நானும் பாத்துட்டேங்க. புகைப்படத் தனிப்பதிப்புகளுக்கு மெனக்கெட்டுபோய் படம் பாக்கிறவங்ககூட நான் போடுற படங்களைக் கண்டு கொள்வதேயில்லை; அதேபோல்தான் என் ஆங்கிலப் பதிவுகள். ஆனால், நானும் விடுவதாக இல்லை. நீங்களாச்சு, நானாச்சு ஒரு கை பாத்திடுறதுன்னு களத்தில குதிச்சிட்டேன். முதலில், போனாப்போவுதுன்னு ஆறே ஆறு படம் கறுப்பு வெள்ளையில் வருது. இன்னும் வரும்; ஜாக்கிரதை!
இந்தி எதிர்ப்பு..பாகம் 3 - விரைவில்!
5 comments:
!
தருமி அய்யா,
உங்களுக்கு புகைபடங்கள் போடற பதிவுகள் மேல என்ன கோவம் ? ஏதோ எழுத தெரியாததால இருக்கிறத வச்சு காலம் தள்ளி கொண்டு இருக்கிறோம்..
புதிய பமக கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
ஞானபீடமே ஒரு கேள்விக்குறி...அவரது பின்னூட்டமும்ல அப்டியேயிருக்கு!!
ஆனந்த்,
"சிலர் படம் காட்டும் பதிவுகளை ஏளனம் கூறி வருகின்றனர்"
நா இல்ல..நா இல்ல..
இப்படி ஏது குற்றம் சாட்டக்கூடாதுன்னுதான் நானும் 'படம்'காட்ட ஆரம்பிச்சிட்டேன்.
மஞ்சுளா,
அந்த ஆளு, ஆனந்து சொல்றதை நம்பாதீங்க; மனுஷன் பரத்திட்டார்,போங்க. அவர் புதிய பமக - பதிவு பாருங்க. ஆனா, ஜாக்கிரதை, பெருங்கூட்டம் அங்க!
//அந்த ஆளு, ஆனந்து சொல்றதை நம்பாதீங்க; மனுஷன் பரத்திட்டார்
"பரத்திட்டார் " ன்னா என்ன அர்த்தம்?
நல்லதா ? கெட்டதா ? ?
நாயகன் பட கமல் மாதிரி என்னை இப்படி கேள்வி கேட்க வெச்சுட்டீங்களே !!
மஞ்சுளா கிட்ட நம்பாதீங்க ன்னு சொன்னதில் இருந்து கெட்டதோன்னு தோனுது !
உங்க படங்களை நானும் பார்த்ததே இல்லை. பார்த்திருந்தால் எப்பவோ ஓட்டு/பின்னூட்டம் போட்டு இருப்பேன்
"பரத்திட்டார் " ன்னா என்ன அர்த்தம்?
நல்லதா ? கெட்டதா ? ?"
அய்யோ, ரொம்ப நல்லாபண்ணிட்டார்; கொன்னுட்டார்னு அர்த்தம்'ங்க!
"உங்க படங்களை நானும் பார்த்ததே இல்லை."
பாக்க மாட்டீங்களே..அதைத்தான சொல்றன்..
அடடா, உங்க ப்ளாக்கு போனேன்; ப்ரோஃபைல் பார்க்கவிட்டுப்போச்சு. பாக்கணும்
Post a Comment