இந்து மதக் கடவுள்கள் கையில் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பது
பற்றி மற்ற மதக்காரர்கள் கேலி செய்வதோ, கேள்வி கேட்பதோ வழக்கமான ஒரு விஷயம் தான். இந்துக்
கடவுள்கள் கைகளில் வித விதமான ஆயுதங்கள் வைத்துப் பயமுறுத்துகிறார்களே என்றால், ஆபிரஹாமியக்
கடவுள் அவர்களின் வேதப் புத்தகங்களில் மிகவும் பயங்கரமான வார்த்தைகளோடும், கட்டுப்பாடுகளுடனும்
அச்சத்தைக் கரைத்து நெஞ்சில் ஊற்றும் பயங்கரத்தைச் செய்கிறது.
”நான் உன் கடவுள் … என்னை வணங்கு” -- என்று சொன்னால்
பரவாயில்லை. ஆனால் ஆபிரஹாமிய கடவுள் (இனி, ஆபி.கடவுள் என்றழைக்கிறேன்.) மனித குலம்
அத்தனையையும் “முழுக் குத்தகை” எடுத்தது போல், வேறு தெய்வங்களை நீ நினைத்தாலே உன்னை
உருக்கொலைத்து விடுவேன் என்கிறது. அதற்காக ஆபி.கடவுள் கொடுக்கும் தண்டனைகள் அந்தக்
கடவுளை ஈவு இரக்கமில்லாத ஒன்றாகத்தான் காட்டுகிறது. முழுவதுமாக மனித குலத்தைத் தன்னிடம்
அடக்கிக் கொண்டு வேறு கடவுளைக் கும்பிட்டால் ஒழித்து விடுவேன் என்கிறது.
இணைச்சட்டம் 8:19 உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப்
பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு
எச்சரிக்கை விடுக்கிறேன்.
இணைச்சட்டம்
5:7-9 என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல்
ஆகாது. … எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;
வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்;
இணைச்சட்டம்
4 : 24 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும்
நெருப்புப் போன்றவர்; அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.
அதையும் தாண்டி தன்னை நம்புபவர்களுக்கு இன்னும் வேறு
பொறுப்புகளையும் ஆபி. கடவுள் நம்பிக்கையாளர்கள் மேல் ஏற்றி விடுகிறது. என்னை நம்பினால் மட்டும் பற்றாது; அதைவிட வேறு தெய்வங்களைக்
கும்பிடுபவர்களை இரக்கமின்றி கொன்று விடு; அந்தக் கடவுளின் சிலைகளை கூட விட்டு வைக்காது
அழித்து ஒழித்து விடு என்று முரட்டுத்தனமான சட்டம் போடுகிறது.
லேவியர் 24: 16 ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை
செய்யப்படுவார்; சபையார் கல்லாலெறிவர். அன்னியரோ, நாட்டினரோ, யார் எனினும் திருப்பெயரை
இகழ்கிறவர் கொல்லப்படுவார்.
விடுதலைப் பயணம் 24 : 23 நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும்,
அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை
உடைத்துப்போடுவாயாக.
எண்ணிக்கை 33:52 அத்தேசத்துக் குடிகளையெல்லாம்
உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட
அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
53 தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு,
அதிலே குடியிருக்கக்கடவீர்கள்;
|
இணைச்சட்டம் 7:5 …அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத் தூண்களை உடைத்து, அவர்களின் அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்துவிடு. |
என்னைப் படைத்தாய்… என்னை வணங்குவது தான் சரி … இப்படி ஒரு கடவுள் சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தக் கடவுளைத் தெரியாதவர்களோ, அறியாதவர்களோ அவர்களைப் படைத்ததாக எண்ணும் வேறு ஒரு சாமியைக் கும்பிட்டு வரலாம். அதை அப்படியே எடுத்துக் கொள்ள இந்த ஆபிரஹாமிய கடவுளுக்குப் பொறுக்கவில்லையே…. அப்படி கும்பிடுபவர்களை அழித்து விடு … அவர்கள் கும்பிடும் கடவுள் சிலைகளை அடித்து நொறுக்கு உடைத்துப் போடு என்றால் … என்ன கடவுளோ இது! சுத்த பயங்கரம் என்பதும், அயோக்கியத்தனமான கட்டளையாகவும் தான் இது தெரிகிறது.
இப்படிப்பட்ட ஓர் ஈவு இரக்கமற்ற கடவுளைக் கும்பிடும் மனிதனிடம் அன்பையோ, ஒற்றுமையையோ,
அயலானோடு அணுக்கமாக அன்பாக இணைந்து செல்வதையோ எப்படி எதிர்பார்க்க முடியும்? இதனால் தான் நான் மத நல்லிணக்கம் என்பது முடியாத ஒன்று என்று சொல்லிக் கொண்டு வருகிறேன்.
ஆரம்பகாலத்தில் கிறித்துவர்கள் இருந்தது போல் இப்போது
இல்லை என்பது மகிழ்ச்சியே. ஆனாலும் ஆரம்ப காலத்தில் அவர்கள் நடத்திய சிலுவை யுத்தம்,
Spanish inquisition போன்ற பயங்கரங்கள் வரலாற்றுப் பக்கங்களில் ஆழமாகவே எழுதப்பட்டுள்ளன.
வரலாறு அவைகளை அழித்து விடாது. உலகம் உருண்டை என்று சொன்னாலே தண்டனை. அன்றிருந்தது போல் கிறித்துவ மதமே
ஒரே உண்மையான மதம் என்ற மமதை இன்னும் அம்மக்களிடம் இருந்தாலும் அதில் முன்பிருந்த வன்மம்
குறைந்து விட்டது.
எனது இளம் வயதில் நாங்கள் செய்த ஜெபங்களில் கிறித்துவர்களை மெய் ஞானிகள் என்றும், மாற்று மதத்தினரை அஞ்ஞானிகள் என்று அழைத்த வழக்கம் இப்போது என் வாழ்நாளிலேயே மறைந்து மாறி விட்டது. கடும் சட்டங்கள் பல நீர்த்துப் போய் விட்டன. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை ஒரு சான்றாகத் தருகிறேன். என் சிறு வயதில் ‘குடும்பக் கட்டுப்பாடு’ என்ற சொல்லே ஒரு கெட்ட வார்த்தையாக கிறித்துவர்களால் நினைக்கப்பட்டது. இப்போது மதம் அதை அத்தனைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கவில்லை.
கத்தோலிக்கர் மத்தியில் ‘பாவமன்னிப்பு’ என்ற ஒரு சடங்கிற்கு என் சிறுவயதில் இருந்த முக்கியத்துவம் இப்போதில்லை. இந்த மாற்றங்கள் என் வாழ்நாளிலேயே நடந்தவைகள் தான். இப்படி சில ‘தீவிர விஷயங்கள் நீர்த்துப் போவதைப் பார்க்கும் போது எல்லோருக்குமே மகிழ்ச்சி. ஆனாலும் இது போன்ற சில விஷயங்கள் மாறினாலும் “எங்கள் மதமே ஒரே சரியான மதம்” என்ற உன்மத்தமான நினைப்பு கிறித்துவர்களின் மனதில் இன்னும் பொங்கி வழிந்து கொண்டேயிருப்பதில் எனக்கு வருத்தமே! அது மாறவே மாறாது ... ஏனெனில் அதைத்தானே அவர்கள் “புத்தகம்” சொல்கிறது!
எனது இளம் வயதில் நாங்கள் செய்த ஜெபங்களில் கிறித்துவர்களை மெய் ஞானிகள் என்றும், மாற்று மதத்தினரை அஞ்ஞானிகள் என்று அழைத்த வழக்கம் இப்போது என் வாழ்நாளிலேயே மறைந்து மாறி விட்டது. கடும் சட்டங்கள் பல நீர்த்துப் போய் விட்டன. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை ஒரு சான்றாகத் தருகிறேன். என் சிறு வயதில் ‘குடும்பக் கட்டுப்பாடு’ என்ற சொல்லே ஒரு கெட்ட வார்த்தையாக கிறித்துவர்களால் நினைக்கப்பட்டது. இப்போது மதம் அதை அத்தனைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கவில்லை.
கத்தோலிக்கர் மத்தியில் ‘பாவமன்னிப்பு’ என்ற ஒரு சடங்கிற்கு என் சிறுவயதில் இருந்த முக்கியத்துவம் இப்போதில்லை. இந்த மாற்றங்கள் என் வாழ்நாளிலேயே நடந்தவைகள் தான். இப்படி சில ‘தீவிர விஷயங்கள் நீர்த்துப் போவதைப் பார்க்கும் போது எல்லோருக்குமே மகிழ்ச்சி. ஆனாலும் இது போன்ற சில விஷயங்கள் மாறினாலும் “எங்கள் மதமே ஒரே சரியான மதம்” என்ற உன்மத்தமான நினைப்பு கிறித்துவர்களின் மனதில் இன்னும் பொங்கி வழிந்து கொண்டேயிருப்பதில் எனக்கு வருத்தமே! அது மாறவே மாறாது ... ஏனெனில் அதைத்தானே அவர்கள் “புத்தகம்” சொல்கிறது!
ஆனால் கிறித்துவத்தில் நடந்த இந்த மாற்றங்கள் அதன் பங்காளி மதமான இஸ்லாமில் இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லை என்பது ஒரு வேதனையான விஷயம். பழைய ஏற்பாட்டை பற்றி ஒவ்வொரு கிறித்துவரும் ஒவ்வொரு விதக் கருத்து சொல்வார்கள். அதனை முழுவதாக ஏற்றுக் கொள்ள பலர் தயங்குவார்கள். அதில் உள்ள வன்மமும், சில மட்டமான ரசனை உள்ள புராணக் கதைகளும் தான் இப்படிக் கை கழுவுவதற்கான காரணம். ஆனால் அதை தங்கள் வேத நூலாகவே இன்னும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருக்கிறது. I think it is an unavoidable nuisance for the Christians.
பழைய ஏற்பாட்டின் வரலாறோ, அதனை எழுதியவர் யார், எப்போது அது எழுதப்பட்டது என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை. இப்போது கிறித்துவினால் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடு மட்டுமே நமக்கு அருளப்பட்ட முக்கியமான நூல் என்பார்கள்; ஆனால் பழைய ஏற்பாட்டையும் முழுவதுமாகப் புறக்கணிக்க முடியாத சிரமமும் உண்டு. பாவம் கிறித்துவ மக்கள்.
ஆனால் இஸ்லாமியருக்கு பழைய ஏற்பாட்டின் பல நிகழ்வுகள் அவர்களது குரானில் இடம் பெற்றிருக்கின்றன. அவர்களுக்கு புதிய, பழைய ஏற்பாடுகள் என்ற வித்தியாசம் ஏதுமில்லை. எல்லாமே குரானில் உள்ளவை. ஆகவே அனைத்தும் அவர்களுக்கு நம்பியாக வேண்டிய விஷயங்கள். அனைத்தையும் நம்பி, அதன் வழியே நடக்கிறோம் என்று சொல்லும் ISIS குழுவினரை அதனால் தான் மிதவாத இஸ்லாமியர்கள் கூட கண்டிக்க முடிவதில்லை. ISIS தரும் ஒரே பதில் – நாங்கள் குரானில் சொல்லப்பட்டதை “அப்படியே” நடத்திக் காண்பிக்கின்றோம் என்பது மட்டுமே.
பின் ஏன் புத்தரின் உருவங்களை அவர்கள் உடைக்காமல் விடுவார்கள். ஆபி. கடவுளின் கட்டளைகள் அல்லவா அவை??!!
***
ஒத்த கருத்துடையோர் “ஆமென்” போட்டு விடலாமே!
***
***
ஒத்த கருத்துடையோர் “ஆமென்” போட்டு விடலாமே!
***
14 comments:
You've an aversion to lengthy comments, aren't you? Either you can allow my lengthy comments or just read them and sent to your trash can. As you like it.
Comments follow:
I don't fully agree with you.
//இதனால் தான் நான் மத நல்லிணக்கம் என்பது முடியாத ஒன்று என்று சொல்லிக் கொண்டு வருகிறேன்....//
If you go through your succeeding paras after this statement, it's possible for people of different faiths to have harmonious co-existence in society. All religions have orthodox as well as moderate groups. In certain religions like Hinduism, the moderate group may preponderate but silent majority and as things stand, the fanatic groups are obstreperous. In many countries people of different religions, particularly the targets of your attack, the Muslims and Christians, do live together happily.
//கிறித்துவ மதமே ஒரே உண்மையான மதம் என்ற மமதை இன்னும் அம்மக்களிடம் இருந்தாலும் அதில் முன்பிருந்த வன்மம் குறைந்து விட்டது. //
It’s not arrogance but a simple belief. If we don’t like a certain belief, it’s our dislike that is arrogance, not their belief. Without a firm belief in whatever we do and believe in, we cannot really live our religious lives. It will be a sham. Whom do we want to cheat by our personal belief system? Where’s the necessity to cheat at all, in the first place? If I don’t believe that the God I’m worshipping is one of the many Gods who are as true as mine, there’s no meaning and purpose and inspiration to worship my God. My faith in my God will be false or shaky and I can hop from God to God – aren’t they all equally true? So, there’s no harm – indeed it is essential – to hold dearly and sincerely the belief viz. ‘’My-God-alone-is-true- and-all-others-are false’’. Your faith will then be stable and rooted in you lending you the spiritual support you ardently needs. It’s personal to you. The society outside has nothing to do with that.
At the same time, it’s wrong – and anti-social – to go about telling others that theirs is a false belief; and yours is true; they should give up their belief and come to accept our true God – as evangelicals have done, or are still doing. The right way is in The Koran: ’Your religion is yours; Mine is mine’. It doesn’t follow that the Koran accepts all beliefs as valid ones. Rather, it emphasises that others can have their own worship in any God they choose to, thereby implying that that co-existence in a plural society is possible.
ISIS is a different kettle of fish. If you club them with all Muslims, you will be taking wrong conclusions. Of course, there are Muslims who believe in ISIS ideology. But they are among the Muslims as numbers; not form the Muslim society, as a single unit so that you can’t broad-brush.
//மனித குலம் அத்தனையையும் “முழுக் குத்தகை” எடுத்தது போல்,//
We’ve two entities: 1 The Religion 2. The Religious history or its historical background. When Mohammed was living, he saw his middle-east society where many beliefs existed, of whom the Judaism was the major. While he didn’t repudiate Judaism in entirety – as he himself took a lot of strands from the web of that religion – in formulating his own faith, he did repudiate other small beliefs. So also, the Jesus and early Christians whose areas of work was limited to a Jewish world – as you know - when their religion was taking shape for the first time. The Muslims argue – I agree with them – that the verses, which are cited by the critics of Islam, were natural products of those times their prophet saw. As the subject of your long profession as a teacher of English literature, Shakespeare says ‘’Disparate situations need disparate remedies’. For Mohammed and for the early Christians, or the Bible writers, their disparate times needed disparate remedies.
Vinayagam
https://throughalookingglassalaymanreflects.wordpress.com
ஆக மொத்தம் உன் உல்டாப் இந்து மதம் ஒசத்தின்னு சொல்ல வர்றீங்க! அப்படித்தானே?
எல்லாத்தைய்யும் கூட்டி கழிச்சி பாத்தாக்கா, தமிழன் ஒத்துமையா வாழறது உனக்கு பிடிக்கல இல்ல?
ஓத்தா, எதையாவது சொல்லி ஒளறி கொட்டி ஒர்த்தனுக்கு ஒர்த்தவன் அடிச்சி ஒதச்சினு சண்டைய போட்டுனு சாவுங்கடான்னு சொல்ல வர்றீயா?
நீயெல்லாம் ஒரு காலத்துல கல்லூரி ஆசானா வேற இருந்திருக்கீயா? இந்த மாதிரியான விஷமத்தனமான கேடுகெட்ட புத்தியோட எப்படி உன்னால எல்லா மாணவர்களுக்கும் பாரபட்சம் இல்லாம பாடம் கத்து கொடுத்திருக்க முடிஞ்சுதுன்னு எனக்கு சந்தேகமாவே இருக்குது.
த பாரு தருமி, இந்த மாதிரி கழிசட கசமாலத்தெல்லாம் இங்கிலீஷ் இல்ல இந்தியில வேணும்னா எழுதி ரத்தம் வர சொரிஞ்சுக்கோ. தமிழுல எழுதி எங்க சமுதாய ஒற்றுமைய கெடுக்காத. புரிங்சுதா புண்ணாக்கு!
உன்ன மாதிரியான சாதி மத வெறி விஷ காளான்கள ஒழிச்சி கட்டுனாதான் தமிழ் சமுதாயம் உறுப்படும்.
மக்களைப் பயமுறுத்தி சில கருத்துகள்செயல் பட வைக்கின்றார்கள்
வினாயகம்,
// You've an aversion to lengthy comments, aren't you?// no, I am not.
// In many countries people of different religions, particularly the targets of your attack, the Muslims and Christians, do live together happily.// what a great utopia! Wanna see them!
// It’s not arrogance but a simple belief// sorry vinayagam. It is purely arrogance. They may not know all about christianity and nothing about the other religions. Still always hold so firmly that their religion is the most correct one. This could be found among most of the muslims also. Experienced this with my Christian friends and relatives and it stands as the proof for this conclusion.
//It’s personal to you. The society outside has nothing to do with that.// if it is so…oh god, how nice will it be?
// At the same time, it’s wrong – and anti-social – to go about telling others that theirs is a false belief; and yours is true; they should give up their belief and come to accept our true God – as evangelicals have done, or are still doing.// better you open your eyes. See the reality.
// The right way is in The Koran: ’Your religion is yours; Mine is mine’// check with any muslim to find its veracity.
//ISIS..//well it is your theory. I have to repeat: open your eyes!
//…. were natural products of those times their prophet saw// so you say all those in quran were told for ‘that’ period, and not applicable today?
// As the subject of your long profession as a teacher of English literature, Shakespeare says …// ha… who is Shakespeare? //teacher of English literature // .. who? Me (I)? oh …no.
// needed disparate remedies.// so you call them ‘remedies’? if so,… insha allah! Don’t have to say anything more then!
ஆமென்.
நிறைய தகவல்கள் கொண்ட பதிவு.
வெள்ளை இனத்து கிறிஸ்தவர்களிடம் நிறைய நல்ல மாற்றங்களை காணலாம். ஆனால் தமிழர்களோ கர்த்தரே என்று உருகுவார்கள்.
//நான் மத நல்லிணக்கம் என்பது முடியாத ஒன்று என்று சொல்லிக் கொண்டு வருகிறேன்.//
முற்றிலும் உண்மையானதை தான் சொல்லிவருகிறீர்கள்.
மத நல்லிணக்கம் உலக மகா காமெடி. எப்படி தான் சிரிக்கா சொல்லுகிறார்களோ தெரியவில்லை!
I’m glad to find you’ve no aversion to lengthy responses. That is somewhat surprising as, on reading your earlier response to my lengthy comments, I took it differently. We’ll henceforth be discussing God question. I want to have discussion with atheists like you. I have come across this advice that it’s useless to discuss with atheists about God and religions. I take a bet.
// At the same time, it’s wrong – and anti-social – to go about telling others that theirs is a false belief; and yours is true; they should give up their belief and come to accept our true God – as evangelicals have done, or are still doing.// better you open your eyes. See the reality.
I don’t understand what you mean. I said it is ok for one to hold that one’s own God is true. If one doesn’t hold that belief and accepts all Gods of all religions are true, there’s no meaning or purpose in one’s belief in one’s own God as true. He’s an atheist in disguise. As long as he holds the belief and practises it as a personal belief, no problem arises. It will arise if and when he comes to tell others right to their faces that their Gods are false and only his God is true and therefore, they should give up worshipping their Gods and ought to accept his God as true, it is arrogant and anti-social. It disturbs communal harmony. What’s your reply to that? “Open your eyes”’
Dear Sam, I am as alive as you are, rather, I’m open minded unlike you. That is, I am aware of the social fact that people violate such personal belief by imposing it on others, as evangelicals are doing (others, too.) Please open your eyes to what I say. I adumbrated a theory and if practice is otherwise, and it is all your concern, I agree with you. But shouldn’t you know the theory also? Also, please take note that in practice too, there are millions of people who do not impose their personal belief on others. To see them, one should open one’s eyes.
...
// The right way is in The Koran: ’Your religion is yours; Mine is mine’// check with any Muslim to find its veracity.
Average reply that one finds everywhere. You’re, however, correct to say that as it is a part of the reality. At the same time, there’re millions of Muslims who can co-habit with persons like you, the died-in-the-world (or fanatical) atheists, the believing and practising Hindus, Muslims and Christians. I’m referring to them. If you hold that 100% Muslim population in the world are all followers of ISIS ideology, or are just intent on killing others as kaafirs, I’ve nothing to say except that you would have been killed by the Madurai Muslims long ago for being an atheist and negatively criticising Muslims in general and saying every Muslim is intolerant. Madurai has lakhs of Muslim population. No one is being killed in your city just because of their different religion.
//ISIS..//well it is your theory. I have to repeat: open your eyes!
Not I, but you have to. I disagree with your view that all Muslims are killers of kafirs. You want me to open my eyes. Yes I have done. I don’t find any Muslim in TN caught by Police for killing kafirs, except in Coimbatore where one atheist was killed but he was a Muslim by birth and killed by his own acquaintances.
//…. were natural products of those times their prophet saw// so you say all those in quran were told for ‘that’ period, and not applicable today?
There you go again, Sam. In my original message, I just explained to you that such incendiary verses were addressed to the people of that time, just like many verses in the two Hindu epics (like one woman marrying five brothers) or similar violence-provoking verses in the Old Testament. If some sections of the followers take them to apply for our present times, it is their way of understanding. The authorities will take care of them. It is happening to all religions and those people are differently called Ultras, Ultra-orthodox, Fundamentalists etc. Christianity has blood-shot history of intolerance. Even in the Hindu religion it’s happening now. Many militant Hindu outfits operate today and they routinely indulge in violence and issues threats (one godmen of Kasi called for the head of Karunanidhi, and a few days back, another one issued a threat to life to Kamalhasan). Please understand me correctly.
// As the subject of your long profession as a teacher of English literature, Shakespeare says …// ha… who is Shakespeare? //teacher of English literature // .. who? Me (I)? oh …no.
You didn’t teach English literature in American College? If yes, I should revise my estimate of you quickly. Were you college teach or not? The subject may be different.
// needed disparate remedies.// so you call them ‘remedies’? if so,… insha allah! Don’t have to say anything more then!
Yes, it’s a remedy that the spiritual leaders found it necessary to apply in spiritual sphere of their TIMES. There’s many sayings in the Bible attributed to Jesus which will prove it. You’d have known them as a Christian by birth. Or, are you going to say you’re not a Christian, or a Christian who have never read the Bible?
Pa Vinayagam
https://throughalookingglassalaymanreflects.wordpress.com
அருமை ஐயா,,
இந்த இணைசட்டங்கள் எதில் உள்ளன புதிய ஏற்பாட்டிலா?
பழைய ஏற்பாட்டில் உள்ள இணைச்சட்டங்களின் பழைய பெயர்: உபாகமம்
தமிழ்மண ஓட்டு போடுவதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. உங்களுடைய அருமையான பதிவுகளுக்கு ஓட்டை போடலாமே என்று நினைத்தேன். இப்போதே பதிவு செய்து எனது முதல் ஓட்டை உங்களுக்கு மகிச்சியுடன் அளிக்கிறேன்.
வேகநரி
அளித்த பெருமைக்கு மிக மிக நன்றி
விநாயகம்
need some time. sorry about it.
// I disagree with your view that all Muslims are killers of kafirs.// good guy you are, vinayagam. Tell me where I said so.
//so you say all those in quran were told for ‘that’ period, and not applicable today?// yes, sir.
//The authorities will take care of them. // who are they?
// Please understand me correctly.// yes sir. You say in all religions there were merciless killings and all that. Right?
I am not suggesting but my book may give you some definite answers for some of your doubts.
Post a Comment