Monday, October 19, 2015

870. I.C.C.U. வில் ஒரு நாள் .....







*





11.10.15. ஞாயிற்றுக் கிழமை. காலையிலே எழுந்து பதிவர் திருவிழாவிற்காகப் புதுக்கோட்டை பயணம். மதுரை சரவணனுடன் சென்றேன். இரண்டே கால் மணி நேரப் பயணம். பேருந்தை விட்டு நடக்க ஆரம்பித்தோம், 100 மீட்டர் தூரம் தான் இருக்கும். ஆனால் காலை ஏறு வெயில் சுளிரென அடித்தது. மண்டபத்திற்குள் நுழைந்தோம்


இயக்குனர்
கல்யாணவீட்டில் வரவேற்பார்களே அது போல் பெண்கள் கூட்டம் எதிர் கொண்டு அழைத்தார்கள்.  அட … என்ன இது.. என்பது போல் அனைவரும் லேசான டிசைன் போட்ட வெள்ளைச் சேலைஅரக்குக்கலரில் மேல்சட்டைபெண்கள் கல்லூரியில் 
major saree  கட்டுவார்களே அது போல் கட்டியிருக்கிறார்கள்; 
A PHOTOGENIC FACE


G.M.B. FAMILY

நல்ல முயற்சிதான் என்று எண்ணிக் கொண்டு மண்டபத்திற்குள் பார்த்தால் அங்கே புதுக்கோட்டை ஆண் பதிவர்கள் பளிச்செனக் கண்ணில் பட்டார்கள்வெள்ளை வேட்டிபெண்களின் மேல்சட்டைக் கலரில் இவர்கள் சட்டைஆஹா … என்ன பொருத்தம் இந்தப் பொருத்தம் என்று மெச்சிக் கொண்டேன்ஆடைகளில் ஆரம்பித்த பிரமிப்பு ஓவ்வொன்றிலும் தொடர்ந்தது.

புலவரய்யா

முனைவர் பழனி. கந்தசாமி

ஜோக்காளி- முனைவர் ஜம்புலிங்கம்- தமிழ் இளங்கோ

வழக்கமாக பதிவர் அறிமுகம் என்ற பெயரில் நீநீநீநீளமாக ஒரு நிகழ்வு இழுத்தடிக்குமேஅதை நறுக்குத் தெரித்தது போல் பத்து பத்தாகப் பிரித்து ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நடுவில் சொருகி விட்டார்கள்நல்ல கூட்டம்பெரியவர்கள் புலவரய்யா, G.M.B.தன் குடும்பத்தினருடன்பழனிச்சாமி ஐயா போன்ற பெரியவர்களும் வந்திருந்து பெருமைப் படுத்தினார்கள்இவர்கள் வயதிற்கும் அவர்களின் ஆர்வத்திற்கும் இருக்கும் எதிர்மறைப் பொறுத்தம் பார்த்து அசந்து விட்டேன்அவர்களைப் பெருமைப் படுத்த பெரும் பதிவர்கள் இருவருக்கு கேடயம் வழங்கினார்கள்புலவரய்யாவிற்கும்சீனாவிற்கும் அந்த இரு கேடயங்களை வழங்கினார்கள். (ஆஹா… மதுரைக்கும் ஒரு கேடயம்!)


புதுக்கோட்டைக்காரர்

யார் யார் பேசினார்கள் என்று மற்றவர்கள் எழுதியிருப்பார்கள் என்பதால் அவைகளைத் தவிர்க்கிறேன்ஆனாலும் பலரின் பேச்சுக்கள் முனைப்போடும்ஊக்கமூட்டுதலோடும் இருந்தன.  நடுநடுவே சில அழகான தமிழ்ப்பாடல்கள் ஒரு சிறு பெண்ணின் அழகான குரலில் ஒலித்தது.

மாலையில் பேசிய எஸ்ரா – very sensitive and sensible கருத்துகளைக் கொடுத்தார்பதிவர்களின் நாளைய பணி என்ன என்பதை மிக அழகாகபொறுப்பாகஅழகான சான்றுகளோடு விளக்கினார்அது நமது கட்டாயக் கடமை என்றும் பேசினார்.








திருப்பதி மகேஷ்



விழாவினர் ஒரு தவறு செய்து விட்டார்கள்.



எவ்விதத் தொய்வும் இல்லாமல் முழு நாளும் நிகழ்ச்சிகளோடு நம்மைக் கட்டிப் போட்டு விட்டார்கள். தொய்வில்லாததால் விழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் முழுமையாகக் கவனிக்கவும், கேட்கவும் முடிந்தது. குறை சொல்ல ஒன்றுமில்லை! நிகழ்ச்சிகளும், புத்தகப்பரிசுகளும், பதிவர் அடையாளப் புத்தகமும்…. எல்லாமும் முனைந்த முன்னேற்பாட்டோடு அழகாகச் செய்யப்பட்டிருந்தன.  ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடமைகள் கொடுக்கப்பட்டிருந்தது போலும். அதனால்  குழப்பமின்றி இனிது நிகழ்ச்சிகள் நடந்தன. அவர்கள் செய்த தவறு என்னவென்றால் ….இனி அடுத்து வரும் விழாக்களில் இத்துணை கவனமும், கவனிப்பும் இருக்குமா என்று சந்தேகப்பட வைத்து விட்டனர் விழாக்குழுவினர்.  பாவம் … அடுத்த ஆண்டு விழா நடத்துவோர். முத்து நிலவன் ஐயா அவர்களின் முதன்மையும், வழி நடத்துதலும் மிகச் செவ்வனே இருந்தது. அவருக்கு என் பாராட்டுகள். ஆனாலும் … இதற்காக அத்தனை பெரிய மாலையைப் போட்டு அவரை “அமுக்கி” இருக்கக்கூடாது!

விழா முடியும் தறுவாயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றோம். இப்போது எதிர் வெயில் சுட்டெரித்தது. தெருமுக்கிற்கு வரும்போதே வேர்த்துக் குளித்து விட்டேன். சரவணனே ஏனிப்படி வேர்த்து விட்டது என்றார். ஒரு லொட .. லொட பஸ்ஸில் ஏறினோம். பஸ் ஊர்ந்து போனதாகத்தெரிந்தது. ஆனாலும் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்ந்து விட்டோம்.
அடுத்த சோதனை ஆரம்பித்தது. காலையில் அவசரத்தில் இரு சக்கர வண்டியை நிலையத்தில் விட்டு விட்டு வந்தேன். இவ்வளவு பெரிய ஸ்டாண்டு என்பது தெரியாது. மாலையில் இறங்கி வண்டியைத் தேடினால் எங்கும் கண்ணில் படவேயில்லை. நானும் சரவணனும் சலித்தும் கண்களில் படவில்லை. ஒரு மணி நேரத் தேடல். அலுத்தும் சலித்தும் விட்டேன். Dead tired! மழை வேறு கொட்ட ஆரம்பித்தது. நாளை பார்த்துக் கொள்ளலாமென்று முடிவெடுத்து வீட்டிற்குச் சென்றோம்.
காலையில் எழுந்ததும் ஒரு நல்ல சேதி. பதிவர் விழாவிற்கு வந்திருந்த தோழர் அரசெழிலன் தொலைபேசியில்  என் நூலைப் பற்றி நல்ல ஒரு கருத்துரை கொடுத்தார். அவர் தன்னைப் பற்றிச் சொன்னது எனக்கு மிக பிரமிப்பாக இருந்தது. பலருக்கும் பலனுள்ள வாழ்க்கை வாழ்ந்து வருவது அறிந்து மகிழ்ந்தேன்.
அவரோடு பேசி முடித்த்தும் எழூந்தேன். இடது கையில் ஒரு வலி. தலையில் சிறிது அசமந்தம். ஏதோ தவறு என்பது போல் நினைப்பு. ஒரு மணி நேரம் வேறு வேலைகளில் ஈடுபட்டேன். பயனில்லை. பக்கத்து வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு குடும்ப டாக்டரிடம் சென்றோம். வழக்கமாக ரத்த அழுத்தம் சிறிதே மேலே இருக்கும். கவலைப்பட வேண்டாம்  என்பார். இந்த முறை அழுத்தம் பார்த்த்தும் … down to earth!! ரொம்ப கீழே போயிருந்தது. மருத்துவ மனைக்குச் செல்லுங்கள் என்றார். ஒரு மணி நேரத்தில் மருத்துவத்தில் சேர்ந்தேன்.
வழக்கமாக – 20 ஆண்டுகளாகபார்க்கும் மூத்த மருத்துவர் வந்தார். என்ன ஆச்சு என்றார். வழக்கமான ஆண்டுக்கொருதடவை அவரைப் பார்த்து இரண்டு மூன்று மாதங்களே ஆகியிருந்தனநடப்பைச் சொன்னேன். முழு விவரமும் கேட்டார். எல்லாம் சொன்னேன். ஒரு நாள் observation என்றார். ஆனால் 4 நாட்களாகி விட்டன. நேற்றுமாலை வீடு வந்து சேர்ந்தேன்.
புறப்படும் முன் மருத்துவர் கொஞ்சம் easyஆகச் செல்லுங்கள் என்றார். நான் எழுதுவது, அரை குறையான போட்டோ ஆர்வம், வீட்டம்மாவின் எதிர்ப்போடும் அவரது ஆதரவோடும் விளையாடும் shuttle cock எல்லாம் அவருக்குத் தெரியும்.

ஓரிரு வாரம் விளையாட்டு வேண்டாம்.
குறைவாக நடக்க ஆரம்பியுங்கள்.
ப்ளாக் குறையுங்கள்.
கம்ப்யூட்டரில் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
வாசியுங்கள்.
போட்டோ ஷாப் படியுங்கள்.
நன்கு ரெஸ்ட் எடுங்கள் ….. என்று சொன்னார்.


அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா….??!!

 *

20 comments:

G.M Balasubramaniam said...

உங்கள் மன வலிமையில் எல்லாம் சரியாகி விடும் இருந்தாலும் உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள் புதுகையில் மீண்டும் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. வணக்கங்களுடன் ஜீஎம்பி

Mahesh said...

மருத்துவர் சொல்லியது சரிதான்.
நல்லா ரெஸ்ட் எடுங்க சார்.


உடல் உழைக்காட்டியும்
மூலையையும் ரெஸ்ட் எடுக்க விடுங்க சார்.

நன்மனம் said...

Take rest sir, wish you speedy recovery and return back with renewed energy sir.

Unknown said...

ஆச்சரியம் ......
போட்டோவில் முனைவர் அவர்களின் அருகிலே நானும் !
ஒற்றுமை ........
பதிவர்கள் நமக்கு ஆதரவும் எதிர்ப்பும் வீட்டிலேயே ஆரம்பமாகி விடுகிறது :)

Unknown said...

பதிவைப் படித்து வேதனைப் பட்டேன்!பூரண ஓய்வு எடுங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

தி.தமிழ் இளங்கோ said...

தருமி அய்யா! பஸ் ஸ்டாண்டில் உங்களது வாகனத்தை தேடியதில் அதிக பதற்றம் ஆகி களைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு நான் எதனையும் சொல்ல வேண்டியதில்லை. நடைப் பயிற்சியாக இருந்தாலும், சாதாரணமாக (Casual) செய்யுங்கள். அதிக நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டாம்.

கரந்தை ஜெயக்குமார் said...

மருத்துவர் சொல்வதைக் கேட்டே ஆக வேண்டும் ஐயா
சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா
என் படத்தினையும் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

வருண் said...

Keeping off from internet and blog world will help you bring down your stress, I believe! Take care, Dharumi Sir! :-)

ராமலக்ஷ்மி said...

Take care, sir.

சார்லஸ் said...

சார்

உங்கள் நலனில் நல்லவர்கள் பலரின் அக்கறையும் இருக்கிறது . கூடவே கடவுளின் அருளும் உங்களுக்கு கிடைக்கட்டும் என்று சொன்னால் ' எந்தக் கடவுள் ' என்பீர்கள் . நல்லது.

உங்கள் பதிவு வாசித்ததில் புதுக்கோட்டை பதிவர் விழாவினை நேரில் கண்டது போல இருந்தது . இன்னும் பல பதிவர் விழாக்களை நீங்கள் சந்திக்க வேண்டும். உடல் நலனிலும் கவனம் செலுத்துங்கள்.

சார்வாகன் said...

அன்புள்ள அய்யா,
உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
ந‌ன்றி!!

வெங்கட் நாகராஜ் said...

Take Care... Blog will wait.



வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

ஐயா... வணக்கம்... தகவல் தந்தமைக்கு நன்றி...

இந்தப் பதிவையும் இணைத்து விட்டேன்... (http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html)

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

அய்யா வணக்கம். தங்கள் உடல்நிலை கவலை தருகிறது.
தங்களின் மனம்போல் எல்லாம் சரியாகவே இருக்கும். கவலை எதுவுமின்றி ஓய்வெடுங்கள். மனம் விரும்பும் அழுத்தமில்லாத மனதிற்கினிய பணிகளில் ஈடுபடுங்கள். மதுரை வரும்போது சந்திப்பேன். தங்கள் உடல்நிலை முக்கியம் அய்யா. வணக்கம்

KARANTHAISARAVANAN said...

அய்யா வணக்கம். என் மனதில் தோன்றியதை தங்கள் பதிவில் பார்த்தேன். ஒரு விழாவினை இதை விட சிறப்பாக யாரும் செய்ய முடியாத நிலையை புதுகைக்காரங்க ஏற்படுத்தி விட்டார்கள் என்றால் அது மிகையாகாது. மேலும் தங்கள் உடல்நிலை மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டுகிறேன். நன்றி.

மீரா செல்வக்குமார் said...

அருமையான பதிவு ஐயா....சீருடையின் வண்ணம் வரை சென்ற கூரிய நோக்கு....மாலை ,மற்றும் மாலை வரை நடந்ததை நீங்கள் கோர்த்த மாலை......அற்புதம்....என்ன செய்ய முடியும் உங்களுக்கு?
நன்றிப்பூக்கள் தான்....
குணமடையுங்கள்....

வேகநரி said...

உடல்நிலையில் மருத்துவர் சொல்வதை கேட்டு நடவுங்கள். நீங்க மீட்டெழுந்து வர மிகவும் விரும்புகிறேன். ரத்த அழுத்தம் மேலே இருப்பதைவிட கீழே இருப்பது தேவலை என்று இதுபற்றி தொடர்புடையவங்க சொன்னாங்களே!

தஜ்ஜால் said...

வணக்கம்

உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்

Geetha said...

வணக்கம் சார்...உங்களைப்பார்த்தும் விழாவில் நீண்ட நேரம் பேச முடியவில்லை....உங்கள் வருகையால் மிகவும் மகிழ்ந்தோம்...நீங்கள் தான் மூத்தபதிவர் என பழனி கந்தசாமி அய்யா கூறினார்..உங்களை கவனிக்க இயலாதது வருத்தமே...உடல்நலத்தைக்கவனித்துக்கொள்ளுங்கள் சார்..

தருமி said...

அன்று அளித்த அழகான விருந்தோம்பலுக்கு நன்றி.
இன்றைய அன்பான விசாரிப்பு மிக்க நன்றி.

என்னை விட மூத்த பதிவர்கள் எனக்குத் தெரிந்து மூவர் இருந்தனர். அதனால் தான் அவர்களின் புகைப்படங்களையும் இட்டேன் - மரியாதை நிமித்தம்.
நான் மிகவும் “சின்னவன்” !!!

Post a Comment