*
பெங்களூரு போனேன்.
ஒரு கதை கேட்டேன்.
அது வெறும் கதையா உண்மையா என்றும் தெரியாது.
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் ...
வெள்ளைக்காரன் நம்ம ஊர்ல காலு வச்ச புதுசுல, ஒரு ஊரு பக்கம் ஒரு பாட்டி அவிச்ச கடலையைக் கூறுகட்டி வித்துக்கிட்டு இருந்துச்சாம். அப்போ அங்க ஒரு வெள்ளைக்காரன் - இங்கிலீசுக்காரன் - பாட்டி பக்கத்துல வந்து நின்னு பாத்துக்கிட்டு இருந்திருக்கான். அவனுக்கு தான் நிக்கிற இடம் எதுன்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அந்தப் பாட்டிகிட்ட இங்லீபீசுல இதென்ன இடம்னு கேட்டிருக்கான். பாட்டிக்கு தான் விக்கிறது என்னன்னு அவன் கேட்கிறான்னு நினச்சிக்கிட்டு, ‘பெந்த களுரு’ - அதாவது கன்னடத்தில அவிச்ச கடலைன்னு - அப்டின்னு சொல்லியிருக்கு. அதைக் கேட்ட இங்கிலீசுக்காரன் அந்த ஊருக்கு வச்ச பேரு தான் பெங்களூருன்னு ஆகிப் போச்சாம்.
****************
நம்ம ஊர் வத்தலகுண்டுவை பட்லகுண்டு ஆக்கினது மாதிரி இப்படி ஒரு கதை உங்க ஊர்ல இருக்குங்களா, பெங்களூருகாரங்களே ...?
****************
பெங்களூர்ல எக்கச்சக்க சாலைப் போக்குவரத்து. சென்னையிலாவது பரவாயில்லை... peak hour அப்டின்னு ஒண்ணு இருக்கும் போலும். அப்போ போக்குவரத்து மோசமாயிடுது. இங்க எங்கேயும் .. எப்போதும் .. ஒரே மாதிரிதான் போலும். வாழ்க்கை வெறுத்துப் போச்சு. பெங்களூர்ல மூணு நாலு நாள், அடுத்து சென்னையில் மூணு நாள் இருந்ததும் நான் சொன்னது: ‘அட போங்கப்பா ... நீங்களும் உங்கள் பெங்களூரும், சென்னையும். எனக்கு என் ஊர் மதுரையே போதுமப்பா ... சுகம்’, அப்டின்னேன். சும்மாவா சொன்னாய்ங்க .. மதுரையைச் சுத்துன கழுதை வேறு எங்கும் போகாதுன்னு ...!
*******************
ஆனாலும் தமிழ்நாட்டுப் போலீஸ் மாதிரி அசமஞ்சங்கள் வேறு எங்கேயும் இருக்காதோன்னு ஒரு சந்தேகம் வந்திருச்சி பெங்களூரு போய்ட்டு வந்ததும். எல்லோரும் ஹெல்மட் போட்டுட்டு வண்டி ஓட்றாங்க. பைக்கில மூணு பேரு போனதைப் பார்த்து மைசூர்ல ஒரு போலீஸ்காரர் நல்லா விரட்டுனார்.
இங்கே தமிழ்நாட்டுல பைக்கில் எத்தனை பேர் போனாலும் போலீஸ்காரர் நின்னு பார்த்துக்கிட்டே இருப்பார். ஹெல்மட விவகாரம் இதை விட இன்னும் கேவலம்.
ஆனாலும் நம்ம ஊர்ல மாதிரியே கர்நாடகத்திலும் வண்டி ஓட்டிக்கிட்டே செல்போன் பேசுற முட்டாள்கள் நிறைய பார்த்தேன். அதை ஏன் நிறுத்த காவல் துறை முயற்சிக்கவில்லைன்னு தெரியலை.
நம்ம ஊர் போலீசால் அதையெல்லாம் செய்ய முடியாது. பாவப்பட்ட மக்கள் ..!
*********************
ஒரு ந்ண்பன் திடீர்னு கேட்டான். அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்க்கிற ஆளுக எல்லாம் ஒரு மாதிரியா... weird-ஆன ஆளுகளான்னு கேட்டான்.
’இல்லியே .. ஏனிப்படிக் கேட்கிற’ன்னு கேட்டேன்.
’உங்க கல்லூரியிலிருந்து சினிமாவுக்குப் போன டைரடக்கர்கள் எல்லோரும் எடுத்த படம் எல்லாம் கொஞ்சம் weird-ஆக இருக்கே’ அப்டின்னான்.
‘ஏம்பா!அப்படி சொல்ற? மகேந்திரன் படத்தை எப்படி இதில சேர்க்கிற?’
‘உதிரிப் பூக்கள் படத்தின் கடைசி வசனத்தைச் சொன்னான். ஒரு கெட்டவன் ஊரையே கெடுத்துட்டு செத்துப் போறானே’ என்றான்.
என்னிடம் பதில் இல்லை.
மகேந்திரன், பாலா, ராம், அமீர், சாந்தகுமார் ... இந்த வரிசையில் இப்போது ‘ஓஹோ புரொடக்ஷனின்’ முத்துராமலிங்கமும் சேர்ந்திருக்கிறார்.
இப்படி கேள்வி கேட்ட நண்பனும் வகுப்பின் முதல் மாணவனாகப் படித்து முடித்த எங்கள் கல்லூரி மாணவன் தான் ....
பின் சேர்க்கை:
அதே மாணவன் இன்று தொலைபேசியில் அழைத்து இன்னொன்றும் சொன்னான். இன்று தான் இயக்குனர் ராம் நடித்து, இயக்கும் தங்க மீன்கள் என்ற படத்தில் யுவன் இசையில் ஸ்ரீராம் பாடும் ’ஆனந்த யாழை மீட்டுகிறாள் ...’ என்ற பாட்டைக் கேட்டு மயங்கி சொன்னான்:
“ஏற்கெனவே ஒரு பாசிட்டிவ் பாய்ண்ட்டை சொல்ல உட்டுட்டேன். நம் கல்லூரி இயக்குனர்கள் எல்லோருக்கும் sense of music மிக அழகாக இயைந்து வருகிறது. அவர்கள் படத்தின் பாடல்கள் எல்லாமே ரொம்ப rich" என்றான்.
நானும் அந்தப் பாட்டைக் கேட்டேன். அழகு ... ஒத்தைப் பெண் பெற்று வளர்த்த அவனுக்கு இந்தப் பாட்டு பிடிக்காமலா போகும்....!
ராம் இசையைத் தாண்டி இப்பாட்டைக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும் என்ற ஆவல் இப்போதே மனசுக்குள் எட்டிப் பார்க்கிறது.
******************************
நல்ல படங்களைப் பார்க்கக் கூட முடியாத நான் இப்படி ஒரு படத்தைப் பார்த்துத் தொலைக்கணுமா ...! சேட்டைன்னு ஒரு படம். என்னங்க படம் இது.
படம் பார்த்ததும்
டைரடக்கர் கண்ணனுக்கு வைத்த பெயர்: ”ஷிட் கண்ணன்”.
****************************** *
பின் சேர்க்கை - 2: (26.5.13)
அடடா .. அமெரிக்கன் கல்லூரியிலிருந்து டைரக்டர்கள் ஆனவர்களில் கரு. பழனியப்பன் பெயரைச் சேர்க்காமல் விட்டு விட்டீர்களே என்றான் அதே நண்பன். இதைச் சொல்லி விட்டு ஆனால் இவர் weird category-ல் வரமாட்டாரல்லவா என்றும் சேர்த்து சொல்லி விட்டான்.
*********************************
14 comments:
/// பெந்த களுரு - அவிச்ச கடலை - பெங்களூரு ///
புதுத் தகவல்...
சொந்த ஊர் என்றும் சுகம் தான்...
சேட்டைக்கு நல்ல பெயர்...!
இன்றைக்கு முடிந்த வரைக்கும் உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் படிக்கப் போறேன். ரொம்ப நாளா மனதில் வைத்திருந்த எண்ணம்.
திருப்பூருக்குள்ள திரும்பி வரும் போது தான் ஒவ்வொரு முறையும் போன உசிரு திரும்பி வருது.
//ரொம்ப நாளா மனதில் வைத்திருந்த எண்ணம்.//
அறுநூற்றுப் பதிவுகள் .. suicidal temperament என்றும் இதைச் சொல்வார்களோ??!!
‘பெந்த களுரு’ - அதாவது கன்னடத்தில அவிச்ச கடலைன்னு - அப்டின்னு சொல்லியிருக்கு. //
புது தகவல் சார்.
நம் ஊர், நம் ஊருதான்.
பெங்களூர் முன்பு என்ன பெயர் இருந்தது?
அது வெள்ளக்காரன் வெச்ச பேரு இல்ல. கெம்பே கவுடா காலத்துப் பேரு.
பெந்த காளூரு.. அவிச்ச மொச்சை. பெங்களூர்ப் பக்கம் மொச்சை எக்கச்சக்கம். மொச்சையை பிதுக்கி எடுத்துட்டு தொலியை வாசல்ல போட்டுருவாங்க. அத போறவங்க வர்ரவங்க மிதிச்சா அன்னைக்கு வெச்ச கொழம்பு நல்லாருக்கும்னு ஒரு நம்பிக்கை.
கெம்பே கவுடா பெங்களூர் வந்தப்ப அவருக்கு அதுதான் சாப்பிடக் குடுத்தாங்க. அதுலருந்து ஊர் பேரும் அப்படியே ஆயிருச்சு.
மதுரை டிராபிக்கும் சும்மா இல்லையே. ஊருக்கேத்த உள்குத்தாவுல இருக்கு. நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி வந்தப்ப.. மாலை நேரத்து மதுரை டிராபிக்கைக் கண்டு மலைத்தேன். என்னைக் கேட்டா மதுரையை விட திருச்சி நல்லாருக்குன்னு சொல்வேன். அங்கயும் டிராபிக் இருக்கு. ஆனா சென்னைல காரோட்டிட்டு திருச்சியைப் பாக்குறப்போ ஜில்லுன்னு இருக்கு.
படித்தேன்,..பயந்தேன்
//....பயந்தேன் //
நாங்க பயப்படாம இருக்கோம். நல்லா எடுங்க.
வாழ்த்துகள்.
இதே போல் நம்மூரு மக்களும் சொல்வதுண்டு.வெள்ளைகாரன் ஒரு பெண்மணியிடம் விலாசம் கேட்டதும்,அந்தப் பெண்மணி,"அடி அக்கா மங்களம் இங்க வாயேன்"என்றதும் அந்த ஊருக்கு அடியக்கமங்களம் என்று பெயர் வரக் காரணமாகியதாக என் நண்பர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன் இதுவும் உண்மையா....??என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் கூறலாம்..
தருமிய்யா,
Benda gaval uru= city of guards =bengaluru.
9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் ஒன்று பேஹூரில் உள்ளது அதில் போரில் இறந்த வீரனின் நடுகல்= வீரக்கல்லில் பெங்களூரு என்று எழுதியுள்ளதால் , கெம்பகவுடா , அல்லது வீர பெல்லாலா மொச்சை கடலை சாப்பிட்ட கதை சரியல்ல.
ஏற்கனவே இருந்த பெங்களூருவில் முதலில் கோட்டை கட்டியது கெம்ப கவுடா-1 என்பதால் அவரையே மாடர்ன் பெங்களூரூவை உருவாக்கியதாக சொல்கிறார்கள்.
பார்க்க இந்துவில் வந்த செய்தி,
http://www.thehindu.com/news/cities/bangalore/article3254183.ece?
மற்ற வகை விளக்கங்கள்,
வெங்க மரக்காடு இருந்த இடம் வெங்ககாடு(ரு) - பெங்ககாடு(ரு) ஆகி பெங்களூரு ஆகிற்று.
#கெம்ப கவுடா காட்டை எரித்து ஊரை உருவாக்கினாராம், எனவே பெந்த(வெந்த) காரு(டு) -பெங்காரு- பெங்களூரு ஆச்சு என்றும் சொல்கிறார்கள்.
# கிரானைட் ,கருங்கல் ,அதிகம் இருக்கும் இடம் என்ப்தால் பெங்கலூரு என்ற பெயர் வந்தது என்கிறார்கள்.
ஹொஹேனகல் என்றால் புகையும் கல் என்று பொருள், அதே போல பெங்களூருக்கும் வந்திருக்கலாம்.
வவ்வால்
நேற்று மதுரை இந்துவில் வெளியான magazine-ல் இதுபற்றிய கட்டுரை ஒன்றுஇவந்துள்ளது. உங்கள் முதல் பத்தி ஒட்டிய செய்தி அதில் வந்துள்ளது.
தகவல்களுக்கு மிக்க நன்றி.
தகவல்களைத் தோண்டி எடுத்துத் தருவதில் நீங்களும், சார்வாகனும் மிகக் கெட்டி.
பின் சேர்க்கை ஒன்று சேர்த்துள்ளேன் ...
----------
அதே மாணவன் இன்று தொலைபேசியில் அழைத்து இன்னொன்றும் சொன்னான். இன்று தான் இயக்குனர் ராம் நடித்து, இயக்கும் தங்க மீன்கள் என்ற படத்தில் யுவன் இசையில் ஸ்ரீராம் பாடும் ’ஆனந்த யாழை மீட்டுகிறாள் ...’ என்ற பாட்டைக் கேட்டு மயங்கி சொன்னான்:
“ஏற்கெனவே ஒரு பாசிட்டிவ் பாய்ண்ட்டை சொல்ல உட்டுட்டேன். நம் கல்லூரி இயக்குனர்கள் எல்லோருக்கும் sense of music மிக அழகாக இயைந்து வருகிறது. அவர்கள் படத்தின் பாடல்கள் எல்லாமே ரொம்ப rich" என்றான்.
நானும் அந்தப் பாட்டைக் கேட்டேன். அழகு ... ஒத்தைப் பெண் பெற்று வளர்த்த அவனுக்கு இந்தப் பாட்டு பிடிக்காமலா போகும்....!
ராம் இசையைத் தாண்டி இப்பாட்டைக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும் என்ற ஆவல் இப்போதே மனசுக்குள் எட்டிப் பார்க்கிறது.
******************************
Thank you for making this interesting article. I'm happy to visit here
பின் சேர்க்கை - 2: (26.5.13)
அடடா .. அமெரிக்கன் கல்லூரியிலிருந்து டைரக்டர்கள் ஆனவர்களில் கரு. பழனியப்பன் பெயரைச் சேர்க்காமல் விட்டு விட்டீர்களே என்றான் அதே நண்பன். இதைச் சொல்லி விட்டு ஆனால் இவர் weird category-ல் வரமாட்டாரல்லவா என்றும் சேர்த்து சொல்லி விட்டான்.
Post a Comment