*
முன்கதை ...
27 ஆண்டுகளுக்கு முன்பே 7.8.92 அன்றே அரசினால் கையெழுத்திடப்பட்ட லே அவுட் உள்ள பகுதியில், approved plots என்பதால் அதிக விலைக்கு வீட்டடி மனைகள் வாங்கினோம். மனைகளை விலை பேசி முடித்த பின், அரசின் ஆணைப்படி பூங்காக்கள் என்று அடையாளம் காட்டப்பட்ட இடங்களை விலை பேசி விற்க முனைந்தனர். குடியிருப்போர் கடந்த 20 ஆண்டுகளாக இதனை எதிர்த்துப் போராடி வந்தோம்.
அந்தக் கதையின் தொடர் இது .....
*
இன்று - 3.4.17 - நடந்தது .....
மாநகராட்சியைச் சுற்றிச் சுற்றி வந்தோம்.
அதிகாரிகளை ஒருவர் பின் ஒருவராகச் சந்தித்தோம்.
ஆண்டுகள் பல கடந்தன.
விடியும் என்று காத்திருந்தோம்.
செடிகள் நட்டோம் ... மரங்களாக வளர்ந்தன.
திட்டங்கள் போட்டோம் .. ஆனால் ஒன்றும் நகரவில்லை.
நீதி மன்றங்கள் ஏறினோம்.
சட்டங்கள் எங்கள் பக்கம் நின்றது.
சட்டங்கள் அளித்த நீதி எங்களோடு நின்றது.
ஆயினும் நீதிக்குள் நடப்புகள் அடங்கவில்லை.
தடைகள் ... தடுப்புகள் ... சோகங்கள் தான் மிஞ்சின.
எங்கள் ராசி.
எங்கள் நியாயத்தைக் கேட்க மூவர்
துணைப் பொறியாளர்.. மூத்த பொறியாளர் ... ஆணையர்
எங்கள் குரல் அவர்கள் காதில் விழுந்தன.
மூவருக்கும் எங்கள் நியாயம் புரிந்தது.
வாழி நீவீர்.
காவல் துறை காவலுடன் சட்டம் நிறைவேறுகிறது. |
இதில் எங்களுக்கு ஒரு பெரும் ஆச்சரியம்.
இந்த மூவரின் தார்மீக ஆவேசம்
எங்களையே கதி கலங்க வைத்தது.
மகிழ்ச்சியில் மக்கள் |
சட்டம் கை கொடுக்க,
அதிகாரம் இடம் கொடுக்க,
காவல் படையின் உதவியோடு
இன்று
எங்கள் பூங்கா எங்கள் கண்முன் மலர்கிறது.
வேலையில் தீவிரம் |
துணைப் பொறியாளர் திரு. மணியன் |
முழு உதவியைத் தந்த துணைப் பொறியாளர் |
இனியும் தடங்கல் ஏதும் வாராது என்ற துணிவில் நிற்கிறோம்.
எங்கள் எல்லோர் கனவுகளிலும் வளர்ந்த பூங்கா
இனி
நிஜமாகவே எங்கள் கண்முன் உருப்பெருகிறது.
பூங்காவை மீட்ட இரு சிங்கங்கள் |
பி.கு.
இறுதியாக எங்களுக்காக வாதாடிய எங்கள் அன்புக்கும் நன்றிக்கும் உரியவரான வக்கீலய்யா அவர்களுக்கு எங்கள் நன்றி. (அவர் உத்தரவு கிடைத்தால் அவர் பெயரையும் பகிர்கிறேன்.)
எங்கள் பூங்காவைப் பார்க்க மூத்த பொறியாளரும், ஆணையரும் வருவார்கள் என்ற செய்தி வந்தது. அவர்கள் இருவரையும் ’பொட்டிக்குள்’ அடைத்துவிட ஆவலுடன் இருந்தேன். வரவில்லை இன்று. வரும்போது அடைத்து விடுவேன்!!!
6 comments:
தங்களது ஏக்கத்தையும், மன மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய பதிவு. கனவு நனவானது கண்டு மகிழ்ச்சி ஐயா.
வாழ்த்துகள்.
ஆக, நீதி ஒருநாள் வெல்லும் என்று தெரிகிறது. கடமை உணர்வு கொண்ட அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. ஆனானப்பட்ட சின்னம்மா- பெரியம்மாவே சட்டத்துக்கு டிமிக்கி கொடுக்க முடியாமல், பெங்களூர் போக நேர்ந்ததே! எனவே நம்பிக்கை இழக்காதிருப்போம்.
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
இன்று இந்த பூங்கா அமைக்கப்பட இருக்கும் இடத்தை ஒரு பெண்மணி சொந்தம் கொண்டாடி வழக்கு தொடுத்திருப்பதாக பத்திரிக்கையில் செய்தி வாசித்தேன். பூங்கா கட்டுமானம் நிறுத்தப்படுகிறதா?
//பூங்கா கட்டுமானம் நிறுத்தப்படுகிறதா?//
வேலைகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன. எங்கள் தரப்பிலிருந்தும் எதிர் வழக்குகள், ஏற்கென்வே கிடைத்த நல்ல தீர்ப்புகள், கோர்ட்டுகள். கேஸ்கள் என்று மும்முரமாக வேலைகள் நடந்து வருகின்றன………
எங்கள் பகுதியில் உள்ள
மூன்று பூங்காக்களுக்கான அரசின் அங்கீகாரமும்
சட்டத் தீர்ப்புகளும்
1. அரசு வழங்கிய லே அவுட்: DTCP, சென்னையில் சர்வே எண்கள் 183/1A,1B, 3A; 184/ 1,2,3, & 4; 185,186, and 187 / 1 to 8 அடங்கிய லே அவுட். உரிமம் வழங்கிய எண்ணும், நாளும்: 885 / 92, signed on 7.8.92
2. எங்களது ரிட் தாக்கல்: (MD) No. 11221 0f 2012 விண்ணப்பம்: பூங்காக்களாக லே அவுட்டில் குறிக்கப்பட்ட இடங்களை மாநகராட்சி தன் உரிமையாக எடுத்துக்கொண்டு, அவைகளை மேம்படுத்துதல் செய்ய வேண்டும். தீர்ப்பு: திரு ஜஸ்டிஸ் தேவதாஸ் -- 24.6.13 – “மதுரை ஆணையர் மூன்று மாதங்களுக்குள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. பொது நல வழக்கு: W.P.(MD) No. 2748 of 2017 விண்ணப்பம்: செம்பருத்தி நகர் வார்டு 23ல் உள்ள 3 பூங்காப் பகுதிகளை மேம்படுத்த மகாராட்சிக்கு வேண்டுதல். தீர்ப்பு: திரு. ஜஸ்டிஸ் ஏ. செல்வம் -- 17.2.17 – ” மதுரை மாநகராட்சி ஆணையர் விண்ணப்பத்தில் சொல்லப்படும் பூங்காப் பகுதிகளைக் கையகப்படுத்தி, அவைகளை அடுத்த ஆறு மாதங்களில் மேம்படுத்த வேண்டும்”.
4. செம்பருத்தி நகரில் பூங்கா அமைக்க ஒப்பந்தக்காரருக்கு மாநகராட்சி ஆணையர் கொடுத்த வேலைக்குரிய ஆணவம் (working order)
இதற்கு மேல் அவர்களது status quo கேட்டு வாங்கிய தீர்ப்பு ஒன்று உண்டு. காலம் கடந்து விட்ட போது வேலை ஆரம்பிக்கப்பட்டது.
Post a Comment