56. எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது...?
பாலாஜி சம்பத் (வயது 32; IIT, chennai), ஸ்மித்தா கல்யாணி (26, BITS, Pilanai) , பானுச்சந்தர் (25; Gunidy Engg. college), வானெஸ்ஸா பீட்டர் (23; International Studies) - ஒரே மாதிரி, கிடைத்த நல்ல நல்ல வேலைகளையெல்லாம் துறந்துவிட்டு, பிறந்த மண்ணின் ஏழை எளியவர்க்கு உதவுவதே வாழ்க்கையின் லட்சியமாய் ஏற்றுக்கொண்ட இந்த நல்லவர்களைப் பற்றி நேற்றைய (23.8.05) THE NEW INDIAN EXPRESS-ன் முதல் பக்கத்தில் வாசித்தபோது (லின்க் - கொடுக்க முயன்றேன்; முடியவில்லை) எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது...? என்றுதான் தோன்றியது. பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அலையும் நம் மத்தியில், புகழுக்காகக் கூட அல்லாமல் ஒரு உன்னதமான பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் இந்த நல்லவர்களைப் பற்றிப் படிக்கும்போது - மனதை ஏதோ செய்கிறது. வெறும் கட்டாந்தரையில் இவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தாலும், மனிதநேயத்தால் அவர்கள் என்னாலெல்லாம் நினைத்தும் பார்க்க இயலா உயரத்தில் இருக்கிறார்கள். தலை வணங்குகிறேன். எல்லா நலமும் பெற்று அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனமாற வாழ்த்துவதைத் தவிர நான் வேறென்ன செய்ய ?
* * * *
அதே நாளில் அதே நாளிதழில் வந்த இன்னுமொரு சேதி (தொடர்பில்லாததுதான்):http://newindpress.com/NewsItems.asp?ID=IET20050822120915&Title=Southern+News+%2D+Tamil+Nadu&rLink=0")
Bloomer in Plus-2 textbook - என்ற தலைப்பில் நம் பிள்ளைகளுக்கான இந்த ஆண்டு 12-ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகள் பற்றிய ஒரு சேதி.
அந்தச் செய்தி இருக்கட்டும்; அதில் இருந்த ஒரே ஒரு சொற்றொடர் மிக முக்கியமாகப் பட்டது. அதை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.
This should be done through a meaningful syllabus and not one to flaunt the proficiency of the authors.. என்ன சொல்லுங்கள் நீங்கள். பள்ளிப் பாட நூல்களை எழுதும் ஆசிரியப்பெருமக்களுக்கு இது ஒருநாளும் மண்டையில் ஏறப்போவதில்லை.
3 comments:
// பாலாஜி சம்பத் (வயது 32; IIT, chennai), ஸ்மித்தா கல்யாணி (26, BITS, Pilanai) , பானுச்சந்தர் (25; Gunidy Engg. college), வானெஸ்ஸா பீட்டர் (23; International Studies) //
அவங்க எல்லாம் "பெரிய" படிப்பு படிச்சவங்க அவங்க மாதிரி நாம ஆகிறது கொஞ்சம் கஷ்டம்தான்
sorry ganesh. உங்கள் பின்னூட்டம் அந்த நல்ல உள்ளங்களைக் கேலி செய்வதுபோல் உள்ளது.
நான் எப்படி என்று எனக்குத் தெரியும். என்னைப்போல் இல்லாமல் இவர்கள் போன்ற மிக நல்லவர்களைப் பார்க்கும்போது எனக்கு ஏற்படும் பிரமிப்பைக் காண்பிக்கவே இதை எழுதினேன். ஆனால், நீங்கள் எப்படி இப்படி ஒரு பின்னூட்டம் இட்டீர்களோ, தெரியவில்லை; வருந்துகிறேன்.
Post a Comment