*
அதனால் தான் சனி நம் கிரகத்தைப் பார்த்து இப்படி கூறுகிறது!!
எம்புட்டு சரியாகச் சொல்லியிருக்கு ... ஏன்னா, கடவுளைப் பார்த்தேன் என்று எத்தனை ‘புண்ணியவான்கள்’ தங்களைப் பற்றித் தண்டோரா போட்டிருக்கிறார்கள்! அதையும் அப்படியே நம்புவதற்கென்றே பல புண்ணிய ஆத்துமாக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தானே அவர்களும் அப்படியெல்லாம் கதைக்கிறார்கள்.
கடவுளின் இருப்பைப் பற்றிய கேள்விகள் என்றும் புதிதல்ல. அன்றைக்கே ஆரம்பித்தாகி விட்டது ....
முன்பு ஒரு கட்டுரை வாசித்தேன். சாய்பாபா தங்கச் சங்கிலியைக் கையில் மறைத்து வைத்து, பின் அன்பளிப்பாக அளித்ததை வீடியோ படம் எடுத்துப் போட்டிருந்தார்கள். அப்போது அந்தக் கட்டுரையில் எழுதியிருந்த ஒரு சொற்றொடர்: "What were these videographers doing when Jesus was walking on the water!"
WHAT A GREAT BUT SUCH A SIMPLE DEFINITION FOR "RELIGION"!!
என்னடா ... நமக்கு ஏனிப்படி தொந்தி பெருசா போச்சுன்னு ஆச்சரியப்பட்டேன். இப்போதான் “உண்மை” புரியுது!!! நல்ல அறிவியலாகவும் இருக்கே!
மதம் மாறிட்டா நம்ம தொப்பை டபார்னு குறைஞ்சுடுமே ... யோசிக்கணும்!! ஆனா, ஒண்ணு! இது ரொம்ப வீக் ஹதீஸ் அப்டின்னுட்டாங்கன்னா மதம் மாறியது வேஸ்டா போய்டும்!!
அட ... நம்பிக்கையாளர்கள் எல்லோருமே முழு முட்டாள்களில்லை!
நம்மள சுத்தி நடக்கிற துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் எல்லாவற்றையும் பார்த்த பிறகும் “கடவுள் அன்பானவர்” என்று சொல்லும்போது அவர்கள் எதையுமே யோசிக்க மாட்டார்களான்னு - அந்தச் சின்னப் பையன் கேக்குறது மாதிரி - கேக்கணும்னு தோணாதா??
சமூகச் சூழலில் இது போன்ற நல்ல எண்ணங்கள் எப்போதும் நம் மனதில் தோன்றவே போவதில்லை என்பது என் நம்பிக்கை. பிறந்ததும் போடும் “சூட்டோடு” தான் நாம் வாழ்ந்தாகணும் போலும்!
பையனுக்கு நல்ல சந்தேகம் வந்திருக்கு. ஆனா என்ன... வளர்ந்த பின் அந்த சந்தேகத்தைக் கூட அவன் வெளியே சொல்ல முடியாது. Blasphemy அப்டின்னுடுவாங்க ... பாவம்!
என்னதான் இருந்தாலும் பெரிய மனுசன் இல்லியா? அதான் ரொம்ப கரெக்டா இப்படிச் சொல்லியிருக்கிறார். வெறும் எண்ணிக்கையிலா இருக்கு புத்திசாலித்தனம்!
கடவுள் வானையும் பூமியையும் படைத்து மனிதனையும் படைத்தார் என்பது மதப் புராணங்கள் சொல்லும் கதை.
நம்மையும் நம் உலகத்தையும் ’சாதாரணமாகப்’ படைத்த கடவுள் ஏன் சனிக் கிரகத்தைப் படைக்கும் போது இப்படி ஒரு எக்ஸ்ட்ரா “மோதிரம்” எல்லாம் போட்டு அதனை ஸ்டைலாகப் படைத்தார்?!
எம்புட்டு சரியாகச் சொல்லியிருக்கு ... ஏன்னா, கடவுளைப் பார்த்தேன் என்று எத்தனை ‘புண்ணியவான்கள்’ தங்களைப் பற்றித் தண்டோரா போட்டிருக்கிறார்கள்! அதையும் அப்படியே நம்புவதற்கென்றே பல புண்ணிய ஆத்துமாக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தானே அவர்களும் அப்படியெல்லாம் கதைக்கிறார்கள்.
கடவுளின் இருப்பைப் பற்றிய கேள்விகள் என்றும் புதிதல்ல. அன்றைக்கே ஆரம்பித்தாகி விட்டது ....
பரவாயில்லை ... சில மதத் தலைவர்கள் “உண்மைகளைக் கூட” பேசுகிறார்கள். வாழீ ...
முன்பு ஒரு கட்டுரை வாசித்தேன். சாய்பாபா தங்கச் சங்கிலியைக் கையில் மறைத்து வைத்து, பின் அன்பளிப்பாக அளித்ததை வீடியோ படம் எடுத்துப் போட்டிருந்தார்கள். அப்போது அந்தக் கட்டுரையில் எழுதியிருந்த ஒரு சொற்றொடர்: "What were these videographers doing when Jesus was walking on the water!"
சின்னப்பிள்ளைகளை கடவுளுக்காக இப்படியா கொடுமைப் படுத்துவது??!!
நீங்க பாட்டுக்கு வானத்தை / சுவனத்தைப் பார்த்து கைநீட்டி சாமியைக் கும்பிடாதீங்க ... உங்க கண்ணை கடவுள் புடுங்கிக்குவார். ஜாக்கிரதை!!!
நல்ல கேள்வி. இந்த ரெண்டு பேர்ல யாரு பெரியவரு? யாரு மனுக் குலத்திற்கு நல்லது பண்ணியிருக்காங்க ??
WHAT A GREAT BUT SUCH A SIMPLE DEFINITION FOR "RELIGION"!!
என்னடா ... நமக்கு ஏனிப்படி தொந்தி பெருசா போச்சுன்னு ஆச்சரியப்பட்டேன். இப்போதான் “உண்மை” புரியுது!!! நல்ல அறிவியலாகவும் இருக்கே!
மதம் மாறிட்டா நம்ம தொப்பை டபார்னு குறைஞ்சுடுமே ... யோசிக்கணும்!! ஆனா, ஒண்ணு! இது ரொம்ப வீக் ஹதீஸ் அப்டின்னுட்டாங்கன்னா மதம் மாறியது வேஸ்டா போய்டும்!!
நாங்கள் அழியும் இந்த உடலைப் பற்றியல்ல அழியாத ஆன்மாவைப் பற்றித்தான் கவலைப்படுகிறோம் என்று சொல்லும் ஆன்மீகவாதிகள் தான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்.
அதென்னமோ ... ஆன்மா .. அபடி இப்டின்னு பேசினா அவங்க ‘பயங்கர’ ஆன்மீகவாதிகளாக ஆகிட்றாங்க ... என்னமோ போங்க ... பொய்களில் பல விதம் உண்டாம். அதில் ஒண்ணு ... ஆன்மா!
அட ... நம்பிக்கையாளர்கள் எல்லோருமே முழு முட்டாள்களில்லை!
நம்மள சுத்தி நடக்கிற துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் எல்லாவற்றையும் பார்த்த பிறகும் “கடவுள் அன்பானவர்” என்று சொல்லும்போது அவர்கள் எதையுமே யோசிக்க மாட்டார்களான்னு - அந்தச் சின்னப் பையன் கேக்குறது மாதிரி - கேக்கணும்னு தோணாதா??
பையனுக்கு நல்ல சந்தேகம் வந்திருக்கு. ஆனா என்ன... வளர்ந்த பின் அந்த சந்தேகத்தைக் கூட அவன் வெளியே சொல்ல முடியாது. Blasphemy அப்டின்னுடுவாங்க ... பாவம்!
மாலையில் சூரியன் என்ன பண்ணுது? ஹதீஸில் அறிவியல் பதில் இருக்கு ... தெரிஞ்சுக்கோங்க!
என்னதான் இருந்தாலும் பெரிய மனுசன் இல்லியா? அதான் ரொம்ப கரெக்டா இப்படிச் சொல்லியிருக்கிறார். வெறும் எண்ணிக்கையிலா இருக்கு புத்திசாலித்தனம்!
26 comments:
பிறந்த குழந்தைக்கு ‘மதச் சூடு’ போடுவதாக ஒரு படம் இருக்கிறதே .. அதை வாழ்க்கையில் கடைப் பிடிப்பது மிகக் கடினம். எனக்குத் தெரிந்து வாழ்க்கையில் இதை முழுமையாகக் கடைப்பிடித்த ஒரே ஜீவன்: திருமதி உஷா ராமச்சந்திரன்.
அவருக்கு இப்பதிவை மரியாதையோடு சமர்ப்பிக்கிறேன்.
@ சூப்பர் பதிவு !!! நிறைய எழுதி புரியவைப்பதை விட , இப்படியான படங்கள் பல பாடங்கள் சொல்லிவிடும் ..
என் தோழி ஒருத்தருக்கு சூப்பர் மார்கெட்லே புழுங்கல் அரிசி எங்கே எந்த ஷெல்ஃபில் இருக்குன்னுகூட அவுங்க 'சாமி' சொல்றார்.
எனக்கு அந்த அதிர்ஷ்டம் எல்லாம் இல்லையாக்கும் கேட்டோ:(
ஆமாம்.... உஷா குழந்தைக்கு சூடு போட்டாங்களா???????
அற்புதமான பதிவு.
பெரியதும் கூட.
முழுமையாகப் படித்து பின் மேலும் பதில் தருகிறேன்.
இயேசுவைப் பற்றிய வரலாற்று ஆய்வுகள் இவ்வலைப்பூவில்
பகடு என்னும் பெயர் மீது ஒரு நேசம் வந்தது, கூகிள் முந்தைய பகடுவைத் தடை செய்துள்ளது போல் தெரிகிறது, பெயரை நான் எடுத்துக் கொண்டேன்.
http://pagadhu.blogspot.in/
//உஷா குழந்தைக்கு சூடு போட்டாங்களா??????? //
சூடே போடலையாம் என்பதுதான் ஆச்சரியம்!
ஹா..ஹா..
image speaks a thousand words.
எல்லா படங்களும் சிந்திக்க வைத்தாலும், அந்த ஒட்டி பிறந்த மனிதர்கள் படம் ஆன்மா பற்றி எழுப்பி கேள்வி, இதுவரை யோசிக்கவில்லையே என்று சிந்திக்க வைக்கிறது.
அந்த சாமியார் மற்றும் சஜ்தா செய்யும் சிறுவன் முகபாவனை, என்ன எழுவுடா இது, என்பதை போல உள்ளது.
இதற்கெல்லாம் ஒரே பதில்தான், எங்கள் கடவுளின் கேரக்டர் அப்படிதான், கடவுளின் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்களே!!!!
வணக்கம் அய்யா,
நல்ல பதிவு.படங்கள் சிரிக்க வைத்தாலும் அதிகம் சிந்திக்க வைத்தன.ஆனால் எவ்வளவு சொனாலும் இதுதான் சரி என் குதிரைக்கு கடிவாளம்,கண்னுக்கு மறைப்பு போல் போட்டுக் கொண்டு உலகில் பல மத அடிப்படையில் அரசுகளே நடத்தப்படும் போது என்ன சொல்வது?.
நன்றி
எல்லாம் அருமை, ஆனா ரஸல் சொன்னது ரெம்ப சூப்பர்.
கூட்டம் நம்புதுன்னு சொல்லி ஆட்டு மந்தை மாதிரி போகக்கூடாது.
பெரியார் சொல்ற மாதிரி..நான் பகுத்தறிவு பேசுறேன் அப்படியே நீ ஏத்துக்கவேணாம் , சுயமா யோசி அப்புறம் முடிவுக்கு வா.
//எம்புட்டு சரியாகச் சொல்லியிருக்கு ... ஏன்னா, கடவுளைப் பார்த்தேன் என்று எத்தனை ‘புண்ணியவான்கள்’ தங்களைப் பற்றித் தண்டோரா போட்டிருக்கிறார்கள்! அதையும் அப்படியே நம்புவதற்கென்றே பல புண்ணிய ஆத்துமாக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தானே அவர்களும் அப்படியெல்லாம் கதைக்கிறார்கள்.//
அந்த கால முனிவர்கள் தவமிருப்பார்கள். தவத்தின் முடிவில் கடவுளைக் கண்டதாக சொல்வார்கள். அவர்கள் சொல்லும் கடவுள் என்பது ஓராயிரம் 'ஆர்கஸம்' ஒரே நொடியில் ஒரு கனத்தில் உணர்வது என்பது என்று மதன் சொல்லி படித்திருக்கிறேன். (அதனால் தான் கலவியை சிற்றின்பம் என்றார்களோ?)
அழிந்து போன டைனோசார்களைப் பற்றியும், கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களைப் பற்றியும் விஞ்ஞானம் அவற்றை கண்டுபிடிப்பதற்கு முன்பாக எழுதப்பட்ட மத நூல்களில் ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா?
ஆனாலும் தருமி போன்றவர்களுக்கு பைபிளில் உள்ள ஒரே பதில் “அப்பாலே போ, சாத்தானே!” :-)
//...மத நூல்களில் ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா?//
’மதக்காரவுக’ எல்லாம் இப்போ இங்கல்லாம் வர்ரதே இல்லை. பன்றிகளின் முன்னால் முத்துக்கள் இரைப்பது எதற்கு அப்டின்னு போயிர்ராங்க போலும்!
"கடவுள் என்பது ஓராயிரம் 'ஆர்கஸம்' ஒரே நொடியில் ஒரு கனத்தில் உணர்வது என்பது என்று மதன் சொல்லி படித்திருக்கிறேன்"
ராபின் குக் எழுதிய ப்ரைன் என்ற த்ரில்லர் கதையில் இப்படித்தான், மனித மூளைகளை மட்டும் வைத்து அவற்றிடம் வேலை வாங்கிக் கொண்டு ‘குரங்காட்டி குரங்குக்கு பொறி போடுவதைப் போல’ மூளைகளுக்கு ஆர்கசம் கொடுத்துக் கொண்டிருப்பான்...
கடைசிதான் சூப்பர்.
படங்கள் நன்றாக இருக்கிறது; தயவு செய்து படங்களை பெரிதாகப் போடவும்; a picture is worth....words...
//படங்களை பெரிதாகப் போடவும்;//
படங்களைக் க்ளிக்குங்களேன். தனியாக, பெரிதாக அப்படம் உருவெடுக்குமே!
a picture is worth....a click!
இவர்கள் கடவுளை பற்றி சொல்லும் கதைகளை கேட்டு அப்படி ஒரு விஷயத்தை கற்பனை செய்தாலே... பிரம்மிப்பாக உள்ளது. ஆனால் கடவுளை நம்பும் இவர்கள் அந்த பிரம்மாண்டத்தை சுவைக்காமல் இப்படி களத்தில் இறங்கி(என் கடவுள் தான் பெரிது என் மதம் தான் பெரிது என) சன்டை செய்வது வேடிக்கையாக உள்ளது... உன்மையில் கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் இவர்களது இந்த மூடதனத்தை நிறுத்த இந்நேரம் வந்திருக்க வேண்டும். (அதனால் தான் பெரியார், Dawkins போன்றோர்களை கடவுள் அனுப்பினார் என்று சொல்லாமல் இருந்தால் சரி தான்.)
மதச் சூடு இன்னும் எல்லோரும் செய்வது தான்... சின்ன வித்யாசம் மட்டும் தான் இவர்கள் போடும் சூடு மனதில் ஆழமான வடுவாகிறது, சிந்திக்க தடுக்கிறது, சக நன்பர்கள் மாற்று மதத்தில் இருந்தால் நரகம் செல்வார்கள் என நினைக்க தூண்டுகிறது... இவை எல்லாவற்றையும் ஞாயப்படுத்துகிறது...!!
தங்கள் மத புத்தகம் அறிவியலின் முன்னோடி என நினைக்கிறார்கள், ஆதாரங்களை காண மறுக்கிறார்கள்...
தருமி ஐயா, பரிணாம அறிவியலாலர்கள் மறுத்த ஆதாரங்களை மட்டும் பல நம்பிக்கையாலர்களின் தளங்களில் பார்கிறேன்... பரிணாமத்தின் transitional fossils குறித்து wikipedia'வில் படித்திருக்கிறேன்...
தமிழில் பரிணாமம் குறித்து உங்கள் பதிவுகளையும் படித்திருக்கிறேன்... நீங்கள் பரிணாம ஆதாரங்களை ஒரு பதிவாக வெளியிடுவது பயனுள்ளதாக இருக்கும்.
//நீங்கள் பரிணாம ஆதாரங்களை ஒரு பதிவாக வெளியிடுவது பயனுள்ளதாக இருக்கும். //
நானும் ஆரம்பித்தேன். ஆனால் நண்பர் சார்வாகன் மிக மிக அழகாக, ஆழமாக எழுதுகிறார். நீண்ட ஆய்வு, வாசிப்பு, தொடர்ந்த தேடல் என்று அவரது பதிவுகள் இருக்குமே. (அதற்கு வழக்கம் போல் பதில்கள் வராது என்பதும் ஒரு நியதி!)
Higgs Boson Particle found....
மத அறிவியலாளர் : கடவுள் மனிதனை (களி)மண்ணில்(துகள்) இருந்து படைத்தார். God made particle into man.
அறிவியலாளர்: அறிவியல் கடவுளை மண்ணாக்கியது. Science Made God into a Particle.
god particle found..
please tell me which god?
is it allah, jesus,krishna or never sudalaimadan?
என் தலை இங்கே உருளுவதை இன்னைக்குத்தான் பார்த்தேன் :-) தருமி சார், மெயில் போட்டால்
என் ஜீ மெயில் ஐடிக்குப் போடுங்க.
என் வாழ்நாள் எல்லாம் வியந்துக் கொண்டு இருப்பது உலகில் உள்ள 99.99999... மனிதர்களுக்கு
கடவுள் என்ற கான்செப்ட் மேல் இருக்கும் நம்பிக்கை. பல முறை என்னால் அதை மறுத்து
விவாதிக்க முடிவதில்லை :-)
.
உலகில் உள்ள எல்லா அழகிலும், நன்மைகளிலும், அருமைகளிலும் எல்லாரும் கடவுளைக் காணும்பொழுது என் கண்ணில் கொடுமைகளிலும், நாற்றங்களிலும், அசிங்கங்களிலும் கடவுள் தெரிகிறார் , அக்கணம் நான் கடவுளை நினைக்கிறேன், அதாவது
கடவுள் என்று ஒன்று உண்டா என்று!
//மெயில் போட்டால்
என் ஜீ மெயில் ஐடிக்குப் போடுங்க.//
ரீடிஃப் மெயில் முகவரிக்கு அன்றே அனுப்பியிருந்தேன்.
//என் வாழ்நாள் எல்லாம் வியந்துக் கொண்டு இருப்பது உலகில் உள்ள 99.99999... மனிதர்களுக்கு
கடவுள் என்ற கான்செப்ட் மேல் இருக்கும் நம்பிக்கை.//
தனிப்பிறவி தான்!! அதை பிள்ளைகளுக்கும் எடுத்துட்டு போனது ரொம்ப ரொம்ப வித்தியாசமான ஆளுன்னு தெரிஞ்சது. அதான் ...
அண்ணா, சரியா சொல்லியிருக்கீங்க... எத்தனைப் பேருக்கு நீங்க சொல்றது புரியுது? புரிஞ்சுக்க முயலவும் மாட்டேங்குறாங்க.
ஒரு வருசத்துக்கு முந்தி ஒரு அபத்தமானப் பதி ஒன்றைப் படித்தேன். http://vilambi.blogspot.com/2009/12/blog-post.html இப்படி காதுலப் பூ சுத்துறவங்களை நினைச்சா... அய்யோ அம்மா

அருமையான பதிவு,
அதிலும் //… You talk God, you’re religious. God talks to you- you’re psychotic.”// மதங்களைப் பற்றி கூற இந்த ஒன்று போதும்.
Post a Comment