அரசுடைமையாக்குவது பற்றி ஜெ. சொன்னவை நடைமுறையில் சாத்தியமாக்க வேண்டும். முதலில் எல்லா சட்ட நுணுக்கங்களையும் ஆராய்ந்து - நுழைவுத்தேர்வு போல் அல்லாமல் - அதன்பிறகு வரப்போகும் நிதிநிலையை மேலாண்மை செய்வதற்குரிய் சரியான திட்டங்களை வகுத்து
இதனால் அரசுக்கு கூடுதல் செலவின்றியே திறம்பட நடத்த வேண்டும்; நடத்த முடியும். செய்வாரா? செய்தால் நிச்சயமாக சமூகநீதி காக்கும் போராட்டத்தின் முன்னணித் தலைவியாக மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள். 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டமும் இம்முறை நியாயமாக இருக்கும்.
நடந்துவரும் சுயநிதிக்கல்லூரிகள் பலவும் அரசியல்வாதிகள், அவர்களது பினாமிகள் இவ்ர்களால்தான் நடத்தப்பட்டு வருகின்றன. மேடையில் 'சமூகநீதி'க்காகப் போராடுவதாக முழங்குபவர்கள் முதலில் தங்கள் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை வழக்கம்போல் பின்பற்றுவார்களா; நிச்சயமாக செய்யமாட்டார்கள். They know which side of their bread is buttered.
இந்தக் கர்ஜனைகள் வெறும் அரசியல் ஸ்டண்ட் ஆக இல்லாமல், உண்மையான செயலாகப் பரிமளித்தால் நானும் சொல்வேன் - ஜெயலலிதாவுக்கு ஜே !
பி.கு. நம்ம ப்ளாக் பிரதாபம் தெரிந்த பக்கத்து வீட்டு நண்பர் இன்னைக்குக் காலையிலேயே வந்து தோள்மேல ஏறி உக்காந்து இந்த பதிவைப்போடத் தூண்டியதற்கு... இப்போதைக்கு அவருக்கு ..ஜே !!
15 comments:
தருமி அவர்களேஅம்மா என்ன சொன்னாங்கன்னும் போட்டிருந்தா எங்கள மாதிரி வெளிநாட்டுவாசிகளும் புரிஞ்சுக்க வசதியா இருக்கும். (அதுக்காக ட்யூப்லைட்டுன்னெல்லாம் சொல்லக்கூடாது)
இரு தினங்களுக்கு முன்பு உயர்நீதி மன்ற தீர்ப்பு: தனியார் கல்லூரி மாணவர் அனுமதிப்பில் முழுச்சுதந்திரம்.
இன்று தினமலர் தலைப்புச் செய்தி: எச்சரிக்கை
இட-ஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் கொண்டுவராவிட்டால்...
தனியார் இன்ஜினியரிங், மருத்துவக் கல்லூரிகளை அரசே எடுக்கும்
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கடிதம்
-----------
கிவி சுரேசு,
இந்த நியூஸ் போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா..?
//இந்தக் கர்ஜனைகள் வெறும் அரசியல் ஸ்டண்ட் ஆக இல்லாமல், உண்மையான செயலாகப் பரிமளித்தால் நானும் சொல்வேன் - ஜெயலலிதாவுக்கு ஜே !//
நானும் தான்
யாரங்கே? என் இரட்டைப் பிறவியைப் பற்றி நல்லவிதமாக எழுதிய இந்த தருமிக்கு ஒரூ பொற்க்கிழி கொண்டு வா, சீக்கிரம்.
துளசி.
அய்யய்யோ, ற் பக்கத்துலே க் போட்டுட்டேனே!
தவறுக்கு வருந்தி இரண்டு பொற்கிழி கொடுக்கவா?
அம்மா போட்ட போடில் கல்லூரி உரிமையாளர்கள் நாங்களே இட ஒதுக்கீடு
செய்கிறோம் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை
குழலி, அரசு,- நன்றி
துளசி: "என் இரட்டைப் பிறவியைப் பற்றி"
மொடாக்கு முதலில் புரிஞ்சுக்கமுடியாம மண்டையப் போட்டு பிச்சுக்கிட்டான்!
எங்க வீட்டு அம்மாவோடு போட்டிக்கு வந்து பாக்றீங்களா? ஹ...ஹ...
ஆதிரை - அப்டீல்லாம் நடக்கும்னா நினைக்கிறீங்க!!
முதலுக்கே மோசமாவதற்கு இது தேவலாம் அல்லவா?
மேலும் கல்லூரி உரிமையாளர்கள் பலர் அம்மாவுக்கு வேண்டாதவர்கள் லிஸ்டில்
உள்ளவர்கள்.
"கல்லூரி உரிமையாளர்கள் பலர் அம்மாவுக்கு வேண்டாதவர்கள் லிஸ்டில்
உள்ளவர்கள்"
ஆதிரை,ரொம்ப வேண்டியவர்களும் அந்த லிஸ்டில் இருக்கிறார்களே!
paarppom adhuvarai kalaignar indha vaaipai ammavukku vida maatar endre ennugiren.
kalakkam -
amma arivipai aduthu suyanidhi kalloorigal kootam
seithi paarthirupeergale!
மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம் ஒன்றை நம் பிரதமர் கூட்டுகிறாறே! ஏதோ காரியங்கள் சில நடந்துகொண்டுதான் இருக்கின்றன போலும்.
தாழ்த்தப்பட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் எங்கள் இனக் காவல் தெய்வம் அம்மா ஜெயலலிதா அவர்களை வாழ்த்தி எங்கள் இனத்துக்கு ஆதரவாக எழுதிய தருமி அவர்கள் வாழ்க!
நிலையற்ற இந்த அம்மாவின் எந்த முடிவுக்கும், சட்டத்துக்கும் அவசரமாக கருத்து சொல்ல முடியாது / கூடாது என்பது நம் அனுபவ பாடம்.. பொறுத்திருந்து பார்க்கலாம்.. இதுவும் மற்றொரு மதமாற்ற தடைச்சட்டமா, எச் முத்திரையா என்று....
சோ, இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ்!
Post a Comment