தாங்கள் எழுதிய 'என் கதை' போன வாரம் வரப்பெற்று. இன்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். 'அப்பாவின் கல்யாண வைபோகமே ' படித்தேன். சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
போடி நாயக்கனூரில் பிறந்த என் தாய் எனக்கு தாயான பிறகு என் 2 வயதில் எனக்கு தங்கை பிறந்து சிறிது நாட்களிலேயே இருவரும் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். என் அய்யம்மா ( அப்பம்மா) அதன் பிறகு எனது 30 வயது வரை எனக்கு தாய்க்கு தாயாக என்னை சீராட்டி வளர்த்து விட்டு மறைந்தார்கள்.
எனது சித்தியுடன் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு சுகமில்லை. எனது சித்தப்பாமார்கள், அத்தைமார்கள், என் அப்பப்பா மட்டுமே எனது உலகம். இன்று என் அப்பம்மாவின் இடத்தை விக்ரமசிங்கபுரத்திலிருந்து வந்த என் மனைவி பிடித்துக் கொண்டாள். ஆனாலும் என் தாய், தங்கையின் நினைவுகள் இன்றளவும், என்றளவும் இருக்கும். அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
1 comment:
நமது தலைமுறைகளில் 'இந்தப்' பிரச்சனை அதிகமாகவே இருந்தது. ஆயிசு கெட்டியானதால் இது இப்போதுள்ள தலைமுறைக்கு அதிகமாகத் தெ ரியாது.
Post a Comment