*
பேத்தியின் வலைப்பூவில் அவள் வரைந்த படத்தை அலையேற்றினேன். அப்படியே ஒரு ஆசை. நான் வரைந்த படம் ஒன்றையும் சேர்த்து "ஒட்னீஸ்" போட்டுக் கொண்டேன். அதை இங்கேயும் பதிந்து விட்டேன்.
*
நானும் வரைந்து பார்த்தேன் ...
எப்படியோ பேத்திகள் இருவருக்கும் அன்று வரையும் மூட். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பேத்திகள் மும்முரமாக வரைந்து கொண்டிருந்தார்கள். தரையெல்லாம் வண்ணக் கலவைகள் தான். பெரிய பேத்தி வரைந்து முடித்தாள்.
அவள் வரைந்த படம் ....
சின்ன பேத்தியும் வரைந்து முடித்தாள்.
அடுத்ததாக அம்மாகாரி பிள்ளைகளை சிந்திய வண்ணங்களைத் துடைத்துச் சுத்தம் செய்யச் சொன்னாள். சிந்திய வண்ணங்களைப் பார்த்ததும் எனக்குள் இருந்த (?) கலைஞன் விழித்துக் கொண்டான். சிதறிக் கிடந்த வண்ணங்களும், தூரிகைகளும் வா ..வா எனக் கூப்பிட்டன. விட்டேனா பார் என்று கசங்கிக் கிடந்த தாளில் நானும் வரைந்தேன்.
நான் "வரைந்த" படம் ....
படத்தை வரைந்ததும் பெரிய பேத்தியிடம் காண்பித்தேன். not bad என்பது மாதிரி தோளைக் குலுக்கினாள்.
two out of ten? என்றேன்.
no..no.. eight out of ten என்றாள்.
எனக்கு சந்தோஷம் தாளவில்லை ...
கடைசியாக நால்வரும் சேர்ந்து தரையைச் சுத்தப்படுத்தினோம்!!
*
7 comments:
சும்மாச் சொல்லக் கூடாது நீங்கள் வரைந்தபடம் கலைச் செறிவுடன் இருக்கிறது பெட்டர் தான் யுவர் பேத்திஸ் .....!
இருந்தாலும் அது பேத்தி வரைந்ததல்லவா ...!
பேத்தியின் படம் நல்லாக இருந்தாலும், விழித்தெழுந்த கலைஞன் வரைந்த படம் அதைவிட நல்லா தான் இருக்கிறது.
உங்கள் படத்திற்கு பாஸ் மார்க் தருகிறேன்.
வாழ்த்துக்கள் ஐயா
//உங்கள் படத்திற்கு பாஸ் மார்க் தருகிறேன்.//
down .. down ... strict வாத்தியார்!!
உங்களுக்கும் பேத்திகளுக்கம் பத்துக்கு பத்து, ஈடுபாட்டோடு ஓவித்தினை வரைந்து எங்களுடன் பகிர்ந்து கொண்டதால்.
Post a Comment