******
பிரிட்டானிகா
கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced
on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also
there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22,
Pg.336 Encyclopedia Britanica.
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.
Page-197,
-A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller.
Professor OF New Testament, Union Theological Seminary NewYork
******
Gospels – good news" or "glad tidings" - நற்செய்தி – ஏசுவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம் பற்றிய குறிப்புகள்.
”நற்செய்தியில் சொல்லப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியால் எழுதப்பட்டவை. அதில் உள்ள ஒவ்வொரு சொல்லும் கடவுளின் வார்த்தைகள்.” – இப்படித்தான் சிறு வயதிலிருந்தே கிறித்துவக் குழந்தைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறோம். ஆகவே இவை மனதில் ஆழப்பதிந்து விடுகிறது. அப்படிப்பட்ட நற்செய்திகளை முழுமையாக நம்பி விடுகிறோம். பின் அதில் ஏது கேள்விகள்?
இதைப் பற்றிக் கேள்விகளை எழுப்பினால் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போவது மட்டுமே கிறித்துவர்களின் வாடிக்கை. ஆயினும் வரலாற்றின் பக்கங்களைச் சிறிதே திருப்பினால் பல கேள்விகள் எழுகின்றன. அப்படி எழுந்த சில தகவல்களையும், கேள்விகளையும், இங்கே தருகிறேன் – பொறுமையோடு வாசிப்பவர்களின் கண்களுக்கு.
Gospels – நற்செய்திகள் நமக்குத் தெரிந்தவரை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற நான்கு தான். ஆனால் எண்ணிக்கையில் மிக அதிகமான நற்செய்திகள் எழுதப்பட்டுள்ளன. மேலே சொன்ன நான்கு நற்செய்திகளில் முதல் மூன்றும் synoptic gospels என்று அழைக்கப்படுகின்றன. இவை மூன்றும் தரும் செய்திகள் அடிப்படையில் ஒன்றாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகள் முதலில் எழுதப்பட்டன. அதன் பின் யோவான் விட்டுப் போன விஷயங்களைத் தொகுத்தார் என்று கூறப்படுகிறது இந்த நான்கு நற்செய்திகளும் மொத்தமாக canonical gospels – அதாவது திருச்சபையால் ஒப்புக்கொள்ளப்பட்ட நற்செய்திகளாக உள்ளன.
இந்த நான்கு நற்செய்திகள் தவிர மற்றவை Non-canonical gospels என்று அழைக்கப்படுகின்றன. இவைகளின் பட்டியல்:
Infancy gospels,
Jewish Christian gospels,
Sayings gospels,
Passion gospels,
Harmonized gospels,
Gnostic gospels.
மேல் சொன்ன பட்டியலில் பேதுரு எழுதிய நற்செய்தி (Passion gospel), யூதாஸ் எழுதிய நற்செய்தி (Gnostic gospels) – போன்றவைகளும் உண்டு. இவைகளின் மொத்த எண்ணிக்கை 17.
பல நற்செய்திகள் எழுதப்பட்டன என்பதை ஒரு வரலாற்றாசிரியர் நற்செய்திகள் // multiplied like rabbits// என்று குறிப்பிடுகிறார். அச்சமயத்தில் ரோமின் பிஷப்பும் உட்பட எந்த மதத்தலைவரும் ஒருமித்த கருத்து ஒன்றினை வெளிப்படுத்த முடியாது போயிற்று.
கிறித்துவ வரலாற்றின் முதல் பக்கங்களில் மிகவும்முக்கியமானவராகக் கருத்தப்படும் லையான் நகர பிஷப் ஐரினியஸ் - Irenaeus of Lyons – எழுதிய Adversus Haereses என்ற தன்னுடைய நூலில் பல கிறித்துவர்கள் Marcionism என்ற தத்துவத்தின் பின்னால் போவதாக எழுதியுள்ளார். இத்தத்துவத்தில் ஏசு கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு தூதுவர் என்ற கருத்தே இருந்தது.
மூன்றாவது நூற்றாண்டில் இருந்த பல கிறித்துவ அறிஞர்கள் Origen என்ற மறை நூலறிஞர் என்பவரின் கருத்தோடு ஒன்றியிருந்தனர். ஏரியஸ் இதனை ஒட்டியே தன் கருத்தையும் கொண்டிருந்தார். இக்கருத்தின் படி கிறித்துவத்தின் முக்கியக் கொள்கையான தமதிருத்துவம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. Origen-ன் கருத்தை ஏரியஸ் மிகவும் தீவிரமாக திருச்சபைக்குள் பரப்பியதால் இது "Arianism" என்றே அழைக்கப்பட்டது. ஏரியஸ் முழுமுதற் கடவுளின் முதல் படைப்பே அவரது மகனான ஏசு. இவர் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கப்பட்டார். உண்டாக்கப்பட்ட இந்த கடவுளின் மகனே மற்ற எல்லாவற்றையும் படைத்தார். மேலும் கடவுள் – மகன் என்ற தத்துவமும் ஏரியஸ் - Origen இருவருக்குள்ளும் வேறுபட்டிருந்தது.
கிறித்துவிற்குப் பின் 365-ம் ஆண்டு கான்ஸ்டாண்டின் என்ற ரோமானியப் பேரரசர் கிறித்துவ ஒற்றுமை மாநாடு - ecumenical council – ஒன்றைக் கூட்டினார். First Council of Nicaea என்று இது அழைக்கப்படுகிறது. பிஷப்புகள் வரவழைக்கப்பட்டனர். இவர்களுக்குள் இரு வேறுபட்ட குழுக்கள் இருந்தன. 22 பேர் பிஷப்புகள் அடங்கிய ஒரு சிறு குழு Arianism-த்தை தூக்கிப் பிடித்திருந்தது.
இரு மாதங்களுக்கு இந்த இரு குழுக்களின் இடையே தர்க்கம் நடந்தது. இறுதியில் ஏரியன் குழுவினர் 318-250 என்ற ஓட்டெடுப்பில் தோற்றனர். ஆயினும் இருவர் மட்டும் இறுதி வரை கையெழுத்திட மறுத்தனர். அவர்களும், ஏரியஸும் இல்லிரியா – Illyria – என்ற இடத்திற்கு நாடு கடத்தப்பட்டனர்.
இருப்பினும் இன்னும் கூட ஏரியனிஸம் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஜெஹோவா குழுவினரே இன்றைய ஏரியனிஸத்தை கைக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை "Semi-Arians” என்றும் சொல்லப் படுவதுண்டு. இவர்களைப் பொறுத்தவரை’தந்தை’யே முழு முதற் கடவுள்; ஏசு மனித உருவெடுத்தவர்; தந்தைக்குக் கீழ்ப்பட்டவர் என்ற கருத்தே அவர்களுடையது.
ஏரியனிஸ குழுவினர் ஏரியனிஸிற்கு 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி புனிதர் பட்டம் - canonized - கொடுத்துள்ளனர்.
ஏரியஸும், மற்றும் இருவரும் இல்லிரியா – Illyria – என்ற இடத்திற்கு நாடு கட்த்தப்பட்ட பிறகு நான்கு நற்செய்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
மத்தேயு நற்செய்தி கிறிஸ்துவிற்குப் பின் 70-ம் ஆண்டில் இதனை எழுதியிருக்க வேண்டும்.ஏனெனில் இதில் ஜெருசலேம் வீழ்ந்து அழிக்கப்பட்டது பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை
மாற்கு முதலில் எழுதப்பட்ட நற்செய்தியாக இருக்க வேண்டும். பேதுரு சிலுவையில் அறையப்பட்ட பின் இந்த நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும். இதன் காலம் கி.பி.60 ஆக இருக்கலாம்.
லூக்கா நற்செய்தி கிபி 70-க்கும் 85-க்கும் நடுவில் எழுதப்பட்டிருக்கக் கூடும்.
யோவான் நற்செய்தி கி.பி. 90-ல் பட்மோஸ் என்ற தீவினில் நாடுகட்த்தப்பட்ட பின் எழுதப்பட்டிருக்கலாம். எல்லா நற்செய்தி அறிஞர்களும் ஒத்துக் கொள்ளும் ஒரே விஷயம் நான்கு நற்செய்திகளில் இதுவே கடைசியாக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்.
இப்போது நற்செய்திகளாக அறியப்பட்டிருக்கும் அந்த நான்கு நற்செய்திகளும் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் இருந்தன. இரண்டாம் நூற்றாண்டில் தான் ஏசுவின் சீடர்களான மத்தேயு, யோவான் இருவர் பேரிலும், ஏசுவின் அப்போஸ்தலர்களான பேதுருவோடு உடனிருந்த மார்க், பாலுடன் இருந்த லூக்காஸ் இருவர் பேரிலும் நற்செய்திகள் பெயரிடப்பட்டன.
காலம் செல்லச் செல்ல மேலும் பல நூல்கள் எழுதப்பட்டன. ஒவ்வொரு குழுவும் சில நூல்களை ஏற்றுக் கொண்டனர். இக்குழுக்கள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். இவைகளில் ஐரினியஸ் இருந்த குழு மேலும் மேலும் புதிய கிறித்தவர்களோடு பெரிதானது. இக்குழுவில் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்தவர்களில் வேதசாட்சி ஜஸ்டின் (Justin Martyr), டெர்டூலியன் (Tertullian) என்பவர்கள் முக்கியமானவர்கள். இக்குழுவே பழமைக் கிறித்துவர்கள் (Orthodox) என்றழைக்கப்பட்டனர். இவர்கள் மற்ற அணிகளை வென்று முக்கியத்துவம் பெற்றதும் கிறித்துவ வரலாறு புதியதாக மாற்றி எழுதப்பட்டது.
நிச்சயமாக ஏறத்தாழ அனைத்து விசுவாசிகளுக்கும் பல நற்செய்திகள் எழுதப்பட்டன என்பதே வியப்புக்குரிய விஷயமாகத்தானிருக்கும். அவைகளில் பலவற்றைப் பற்றிய விவரங்களும் உள்ளன என்பதும் இன்னொரு ஆச்சரியான விஷயமாக இருக்கும். (இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன். குரான் கடவுளிடமிருந்து வந்த வார்த்தைகள் மட்டுமே அடங்கியது என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை. ஆனால் நடந்த வரலாற்றைப் பார்க்கும் போது இது எந்த அளவு உண்மையாக இருக்கும் என்பது ஒரு கேள்வி.
இரண்டாவதாக, கிடைக்கும் பழைய ஏடுகள் எவையும் கிறித்துவர்களால் மறைக்கப்பட வில்லை. எல்லாமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படுகின்றன. ஆனால் சானா குரான் என்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, முதல் கட்ட ஆராய்ச்சி சிறிது நடந்தது. அதன் பின் அடிச்சுவடு இல்லாமல் அவை ஓரங்கட்டப் பட்டு விட்டன. இது இரு ‘பங்காளி’ மதங்களுக்குள் உள்ள ஒரு வித்தியாசம்! இந்த சானா குரானும் யூதரின் ‘சதித் திட்டம்’ என்று சொல்வது 1400 வருஷ ”விளையாட்டின்” ஒரு சின்ன பகுதி!)
நற்செய்திகள் பற்றிய இவ்வளவு உண்மையான வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்து கொண்ட பிறகும் “இவையெல்லாம் பரிசுத்த ஆவியின் வார்த்தைகள்’ என்று சொன்னால் அதை எப்படி நம்புவது?
மற்ற மூவர் விட்டுப் போனதை யோவான் எழுதியுள்ளார் என்று வரலாற்று, நற்செய்தி அறிஞர்களே சொல்லும் போது – எப்படி முதலில் பரிசுத்த ஆவி சில விஷயங்களைச் சொல்லாமல் விட்டுச் சென்றார் என்ற கேள்வி எழாதா?
References:
http://pagadhu.blogspot.in/2012/09/blog-post_26.html
https://www.catholicculture.org/commentary/articles.cfm?id=477
http://en.wikipedia.org/wiki/Arius#The_Arian_controversy
*
7 comments:
தருமி சார்.
அருமையான தகவல்கள்.
மத்தேயு எழுதின சுவிஷேசத்திற்க்கும், லூக்கா எழுதின சுவிஷேசத்திற்க்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. ஆதாமிலிருந்து இயேசு வரைக்கும் உள்ள சந்ததிகளின் order-ஐ பார்த்தால் தெரியும். பரிசுத்த ஆவி எழுதியிருந்தால் எப்படி வித்தியாசம் இருக்க முடியும்?
தருமிய்யா,
நீங்களும் அசராம துப்புத்துலக்கிட்டு தான் இருக்கீங்க :-))
அப்பவே இதுப்பத்திலாம் எழுதியிருக்கீங்க,ஆனாலும் இப்ப பேசும் போதும், அப்ப எப்படி சமாளிச்சாங்களோ அதையே தான் சொல்லி சமாளிக்கிறாங்க மார்க்கப்பந்துக்கள் என்பது சுட்டியில் பழைய இடுகைகளை படிக்கும் போது தெரிகிறது, இதுல "உங்களை இஸ்லாம் ஈர்க்கிறது,அதுவே மகிமைனு குத்தூஸ்னு ஒருத்தர் சொல்லி இருக்கார், இப்ப அதே டயலாக்கை சு.பி.சுவாமிகள் அடிக்கடி சொல்லிட்டு இருக்கார்,காலம்,ஆளு என மாறினாலும் "வசனத்த மாத்த மாட்டேங்கிறாங்களே" அவ்வ்!
# //Infancy gospels,
Jewish Christian gospels,
Sayings gospels,
Passion gospels,
Harmonized gospels,
Gnostic gospels. //
இது போல 17 கோஸ்பல் இருக்குனு சொல்றிங்க, இன்ன்னும் கூட நிறைய இருக்கும், வரலாற்றில் பதிவாகாமல் போயிருக்கும்.
ஏசுவிற்கு 72 சீடர்கள்னு ஆப்ரிக்க ஆர்த்தோடாக்ஸ் சர்ச் நம்புது, இந்த 12 எண்ணிக்கை எப்படி நிலைப்பெற்றிருக்குமெனில், அதிக புகழ்ப்பெற்ற ,நிறையா பாலோயர்கள் இருப்பவர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கும்,எனவே மற்றவர்கள் வரலாற்றில் பதிவாகாமல் போயிருக்கலாம்.
இது தவிர நாடுகளின் அடிப்படையில் பல கோஸ்பெல் இருக்கு.
//இப்போது நற்செய்திகளாக அறியப்பட்டிருக்கும் அந்த நான்கு நற்செய்திகளும் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் இருந்தன. இரண்டாம் நூற்றாண்டில் தான் ஏசுவின் சீடர்களான மத்தேயு, யோவான் இருவர் பேரிலும், ஏசுவின் அப்போஸ்தலர்களான பேதுருவோடு உடனிருந்த மார்க், பாலுடன் இருந்த லூக்காஸ் இருவர் பேரிலும் நற்செய்திகள் பெயரிடப்பட்டன. //
இதுல பெந்த கோஸ்ட், சிரியன் ,நசரேனியன் ,ஆப்ரிக்கன் எல்லாம் எதுல வராங்க,அவங்க சொல்றதுலாம் வித்தியாசமா இருக்கே.
வாஸ்கோட காமா இந்தியா வந்த போது, ஆகா ஒரு ஐரோப்பிய கிருத்துவர் வந்திருக்கார்னு ஆசையா நசரேனிய(தோமா கிருத்துவர்கள்) தங்கள் சர்ச்சுக்கு அழைத்து மகிழ்ந்திருக்காங்க,ஆனால் அங்கே இருந்த பைபிள், நற்செய்திலாம் ,வித்தியாசமா இருக்கவே ,இது கிருத்துவமே இல்லை, எங்களைப்போல மாறுனு சொல்லி இருக்கார்,இதுல என்ன கொடுமைனா, முதல் நூற்றாண்டில இருந்து "அவங்க நம்பிக்கை" தோமா சொன்னது என பின்ப்பற்றிக்கிட்டு இருக்காங்க,ஆனால் 15 நூற்றாண்டுல ஒருத்தன் வந்து தப்புனு சொன்னால் ஏத்துப்பாங்களா?
கடைசில சர்ச்சை எரிச்சு,கொலைப்பண்ணி கொடுமை பண்ணிட்டார் வாஸ்கோடமா,கொச்சின்ல இருந்து கோவா வரைக்கும் இதே வேலைய செய்திருக்கார்.
இதுக்கு பட்டமா "அட்மிரல் ஆஃப் தி அரேபியன் சீ" என கொடுத்து ,ஹாலந்து அரசர் கவுரவிச்சு இருக்கார், மேலும் இந்தியாவுக்கான்ன கவர்னராகவும் ஆக்கிட்டார்.அதுக்கு அப்புறமா அரேபிய கடலில் அதிகாரப்பூர்வம கடல் கொள்ளையும் அடிச்சிருக்கார் அவ்வ்!
எங்கேயிருந்தோ வந்துட்டு ,அரேபியக்கடலில் போற கப்பல்லாம் எனக்கு வரிக்கொடுக்கணும்னு சொன்னாரு வாஸ்கோட காமா அவ்வ்!
பலமிருக்கவன் சொல்வது தான் மதச்சட்டம்,அதுவே மாசுபடாத இறைவேதம்னு நம்ப வைக்கும் வேலைய தான் எல்லாம் செஞ்சிருக்காங்க.
நற்செய்தியிலும் அப்படித்தான் ஆகியிருக்கு. 72 சீடர்கள் பேரு என்னானு கூட தெரியாது, அவங்களுக்குலாம் எந்த அரச உதவி அல்லது பெரிய "பாலொயர்ஸ்" இல்லாமல் மடிந்திருப்பார்கள்.
#//இரண்டாவதாக, கிடைக்கும் பழைய ஏடுகள் எவையும் கிறித்துவர்களால் மறைக்கப்பட வில்லை. எல்லாமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படுகின்றன//
இஸ்லாம் அளவுக்கு மூடு மந்திரம் இல்லைனாலும், முடிஞ்ச அளவுக்கு மறைக்க முயற்சிக்கிறாங்க.
ஏசு கருப்பினத்தவர் என்பதை பற்றி பெரிய ஆய்வுக்கு உட்ப்படுத்தாமல் மறைப்பதை போல.
வாட்டிகனில் உள்ள பல ஓவியங்களிலேயே "கருப்பு ஏசு, மேரி இருக்காங்க" பிளாக் மடோனா எனவும் பேரு.
BBC news:
http://news.bbc.co.uk/2/hi/3958241.stm
15 ஆம் நூற்றாண்டில் தான் போப் அலெக்ஸாந்தர்-6 (ரோட்ரிகோ போர்கியா) என்ற மன்மத போப் தான் ஏசுவை வெள்ளையாக்கினாராம்.
இப்போ ஏசுவின் படமாக உருவகிக்கப்படுவது எல்லாம் டாவின்சி வரைந்த ஓவியத்தின் அடிப்படையிலாம், அதற்கு மாடல் போப்பின் பையன் செசாரியா போர்கியாவாம்.
அலெக்சாந்தர்-6 ,கிருத்துவ போப் வரலாற்றிலேயே வெளிப்படையாக பசங்க இருக்காங்கனு ஒத்துக்கிட்டவர், 10 பசங்களாம்,இதுல சொந்த மகள் மூலமாகவே 2 பசங்களாம் அவ்வ்!
போர்க்கியா என டீவி சீரியல் இப்போ ஓடுதாம், அது யூ டியூப்லவும் இருக்கு ,வாடிகனின் காதல் லீலைகளை நல்லா காட்டுராங்களாம் அவ்வ்!
இதெல்லாம் அப்பவே அலெக்ஸாண்டர் துமாஸ்(celebrated crimes, don juan) ,மாக்கியவெல்லி எல்லாம் கதையா எழுதிட்டாங்க.
போர்க்கியா என டீவி சீரியல் இப்போ ஓடுதாம், --- http://www.youtube.com/watch?v=8rdr9uj0JBQ
/ஏசுவின் படமாக உருவகிக்கப்படுவது எல்லாம் டாவின்சி வரைந்த ஓவியத்தின் அடிப்படையிலாம், அதற்கு மாடல் போப்பின் பையன் செசாரியா போர்கியாவாம்.//
மேரியாக உருவகப்படுத்தியது போப்பின் மகளாமே!
சுவிசேஷங்கள் எழுதியது யார்
http://pagadhu.blogspot.in/2012/09/blog-post_26.html
மாற்கு கதையோடு ஏசு சொன்னவை எனும் 'Q" சேர்ந்ததாம் மற்ற இரு ஒத்த கதை நற்செய்திகள்
மாற்கு மற்றும் ஒத்த கதை நற்செய்திகள் இயேசு சீடரோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு, என்றும் இது முழுவதும் கலிலேயாவில் என்கிறது. கடைசி வாரம் தவிர
யோவான் சுவிசேஷமோ ஏசு சீஷரோடு இயஙிய காலம் 2 வருடம் + சில நாடிகள் என ஆகும், மேலும் கடைசி 7 - 8 மாதங்கள், ஏசு ரோம் கவர்னர் ஆட்சியில் இருந்த ஜெருசலேமிலேயே என்கிறார்.
//அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை// ஏசு அரசியல் அதிகாரத்தில் இருந்து வந்தவர் இல்லை எனவே வரலாற்று பதிவுகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாமானிய நிலையில் இருந்த மக்கள் மனதில் ஏதோ ஒருவகையில் நிலைபெறும் வகையில் செயல்கள் நடந்திருந்தால் (பைபிள் விளக்கும் செயலாகவும் இருக்கலாம்)
மக்களின் மனதில் அல்லது மக்களின் பழக்க வழக்கத்தில் ஒரு அகங்கீகரிக்கபட்ட பாத்திரமாகியிருக்க முடியும். இதற்கு ஆதாரம் கிராமங்களில் கோலோச்சும் சாமியாடிகள் சாமியார்களே ஆதாரம். இது போன்ற நிலையில் செவிவழி செய்திகளே பெருமளவில் ஆதரங்களாக இருக்க முடியும். மேலும் அதிகார குழுக்களின் தாக்குதலுக்கு இலக்காகும் சிறு இனக்குழுக்கள் வரராற்று ஆதாரங்களை வைத்துக்கொண்டிருக்க முடியாது. வரலாறு பல நுாற்றாண்டுகளுக்கு பின் தொகுக்கப்படும் போது முழுவதும் ஆராய்ந்து நிறுபிக்க கூடியதாக இருக்காது. அதற்காக செவிவழிச்செய்திகள் அணைத்தும் உண்மையில்லை என்றாகிவிடாது.
Dear Ant,
ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும்
http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_25.html
http://pagadhu.blogspot.in/2012/10/blog-post_9.html
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post.html
http://devapriyaji.wordpress.com/.../jesus-resurrection.../
இயேசு தேவனின் ஒரே பேறான குமாரனா- இல்லையே?
http://pagadhu.blogspot.in/2012/09/blog-post_16.html
ஏசு உலகம் தன் வாழ்நாளில் அழியும் என நம்பினார். பவுல் அதை தன் வாழ்நாளில் என நம்பினார். 2ம் நூற்றாண்டு கடிதங்களும் அப்படியே.
மிகமுக்கியமான் நம்பிக்கைகள் - ஏசு உயிர்த்தார் 5ம் நூற்றாண்டுவரை முக்கிய கிரெக்க ஏடுகளில் மாற்கு 16: 9-20 இல்லை.
மூலா கிரேக்கத்தில் உள்ள சொல் ஏசுவை ஒரே பேறான மகன் என்றோ ஒரே மகன் என்றோ சொல்லும்படி வார்த்தை இல்லை. இவை எல்லாம் பின்னால் சேர்க்கப்பட்டவை. ஆதியே பார்த்தவர் இல்லமல் யாரோ பொஉனைந்தது. மேலும் ஆணிவேர் கொள்கைகள் கிரேக்கத்தில் இல்லை.
உலகம் அழியவில்லையே. கதாசிரியர்கள் காட்டும் ஏசுவும் மற்றவர்களும் காட்டும் நம்பிக்கையும் தவறு என்பது தெளிவாகும்.
Post a Comment