Thursday, December 01, 2011

537. EMBRYOLOGY IN THE QURAN




*
"குர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இதுவரை அதற்கு எந்த பதிலும் ஏன் இல்லை?"  -- சுவனப்பிரியன்.

சிறு வயதிலேயே ஒரு கிறித்துவனாக எனக்கு வேத பாடங்கள் சொல்லித் தருவார்கள். அப்போது சொல்லித் தரும் சில  வாக்கியங்களை, அல்லது கதைகளை மனதின் அடியில் சேமித்து வைத்துக் கொள்வோம். அந்த வாக்கியங்களோ கதைகளோ அவ்வளவு எளிதில் மனதைவிட்டு அகலுவதில்லை. இதை கதைதான் இஸ்லாமியருக்கும் இருக்கிறது என்பதை பதிவுலகில் அவர்களோடு நிகழ்த்திய விவாதங்களிலிருந்து புரிந்து கொண்டேன்.

1400 ஆண்டுகளாக எல்லாவிதக் கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டோம் என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. இதனாலேயே கேட்ட கேள்விகளுக்கு நாம் கொடுத்துள்ள பதில் முழுமையானதா, சரியானதா என்று அவர்கள் எப்போதும் சிந்திப்பதில்லை. அடுத்த பக்கத்தில் வரும் விவாதத்தில் உண்மையிருக்கிறதா என்ற கேள்விகள் அவர்களுக்கு வருவதேயில்லை. கண்ணாடி முன் நின்று பதில் சொல்லும் பாணியைத்தான் பார்க்க முடிகிறது.

*





*

30 comments:

-/பெயரிலி. said...

தருமி
நல்ல இடுகை; மதங்களை நம்புவோர் (எம்மதமாயினுஞ்சரி) அவர்களுடனேயே நிறுத்திக்கொண்டால் நல்லது; ஆனால், அறிவியலைப் பிய்ப்பதும் பங்கு பிரிப்பதுமே தாங்கமுடியவில்லை; மிகவும் பகிடி என்னவென்றால், ஒரே மதத்தைச் சேர்ந்த இருவரிலே ஒருவர் அறிவியலே பொய்யென்று வண்டியோட்டுகிற இராஜபாட்டையிலேயே அடுத்தவர் அறிவியல் எப்படியாக தம்மதத்திருநூலிலே (புத்தகங்களிலே) ஏற்கனவே சொல்லப்பட்டதென்ற வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பார். Vedic science, creationism போலக்கூத்துகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம் ;-)

சொல்லாத சொல்லையெல்லாம் சொந்தம் கொண்டாடி வல்லடிவழக்குப்பேசும் "நமதுமட்டுமே கருத்து" அடிப்படைவாதிகளுடன் பேசுவதிலே அர்த்தமில்லை.

தருமி said...

//அடிப்படைவாதிகளுடன் பேசுவதிலே அர்த்தமில்லை.//

எல்லோரும் இப்படி 'அலுத்துக்கிட்டு' போய் விடுறீங்க ... எனக்கும் இந்த அர்த்தமில்லை என்பது புரிந்து விட்டது. அடுத்த நிலைக்கு எப்போது போவேனோ?

-/பெயரிலி. said...

அலுத்துக்கொள்வதென்று அர்த்தப்படாது; கருங்கற்சுவரிலே மொட்டைத்தலையை மொடக்கு மொடக்கு என்று மோதுவது முட்டாற்றனமென்று அர்த்தப்படும். இசை கற்பிக்கும் என் பேராசிரிய நண்பரின் அலுவலகவாசற்கதவிலே கண்ட வாசகம் இது: “Never try to teach a pig to sing; it wastes your time and it annoys the pig.” A fanatic of any religion / belief is worse than a pig. S/he will go any extreme to prove her/his point. When it come to a fanatic, my modified quote is, " Never try to rationalize to a fanatic; it wastes your time and it annoys the fanatic.... Oh! it/he/she may harm you too." I am really serious. These people can mold a mountain from.... their twisted brains.

தருமி said...

it all started more as an academic interest. glad pathivulagam has given me chances to pick up so much from at least one relgion.

-/பெயரிலி. said...

தெரிந்த ஓர் இரட்டை பிஎச்டி கணிதப்பேராசிரியர்; மேற்குவங்காளி; தெரியாத்தனமாக ஒரு கருத்தரங்கிலே பக்கத்திலே குந்திவிட்டேன்; இராமாயணத்திலே வரும் கதைவிமானங்களெல்லாம் எப்படியாக கணித ரீதியிலே திட்டமிட்டு அமைக்கப்பட்டவை என்று இந்துக்களின் பண்டைய அறிவியல் அவியலே என்னைக் கொன்றேவிட்டார்; இதற்கு, தூங்கித்தூங்கவைத்துக் கட்டுரைகள்வாசித்தவர்களிலே நான் கவனத்தைச் செலுத்திருயிருக்கலாம்.

பக்கத்தறையிலே ஒரு விவசாயவிஞ்ஞானக்காரர்; பகுதிநேர பெந்திக்கோஸ்ட் போதகர்; "இங்கிவரை நான் பெறவே என்ன தவம் செய்தேனோ, கர்த்தரே!" என்று என் தொல்லை உங்களுக்குச் சொல்லிப் புரியாது;-) ஆளைத் தூரத்திலே கண்டாலே கதவைப் பூட்டிக்கொள்கிறேன்.

சீனாவிலே நீர்வளத்துறையிலே ஒன்றாகக் கற்ற சூடான் நண்பரொருவர்; அருமையான நெருங்கிய நண்பர். ஒரு நாள், தடாலடியாக வாத்தியாருக்கு, "நைலிலே போடப்பட்ட அனைத்து நூல்களும் அழிந்து புனிதநூல் மட்டும் மிதந்தது" என்று போட்ட புனல்வாதத்திலே சீனப்பேராசிரியர் சீத்தலைச்சாத்தனாராக வீடு திரும்பினார். இப்போது, Richard_Dawkins ஒரு கதை சொன்ன மூடனாகியிருக்கின்றார். முடியலங்ணா! Templeton Prize இற்கு நிறையப் பேர் அலையறாங்ணா!

தருமி said...

உங்க ராசி இப்படி! எனக்கு அவ்வளவு எளிதில் யாரும் மாட்டுவதில்லை!!

-/பெயரிலி. said...

கொடுத்துவைத்தவர் ;-)

suvanappiriyan said...

//1400 ஆண்டுகளாக எல்லாவிதக் கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டோம் என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. இதனாலேயே கேட்ட கேள்விகளுக்கு நாம் கொடுத்துள்ள பதில் முழுமையானதா, சரியானதா என்று அவர்கள் எப்போதும் சிந்திப்பதில்லை. அடுத்த பக்கத்தில் வரும் விவாதத்தில் உண்மையிருக்கிறதா என்ற கேள்விகள் அவர்களுக்கு வருவதேயில்லை. கண்ணாடி முன் நின்று பதில் சொல்லும் பாணியைத்தான் பார்க்க முடிகிறது.//- -தருமி!

ஏதோ நீங்கள்தான் அறிவாளி போலவும் மற்றவர்களெல்லாம் மூளை சலவை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிக் கொள்வது சற்று மிகைப்படுததல். அது ஒருபுறம் இருக்க கருவியலில் பல ஆராய்ச்சிகள் செய்த டாக்டர் கெய்த் மூர் என்ன சொல்கிறார் என்பதை இந்த மூன்று காணொளிகளிலும் பார்த்தக் கொள்ளுங்கள். கருவியலைப் பற்றி நீங்களோ நானோ விவாதிப்பதை விட டாக்டர் கெய்த் மூர் விவாதிப்பதுதான் சரியாக இருக்கும்.

சார்வாகன் said...

இஸ்லாமிய அறிவியல் எனப்படும் மத புத்தக்த்தில் அற்வியல் விளக்கம் கொடுக்கு செயலை ஆரம்பித்து வைத்தவர்கள் ஜனாஃப் மௌரிஸ்புகை,ஜனாஃப் கெய்த் மூர் ஆவார்கள்.

பிறப்பால் முஸ்லிமல்லாத அரபி தாய் மொழியாக கொண்டிராதவரால் குரானின் மறை பொருள்களை விளக்குவதை நம்பினால் நம்பாலாம்.பிற முஸ்லிம்கள் இவர்களுக்கு முன் பிற முஸ்லிம்கள் அனைவரும்[முகமது உட்பட] குரானை புரியாமல் படித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை ஒத்துக் கொண்டால் இதனை பரிசீலிக்க்லாம்.

இருவரும் இஸ்லாமுக்கு மாறினார்களா? என்பது குறித்து தகவல் தேடுகிறேன்.ஒன்றும் இல்லை.
இந்த விளக்கம் மத பிரச்சாரகர்களுக்கு போதும் என்றாலும்,அப்படியும் அவர்கள் விள‌க்கம் ஒன்றும் சரியில்லையே!!!!!!!!!!!!!!!.ஆதார பூர்வமான ஹதிதுகளின் வெளிச்சத்தில்(?) பார்த்தல் மிகுந்த நகைசுவையாக இருக்கிறது.
இன்னும் விள்க்குவோம்!!!!!!!!!!!

http://saarvaakan.blogspot.com/2011/01/blog-post_5123.html

naren said...

நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம்.

உங்கள் பதிவிற்கு நெத்தியடி, பதிலடி தந்திருக்கும் சுவனப்பிரியன் பதிவை படித்தால், சார்வாகன் தான் சுவனப்பிரியன் பெயரில் பதிவிட்டு உள்ளடி வேலைகளை செய்கிறாரோ என்ற ஐயம்!!!!!!

ஹா....ஹா...ஹா...just a little bit of twisted doubt creeping in the mind(sealed heart????)!!!

-/பெயரிலி. said...

http://scienceblogs.com/pharyngula/2010/11/islamic_apologetics_in_the_int.php

-/பெயரிலி. said...

Scientists’ Protest on the Publication of Islamic Pseudoscience in the International Journal of Cardiology

குடுகுடுப்பை said...

பெயரிலியின் ஒதுக்கித்தள்ளும் நிலையை அடையவில்லை, தருமியின் விடாப்பிடி நிலையிலும் இல்லை, ஆனாலும் இந்த மத அடிப்படைவாதிகளின் பதிவுகள் நடுநிலையாக சிந்திக்கும் மனிதர்களுக்கு அடிப்படைவாதிகளையும் அவர்களது சிந்தனையும் அடையாளம் காட்டிக்கொடுக்கிறத. அதுவே பெரிதுதான்.

..
சைனாவிற்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு தென் கொரிய கிறித்தவர் என்னிடம் விமானத்திலேயே மதப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார், கொரியாவின் வயது உங்கள் கடவுள் இயேசுவை விட அதிகம் என்றேன். என்னைக்காப்பாற்றிக்கொள்ள தூங்கியும் விட்டேன்

தருமி said...

//ஏதோ நீங்கள்தான் அறிவாளி போலவும் மற்றவர்களெல்லாம் மூளை சலவை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிக் கொள்வது ...//

அடக் கடவுளே! எனக்கு நிச்சயமாக அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லைங்க.

ஒரே ஒரு கேள்வி: பிறந்ததிலிருந்து சொல்லக் கேட்டவைகளை மறு கேள்வி இன்றி நம்பி, சொன்னவைகளையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு (1440 வருடக் கதை .. எல்லா கேள்விகளுக்கும் எங்கள் குரானில் பதில் உண்டு .. சாமி படிக்காத ஆளைப்பிடித்து சொன்ன வஹி...இப்படியாக..)இருப்பது மூளைச் சலவையின்றி வேறென்ன? நம்ம கண்ண நம்ம திறக்கணுமுங்க .. அதாங்க அறிவு அப்டின்றது ...

suvanappiriyan said...

தருமி!

//நல்லா இருக்கு. வாசிச்சிப் பாருங்களேன். //

//but he's also an idiot.//

நானும் படித்துப் பார்த்தேன். பேராசிரியராக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு ஆராய்ச்சியாளரை 'முட்டாள்' என்று வர்ணிக்கும் இவரின் சொல்லே இவர் யார் என்று காட்டிக் கொடுக்கிறது.

கெய்த் மூர் தனது ஆராய்ச்சியின் முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்கிறார். அவர் அறிவித்தது தவறென்றால் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகம் மூரை அவ்வளவு இலேசில் விட்டிருக்காது. நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் இவரது முடிவை எதிர்த்து வழக்கு தொடரலாமே! உண்மை வெளி உலகுக்கு வரும் அல்லவா? நீங்களாவது முயற்சி செய்து கெய்த் மூரின் மேல் வழக்கு தொடர ஆவண செய்யுங்கள்.


கர்ப்பப் பையினுல் செலுத்தப்படும் இந்திரியத்திலுள்ள பல இலட்ச/கோடிக் கணக்கான உயிர் அணுக்களிலிருந்து சில நூறு உயிர் அணுக்களே ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) என்ற குழாயை அடைகிறது. சினைப் பையிலிருந்து மாதம் ஒரு முறை வெளிவரும் ஒரு சினை முட்டையும் மாதவிடாயிலிருந்து 14-ம் நாள் ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) க்கு வந்து சேர்கிறது. இங்கு தான் கருவுறுதல் நடைபெறுகிறது. ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) க்கு வந்து சேர்ந்த ஆணின் சில நூறு உயிர் அணுக்களிலிருந்து ஒரே ஒரு உயிர் அணு மட்டும் பெண்ணின் சினையுடன் சேர்ந்து கருவுகிறது. பின்னர் இந்தக் கரு செல் டிவிசன் (Cell Division) என்ற முறையில் ஒரு செல் இரண்டு செல்களாகி, இரண்டு நான்காகி, நான்கு எடடாகி இவ்வாறு பல்கி பெறுகிறது. பின்னர் இந்த கரு ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) லிருந்து சொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கருவுற்ற நாளிலிருந்து 8 ஆம் நாள் கர்ப்பப் பையை வந்து அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு கரு கர்ப்பப்பையின் சுவற்றில் ஊடுறுவுவதை ‘Implantation’ (இம்பிலேன்டேசன்) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

இது வரை நாம் பார்த்த விளக்கங்கள் எவ்வாறு குர்ஆனோடு ஒத்துப் போகிறது என்று பார்ப்போம். விதைப் பையிலிலுள்ள எபிடிமிஸ் என்ற பகுதியில் பத்திரமாக சேகரித்து வைக்கப் பட்டுள்ள இந்திரியம் கர்ப்பப் பையினுள் செலுத்தப்பட்டு கருவுற்று கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்கும் (அலக்) நிலைக்கு வருகிறது. இதையே மேற்கண்ட வசனத்தின் முதல் மூன்று வரிகள் கூறுகிறது. இங்கே குர்ஆன் கூறும் சில அற்புதங்களைக் காண வேண்டும்.
இந்திரத்துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம் என அல்லாஹ் கூறுகிறான். அலக் என்பதற்கு இன்றைய குர்ஆன் விரிவுரையாளர்கள் மூன்று விதமான பொருளைத் தருகின்றார்கள்.
1. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,
2. ஒரு அட்டையைப் போன்ற ஒரு பொருள்,
3. இரத்தக் கட்டி.
குர்ஆன் கூறும் அலக் என்ற வார்த்தையின் இந்த மூன்று அர்த்தங்களும் இங்கே பொருந்திப் போகின்றது. முதலில் கருவானது ஃபலோப்பியன் குழாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து வந்து கர்ப்பப் பையை அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு ஒட்டிக் கொண்டு தொங்கும் இந்தக் கரு கர்ப்பப் பையின் சுவர்களில் ஆழமாக வேருன்றி அதிலிலுள்ள இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களை (Nutrition) ஒரு அட்டையைப் போன்று உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு சத்துக்களை (Nutrition) உறிஞ்சும் இந்தக் கரு இப்போது பார்ப்பதற்கு இரத்தக் கட்டியைப் போன்று தோற்றமளிக்கின்றது.
நாம் இனி அடுத்து என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.
கரு வளர்ந்து வரும் பொழுது ஒரு கட்டத்தில் வாயில் போட்டு மென்று சவைக்கப்பட்ட மாமிசம் போல தோன்றுகிறது. மருத்துவர்கள் இதை ஆய்வு மூலம் கண்டறிந்திருக்கின்றார்கள். இதையே குர்ஆன் ‘முத்கா’ என்று குறிப்பிடுகிறது. இந்த மாமிச பிண்டத்திற்குள் தான் பின்னர் எலும்புகள் உருவாகின்றன. அடுத்து அந்த எலும்புகளைச் சுற்றி சதைப் பிடிப்பு ஏற்படுகிறது. இந்த சதை பிடிப்பை குர்ஆன் ‘லஹ்ம்’ என்கிறது. இந்தக் காலகட்டத்தில் மனிதனுக்கு தேவையான மற்ற உறுப்புகளும் வளர்ச்சியடைந்து மனிதபடைப்பாக மாறுகிறது. இவ்வளவு நுணுக்கமான முறையில் கருவின் வளாச்சி குறித்து குர்ஆன் விவரிக்கிறது. ஒரு தேர்ந்த மருத்துவரால் தான் இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொள்ள முடியும்; விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த நவீன கண்டுபிடிப்பை குர்ஆனில் 1400 ஆணடுகளுக்கு முன்னரே மிகத்துல்லியமாக வர்ணிக்கப்பட்டிருப்பது இது இறைவேதம் என்பதற்கு மற்றுமொரு சான்றாகும்.

தருமி said...

//பேராசிரியராக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு ஆராய்ச்சியாளரை 'முட்டாள்' என்று வர்ணிக்கும் இவரின் சொல்லே இவர் யார் என்று காட்டிக் கொடுக்கிறது.//

அங்கு சொல்லப்படக் கூடிய கருத்தைத்தான் நாம் பார்க்க வேண்டும். . எழுதக் கூடியவரின் இலக்கண குறைகளை நோட்டம் விடுவது சரியா? ---இப்படி நீங்கள்தான் கேட்டீர்களோ!

suvanappiriyan said...

//அங்கு சொல்லப்படக் கூடிய கருத்தைத்தான் நாம் பார்க்க வேண்டும். . எழுதக் கூடியவரின் இலக்கண குறைகளை நோட்டம் விடுவது சரியா? ---இப்படி நீங்கள்தான் கேட்டீர்களோ!//

இங்கு அந்த நபர் இலக்கண பிழை செய்யவில்லை. ஒருவரின் எழுதும் முறையே அவரின் உள்ளத்தில் உள்ளதை வெளிக் கொண்டு வந்து விடும். ஒரு பேராசிரியரை 'முட்டாள்' என்று நாலாந்திர நடையில் அழைக்கும் இவரின் செயல் இஸ்லாத்தின மேல் எந்த அளவு காழ்ப்புணர்வு கொண்டுள்ளார் என்பதை தெரிவிக்கிறது. அந்த பேராசியர் ஆராய்ச்சியில் தவறிழைத்திருந்தால் அவர் மீது வழக்கு தொடர்ந்து உண்மையை வெளிக் கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே! அதுதான் முறையும் கூட. அதைச் செய்யாததால் இவரிடம் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

Anna said...

ஒரு 5,6 வருடங்களிற்கு முன் வேறொரு இஸ்லாமிய இணையத்தளத்திற்குப் பதிலளிக்கும் முகமாக இந்த Keith Moore இன் The developing Human புத்தகத்தை வாசிகசாலையிலிருந்து எடுத்து, அவர்கள் சொன்னது மாதிரி embryology ஜப் பற்றி குரான் முன்பு ஒரு போதும் அறிந்திராத உண்மைகளை மிகச் சரியாகச் சொல்வதால் அது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறதா எனத் தேடினால், அப்படி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. ஏன், என்ன என மேலும் கிண்டியபோது தான் அவ்வாறு அந்தப் புத்தகத்தின் Saudi Edition இல் மட்டுமே சொல்லப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அந்த edition ஜ Keith Moore இன் CV இல் நீங்கள் தேடினாலும் கிடைக்காது. அப்புத்தகத்திற்குப் பிறகு அவரின் செயல்கள் பல அவர் அவ்வாறு சொன்னதை மறைக்க முயலும் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. முஸ்லிம்கள் சிலர் மட்டுமே அவர் எத்தனையோ வருடங்களிற்கு முன் சொன்னதைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய Keith Moore அதன் பின் ஒரு போதும் அதைப் பற்றி comment பண்ண விரும்பியதில்லை. அவரே அவரின் புத்தகத்தின் 6 ஆவது edition இல் வாசிப்பவரை 'குரான், அதற்கு 450 வருடங்களிற்கு முன் Galen எழுதிய கருத்துக்களையே திரும்பவும் சொல்கிறதென' Basim Musallam என்றிருவர் எழுதிய கட்டுரையை வாசிக்கவே தூண்டுகிறார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தற்சமயம் பண்டைய காலத்தின் எதோ ஒரு புத்தகத்தில் நாம் நேற்றுக் கண்டுபிடித்த விடயம் உண்மையாகவே சொல்லப்பட்டிருக்குமென்றால் கூட அதன் விடை நிச்சயமாக 'see it must have been god' இல்லை.


Who Is Dr Moore

Western Scholars Play Key Role
In Touting 'Science' of the Quran


From Moore's publisher

This is what another scientist, who was involved with the Saudi govt. in a similar way has to say.
William Hay - This is the truth UNCUT

suvanappiriyan said...

@அனலைஸ்ட்! @தருமி!

//அந்த edition ஜ Keith Moore இன் CV இல் நீங்கள் தேடினாலும் கிடைக்காது. அப்புத்தகத்திற்குப் பிறகு அவரின் செயல்கள் பல அவர் அவ்வாறு சொன்னதை மறைக்க முயலும் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன.//

பல்கலைக் கழகத்தின் நெருக்குதலும் காரணமாக இருக்கலாம்.

//முஸ்லிம்கள் சிலர் மட்டுமே அவர் எத்தனையோ வருடங்களிற்கு முன் சொன்னதைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய Keith Moore அதன் பின் ஒரு போதும் அதைப் பற்றி comment பண்ண விரும்பியதில்லை.//

ஏன் திரும்பவும் கமெண்ட் பண்ணியே ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.? பொது மேடையில் வைத்து ஒத்துக் கொள்ளுகிறார். 'இது முகமதின் சொந்த வார்த்தையாக இருக்காது அவர் கடவுள் என்று சொல்லும் அலலாஹ்வின் வார்த்தையாக இருக்கலாம்'' என்று. இது வீடியோவிலும் பதிவாகியிருக்கிறது. தான் சொன்ன கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று எப்போதாவது சொன்னாரா?

//அவரே அவரின் புத்தகத்தின் 6 ஆவது edition இல் வாசிப்பவரை 'குரான், அதற்கு 450 வருடங்களிற்கு முன் Galen எழுதிய கருத்துக்களையே திரும்பவும் சொல்கிறதென' Basim Musallam என்றிருவர் எழுதிய கட்டுரையை வாசிக்கவே தூண்டுகிறார்.//

அதை நாங்கள மறுக்கவில்லையே! அரிஸ்டாட்டிலும்தான் இதற்கு முன் சொல்லியிருக்கிறார்.குர்ஆனின் கருத்தை ஒட்டியே முன்பு பலர் சொல்லியிருந்தாலும் இந்த செய்திகள் முகமது நபிக்கு எவ்வாறு தெரிந்தது என்பதுதான் இங்கு கேள்வி. இது ஒன்று மட்டுமா? இது போல் நூற்றுக்கணக்கான வசனங்களை என்னால் காட்ட முடியும.

அடுதது குர்ஆன் ஒரு விஞ்ஞான புததகமன்று. மனிதரகள் நேர்வழி பெறும் பொருட்டு மனித குலத்துக்காக அருளப்பட்டது. போகிற போக்கில் வெகு அலட்சியமாகத்தான் அறிவியல் கருத்துக்கள் சொல்லபபட்டிருக்கும.

முன்பு பூமி தட்டையானது என்று குர்ஆன் சொன்னதாக சொன்னீர்கள். அதற்கும் விளக்கம் கொடுத்தேன். 'தஹாஹா' என்ற வார்த்தை எவ்வாறு தவறாக விளக்கப்பட்டது என்பதையும் விளக்கினேன். 'பின் வாங்கும் இரவு' என்பதற்கும் அறிவியல் ரீதியான விளக்கத்தை அறிஞர்கள் வாயிலாக எடுத்து தந்தேன்.

(ஸ்..ஸ்..ஸ்..ஸ...களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொள்கிறேன்..)

தற்போது கருவியலைப் பற்றி ஒரு பதிவிட்டீர்கள். அதற்கும் அறிவியல் அறிஞர்களைக் கொண்டே பதில் கொடுத்தாகி விட்டது. அடுத்து என்ன சார்?

Anonymous said...

அன்புள்ள காஃபிர் தருமி அவர்களே,

உங்கள் மீது ஏக்க எறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக! (c) mumins

//
*
"குர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இதுவரை அதற்கு எந்த பதிலும் ஏன் இல்லை?" -- சுவனப்பிரியன்.
//
எங்க கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்டேங்குறீங்களே..

அல்குரான்ல அறிவியலுக்கு முரணா ஆயிரக்கணக்கில இருக்கு.
ஆன நீங்க எதை காமிச்சாலும் அது அறிவியலுக்கு முரண்ணு நாங்க ஒத்துகிடுவோமா?

நிச்சயமா ஒத்துக்க மாட்டோம்ல

இது ஒத்துக்க முடியாது. அத இப்படித்தான் புரிஞ்சிக்கணும்னு தவ்ஹீத் அண்ணன் அதில ஒரு பிஹெச்டியே பண்ணிக்கிராரு.

நீங்க என்னதான் சொன்னாலும், அது தப்புன்னு சொல்லி, திரும்பவும்.

”குர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இதுவரை அதற்கு எந்த பதிலும் ஏன் இல்லை?" ன்னு நாங்க சொல்லிடுவோம்.

அப்புறம் என்ன பண்ணுவீங்க?

ய்ய்ய்ய்யாஆ அல்ல்லாஹ்..

yasir said...

சுவனப்பிரியன்

கருவியல் பற்றி கெய்த் மூர் சொன்னது இருக்கட்டும், முகம்மது இதற்கு விளக்கம் தந்த ஹதீது இருந்தால் அதை பதிவிடவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வோட்டாண்டி said...

என்ன எழுதி என்ன use?? நீங்க ஏழுதுன பதிவ படிச்ச யாரவது ஒரு மதவாதியாவது பகுத்தறிவுவாதியா மாறி இருக்காங்களா?
unlearning is more difficult than learning. people are not ready to unlearn

தருமி said...

வோட்டாண்டி,

//நீங்க ஏழுதுன பதிவ படிச்ச யாரவது ஒரு மதவாதியாவது பகுத்தறிவுவாதியா மாறி இருக்காங்களா? //

யாரையும் மத மாற்றம் செய்ய நான் எழுதவில்லை; என் மனமாற்றம் சரிதான் என்று எனக்கு நானே உறுதியளிக்கவே எனக்கு விருப்பம்.

தருமி said...

சுவனப்பிரியன்,
//அதற்கும் அறிவியல் அறிஞர்களைக் கொண்டே பதில் கொடுத்தாகி விட்டது. அடுத்து என்ன சார்?//

அடுத்த பதிவு அந்த அறிவியல் அறிஞர்கள் சொன்னது தான், சார்!

வோட்டாண்டி said...

//யாரையும் மத மாற்றம் செய்ய நான் எழுதவில்லை; என் மனமாற்றம் சரிதான் என்று எனக்கு நானே உறுதியளிக்கவே எனக்கு விருப்பம். //

உங்கள discourage பண்ண நான் அப்படி சொல்லல..உங்க மனமாற்றம் சரி தான்னு உங்கள சுத்தி இருக்கவங்கள நம்ப வைக்கிறதே ரொம்ப சிரமம்..

அறிவியலுக்கு முறனா இருக்குனு நீங்க சொல்ற வாதத்துக்கு அவங்க சொல்ற பதில் வாதம்-- அறிவியலால் விளக்க முடியாத விஷயங்கள் இன்னும் இருக்கு.

மதமும் அறிவியலும் ஒரு விதத்துல ஒண்ணு தான். இரண்டுமே மனிதனோட விடை தெரியா கேள்விக்கு பதில் சொல்லவே முளைத்தன. ஆனா அறிவியல் கூறும் கருத்துகள் தவறானால் அவை மாறும். மதத்தில் அவை மாறாது

NO said...

// மதமும் அறிவியலும் ஒரு விதத்துல ஒண்ணு தான். இரண்டுமே மனிதனோட விடை தெரியா கேள்விக்கு பதில் சொல்லவே முளைத்தன.//

தவறு - "கடவுளும் அறிவியலும்" என்று இருக்கவேண்டும். மதம் என்பது மனித மனத்தால் கடவுளை அடைய ஒரே வழியாக கண்டுபிடிகப்பட்ட ஒரு பயம் கலந்த சல்லாப வழிமுறை! அந்த வழிமுறை இன்று முள்வேலியாகி மனங்களை சிறை பிடுத்து விட்டது!

//அறிவியலால் விளக்க முடியாத விஷயங்கள் இன்னும் இருக்கு.//

அறிவியல் மந்திரம் இல்லை, எல்லாம் தெரிந்த புத்தகம் இல்லை. அறிவியல் என்பது வியர்வையின் பலன். பல வழிமுறைகளால், சொல்லப்பட்ட ஒவ்வொன்றும்
சரிதான் என்று அறியபட்டபின்பு, அதை பலமுறை பல நிலைகளில் ஆராயப்பட்ட பின்பு அதே பதில்களை தருகிறதா என்று சரிபார்கபட்ட பின்பு ஒன்றினை உண்மை என்று ஏற்றுகொள்ளும் முறைதான் அறிவியல். பாலையில் வசிக்கும் ஒரு பழங்குடி காதில் கேட்டதாக சொன்னதால் உண்மை என்று ஏற்றுகொள்ளும் பழக்கத்திற்கு பெயர் அறிவியல் இல்லை! ஆதலால் விளக்க முடியாத பல விடயங்கள் எப்பொழுதும் இருக்கதான் செய்யும். அதை விளக்க அதை பற்றி நன்றாக கற்று, புரிந்து, பல வழிகளில் ஆராய்ந்து, தவறென்றால் திருத்திக்கொண்டு, சரியென்றால் வேறு நிலைகளில் ஆராய்ந்து அதே பதில்களை தருகிறதா என்று நிலைநிறுத்தி பார்த்து பின்னர், கடைசியாக அதை சிலர் தோண்டி துருவி சரியென்று சொல்லுவரை எல்லாமே விளக்க முடியாதவைதான்!!!

ஆனால் அந்த விளக்க முடியாதவையை விளக்கத்தை நோக்கி இட்டுசெல்ல்லும் வழிமுறை அறிவியளில்தான் இருக்கிறது. மதத்தில் இல்லை!!!

ஆதலால் பிலசாபிகல் வார்த்தை ஜாலங்களை இங்கே கொட்டவேண்டாம்!! மதத்தை அறிவியலுடன் சம்ம்மந்தபடுத்த துடிக்கும் போலி நிலையை எடுக்க வேண்டாம்!! மதம் என்பது பொய்யாக இருக்கலாம் என்று உணரத்தொடங்கி அதே சமயம் உங்களின் காலாச்சரா வழிமுறைகளால் அதை சத்தம் போட்டு சொல்ல முடியாத உங்கள் இக்கட்டான மன நிலைதான் அது காட்டுகிறது!!

naren said...

ஐரோப்பா காலனித்துவத்தை (colonialism) நியாயப்படுத்த “whiteman's burden" என்ற கோட்பாட்டை உருவாக்கி அப்பொழுது நியாயப்படுத்தினாரகள்.

இப்போது அதைச் சொன்னால், அழுக்கு துணிச்சுமையை சுமக்கும் வண்ணான் கழுதையைப் போல காட்சிதருவான் வெள்ளைக்காரன்.

அந்த வெள்ளைக்காரன் சுமக்கும் அழுக்கு துணிச்சுமையில் “Embryology in the quran" என்ற அறவியல் அழுக்கு சுமையையும் சேர்த்து தூக்குகிறான். பாவம் வெள்ளைக்காரன், இப்படி எவ்வளவு சுமைகளை சுமப்பான்.

அப்படி தூக்குகிறான் என்று சொல்வதில் மற்றவர்களுக்கு அப்படி ஒரு பெருமை!!!

இந்த மாதிரி சுமைகளை ஏற்ற ஏற்ற கழுதை ஒருநாள் செத்துவிடப் போகுது.

வோட்டாண்டி said...

//உங்களின் காலாச்சரா வழிமுறைகளால் அதை சத்தம் போட்டு சொல்ல முடியாத உங்கள் இக்கட்டான மன நிலைதான் அது காட்டுகிறது!! //

ஹி ஹி..நம்ப charactera நீங்க தப்பா புரிஞ்ச்சிக்கிட்டீங்க..
நான் உங்க சைட்ல இருக்குறவன்..ஆனா opposite sidela என்ன கோளாருனு பாக்குறவன்.

அறிவியல்ல கூறப்பட்ட எல்லா கூற்றையும் நீங்க ஆராய்ந்து பார்த்த அப்பறமா நம்புனீங்க??
நேற்று 9 க்ரகம்னு சொன்னாங்க.. இன்னைக்கி 8 ஆயிடுச்சு.. நாம நம்புரோம்... telescopela பார்காம..

அனிமிசம், naturismnu ரெண்டு வகையான மதம்களும் மனிதனின் கேள்விகளுக்கு விடை கூற முளைத்தனனு anthropologist சொல்றாங்க. கடவுள்னு இந்த மதத்துல தனியா எதுவும் இல்லை.. இயற்கை வளங்கள், செடிகள், கொடிகள் எல்லாமே கடவுள்..சக மனிதர்கள் கூட..

//தவறென்றால் திருத்திக்கொண்டு//
நீங்களே சொல்லிட்டீங்களே..அப்ப அறிவியல் சொல்றதும் உண்மை அல்ல..கூற்று தானே??

//இன்று முள்வேலியாகி//
அது தான் எனக்கும் பிரச்சனை..
இன்று அறிவியலும் அணு குண்டாக மனிதனுக்கு தீமை விளைவிக்கிறதே..

//பிலசாபிகல் வார்த்தை ஜாலங்களை இங்கே கொட்டவேண்டாம்!! //
நான் மத சொற்பொழிவு நடத்தவில்லை.. அறிவியலால் மதத்தையும் கடவுளையும் அழிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் தான் எனக்கு உள்ளது.
ஆனால் ஒரு போதும் மதங்கள் தீமையானவை என்று கூற மாட்டேன்.. இன்றைய மதங்கள் தீமையானவை என்று கூறுங்கள்..

மதங்களை கடவுள் என்ற குறுகிய வட்டதுக்குள் சுருக்கி விடாதீர்கள்..அறிவியலயும் கடவுளை மறுக்கும் வாதத்திற்காகவும் மத கூற்றுகள் தவறானவை என்று கூற மட்டும் உபயோகபடுத்தாதீர்கள்.

எங்கள் மதம் அறிவியல் பூர்வமானது என்று மதவாதிகளின் வாதமே அறிவியல் மதத்தை விட பெரியது என்று காட்டிவிடுகிறது


//மதத்தை அறிவியலுடன் சம்ம்மந்தபடுத்த துடிக்கும் போலி நிலையை எடுக்க வேண்டாம்!! //
மதங்கள் ஏன் உள்ளது என்று அறிவியல் பூர்வமாக(sociologically) ஆராயும் நிலையில் உள்ளவன் நான்.

நானும் தருமியும் சில முஸ்லிம் பதிவர்களை 2 வருடம் முன்பு கலாய்த்து உள்ளோம்..
என்னை அவங்க பக்கம் தள்ளி விட்டு அசிங்க படுத்தாதீங்க..
நான் மதங்களை பற்றி sociologicala ஆராய்பவன்.. அந்த ஆராய்ச்சியில் மதங்களை பற்றி எந்த அபிப்ராயமும் இல்லாமல் அவற்றை அணுக வேண்டும்..
so நான் ரெண்டு கட்சியும் இல்லை...நடு நிலையும் இல்லை..
sociology கட்சி..

yasir said...

//அடுத்த பதிவு அந்த அறிவியல் அறிஞர்கள் சொன்னது தான், சார்!//

ஆவலுடன் விரைவில் எதிர்பார்க்கிறோம்....

NO said...

//நான் மதங்களை பற்றி sociologicala ஆராய்பவன்.. //

ஆராய்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள்!

//அந்த ஆராய்ச்சியில் மதங்களை பற்றி எந்த அபிப்ராயமும் இல்லாமல் அவற்றை அணுக வேண்டும்..//

அபிப்பிராயம் என்ற ஒன்று எழுவதன் முக்கிய காரணம் நினைகபட்ட அல்லது சொல்லப்பட்ட ஒன்றின் physical manifestationநை உணர்த்து வருவதே. Hence that which is only in the realm of mental state and not on physical reality gets lesser importance in sociology and by extension in the understanding of sociological underpinnings of a society.

சொல்லவருவது என்னவென்றால் ஒன்றின் "தன்மை" அது நிஜ உலகில் அமைத்திருக்கும் கட்டுமானத்தை சார்ந்தே பொருள்படுத்தப்படும்! கண்முன்னே இருக்கும் நிஜ உலகில் அதன் ஒரே அளவுகோல் அதன் மூலம் மனிதன் ஆற்றும் செயல்களே! You like it or not, the measure of destructive or constructive power of a sociological theory is only its physical manifestation in the real world.

கம்யூனிசம், பாசிசம் போன்றவைகளின் உண்மையான தன்மை மனதில் இருப்பதைவிட வெளி உலகில் வந்ததால்தான் அது எத்தகைய தீமைகளை உருவாக்கும்
என்று புரிந்து கொள்ளமுடிந்தது!

மதங்களும் அவ்வாறே! அதன் தன்மைகள் நம் கண்முன்னே. அபிப்பிராயம் இல்லாமல் அவைகளை அணுகவே முடியாது!

இதை ஒரு படி மேலே எடுத்துகொண்டு போனோமானால், இன்றைய சூழ்நிலையில் பொருந்தாத, கடுமையான மத கோட்ப்பாடுகளை மற்றும் "புத்தக" ஞாயங்களை தலையில் வைத்து ஆடுகின்ற சமூகங்கள் பின்பற்றும் மதங்களை அபிப்பிராயம் இல்லாமல் அணுகவே முடியாது! கண்முன்னே தெரிபவை அவை.அதை கடை பிடிக்கும் மனிதர்களின் மூலமாக அதன் மூர்கத்தனங்கள் இன்றும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதற்க்கு முத்தாய்ப்பாக அவைகளை தட்டி கேட்கும் தார்மீக நிலையையும், சட்டம் போட்டும் அதில் உள்ள மடமைகளை களையும் உறுதியும் எப்பொழுது
அந்த மத பற்றாளர்கள் இழந்து விட்டார்களோ, அந்த மதத்தை பற்றி ஆராயும் பொழுது கண்டிப்பாக அபிப்பிராயம் இருக்கத்தான் செய்யும்.

ஆகவே எந்தெந்த மதங்களில் சட்டம் மூலமாகவோ, மக்களின் எண்ண மாற்றம் மூலமாகவோ அதில் உள்ள தீமையான கருத்துக்கள் கட்டி வைகப்பட்டிருக்கின்றதோ, அல்லது முழுமையான நிராகரிப்பும் செய்யப்பட்டு விட்டதோ, அதன் மத புத்தகங்களில் சொல்லப்பட்ட பல விடயங்கள் சரி இல்லை என்று ஏற்கப்பட்டு விட்டதோ, அந்த மதங்களை பற்றி கண்டிப்பாக அபிப்பிராயம் இல்லாமல் அணுகலாம்!

அதைபோன்ற நிராகரிப்பு செய்யபாடாத, சாகும்வரை புத்தகமே உண்மை என்று கண்ணை மூடிக்கொண்டு கத்தும் மதங்களை கண்டிப்பாக அபிப்பிராயம் இல்லாமல் அணுகவே முடியாது!

அதைதான் திரு தருமி போன்றவர்களும் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்! நீங்கள் அப்படி செய்யவில்லைஎன்றால் உங்கள் sociological constructions of religions கண்டிப்பாக தவறாகிவிடும்!!

Post a Comment