*******
உமாசங்கருக்கு முன்பு குரல் கொடுத்தோமேன்னு நினச்சா கஷ்டமா இருக்கு. சரியான விஷயத்துக்கு ‘சவுண்டு’ கொடுத்தோம்; ஆனால் சரியான ஆளுக்கு சவுண்டு கொடுக்கவில்லையேன்னு வருத்தமாக இருக்கு. பலரையும் அதில் இழுத்து வேறு விட்டு விட்டேன். எல்லோரும் மன்னிக்கணும்.
மனிதனுக்கு எத்தனை எத்தனை நிறங்கள் ...?
ஜீசஸ் வேற அடிக்கடி நேரே வந்து இவர்ட்ட பேசுறாராமே .... கடவுளே!
ஒரு கல்லூரியில் பேசியதைக் கேட்டேன். முட்டாள்தனமாகப் பேசினார். எதற்காக அந்தக் கல்லூரியில் அனுமதித்தார்களோ தெரியவில்லை. பேச்சைக் கேட்ட மாணவர்களும் நன்றாக எதிர் வினை செய்யவில்லையே என்ற வருத்தம் எனக்கு.
******
தில்லி மம்ஸ் நல்ல திறமைசாலி. நினைத்ததை எல்லாம் இதுவரை சாதித்து முடித்து விட்டார்.
ஹோவிட்ஸர் - இதற்கு சமாதி கட்ட நினைத்தார். முழுவதுமாக முடித்து விட்டார். ராஜிவ் புனிதராகி விட்டார்.
ராஜிவின் கொடும் கொலைக்குப் பரிகாரம் செய்ய நினைத்தார். முள்ளிவாய்க்காலில் அதை முழுமையாக முடித்து விட்டார்.
அடுத்த ப்ராஜக்ட் பெரிய காந்தி - அதாங்க, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - அவர் சொன்னதை ஏறத்தாழ முடித்து விட்டார். என்ன .. காந்தி சுதந்திரம் கிடைத்ததும் காங்கிரஸைக் கலைக்கச் சொன்னார். மம்ஸ் கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டார். அவ்வளவு தான். மன்மோகனும் ஒரு நல்ல பலிகிடா!
வாழ்த்துகள் மம்ஸ்!
******
காந்தி குடும்பம் தான் காங்கிரஸை ஒற்றுமைப் படுத்தி வைக்கும் என்று கட்சித் தலைவர்கள் கண்களை மூடிக்கொண்டு நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் அந்த மூட நம்பிக்கையிலிருந்து எப்போதோ விலகி விட்டார்கள். ஆனால் காங். தலைகள் அடுத்து பிரியங்கா வந்தால் காங். உய்வடைந்து விடும் என்று நினைப்பது வேடிக்கை.
அப்படி ஒரு வேளை பிரியங்கா வந்து விட்டால் என்ன செய்வது என்று கொஞ்சம் அச்சமாகவே உள்ளது. பதவியில்லாத போதே அவரது ஆசைக்கணவர் அடிக்கும் கொள்ளை பயங்கரமாக இருக்கிறது. மாநிலத்துக்குள் அவர் அடிக்கும் ஸ்டண்ட் பிறகு நாடு முழுவதும் பரவி விடும்.
ராகுல் எங்கே போயிருக்கிறார் என்று தெரியவில்லை. க்ரீஸ் என்கிறார்கள். இமய மலை என்கிறார்கள்.போனது வரை சந்தோஷம்.
Times of Indiaவின் தலையங்கத்தை extend your leave ... என்ற தலைப்பில் எழுதியுள்ளார்கள். quit என்று எழுதுவதற்குப் பதில் கொஞ்சம் நாகரீகமாக இப்படி எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். quit என்பதற்குப் பதில் disappear என்பது என் கருத்து.
*******
நல்லா நடிக்கிற தனுஷின் தலைவிதி ஏன் விளம்பரப் படங்களில் இம்புட்டு மோசமா இருக்கு? வாயில் போடுற சூயிங்கத்தை விளம்பரப்படுத்த ஒரு விளம்பரப் படத்தில ... அடடா ... கொடுமை வந்து கூத்தாடுது. இவருக்கு ஏனிப்படி ஒரு தலைவிதி!
தனுஷின் விளம்பரப் படங்கள் இதுவரை பார்த்ததெல்லாம் கொடுமையாக / கேவலமாக இருக்கு...
மாத்துங்க .. பாஸ்.
******
அமிழ்திலும் இனிது தமிழ் என்றார். ஆனால் இலங்கைத் தமிழ் அதிலினும் இனிது என்பது போல் இருக்கிறது.
பேசிப் பழக வேண்டுமென ஆசை!
******
7 comments:
தோரணத்தில் சில எனக்குப் புரியவில்லை. நான் அப்டேட் ஆகவில்லை என்றே நினைக்கிறேன் காங்கிர்சில் ஒற்றுமை என்பதே இல்லை. எப்போதுமே குடுமிப் பிடி சண்டைதான் காங்கிரஸ் தலையெடுக்க ( எடுக்குமா?) நாளாகலாம் For every beginning there must be an end. .சரியா?
தோரணத்தில் தங்களின் ஆதங்கம் தெரிந்தது. நன்றி.
குழல் இனிது, யாழ் இனிது என்பர், யாழ்ப்பான தமிழ் மக்களின் சொல்லைக் கேளாதவர்.
-பரதேசி என்னும் அல்பி (ஒரு பட்டிமன்றத்தில் சொன்னதை ரசித்து கேட்டேன்)
என்னோட பெட்டை அந்த ஊரு தானே... நானும் கொஞ்சம் வடிவா கதைப்பேன்.
//சில எனக்குப் புரியவில்லை//
எந்த portionsன்னு சொல்லுங்க ....revise பண்ணிடுவோம்.
சரியான ஆளுக்குக் குரல் கொடுக்கவில்லையோ என்ற எண்ணத்துக்கான காரணம் புரியவில்லை.
இனிது இனிது தமிழ் மொழி
அதனினும் இனிது இலங்கைத் தமிழ்
நன்றி ஐயா
தம +1
GMB,
உமா சங்கர் என்ற I.A.S. அதிகாரி அமைச்சர் என்றெல்லாம் பாராமல் பல ஊழல்களை வெளிக் கொணர்ந்தார் - உதாரணம் - சுடுகாட்டில் பிண எரிப்பு மேடைகளின் கூரைகளில் நடந்த ஊழல். ஆனால் இவர் அரசால் suspension செய்யப்பட்டார். இதை எதிர்த்து நானும் இன்னும் பலரும் பதிவுகள் இட்டோம்.
காலப்போக்கில் இந்த அதிகாரி மீது ஏசு படாரென்று “இறங்கி” அருள் பாலிக்க ஆரம்பித்தார். அவரும் பல மேடைகள் ஏறி தன் மதத்தினைப் பரப்ப ஆரம்பித்தார். ஏசு பல விஷயங்களை இவர் காதில் “அருளியதாக”வும் சொல்ல ஆரம்பித்து ஒரு மதவாதியாக மாறி விட்டார்.
இதைப் பற்றிய என் வருத்தத்தைத் தான் தெரிவித்திருந்தேன்.
Post a Comment