்த ஒரு சாரர் யார் என்று சொல்கின்றீர்களா? அவர்கள் முகங்களையும் தெரிந்து கொள்வோமே.
//ஆழ்ந்த அறிவியல் பின்புலம் கொண்டவன். பிறரை விட அறிவியல் தரவுகளை கொண்டு கேள்வி எழுப்பும் ஆற்றல் கொண்டவன்.//
அறிவியல் முறை என்றால் என்ன? அந்த முறைகள் எப்படி இந்த ஆய்வுகளில் மேற்கொள்ளப் பட்டது என்று நீங்கள் அவற்றை நம்புகின்றீர்கள். நீங்கள் அறிவியல் பின்புலம் கொண்டவர் என கூறிக்கொள்வதால், தயவு செய்து அதை விளக்குங்கள் (நீங்கள் உண்மையிலே தூங்குகின்றீர்களா? அல்லது தூங்குவதுபோல் நடிக்கின்றீர்களா? என்பது எனக்கு தெரியாது. உண்மையிலே தூங்கினால் விளக்க முயற்சியுங்கள்... உங்களுக்குள்ளே செய்தால் போதும்... இங்கு எழுத வேண்டிய அவசியம் இல்லை... ஏனெனில் உங்களை சோதிப்பது என் நோக்கம் அல்ல... ஒருவேளை அது உங்களை தட்டி எழுப்பலாம்)
//அது போல படிப்படியாக எமோட்டோ ஆய்வு பின்னாளில் வரலாம். வாய்ப்பு உண்டு. //
அப்படி வந்ததும் நானும் உங்களைப் போல் எமோட்டொவை நம்பிவிடுவேன்.
//அவர்கள் வேண்டுமென்றே கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். அவற்றை எல்லாம் தீர்க்கவேண்டுமானால் அதுவே வாழ்க்கையாகிவிடும்//
கேள்விகளை எழுப்புவது நல்ல விஷயமல்லவா?!
கேள்விகளை எழுப்புவதும், பதில்களைப் பெறுவதும், மீண்டும் புதுக் கேள்விகளை எழுப்பி பதிலகளைத் தேடுவதும் தான் அறிவியல் வாழ்க்கை. இல்லையா?
விஞ்ஞானம் மனித இனத்திற்கு எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறது. ஆனால் விஞ்ஞானிகளும் மனிதர்கள்தாம். அவர்களுடைய கடைசி காலத்தில் பலவிதமான மனக்குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களுடைய அத்தகைய செய்திகள்தான் இவை.
நிறைய சொல்லலாம். ஏற்கனவே பலரும் நிறைய சொல்லிவிட்டார்கள். போதும்.
//அவர்களுடைய கடைசி காலத்தில் பலவிதமான மனக்குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். //
இங்கே யாருக்கு கடைசிக்காலம் ...
யாருக்கு மனக்குழப்பம் ......?
நம்பிக்கை அறிவியல் ஆகுமா?
அறிவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டே ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
நம்பிக்கையை சோதனை செய்து விட வேண்டியதுதான.
திரு எமோட்டோ நீரை படிமம் ஆக்கும் ஆராய்சிக்கு உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்.
அதன் விண்ணப்பம் அவருடைய இணையத்தளத்தில் உள்ளது.
அதன் சில முக்கியமான விதிகளை மட்டும் கூறுகிறேன்.
அ)
___________________
1. சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீர் மதம்,அல்லது மதவாதிகள் தொடர்புள்ளதாக இருக்க கூடாது.(நீருக்கு கூட தெரிஞ்சு போச்சா?)
2. நீரில் ஒரு குறிப்பிட்ட மனிதரின் பெயரோ,படமோ காட்டப் பட்டு இருக்க கூடாது.
3.இந்த நீரை மத பிரச்சாரமோ ,(4)யாரையாவது விமர்சிக்கவோ பயன்படுத்தக்கூடாது.
5. நீரில் தீங்கு விளைக்கும் பொருள்கள் கலந்து இருக்க கூடாது.
விதிகளை போட்டு விட்டார்.
______________
ஆ) அழையுங்கள் +81-3-3866-5353
__________
இ) மிகவும் முக்கியமான விவரம் இதற்கு ஆகும் செலவு ச்யஉமார் 50000 யென்கள்.(சுமார் 27000 ரூபாய்)
எனக்கு புரிஞ்சு போச்சு.
______________
இதுக்கு மேலே மொழி பெயர்ர்கும் அளவிற்கு பொருமை இல்லாத காரணத்தினால். அதை அப்படியே தருகிறேன்.
http://www.masaru-emoto.net/How%20to%20Order%20Water%20Crystal%20Photographs.pdf
All the best
//மரம் சிடி படிப்பதையும்
மந்திரம் சொல்லி தண்ணீர் படிகமாவதையும் ஏன் இன்னும் நோபலுக்கு அனுப்பவில்லை?//
சபரிமலையின் பதினெட்டுப்படிகளில் அபாணன் சக்தி மிகுந்து உள்ளது. அது ஆணின் சுக்கிலத்தையும், பெண்களின் கரு முட்டையையும் பாதிக்கக் கூடியது. இருமுடி கட்டிச் செல்வதால் ஆண்கள் பாதிப்படைவதில்லை. அபாணன் சக்தியிலிருந்து பாதுகாக்கும் பொருட்டே பெண்கள் (விலக்கடையும்) சபரிமலையில் அனுமதிப்பதில்லை.
இதையும் சேர்த்துக்குங்க.
.
http://www.masaru-emoto.net/How%20to%20Order%20Water%20Crystal%20Photographs.pdf
How to Order Water Crystal Photographs
//
Agreement
I agree that this experiment in your laboratory is based on Dr. Emoto’s Hado (vibration) theory, and it is different from biochemistry experiments or any other substance experiments ..//
இதையும் பாருங்கள்
இந்த ஆராய்ச்சி எந்த அறிவியல் சோதனைகளுக்கும் அடங்காத, எமட்டோவின் தியரிக்குமட்டுமேயான ஒன்று. தண்ணியக் கொடுத்து அவரது லேபில் (அங்க மட்டுமே) படமெடுத்துக் கொடுக்க
For example,
¥55,000 + remittance charge in case of 1 sample
¥105,000 + remittance charge in case of 2 samples.
¥155,000 + remittance charge in case of 3 samples.
இதில் காமெடி...
We cannot accept…
1) Water that relates to specific religions or religious persons.
2) Water that is exposed to a specific person's picture or name.
3) Water that will be used for advertising specific religions.
4) Water that will be used for criticizing something or somebody.
5) Water that contains dangerous substances.
தண்ணீரை மனிதன் பார்வையில் படாமல் (exposed to a specific person's picture or name) எப்படி எடுப்பது? ஒருவேளை ஆழ்துழை கிணற்றில் அப்படியே குழாயை விட்டு இருட்டில் எடுத்து இருட்டி லேபில் பயில் போட்டு அனுப்ப வேண்டுமா?
.
இந்த பதிவு பற்றி வீட்டில் பேசிக்கொண்டிருந்தேன். மகளும் தங்க்ஸும் ஆளுக்கொரு பாட்டில் தண்ணீர் கொண்டு வந்தார்கள் - எல்லாமே இரண்டு மூன்று ஆண்டுகளாக வீட்டில் ருந்து வரும் 'வேளாங்கண்ணி மாதா கோவிலில்' இருந்து எடுத்த வந்தது என்கிறார்கள்!!!!
இங்கும் தண்ணீர் சுத்தம்தான் ...
அடுத்த முறை மாதா கோவில் தண்ணீரோடு ஒரு பாட்டில் சாதா தண்ணீரை control- ஆக வைக்கணும்!
வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஆத்து தண்ணி சுவையாக இருக்க கவுண்டமணி சொல்லும் காரணம் ஞாபகம் வருகிறது!
பாலோ அப்புக்கு
விஞ்ஞானம் இன்று ஏற்றுகொள்ளும் ஒரு முடிவைப் பின்னாளில் பிழை என்று ஏற்றுக் கொள்ளும். ஆன்மிகம் சில முடிவுகளைக் கொண்டது. அதில் மாற்றங்களும் இல்லைப் பிழைகளும் இல்லை. சில இடைச் செருகல்கள் உங்களுக்கு தவறான தகவல்களைத் தந்திருக்கலாம். இந்தக் காலத்தில் சில பதிவர்கள் போல அந்தக் காலத்திலும் சிலர் வாழ்ந்திருக்கிறார்கள் அவர்களின் கைங்கரியமே இந்த இடைச் செருகல்கள். நம்மில் சிலர் தங்களை அதி புத்திசாலிகளாக நினைப்பதுதான் குழப்பங்களுக்கு காரணம். உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள் எதிர்வாதம் புரியவேண்டும் என்று சிந்திப்பதால்தான் தேவை அற்ற தர்க்கங்களால் உங்களைச் சுற்றி மாய வலை பின்னி இருக்கிறீர்கள்.
அறிவியல் என்பது முடிந்த முடிவு அல்ல
vanakkamradio
உங்கள் பின்னூட்டம் யாருக்கு எதற்கு என்று தெரியவில்லையே!
தருமி சார், நலமா? ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல விவாதத்தை ஸ்வாமி வழக்கம் போல மற்றவர்களை குறை சொல்லி முடித்து விட்டார்.
//ஓம்கார் : அதைவிடுத்து பதிவில் ஓம்கார் என்ற பெயரை பார்த்தவுடன் மரம் சீடி என ஏதோ கற்பனையில் பின்னூட்டமிட்டால் உங்களின் ஆழ்ந்த வாசிப்பு தெரிந்து விடும்// மரம் சி.டி. படிக்கும் என்று சொன்னது தாங்கள் தானே அய்யா? எப்படி கற்பனை என்கிறீர்கள்? கல்வெட்டு சொன்னதற்கு உங்களுடைய பதிலை ஒரு முறை படித்துப் பாருங்கள். ஒருவர் மேடையில் இருந்து சொல்லும் எல்லாவற்றையும் கீழே இருப்பவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதற்கு பதிவுலக விவாதம் என்பது சத் சங்கம் அல்ல.
//ஆழ்ந்த அறிவியல் பின்புலம் கொண்டவன்// ஒரே காமெடி ஸ்வாமி. அந்த பின்புலத்தை வைத்து சொன்னதை அறிவியல் பூர்வமாக விளக்க வேண்டும். இப்படி எதிர் காலத்தில் நடக்கலாம் என்று அருள் வாக்கு சொல்லக் கூடாது.
என்னுடைய கருத்தின் படி ஸ்வாமிகள் மிகவும் சொல்வது ஆழமில்லாத நுனிப்புல் வகையைச் சேர்ந்தது. மேலதிக விளக்கம் கேட்டால் கேட்பவரைக் கொச்சைப் படுத்துவார். இதற்கு பின்னூட்டத்துக்கு அவருடைய பதில்களே சாட்சி. நானும் இறை நம்பிக்க உடையவன் தான். ஆனால் மரம் சீ.டி. படிக்கும் என்று நம்பும் அளவுக்கு அல்ல. இதே போல எதற்கு வேண்டுமானாலும் சப்பை கட்டு கட்டலாம்.
//மரம் சீ.டி. படிக்கும் //
இப்பதிவு எங்கிருக்கிறது? தேடினேன் .. க்ண்டடையவில்லை... உதவுங்கள்
தருமி சார்,
மரம் சீ.டி. படிக்கும் மரத்தின் அருகில் சி.டி. யைக் காட்டியவுடன் அதில் இருக்கும் அனைத்தையும் மரம் படித்து சேமித்து வைக்கும் என்று ஸ்வாமி எழுதி இருந்தார். அவை அனைத்தையும் கவனமாக நீக்கியுள்ளார் (புத்தி சாலி). ஆனால் கல்வெட்டின் பின்னூட்டங்களில் இது பற்றிய குறிப்பு இருக்கும். இவைகளை படித்துப் பாருங்கள்.
http://vediceye.blogspot.com/2009/10/7.html
http://vediceye.blogspot.com/2009/11/11.html
ஸ்வாமியின் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை அவரின் பதில் மொழியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மரம் சி.டி. படிக்கும் என்று எழுதிவிட்டு, அதை பதிவில் இருந்து அழித்தும் விட்டு, அதை குறிப்பிட்டு கேள்வி எழுப்புவதற்கு வெகுவாக தடித்த தோல் வேண்டும்.
ஸ்வாமி: //இணையத்தில் விவாதிப்பவர்களை காட்டிலும் மறுதலித்து பேசி தன் மேதாவி என காட்டுபவர்களே அதிகம்// இவர் என்ன செய்கிறார்? அல்லது இவர் மட்டும் அதை செய்யலாமோ?
கண்டு பிடித்து விட்டேன் தருமி சார். அவர் நீக்கியிருக்கிறார் என்று தவறாகப் புரிந்து கொண்டேன். மன்னிக்கவும்.
http://vediceye.blogspot.com/2009/10/7.html
//ஒருவர் ஐஸ் கிருஸ்டலையும் எமொட்டோ எஃபக்டும் ஒன்று என்கிறார்.//
ஓம்காருக்கு,
இப்போதுதான் வாசித்தேன்.
இணையப் பெருவெளியில் இருக்கும் குப்பைகளில் இருந்து சுட்டி கொடுக்கும் என்னைப் போன்றோருக்கு.. ஆழ்ந்த அறிவியல் பின்புலமும் வேதக்கண் கொண்டு நோக்கும் உங்களைப் போன்றோர்தான் விரிவாக விளக்க வேண்டும்.
இங்கே எதையும் விளக்காமல் கேள்வி கேட்கிறார்கள் என்று மட்டுமே விசனப்பட்டால் எப்படி.
எமோட்டோவைப் பற்றி கேள்வி கேட்டால் போய் எமோட்டோவைப் படி என்பது பதிலாக இருக்குமாயின், நான் அதையும் இணையத்தில் இருந்துதான் படிக்க வேண்டும்.
ஆனால் எனக்குக் கிடைக்கும் சுட்டிகள் எல்லாம் எமோட்டோவின் எதிரிகளின் சுட்டிகள் ஆனால் உங்களுக்கு மட்டும் எமோட்டோவின் அறிவியல் கண்டுபிடிப்புச் சுட்டிகள் என்றால் எப்படி..
பரிணாமம் பொய்யென்பதற்கான ஆதாரம் இணையத்தில் கிடைக்கும் என்று எழுதினீர்கள். கிடைக்கவில்லை, அதனால் விளக்குங்கள் உங்களுடன் சேர்ந்து புரிந்துகொள்கிறேன் என்றேன்.. இன்னமும் உங்களுக்கு காலம் வாய்க்கப் பெறவில்லை. இப்போது அடுத்தது.. எமோட்டோவின் ஆய்வுகளை ஆழ்ந்து புரிந்து கொண்டுள்ள நீங்கள் விளக்குங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்..
இன்னா பேஸ்றீங்க கையேடு?
//சிறுவயதில் மடத்திற்கு போய் தண்டத்துடன் உலாவரும் மடாதிபதி அல்ல நான். ஆழ்ந்த அறிவியல் பின்புலம் கொண்டவன். பிறரை விட அறிவியல் தரவுகளை கொண்டு கேள்வி எழுப்பும் ஆற்றல் கொண்டவன்.
முதலில் ஆழ்ந்த வாசிப்புக்கு பின் வாருங்கள் நண்பரே..!// இப்பேர்ப்பட்ட ஆற்றல் கொண்டவரை கேள்வி கேட்கலாமா? அவர்தான் எதிர் காலத்தில் வரலாம் என்கிறாரே, அதன் பிறகும் கேட்டால் எப்படி? ஒரே பிரச்சினை அருள்வாக்கு என்று சொல்லாமல் அறிவியலை துணைக்கு அழைக்கிறார். ஆழ்ந்த வாசிப்புக்குப் பிறகு மரம் சி.டி படிக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதுவும் கிட்டக்க கொண்டு போனவுடனேயே. அதைப் படித்து விட்டு அவரை புகழ்வதை விட்டு விட்டு இப்படி கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது ஆமா.
மந்திரம் மாயமெல்லாம் இல்லை, மனதை ஒருமுகப் படுத்தும் கலை... என்னை பொறுத்தவரை ஒரு மனிதனின் மூளை சக்தி வாய்ந்தது, நமக்கு அதை உபயோகிக்கும் கலை தெரியவில்லை..தெரிந்தவர்களோ காசு சம்பாதிக்க அதை பயன்படுத்துகிறார்களே தவிர நல்லா விஷயத்திற்கு பயன்படுத்துவதில்லை..
Post a Comment