Friday, December 31, 2010

465. எந்த மதக்காரனாக இருந்தால் என்ன ...

*

சமுதாய நலனுக்காக தொடர்ந்து PLURAL INDIA என்ற தன் வலைப்பூவில் எழுதி வரும் பேரா. ராம் புனியானி (Ram Puniyani)எழுதிய கட்டுரை ஒன்றின் சில பகுதிகள் தமிழில் …





நியாயமான ஒரு கேள்வியைக் கேட்பது
நிச்சயமாக நாட்டுக்குத் தீங்கில்லை.


26/11 அன்று நடந்த மும்பைத் தீவிரவாதத்தின் பெருங் கொடுமைகளில் மலேகாவுன் வெடிகுண்டு வெடிப்பைத் துப்பு துலக்கி வந்த நம் காவல்துறையின் ஹேமந்த் கர்காரே உயிரிழந்ததும் ஒரு பெரிய சோகம். அவருக்கு ஏற்கெனவே பல அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்துள்ளன. இதற்கு மகாராஷ்ட்ர அரசிடம் தேவையான சான்றுகளும் உண்டு. இந்த அதிகாரியின் மரணத்தைப் பற்றிப் பேசுபவர்கள் இந்து மதத்தின் எதிரிகள் அல்லது பாகிஸ்தானின் ஆதரவார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பலரும் முயலுவதுண்டு. நடந்த பலவற்றை மறைக்கவே இந்த முயற்சி.

தான் கொல்லப்படுவதற்கு முந்திய நாள் கர்காரே தன்னுடன் பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். அன்று இந்துத்துவவாதிகள் தன்னை மிகவும் நெருக்கி வருவதாக கார்கரே  கூறியுள்ளார். இதை மறைக்க சிவசேனாவும் பி.ஜே.பி.யும் பெரும் முயற்சிகள் எடுக்கின்றன. இந்த அதிகாரியின் மேல் பல குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருகின்றனர். நரேந்திர மோதி கர்காரேயை ஒரு தேசத்துரோகி என்றும் குற்றம் சாட்டினார். அதன்பின் அவர் அளித்த ஒரு கோடி ரூபாயை வாங்கிக்கொள்ள கர்காரேயின் மனைவி மறுத்து விட்டார்.

இச்சூழலில் கர்காரே தனது மதிப்புக்குரிய பழைய காவல் அதிகாரி ஜூலியோ ரெட்பேரோவை நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். அத்வானி – மோடி கொடுத்துவரும் தொல்லைகளைப் பற்றி அவரிடம் பேசியுள்ளார். ரெய்பேரோ, “தன்னைப் புரிந்து கொள்ளும் ஒருவர் வேண்டும் என்ற ஆதங்கத்தோடுதான் கர்காரே என்னிடம் வந்தார்” என்று சொல்லியுள்ளார். வேண்டுமென்றே தான் ப்ரக்யா சிங் தாக்கூரின் மீது பழி போடுவதாக பி.ஜே.பி. முனைந்து செயல்பட்டு வந்துள்ளதாக கர்காரே வருத்தப்பட்டுள்ளார் என்றும் ரெய்பேரோ சொல்லியுள்ளார்.

இப்போது தாக்கூருக்கும், சங் பரிவாருக்கும்,அதன் தலைவர்களான இந்த்ரேஷ் குமார், ஸ்வாமி அசிமாநந்தா இவர்களுக்கும் ஆஜ்மீர் மெக்கா மஜீத்தின் வெடிகுண்டு வெடிப்புக்கும் உள்ள தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ஆனால், எந்த வெடிகுண்டு வெடிப்புகளை ஒட்டியும் அவை ஜெகாதி குழுக்களால் நடத்தப்பட்டவைகள் என்ற தலைப்புச் செய்திகள்தான் நமது ஊடகங்களில் மிகவும் பிரபலம். மும்பைத் தாக்குதல் அல்-கொய்தாவின் மூலம என்பது உண்மையாக இருப்பினும், மற்ற பல வெடிகுண்டு நிகழ்வுகளில் தாக்கூர், இந்த்ரேஷ் குமார், ஸ்வாமி அசிமாநந்தா போன்றோர் நம் தேசிய ராணுவத்திலிருந்த Lt. Colonel ப்ரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் போன்றோருடன் செய்த சதிகள் என்பதும் தெரிய வருகின்றன. ஆனாலும் திக் விஜய் சிங், அந்துலே போன்றோர் இவைகளைக் கோடிட்டு காட்டிய பின்னும் காங்கிரசும் இன்னும் இதை நம்பத் தயாராக இல்லை.

இன்றைய தேவை முழுமையான, தீவிரமான புலன்விசாரணகளும் எம்மதத்தாராக இருந்தாலும் குற்றம் புரிந்தோருக்கான சரியான தண்டனைகளும்தான். இதனைக் கேள்வி கேட்போரெல்லாம் பாக்கிஸ்தானிய ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு பொருளற்றது.

இக்குற்றங்களைச் செய்தவர்களை எதிர்ப்போரெல்லாம் இந்து மதத்திற்கு எதிரிகள் என்பது உண்மைக்குற்றவாளிகளை மறைக்கத்தான் பயன்படுமேயொழிய வேறு பயனில்லை. குற்றம் செய்தவர்களைப் பற்றிப்பேசும் போது அவர்கள் சார்ந்துள்ள மதங்களைப் பார்க்க வேண்டியதில்லை.
---------------------------------------

என்ன பெரிய மாற்றம் நம் நாட்டில் வந்துவிடப் போகிறது. 
இருந்தாலும் ....
வரும் புத்தாண்டு இனியதாக எல்லோருக்கும் இருக்க என் வாழ்த்துக்கள்.















19 comments:

Thekkikattan|தெகா said...

//குற்றம் செய்தவர்களைப் பற்றிப்பேசும் போது அவர்கள் சார்ந்துள்ள மதங்களைப் பார்க்க வேண்டியதில்லை. //

அப்படியா நடக்கிது இங்கே? இதுக எல்லாம் பிரச்சினையை தூண்டி விட்டு அது மூலமா தன் பொழைப்பை நடத்தப் பாக்குதுகள், அதில கர்காரே போன்ற நேர்மையான அதிகாரிகள் பகடைக்காய்களாக உருட்டப்பட்டு கொலையுண்டும் போகிறார்கள்...

//என்ன பெரிய மாற்றம் நம் நாட்டில் வந்துவிடப் போகிறது. //

ம்ம்ம் எவ்வளவு பார்த்திருப்பீங்க உங்க அனுபவத்தில!? என்னவோ வருஷக் கடைசியில இப்படி ஒரு பதிவு...

உமர் | Umar said...

//ம்ம்ம் எவ்வளவு பார்த்திருப்பீங்க உங்க அனுபவத்தில!? என்னவோ வருஷக் கடைசியில இப்படி ஒரு பதிவு..//

கடைசி மூணு வரிகள்ளையும் font size கவனிச்சீங்களா?

Unknown said...

நேற்றும் இன்றும் போல் நாளையும் மற்றுமொரு நாள்தான் எனினும் நன்மையையே எதிர்நோக்கி நம் கால்களை நகர்த்துதலில் மன அமைதியோடு புத்துணர்ச்சியும் வரலாம்.

suneel krishnan said...

ஸ்வாமி அசிமாநந்தா-இவரு இசாக் அசிமோவ் அவர்களுக்கு சொந்தம் போல :)
புத்தாண்டு நல வாழ்த்துக்கள்

hariharan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

மதுரை சரவணன் said...

HAPPY NEW YEAR.

//என்ன பெரிய மாற்றம் நம் நாட்டில் வந்துவிடப் போகிறது. //

ETHIRPARPU POORTHTHI ADIYA VAALTHTHUKKAL.

தருமி said...

தெக்ஸ்,
கும்மி,
சுல்தான்,'
dr suneel krishnan,
ஹரிஹரன்,
மதுரை சரவணன்,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

தருமி said...

மதுரை சரவணன்
// ETHIRPARPU POORTHTHI ADIYA VAALTHTHUKKAL.//

அடப்பாவமமே,
இப்படி ஒரு பெரிய சாபம் கொடுத்திட்டீங்களே...!

கார்த்திகைப் பாண்டியன் said...

என்னைக்காவது மாறும்கிற நம்பிக்கைல தானேங்கய்யா வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.. பார்ப்போம்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//குற்றம் செய்தவர்களைப் பற்றிப்பேசும் போது அவர்கள் சார்ந்துள்ள மதங்களைப் பார்க்க வேண்டியதில்லை. //
உண்மைதான்.ஆனால் இங்கே குற்றம் செய்தவர் யார் என்பது மட்டுமே முக்கியம்.அரசியல்வாதி செய்தால் தவறில்லை.மற்றவர்கள் செய்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும்.மக்கள் இலவசங்களையும், காசையும் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறவரை எதையும் மாற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.கல்வி ஒன்றுதான் இதை மாற்றும் என்று இதுநாள் வரை நம்பிக் கொண்டு இருந்தேன் .அதுக்கும் வெச்சாச்சு ஆப்பு.எல்லாரும் பத்தாங் கிளாஸ் வரைக்கும் பாஸாம்.முடிஞ்சது கதை.விளைவு என்னவென்று யோசித்துப் பார்த்தால் தெரியும்.

தருமி said...

//கல்வி ஒன்றுதான் இதை மாற்றும் என்று இதுநாள் வரை நம்பிக் கொண்டு இருந்தேன் .அதுக்கும் வெச்சாச்சு ஆப்பு.எல்லாரும் பத்தாங் கிளாஸ் வரைக்கும் பாஸாம்//

பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணின புத்திசாலிகள் எல்லோரும் கரீட்டா ஓட்டு போட்டுர்ராங்களா என்ன..?

:(

yasir said...

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

கபீஷ் said...

திக்விஜய்சிங்க்கு கார்கரே பேசினத ப்ரூவ் பண்ண முடியல நேரத்துக்கு ஒரு பொய் சொல்லி மாட்டிகிட்டார்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

கபீஷ்,
//With this statement of his a hell broke loose and section of media tried to project as if Digvijay Singh’s statement is not true as Karkare was busy in such and such meetings. Now that does not cut much ice in today’s times when people are eared to the mobiles, and few minutes of conversation between meetings or during meetings is not a big deal.

Mr Singh also gave the Bhopal BSNL the number from which he had talked to Karkare but since the conversation took place over two years earlier, the record could not be traced as BSNL does not keep records beyond one year. Mr. Singh also showed the cuttings of papers which had carried this news at some time ago.//

//ஒரு பொய் சொல்லி மாட்டிகிட்டார்.//
what could be the motive for this? is it the only 'proof' for Karkare's death/murder?

கபீஷ் said...

முதல்ல ஷுட்டிங் நடக்கற முன்னாடி பேசினேன்னு சொன்னார்.அப்புறம் ரெண்டு வருசம் முன்னாடி ரிகார்ட் எல்லாம் இருக்கு(டெலிகாம் ப்ரொவைடர் கிட்ட) அப்புறம் அவர் பேசினத (என்ன மேட்டர்னு) ப்ரூவ் பண்ண முடியல.

கபீஷ் said...

//is it the only 'proof' for Karkare's death/murder?//

வேற என்ன இருக்கு? யார் கொன்னாங்க கார்கரேய?

suvanappiriyan said...

Dharumi Sir!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தருமி said...

long time .. no see, சுவனப்பிரியன்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

வாழ்த்துக்கள் - தப்பு என்கிறார் இலவசம்.

Post a Comment