Thursday, January 30, 2014

707. தருமியின் சின்னச் சின்னக் கேள்விகள் -- 22





*


 அது என்னமோங்க .. திரைப்படங்கள் பற்றி நான் எழுதுவது கம்மி தான். எப்போதோ ஒன்றிரண்டு. ஆனால் அவைகளை திரை மணத்தில் எப்படி சேர்ப்பது என்று இன்றுவரை தெரியாத ஒரு விஷயம். அது எப்படி சேர்க்கணும்?


*

 திரை மணத்தைத் திறந்தால் வரும் பதிவுகளில் செய்திகள் இருக்கிறதோ இல்லையோ.. எக்கச்சக்க விளம்பரங்கள். அவைகளைத் தாண்டி செய்திகளை வாசிப்பது மிகச் சிரமமாக இருக்கிறதே... வேலி தான் தெரிகிறது.உள்ளே இருப்பது படிக்க தலைகீழாக நிற்க வேண்டியதுள்ளது.

யாராவது தமிழ்மண் அட்மின்னுக்குச் சொல்லி ஏதாவது செய்யுங்களேன்.

 இந்த விளம்பரத் தொல்லை நினைவுக்கு வந்ததற்குக் காரணம் தொலைக் காட்சியில் வரும் சில விளம்பரங்கள் தான்.

*

தனுஷ் பெரிய நல்ல நடிகர்னு பெயர் வாங்கியாச்சி. நல்ல படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர். இருந்தாலும் COOL FRESH அப்டின்னு ஒரு வெகு மட்டடடமான விளம்பரத்தில் வர்ரார். எதுக்குன்னு தெரியலை. அதிலும் தன் வழக்கமான mental ரோல் மாதிரி வேறு நடிக்கிறார். எப்படியும் அந்தப் பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள இப்படி ஒரு மட்டமான விளம்ப்ரத்தில் நடிகணுமா?

 காசு கிடைச்சா எந்த விளம்பரத்திலும் நடிக்கணுமா ... அதுவும் நல்ல பெயர் நிறைய வாங்கிய பிறகும்?

 *

 இதே மாதிரி இன்னொரு ஆளு - பிரபு தேவா. BIG BOSS அப்டின்னு ஒரு ஆகப்பாடாவதி விளம்பரம். இதில் ஒரு பாலிவுட் ஆளு வர்ராரு. அந்த ஆளு மூஞ்சே நமக்கு ஆகாது. பெயரும் தெரியாது. அந்த ஆகப்பாடாவதி ஆளோடு சேர்ந்து, பிரபு தேவா ஒரு டான்ஸ் ஸ்டெப் வேற போட்டு ... ஆத்தாடி ...!

 காசு கொடுத்தா இப்படி ஒரு தேறாத விளம்பரத்திலேயும் மூஞ்சைக் காண்பிக்கணுமா, அதுவும் பட இயக்குனருக்கு வடக்கே பிரபு தேவாவுக்கு அம்புட்டு காசாமே!

 *

 நம்ம ஜட்டி விளம்பர சரத்குமார் இருக்காரே .... சாரி... பூமெக்ஸ் பனியனுக்கு வர்ர சரத்குமார் இருக்காரே... என்னமோ ஒரு சட்டை போட்டிருக்கிறார். அதை வைத்து ரோட்டுல போற பொண்ணை அப்படியே லபக்கிடுகிறார். ஆனால் விளம்பரம் பனியனுக்கு.

என்ன சனியனுக்கோ எதுக்கு இந்த மாதிரி மெண்டல் விளம்பரங்கள்?

 *

 பையன் எங்கே போனாலும் பின்னாலே ஒரு நாய் போகுமே ஒரு தொலைப்பேசி விளம்பரத்தில். அந்த விளம்ப்ரத்தையே ஒரு விளம்பரமாகப் பயன் படுத்துகிறார்கள். நன்றாக இருக்கிறது.

ஆனால் விளம்ப்ரம் எடுத்த கம்பெனி பெயரே ஏன் வருவதில்லை? ஏன் விளம்பரக் கம்பெனிகளின் பெயர்களை அவர்களே விளம்பரப் படித்துக் கொள்வதில்லை, ஏதும் கொள்கை முடிவா?  ஏனிந்த வழக்கம்?

 *

 lackeys - என்ற சொல்லுக்குப் பொருள் பார்த்தேன் - A person who tries to please someone in order to gain a personal advantage

 அப்படியானால் lackeys என்பது ’அல்லக்கை’ என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்குமோ? இருக்கும் .. இருக்கும் ..



 *



7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பணம் புகழ் வந்த பின் இருக்கவே இருக்கு தயாரிப்பாளர் அல்லது இது போல் விளம்பரம்...

next மெகாத் தொடர்... கலைச்சேவை...!

பணம் செய்யாத வேலை ஏதும் உண்டோ...?

பதிவு எழுதும் பக்கத்தில், வலது புறத்தில் உள்ள Post Settings கீழே உள்ள Labels என்பதை சொடுக்கி சினிமா அல்லது திரை விமர்சனம் என்று குறிச்சொற்கள் இடும் போதும், மற்றும் நடிகர்களின் பெயர்கள் தலைப்பில் உள்ள பதிவுகள் அனைத்தும் தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் தெரியாது. திரைமணம் தளத்திற்கு சென்றுவிடும்...!

தமிழ்மண அட்மின் :
techsupport@thamizmanam.com
admin@thamizmanam.com

தருமி said...

DD
நீங்கள் சொன்னதை கடைசி இரு பதிவுகளில் செய்தேன். பதிவுகள் ‘போடா’ என்று சொல்லி விட்டன. திரை மணத்திற்குள் போக மாட்டேன் என்றன.
அடுத்த முறை மீண்டும் முயன்று தோல்வியுற்றால் மீண்டும் உங்களிடம் ‘பிராதிடுகிறேன்’.

நன்றி

Unknown said...

மேட்டரில் உள்ள நடிகர் பெயரை தலைப்பில் சேர்த்து விடுங்கள்
திரை மணத்தில் சேர்ந்துவிடும் .பிறவி எடுத்த பலன் கிடைத்த மாதிரி சந்தோசம் ஏற்படும் !

Anonymous said...

திரைமணமா? அது என்னதுங்கோ என கேட்கும் அளவுக்கு அப்பக்கம் நான் போறதில்லை, தமிழ் மணம் நிர்வாகம் என எதுவும் இயங்குவதாய் தெரியவில்லை, சென்ற ஆண்டு முதல் புதிய தளங்கள் இணைப்பதை நிறுத்திவிட்டார்கள். தானியங்கியாய் ஓடிக் கொண்டிருக்கு போல. ஆனந்த் என்ற ஒருவர் காப்பி பேஸ்ட் பதிவுகளை தினமும் 10 முறை வெளியிடுகின்றார், அத்தோடு பல விளம்பரங்கள் வேறு. ஆனால் அவர் மீது தமிழ்மணம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனுசு, விசய், சரத்குமார் என இத்யாதி பலவும் சோப்பு சீப்பு விளம்பரங்களிலும் தோன்றி கடுப்பேற்றுகின்றன, இந்தக் கருமத்தை எல்லாம் பார்க்க வேண்டியும் உள்ளது. இப்படி நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் தோன்றி ஜட்டி முதல் பபுல்கம் வரை விற்பதை மேலை நாடுகளில் பார்த்ததில்லை. அத்தோடு சந்தா கட்டி வாங்கும் தனியார் தொல்லைகாட்சிகள் விளம்பரங்கள் இல்லாமல் அல்லவா ஒளிபரப்ப வேண்டும், இவர்கள் இங்கிட்டும் காசு அங்கிட்டும் காசு, நல்லா கல்லா கட்டுறாங்கோ. இப்போது எல்லாம் நான் விரும்பிய நிகழ்ச்சிகளை மட்டும் யுடுயுப்பில் பார்த்துவிடுகின்றேன், விரும்பிய நேரம் விளம்பரமின்றி பார்ப்பது சுகம். இணையத்தை தீவியில் இணைக்க சாதனங்கள் வந்து விட்டனவே...!

திண்டுக்கல் தனபாலன் said...

வெளியிட்ட பதிவுகளில் - (1) labels இடாமல் சில சமயம் publish செய்து விடுவோம்.... அல்லது (2) labels மாற்றவோ / புதிய labels-களை சேர்க்கவோ நினைப்போம்... இந்த இரண்டுமே தமிழ்மணம் இணைத்த பிறகு செய்தால்... தமிழ்மணத்தில் முதலில் இணைத்த பதிவையே ஏற்றுக் கொள்ளும்...

மறுபடியும் வேறு மாதிரி முயற்சி செய்தால் "புதிய இடுகை எதுவும் காணப்படவில்லை" என்றும் காண்பிக்கும்... மீண்டும் பதிவின் url மாற்றி Publish செய்தால் ஏற்றுக் கொள்ளும்... இப்போதைக்கு அது வேண்டாம்...

அதற்கு முன்...

இனி புதிய பதிவு வெளியிடும் முன் மேலே எனது கருத்துரையில் சொன்னது போல் "சினிமா" / "திரை விமர்சனம்" அல்லது தனுஷ் / பிரபு தேவா (நடிக நடிகைகளின் பெயர்கள்) என்று labels-ல் சேர்த்து விட்ட பிறகு "Publish" செய்யவும்...

நான் தான் விளக்கமாக சொல்ல மறந்து விட்டேன்...

எடுத்துக்காட்டாக நண்பர்களின் சில சமீபத்திய பதிவுகள்... labels-யை பார்க்கவும்...

http://www.amsenthil.com/2014/01/blog-post_30.html
http://parithimuthurasan.blogspot.in/2014/01/ninaiththathuyaaro-vimarsanam.html

நன்றி ஐயா...

தருமி said...

தி.த.,
இதற்காகவே ஒரு திரைப் பதிவு சீக்கிரம் போட முயற்சிக்கிறேன்.

நன்றி

Anonymous said...

How are you Sir?
I haven't watched TV successfully for past one year.
எல்லா program மும் இணையத்திலேயே கிடைக்கிறது. விளம்பரம் இல்லாமல் பார்த்து விடலாம். Pause பண்ணி, நமக்கு கிடைக்கிற நேரத்தில் பார்க்க முடிகிற வசதியும் இணையம் மூலமாக பார்ப்பதில் கிடைக்கிறது. என் மனைவி ஒரு serial ஐ 15 நிமிடத்தில் பார்த்து முடித்து விடுகிறாள். சில சமயம் forward செய்து 5 நிமிடத்திற்குள் பார்த்து விடுவாள்.

Post a Comment