Monday, November 16, 2015

874. THANK YOU GUYS....... I APOLOGIZE.......







*


 ........இப்படி ‘மசாலா’ படங்களாக என்னும் எத்தனை காலத்திற்குத்தான் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம். ஆங்கிலத்தில் சொல்வார்களே -genre - என்று அது போல வகைப்படுத்தப் பட்ட படங்களைப் பார்க்கும் காலம் வரவே வராதா? நம் இந்தியப் படங்களில்தான் இப்படி ‘எல்லாமும்’ சேர்ந்த சினிமாக்கள் வருகின்றன. action, thriller, musical, mystery, suspense, western, war stories என்று எத்தனை வகைகள் மற்ற எல்லா மொழிப் படங்களிலும் இருக்க நம்மூர்ல மட்டும் ஏன் இப்படி ஒரே வகைப் படங்கள் வந்து தொலைகின்றன. 

.......... இப்படியெல்லாம் நான் பத்து ஆண்டுகளுக்கு முன்  பாடிய பிலாக்கணம் இங்கே இருக்கிறது. நடக்கவே நடக்காது என்ற தமிழ்ப்பட உலகத்தில் பெரும் மாற்றம் நடந்து வருகிறது. மகிழ்ச்சி.

காதல் கண்றாவி தவிர ஏதும் இல்லாமல் இருந்த தமிழ்ப்பட உலகில் சமீபத்தில் வந்த நல்ல படங்களை என் மதிப்பீட்டு வரிசையில் தந்துள்ளேன்.

குற்றம் கடிதல் பிரம்மா -  காக்காமுட்டை படத்திற்கு ஊடகங்களில் கிடைத்த அளவிற்கு இப்படம் கவனிக்கப் படவில்லையே. ஏன்?

காக்கா முட்டை மணிகண்டன் 

ஆரண்ய காண்டம் 2010 கூத்துப்பட்டறை சோமசுந்தரம் என்றொரு புது முகம் என்னமா நடித்தார்! அதன் பின் ஆளே காணோமே. மறுபடி இயக்குனர் குமாரராஜா படத்திலாவது வருகிறாரா என்று பார்ப்போம். அட... குமாரராஜாவையும் காணவேயில்லையே!

பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இவர் யாரென்று தெரிவதற்கு ஓராண்டிற்கு முன்பே அவர் எடுத்த the last train  என்ற குறும்படத்தை எனது ப்ளாக்கில் போட்டிருந்தேன். அர்த்தமுள்ள படம்.

சூது கவ்வும் நளன் குமாரசாமி .  இதில் வந்த ஒல்லிப்பிச்சான் ரமேஷ் திலக் கனா காணும் காலங்களில்  கேபிள் ஷங்கரோடு வந்த முதன் முதல் சீனிலேயே பிடித்துப் போயிற்று.

அழகர்சாமி குதிரை (கதை மூலம், பாஸ்கர் ஷக்தி)   சுசீந்திரன்

இன்று நேற்று நாளை திருப்பூர் ரவிக்குமார் 

ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ்

கோலி சோடா விஜய் மில்டன் 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்- பாலாஜி தரணிதரன்


இந்த இயக்குனர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

தொடருங்கள்..............

8 comments:

மீரா செல்வக்குமார் said...

நல்ல ஒப்பீடும்....வரிசையும்

”தளிர் சுரேஷ்” said...

நல்ல படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

கோவி.கண்ணன் said...

கார்திக் சுப்புராஜ்

வேகநரி said...

தலைப்பை மட்டும் படித்தால் கடவுள் பக்தர்கள் நம்பிக்கையுடன் ஒரு கொண்டாட்டமே கொண்டாடியிருப்பார்கள் இப்போது தமிழ்மணத்தில் கடவுளுக்கான மாதம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவ்வாறாகவும் படம் எடுக்க முடியும் என சாதித்தவர்களின் திரைப்படங்களைப் பகிர்ந்தவிதம் அருமையாக இருந்தது. நன்றி.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

கோவி...தவறைத் திருத்தி விட்டேன்.

THANK YOU GUY....... I APOLOGIZE....... & I MEAN IT.

THE LAST TRAIN பாருங்க.......

சார்லஸ் said...

நீங்க சொல்லியிருக்கும் வரிசையில் உள்ள திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமானவைதான் ! சில படங்களில் லாஜிக் இருக்காது . சினிமா என்ற வகையில் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயங்கள் நிறைய சேர்க்கிறார்கள். காசு பார்க்கத்தானே படம் எடுக்கிறார்கள். கலையை வளர்க்கவா எடுக்கிறார்கள்!? ஆனாலும் காக்கா முட்டை இரண்டையும் சம்பாதித்து விட்டது. மிகவும் யதார்த்தமான லாஜிக் உள்ள படம் . மணிகண்டனுக்கு வாழ்த்துகள்.

Post a Comment