Tuesday, May 08, 2012

569. அர்த்தமில்லாத மதச் சட்டங்கள்




*


இக்கட்டுரை இந்துவில் மே 7-ம் தேதி வந்துள்ள INDIA’S GOD LAWS FAIL THE TEST OF REASON என்ற கட்டுரையின் மொழியாக்கம்.  

இக்கட்டுரைக்கும், என் பதிவொன்று தமிழ்மணத்தால் நிறுத்தப்பட்டதற்கும் நிச்சயமாக எவ்விதத் தொடர்புமில்லை.



*

சென்ற மார்ச் மாதத் துவக்கத்தில் பம்பாயில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலில் உள்ள சிலுவையின் அடிப்பாகத்திலிருந்து நீர் சொட்டு சொட்டாக விழுந்தது. நம்பிக்கையோடு பலரும் வந்து அந்த நீரைக் குப்பிகளில் எடுத்துக் கொண்டு போனார்கள். இது சிலுவையிலுள்ள ஏசுவின் கண்ணீர் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. இது தங்கள் தொல்லைகளை நீக்கும்; வியாதிகளைக் குணமாக்கும் என்ற ஆவல் அவர்களுக்கு.  

இந்நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் இந்தக் கோவிலுக்கு அகில உலக பகுத்தறிவுவாதிகளின் சங்கத்தின் தலைவர் சானல் இடமருக்கு சென்று வழிவது ஏசுவின் கண்ணீரல்ல; கட்டிக்கிடந்த சாக்கடை நீரே capillary action மூலம் கசிந்து வந்தது என்று கண்டுபிடித்துள்ளார்.

Sanal Edamaruku, President Rationalist International
இந்தக் ‘கண்டுபிடிப்பிற்காக’ அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இதோடு அவர் கோர்ட், கேஸ் என்று சில ஆண்டுகளாவது அங்குமிங்கும் அலைய வேண்டியதிருக்கும். மத வெறுப்பை வளர்ப்பதற்காக அவர் மீது மூன்று காவல் நிலையங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆனால சானல் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டார். ஏற்கெனவே சத்திய சாயி பாபா போன்றோரின் ஏமாற்றுகளைத் தோலுரித்தவர் இவர்.
இந்தியக் குடியுரிமையில் மக்கள் ‘அறிவியல் மனப்பான்மையோடும், மனித நேயத்தோடும், கேள்வி மனப்பான்மையோடும், புதியன கண்டுகொள்ளும் ஆவலுடனும்’ இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறது. ஆனால் நடைமுறையில் இந்த சாத்தியங்களுக்காகப் போராடுபவரை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க முற்படுகின்றன.

இந்திய அரசியலமைப்பின் 295 சட்டம் மதக் கோட்பாடுகளைக் காத்து நிற்கின்றது அதன் தொடர்பான 295A மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்கின்றது. 153B மத, மொழி, இன, சாதீய உணர்வுகளை மீறுவோருக்கான தண்டனையைக் கூறுகிறது. ஆனால், இச்சட்டம் உண்மைகளுக்கு மட்டும் இடங்கொடுக்க மறுக்கிறது. சட்டத்தின் துவக்க நாளிலிருந்து இன்று வரை இந்தச் சட்டங்கள் மதக் கோட்பாடுகளின் மீது கேள்வியெழுப்பும் பல அறிஞர்களை, கலைஞர்களைத் தண்டிக்கத்தான் அதிகம் பயன்பட்டது.

1993-ல் தில்லியில் ’சஹ்மாத்’ – Sahmat – என்ற அமைப்பு பலவித ராமாயணங்களைப் பற்றிய ஒரு கண்காட்சி அமைத்தது. ரொமிலா தாப்பர் போன்ற அறிஞர்களை இவைகள் கவர்ந்தாலும், இந்த அமைப்பின் மீது பல வழக்குகள் பதியப்பட்டன. பஞ்சாபில் இத்தகைய வழக்குகள் மிக அதிகம். சமயத் தொடர்பான, அகாலித் தளத்தின் மீது கேள்வியெழுப்பும் தலித்தியம் முன்னெடுக்கும் புதிய கருத்துகள் மீது வழக்குகள் குவிந்து விடும்.

சீக்கியர், இந்துக்களுக்கு சலித்தவர்கள் நாங்கள் அல்ல என்று காட்டுவது போல் இஸ்லாமியரும் இதே அளவு ‘உற்சாகத்தைக்’ கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ’சாத்தானின் வேதம்’ என்ற நூலை வாசித்ததிற்காக பெயர் பெற்ற நான்கு எழுத்தாள்ர்கள்  மீது சட்டம் பாய்ந்தது. இஸ்லாமியரின் தீவிர அடிப்படைவாதிகளைப் பற்றிய அச்சம் எங்கும் உண்டு. 1995-ல் எழுத்தாளர் காலித் ஆல்வி 1933-ல் கடவுளுக்கு எதிரான கவிதை என்று தடை செய்யப்பட்ட, ஆனால் புதிய பாதையைக் காண்பிக்கும் சில உருது கவிதைத் தொகுப்பொன்றை Angaarey என்ற தலைப்பில் வெளிக்கொண்டு வந்தார். அவைகளில் உள்ள பல வரிகள் நீக்கப்பட்டன. 2006-ல் இந்தியா டுடே என்ற இதழில் காபாவின் படம் ஒன்று வெளிவந்தமைக்காக ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட போது மற்ற ஊடகங்கள் அதைக் கண்டு கொள்ளவேயில்லை.

இறை நம்பிக்கைகள் கூட சில சமயங்களில் நம்பிக்கையுள்ளவரையும் தண்டனையோடு தீண்டி விடுகின்றன. சென்ற ஆண்டு ஜெயமாலா என்ற பழைய நடிகை, உன்னி கிருஷ்ணா என்ற ஜோதிடர், அவரது துணையாளர் ரகுபதி ஆகியோர் அந்த நடிகை ஐயப்பனைத் தீண்டி விட்டதற்காக கேரளா நீதிமன்றங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டார்கள். பொதுவாகவே நீதியரசர்கள் பக்தி முயற்சிகளைக் கண்டிக்க வேண்டியதிருந்தாலும் வீண் வம்பென்று நினைத்தோ அச்சத்தாலோ ஒதுங்கி விடுகிறார்கள். 1958-ல் ஈ.வே.ரா. பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்க முயற்சித்த போது நீதிமன்றங்கள் திணறின. கீழ் நீதிமன்றங்கள் பிள்ளையார் சிலை புனிதப் பொருளல்ல என்று தீர்ப்பளித்தது. ஆனால் உச்ச நீதி மன்றம் ’உண்மையோ பொய்யோ, சமய நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிப்பளிக்க வேண்டும்’ என்று கூறின.

சமயங்களுக்கான இழிவு:

 1957-ல் உச்ச நீதிமன்றம் 295A சட்டத்திற்கு சில வரையறைகள் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் ‘எந்த ஒரு இழிவையும் தண்டிப்பதில்லை; ஆனால் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் இழிவை ஏற்படுத்தினால் தண்டனைக்கு வழியாகும்’ என்றது. ஆனால் உண்மையில் மதங்களை இழிவு படுத்துவது என்ன என்பது வரையறைக்கப்படவில்லை. 1998-ல் பி.வி. நாராயணாவின் ‘தர்மகாரனா’ என்ற பரிசு பெற்ற, இந்து சமயப் புனிதர் பஸ்வேஷ்வரா என்பவரின் வரலாற்று நூலை கர்நாடக அரசு தடை செய்ததை உச்ச நீதி மன்றம் அனுமதித்தது. அதேபோல் 2007-ல் மும்பை உயர் நீதிமன்றம் ‘இஸ்லாம்’ என்ற தலைப்பில் ஆர்.ஐ.. பாஸின் என்பவர் இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தாக்கி எழுதிய நூலை மகாராஷ்ட்ர அரசு தடை செய்ததை அனுமதித்தது. இவ்வாறு தடை செய்யப்படும் பல நூல்களில் சில பொறுப்பற்றதாக, தூண்டி விடுவதாக இருக்கலாம், ஆனால் பல தரமான நூல்களும் அரசுகளால் தடை செய்யப்பட்டு விடுகின்றன.

எதிர்வரும் ஆபத்து:

 1924-ல் ஆர்ய சமாஜ் சார்ந்த மஹாஷே ராஜ்பால் ’வண்ண மயமான தூதுவர்’ – Rangila Rasul – என்ற தலைப்பில் இஸ்லாமிய நம்பிக்கைகளை எதிர்த்து எழுதிய நூலில் இருந்தே இந்த போராட்டம் தொடங்கியது. கீழ் வழக்கு மன்றங்கள் அவருக்கு சிறை என்று தீர்ப்பளித்தன. ஆனால் லாகூர் உயர் நீதி மன்றத்தின் நீதியரசர் டலிப் சிங் ‘தீர்ப்பளிக்க மக்களின் எதிர்ப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் தூதுவரின் வரலாற்றைப் பற்றியெழுதும் ஒரு சிறந்த வரலாற்றாசிரியனின் நூலும் அந்த வரையறைக்குள் வந்துவிடும்’ என்றார்.
1927-ல் சுதந்திரத்திற்கு முன்பு இந்திய மேல்சபையில் இந்த தீர்ப்பு பலரால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எம்.ஆர். ஜெயகர் சமய அடிப்படைவாதம் ஒரு மன நோய் என்றார். அந்த நோய்வாய்பட்டவர்களை மற்ற சாதாரண மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்க வேண்டுமென்றார். ஆனால் இந்த அறிவுசார்ந்த சிறந்த முடிவு பொதுவான ஒரு முடிவாக இல்லை; அதற்குப் பதில் ரங்கிலா ரசூல் போன்ற நூல்கள் தண்டிக்கப்படக் கூடியவையே என்று முடிவானது. (இன்னும் ‘இந்தக் கதை’ தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது!)

சமயச் சட்டங்கள் அதற்கேற்றாற்போல் திருத்தப்பட்டன. ஆனாலும் பாகிஸ்தானில் இருப்பது போன்று யாரையும் கொல்லும் அளவிற்கு இந்தியச் சட்டங்கள் செல்லவில்லை என்பதற்கு நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இடமருக்கு மேல் உள்ள வழக்குகள் நாம் இந்தப் பிரச்சனையில் எங்கிருக்கிறோம் என்பதை நமக்குத் தெளிவாக விளக்கி விடும். பக்கத்து நாட்டு பயங்கரம் நம் நாட்டில் இல்லாமல் போக வேண்டுமானால் மக்கள் தாங்கள் விரும்பும் கொள்கைகள் மீதான கடுமையான சாடல்களையோ, இழிவுகளையோ பொறுத்துக் கொள்வதே சரியாக இருக்கும்.

தூதுவர்கள் நடத்திய அற்புத செயல்கள் பக்தியினால் எழுந்த வெறும் ஏமாற்று வித்தைகள்தான். அவைகள் வெறும் பக்திகரமான கதையாடல்களே. எல்லா சமயங்கள் போதிக்கும் பாடங்கள் எல்லாமே தவறு; உண்மையல்ல. இதற்கான ஒரே சான்று: ஒவ்வொரு மதமும் தங்களுக்குள் வேறுபட்டு நிற்கின்றன. பாரம்பரியமும் சோம்பேறித்தனமும் தான் மனிதர்கள் மதங்களை நம்புவதற்கான ஒரே காரணம். சமயங்களின் வேறுபாடுகளே மனிதர்களுக்குள் பல போர்களை ஏற்படுத்தியுள்ளன. மேலும் மதங்கள் தத்துவ எதிர்பார்ப்புகளுக்கும், அறிவியல் தேடலுக்கும் எதிரானவை. வேத நூல்களாக்க் கருதப்படுபவைகள் எல்லாமே எந்த வித பயனுமில்லாத வெறும் புத்தகங்களே.’ மேற்கண்டவற்றை மருத்துவ அறிஞரான அபு பக்கர் முகமது இப்ன் ஸக்கரியா-ராஸி என்பவர் 864-ம் ஆண்டு கூறியுள்ளார். இவர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் காலிப் அபு அல்-காசிம் அப்ட்’அல்லாவினால் நடத்தப்பட்ட மருத்துவ மனையில் உயர் பதவியிலிருந்து, பெரும் பணி புரிந்து, தன் மாணவர்களின் மத்தியில் நன் மரணம் அடைந்தார். நல்ல வேளை ... ஒரு வேளை இன்றைய இந்தியாவில் அவர் இருந்திருந்தால் அவரது கருத்துக்களினால் அவரது இறுதிக்காலம் அந்த அளவு அமைதியாக இல்லாமல் போயிருந்திருக்கும்.

25 comments:

hariharan said...

அருமையான கட்டுரை, இதை முகநூலில் இட அனுமதி வேண்டுகிறேன்.

தருமி said...

hariharan,
please do.

thank you.

-/பெயரிலி. said...

ஹிந்துவின் தயிர்சாதம் & சாம்பார் மட்டுமே அரசியலுடன் ஒத்துப்போகமுடிவதில்லை. ஆனால், இக்கட்டுரை அருமையானது.

குடுகுடுப்பை said...

me too sharing in FB

Ganesan said...

ஆஹா என்ன அருமையாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை!!! நறுக்கு தெறித்தார் போன்ற நடை, தெளிவான சிந்தனை ஓட்டம், அருமை. பிரவீன் சுவாமியின் இந்த கட்டுரையை எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி தருமி சார்.

yasir said...

நல்லதொரு கட்டுரையைத் தந்த ஆசிரியருக்கு மிக்க நன்றி. வேதங்கள் அனைத்தும் வெறும் புத்தகங்கள் அதுவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைப் புத்தகங்கள். அக் காலத்தில் பத்திரிக்கைத்துறை போன்ற தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால்தான்,கதை,கட்டுரை,கவிதை போன்றவைகளைத் தொகுத்து மொத்தமாக ஒரே புத்தகத்தை வேதம் என்கிற பெயரில் வெளியிட்டார்கள். அதில் கடவுள் என்ற கற்பனையை சேர்க்காதிருந்தால் வேதமும் வெறும் புத்தகமாக அன்றே எடைக்குப் போட்டிருப்பார்கள்.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Super Sir

Thenmerkuthendral said...

இதை விட தெளிவாக மனிதர்களுக்கு புரியவைக்கவேண்டியது இல்லை... மத அடிபடைவாதிகளுக்கு இனியாவது புரியுமா??? அடிப்படையில் மனித மனம் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ள ஏதேனும் ஒரு விஷயம் தங்களுக்கு வேண்டும் என்று எதிர்பார்க்கிறது...அதுவே தனது பாரம்பரியம் , மதம் என்று கிடைத்துவிடுவதால் கேள்வி ஏதும் கேட்க்காமல் அதை தலைக்கு மேல் தூக்கி வைத்து திரிகிறார்கள்... நன்றி திரு,தருமி அய்யா..

suvanappiriyan said...

ஐயையோ....என்ன தருமி சார்! நிலைமை இப்படி போய்க்கிட்டு இருக்குது. :-(

According to Ucoi [the Union of Islamic communities in Italy] about 70,000 Italians converted to Islam.
Why on earth should 70,000 Italians want to convert to Islam. Surely they must be bonkers. Or perhaps as the old saying goes “if you can’t beat them join them”

http://my.telegraph.co.uk/riteman/riteway/16310026/70000-italians-convert-to-islam

நீங்க என்னத்த பதிவு எழுதி எங்களை எல்லாம் எப்போ நாத்திகர்களா மாத்த போறீங்களோ தெரியல....:-)

கோவி.கண்ணன் said...

அற்புதம் நிகழ்ந்ததாக இட்டுக்கட்டி எழுதப்பட்டு மக்கள் மூளையை மழுங்கடிக்கும் நூல்களையாரும் தடை செய்யமாட்டார்களா ?

தருமி said...

சு.பி. சார்!

இந்த மாதிரி செய்தி எடுத்துப் போடும்போது இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க. நீங்க சொன்னதில இருக்கிற வார்த்தைகளுக்கு எதுக்கும் மொதல்லேயே அர்த்தம் பாத்திருங்க .. சரியா?

இதுக்கு அர்த்தம் பாருங்க -//Surely they must be bonkers. //

The last laugh is mine, சு.பி. சார்!

தருமி said...

எதுக்கும் அர்த்தத்தை நானே கொடுத்திர்ரேனே!

bonkers = insane or very stupid = புத்தி பேதலித்தவர்கள் அல்லது முட்டாள்கள்,.

கோவிச்சிக்காதீங்க .. அது நீங்க கொடுத்த மேற்கோள்தான்!!!!

suvanappiriyan said...

தருமி சார்!

//கோவிச்சிக்காதீங்க .. அது நீங்க கொடுத்த மேற்கோள்தான்!!!!//

இத்தனை பேர் மார்க்கத்தை மாற்றிக் கொண்டு இஸ்லாத்துக்கு சென்றால் யாருக்குத்தான் கோபம் வராது. கோபத்தின் வெளிப்பாடுகளே அந்த வார்த்தைகள். இங்கு மார்க்கத்தை மாற்றிக் கொண்டதுதான் பேசு பொருள். நீங்கள் சொல்லும் நாத்திகத்தை விட இஸ்லாமே மனஅமைதிக்கு வழி என்ற முடிவுக்கு இத்தாலியர்கள் வந்துள்ளனர். இனி உங்களுக்கும் கோபம் வரணுமே! :-).

வவ்வால் said...

தருமிய்யா,

அப்படிப்போடுங்க,தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து...தடைப்போட்டா தாண்டிப்போவோம்ல:-))

இந்த சட்டத்த நித்தி மாதிரி அஜால் குஜால் சாமியார்களும் பயன்ப்படுத்தி மிரட்டுறாங்க..ஜீவிப்பேட்டில படிச்சேன் இதை தான் மேற்கோள் காட்டி வழக்கு தொடுப்பேன்னு சொல்லி இருக்கார்.

//எதுக்கும் அர்த்தத்தை நானே கொடுத்திர்ரேனே!

bonkers = insane or very stupid = புத்தி பேதலித்தவர்கள் அல்லது முட்டாள்கள்,.

கோவிச்சிக்காதீங்க .. அது நீங்க கொடுத்த மேற்கோள்தான்!!!!//

நீங்க உபாத்தியார் என்பதால் பள்ளிக்கூட பசங்க பயன்ப்படுத்துற அகராதில இருக்கிற அர்த்தம் சொல்றிங்க, ஆனால் இண்டெர்நெட் ஸ்லாங் என ஒன்று இருக்கு அதுக்கு அர்த்தம் வேறு...

bonk= காதலிக்காமல் அல்லது எந்த உறவும் இல்லாமல் உடல் உறவு கொள்ளுதல்.

i want to bonk you வறியா அதுக்குனு கூப்பிடுறது. bonkers என்றால் அப்படிப்பட்ட உடல் வேட்கை கொண்ட கூட்டம்னு அந்த செய்தித்தாள் சொல்லுது ,அதை வேற புரியாம சு.பிரியன் பெருமையா எடுத்து போட்டு இருக்கார், இதான் சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிறது என்பதா :-))

சுட்டி இந்தாங்க...
http://www.internetslang.com/BONK-meaning-definition.asp

தருமி said...

ஹரிஹரன்,குடுகுடுப்பை,

முக நூலில் இக்கட்டுரையைப் பார்ப்பது எப்படி?

அ. வேல்முருகன் said...

வேண்டிய மொழியாக்கம்

அருமை அய்யா

கலிலியோவை
காலால் உதைத்தனர்
கத்தோலிக்க மத குருமார்கள்

சனல் இடமருகு
கண்டுபிடிப்புக்கு
காவல் துறை
கவனிப்பு

இதே சனல் இடமருகு ஐயப்பன் கோயிலில் ஏற்றப்படும் மகர ஜோதி பொய்யானது என்று பல ஆண்டுகளுக்கு முன்பு மக்களிடம் ஆதாரத்துடன் சொன்னார்.

ஆனால் தேவசம் போர்டு அதை ஏற்றுக் கொள்வதற்கு நீண்ட நாட்கள் ஆயின. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன் காட்டு வாசிகள் ஏற்றுவதாக ஒத்து கொண்டனர்.

ஆக இது போன்ற செய்திகளை மேலும் பரப்ப வேண்டும் மக்கள் விழித்தெழ

hariharan said...

என்னுடைய முகநூலில் இணைப்பு கொடுத்துள்ளேன்.
http://www.facebook.com/#!/hariharan.somasundaram.7

naren said...

தருமி சார்,

சுவனப்பிரியனின் வெள்ளைக்காரன் மோகம் இன்னும் விடபடவில்லை என நினைக்கிறேன்.

முதலில் 70,000 இத்தாலியர்கள் இஸ்லாத்திற்கு மாறினார்கள் என்பது பொய். Ucoi [the Union of Islamic communities in Italy]என்ற அமைப்பு தான் அப்படி சொல்கின்றது. இது சுவன்ப்பிரியன் மற்றும் அவரை போன்ற மற்ற பிற மதபிரச்சாகர்கள் சொல்வது போலத்தான் - சாரை சாரையாக மக்கள் எங்கள் பக்கம் வருகிறார்கள் என்பது.

Telegraph ஆங்கில பத்திரிக்கை இணையதளத்தில், ப்ளாக் பிரிவு உள்ளது, இதில் பதிவர்கள் தங்களின் எண்ணங்களை எழுதுவார்கள். அதில் riteway என்ற பதிவர், மேற்சொன்ன Ucoi சொன்னதை வைத்து, வவ்வால் தரும் அர்தத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது உண்மை செய்தியல்ல. Ucoi க்கு மட்டுமே உண்மை. ஹா...ஹா..

நமது சு.பி. telegraph என்ற பெயரை பார்த்திருப்பார், சரி பிரிட்டனின் ஆங்கில பத்திரிக்கையின் செய்தி போல என்று எண்ணி உங்களுக்கு மேற்கோள் காட்டி புல்லரித்துள்ளார். அந்த செய்தி சும்மா வெத்து வேட்டு.

தருமி said...

நரேன்,
எனக்குத் தெரிந்து சகோக்கள் அடிக்கடி இவர் வந்துட்டார் .. அவர் வந்துட்டார் என்ற் சொல்லிக் கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் இவர்கள் இப்படியெல்லாம் அபிநயம் பிடிப்பதால் அவர்களது கிளர்ச்சி புரிகிறது. வேறு மதங்களுக்கு மக்கள் செல்லும்போது இது போன்ற கூச்சல்களைக் கேட்டதில்லை.

suvanappiriyan said...

//வேறு மதங்களுக்கு மக்கள் செல்லும்போது இது போன்ற கூச்சல்களைக் கேட்டதில்லை.//

அப்படி 70000, 80000 என்று மாறினால்தானே நீங்களோ நரேனோ குதூகலிக்க முடியும்? இந்த அளவு வேகத்தில் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களின் லிஸ்டை நீங்கள் தேடினாலும் கிடைக்காது :-(

அடுத்து நம்ம ஜெயேந்திரரும், நித்தியும் ஜோராக சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். மதுரையில் நீங்களும் இருப்பதால் தினமும் நன்றாக பொழுது போகுமே! ஆன்மீகத்தை அணுக வேண்டிய முறையோடு அணுகாமலும் சரியான வழிகாட்டலும் இல்லாதபோது இது போன்ற கூத்துகள் அரங்கேறுவதை தவிர்க்க முடியாது. :-)

தருமி said...

//இது போன்ற கூத்துகள் அரங்கேறுவதை தவிர்க்க முடியாது. :-)//

ஆமாம் ... ஆமாம் ..! (எது போன்ற என்ற கேள்விக்கு நீங்களே பதில் தெரிந்து கொள்ளுங்கள்!)

வேகநரி said...

//வெள்ளைக்காரன் மோகம் இன்னும் விடபடவில்லை என நினைக்கிறேன்//
வெள்ளையர்கள் மீது அவர்களுக்கு மோகம் தான், அதிலேயும் வெள்ளை இன நாகரிக பெண்களிடம் இன்னும் அதிக மோகம். இஸ்லாமை நோக்கி ஐந்து வெள்ளையர்கள் வரும் போது அதில் நால்வர் வெள்ளை பெண்கள் என்று மறக்காம சொல்லி கொள்வார்கள்.

Anonymous said...

அருமையான கட்டுரை. உலகிலேயே சாத்தான் கவிதைகள்; டாவின்சி கோட் இவற்றை முதன் முதலில் தடை செய்தது இந்தியா தான். பின் சிவாஜி பற்றிய நூல்.

கட்டுரையில் சொன்னபடு இவற்றை வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் விடுவதும் தவறு.

நல்ல கட்டுரையை தமிழ் படுத்தி தந்தமைக்கு நன்றி.

http://devapriyaji.wordpress.com/2012/05/13/jesus-or-mohammad/
இதை நீங்கள் விமர்சிக்க வேண்டும்.

naren said...

/இது போன்ற கூத்துகள் அரங்கேறுவதை தவிர்க்க முடியாது. :-)//

விடுங்க சார். மேலப்பாளையத்தில் தவ்வீது அண்ணன்களும் தம்பிமார்களும் ஒரு புறமும் சுன்னத் ஜமாத் இமாம்கள் மறுபுறமும் அரங்கேற்றும் கூத்துகளை பற்றி நண்பர் சொல்கிறார்.

Post a Comment