*
நம் ப்ளாக்குகளின் தொகுப்பைப் பார்க்கும் பட்டியல் ஒன்று இப்போது புதிதாக வந்துள்ளது. View count இதில் புதிய ஒரு சேர்க்கை. ஆறு ஏழு வருஷமா பதிவுகள் எழுதினாலும் அவ்வப்போது எத்தனை பேர் நம்ம பதிவைப் பார்த்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல இருக்கிற சந்தோஷம் இன்னும் விடலை. தொடர்கதையாகத்தானிருக்கு !!
அதிலும் கடைசியா இப்போ அந்த View count-களைப் பார்க்கும்போது ஒரு விஷயம் கொஞ்சம் ஆச்சரியாக இருந்தது. வழக்கமாக என் பதிவுகளில் உள்ள இஸ்லாமியப் பதிவுகளுக்கு ‘கூட்டம்’ வரும் என்பது தெரியும். சரி .. நம்ம ’விஷய ஞான’த்தைத் தேடி கூட்டமா வர்ராங்கன்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். ஆனால் ’அவாளுக்கு மட்டும்’ அப்டின்னு ஒரு பதிவு போட்டேன். View count பிச்சுக்கிட்டு போகுது ! ஏன்னு தெரியலை! நீங்களே பாருங்களேன் ...
5.5.12 - இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை..923 (பின்னூட்டங்கள் 20)
5.6.12 - இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை...1192 (பின்னூட்டங்கள் 27)
சரி .. நம்ம நினச்சதை விடவும் ’இந்தச் செய்தி நல்லாவே பரவியிருக்குன்னு’ நினச்சு, சந்தோஷப்பட்டுக்கிட்டேன். (இஸ்லாமியர் யாரும் அப்பதிவைப் படிக்கவேயில்லை என்று தெரிந்தாலும் சந்தோஷப்பட்டுக் கொண்டேன்!!) ஆனால் அதற்குப் பிறகு இன்னொரு பதிவு போட்டேன்.
6/22/12 - அவாளுக்கு’ மட்டும் ! 1240. (பின்னூட்டங்கள் 48) என்ன ஆச்சரியம் ..
இந்தப் பதிவு நிறைய மக்களால் படிக்கப்பட்டிருக்கிறது! இதில் எனக்கே ஒரு சின்ன வருத்தம். ஏன்னா நான் ஒன்று நினைத்து எழுதினேன்.
//.’அவாளுக்கே’ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துறது பிடிக்குமோ இல்லையோன்னு நேக்கு ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு. . இருந்தும் ஆளாளுக்கு இப்படி நடத்துறாளே .. ஏன்? யாருக்காக இப்படில்லாம் பண்றா? இப்படிப் பண்றவா எல்லோரும் அவாளும் கிடையாதுன்னு நான் நினச்சுண்டு இருக்கேன். பின் ஏன் இப்டி பண்றா...?//
1. இந்த மாதிரி ஜாதியை ஒட்டி நிகழ்ச்சி நடத்துவது தேவையில்லாதது.
2. இது போன்ற ‘ஜாதி நிகழ்ச்சி’யை நடத்துவது பொதுவாக அந்த
ஜாதிக்காரர்களாகக் கூட இருப்பதில்லை.
3. இப்படி நடக்கும் நிகழ்ச்சிகளை அந்த ஜாதி மக்களே விரும்ப மாட்டார்கள்.
4. இருந்தும் இப்படி நடத்த வேண்டியது ஏன்?
5. Viewership / TRP இதனாலெல்லாமா கூடி விடும்?
பழைய தமிழ் சினிமாக்களைப் பார்த்தால் சில ஜாதிப் பெயர்கள் மட்டும் வரும் – செட்டியார், பிள்ளை, ஐயர் ..இப்படி. அந்தக் காலத்தில் அது இருந்தது; ஒழிந்து போகட்டும். இப்போது பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதியை இணைப்பதில்லை என்ற அளவிலாவது “முன்னேறியிருக்கிறோம்”! இன்னும் ஏனிந்தக் கருத்துக்களை மக்கள் தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்ததால் இப்பதிவை இட்டேன்.
இதில் எனக்கு ஒரு ஏமாற்றம். முதலில் டோண்டு எனக்கு நன்றி சொல்லி ஒரு பதிவிட்டார். அதில் அவருக்கு இந்த நிகழ்ச்சி மிக்க மகிழ்ச்சி கொடுத்ததாகச் சொன்னார். அதோடு அவர் சொன்ன ஒரு முக்கியமான விஷயம்:
இந்த நிகழ்ச்சி பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிப்பதாக அவர் நினைத்துக் கொண்டார். எனக்கு அப்படித் தெரியவில்லை. எந்த ஜாதியாக இருந்தாலும், ஏன் ஜாதியை வைத்து ஒரு நிகழ்ச்சி என்று தான் நினைத்தேன். ஆனால் அதற்குள் Tamil அப்டின்னு ஒருத்தர் வந்து கொக்கரித்து விட்டார். இருவருமே நான் சொன்னதின் மையப்புள்ளியைக் கவனிக்க மறந்து விட்டார்கள்.
(டோண்டுவின் பதிவில் சில பதில்கள் சொல்லியிருக்கலாம். தேவையில்லை; அவர்கள் இருவரும் சந்தோஷமாகவே இருக்கட்டுமே என்று விட்டு விட்டேன்! )

//பார்ப்பன வெறுப்பளர்களுக்கு நம்மை மாதிரி சிலர் வந்து பதிலடி கொடுப்பது அவசியம்.//
இந்த நிகழ்ச்சி பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிப்பதாக அவர் நினைத்துக் கொண்டார். எனக்கு அப்படித் தெரியவில்லை. எந்த ஜாதியாக இருந்தாலும், ஏன் ஜாதியை வைத்து ஒரு நிகழ்ச்சி என்று தான் நினைத்தேன். ஆனால் அதற்குள் Tamil அப்டின்னு ஒருத்தர் வந்து கொக்கரித்து விட்டார். இருவருமே நான் சொன்னதின் மையப்புள்ளியைக் கவனிக்க மறந்து விட்டார்கள்.
(டோண்டுவின் பதிவில் சில பதில்கள் சொல்லியிருக்கலாம். தேவையில்லை; அவர்கள் இருவரும் சந்தோஷமாகவே இருக்கட்டுமே என்று விட்டு விட்டேன்! )
*
6 comments:
சாதி இரண்டொழிய வேறில்லை. ஒன்னு தன் சாதி. இன்னொன்னு பிறசாதி. பட்டணத்துலயும் இதுதான் கதை. இதுக்கு வெளிப்படையா சாதியைச் சொல்லிக்கிற பட்டிக்காடுகள் மேல்.
ஒரு சின்ன தகவல். இப்பல்லாம் பட்டணத்தில் காதல் நிறைய இருக்கு. இது வெளிமாநிலமா இருந்தாக் கூட ஓரளவு ஏத்துக்கிறாங்க. தமிழ்நாடா இருந்தா இன்னன்ன சாதிகள்ள காதலிச்சா ஒத்துக்கலாங்குற அளவுக்கு வளந்திருக்கு.
சார் ! நல்ல இருக்கிறீர்களா ?
சாதி, மதம் இரண்டுக்கும் கிராக்கி அதிகம் என்பதை பதிவுகளைப் படிப்பவர்களை வைத்தே சொல்லிவிடலாம் .... !!!
கிண்டல் செய்தாலும் நம்மாள் அங்கே இருக்கணும்னு அவாள்கள் நினைக்கிறாங்க என்ன செய்ய .. எப்படியானாலும் புகழ் பரவட்டும் என்ற எண்ணம் போல !
செப்டம்பர் 11 -க்கு பிறகு இஸ்லாம் குறித்து பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு கொத்து கொத்தாக அமெரிக்கர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறி வருவதாக இங்கும் ஒரு பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கின்றார்கள் .... !!!
சாதிப் பெயர் போடும் வழக்கம் மீண்டும் தமிழ் நாட்டில் துளிர்த்துள்ளதை பேஸ்புக்கில் அண்மையில் கண்டுக் கொண்டேன்.. பல இளையவர்கள் ஐயர், முதலியார் போன்றவற்றை பெயர்களோடு இணைத்து பெருமையடைந்து வருகின்றனர்.. எங்கே போய் முடியுமோ ?!!!
ராகவன் சொன்னது போல இன்ன இன்ன சாதியாகப் பார்த்துக் காதலித்துக் கொள் என பெற்றோர்கள் சொல்லிவருவதையும் நானும் கேள்வியுற்றேன் .. பலர் மலையாளிகள், தெலுங்கர்களாக இருந்தால் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்வதையும் கேள்விப்பட்டேன் ! சாதியம் வேறு வழிகளில் வளர முற்படுகின்றது ... !!! என்பது தான் உண்மை ..
கனடாவில் தமிழர்கள் சாதிப் பார்ப்பது வெகு இயல்பான ஒன்று .. சாதிப் பெயரை சொல்லாமல் ஊர் பெயர்களை சொல்லி .. நீங்க இந்த ஊரா அந்த ஊரா என்பார்கள் ... அங்கே பெண் எடு மாப்பிள்ளை எடு என்பார்கள் .. இந்த இந்த ஊரில் இன்ன இன்ன சாதி என்று தெரிந்துக் கொள்கின்றார்கள் ...
ஈழத்தமிழர்கள் சாதியத்தை வேறுவிதமாக வளர்க்கின்றார்கள் ..
திண்டுக்கல் தனபாலன்
நன்கிருக்கிறேன். நன்றி
வண்க்கம் அய்யா
பிராமணர்கள்,வஹாபிகள் அதிகம் தமிழ் பதிவுலகில் விமர்சிக்கப்படுவது ஒரு இயல்பான விடயம் ஆகி விட்டது.பிராமணர்கள் அதிகம் பதில் ,விள்க்கம் சொல்ல அலட்டிக் கொள்வது இல்லை.டோண்டு சார் மட்டும் கொஞ்சம் பதில் சில சம்யம் அளிப்பார்.
நம் வஹாபி சகோக்கள் விள்க்கம் அளிக்கிறேன் என்று கூட்டமாக வந்து குழப்பி இன்னும் அதிக விளம்பரம் அளிப்பார்கள்.
விமர்சன பதிவுகளுக்கு அதிக கிராக்கி இருப்பதும் உண்மைதான்.
ஆகவே
"அவாள் ஒரு தொடர்கதை"
"வஹாபி ஒரு விடுகதை"
ஹா ஹா ஹா
நன்றி
எழுத்துலக நரேந்திர மோடி சார்..(இந்த பட்டமளிப்பு மறுமொழியை படித்த பிறகு இன்னும் i am ROFL)
அவாளுக்கு மட்டும் - பதிவிற்கு வந்த view count பதிவின் தன்மைக்கு ஏற்பதான் வந்திருக்கிறது. இணைய தளத்தில் அவர்கள் அதிகமாக இருப்பதால், அவர்களை பற்றிய பதிவென்றால் அதிகமான வாசகர்கள் அதனை படிப்பார்கள்.
இப்போது நமது சமூகத்தில் மற்ற சாதிகளிடையே நடைப்பெற்றுக்கொண்டிருப்பது Sankritisation. பிராமணர்களாக துடிப்பது.
ஆனால் டோண்ட் சார் பதிவுகளை பார்த்தால் முதல் முறையாக Suthrisation நடைப்பெற்றுகொண்டிருப்பது தெரிகிறது. பிராமணர்கள் சூத்திரர்களாக மாறத் துடிப்பது lol.
நன்றி.
Post a Comment