*
“The level of threats has never been so high as today in regard to the Islamic State and other jihadists,” says Jean-Charles Brisard, chairman of the Paris-based Center for the Analysis of Terrorism. “So the timing is a real challenge for everyone.”
*
July 11, 2016 – இன்றைக்கு முழுசும் வெறும் தூக்கம் மட்டும் தான். நேற்று ராத்திரி மூணு மூணறை மணி வரை உட்கார்ந்து இந்த வயசில் ஈரோ இறுதிப் போட்டியை உக்காந்து பாத்துக்கிட்டே இருந்தா …. பகல்ல தூக்கமாத்தான் வந்துகிட்டு இருக்கும். நடுவில் தங்க்ஸிடமிருந்து சில பல இடிகள் …’இந்த வயசுக்கு இது தேவையா …?’
விளையாட்டிற்கு முன்பே தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் வந்த செய்தி எனக்குப் பின்னால் தான் தெரிந்தது. இப்படி ஓப்பனாக மிரட்டல் வந்தும் ஸ்டேடியம் முழுவதும் ஆள் நிரம்பியிருந்தது ஆச்சரியம் தான். பாவம் போனால் போகுதுன்னு விட்டு விட்டார்களோ?
ப்ரான்ஸ் அரையிறுதியில் luck played a major role அப்டின்னு தோன்றியது. முதல் பத்து நிமிடத்திலேயே பந்து முழுவதும் ஜெர்மனி வசமே இருந்தது. போற போக்கில ப்ரான்ஸ் ரெண்டு மூணாவது வாங்கிவிடும்னு நினச்சேன். ஆனால் முடிவு மாறி விட்டது.
நடுவில் ஒரு சின்னக் கோடு … luck அந்தப் பக்கமும் நிக்கலாம் …அல்லது இந்தப் பக்கமும் நிக்கலாம் அப்டின்ற பெரிய பிலாசபி உண்மையாகப் போச்சு.
நேற்றும் முதல் பத்து நிமிட்த்திலேயே ஆட்டம் சூடு பிடிச்சது. பந்து முழுவதும் ப்ரான்ஸ் வீரர்களின் காலில் தான்.
9வது நிமிடம்: Greizmann – அவர் தான் ப்ரான்ஸின் ஹீரோ. அடிச்ச பந்து இருமுறை போர்ச்சுகல்லின் கோலைத் தொட்டுவிட்டுச் சென்றன.
அடுத்த ஓரிரு நிமிடத்திலேயே ரொனால்டோவை foul செய்ததில் free kick கிடச்சிது. அந்த foul அப்படி ஒன்றும் பெரிய முரட்டுத் தனமான foul கிடையாது என்றே தோன்றியது. சின்ன மோதல். கால்பந்தில் இது சாதாரணம் தான். ஆனால் அடி பட்டு விட்டது போலும். முதலுதவி கிடைத்ததும் அடுத்து ஒரு 10 நிமிடம் விளையாடி விட்டு பின் முழங்காலைப் பிடித்துக் கொண்டார். ஸ்டெச்சரில் வெளியேறினார்.
நான் ரொனால்டோவாக இருந்தால் ஒரு வேளை நானில்லாமல் என் டீம் ஜெயிக்கக்கூடாதுன்னு நினைப்பேனான்னு ஒரு சுய ஆய்வும் மண்டைக்குள் அப்போது ஓடியது. .
மனசுக்குள் இவர் போய்ட்டா போர்ச்சுகல் அவுட்டு தானோன்னும் தோன்றியது. அதுவும் பந்து இருப்பது முழுவதும் ப்ரான்ஸில் கால்களில் தான். சூடாகவே ஆட்டம் நடந்து கொண்டிருந்தது.
65வது நிமிடம் … Greizmann அடித்த பந்து … நான் கோல் என்றே நினைத்தேன். ஆனால் அது கோலல்ல.
மணி சரியாக இரவு இரண்டு மணி. அடுத்த ஆறாவது நிமிட்த்தில் ஒரு கார்னர் ஷாட் – ப்ரான்ஸிற்கு. Greizmann அடித்தது. இதுவும் கோல் என்பது போல் தோன்றி .. இல்லாமல் ஆனது. So near ...yet so far!
சான்ஸ்கள் ப்ரான்ஸ் பக்கம் நிறைய. தொடர்ந்து வந்தன. ஆனால் கோல் ஏதும் விழவில்லை.
73வது நிமிடம். என் மனசுக்குள் ஒரு பட்சி சொன்னது: போற போக்கைப் பார்த்தால் நிச்சயம் ப்ரான்ஸ் கோல் வாங்கப் போகிறது.
74 நிமிடம் .. அடுத்த சான்ஸ்.
79 நிமிடம் .. 83 நிமிடம் இன்னும் இரண்டிரு வாய்ப்புகள். கோல் ஏதுமில்லை. 90வது நிமிடம் .. விசிலுக்கு இரு நிமிடங்கள் முன்பு .. போர்ச்சுகல்லின் மரியோ அடித்த அடி கோல் போஸ்ட்டின் - horizontal bar – பட்டு தெறித்துப் போனது.
முழு நேரவிளையாட்டு முடிந்த பின் அரை மணி நேர விளையாட்டு ஆரம்பித்தது. இப்போது தான் பந்து இரு முனைகளுக்கும் மாறி மாறிச் சென்றன. மேலும் சூடு.
94 வது நிமிடம் – போர்ச்சுகல் கோல் விழுந்தது என்று நினைத்தேன். அது ஒரு off side ஆனது.
103 வது நிமிடம் – கார்னர் ஷாட். போர்ச்சுகல் அடித்து ப்ரான்ஸ் கோல் விழுந்து விட்டது என்றே நினைத்தேன். விளாயாடிய வீரர்களில் மோசமாக விளையாடியது ப்ரான்ஸின் கோல் கீப்பர் என்று தான் எனக்குத் தோன்றியது.
சைட் பெஞ்சில் ப்ரான்ஸ் கோச் இரு கைகளில் தலையைப் புதைத்து, தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார்.
107 வது நிமிடம். போர்ச்சுகல்லிற்கு ஒரு foul க்காக ஒரு free kick கிடைத்த்து. பந்து சரியாக vertical bar பட்டுப் போனது.
அப்போது மனசுக்குள் வந்த வாக்கியம் – “அட .. போங்க பாஸ்”!
108 போர்ச்சுகல்லின் எடர் அடித்து … ப்ரான்ஸிற்கு கோல் விழுந்தது.
மனதிற்குள் தோன்றியது – அப்பாடா … ! ஏன்னா… ப்ரான்ஸ் தோற்க வேண்டுமென்றெல்லாம் நினைக்கவில்லை. சொல்லப் போனால் மனசு ப்ரான்ஸிற்காகத்தான் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் … டென்ஷன் தாங்க முடியவில்லை. இதய நோய்க்காரர்கள் பார்க்கத் தகுந்த ஆட்டமல்ல நேற்று நடந்தது. முதலில் ப்ரான்ஸ் ஜெயிக்கும் என்பது போல் இருந்தது. பின்பு இறுதியில் மாறி மாறி வந்தது. 120 நிமிடமும் ஏறத்தாழ ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனோடு தான் ஆட்டம் நடந்தது.
அதோடு பெனல்டி அடித்து வெற்றி தோல்வி என்று மதிப்பிடுவது வழக்கமாக எனக்கு நிறைய ஏமாற்றமாக இருக்கும். அந்த நிலைக்குச் செல்லாமல் ஆடியே வெற்றி தோல்வி என்றானது கொஞ்சம் திருப்தி தான். போர்ச்சுகல்லின் நானா விளையாட்டு எனக்குப் பிடிக்கும். ஆனால் நேற்று அவரது ஆட்டம் கவரவில்லை.
***
நண்பர் வேகநரி: போர்ச்சுக்கல் ரொனால்டோவின் செயல்கள் நாடகதனமானவை என்று என்னுடன் போட்டி பார்த்த ஜரோப்பிய நண்பர்கள் சிலர் சொன்னார்கள் (குற்றம்சாட்டினார்கள்). நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். அதை பற்றி நீங்க என்ன நினைச்சீங்க என்பதை தெரிஞ்சு கொள்வதில் எனக்கு ஆவல். வசதிபடும் போடு தெரிவியுங்கோ.
ஒரே ஒரு இடத்தில் எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. ஆட்டத்தில் நடுவிலும், ப்ரேக் சமயங்களிலும் விளையாட்டு வீரர்களைத் தட்டிக் கொடுப்பதும், தொடர்ந்து அவர்களுக்கு பெப் கொடுப்பதும் கொஞ்சம் அதிகமாகத் தோன்றியது.
அதோடு விளையாட்டு முடிந்த பின் காலில் knee cap போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். நடுவில் சில steps சாதாரணமாகப் போட்டுக் கொண்டு, திடீரென்று நினைவுக்கு வந்தது போல் சிறிது நொண்டியது போல் எனக்குத் தோன்றியது.
ஆனால் அடிபட்டு விழுந்ததும் அவர் கண்களில் வந்த கண்ணீர் உண்மையாகத்தானிருக்க வேண்டும். டாப் ப்ளேயராக இருந்து கொண்டு இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனால் … நிச்சயம் பெரும் வருத்தம் தான்
விளையாட்டு முடிந்ததும் நானேஒரு சுய பரிசோதனை செய்து கொண்டேன். இவ்வளவு த்ரில்லான, டென்ஷனான விளையாட்டை இவ்வளவு நேறம் உட்கார்ந்து பார்ப்பது கொஞ்சம் அதிகம் தானோ …? அதுவும் நடுவில் ஓரிரு இடத்தில் சிறிது எமோஷனலாகி நான் போட்ட ‘சின்ன’ சத்தம் தூங்கிக் கொண்டிருந்த தங்க்ஸ் காது வரை போய் காலையில் அதற்கும் கொஞ்சம் ‘தூபம்” காட்டப்பட்டேன்.
*
2 comments:
வேகநரி said...
90வது நிடம்கள் பிரான்ஸ் வீரர்கள் அடிக்கிறார்கள், அடிக்கிறார்கள், சரிவரவில்லையே!
Monday, July 11, 2016 2:20:00 AM
வேகநரி said...
போர்ச்சுக்கல் ரொனால்டோவின் செயல்கள் நாடகதனமானவை என்று என்னுடன் போட்டி பார்த்த ஜரோப்பிய நண்பர்கள் சிலர் சொன்னார்கள்(குற்றம்சாட்டினார்கள்). நானும் அதை ஏற்று கொள்கிறேன்.
அதை பற்றி நீங்க என்ன நினைச்சீங்க என்பதை தெரிஞ்சு கொள்வதில் எனக்கு ஆவல். வசதிபடும் போடு தெரிவியுங்கோ.
அருமையான ஈரோ இறுதிப் போட்டியை பற்றிய விமர்சன பதிவு.
Post a Comment