*
கவனிக்க வேண்டிய புத்தகங்கள்
தி இந்து - டிசம்பர் 24, 2014
மறக்கப்பட்ட பேரரசரின் சரித்திரம்
கி.மு. 304-ல் பிறந்த அசோகச் சக்கரவர்த்தி கி.மு.270 முதல் கி.மு.233 வரை, இந்தியாவின் தென்பகுதி நீங்கலாக மொத்த நாட்டையும் ஆண்டவர். ‘சாலை ஓரங்களில் மரத்தை நட்டார்’ என்ற அளவில் அவரைப் பற்றிய அறிமுகம் நம் அனைவருக்கும் பரிச்சயம். அசோகரின் வாழ்க்கை, இந்தியாவின் பேரரசராக அவரது வரலாறு, புத்த மதத்தைத் தழுவியதற்கான காரணம், பயணத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், வெளிநாடுகளிலும் புத்த மதத்தைப் பரப்ப அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்று பல்வேறு தகவல்களுடன் விரிவான புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
‘பேரரசன் அசோகன் - மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு’ ஆங்கிலோ-இந்திய எழுத்தாளரான சார்ல்ஸ் ஆலன் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தருமி. இந்த வரலாறு நேர்க்கோட்டில் அல்லாமல், பல்வேறு காலகட்டத்தில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இருப்பது வாசகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும்.
பேரரசன் அசோகன், சார்ல்ஸ் ஆலன், எதிர் வெளியீடு,
தமிழில்: தருமி.
பக்கங்கள்: 496 விலை: 400
மேற்கண்ட நூலை வெளியிட்டவர்கள்: எதிர் வெளியீடு, 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002
தொலைபேசி: 04259-226012; 99850 05084
*
6 comments:
test
இது போன்ற புத்தகங்களை நிதானமாக வாசித்து உள்வாங்க மனம் முழுக்க ஆசையிருந்தாலும் தொழில் வாழ்க்கை சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடின சூழ்நிலை மனதளவில் அதிக பாதிப்பை உருவாக்குகின்றது. உங்கள் வயது வரும் போது தான் ஆசைகள் நிறைவேறும் போல. வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ஐயா
இந்நூலினை ஆன்லைனில் வாங்க இயலுமா? ஐயா
[[பேரரசன் அசோகன் - மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு’ ஆங்கிலோ-இந்திய எழுத்தாளரான சார்ல்ஸ் ஆலன் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தருமி]]
வாழ்த்துக்கள் தருமி! நல்ல காரியம்; வரலாற்றை மறக்கக் கூடாது!
வாழ்த்துக்கள் சார்!
தங்களின் இந்த நூலைப் படிப்பேன். வாழ்த்துக்கள்.
Post a Comment