Wednesday, August 14, 2013

676. மதம், நாத்திகம், சமயச் சார்பின்மை






*  



Religion, Atheism and Secularism 


ராம் புனியானி என்ற  சமூக ஆர்வலர் நடத்தும் ஆங்கில வலைப்பூவில் உள்ள ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள் மட்டும் தமிழில் .... 



***   கடந்த முப்பதாண்டுகளில் சமூக, அரசியல் தளங்களில் தள்ள முடியாத பெரும் இடத்தை மதங்கள் பற்றிக் கொண்டு விட்டன.

***  இச்சூழலில் புதிய புத்தகம் ஒன்று வெளி வந்துள்ளது. நிகல் பார்பர் என்ற உளவியலாளர் ’ஏன் நாத்தீகம் சமயங்களைப் புறந்தள்ளும்? : வானத்திலிருந்து விழும் மன்னாவை விட உலகின் மகிழ்ச்சிகளே வெற்றி பெறும்’ என்ற நூலை எழுதியுள்ளார்.

*** 2040-ல் சமயங்கள் சிறுபான்மையருக்கானதாகி, சமயச் சார்பின்மை உயர்ந்தோங்கி நிற்கும்.

***  137 நாட்டு மக்களிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் நாத்திகம் அதிகமாகக் காணப்படுகிறது. வாழ்க்கை வசதிகள் பரவலாக்கப்பட்ட நாடுகளில் சமய நம்பிக்கை மிகக் குறைவாகக் காணப்படுகிறது.

***  உலகத்தின் தேவைகள் கிடைக்கும்போது சமயத் தொடர்பான மூட நம்பிக்கைகள் இடமிழந்து போகும். இப்போது அமெரிக்காவில் 20 விழுக்காடு நாத்திகர்கள்.

***  இந்து, புத்தமதம், ஜைன மதம் போன்றவைகளில் நாத்திகத்திற்கு இடமுண்டு.

***  ஒரே கடவுளைப் போதிக்கும் மதங்களில் கடவுள் என்ற கருத்து பல வடிவங்கள் எடுக்கின்றன: உருவம் உள்ள கடவுள், உருவமற்ற கடவுள். ...

***  முன்பு கடவுளின் இருப்பு பற்றிய நூல்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தன. இப்போது எப்படி சமயங்கள் அரசியல் களத்தில் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பது போன்ற விவாதங்களே அதிகம்.

***  அரசியலும், பெட்ரோலும் மேற்கத்திய நாடுகளின் அதிகாரமும் கலந்து, அதனால் விளைந்தது ஈரானின் அடிப்படை இஸ்லாம். குடியரசிற்காக எழும் போராட்டங்களை அடக்க, அடிப்படை இஸ்லாம் சில நாடுகளுக்குக் கை கொடுக்கிறது. செளதியில் உள்ள சலாபி இஸ்லாம் இப்படிப்பட்ட ஒன்றே. இதன் மூலம் மக்களின் உணர்வுகளை முடக்கி, அதே சமயத்தில் மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா - இங்கிலாந்தின் பெட்ரோல் பீப்பாய்களை எளிதாக நிறைக்கின்றன.

***  பாகிஸ்தானில் முல்லாக்கள் சமூகத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். இலங்கையில் தமிழர்களும், இஸ்லாமியர்களும் பெரும் பிரச்சனைகளை மதங்களின் பெயரால் பெறுகின்றனர். மயன்மாரில் புத்தமதம் ரோகிங்கா இஸ்லாமியர்களைத் தாக்குகிறது.

***  தெற்காசியாவில் பெரும் நம்பிக்கையாளர்களான காந்தியும், அப்துல் கலாம் ஆசாத் போன்றவர்கள் சமயமற்ற நாட்டிற்காக நின்றனர். ஆனால் சமய நம்பிக்கையில்லாத ஜின்னா, சவர்க்கார் போன்றவர்கள் மதத்திற்கு முக்கிய இடம் கொடுத்துள்ளனர்.

***  சமூகக் குறைகள் ஆழமான சமய நம்பிக்கைகளுக்குள் மக்களை இழுத்துச் செல்கிறது.

 *** இந்தியாவில் சமூக முன்னேற்றம் பற்றிய கருத்தாக்கத்தோடு முன்னேறுவோர் ஒரு பகுதி. இன்னொரு குழு சமய அடிப்படைகளில் மனிதர்களைப் பிரித்து வைக்க முயல்கிறது. இவைகளை வைத்துப் பார்க்கும் போது தெற்காசியாவில் கடவுள் நம்பிக்கைகளைத் தள்ளி வைத்து விட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படுமா என்பதே ஒரு பெரிய கேள்வி.

*


II August 2013
www.pluralindia.com 




*





 

13 comments:

Unknown said...

அருமை அய்யா,கருத்தில் தெளிவும் எதிர்கால சூழலும் எளிமைப்படுத்தப்பட்டு தன் அனுபவத்தை அலசியிருக்கிறார் வாழ்த்துக்கள். முழு பதிப்பையும் தமிழாக்கம் செய்தால் நலம்,
நன்றி.....

Unknown said...

அருமையான பதிவு தருமி அய்யா,

நாத்தீகம் வளரும் போதும் மனிதம் தளிர்க்கும்...காணாத நரகத்தை கண்டு பயப்படுவதை விட இருக்கும் உலகில் வாழும் மக்களுக்காக வாழும் வாழ்க்கை எவ்வளவோ சிறந்தது....இன்று இலங்கையிலும் கூட இஸ்லாமியர்களின் இருப்பு தலைநகரில் கூட கேள்விகுறி ஆகி உள்ளது..இங்கயே இப்படினா கிராமபகுதிகள் கேக்கவா வேணும் ????? அனைத்தும் தேரவாத சக்திகள் தான்...அவர்கள் பேசும் தொனி அப்படியே நம்ம பால் தாக்கரே நினைவு படுத்தும்..மண்ணின் மைந்தர்கள் ராவண (!) பலம்,சிங்கள ராவய னு பல பல மத சாயம் பூசிய அமைப்புகள் நாட்டை துண்டாடி வருகின்றன.....இஸ்லாமியர் தானே தாக படுகிறார்கள் என நாம் ஒதுங்கி இருக்கவும் முடியாது...அவர்களை பாதுகாப்பதன் மூலமே எதிர்காலத்தில் நாட்டில் இன்னும் ஒரு முறை இனங்கள் இடையான கலவரத்தை தடுக்க முடியும் ...அதுக்கு எல்லாரும் இப்பவே நாத்திகத்துக்கு மாறி சகோதரத்துவமா வாழனும் ...சாதி மதம் வட கலை தென் கலை தலித் வன்னியன் வர்ணம் தீண்டாமை இது அனைத்தும் இல்லாத நாடு,மக்கள் உருவாகனும்

Unknown said...
This comment has been removed by the author.
டிபிஆர்.ஜோசப் said...

வளர்ந்த நாடுகளில் நாத்திகம் அதிகமாகக் காணப்படுகிறது.//

நாத்திகம்னு சொல்றத விட அடுத்த வரியில நீங்களே சொல்லியிருக்கா மாதிரி சமய நம்பிக்கை குறைந்து வருவது என்னவோ உண்மைதான். பெயருக்குத்தான் இவர்கள் கிறிஸ்த்துவர்கள். ஆகவேதான் அங்கு are you a practising or non-practising chrisitianன்னு கேப்பாங்களாம். இது இப்போ இந்தியாவுலயும் பிரபலாமாய்ட்டு வருது. இளைய தலைமுறைக்கு அவ்வளவாக தெய்வ நம்பிக்கை இல்லை. தெய்வம் இருக்கிறது என நம்புபவர்கள் மத்தியிலும் கூட தெய்வத்தின் பெயரால் வசூல் மன்னர்களாக வலம் வரும் மதகுருமார்கள் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது என்பதும் உண்மை.

ஜோதிஜி said...

உங்கள் பார்வையை எழுதவில்லையே?

hariharan said...

இங்கயும் பேருக்காக சான்றிதழ்க்காக இந்து என்று சொல்லிக்கொண்டு மதமில்லாதவர்கள் இருக்கிறார்கள்.

தருமி said...

//ஜோதிஜி திருப்பூர் said...
உங்கள் பார்வையை எழுதவில்லையே?//

முழுக்க முழுக்க நனஞ்ச எனக்கெதற்கு முக்காடு !!

தருமி said...

//Somasundaram Hariharan said...
இங்கயும் பேருக்காக சான்றிதழ்க்காக இந்து என்று சொல்லிக்கொண்டு மதமில்லாதவர்கள் இருக்கிறார்கள். //

இந்துக்களில் மிகப் பலர் பெயரளவில் இந்துக்கள் என்றே நான் நினைக்கிறேன். அதுவும் ‘பெரிய சாமி’களை வணங்கும் இந்துக்கள் மிக குறைவு என்றெண்ணுகிறேன்.

Unknown said...

தருமி அய்யா ,

இந்துக்களில் மிகப் பலர் பெயரளவில் இந்துக்கள் என்றே நான் நினைக்கிறேன். அதுவும் ‘பெரிய சாமி’களை வணங்கும் இந்துக்கள் மிக குறைவு என்றெண்ணுகிறேன்.


தங்கள் கருத்து சரியானதே...அப்படியும் இந்துத்வம் பேசும் ஒரு சிலரும் ஜாதி எனும் தீயை அணையாமல் பாதுகாக்கவே அப்படி செய்கின்றனர்...சினிமாவில் கூட கோவில் என்பது ஹீரோ பெண் பார்க்க உருவாக பட்ட இடம் தானே...ஆனாலும் பெயரளவில் இந்துக்கள் இருப்பதால் இன்னும் இந்து மதம் இருக்குதோ ???(இருக்குற ஆபாச குப்பைகள் எல்லாம் தெரிய வந்தா மத மாற்றம்,நாத்தீகம் வளந்துடும் )" :)

வேகநரி said...

//வளர்ந்த நாடுகளில் நாத்திகம் அதிகமாகக் காணப்படுகிறது. வாழ்க்கை வசதிகள் பரவலாக்கப்பட்ட நாடுகளில் சமய நம்பிக்கை மிகக் குறைவாகக் காணப்படுகிறது.
உலகத்தின் தேவைகள் கிடைக்கும்போது சமயத் தொடர்பான மூட நம்பிக்கைகள் இடமிழந்து போகும்.
அடிப்படை இஸ்லாம் சில நாடுகளுக்குக் கை கொடுக்கிறது. செளதியில் உள்ள சலாபி இஸ்லாம் இப்படிப்பட்ட ஒன்றே. இதன் மூலம் மக்களின் உணர்வுகளை முடக்கி, அதே சமயத்தில் மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா -இங்கிலாந்தின் பெட்ரோல் பீப்பாய்களை எளிதாக நிறைக்கின்றன.//

சரியான உண்மைகள். மதங்கள் ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கவே விரும்பும். அப்போ தான் நீ உனது வேண்டிய தேவைக்கு கடவுளை மன்றாடி கேள் அவர் உனக்கு இரங்குவார் என்று சொல்லி தொடர்ந்து மதத்திடம் தங்க வைத்து கொள்ளலாம். ஜகாத் போன்ற மத திட்டங்களின் நோக்கமும் அதுவே.
ஆனா விதிவிலக்கானவங்க இந்தியர் தமிழங்களில் இருக்கிறார்கள் எவ்வளவு வசதியானவராக இருந்தும் ஆண்டவன் தந்தான் என்று உருகுவாங்க. உமா சங்கர் IAS அதிகாரி எவ்வளவு நல்ல நிலைக்கு வந்தும் அரச ஊதியம் பெற்று கொண்டு இந்துக்களை பயமுறுத்தி மத பிரசாரம் செய்தாரே:(
----------------
//இஸ்லாமியர் தானே தாக படுகிறார்கள் என நாம் ஒதுங்கி இருக்கவும் முடியாது...அவர்களை பாதுகாப்பதன் மூலமே எதிர்காலத்தில் நாட்டில் இன்னும் ஒரு முறை இனங்கள் இடையான கலவரத்தை தடுக்க முடியும் ...அதுக்கு எல்லாரும் இப்பவே நாத்திகத்துக்கு மாறி சகோதரத்துவமா வாழனும்//

நீங்க காபிர் எல்லாரும் இப்பவே நாத்திகத்துக்கு மாறுவதானா அவங்களும் உங்களுடன் சேர்ந்து மாறத் தயாரா? அவங்களுக்கு அனுமதியுண்டா?
2020 ல் இருக்கலாம் அல்லது 2030 இலங்கை இஸ்லாமிய நாடாக மாறும் என்று புல்லரிக்கிறார்களாமே!

தருமி said...

// மதங்கள் ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கவே விரும்பும். அப்போ தான் நீ உனது வேண்டிய தேவைக்கு கடவுளை மன்றாடி கேள் அவர் உனக்கு இரங்குவார் என்று சொல்லி தொடர்ந்து மதத்திடம் தங்க வைத்து கொள்ளலாம்//

இப்போது பட்டினியாய் இருப்பவர்களே நீங்கள் பேறு பெற்றவர்கள் ...இப்போது அழுதுகொண்டிருப்பவர்களே நீங்கள் பேறு பெற்றவர்கள். ஏனெனில் இனி நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

லூக்கா 6 : 21; மத்தேயு 5 ; 1

தருமி said...

ஜோசப்,
//வசூல் மன்னர்களாக வலம் வரும் மதகுருமார்கள் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது என்பதும் உண்மை//

அப்டியா சொல்றீங்க .. சும்மா செமய்யா காசை அள்ளுறாங்களே ...

வேகநரி said...

லூக்கா 6 : 21; மத்தேயு 5 ; 1
தகவலுக்கு நன்றி ஐயா.எல்லாம் வெளிப்படையாக தெளிவாக தான் சொல்லி வைத்திருக்காங்க.
//வசூல் மன்னர்களாக வலம் வரும் மதகுருமார்கள் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது என்பதும் உண்மை//
அப்டியா சொல்றீங்க .. சும்மா செமய்யா காசை அள்ளுறாங்களே ...//

நானும் இந்தியங்க தமிழங்களிடையே மதகுருமார்கள் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது என்பதை நம்பல்லை. ஒரு நோய் வந்தா கூட யாரு பெஸ்ட் டாக்டர் என்று எல்லாரிடமும் தீர விசாரிச்சு பெரும் தொகை பணம் அள்ளி டாக்டருக்கு கொடுத்து(எல்லாம் மிக வசதியான இந்தியன் மற்றும் இலங்கை தமிழங்க தான்) ரீட்மென்ட் எடுப்பாங்க. பின்பு நோய் மாறியதும் X என்ற மதகுருவின் ஆலோசனைபடி கடவுளிடம் மன்றாடி கேட்டேன் என் நோயை கடவுள் மாற்றிவிட்டார்கள் என்பார்கள்.
நீர் இப்போ நல்ல நிலையில் இருக்கும் போதே யேசுவிடம் உம்மை அடைகலம் கொடுத்துவிடும் சொன்னது ஒரு இலங்கையர்.

Post a Comment