*
*
தொடர் பதிவுகள்: 1 ...... 2 ..... 3 ..... 4.......... 5.............. 6 ........... 7..................
*
*
அத்தியாயம் 1
இளமைப் பருவ உருவாக்கங்கள்
இளமைப் பருவ உருவாக்கங்கள்
நான் இந்துவாகப் பிறக்கவில்லை.
அதற்கான எளிய காரணம், தாம் இந்துக்கள் என்பது எமது பெற்றோருக்குத் தெரியாததே.(33)
இளம் வயதில் வேறு சாதி நண்பர்களோடு விளையாடுவதுண்டு. பெற்றோர் சொல்லிக் கொடுத்த சில வேறுபாடுகளையும் நாங்கள் உணர்ந்ததுண்டு. எங்கள் விளையாட்டு நேரங்களில் இந்த வேறுபாடுகள் காணாமல் போய்விடும்.(34)
இளம் வயதிலேயே எங்கள் சாதிக்குரிய தொழில் பற்றியும், அதன் மொழி பற்றியும் தெரிந்து கொண்டோம்.
தகப்பனை விட தாயே குழந்தைகளிடம் அதிகமான தொடர்புடையவளாக இருக்கிறாள்.எல்லா அம்சங்களையும் குழந்தைகளுடன் பேசுவது ஒன்றும் இங்கு வழக்கத்திற்கு முரணானது அல்ல.
மேல் உலக உணர்வு, தெய்வீகத் தனமை, ஆன்மீகம் ஆகியவை எங்களை இந்துக்களிடமிருந்து மேலும் பிரித்தது.
நாங்கள் பள்ளிக்குச் செல்லுகிற வரையில் எங்களுக்கு பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் ஆகியவை பற்றி எதுவுமே தெரியாது(40)
பார்ப்பன, பனியா, சத்திரியக் குழந்தைகள் பேசும் மொழி மற்றும் அவர்களுடைய சமூக உறவுகள், தொடர்புகள் எல்லாம் இந்துக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன.
எமது கிராமங்களில் கணவனை இழந்த பல விதவைகள் மரியாதைக்கு உரியவர்களாக இருக்கின்றனர். விதவைகள் தலித் பகுஜன் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதில்லை.(41)
ஒரு இந்துக் குடும்பம் என்பது படிநிலையான ஏற்றத் தாழ்வைக் கொண்டது. பெண்கள் ஆண்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். ... பார்ப்பனக் குழந்தைகள் சூத்திரத் தொழில் என்று கூறும் உற்பத்தி தொடர்பான வேலைகளில் ஈடுபடாதிருக்க வேண்டுமெனக் கற்பிக்கப்படுகின்றார்கள். ...தலித் பகுஜன்களை வெறுப்பது அவர்கள் உணர்வில் ஒரு அம்சமாகி விடுகிறது.(42)
ஆண் பெண் பாலியல் உறவு பற்றி விவாதிப்பது இந்துக் குடும்பங்களில் தடை செய்யப்படுகிறது.(42)
இளமையிலிருந்தே பணிவாக இருப்பது போல் நடிப்பது பிற்காலத்தில் வாழ்வின் ஒரு அம்சமாகவே மாறி விடுகிறது. காந்தி ஏழையாக நடித்தது போல் இவர்கள் பயப்படுவதாக நடிக்கிறார்கள்.(44)
ஒவ்வொரு நாளும் அன்றாட உணவுக்குச் சம்பாதிப்பதே அவர்களுக்குப் போராட்டமாக உள்ளது. அவர்களுக்கு உணவு கிடைக்கும் நாள் சொர்க்கமாகவும், உணவு கிடைக்காத நாள் நரகமாகவும் உள்ளன.(45)
எங்கள் பள்ளி ஆசிரியர்களும் எங்கள் ஒவ்வொருவரையும் சாதியை அடிப்படையாகக் கொண்டே அணுகினர்.(46)
நாங்கள் உயர் வகுப்புகளுக்குச் சென்ற போது பாடப்புத்தகங்களில் போதிக்கப்பட்ட கதைகளில் ஒன்று கூட எங்கள் வீடுகளில் நாங்கள் கேள்வியுறாதவைகளே. ... பார்ப்பன பனியாக் குழந்தைகளின் நிலைமை வேறு. பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மொழி பார்ப்பனத் தெலுங்கு.எங்கள் இரு மொழிகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு.(47)
புரோகிதர்கள் புராணங்களைப் புகழ்ந்து எழுதினார்கள். கம்யூனிஸ்ட் மற்றும் பகுத்தறிவாளர்களோ இந்தப் புராணங்கள் பற்றித் திறனாய்வு செய்தார்கள். ஆனால் எங்களுக்கும் இதயம் இருக்கிறது என்பதையும், அந்த இதயம் தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறது என்பதையும் யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. நல்லதற்கோ, கெட்டதற்கோ யாரும் எங்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. ... கம்யூனிஸ்ட்டுகளும் பகுத்தறிவாளர்களும் கூட புரோகித மொழியிலேயே பேசியும் எழுதியும் வந்தார்கள். அவர்களுடைய கலாச்சாரம் அடிப்படையிலேயே சமஸ்கிருத மயமாக்கப்பட்டது.(49)
எங்கள் வீடுகளில் ஒரு பண்பாடும் பள்ளிகளில் வேறொரு பண்பாடும் இந்ததன. எங்களுடைய பண்பாடு தலித் பண்பாடு. பள்ளியிலிருந்த பண்பாடோ இந்துப் பண்பாடு.(49)
உபநயனத்திற்குப் பிறகு பூ நூல் அவர்கள் உடலில் தொங்குகிறது. அது முதல் அவர்கள் இரு பிறப்பாளர்கள். .. நாங்களும் சிறு வயதில் பூ நூல் அணிய விரும்பினோம்.(50)
எங்கள் குடும்பங்களில் மாமியார் கொடுமையால் அவதியுற்ற பெண்கள் மிகச் சுலபமாக மணவிலக்கு பெற முடிந்தது. ஒரு சில நாட்களில் அவர்களுக்கு இரண்டாவது திருமணம் ஒரு சிறப்பான விருந்தோடும், பானத்தோடும் கொண்டாடப்படும். ... பொறுப்பற்ற கணவனிடமிருந்து ஒரு பெண் மணவிலக்கு கோருவது அங்கீகரிக்கப்பட்ட சமூக வழக்கமாகும். சாவித்திரி கதையை வாசித்திருக்கிறேன். சாவித்திரி தன் கணவன் இறந்ததை எதிர்த்து எம தர்மராஜனுடன் போராடுகிறாள். ஏனெனில் கணவன் இறந்து விட்டால் தாம் விதவையாகி விட நேருமே என்று தான். எமது பெண்கள் சாவித்திரி போல போராட வேண்டியதில்லையே என்று நினைத்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.(51)
சதி எனப்படும் உடன் கட்டையேறுதல் பற்றிக் கதை கதையாகச் சொல்லும் சரித்திரப் பாடங்களையும் தெலுங்குப் பாடங்களையும் சதியில் மாய்ந்த பெண்கள் பற்றியும் படிக்கிறோம். ஆனால் கணவன் இறந்த பிறகும் உயிருடன் இருந்து தனியாகப் பாடுபட்டு உழைத்து தமது குழந்தைகளை வளர்த்து பெரியவர்களாக்கி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்த எங்கள் பெண்கள் பற்றி வரலாற்றில் இலக்கியத்தில் ஏதாவது ஒரு பாடம் உண்டா?
பார்ப்பன வீடுகளிலும், குடும்பங்களிலும் புகழப்படும் வீரர்கள், வீராங்கனைகள் எவரும் மனித சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல.(52)
சூத்திர சமூகத்தில் முற்றிலும் இது மாறுபட்டுள்ளது. இலட்சியக் கதாநாயகர்கள் தோன்றக்கூடிய எதார்த்த வாழ்க்கைச் சூழல்கள் பல இங்கு உண்டு.(53)
தலித் பகுஜன் பெண்கள் ஆண்களோடு சேர்ந்து கள்ளோ, அல்லது வேறு வகையான மதுவோ அருந்துகிறார்கள். வீட்டிலும் வயல்களிலும் சுருட்டு புகைக்கிறார்கள். தலித் பகுஜன் பெண்கள் குறைந்த பட்சம் கருத்தளவிலாவது ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று தம்மைக் கருதுகிறார்கள்.
எல்லோரும் இந்துக்கள் என்ற்யு சொல்கிறவர்கள் இவற்றில் எந்தப் பண்பாடு இந்துப் பண்பாடு என்று கூற வேண்டும். எந்த மதீப்பீடுகளை, எந்த ஒழுக்கங்களை அவர்கள் சரியானதென்று தூக்கிப் பிடிக்க விரும்புகிறார்கள்? மேல்சாதி இந்துக்களுடைய சமத்துவமற்ற, மனிதத் தன்மையற்ற கலாச்சார மதீப்பீடா? அல்லது நம்முடைய கலாச்சார மதீப்பீடா?(54)
பார்ப்பன பனியாக்கள் உற்பத்தி சாராத, சடங்கு சார்ந்த வாழ்க்கையையே உயர்ந்த வாழ்க்கை என்றும், மிகப் பெரும்பாலான தலித் பகுஜன்களின் சடங்குகளற்ற உழைப்பு சார்ந்த வாழ்க்கையைக் கீழ்த் தரமானதென்றும் கருதுகிறார்கள்.(54)
பார்ப்பன பனியாக்கள் நம்முடைய கலாச்சாரத்தைக் கொன்று அதன் பிணங்களின் மீது நடந்து சென்றார்கள். மற்றவர்களுடைய நன்மைக்காக எல்லாவற்றையும் உற்பத்தி செய்த நம்முடைய பெற்றோர்கள் பட்டினி கிடக்கும்போது பார்ப்பன பனியாக்கள் உண்டு கொழுத்தார்கள். நம்முடைய குழந்தைகள் தேசியப் பொருளாதாரத்திற்கு வலுவூட்டிக் கொண்டிருந்த போது அவர்களுடைய பிள்ளைகள் வெறும் சாப்பாட்டு மன்னர்களாக இருந்தார்கள்.(55)
*
பி.கு.
காஞ்சாவை எதிர்த்து ஷாஸ்த்ரி ஒருவர் எழுதிய கட்டுரையை முன்பு என் பதிவில் நண்பர் ஒருவர் அனுப்பி, அவ்ர் காஞ்சாவை ‘துவைத்துக் காயப்போட்டு விட்டார்’ என்று அனுப்பியிருந்தார். அக்கட்டுரையை நான் ‘தோலுரித்ததாக’ ஒரு பதில் போட்டேன். அதனைப் பார்க்க வேண்டுவோர் இந்தப் பதிவில் உள்ள பின்னூட்டத்தில் அதைக் காணலாம்.
*
3 comments:
”மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே”. இது ஒரு முக்கியமான அடிப்படை விதி. இதை சொல்லித்தர இறைதூதர்கள் வர வேண்டியதில்லை. மனிதனாக இருப்பவன் கண்டிப்பாக உணர முடிந்த விதி.இந்த அடிப்படை விதியின் மேல் கட்டமைக்கபட்ட பல விதிகளினால்தான கொள்கைகள் தத்துவங்கள் வருகின்றன. இந்த அடிப்படை விதியை நிலைநாட்ட நடந்தவைகள் என வரலாற்றை படிக்கலாம். மிருகத்திற்கு கூட உரிமை இருக்கின்றது என்ற விதியை எட்டிவிட்ட நிலையில் வாழ்கிறோம்.
இந்தியாவில் காலங்காலமாக மனிதர்கள் சமம் என்ற அடிப்படை விதியை மூர்க்கமாக மீறும் வகையில் சாதி இருந்துள்ளது. இந்த விதிமீறலை எதிர்த்து இயக்கமாக மாற்றம் செய்ய மேல் சாதியில் முனைந்தவர்கள் எவரும் இல்லை கருத்தை சொல்வதை தவிர்த்து. புத்தரே முடியாமல் வேறு வீட்டை கட்டிவிட்டார். இப்போது மதத்தில் இல்லை சமுதாய காரணிகள்தான் எனச்சொல்கிறார்கள். சரி சமுதாய புரட்சியாளர்கள் மேல் சாதியிலிருந்து வந்தார்களா என பார்த்தால் ஒன்றிரண்டு பேர்தான். கால சூழ்நிலை மாற்றத்தினால் தான் இந்தியாவில் சாதி எதிர்ப்பு என்பது கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சா அய்லய்யா எழுப்பும் கேள்விக்கு பதில் இல்லை.
மிக அருமையான கட்டுரை.
அந்த மக்களின் வாழ்வை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
உங்கள் பக்கத்திற்கு வந்தமை மகிழச்சியாக இருந்தது.
அடி பட்டவருக்குத்தான் அடியின் வலி தெரியும். அடுத்தவர்களுக்கு அது ஒரு தகவல் மட்டுமே. தகவல்களையும் பலசமயங்களில் தர அனுமதியில்லை. பள்ளிகளில் கட்டாயப்பாடமாக வைக்கவேண்டிய நூல். அறிமுகத்துக்கு நன்றி.
Post a Comment