"நான் கலைத்தாய்க்குச் சேவை செய்யவே நடிக்க வந்தேன்"
நம்புனால் நம்புங்கள்; இல்லாவிட்டால் போங்கள். "அந்தக் காலத்தில்" புது நடிக, நடிகையர்களைப் பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்களின் முதல் கேள்வியும், அதற்கு அவர்கள் பெரும் பதிலும் இவை. பத்திரிககையாளர்கள் கேட்டு நடிக, நடிகையர் அது மாதிரி பதில் சொன்னார்களோ; இல்லை, பத்திரிகையாளர்கள் தாங்களாவே அப்படி எழுதிக்கொள்வார்களோ தெரியாது. ஆனால், இதுதான் ஒரு பேட்டியின் வழக்கமான ஆரம்பம். இதை ரொம்பவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் அப்பாவிகள் நிறைய இருந்தார்கள் என்பதென்னவோ உண்மை.
இந்தக் கேலிக்கூத்தை முதன் முதலாக உடைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. நான் காசுக்காகத்தான் நடிக்க வந்தேன். கலைத்தாய்க்குச் சேவை செய்யவே நடிக்க வந்தேன் என்று சொல்றவங்களையெல்லாம் காசில்லாமல் ஓசிக்கு நடிக்கச் சொல்லுங்க, பார்ப்போம் என்று அவர் சொன்னபிறகே இந்த கேலிக்கூத்து நின்றது.
அந்தக் காலத்து நடிக, நடிகையர் சொன்னதை எப்படி மக்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்க முடியும் என்ற சந்தேகம் யாருக்காவது தோன்றினால் - அவர்களுக்கு ஒரு வார்த்தை. "நான் மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன்; என் உயிர் உள்ளவரை உங்களுக்கு உழைக்கவே நான் இருக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளை நம்பிக்கொண்டிருக்கும் அரசியல் தொண்டர்கள், மக்கள் இன்றும் எவ்வளவு.
"அரசியல் ஒரு தொழில்; அதை ஒரு தொழிலாகவே நான் மேற்கொண்டுள்ளேன்" என்று ஏதாவது ஒரு அரசியல்வாதியாவது, அன்று எம்.ஆர்.ராதா உண்மையைச்சொன்னது போல, சொன்னால் ஒருவேளை நாம் உண்மையை உணர்வோமோ?
3 comments:
// நான் மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன்; என் உயிர் உள்ளவரை உங்களுக்கு உழைக்கவே நான் இருக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளை நம்பிக்கொண்டிருக்கும் //
மக்கள் இதையெல்லாம் நம்பறாங்கன்னு நீங்க நம்பறீங்களா ;-))
உண்மையிலேயே கலைத்தாய்க்கு சேவை செய்கிறான் ஒருவன்.... இங்கே
அவனை பாராட்டி நாலு வார்த்தை சொல்ல வேண்டாம்.. குறைந்த பட்சம் ஒரு பணமுடிப்பாவது தரலாமே..
//மக்கள் இதையெல்லாம் நம்பறாங்கன்னு நீங்க நம்பறீங்களா ;-))//
ஹலோ முகமூடி, நீங்க சொல்ற 'மக்கள்' யாரோ? இந்த விரல், கை வெட்டிக்கிற கேசுகள், தீக்குளிக்கிற நாதாரிகள், 'தலை'களுக்காக எங்கும்,- தமிழ்மணத்தில்கூட - சண்டை போட்டுக்கிற பாவப்பட்ட மக்கள் - இந்த மக்களைத்தான் நான் சொன்னேன்.
//குறைந்த பட்சம் ஒரு பணமுடிப்பாவது தரலாமே//
தரப்போற 'குடை' வள்ளல் நீங்க; உங்களுக்கு பண முடிப்பா?
அப்பா, anony..நீ தலைகீழா நின்னாலும் நான் உன் சைட்டுக்கு வரமாட்டேன்; ஆளை விடு
Post a Comment