’புதிய தலைமுறை’ வந்த பிறகு செய்திகள் கேட்பது கொஞ்சம் அதிகமாகி விட்டது. நேற்று - 9.செப்ட். ஒரு செய்தி கேட்டேன். இன்று தினசரியில் வருமா என்று எதிர்பார்த்தேன். அந்த செய்தி வரவில்லை. (செய்திகளை முந்தி தருகிறது புதிய தலைமுறை ..!!)
நேற்றைய செய்தியில் ப்ரணாப் முகர்ஜி சொன்ன செய்தி ஒன்று வந்தது. ஜன லோக்பாலில் சொல்லியாகி விட்டது - அடிப்படை அரசு ஊழியர்களுக்கும் இந்த சட்டத்தில் இடமுண்டு என்று. அதனால் மத்திய அரசு புதியதாக மார் தட்டிக்கொண்டு ஒரு சட்டம் கொண்டு வரப் போகிறதாம். அடிப்படை நிலை ஊழியர்கள் தங்கள் பதவிக் காலத்தில் ஊழல் செய்யலாம்; எந்த அளவு ஊழல் செய்கிறார்களோ அதன்படி அவர்களது பதவி இறுதிக்காலத்தில் வரும் மொத்தப் பணத்தில் சில ‘டிஸ்கவுன்ட்’ செய்யப்படும் என்று ஒரு சட்டம். செய்தியில் பார்த்த வரிகள்: சிறிய அளவில் ஊழல் செய்தால் இறுதிப் பணத்தில் 10%, அதிக அளவில் ஊழல் செய்தால் 20% எடுக்கப்படும்!
அடப்பாவிகளா! -- இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. யார் பெரிய மடையர்கள் என்று புரியவில்லை. எனக்கு வரும் வேலை முற்றுப் பணம் 10 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நான் முதலில் இருந்தே “ஒழுங்காக” கணக்கு வைத்து ஊழல் செய்ய வேண்டும் போலும். 10 question paper விற்றால் 10% = 1 லட்சம் எடுத்துக் கொள்வார்கள்; அப்போ நான் விற்கும் ஒரு question paperக்கு பத்தாயிரத்திற்கு மேல் விலை வைக்க வேண்டுமோ? பெரிய ஊழல் செய்ய வேண்டுமென்றால் ஒரு கல்லூரி வாத்தியார் என்ன செய்ய முடியும்னு தெரியலையே! சரி ... அப்படி ஒரு பெரிய ஊழல் செய்யணும்னா .. அது இரண்டு லட்சத்திற்கு மேல் வருமானம் வர்ர மாதிரி செய்யணும். எல்லாம் நல்லா யோசித்து ப்ளான் பண்ணணும் ! அப்போதான் ‘வரவுக்கும் செலவுக்கும்’ சரியா இருக்கும்.
சரி ... கடைநிலை ஊழியருக்கு இப்படி ஒரு தண்டனை. ஒரு அமைச்சன் கோடி கோடியாக ஊழல் செய்தால் அவனை என்ன செய்வார்கள். (மிஞ்சிப் போனால் நாலைந்து மாதம் ஏதாவது ஒரு சிறையில் வைத்து விட்டு அதன் பின் விடுதலை ... ஊழலில் திரட்டிய சொத்து ... அதை என்ன செய்வார்கள்? ஒன்றுமே செய்யவே மாட்டார்கள். அனைத்து சொத்தும் அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் ....
என்ன மடத்தனமான திட்டம். ஊழல் செஞ்சா தண்டனை உண்டு; சாதாரணமாக வரவேண்டிய பணம் எதுவும் வராது; ... இப்படி ஏதும் சொன்னால் ஒரு பயம் இருக்கலாம். மக்கள் கொஞ்சம் ஒழுங்காக இருக்க முயலலாம். ஆனால் இந்த அரசு பட்டியல் போடுவது மாதிரி போட்டால் என்ன லாபமோ தெரியவில்லை; இந்த சட்டத்தைக் கொண்டுவந்த அந்த ‘அதீத புத்திசாலியை’ என்ன சொல்லி வாழ்த்துவது; இதை ஏற்றுக் கொண்ட அரசையும், அமைச்சரையும், அதிகாரிகளையும் என்ன சொல்லி வாழ்த்துவது என்றும் புரியவேயில்லை.
வெட்கக்கேடாக இருக்கிறது.
======================
சில செய்திகள் வருகின்றன -- 2G ஊழலுக்கு பாடை கட்டியாகி விட்டது என்பது அந்தச் செய்தி.
2G ஊழலில் ராசாவும் கனிமொழியும் மன்மோகன், சிதம்பரம் பெயர்களை இழுத்ததும் மெல்ல மத்திய அரசு இதைப் பூசி மெழுகப் பார்க்கிறதாமே. C.B.I. ஒரு தகவல் தருகிறது; இந்த அமைப்பு இது வரை யாரையேனும் உருப்படியாக கழுவேற்றியுள்ளதா என்பதே ஒரு பெரிய கேள்வி. இதோடு C.A.G.சில தகவல்கள் தந்தன. ஆனால் இப்போது T.R.A.I. புதிய தகவல்களோடு வருகின்றன. 2G ஊழலில் அரசுக்கு ஏதும் நட்டமேயில்லை என்று ஒரு பெரும் போடு போடுகிறது.
ஆக, சீக்கிரம் ராசாவும், கனிமொழியும் எந்த ஊழலும் செய்யாதவர்கள் என்ற பட்டியலில் வெளிவருவார்கள்.
வெட்கக் கேடாக இருக்கிறது .......
=======================
மதுரையில் போன வாரத்தில் செய்தித் தாளில் வந்த செய்தி: வண்டிகளில் number plates சரியான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் தண்டனை என்று செய்தி.
சட்டம் என்று சொல்லி விட்டார்களே என்று யாராவது சரியாக எழுதாத தங்கள் வண்டி எண்களை மாற்றுகிறார்களா என்று பார்த்தால் அப்படி யாரும் இல்லை; அரசு ஒரு சட்டம் என்று ஒன்றைக் கொண்டு வந்தால் மக்கள் அதை நடைமுறைப்படுத்தினால் நல்லது. ’அட .. போங்கய்யா .. நாலைந்து நாளைக்கு போலீஸ் தேடும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டால் பிறகு என்ன’ என்ற மனப்பான்மை நம்மில் அநேகருக்கு.
ஏன் நாம் மட்டும் இப்படி சட்டங்களை மதிக்காத மாக்களாக இருந்து தொலைக்கிறோம் ...?
நம்ம ஊர் மக்களை நான் நல்லாவே பார்த்து விட்டேன். சட்டம் என்றால் மதிக்கும் மனப்பான்மையே கிடையாது. ஆனால் அரசு கொஞ்சம் ‘கையை ஓங்கினால்’ அனைத்தும் சரண்டர்! இரண்டு சான்றுகள்: இந்திராவின் அவசரகாலச் சட்டத்தில் நம் தமிழ் மக்கள் அடைந்திருந்த முட்டாள்தனமான அடிமைத் தனத்தைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். உதாரணமாக, மூன்று முறை வேலைக்குத் தாமதமாக வந்தால் தண்டனை என்று ஒரு பேச்சு - வெறும் பேச்சுதான் - அடிபட்டது. அடேயப்பா ... மக்கள் பதறிப் போய் சரியான காலத்திற்கு அலுவலகம் வந்தது எனக்கு ஒரு அவலமாகப் பட்டது. இது போல் நம் தமிழ் நாட்டில் நடந்தவைகளைப் பார்த்த போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்: இந்த மக்களுக்கு முதுகெலும்பு என்பதே கிடையாது; வெறும் பூச்சிகள் .. புழுக்கள். வெட்டு வீராப்புகள்.
மதுரையிலேயே இன்றும் நடக்கும் ஒரு வழக்கம். சாலையில் ஒரு சண்டை என்று வைத்துக் கொள்ளுங்கள். யாராவது ஒருவன் ‘ஏய் .. ஆள் தெரியாம விளையாடாதே!’ என்று அடுத்தவனைப் பார்த்து முதலில் எவன் சொல்கிறானோ அவனே வின்னர்!
இரண்டாவது சான்று: ஜெயலலிதா மழைநீர் வடிகால் திட்டம் நல்ல ஒரு ‘பய முறுத்தலில்’ அழகாக நடந்தேறியது.
நமக்கு எது சரி அதன்படி நடக்க வேண்டும்; கம்பெடுத்தால் மட்டும் ஆடக்கூடாது; சட்டம் என்று ஒன்றிருந்தால் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் ... இப்படியெல்லாம் நமக்கு எப்போது தோன்றும்????????
*
18 comments:
கம்பெடுத்தால் ஆடும் குரங்கின் பரம்பரை அல்லவா.
ஒரு திட்டமும் தடி எடுக்காவிட்டால் நடக்கச் சாத்தியமே இல்லை.
அகிம்சையை நம்பிய தலைமுறை இங்கே இல்லை.
இல்லாவிட்டால் காம்பவுண்டு சுவர்களில் தெய்வ உருவங்கள் வரைய வேண்டிய அவசியம் வந்திருக்காது.
/நமக்கு எது சரி அதன்படி நடக்க வேண்டும்; கம்பெடுத்தால் மட்டும் ஆடக்கூடாது; சட்டம் என்று ஒன்றிருந்தால் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் ... இப்படியெல்லாம் நமக்கு எப்போது தோன்றும்????????/
நல்ல கேள்வி?
1. கடுமையான் சட்டங்கள் மூலம் குற்றங்களை குறைக்லாம் எனில் சரியாக குற்றத்தை நிரூபிப்பதில் சிக்கல்.அரசியல்.,தனிப்பட்ட ... பழி தீர்க்க பயன் படுவதும் சாத்தியம்.
2.சட்டங்கள் இம்மாதிரி இப்போது நீங்கள் சொல்லும் வண்ணம் ,தப்பிக்கும் வணம் இருப்பதால் கோடு போட்டால் பல்ர் ரோடு போட்டு விடுகிறார்கள்.
_______
என்ன செய்வது
பிரணாப் முகர்ஜி சொன்ன திட்டம்,
ஊழல் பற்றிய ஒரு பயங்கரமான தத்துவத்தின் அடிப்படையில் கொண்டது.
அந்த தத்துவத்தை முன்மொழிந்தவர், இந்திய அரசாங்கத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் “கவுசிக் பாசு” என்பவர். அந்த தத்துவத்தை நடைமுறை படுத்த முதல் படிதான் இந்த 10% 20% பிடிப்பு எல்லாம்.
அந்த radical economic தத்துவத்தின் சாராம்சம், துன்புறுத்தல் இலஞ்சத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதாகும். அதாவது இலஞ்சம் கொடுப்பவரை தண்டிக்க கூடாது.
அவரின் தத்துவம் இதில்
http://finmin.nic.in/WorkingPaper/Act_Giving_Bribe_Legal.pdf
படிப்பதற்கு நன்றாக இருக்கிறது.
இந்த யோசனை அழகாக, எப்படி அரைவேக்காடு என்பதை, ஹிண்துவில் சாய்நாத் அழகாக விளக்கியுள்ளார், இதில்
http://www.thehindu.com/opinion/columns/sainath/article1712689.ece
ஊழல் என்பது அதிகார வர்க்கத்தில் இருந்து இறங்கி பொது மக்களுக்கும் ரத்தத்தில் ஊறி விட்டது... பிழைக்க தெரியாத மனுஷனா இருக்கிறியே.. உருப்படவே மாட்ட என்று என் குடும்பம் உட்பட அனைவரும் திட்டி தீர்த்து விட்டாலும் கொண்ட லட்சியத்தில் தோற்காமல் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்வதே வெற்றி என்ற ஒன்றுக்கு தான்... வரும் ஆனால் எப்ப வரும் என்று தெரியாது அநேகமாக யார் கையிலும் முழுமையாக பணமே இல்லாத நிலையிலோ அல்லது அனைவரிடமும் பணம் மட்டும் நிறைய இருக்கும் நிலையிலோ எது எப்படியோ மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்ற எண்ணம் எனக்கு உண்டு..
///ஊழல் என்பது அதிகார வர்க்கத்தில் இருந்து இறங்கி பொது மக்களுக்கும் ரத்தத்தில் ஊறி விட்டது..//
:(((((
நரேன்,
நீங்களனுப்பிய இரு கட்டுரைகளையும் வாசித்தேன்.கொடுத்தமைக்கு நன்றி.
பாராளுமன்றத்தில் ஓட்டுப் போடுவதற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து கொட்டி, லஞ்சம் கொடுத்தவரை ‘மாட்டி’ விட்ட்வர்கள் மேல் அரசு ஏன் பாய்கிறது.
அதே போல் தெகல்க்காவின் sting operation பற்றிய தகவல் வந்ததும் தெகல்க்கா மேல் அரசு பாய்ந்தது.
இந்த இரண்டுமே தவறு. கவுசிக் பாசு கொண்டு வரும் சட்டங்களில் இவர்களுக்குத் தண்டனை கிடையாது; அவர் சொல்லும் harassment bribesதான் அதிகம் நடக்கின்றன. இதில் அவர் சொல்வது போல் லஞ்சம் கொடுத்தவனுக்குத் த்ண்டனை இல்லையென்றால் நிச்சயம் ஊழல்கள் குறையும். அதுவும் நம்மைப் போன்ற நடுத்தரவர்க்கத்தினர்களை கஷ்டப்படுத்தும் ஊழல்கள் குறையும்.
நான் கவுசிக் பாசு சொல்வதை ஆதரிக்கிறேன்.
சாய்நாத்தின் கட்டுரைகளில் பலவற்றோடு உடன்பட்டாலும் இந்தக் கட்டுரையில் அவர் மிக மேம்போக்காக கவுசிக்கை விமர்சிக்கிறார் என்றே தோன்றுகிறது.
உங்கள் கருத்தையும் அறிய ஆவல். இதற்காக ஒரு தனிப்பதிவும், அதிலேயெ ஒரு ஓட்டெடுப்பும் வைக்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு உள்ளது.
அதோடு ipaidabribe.com பற்றியும் மக்களுக்கு அப்பதிவில் சொல்ல ஆசை.
10% அரசு என்று வெளிபடையாகவே 90 களில் வந்து விட்டது. இடைத்தேர்தல்களில் ஓட்டு போடு என்று கேட்டால் நீ நோட்டு போடு என்று மக்கள் பழக்கப்படுத்தப்பட்டு விட்டனர்.
அதனால் சகலமக்களும் சரிசமமாக லஞ்சம் பெற்றுக் கொள்ளலாம் அதற்கு தகுந்த மாதிரி சட்டம் மாற்றப்படுகிறது
//சிறிய அளவில் ஊழல் செய்தால் இறுதிப் பணத்தில் 10%, அதிக அளவில் ஊழல் செய்தால் 20% எடுக்கப்படும்!
//
கோடிகளில் ஊழல் லட்சங்களில் கிடைக்கும் இறுதிப் பணத்தை நினைக்க வைக்குமா என்ன ?
ஐயா வணக்கம்,
அன்னா ஹஜாரே போராட்டச் சமய்த்தில் இலஞ்சத்தை பற்றி இணையத்தில் அறிவுபூர்வமான விவாதங்கள் இருக்கும் என நினைத்தேன். அனைவரும் போராட்டத்தை பற்றி பேசி ஊழலை மறந்துவிட்டார்கள். பதிவிட எண்ணியிருந்தேன், தமிழ்படுத்தல் காரணமாக, வேலை பளுநிமத்தம் தள்ளி சென்றுவிட்டது.
நீங்கள் பதிவிடுங்கள் விவாதங்கள் வரும்.Ipaidabribe தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இலஞ்சத்தை ஒழிக்க இந்த வகை இயக்கங்கள் மிகவும் தேவை.
கவுசிக் பாசு சொல்வதை பற்றி-
துன்புறுத்தல் இலஞ்சம் என்பது ஒன்று உண்டா என்பதே சந்தேகம். செய்யவேண்டிய வேலைக்கும இலஞ்சம்- துன்புறுத்தல், செய்ய கூடாது வேலைக்கும் இலஞ்சம் (non harassment). நமது நாட்டிலும் அரசாங்கத்தில் எதிலுமே rules rules ஆக உள்ளது என்கிறோம். இது ஏன் என்றால் வெள்ளைக்காரன் நமது இந்திய மக்களை நம்பவே இல்லை, அதே அவநம்பிக்கை தற்பொழுது சுதந்திர அரசாங்கத்திடமும் தொடர்கிறது. அதனால் எல்லாமே rules மையம். அதனால் செய்யக் கூடாத வேலைகளை as per rules படி ஆக்கினால் செய்யவேண்டிய வேலையாகிவிடும்.
அதனால்தான் ஆவணங்கள், மற்றும் இன்னும் பிற சங்கதிகளை தயார் செய்து as per rules படி ஆக்கிவிடுவார்கள். இப்பொழுது இது துன்புறுத்தலா அல்லது துன்புறுத்தல் இல்லாத ஊழலா என்பதே கேள்விகுறி.
அதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆளானவர்கள் அனைவரும் சட்டப்படியும் ரூல்ஸ்படியும் நாங்கள் செய்தது சரியே என்கிறார்கள்.
2ஜி வழக்கை எடுத்தால், தயாரித்த ஆவணங்கள் படி எல்லாமே சட்டப்படி ரூல்ஸ்படி சரியாக நடைப்பெற்றது (மன்மோகன் சிங்கே சொல்லிவிட்டார்). அதனால்தான் குற்றத்தை நிரூபிக்க CBI illegal gratification நடைப்பெற்றதா என்று விசாரித்துகொண்டிருக்கிறார்கள்( அதிர்ச்சியான விஷயம் CBI இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை அதனால் குற்றம்சுத்தப்பட்ட அனைவரும் அப்பீட்).
அடுத்து தண்டனை பற்றியது- துன்புறுத்தல் விஷயத்தில் பாதிக்கப்பட்டவர் இலஞ்சம் கொடுக்கும் முன்பு காவல்துறையில் புகார் அளித்தால், அவர் குற்றவாளியாக கருதப்படாமல், இலஞ்சம் வாங்கும் ஜென்மத்தை பிடிக்க உரிய வகையில் உதவகின்றன காவல்துறை. இதில் கவுசிக் பாசு சொன்ன அனைத்தும் அடங்கிவிடும்- குற்றவாளி இல்லாமல், இல்ஞ்சம் வாங்குபவரை பிடிப்பது. ஒன்று extra இலஞ்சம் தருபவர் supiness coward ஆக இல்லாமல் தைரியசாலியாக இருக்க வேண்டும்.
”தாத்தா” ஆட்சிக்காலத்தில் சில சமயம் நடந்த நல்ல விஷயங்களில், தமிழகத்தில் அரசு அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு நல்ல வகையில் சேர நினைத்து ஊழலை அகற்ற DVAC க்கு முழு சுதந்திரம் தர, அவர்கள் சுமாராக செய்த வேலையில் அரசாங்க அதிகாரிகளே பயந்துப் போய், பெரிய பெரிய அதிகாரிகளே உள்ளே போய், கடைசியில் தலையையே கைவைக்கு அளவுக்கு சென்று, அரசு அதிகாரிகள் அதிர்ப்தியடைந்து, பெரிய கைகளுக்கு மாமூல் நின்று, அதனால் DVAC க்கு தந்த சுதந்திரம் நிறுத்தப்பட்டது.
அதனால் தான் அன்னா ஹஜாரே முதல் படியாக சுதந்திரமான சுயமான ஊழல் கண்காணிப்பு அமைப்பை கேட்கிறார்.
கவுசிக் பாசு இலஞ்சத்தின் சமுதாயம், அரசாங்கம், அரசியல் ஆகியவைகளின் மீது நடைபெறும் பாதிப்புகளை பற்றி பேசவில்லை. அவர் சொன்னதைப்போல் ஆக்கினால், சிறு ஒட்டைக்காக காத்திருக்கும் மக்கள் பெரிய ஒட்டை கிடைத்தால் விட்டுவிடுவார்களா என்ன. அதனால் அவர் சொன்னதை நடைமுறைப்படுத்தினால் கட்டமைப்புகள் சிறு சிறுதாக கரையான்கள் அரிப்பதைப்போல் இலஞ்சம் அரித்துவிடும்.
இந்த சட்டத்தை இயற்றியபோது, அமரர் இராஜிவ் காந்தி, இந்திய இனிமேல் இலஞ்சம் என ஒன்று இருப்பதே அறியாது எனச் சொன்னதாக ஞாபகம்.
http://cbi.nic.in/rt_infoact/pcact.pdf
இந்த சட்டத்தை படித்தால், அதை வைத்து தீர்ப்புகளை படித்தால், இந்த சட்டத்திலுமா இவ்வளவு ஓட்டை என்று நமது வாயும் பெரிய ஓட்டைப் போடும்
ஏசுவுக்கான இந்து நரபலிகள்
சம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார். பிறகுத் தலைமை ஆசிரியையிடம் வேறு தண்டிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை…
http://www.tamilhindu.com/2011/09/burned_by_jesus_cult-kulavi/
அன்புள்ளம் கொண்டவர்களே,
அல்லாஹ் எப்படி பரிணாமவியலை அடித்து நொறுக்கியிருக்கிறான் என்று ஒரு பதிவு எழுதியுள்ளேன்
பரிணாமவியலை அடித்து நொருக்கிய அல்லாஹ்..
உங்கள் கருத்துக்களை தாருங்கள்
தருமிய்யா,
//’புதிய தலைமுறை’ வந்த பிறகு செய்திகள் கேட்பது கொஞ்சம் அதிகமாகி விட்டது. நேற்று - 9.செப்ட். ஒரு செய்தி கேட்டேன். இன்று தினசரியில் வருமா என்று எதிர்பார்த்தேன். அந்த செய்தி வரவில்லை. (செய்திகளை முந்தி தருகிறது புதிய தலைமுறை ..!!)//
அந்த செய்தியெல்லாம் நம்புறிங்களா? கூடிய சீக்கிரம் அவங்கள பத்தியே செய்தி வரும் போல இருக்கு!
எஸாரெம் பல்கலைப்பத்தி என்ன நினைக்கிறிங்க, பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் தெரியுமா? இந்தியஜனநாயக கட்சி கேள்விப்பட்டு இருக்கிங்களா? இன்னும் கொஞ்சம் நாளில் எல்லாம் மாட்டுவாங்க இல்லை பேரம் பேசி சமரசம் ஆகுவாங்க! ஆனால் நம்பி ஏமாறுவது நாம தான்!
//என்ன மடத்தனமான திட்டம். ஊழல் செஞ்சா தண்டனை உண்டு; சாதாரணமாக வரவேண்டிய பணம் எதுவும் வராது; .//
அப்புறம் இன்னும் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கிங்களே, ஒரு பாலம் கட்டுறேன்னு சொல்லி டெண்டர் விட்டு 20% கேட்டா ஊழல்,(கட்டாம சுருட்டினாலும் ஊழல்.)
அதுவே ஒரு ஓய்வு ஊதிய அரசு ஊழியருக்கு பி.எப் பணம் கொடுக்க அரசு துணை கருவூலத்தில 500 ரூபா கேட்ட லஞ்சம்.
லஞ்சம் வாங்குறவங்களுக்கு ஒரு வேளை தண்டனை கிடைக்கலாம்.ஆனால் ஊழல் பண்றவங்களுக்கு வழக்கை மொழிப்பெயர்க்கவே 12 ஆண்டுகள் ஆகும், பின்னரே வழக்கு, தண்டனை எல்லாம்.:-))
//போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்: இந்த மக்களுக்கு முதுகெலும்பு என்பதே கிடையாது; வெறும் பூச்சிகள் .. புழுக்கள். வெட்டு வீராப்புகள்//
என்னைக்கு முதுகெலும்பு வந்திருக்கு. உதாரணமா சென்னை மாநகர பேருந்தில நடத்துநர் வந்து டிக்கெட் தரமாட்டார். ஆனால் இப்போதல்லாம் டிக்கெட் வாங்கலைனா மோட்டார் வாகன சட்டம் 1982 இன் படி 500 ரூபாய் அபராதம் போட்டு ,ஃபைன் வாங்குவாங்க,.இதுவே 1990 களீல் டிக்கெட் வாங்கலைனா எது வரைக்கும் வந்து மாட்டினோமோ அது வரைக்கும் 10 டிக்கெட் காசு மட்டுமே வாங்குவாங்க. (1990 என்பது1 982 க்கு முன்னவா,பின்னவா)
உ.ம் :3 டிக்கெட் எடுக்காம ஏமாத்தினா ஆன் தி ஸ்பாட் 30 ரூபா கொடுத்தா போதும்.
நான் இதை சுட்டிக்காட்டி , டிக்கெட் இல்லை கோர்ட்ல மட்டுமே பைன் கட்டுவேன், என் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்புங்க, சொல்வேன் கொஞ்ச நேரம் சட்ட ஆலோசனை நடத்திட்டு சரி போ சொல்வாங்க எஸ்கேப் ஆகிடுவேன்.
இதுல காமெடி என்ன என்றால் என் கிட்டே பாஸ் இருக்கு, அந்த இடம் அல்லாமல் போறப்போ டிக்கெட் வாங்கியும் போவேன் ஆனால் செக்கிங் வந்தால் டிகெட் இல்லை, நடத்துநர் வந்து டிக்கெட் தரலைனு சொல்வேன், நடத்துனர் வந்து டிக்கெட் தரக்கூடாதுனு விதி இருக்கா?,இல்லை.அப்புறம் சென்னைக்கு மட்டும் என்ன விதி விலக்கு? சென்னைக்கு வெளில எல்லா போக்குவரத்துகழகத்திலும் டிக்கெட் அவங்களா தறாங்க , எனவே கூப்பிட்டு போங்க கோர்ட்டுக்குனு அங்கே பேசிக்கெறேன் சொல்லி இருக்கேன். ஆனா மக்களுக்கு முதுகெலும்பு இல்லைனு சொல்றிங்க,அவங்க எல்லாம் என்னை வெறுப்போட பார்க்கும் போது எப்படி என்னோட முதுகெலும்பு நிமிறும்,அவங்களுக்கு டைம் லேட் ஆகுதாம்.
தொடர்ச்ச....
இதை விட கொடுமை டாஸ்மாக்ல 1/4 கு 5 ரூபா கூடுதல் கேட்கிறான் ஏன்னு கேட்டா இஷ்டம்னா வாங்கு சொல்றான், அந்த கடையில் வாங்காம வந்தாலும் எல்லாக்கடையிலும் இதே நிலைத்தான்.நெட்ல நம்பர் பார்த்து டாஸ்மாக் அலுவலகத்திற்கு போன் பண்ணி திட்டினேன், வாங்குனவன் யாரோ?
சென்னை டு செங்கல்பட் மாநகரப்பேருந்ததில டிகெட் விலை அதிகம், அதுவே விழுப்புரம் கோட்டம் பேருந்துல கம்மி, சீக்கிரமாகவும் போகும் . அப்போ ரெண்டு கழகத்துக்கும் டீசல் என்ன வேற வேற விலையா? இதை விட கொடுமை பெங்களூர்ல ஏசி பேருந்துல மினிமம் 7 ரூபா, இங்கே 15 ரூபா சொல்றாங்க.(ஆனால் அமைச்சர் மினிமம் 5 ரூபானு பேட்டிக்கொடுத்தார் ஆரம்பத்தில)
இது வரைக்கும் 3 தடவை கேட்டு இருக்கேன் , அதே போல எலெக்ட்ரிக் ட்ரைன்ல போக ,வர டிக்கெட் ஒரே இடத்தில போகும் போதே எடுக்கலாம் ஆனால் 2 மணி நேரத்தில அதை பயன்ப்படுத்தணும். அதுக்கும் எப்படி சாத்தியம் ஆகும்னு கேட்டு டிகெட் செக் பண்றவரை ஓட வைத்து விட்டேன்.
//பாராளுமன்றத்தில் ஓட்டுப் போடுவதற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து கொட்டி, லஞ்சம் கொடுத்தவரை ‘மாட்டி’ விட்ட்வர்கள் மேல் அரசு ஏன் பாய்கிறது.//
Ĭ1;ி..ஹி பாராளுமன்றத்துக்கு எம்.பி ஆனாலும் பார்சல் கொண்டுப்போக முடியாது. ஏகப்பட்ட செக்கிங் எல்லாருக்கும் உண்டு.அப்படி இருக்கப்போ பணம் கட்டுக்கட்டாக எப்படி கொண்டு போனாங்க்களாம்,.
செக்கிங் இல்லாம போகணும்னா மந்ததிரி அதுக்கும் மேல இருக்கணும். எதிர்க்கட்சினா எதிர்க்கட்சி தலைவர் ஆகவாது இருக்கணும் மத்தவங்க எல்லாம் செல் போனுக்கு மேல உள்ள கொண்டு போகக்கூடாது, எதுனா பேப்பர்ஸ் ,டாகுமெழ்ன்ட் என்றாலும் செக் பண்ணிடுறாங்க.செல் போன் உள்ள பயன் படுத்த முடியாது சசி தரூர் செல்போன் பயன்படுத்தியதால் மாட்டியும் இருக்கார்.. அங்கே விசிட்டர் பாஸ் வாங்கவே ரொம்ப கஷ்டம், நான் சீ..சீ இந்த பழம் புளிக்கும்னு ஓடி வந்துட்டேன்.
இதை விட இதே போல பாதுகாப்பு நடவடிக்கை தமிழ் நாடு சட்ட சபைலயும் இருக்கு.
சரி அப்படி இருந்தாலும் பணம் காட்டினாங்களே எப்படினா, பாதுகாப்பு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து தான்! :-)) இல்லைனா அத்வானியே பணத்தை எடுத்து வந்து கொடுத்து இருக்கணும்.
//”தாத்தா” ஆட்சிக்காலத்தில் சில சமயம் நடந்த நல்ல விஷயங்களில், தமிழகத்தில் அரசு அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு நல்ல வகையில் சேர நினைத்து ஊழலை அகற்ற DVAC க்கு முழு சுதந்திரம் தர, அவர்கள் சுமாராக செய்த வேலையில் அரசாங்க அதிகாரிகளே பயந்துப் போய், பெரிய பெரிய அதிகாரிகளே உள்ளே போய், கடைசியில் தலையையே கைவைக்கு அளவுக்கு சென்று, அரசு அதிகாரிகள் அதிர்ப்தியடைந்து, பெரிய கைகளுக்கு மாமூல் நின்று, அதனால் DVAC க்கு தந்த சுதந்திரம் நிறுத்தப்பட்டது.//
இது செம காமெடி!
வவ்வாலின் இன்னொரு பெயர் என்ன?
சண்டைக்கோழி!
சில நாட்களாக காமராஜர் குறித்த விசயங்களை படித்துக் கொண்டிருக்கின்றேன்.
ஒரு வேளை படிப்பறிவு அதிகம் இல்லாமல் ஆட்சிக்கு வருபவர்களால் தான் நல்லாட்சியை தர முடியுமோ என்று என் எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
Post a Comment