*
வழக்கமா வீட்டுக்கு கீரை விற்க வரும் அம்மாவின் இரண்டாம் பையனுக்குத் திருமணமாம்.இன்று பத்திரிகை கொடுக்க வந்தார்கள். பையன் பி.ஈ. முடித்து விட்டு, வேலை செய்து கொண்டே எம்.பி.ஏ, படிக்கிறாராம். பெண்ணும் பி.ஈ.முடித்துவிட்டு எம்.பி.ஏ.வும் முடித்து விட்டதாம். இது பெரிய ஆச்சரியமில்லை. அடுத்து, வீட்டையும் தென்னந்தோப்பையும் இன்னும் மகன்களுக்குப் பிரித்துக் கொடுக்கவில்லையாம். மற்றபடி ஆளாளுக்கு ஒவ்வொரு ஏக்கர் எழுதிக் கொடுத்தாச்சாம். இப்படி நிறைய குடும்பத்தைப் பத்தி சொன்னாங்க.
அவங்க போனதும் நானும் தங்க்ஸும் பேசிக்கொண்டோம். நம்மை விட வசதியான ஆளுக... அவங்க கிட்ட நாம் கீரை வாங்குறோம். அதிலும் நமக்கு ஒரு நினப்பு - நாம ரொம்ப பெரிய ஆளுக ... அவங்கல்லாம் படிக்காத லோயர் நிலை ஆளுக அப்டின்னு.
ஆனா இப்படி நினச்சப்போ அவர்கள் மேல் மரியாதை வந்தது. நிச்சயமாக சில மண்ணாந்தைகளுக்கு வரும் வயித்தெரிச்சல் எங்களுக்கு வரவில்லை.
இப்படித்தான் இன்னும் ஒரு ”பெரிய” உசந்த குரூப் நினச்சிக்கிட்டு இருக்கு - // ஐ. ஐ. டி மாதிரி ஒரு பிரிஸ்டீஜியஸ் காம்பஸில், கோஷம் போடுவது, கொடி பிடிப்பது, ஜாதி பேசுவது, ஹிந்து மதத்தை துவேஷமாகப் பேசுவது இதெல்லாம் நினைத்துப் பார்க்கும் போதே மனசுக்கு சங்கடமாகவும் அவமானமாகவும் இருக்கிறது//
இப்படிச் சொல்லிச் செல்லும் பெருந்தகைகளைப் பார்க்கும் போது கோபத்துக்கும் மீறி சிரிப்பும் வருகிறது.
பாவம் அவர்கள் .... நாமல்லாம் எங்கோ போய்டோம்னு தெரியாம நிக்கிதுகள்...!
*****
திண்டுக்கல் தலப்பாகட்டி விளம்பரப் பாடல்...
பிரியாணி எப்படியோ... இந்த பாடல் அம்புட்டு அழகு.
ஜிப்ரன் இசை; கார்த்திக் குரல் அப்டின்னாங்க.... செம டேஸ்ட்.
பாட்டு கேட்டதும் கஷ்டப்பட்டாவது தங்ஸ் டிவிக்கு ஒடி வந்திருவாங்க ...
*****
எப்படி சினிமாவை தியேட்டர்ல போய் பாக்குறது அப்படின்னு யாராவது ஒரு பாடம் எடுத்தா நல்லது. கட்டாயம் ஒரே வாரத்தில் பார்க்கணும் போல் இருக்கே. ஒரு வாரம் விட்டா படம் காணாமப் போகுது.
உத்தம வில்லன் பக்கத்தில நல்ல தியேட்டர்ல ஓடிச்சி. இந்தா அந்தான்னு உடனே பார்க்க முடியாமல் போச்சு.... சரி பார்க்கலாம்னு ஏழெட்டு நாள் கழிச்சிப் போனா அந்தப் படம் என்னைவிட வேகமாக ஓடிப்போயிரிச்சி.
புறம் போக்கு போகலாம்னு நினச்சா அது புறம்போக்காக ஆகிப் போச்சு.
36 வயதினிலே ... பார்க்கணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்.
இந்த நிலைமையில திருட்டு டி.வி. பார்க்காதன்னு சவுண்டு உடுறாங்க.
அதுனால இப்போவெல்லாம் இணையத்திலேயே பார்க்கிறதை வளர்த்துக்கணும்.
******
படம் கோடிக்கணக்குல எடுக்கிறதா சொல்றாங்க. ஓடுறதோ ஒரு வாரம் ... இல்லைன்னா ...கூட நாலைந்து நாள். போட்ட காசு எப்படி வரும்? நடிகர்களுக்கும் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்குறாங்க.
என்னமோ நடக்குதே சாமி ...!
******* *
7 comments:
/இப்படித்தான் இன்னும் ஒரு ”பெரிய” உசந்த குரூப் நினச்சிக்கிட்டு இருக்கு - // ஐ. ஐ. டி மாதிரி ஒரு பிரிஸ்டீஜியஸ் காம்பஸில், கோஷம் போடுவது, கொடி பிடிப்பது, ஜாதி பேசுவது, ஹிந்து மதத்தை துவேஷமாகப் பேசுவது இதெல்லாம் நினைத்துப் பார்க்கும் போதே மனசுக்கு சங்கடமாகவும் அவமானமாகவும் இருக்கிறது//
இதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதோ. சரி தங்ஸ் யார்.?
நம்மல்லாம் = ரங்கமணி
வீட்டுக்கார அம்மாக்கள் = தங்கமணி என்னும் தங்க்ஸ் / தங்ஸ்
மெளனராகம் படத்தில் ஜனகராஜ் தன் மனைவி ஊருக்குப் போய்ட்டாள் அப்டிங்கிற சந்தோஷத்தில் ‘தங்கமணி ஊருக்குப் போய்ட்டா’ன்னு கத்துவார். அதிலிருந்து ப்ளாக்கில் இந்தப் பயன்பாடு வந்தது.
கீரை விற்கம் தாயார் பாராட்டுக்குரியவர்
பாராட்டுவோம்
தம 1
படம் 2 வாரம் ஓடினால் அது வெற்றிப்படம். அப்படி ஓடுவது மிகச்சிலது தான். உத்தம வில்லன் நல்ல படம் ஆனா படத்துக்குள் வரும் உத்தமன் படம் தான் படத்தை தோற்கடிச்ச ஒன்னு.
//இருக்கிறது//
இதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதோ//
இல்லியே.... சுத்தியலால் ஆணியின் மண்டையில் தானே ஓங்கி அடித்திருக்கிறேன்!
தாங்கள் கூறுவது உண்மைதான். படிப்பு என்பதானது இப்போது பெருமைக்கு என்றாகிவிட்டது. எவரைக்கேட்டாலும் பி.ஈ., எம்.பி.ஏ., தொடர்ந்து ஐ.டி. நிறுவனங்களில் பணி. படித்த அளவு பண்பாடு இருக்கிறதா என்பதை நோக்கும்போது நாம் தோற்றே போய்விடுகிறோம். பண்பு குறைந்து ஆடம்பரம் என்ற பூச்சு பூசிக்கொண்டு பலர் நடமாடுவதைப் பார்க்கும்போது வேதனையே.
//எப்படி ... காய்கறி வித்தே உயர்ந்திரலாம்னு சொல்றீகளா?//
/அவங்க போனதும் நானும் தங்க்ஸும் பேசிக்கொண்டோம். நம்மை விட வசதியான ஆளுக... அவங்க கிட்ட நாம் கீரை வாங்குறோம். அதிலும் நமக்கு ஒரு நினப்பு - நாம ரொம்ப பெரிய ஆளுக ... அவங்கல்லாம் படிக்காத லோயர் நிலை ஆளுக அப்டின்னு.
ஆனா இப்படி நினச்சப்போ அவர்கள் மேல் மரியாதை வந்தது. நிச்சயமாக சில மண்ணாந்தைகளுக்கு வரும் வயித்தெரிச்சல் எங்களுக்கு வரவில்லை./
அதிர்ஷ்டமோ திறமையோ உழைப்போ வேறு ஏதோ, ஒரு அடித்தள நபர் மேன்மை அடைந்தது முற்றிலும் சாடப்பட வேண்டுமா?
/நானென்ன காமராஜரையும், கலைஞரையும் படிப்பறிவில்லாத ஆட்கள் என்றா சொன்னேன்/
முறை சார்ந்த கல்வி முறையில் ஜெயலலிதா கூட பள்ளி இறுதி தேர்வு கல்விதான்..
நல்ல எண்ணங்களும் மேலாண்மைத்திறமும் கல்விப்பட்டங்களைக் காட்டிலும் மேலானவை.
விமரிசிக்கப்பட்ட அமைச்சரைப்பற்றி பத்திரிகை செய்தி தவிர நானும் அறியேன் .(நீங்களும் அங்ஙனமே என நினைக்கிறேன் )
I got the following news item by googling:
http://www.dinamani.com/india/2015/05/30/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/article2840372.ece
The guy appears to have managed his task reasonably in a Delhi forum.
Let us wish them (ostensibly downtrodden) well. A biblical saying comes to my mind. "Curse not the darkness. Light a candle"
Post a Comment