*
* கட்டுமானங்கள் பல நடக்கின்றன. சைனா போடும் சாலைகள், கட்டும் கட்டிடங்கள் எல்லாமே கடன் உதவியால் கட்டப்படுபவைகளாம்.
* அதேபோல் இந்தியக் கட்டுமானங்களும் நிறைய நடை பெறுகின்றன. ஆனால், அவை யாவும் இந்தியாவின் ‘உதவும் கரங்களால்’ கட்டப்படுபவைகளாம். எல்லாம் ‘உதவி’ தானாம்! என்னே தாராளம்!
* இங்கிலாந்து உலகமெல்லாம் சுற்றிச் சுற்றி வந்து காலனிகள் அமைத்ததாலேயே இன்று உலகில் பல பிரச்சனைகள் தோன்றிவிட்டன என்பது எப்போதுமே என் எண்ணம். உலகின் நம்பர் 1 வில்லன்கள் அவர்கள்தான் என்றொரு எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.
* எப்படியோ இருந்த இந்தியாவை இரண்டாகப் பிரித்து இரு நாடுகளாக்கியது. இரண்டிற்கும் எப்போதும் சண்டை; எங்கேயும் சண்டை இன்றுவரை. மத்திய கிழக்கில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனை ...
* அதே போல் பிரிந்திருந்த இரு மரபுக் குழுவினரை இணைத்து ஒரே நாடாக்கி இலங்கையிலும் தகராறு. புண்ணியவான்கள் .... நல்லா இருக்கட்டும்!
* ராஜபக்சே இலங்கை அதிபருக்கான தேர்தலில் அவரது கட்சியான S.L.F.A.-உடன் L.T.T.E. ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. 2% அதிகமான ஓட்டு பெற்று அவர் வெற்றி பெற்றதற்கான காரணமாக அது அமைந்தது. அந்த ஒப்பந்தம நடக்காதிருந்தால் வரலாற்றின் பக்கங்கள் வேறு மாதிரியாக எழுதப்பட்டிருக்கலாம்.
* ரணில் விக்ரமசிங்கே வேறு கட்சிகளுடன் எந்த உடன்பாடும் கொள்ள மாட்டார்.
* ராஜபக்சேயின் உறவினர்கள் பலரும் அரசியல் பலமிக்கவர்களாக இருக்கிறார்கள்.
* அரசில் மிக தாராளமயமான ஊழல்கள். ஆனாலும் இன்றைய அரசியல் நிலையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ராஜபக்சேயை இலங்கையில் அசைக்க முடியாது.
கும்பிடுகிறார் ..... |
* ராஜிவ் காந்தி – ஜெயவர்தனே இருவரின் பேச்சு வார்த்தையில் உருவானது இலங்கையின் 13 வது சட்ட திருத்தம். அதில் வடக்குப் பகுதிகளுக்கு தன்னாட்சி தருவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஆனால் இப்போது அந்தத் திருத்தத்தை பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் ராஜபக்சே அரசு முனைந்துள்ளது.
* தற்பொழுது மொத்தம் 9 மாகாணங்கள் – Provinces – இருக்கின்றன. இவைகளை 5 மாகாணங்களாகத் திருத்தும் முனைப்பில் ராஜபக்சே அரசு உள்ளது.
* அவ்வாறு திருத்தி அமைக்க படும் 5 மகாணங்களில் எதிலுமே தமிழர் தனிப்பெரும்பான்மை இல்லாதவாறு செய்யவுள்ளனர். இதனால் தமிழருக்கென்று தனிப்பகுதி என்று ஏதும் இல்லாமல் போகும்.
* ஜாப்னா மக்களுக்குத் தேவையான் அடீப்படைத் தேவைகள் மட்டும் கிடைத்தால் இன்னும் சில ஆண்டுகளிலேயே அதனை ஒரு சிங்கப்பூராக தமிழர்கள் மாற்றி விடுவார்கள்.
* அவர்களுக்கு முதலீடு செய்ய பல நாட்டு இலங்கைத் தமிழர்கள் போட்டி போடுவார்கள்.
* ஆனால் அந்த அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்வதற்கான அறிகுறிகள் ஏதும் இன்னும் இல்லை.
* தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களச் சிப்பாய்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து அங்கு குடியேற்றுகிறார்கள்.
* இந்த நிலத்தை நாலைந்து ஆண்டுகளில் அவர்கள் தமிழர்களுக்கே விற்று விட்டு சிங்களப் பகுதிக்குள் திரும்பிச் சென்று விடும் வாய்ப்புண்டு.
* இப்படிக் குடியேறும் மக்களும் இன்னும் ஒரு வித அச்சத்தோடு தான் குடியேறுகிறார்கள்.
*
* இந்துவில் சமீபத்தில் வந்த ஒரு கட்டுரையிலிருந்து ...
http://www.thehindu.com/opinion/op-ed/in-postwar-jaffna-a-slow-piecing-back-of-life/article4041231.ece
2012....
போருக்குப் பின் ஜாப்னாவில மிகப் பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. அப்படி நடக்கும் பல மாற்றங்களில் ஒன்று துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் புதியதாகத் தோன்றியுள்ள ஹோட்டல். திலக் தியாகராஜா என்ற ஒரு பெரும் முதலீட்டாளர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது. 17 வயதிலேயே ஜாப்னாவை விட்டுச் சென்று, இங்கிலாந்தில் பெரும் நில விற்பனையாளரான இவர் இந்த விடுதியைக் கட்டியுள்ளார். பழைய ஜாப்னாவின் முக்கியத்துவம் விரைவில் மீண்டும் வந்து விடும் என்ற நம்பிக்கையில் இவர் உள்ளார். தமிழர்களால் ஜாப்னாவை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமென்கிறார்.
ஆனால் இவர் எதிர்பார்த்த மாற்றம் இன்னும் ஏதும் இங்கு நடந்தேறவில்லை. புதிதாக வரும் நெடுஞ்சாலைகள் வடக்குப் பகுதியையும் சிங்களவர் வசிக்க எளிதாக்குவதற்கே என்று பல தமிழர்கள் நினைக்கிறார்கள்.
எங்களுக்கு இப்போது வேண்டியது சாலைகளல்ல. வளர்ச்சி வேண்டும். ஆனால அது நாங்கள் விரும்புவது போல் வேண்டும். நல்ல அரசியல் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தமிழரின் எண்ணம்.
இன்னும் சில (பழைய ) துண்டுச் செய்திகள் ...
2009 ...
http://lrrp.wordpress.com/2009/09/14/sri-lanka-goes-after-ltte-assets-in-eritrea/
இலங்கை அரசு புதிய அரசியல் தொடர்பை எரிட்ரியா என்ற நாட்டோடு ஏற்படுத்திக் கொள்கிறது. புலிகள் அந்த நாட்டிலிருந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிக்கவே இந்த முயற்சி. இலங்கையின் போர்ப்படையின் உளவுத் தலைமையில் இருக்கும் மேஜ்ர் அமல் கருணாசேகரா இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தோன்றுகிறது. இலங்கையில் தோற்றுப் போன புலிகளை முற்றுமாக ஒழிக்க அவர்களின் பல்நாட்டு முயற்சிகளைத் தோற்கடிக்கவே இந்த ஏற்பாடு. பல அயல்நாடுகளில் புலிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் இலங்கையில் மீண்டும் பிரச்சனைகள் வரக்கூடும் என்ற அச்சமே இதற்கான காரணம்.
கொழும்பு நகரிலும் ஜாப்னா நகரிலும் அடுத்த ஒரு போருக்குத் தயாராகும்படி செயற்கைக்கோள் மூலம் நடக்கும் செய்திகள் பரிமாற்றப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. களங்களில் நடந்த் ஒரு போர் இப்போது உளவு வேலைகள் மூலமாகத் தொடர்வதாகத் தெரிகிறது.
*
*
http://asmarino.com/en/news/290-sla-finds-12-ltte-fighters-planes-at-eritrea
28 August 2009 - கொழும்புவிலிருந்து வெளியாகும் லங்கதீபம் என்ற நாளிதழில் இலங்கைப் படையினர் எரிட்ரியாவின் விமான தளத்தில் புலிகளின் பன்னிரண்டு போர்விமான்ங்களைக் கண்டுபிடித்த்தாகக் கூறுகிறது.
*
2013 ...
http://tamilleader.com/mukiaya/8438-2013-01-03-01-52-51.html
கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் கற்பிப்பதற்கு கல்வி வலயங்களுக்கு ஊடாக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்களத்தைத் திணிக்கும் இந்த முயற்சி வடபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ....
2013 ஆம் ஆண்டு 1 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்கும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்திலுள்ள பாடசாலைக்கும் படையினர் சீருடைகளுடன் கற்பித்தலுக்காகச் சென்றிருக்கின்றனர்.
இவ்விடயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர். எனினும் இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2013 ...
http://tamilleader.com/mukiaya/8438-2013-01-03-01-52-51.html
கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் கற்பிப்பதற்கு கல்வி வலயங்களுக்கு ஊடாக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்களத்தைத் திணிக்கும் இந்த முயற்சி வடபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ....
2013 ஆம் ஆண்டு 1 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்கும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்திலுள்ள பாடசாலைக்கும் படையினர் சீருடைகளுடன் கற்பித்தலுக்காகச் சென்றிருக்கின்றனர்.
இவ்விடயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர். எனினும் இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
*
இன்னும் அங்கே முழு அமைதியோ, நிம்மதியோ பிறக்கவில்லை ....
*
ஒரு குறும்படம்.
பிடித்தது.
பல கேள்விக்குறிகள் .....
எனக்கு ஒரு சந்தேகம்:
நம் மத்திய அரசு மெளன புத்தனாக இலங்கை விஷயத்தில் இருப்பது ......
சீனா-இலங்கை சம்பந்தப்பட்ட உலக அரசியல் தொடர்பானதா ...?
அன்னை, ராகுல் et al தொடர்புள்ள உள் அரசியல் தொடர்பானதா ...?
*
3 comments:
//எப்படியோ இருந்த இந்தியாவை இரண்டாகப் பிரித்து இரு நாடுகளாக்கியது. இரண்டிற்கும் எப்போதும் சண்டை; எங்கேயும் சண்டை இன்றுவரை.//
சண்டை பிடிக்கட்டும் என்று தான் பிரித்து வைத்தார்கள். ஆனா பிரிக்காமவிட்டா கூட மார்க்கபந்துக்கள் ஏதோ நல்ல பிள்ளைகளாக இந்தியாவில் இருந்துவிடுவார்களா? மார்க்கத்திற்க்கும் அமைதிக்கும் என்றுமே ஒத்து போகாது. தானும் அமைதியாக வாழ மாட்டார்கள் மார்க்கத்தில் இருந்து கொண்டு அமைதியாக வாழ விரும்புபவனையும் அமைதியாக வாழ விடமாட்டார்கள். பிற மக்களையும் அமைதியாக வாழ விடமாட்டார்கள்.
இலங்கையை இந்திய செல்ல குழந்தை போல பார்ப்பதன் காரணம் இந்திய உதவிக்கு வரா விடின் இலங்கையில் சீனா அகலக்கால் வைத்து விடும் ..அப்புறம் இந்தியாவுக்கு இருக்குற பிராந்திய வல்லரசு எனும் பிசுகோத்து பட்டம் காணாமல் போய் விடும் ..அதனால் தானே மீனவர்கள் தாக்க பட்டாலும் இந்திய மென்மையா தடவி விட்டு கிட்டு இருக்கு ..
பிரித்தானியா தமிழர்களை உயர்த்தி பெரும் பான்மை சிங்களவர்களை உசுபேத்தியது...வெள்ளையன் போன பின் தமிழன் பழைய பகையை மனதில் வைத்து அடிக்க பட்டான்.இவ்ளோ ஏன் ....1956 இல் தனி சிங்களம் மட்டும் என சட்டம் கொண்ட வரப்பட்டு பின்பு அது காணாமல் போனது ..
தமிழர் தாயக பகுதி மக்கள் தலைவரின் பேச்சை கேட்டு கேட்டே கெட்டு போனார்கள்..2002 இல் ரணிலை வெற்றி பெற செய்ய சொன்னார்,...செய்தார்கள்... பின்பு ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க செய்தார் ...இறுதியில் அவரும் அழிந்து மக்களும் அழிந்தது மட்டுமே மிச்சம்
அரசியல் தொடர்புள்ளவைகளை இதில் தொகுத்துள்ளேன். ஆகவே நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் இருக்கும் என நினைத்தேன்.
ஏமாற்றமே!
Post a Comment