*
Great
show, #DrRichardBeale
#DrRichardBeale
never ever knew that you are such a great actor in a TV show!
#DrRichardBeale
thanks for coming for the treatment for the CM. Double thanks (?) for coming
again for the re-enactment in a TV show!
#DrRichardBeale
"All the world is a stage" says your Bard. But why should you
re-enact the #treatmenttoCM once again, that too in a TV broadcast?
#DrRichardBeale
better serve the patients and not any other political or corporate coterie.
#DrRichardBeale thanks for treating our CM.But sad for being a
circumstantial slave for our political minions during treatment!
#DrRichardBeale
why do you degrade yourself by getting into the nitty-gritties of our local
politics?
#Apollo
charges just 5.5 crore. What a great hospital! So poor are the charges!
எப்போது சிங்கை
physiotherapists & AIIMS மருத்துவர்கள் இங்கே வந்து தந்தி டிவியில் அடுத்த
show காண்பிப்பார்கள்?
#DrRichardBeale
thanks for treating our CM. hope you got paid. Good. But did you get any
further remuneration for 'rewinding' the treatment thru TV channels?
I HAVE
COME HERE TO BURY ......
“Friends,
Romans, countrymen, lend me your ears”....
I come to
bury MAFIA.
The evil
that men do lives after them;
My heart
is in the coffin there with Caesar,
And I must
pause till it come back to me.
'தொழுத கையுள்ளும் படையொடுங்கும்' ... இப்படியும் சொல்லலாம்!!
TV விவாதங்களில்
எல்லோர் மைக்கையும் ஆண்/ஆஃப் பண்றதை நடுவர் வச்சிக்கிட்டா என்ன?
50 நிமிஷம்
... அசத்தல் ... யார் கொடுத்த ஐடியாவோ!
50 நிமிஷம்
ஐடியா கொடுத்தவர் வாபஸ் வாங்குறதுக்கு முந்தியே வாய்ஸ் கொடுத்திருந்தால் இன்னைக்கி
ஓ பி எஸ் டாப்ல இருப்பார்.
பதவில இருந்து
ஓபிஎஸ் வாய்ஸ் கொடுத்திருந்தா ‘எலும்புக்கு’ நிறைய
பேர் பின்னால் ஓடியாந்திருப்பார்கள்.
பஸ்ஸில
ஏறும் போது அத்தனையில் ஒண்ணுக்குமா
எந்த வித எதிர்ப்புணர்ச்சியும் வரலை. சோற்றாலடித்த
பிண்டங்கள் என்பார்களே ... அதுகளா இதுக?
தமிழண்டா
....
ஏன்
ஒரு நடுநிலையாளர் கூட உண்மைகளைக் கேட்பதில்லை
என்று புரியவில்லை. எல்லோருக்கும் தெரியும் யார் எந்த அளவு
கொள்ளை அடித்தார்கள் என்பது. ஆனால் விவாதங்களில் ஒருவர் கூட அதைத் தோலுரிக்க
ஏன் தயங்க வேண்டும்? ஜெயலலிதாவும், சசிகலாவும், பன்னீர் செல்வமும் எவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்பதை உடைத்துப் பேச யாருக்கும் ஏன்
தைரியம் வரவில்லை. எல்லோரும் எல்லோருக்கும் பயப்படுகிறார்கள்.
அட போங்கப்பா … நீங்களும் உங்கள் ஊடகங்களும்!
போட்டு
உடைச்சா கொஞ்சமாவது அவர்களுக்கு ஒரு சின்ன பயம்
வரலாம். இப்படியெல்லாம் கேட்டால் தானே நாளைக்கு ஊடகங்கள்
மீது பயமும், மரியாதையும் வரும். இப்படி “தடவி தடவி”க் கேட்டால் எந்த
அரசியல்வியாதிக்கு ஊடகங்கள் மீது மரியாதை வரும்.
நீங்கள் தடவிக் கொடுத்துக் கொண்டே இருங்கள்….
அவர்களும் அச்சமில்லை … அச்சமில்லைன்னு ஜாலியா மேலும் மேலும் “உயரட்டும்” ஊழலில்!
சாத்து
சாத்துன்னு சாத்தியாச்சி மூணு தடவை.
எழுந்திருச்சி
மறுபடி வந்திருவ ….?
அந்தக் கட்சிக்காரங்களுக்கு
கொஞ்சம் அது குறைவோ என்னவோ… அரசியல்வியாதிகள், தொண்டர்கள் எல்லோரும்
இன்னும் செய்யும் ஒரே ஜெபம் … அம்மா .. அம்மா தான். மம்மிட்ட இருந்து விடுபட மாட்டாங்க.
mini-mum ஏன்
சீக்கிரம் மு.அமைச்சராகணும்னு நினச்சிது தெரியுமா? தீர்ப்பு இப்படி வந்தா பதவியை ஊட்டுக்காரர்
கையில் கொடுத்து வச்சிருக்காலாம்ல. அதுக்குத் தான் பாடுபட்டுச்சு. அதுக்கு இந்த ஆளுநர்
தடை போட்டுட்டாரே……….
சாத்து
சாத்துன்னு சாத்தியாச்சி மூணு தடவை.
உயிரோடு
இருக்கும் போது சாத்துனது பத்தாதா?
இப்படி ஒரு
தீர்ப்பு வந்த பிறகும் கூட ”அம்மா பாசம்” குறையலையே. அது சரி .. எல்லாம் ரத்தத்தின்
ரத்தங்கள் தானே!
ரொம்ப ஆசைப்பட்டேன்.
மம்மி ரிசல்ட் வந்த பிறகு போகணும்னு ஆசைப்பட்டேன். பாருங்க இப்போ. இன்னும் மம்மி தான்!
ஒருவேளைஉயிரோடு இருந்திருந்தாலும் இதை பஜனையைத் தான் செய்து கொண்டிருப்பார்களோ? அப்டின்னா
.. எப்பதான் புத்தி வரும்?
பார்லிமென்ட்ல
ஒரு பெரிய சிலை மம்மிக்கு செய்யணும்.
காமராஜர் சிலையில் அவர் கால் உயரத்திற்கு
படிக்கும் சிறு குழந்தைகள் சுற்றி
நிற்குமே அது மாதிரி மம்மிக்கு
உயரமான சிலை. வெண்கலத்தில. அவரு காலடியைச் சுத்தி
தலை தரையைத் தொட, குண்டியைத் தூக்கிக்கிட்டு
நிறைய பேர் கால்ல விழுந்து
கிடக்கிறது மாதிரி டிசைன். பெரிய பீடம். பார்லிமென்ட் வாசல்ல வைக்கணும். அந்தப் பீடத்தில ”4+6 வருஷம் + 100 கோடி” அப்டின்னு போட்டு உயிரோடு இருந்திருந்தா எந்த ஜெயில்ல போட்டிருப்பாங்களோ
அந்த ஜெயில் பெயரையும் போட்டால் …. வர்ர அரசியல்வியாதிகளில் யாருக்காவது ஒருவருக்காவது
கொஞ்சமாவது நல்ல புத்தி வரலாமில்லையா?
எதிர்காலத்திற்கு ஒரு படிப்பினை தான்.
இதுக்குப்
பிறகு நோபெல் பரிசு, பாரத ரத்னா, ரூபாய்
நோட்ல அவர் படம் எல்லாத்தையும்
அடுத்த வரிசையில வச்சுக்குவோமே.
எல்லாம்
ஒரு negative
inspiration தான்.
என்ன
… செல …செஞ்சிருவோமா?
ஜென்மம்
சாபல்யமடைஞ்சிருச்சு.....
ரொம்ப
பெரிய ஆசை தான். ஏதாவது
ஒரு அரசியல்வியாதியாவது தண்டிக்கப்படணும்னு ரொம்ப வருஷமா பெரிய ஆசை. அம்புட்டுதான் ... இனிமே எங்க
நடக்கப் போகுதுன்னு நினச்சப்போ ... வந்துச்சே ஒரு சுனாமி
/ வர்தா.
அடிச்சி சாச்சிருச்சே... மகிழ்ச்சி
மகிழ்ச்சிக்குக்
காரண கர்த்தாக்கள் மூவருக்கும் எம் வணக்கங்களும், வாழ்த்துகளும்.உரித்தாகட்டும்.
அந்த
நாலாவதுக்கு …. அதுக்கு என்ன சொல்ல?
என்ன
செஞ்சாலும் நமக்கு வேண்டிய அரசியல் ஆளுக செஞ்சா தப்பில்லைன்னு
நம்ம மக்கள் நினைக்கிறாங்களேன்னு நினச்சா ரொம்ப பயமா இருக்கு. ஓட்டுப்
போடுற பய பிள்ளைக எல்லாம்
ஏதாவது ஒரு தல அல்லது
சின்னம் அப்டின்னு ஆயுசுக்கும் நிலச்சி நின்னுர்ராங்க. அவங்க ஆளுக என்ன செஞ்சாலும்
நாங்க அவங்க பின்னால மட்டும் தான் போவோம்னு அப்படி
ஒரு திண்ணமான எண்ணம். அப்புறம் எங்க இருந்து “மாற்றம்” வரும்.
ஒரு
ஊழல் பேர்வழின்னு நீதி மன்றமே சொல்லிருச்சு
அப்டின்னா மக்கள் அந்த ஆளை வெறுத்து
ஒதுக்கினால் தான் அடுத்த அரசியல்வாதிக்கு
ஒரு பயம் இருக்கும். கொஞ்சமா
ஜாக்கிரதையா கொள்ளையடிக்கலாம்னு நினைக்கலாம்.
இப்போதும்
மம்மி, சித்தின்னு பின்னால ஓடினா என்ன அர்த்தம். ம்ம்… அர்த்தமே
இல்லை. வெறும் வாய்க்குதவாத charisma இருந்தால் மட்டும் போதும்னு நினப்புதான் வரும். அதுக்கு வேண்டியது மாதிரி ஓசியா நாலு சாமான்களை நம்ம
வரிப்பணத்திலேயே வாங்கிக் கொடுத்து அது மூலமா charisma வருதான்னு
பார்க்கலாம். இல்ல ஏதாவது ரெண்டு
சினிமாவில நடிச்சி சான்ஸ் வருதான்னு பார்க்கலாம்.
நிச்சயமா
நல்ல ஆட்சி நடத்தணும்னு மட்டும் நினைக்கவே வேண்டியதில்லை போலும்.
அம்மா
மேல் அத்தனை உயிர். மண்சோறு, மொட்டை, அலகு அது இதுன்னு
காமிச்சாச்சி. ஆனால் செத்ததும் எல்லாமே மண்ணோடு மண்ணாச்சோ. ஏன்னா, மம்மியைக் கண்ணில காமிக்காமலே சித்து வேலை செஞ்சி கதையை
முடிச்சாச்சின்னு மக்கள் கோபமா சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
ஆனால்
இப்போ எப்படி சித்தி என்ன செஞ்சாலும் சரின்னு
தலைய ஆட்டிக்கிட்டு போய்க்கிட்டே இருக்காங்க?
காசேதான் கடவுளடா
…
டிவி
விவாதங்களில் வருபவர்கள் கேட்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்வார்களோ என்னவோ! ஜெயலலிதா ஊழல் செய்தார். அதில்
வந்த பணத்தை வைத்து ஊழியாட்டம் மற்ற மூவரும் ஆடினார்கள்
என்பது தீர்ப்பு. இதனால் சித்தி முதலமைச்சராக ஆக முடியாது என்பது
உறுதியாகிவிட்டது. வேட்டுகள், லட்டுகள் என்று அமர்க்களப்படுத்தினார்கள்.
பன்னீர்
குழுவில் இருந்த ஒருவரிடம் ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று
சொல்ல்ப்பட்ட பிறகும் எப்படி வேட்டு போட்டீர்கள் என்று கேட்டார் நெறியாளர். வந்தவர் சொன்னார்: நாங்கள் வேட்டு போடவேயில்லை. வேட்டு போட்டதெல்லாம் கருணாநிதி ஆட்கள் என்றார். பன்னீர் வீட்டு முன் வேட்டு போட்டது
திமுக என்றா சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
அந்த
மனுஷன் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம்
ஏதுமில்லாமல் ஆமாம் .. திமுக தான் என்றார். நெறியாளர்
அப்படியே விட்டு விட்டார்,
அது
என்னங்க … நாமெல்லோரும் அத்தனை முட்டாள்கள் என்று அரசியல் ஆட்கள் நினைத்து விட்டார்களா?
சசிகலா
காரின் ஓட்டுனர் காரில் ஏறி உட்கார்ந்ததும் சீட்
பட்டையை ஒழுங்காக மாட்டிக் கொண்டார்.
அதன்
பின் ஒரு பெரிய போலீஸ்
ஐயாவின் கார் சென்றதைப் பார்த்தேன்.
அந்த ஓட்டுனர் சீட் பட்டையை மாட்டவில்லை.
Law makers are the first law breakers!
சசிகலாவின்
கார் போய்க்கொண்டிருந்தது. உள்ளே அவர் “அந்தக் காலத்தில்” உட்கார்ந்திருப்பாரே அதே இடத்தில் ஒரு
சின்ன பெண் உட்கார்ந்திருந்தது.
அந்தப்
பெண்ணுக்கும் பல கனவுகள் தன்னிச்சையாகவே
வந்திருக்கும். இல்ல …?
பாவம்
ஸ்டாலின்.
தீர்ப்பு
வந்ததும் அவர் ஏதாவது ஒன்றைச்
சொல்லியேயாக வேண்டிய கட்டாயம்.
நாலு
பக்கமும் கல்லை வீசிக்கொண்டிருந்தார் – கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து!
தீரன்
என்று ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு பேராசிரியர்
என்றார்கள்.
பேராசிரியர்கள்
மீது இருந்த கொஞ்ச மரியாதையையும் காணாமல் போய் விட்டது.
எனக்குத்
தெரிந்த பேராசிரியர்களின் முதுகெலும்பு நன்கு வளையக்கூடியதே. அதுவும் இவர் “சாஷ்டாங்க கட்சி”க்குள் நுழைந்து விட்டாரல்லவா …. கேட்கவா வேண்டும்!
பஞ்சப்
பராரிகளா நம் சட்டசபை உறுப்பினர்கள்.
ஆனாலும் பஸ்ஸில் ஏறிப்போ என்றதும் மந்தைகள் போல் ஏறிய மகத்துவம்
எப்படி நடக்கிறது.
இதுதான்
ராணுவ ஒழுங்கோ? இருக்கும் .. இருக்கும்.
அட எங்கப்பா
நம்ம V.C. பெருந்தகைகள் எல்லோரும்? சித்திய பார்க்க வரலை; அடுத்து வந்த ரெண்டு மு.அமைச்சர்களைப்
பார்க்கவே வரவில்லை. ச்சே! கல்வியின் தரமே ரொம்ப தாழ்ந்து போச்சு’பா!
88 பேர் நின்னாங்க.
அட .. ஒருத்தருக்குக் கூட நரைத்த மீசை, தலை முடின்னு இல்லை. எல்லோருமே அப்படி
ஒரு இள மையோடு
நின்னாங்க.
யாருப்பா அங்க?
சித்தி சித்தப்புட்ட சொல்லி நம்ம தீரனுக்கு ஒரு V.C. post வாங்கிக் கொடுங்கப்பா …
ரகசிய
ஓட்டெடுப்பு கூட வேண்டாம். புதன்
கிழமை அடுத்த ஓட்டெடுப்பு வச்சுக்கலாம். ஆனா அதுக்கு முந்தி
சித்தி க்ரூப்பை சுதந்திரமா உட்டுடுங்கப்பா …
*
3 comments:
காசேதான் கடவுளடா …super whip
kalakarthik
முத்தாய்ப்பு ..?
கண்ணுக்கு முன்னே நடப்பதெல்லாம் அக்கிரமம் என்று நன்றாக தெரிந்தும் காசு வாங்கி வாக்கு வங்கியை வளப்படுத்திய ஜனங்களின் கையறு நிலை அந்தோ பரிதாபம்! போட்ட வாக்குகளை திரும்பப் பெரும் உரிமை கொடுக்கப்பட்டால் ஒழிய இந்த மாதிரி காட்டு தர்பார் ஆட்சி நடந்து கொண்டுதான் இருக்கும். இந்தக் கௌரவரிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கவர்னர் என்ற கண்ணபிரான் மனது வைப்பாரா....?
Post a Comment